Page 199 of 400 FirstFirst ... 99149189197198199200201209249299 ... LastLast
Results 1,981 to 1,990 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1981
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1982
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1983
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
    இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
    ‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
    1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.
    காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
    சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
    அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
    ‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
    பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
    சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
    இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
    ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
    சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
    நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
    சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும்.
    சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
    கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
    ‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
    சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
    சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
    ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
    ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
    அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ -
    *
    கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
    முதல் பட விநியோகம், அமரதீபம்…
    முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
    இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
    தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
    ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
    சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
    என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
    ‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
    ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன்.
    ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
    1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
    ‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
    ‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
    நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
    18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
    எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
    வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
    பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
    என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
    கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ -
    தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி
    கலைஞர் மு.கருணாநிதிக்கும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் மிகவும் பிடித்த படம் தில்லானா மோகனாம்பாள். அதிலும், ‘நலந்தானா…’ பாடலுக்கு பாலசந்தர் பரம ரசிகர்!
    சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் படம் தில்லானா மோகனாம்பாள்! இன்றளவும் (சமீபத்தில் 2015 ஏப்ரல் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு) ப்ரைம் டைமில், சன் டிவி போன்ற தனியார் சேனல்கள், தில்லானா மோகனாம்பாளைத் ஒளிபரப்புகின்றன. ஒவ்வொரு பிரேக்கும் 10 நிமிஷம் இருந்தாலும், ஜனங்கள் 1968-ன் உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கும் ஒரே படம்!
    மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாகக் கொட்டிய கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காகவும் பத்மினி ஆடவேண்டி வந்தது. திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சி, திரையில் ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரக்கூடியது
    இன்றளவும் சின்னத்திரையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட உச்சக்கட்டப் போட்டிகளில், கல்யாணி ராகத்தில் அமைந்த அப்பாடலை பாலகர்கள் பிரமாதமாகப் பாடி, லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற முடிகிறது.
    ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் பற்றி பத்மினி மனம் திறந்தவை.
    ‘இந்தப் பாட்டில் நீங்கள் ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடுகிறீர்கள் என்று ஏ.பி.என். சொன்னதும் உற்சாகமாக இருந்தது. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிந்தது. வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?
    சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.
    இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.
    யார் ஹீரோ என்றபோதிலும், ஏராளமான படங்களில் டைட்டில் ரோல் பத்மினிக்கே சொந்தம். பெண்மைக்கு உயர்வளிக்கும் உயர்ந்த நோக்கமோ அல்லது வணிக உத்தியில் பத்மினிக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தோ இரண்டில் ஏதோ ஒன்று.
    நடிப்பில் மணமகள் தொடங்கி, தொடர்ந்து மருமகள் (ஹீரோ என்.டி.ஆர்.), காவேரி, மங்கையர்திலகம், மல்லிகா (நாயகன் ஜெமினி), அமரதீபம், பாக்யவதி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம், சித்தி, தில்லானா மோகனாம்பாள், பெண் தெய்வம் என தாய்க்கு ஒரு தாலாட்டு வரை பத்மினியின் நடிப்பில் வெளிவந்தவை, அவரது அற்புத நடிப்புக்காகவே ஓடியவை.
    ‘பத்மினிக்குக் கிடைத்த வெற்றியில், பெரும்பாலும் கணேசன் குளிர் காய்ந்தார். சிவாஜிக்காகவேண்டி படங்கள் விழா கொண்டாடவில்லை’ என நடிகர் திலகத்துக்கு வேண்டாதவர்கள் விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டதும் உண்டு.
    அமெரிக்காவுக்குப் போனாலும், ஆண்டுதோறும் மார்கழி மஹோத்சவத்துக்கு சென்னையில் இருப்பதை, கடைசி வரை தன் வழக்கமாக பத்மினி கடைப்பிடித்தார். அவ்வாறு, 1976-ல் சென்னை வந்த பத்மினி, ‘சிவாஜி வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த ஆண்டில் கடைசி சிவாஜி படம் ரோஜாவின் ராஜா. அதில் அவர் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். அதையொட்டி எழுந்த கேள்விக்கான பதில், சிக்கலை ஏற்படுத்தியது.
    ‘கணேஷுக்குக் குழந்தை மாதிரி சுபாவம். கோபம் வந்தாலும் உடனே தணிந்து போகும்’ என்கிற பத்மினியின் வாசகத்தை, சிவாஜி நிரூபித்துவிட்டார். பத்மினி தன்னைக் குறித்து சொன்னதை அவர் பொருள்படுத்தவே இல்லை. எப்போதும்போல் தோழமை தொடர்ந்தது. அதன் விளைவு, 1977-ல் கே.பாலாஜியின் ‘தீபம்’ படத்தில் பத்மினி கௌரவ வேடத்தில் ப்ளாஷ்பேக்கில், ஒரு காட்சியில் தாயாராக நடித்திருப்பார். அதில் பத்மினி தோன்றும் புகைப்படம். தொலைந்துபோன தம்பி விஜயகுமார்தான், நாயகி சுஜாதாவுடைய காதலன் என சிவாஜிக்கு உணர்த்தும்.
    பத்மினி பற்றி, கணேசனும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
    ‘உங்களுக்கு ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்கு இணையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?’
    நிச்சயமாக பப்பிதான். பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்... வாட் நாட்…?
    எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. ஷீ ஈஸ் ஆன் ஆல்ரவுண்டர். சின்ன வயதிலிருந்தே நானும் பப்பியும் பழகி வருகிறோம். வீ ஆர் ஆல் இன்டெலக்சுவல் ஃப்ரண்ட்ஸ். எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு’.
    படித்ததில் பிடித்தது.
    நன்றி: திரு. நவீனன்















    courtesy nadigar thilagam sivaji visirigal
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1984
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir hussain

    சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ம்ம் யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு... தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு.... நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களே எங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து... இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்... இந்த ஒருபகுதி வசனம் ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்ற மராட்டிய மாமன்னன் சிவாஜிக்கானது.. நம்மவரின் நடிப்பாளும் திறன் கொண்டு முழங்கி இருப்பார்.. பரவசமான எபிஸோட் அது... இந்த வசனங்கள் பல இடங்களில் நம்மவருக்கும் பொருத்தமாக இருப்பதும் சிறப்பு...
    இதே கம்பீரம்.. தான் தாங்கிய எந்த கதாபாத்திரத்திலும் இருக்கும்.... அத்தனை ஆளுமை மிக்க கலைஞர் அவர்.... தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் பதின்மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.
    வேறென்ன செய்ய முடியும்?
    உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற கண்ணன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
    பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்ற உணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தி இருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதி இருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
    சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்கு உரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி அவர்கள் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால் தான் முடியும்.
    மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
    திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் நம்மவர். ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்து கொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் நடிகர் திலகத்தின் ஆளுமை! கம்பீரம்....


    courtesy nadigar thilagam sivaji visirigal
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1985
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1986
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    sundar rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    வரும் 16.03.2018 வெள்ளி முதல்
    மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
    நடிகர்திலகம் இருவேடங்களில் மின்னி, இளையதிலகம் பிரபு இணைந்து நடித்த ...
    மாபெரும் வெள்ளிவிழா காவியம் சந்திப்பு வெற்றிநடை போட வருகிறது.
    தொடர்ந்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் படங்களுக்கு மாபெரும் வரவேற்பினை கொடுத்து,
    சாதனை சக்கரவர்த்தி சிவாஜி ஒருவரே
    என நிரூபித்து வரும்,
    சிங்கத்தமிழனின் சீறும் சிங்கங்களே....
    சந்திப்பு படத்திற்கு மாபெரும் வரவேற்பினைக் கொடுத்து வெற்றிபெறச் செய்வோம்.
    இன்றே வரவேற்க தயாராவோம்
    திரையுலக டான் சிவாஜி அவர்களை....



    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1987
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1988
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1989
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1990
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    K.S.Narsimhan

    நடிகர்திலகம்அவர்கள் நடித்த 21வது படமான முதல்தேதி வெளியான நாள் இன்று. வெளியான நாள் 12/3/1955.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •