Page 223 of 400 FirstFirst ... 123173213221222223224225233273323 ... LastLast
Results 2,221 to 2,230 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2221
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    "தெய்வமகன்"
    ******************
    *
    இவர் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவர்கள், புரிந்துக்கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை அதிகபிரசங்கிதனமாக பேசும் போது, ரௌத்திரத்தை பழகியதை காட்ட வேண்டியுள்ளது. தடிமனான வார்த்தைகளை பிரயோகப்படுத்த வேண்டியுள்ளது.
    *
    அவரின் நடிப்பை தவிர்த்து இந்த சமுதாயத்திற்கு செய்த எத்தனையோ நல்ல காரியங்கள் ஊடக நண்பர்களால் மறைக்கப்பட்டிருக்கிறது.
    *
    எலும்பிற்கு ஆசைப்படும் குணமுடையதாகிவிட்ட மனித பதர்களை நம்பி மோசம் போன சமுதாயம் கால ஓட்டத்தின் வேகத்தில் மாறுதல் இல்லாமலிருப்பது எல்லா தேர்தலையும் காட்டுகிறது.
    *
    வள்ளல் குணபடைத்தவர் யாரென அவருடன் இருந்தவர்களும் பிரகடணப்படுத்தாமல்
    இருந்ததினால் ஊடகங்கள் எதிர்பார்த்ததைவிட பசை அதிகமாக கொடுத்தவர்களை பத்திரிகைகள் போஸ்டர்களாக மக்கள் மனதில் ஒட்டவைத்தார்கள். இவர்களின் தயவுடன்தான் அய்யனுக்கு 'கஞ்சன்' முத்திரை கொடுக்கப்பட்டது.
    *
    சிவாஜி என்ற தனிமனிதன் செய்த சேவைகளை, வாரிவழங்கியதை பட்டியல் போட்டு எடுத்துச்சொன்னால் அப்பப்பா... இன்றைய மதிப்பீட்டில் எத்தனை ஆயிரம் கோடியிருக்குமென மக்கள் மன்றம் மொத்தமாக உணரவில்லை என்றாலும் ஆவண சான்றுகள் மூலம் உணராமல் இல்லை. இதனால்தான் கஞ்சன் எனும் சொல் காணாமல் போய்விட்டது.
    *
    அதற்கு காரணம் சிவாஜியை தெய்வமாக மதிக்கும் ஒவ்வொரும் பக்தரும் ஊடக உருவமாக மாறியதுதான்... வாட்ஸ்அப், முகநூல் போன்ற ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டதே ஆகும்.
    *
    அவர் இருக்கும்போது துடைக்கமுடியா பழி, அவர் இல்லாதபோது துடைக்கப்பட்டது நமக்கு வருத்தந்தான்.
    *
    அந்த தர்ம தேவதை இதைபற்றியெல்லாம் ஒருநாள் கவலைபட்டது இல்லை. தேவதை என்பது பெண்ணல்ல, ஆண்தான்!தர்மதேவனை ஒருபடி மேலே போய் "தெய்வபிறவி" ஆனவரை "தெய்வமகன்" என அழைக்கலாம். இது படத்தின் பெயரல்ல. உயிரோடு வாழ்ந்த ஒரு உண்ணத மனிதனின் பெயர்தான் 'தெய்வமகன்'
    *
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:






    courtesy Natarajan p f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2222
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Athavan ravi

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2223
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2224
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2225
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2226
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Bal krish nan



    Last edited by sivaa; 22nd April 2018 at 10:38 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2227
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நம்மவர் கலைக்குரிசில் நடிகர்திலகம், 1956ம் ஆண்டில் ரங்கோன் ராதா, அமரதீபம் படங்களில் அருமையாக நடித்ததிருப்பதற்காக 1.4.1957ல் பேசும் படம் மாத இதழ் நம்மவரை சிறந்த நடிகர் என்று தேர்ந்து எடுத்து கெளரவித்த போது வெளியிட்ட புகைப்படம். ந்ன்றி பேசும் படம்











    courtesy Chidambara nadarajan f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2228
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிவாஜி என்ற நடிப்பின் இமயத்தின் மீது இந்தி நடிகர்கள் எப்படிப்பட்ட மரியாதை வைத்திருந்தார்கள் என்பதற்கு சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் நல்ல உதாரணம் .ஒரு படவிழாவில் கலந்து கொள்ள கவர்னர் பிரகாசத்தை அழைத்திருந்தார் எ எல் ஸ்ரீனிவாசன் ,சிவாஜி கலந்து கொண்ட அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திலீப்குமாரும் கலந்து கொண்டார் .இவர் ஒரு மிக பெரிய நடிகர் என்று சிவாஜியை கவர்னரிடம் திலீப்குமார் அறிமுகம் செய்து வைத்த பொழுது உங்களை மாதிரிதானே என்றார் ,அதை கேட்டதும் திலீப் குமார் பதறி போய் இல்லை இல்லை அதற்கும் மேல் என்றாராம் .அப்படி திலீப் குமார் போன்ற சிறந்த நடிகர்களையே பிரமிக்கவைத்தவர் நம் திலகம் .அதற்க்கு காரணம் தன் வாழ்முழுதும் நடிப்பையே சுவாசமாக கொண்டதால்தான் .இவர் நடித்த படங்களை இந்தியில் தயாரிக்கும்போது பஹிரங்கமாக அவரை போலே எங்களால் நடிக்க முடியாது என்று சொன்னார்கள்











    courtesy vijaya rajkumar f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2229
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பாசமலர் திரைப் படத்தில் அண்ணன் தங்கையாக வாழ்ந்தவர்கள். அதன் பிறகு நிஜத்திலிலும் அப்படியே வாழ்ந்தார்கள். கால ஓட்டத்தில் சிக்கி சின்னா பின்னமாகி ( இந்த கால கட்டத்தில் நம்மவர் எவ்வளவோ உதவிகளை செய்துள்ளார் ) குற்றுயிரும் குலையிருமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட செய்தி கேட்டு துடித்து போனார். அன்னை இல்லத்து உறவுகளை அனுப்பி பார்த்து வரச் செய்தார். மருத்துவமனையில் அவருக்கு வேண்டிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஜெமினியை பார்க்க விரும்புவதாக கேள்விபட்ட நம்மவர் உடனே ஜெமினியிடம் பேசி... மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இவ்வளவும் செய்தவர் கடைசி வரை அவரை மருத்துவமனைக்கு சென்று பார்க்க மறுத்து விட்டார். என் இதயம் கண்களில், உணர்வுகளில் உள்ள என் தங்கை சாவித்ரி வேறு. இப்போது அவள் இருக்கும் கோலத்தில் என்னால் பார்க்க முடியாது என் இதயம் வெடித்து விடும் என்று கதறினார். பாசத்திற்கு எல்லை இல்லை என்று வாழ்ந்தவர். சாவித்ரி இறந்த அன்று படப்பிடிப்பில் இருந்து வந்தவர் தனியறையில் தங்கைக்கு மெளன அஞ்சலி செலுத்தியவர். இவருக்கு நாம் ரசிகர்கள் பக்தர்கள் என்று சொல்வதில் பெருமை தான். என்னை சிவாஜி பைத்தியம் என்று யார் சொன்னாலும் பெருமை தான். வாழ்க அய்யன் புகழ்.நடிப்பு என்பதையும் தாண்டி இது போன்ற செய்திகளை பதிவிடுவதில் தான் மகிழ்ச்சி. மகிழ்ச்சி













    courtesy lakshmanan lakshmanan f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2230
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் திரைப்பயணத்தின் மைல் கல்லாக அமைந்த படங்கள் பல...
    அவற்றில்...
    நவராத்திரி
    திருவிளையாடல்
    தில்லானா மோகனாம்பாள் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கும் முக்கிய பங்குண்டு என்றால் அது மிகையாகாது...
    இப்படங்களின் இயக்குனர் திரு.ஏ.பி.நாகராஜன். தமிழ் நாடகம் தந்த நல்முத்து இவர்....
    புராணத்தை மட்டுமே வைத்து காலம் தள்ளிக்கொண்டிருந்த தமிழ் நாடகத்துக்குள் சீர்திருத்த கருத்துகளை புகுத்தி புது ரத்தம் பாய்ச்சியவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள். இவர்களது, மதுரை பால சண்முகானந்த சபா நாடகக்குழுவில் பயிற்சி பெற்று உருவானவர்தான் ஏ.பி.என்...
    அக்காலத்தில், இளம் சிறுவர்களுக்கு நாடக பயிற்சி அளித்து அவர்களை பெண் வேடங்களுக்கு பயன்படுத்தி கொள்வார்கள். இதுபோன்ற, நாடக சபாக்களில் சுட்டுப்போட்டாலும் பெண் பிள்ளைகளை சேர்க்க மாட்டார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் அக்கம்மா பேட்டை என்ற சிற்றூரில் பிறந்த ஏ.பி.நாகராஜன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் அவர் பாட்டி மாணிக்கத்தம்மாள் அரவணைப்பில் வளர்ந்தார்.
    சிறு வயதிலேயே அவருடைய பாட்டி நிறைய கதைகளை அவருக்கு சொல்லிக் கொடுப்பார். தேவைப்பட்டால், இடையிடையே பாடியும் காட்டுவார். இப்படி பாட்டி சொன்ன இதிகாச கதைகளை கேட்டு வளர்ந்த நாகராஜன் பாட்டி பாடிக்காட்டிய பாடல்களை கிளிப்பிள்ளை போல திரும்பி பாட ஆரம்பித்தார். ஆதலால், அவருடைய திறமை அறிந்த அவருடைய பாட்டி...
    மதுரை பால சண்முகானந்த சபா பின்னாளில் டி.கே.எஸ் நாடக சபா என்று பெயர் மாறிய நேரத்தில்...
    பத்து வயது சிறுவனாக இருந்த ஏ.பி.நாகராஜனை அதில் சேர்த்து விட்டார். தனது 15வது வயது முதல் ஸ்திரி பார்ட்டுகளில் நடிக்க ஆரம்பித்தார் ஏ.பி.என்...
    டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற சமூக நாடகமாக விளங்கியது ''குமாஸ்தாவின் பெண்''. அதில், கதாநாயகியாக நடித்த ஏ.பி.நாகராஜனுக்கு மற்ற சபாக்களில் ஸ்திரி பார்ட் போட அழைப்பு கொடுக்கப்பட்டது.
    ஆனால், தனது இருபதாவது வயதில் பெண் வேடங்களில் நடிக்க விருப்பமின்றி சக்தி நாடக சபாவில் சேர்ந்தார் ஏ.பி.என். அங்கே, அவருக்கு நண்பர்களாக கிடைத்தவர்கள் தான் நமது நடிகர்திலகமும், காக்கா ராதாகிருஷ்ணனும்...
    தான் ஏற்று நடிக்கும் தனது கதாபாத்திரங்களுக்கான வசனத்தை கதைக்கு தக்கவாறு தானே திருத்தி மாற்றி எழுதிக்கொண்டார் ஏ.பி.என்...
    இதனால், நாடக ஆசிரியர்களுடன் நாகராஜனுக்கு கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால், சில வருடங்களுக்கு பின்னர் சக்தி நாடக சபாவிலிருந்தும் வெளியேறி தனது 25வது வயதில் பழனி கதிரவன் நாடக சபா என்ற தனி சபாவை தொடங்கினார்.
    ஏ.பி.என்னின் ''நால்வர்'' என்ற நாடகம் புகழ்பெற தொடங்கியது. இந்த நாடகத்தை சங்கீத பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. வி.கிருஷ்ணன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையில், தஞ்சை ராமையா தாஸ் பாடல்கள் எழுதிய இப்படத்திற்காக நாடக கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் அறிமுகமானார் ஏன்.பி.என்...
    படமும் வெற்றி பெற்றதால் கதாநாயகனாக சிறந்த நடிப்பை கொடுத்தது மட்டுமல்லாமல் நல்ல வசனமும் எழுதியதற்காக பாராட்டப்பட்டார் ஏன்.பி.என். அடுத்து வந்த பெண்ணரசி, நல்லதங்காள் ஆகிய படங்களில் கதாநாயகனாக தொடர்ந்ததோடு...
    தான் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து அழுத்தமாகவும், இரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் வசனம் எழுத ஆரம்பித்தார் ஏ.பி.நாகராஜன். இதனால், அவருக்கு திரைக்கதை, வசனம் எழுத வாய்ப்புகள் குவிந்தன.
    இயக்குநர் கே.சோமுவின் படக்குழுவில் எழுத்தாளராக நிரந்தரமாக இடம் பிடித்ததால் நடிப்பை துறந்து படைப்பை ஏற்றுக்கொண்டார்.
    நாடக வசனங்களில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது...
    நாடக வசனங்களின் சாயலே திரைப்பட வசனங்களிலும் தாக்கம் செலுத்தியபோது...
    நமது உலக மகா கலைஞனின் உன்னத நடிப்பில் வெளிவந்த ''மக்களைப் பெற்ற மகராசி'' படத்துக்கு கொங்கு வட்டார வழக்கில் வசனம் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏ.பி.என்...
    அதன் பிறகு வெளிவந்த, நான் பெற்ற செல்வம், டவுன் பஸ் ஆகிய படங்களின் வெற்றியில் அவரது வசனங்கள் முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டன. அதற்கு அடுத்த ஆண்டே கே.சோமு இயக்கத்தில் என்.டி.ராமராவ் ராமனாகவும் நடிகர்திலகம் பரதனாகவும் நடித்த ''சம்பூர்ண ராமாயணம்'' படத்துக்கும் வசனம் எழுதினார் நாகராஜன்.
    இப்படத்தை பார்த்த மூதறிஞர் ராஜாஜி ''பரதனை கண்டேன்'' என்று கூறியதால் நடிகர்திலகத்தின் புகழோ மென்மேலும் உயர்ந்தது. அப்படத்தின், வசனகர்த்தாவாகிய ஏ.பி.நாகராஜனின் புகழும் எட்டுத்திக்கும் பரவியது.
    அப்படத்தில், இராவணனை இசைக்கலைஞனாக பெருமைபடுத்தி எழுதியதை ம.பொ.சி பாராட்டினார். பின்பு, ம.பொ.சி யின் வழிகாட்டுதலில் அவரது தமிழரசு கழகத்திலும் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினார் ஏ.பி.என்...
    ''சம்பூர்ண ராமாயணம்'' படத்தில் இராவணன் வேடத்தை பத்து தலையுடன் அரக்கன் போல சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குநர் கே.சோமுவுக்கு எடுத்துக்கூறிய ஏ.பி.நாகராஜன்...
    புராணக் கதைகளை படமாக்கினாலும்...
    வரலாற்று, சமூக கதைகளை படமாக்கினாலும்...
    அவற்றில் தொழில் நுட்ப புதுமைகளையும் நிகழ்காலத்தின் நடப்புகளையும் வசனத்தில் புகுத்த தவறியதில்லை.
    நடிகர் திலகத்தின் நடிப்பில் உருவான ''வடிவுக்கு வளைகாப்பு'' படத்தின் மூலம் இயக்கத்தில் கால் பதித்தார் ஏ.பி.என். அதன் பிறகு, நடிகர் திலகத்தோடு இணைந்து பணிபுரிந்த பல படங்கள் தமிழ் சினிமாவுக்கு காலத்தால் அழியாத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைந்தன...
    நடிகர் திலகத்தின் 100வது படமான நவராத்திரியில் அவருக்கு ஒன்பது மாறுபட்ட வேடங்களை உருவாக்கினார். அக்காவியத்தை கண்டு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது நமது அண்டை மாநிலங்களும் வியந்தன...
    அடுத்த ஆண்டே அவரது இயக்கத்தில் 1965ல் ''திருவிளையாடல்'' வெளியானது. சிவன், பார்வதி, முருகர், விநாயகர், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களும் பேசிய சுத்தமான எளிய செந்தமிழ் தமிழ் மக்களின் நாவில் அரை நூற்றாண்டு காலம் நடனமாடியது. சிவபெருமானுடன் ஏழைப்புலவன் தருமியின் வாக்குவாதம் தமிழகமெங்கும் நகைச்சுவை ரசவாதம் செய்தது...
    திருவிளையாடலை தொடர்ந்து சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை, அகத்தியர், திருமலை தென்குமரி, காரைக்கால் அம்மையார் உட்பட பல புராணப்படங்களை மிக உயர்ந்த உரையாடலில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன்.
    இவரது சாதனை மகுடத்தில் ''தில்லானா மோகனாம்பாள்'', தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ''ராஜராஜசோழன்'' ஆகிய திரைப்படங்களும் உண்டு...
    மொத்தத்தில், நடிகர்திலகமும் ஏ.பி.நாகராஜனும் இணைந்தாலே அப்படம் மாபெரும் வெற்றிதான் என்று பேசும் அளவிற்கு மாபெரும் புகழை பெற்றார் ஏ.பி.நாகராஜன்.
    இந்நிலையில், என்னதான் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதையும், வசனங்களும், இயக்கமும் மிகச்சிறப்பாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்லும் சக்தியாக விளங்குபவர் நடிகர்திலகம் தான்...
    நடிகர்திலகம் என்ற மாபெரும் நடிப்புச்சக்கரவர்த்தி தான் இவரது படங்களுக்கு உயிர் கூட்டுகிறார் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், இரசிகர்களும் பேசத் தொடங்கியதன் விளைவாக...
    நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து பல படங்களை இயக்கிய இவர் கேட்க கூடாத பலரின் பேச்சினை கேட்டுக்கொண்டு தானும் வேறொரு முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்...
    முதல் முறையாக எம்.ஜி.ஆரை வைத்து ''நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். ஆனால் அதுவே, அவருடைய கடைசி படமாகி விட்டது...
    அப்படம், மாபெரும் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த ஏ.பி.நாகராஜன் 1977ல் மறைந்து விட்டாலும் அவரது திரைத்தமிழ் தமிழ் கலையுலகம் இருக்கும் வரை மறையப்போவதில்லை...
    நடிகர்திலகத்தின் இதயங்களாகிய நாம் அனைவரும் மாபெரும் கலை வித்தகர் ஏ.பி.நாகராஜனை மறக்க முடியுமா நண்பர்களே...
    வாழ்க அன்னாரது புகழ்...
    வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்...
    வாழிய... வாழியவே...














    courtesy m v ramkumar f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •