Page 202 of 400 FirstFirst ... 102152192200201202203204212252302 ... LastLast
Results 2,011 to 2,020 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

 1. #2011
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like
  சிவாஜி தி பாஸ்! (சினிமா விகடன்)
  (கட்டுரைக்கான பாராட்டுக்கள் கட்டுரையாளர் திரு அவர்களையே சேரும்).
  சிவாஜி கணேசன் மகத்தான நடிகர். ஆனால், சில படங்களைப் பார்த்தபோது சிவாஜி தவிர வேறு யாரும் அந்தக் காட்சிகளில் நடித்திருக்க முடியாது எனத் தோன்றியது. அப்படிப்பட்ட சில சிவாஜி எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளைப் பார்த்து யாம் பெற்ற இன்பத்தை நீங்களும்...
  'திரிசூலம்’ படத்தில் குரு, சங்கர் என்று அண்ணன் தம்பிகளாக இரண்டு சிவாஜிகள். பிரிந்த அண்ணன் தம்பிகளை தேங்காய் சீனிவாசன் சேர்த்துவைத்ததும், கடத்திச் செல்லப்பட்ட தங்கள் அம்மா(?) கே.ஆர்.விஜயாவை மீட்க இருவரும் கிளம்புவார்கள். வழக்கமாக அம்மாவை மீட்கக் கிளம்பும் டபுள் ஹீரோக்கள் வெறிகொண்ட வேங்கைகளாக, சினம்கொண்ட சிறுத்தைகளாகக் கிளம்புவதுதான் தமிழ் சினிமாவின் வழக்கம். ஆனால், 'திரிசூலம்’ படத்திலோ இரு சிவாஜிகளும் மூணாறு ஹில்ஸ் வியூ பார்க்கச் செல்பவர்கள்போல் ஓப்பன் ஜீப்பில் ஏறி 'இரண்டு கைகள் நான்கானால்...’ என பாட்டுப் பாடி ஜாலி ட்ரிப் அடிப்பார்கள். கொஞ்சம் சாதுவான சிவாஜி லேசாக ஹம் செய்தபடி ஜீப் ஓட்ட, குறும்புக்கார சிவாஜி ஜீப்பின் கம்பிகளைப் பிடித்தபடி மிகுந்த சிரமப்பட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் சிவாஜியின் தோள்களில் ஏறி அமர்ந்து ஜாலி ரியாக்ஷன்கள் காட்டுவார். உலக சினிமா வரலாற்றில் அம்மாவை மீட்கச் செல்லும் மகன்கள் ஜாலி காட்டுவதும், வண்டி ஓட்டுபவர் தோளில் ஏறி அமர்ந்து உறவுகளின் நெருக்கத்தைக் காட்டி ரசிகர்களை உறையவைத்ததும் சிவாஜி என்ற ஒருவர்தான்.
  ஒரு நாள் டி.வி. சேனல் மாற்றிக் கொண்டிருந்தபோது சிவாஜி பட்டுச் சட்டை வேஷ்டி அணிந்து யாரிடமோ பவ்யமாக பதில் அளித்துக்கொண்டிருந்தார். இடையிடையே
  'கிழிச்ச
  மூஞ்சியப் பாரு...
  ச்சீய்
  மடையா
  பல்லை உடைப்பேன் ராஸ்கல்
  அறிவு கெட்டவனே
  ஏண்டா பாவி
  மனுசனா நீ ?’ என ஏகத்துக்கும் வசவுகள் வேறு.
  பிறகுதான் புரிந்தது. சிவாஜி சண்டை போட்டுக்கொண்டிருந்தது அவரின் மனசாட்சியுடன் என்று. கிழி கிழி கிழி என்று கிழித்தது மனசாட்சி தான். கொஞ்ச நேரம் அமைதி யாக வசவு வாங்கிக்கொண்டிருந்தவர் திடீரென மனசாட்சியை வெறிகொண்டு வெளியே தள்ளி கதவைத் தாழிடுகிறார். ரூமிற்குள் சென்றவர் இருப்புக்கொள் ளாமல் அங்குமிங்கும் அலைந்துவிட்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்து,
  'அப்பா மனசாட்சி, எங்கடா போயிட்ட?
  நீயும் என்ன தனியா விட்டுட்டுப் போயிட்டியா?
  கோவிச்சுக்காத. வாடா’ என கட்டிங் குடிக்கக் காசு கொடுக்காததால் கோபித்துக்கொண்டு சென்ற பக்கத்து மேன்சன் நண்பனைக் கூப்பிடுவதுபோல மனசாட்சியைக் கூப்பிடுகிறார். மனசாட்சியும் கதவைத் திறந்து உள்ளே வந்து 'சக்கப்போடு போடு ராஜா’ என்று பாடுகிறது. மனசாட்சியுடன் மானாவாரியாக மல்லுக்கட்டியது சிவாஜி ஒருவர்தான். 'பாரதவிலாஸ்’ படம் பாருங்கள். சிவாஜியின் மனசாட்சி சண்டைக் காட்சியைப் பார்த்து சிலிர்த்திடுங்கள்.
  'திருப்பம்’ என்று ஒரு படம்.
  சவுக்குக் காட்டிற்குள் பீச் மணலில் சிவாஜி மிகுந்த சிரமப்பட்டு ஒரு சவப்பெட்டியை இழுத்துக் கொண்டு புதையப் புதைய நடந்து வருவார். திடீரென நாலைந்து ரவுடிகள் சிவாஜியைச் சூழ்ந்துகொண்டு ''ஏய்! மரியாதையா பெட்டிக்குள் இருக்கிறத எடு'' எனக் கேட்க சிவாஜியும் பம்மிப் பயந்தவராக மெல்ல அந்தப் பெட்டியை திறக்க, அங்கதான் இருக்கு ட்விஸ்ட்.
  பெட்டிக்குள் இருந்து. ஏ.கே.47-ஐ எடுத்து அத்தனை வழிப்பறிக் கொள்ளையர்களையும் என்கவுன்ட்டர் செய்வார்.
  அதற்குப் பின்தான் தெரிகிறது சிவாஜி புதிதாக அந்த ஊருக்கு ரவுடிகளை ஒழிக்க வந்திருக்கும் போலீஸ் அதிகாரி என்று.
  சவப்பெட்டி விற்கும் நாகர்கோவில் சூசை என்றுதானே சிவாஜி கெட்-அப் பார்த்த யாருமே நினைக்க முடியும். பாவம், அந்த வெள்ளந்தி ரவுடிகளும் அப்படித் தானே நினைத்திருப்பார்கள். இப்படி போங்கு ஆட்டம் ஆடிட சிவாஜி ஒருவரால்தான் முடியும். அதனால்தான், சிவாஜி... தி பாஸ்!  courtesy vasudevan- nadigarthilagam fans
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #2012
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like


  courtesey nilla nadigarthilagam sivaji visirigal

  .................................................. ............................

  இப்படியான நடிகர் திலகத்தின் சாதனை விளம்பரங்களை
  பார்க்காததால்தான் சிலர் விபரம் புரியாமல் எழுதுகிறார்கள்
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 4. #2013
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like
  இயக்குனர் ஸ்ரீதர் ஐயனை பற்றி பொம்மை இதழில்..( வருடம் குறிப்பிடவில்லை)
  "எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்தார்.
  திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப் பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்து சொன்னார்.
  அத்துடன் ‘நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச் சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?’ என்று கேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லியிருந்தது நினைவுக்கு வர, ‘ஆமாண்ணே, வந்திருக்காங்க’ என்றேன். ‘உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே’ என்றார்.
  சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச் சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி ‘இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்’ என்றவர் என்னைப் பார்த்து, ‘இதோ பாரு, இது வரைக்கும் சதா ஸ்டுடியோவிலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்தோடு வீட்டுக்கு வந்து சேர்.
  அது மட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப் பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்’ என்று அட்வைஸ் பண்ணினார்.
  ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணிய பிறகு மற்றவர்களோடுதான் படம் பண்ணிக் கொண்டிருந்தேன்.
  ‘காதலிக்க நேரமில்லை’ படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். ‘உன் பேரைச் சொன்னாலே ‘அழுமூஞ்சி டைரக்டர்’ என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிற மாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே.
  எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்’ என்றார்.
  ‘அண்ணே, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’ என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை.
  இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப் பற்றிக் கேட்பார். ‘அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டு பேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்’ என்றேன். சொன்ன மாதிரியே அந்தக் கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற கதைதான் ‘ஊட்டி வரை உறவு’ என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
  சில பல காரணங்களால் ஹீரோ-72 படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டிருந்த போதிலும், எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை.
  ‘உரிமைக்குரல்’ பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். ‘பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (எம்ஜிஆர்) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இது வரைக்கும் ஒரு நாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வர முடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் இருக்கும்’ என்று வாழ்த்தினார்.
  ****************
  உபரி தகவல்: ஐயன் "புதிய வானம் படப்பிடிப்பின் போது தான் சத்யா ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்.
  courtey nadigarthilagam sivaji visirigal
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 5. #2014
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like
  தெரிந்த செய்திகள்.... நாடகப் பாடப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே இருப்பதால், சிவாஜிக்கு புத்தகப் புழு என்ற பெயரும் நாடகக் கம்பெனியில் உண்டு. நாடகக் கம்பெனியில் கடுமையான பயிற்சிக் கொடுத்தார்கள். நாடகக் கம்பெனியில் நல்லச் சாப்பாடு இருக்காது. சாம்பார், ரசம், மோர், இரண்டு கூட்டுப் பொறியல் என எதுவும் கிடையாது. ஒரு வேளைக்கு ஒரு ரசம் சாதம் அல்லது மோர் சாதம், தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் என இவ்வளவுதான் இருக்கும். இதைச் சாப்பிட்டு விட்டு, வறுமையில் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள், ராஜா மாதிரி சத்தம் போட்டு பேசி, மேடையில் நடிக்க வேண்டும். சாப்பாடு முக்கியமல்ல, தொழில்தான் முக்கியம் என கற்றுக் கொடுத்தது குருகுலம்தான்.
  ராஜா, ராணி கதைகள், புராண, இதிகாசக் கதைகள் என தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் 1952ம் ஆண்டு பராசக்தி படம் வெளியானது. நிகழ்கால சமூகக் கதைகளுக்கே இனி பரிபூரண வெற்றி கிடைக்கும் என்ற புதிய சிந்தனையை, நம்பிக்கையை சினிமா உலகில் விதைக்கப்பட்ட படம்தான் பராசக்தி திரைப்படம். அந்தத் படத்தில்தான் முதன் முதலாக சிவாஜி நடித்தார். திரையுலக இளவரசன் சிவாஜி நடித்த திரும்பிப் பார் என்ற படத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் டிரையிலர் காட்டியது. தமிழ் சினிமா உலகில் முதன் முறையாக டிரையிலர் காட்டப்பட்டது திரும்பிப் பார் படத்துக்குத்தான்....
  .கலைவாணர் இயக்கத்தில், சிவாஜி நடித்த ஒரே படம் பணம் படம்தான்.
  மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்த முதல் படமும் பணம் படம்தான். பணம் படத்தில் துவக்கிய, இவர்களது நட்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. பணம் படத்தில்தான், சிவாஜி , பத்மினியும் இணைந்து நடித்த முதல் படமாகும். பணம் படத்திலிருந்து, இந்த ஜோடி நட்சத்திர ஜோடியாக திகழ்ந்தது. திரும்பிப்பார் படத்துக்குப் பிறகு, உத்தம புத்திரன், அன்னையின் ஆணை, பெண்ணின் பெருமை, துளி விஷம் போன்ற படங்களிலும் சிவாஜி வில்லனாக நடித்தார்.
  சிவாஜியின் ஆரம்பக் காலத் திரைப் படங்கள், ஒவ்வொன்றுமே அவரது எதிர்கால சினிமா வாழ்க்கைக்கான பலமான அஸ்த்திவாரமாக அமைந்தது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வசனங்களுக் காவே புகழ் பெற்ற சிவாஜி மிகவும் அதிகமான பாடல்களுக்கு வாயசைத்துப் பாடிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது தூக்குத் தூக்கி திரைப்படமாகும். இந்தப் படத்தில்தான் முதன் முதலாக, சிவாஜிக்கு பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் பாடல்களைப் பாடினார்... தூக்குத் தூக்கி திரைப்படத்தில் ஜனரஞ்சகமாக நடித்ததற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம், சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. முதன் முதலில் ரசிகர்களால் பாராட்டி கௌரவப்படுத்தப் பட்டதும் தூக்குத் தூக்கி படத்துக்காகத்தான் மேலும், தூக்கு தூக்கி திரைப்படத்தில், லலிதா, பத்மினி, ராகினி என மூன்று சகோதரிகளும் இணைந்து, சிவாஜியுடன் நடித்த முதல் படம் இதுதான். சரவணபவ யுனிட்டி என்ற பட நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் எதிர்பாராதது. அந்தக் காலத்தில், முதன் முதலாகப் படம் எடுக்க வருகிறவர்கள் தேடும் முதல் நடிகராக இருந்தவர் சிவாஜிதான். அவருடன் ஸ்ரீதர் இணைந்த முதல் படம் எதிர்பாராதது.
  முதல் தேதி, கள்வனின் காதலி, மங்கையர் திலகம் என்று மூன்று திரைப்படங்களும், அவரது திரையுலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. பத்மினி பிக்சர்ஸில் பி.ஆர்.பந்துலு தயாரித்த படம் முதல் தேதி. எந்த கதாநாயகனும் ஏற்கத் துணியாத வேடத்தில் சிவாஜி நடித்தார். வயது வந்த பெண்ணின் தந்தையாக, தனது 27 வயதிலேயே, அப்பா வேடத்தில் நடித்த முதல் படம் முதல் தேதி.... மங்கையர் திலகம்... 1955ல் தேசிய நற்சான்றிதழ் பெற்ற சிவாஜி படம். இந்தப் படம் முழுக்க முழுக்க பத்மினிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட கதை அமைப்பாகும். பத்மினியை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்த படம் இது... எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ப முகத்தை, உணர்ச்சிகளை உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய அபூர்வக் கலைஞர்தான் சிவாஜி... அவர் சேர்ந்தார் போல் 10 படங்களில் நடித்துக் கொண்டிருப்பார். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் கொஞ்சம் கூட குழப்பம் இல்லாமல், அவர் வசனங்களைப் பேசுவதையும், நடிப்பை மாற்றிக் கொள்வதையும், பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். உலகத்திலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி என்றால் ரொம்ப ரொம்ப பொருத்தமாகவே இருக்கும்....
  வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான், தமிழ் சினிமாவின் முதல் சரித்திரப் படமாகும். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், "வெற்றி வடிவேலனே" என்ற பாடல்தான் படத்தின் முதல் காட்சியாக படமாக்கப்பட்டது. சிவாஜிக்கு இந்தப் படம்தான் முதல் கலர் படமாகும். ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு. லண்டனில் பிரதி எடுக்கப்பட்ட முதல் டெக்னிக் கலர் தமிழ்ப் படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு...

  .


  courtesy Jahir hussain nadigarthilagam sivaji visirigal
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 6. #2015
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 7. #2016
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 8. #2017
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like  courtesy athavan ravi -nadigarthilagam sivaji visirigal
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 9. #2018
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  13,584
  Post Thanks / Like
  இன்று இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
  பாகப்பிரிவினை
  1959 ஆம் வருடம் என்பது நடிகர் திலகம் வருடம் என்றே ஆனது காரணம் அந்த வருடத்தில் நடிகர் திலகம் வெற்றிப் பட வரிசையில் இரண்டு வெள்ளி விழா படங்கள் அமைந்தன,
  வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை ஆகியவை,
  பாகப்பிரிவினை மதுரை சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் வரை ஓடி சாதனை புரிந்து இருக்கிறது, ...
  ஒரு திரையரங்கில் மட்டுமே தொடர்ந்து நூறு நாட்களில் மட்டுமே 372446 பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர், இது அன்றைய வருடத்தில் மதுரை மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினைப் பெறுகிறது,
  ஏறக்குறைய 216 நாட்கள் வரையிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 5 லட்சத்தை எட்டியிருக்கக் கூடும்
  ஒரு திரையரங்கில் இத்தனைப் பார்வையாளர்கள் என்பது இமாலய சாதனையாகும்,
  இன்றைய மதிப்பீட்டில் பாகப்பிரிவினை ஒரு திரையரங்கில் மட்டுமே 7 கோடியை வசூலித்திருக்கும் என்பதை நினைத்தால் தலை சுற்றவே செய்கிறது
  இனிமையான சாதனைகளை நினைத்து பாகப்பிரிவினையை கண்டு மகிழ்வோம்!
  courtsey sekar .p -f.book
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 10. #2019
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 11. #2020
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •