Page 187 of 400 FirstFirst ... 87137177185186187188189197237287 ... LastLast
Results 1,861 to 1,870 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1861
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    vaannila vijayakumaran

    மிக்க நன்றி விஜய் சேதுபதி அவர்களே...

    கேள்வி:

    நடிகர்திலகம் சிவாஜி கணேசன், அவரது படங்கள், அவருடைய நடிப்பு...?...
    -எஸ்.ஜெரினா, ஆலந்தூர்.

    விஜய் சேதுபதி பதில்:

    "நடிகர்திலகம் சிவாஜி சார் மாபெரும் கலைக் களஞ்சியம்! நடிப்பை அவர் அளவுக்கு கொண்டாட முடியுமா தெரியலை.
    அவர் அதை மகிழ்ந்து கொண்டாடுவார்.
    உடம்பில் உயிர் போல நடிப்பு அவரிடம் இருந்தது. ஸ்க்ரீன்ல வந்துட்டா, 'இதுல என்னைவிட பெட்டரா யாரும் பண்ணிட முடியாது'னு புரூப் பண்ணிட்டு போவார், உடன் நடிப்பது யாராக இருந்தாலும்.
    எனக்கு அவருடைய பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆண்டவன் கட்டளை,தெய்வமகன் என்று பல படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவர் வாழ்ந்திருப்பார்.
    ஒவ்வொரு படத்திலும் தன்னை தன் நடிப்பை புதுசு புதுசா அறிமுகப்படுத்துவார். அவருடைய சாயல் இல்லாமல் எந்த நடிகரும் நடித்துவிட முடியாது.
    அவருடைய 'ராஜபார்ட் ரங்கதுரை' பிரமாதமான படம். அப்படியொரு செமயான ஸ்கிரிப்ட் அது.
    படத்துல அவர் நடிகராயிருப்பார். அவர் (வாழ்க்கையிலே) சந்தோஷமாயிருக்கும்போது நாடகத்திலும் சந்தோஷமான காட்சிகள் வரும். அவர் சோகமாயிருக்கும்போது சோகமான காட்சிகள் நாடகத்தில் வரும். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்ஒரு மூட்ல ரிப்பீட் ஆகும். அன்னைக்கு அந்த ஸ்கிரிப்டை ஹேண்டல் பண்ணுண விதம் அவ்ளோ பிரமாதம்.
    நடிகனின் வாழ்க்கையும் சினிமாவும் ஒண்ணுதான் என்பதுபோல சந்தோஷமும் சோகமும் ரிப்பீட்டா வருது. ஒரு நாடகக் கலைஞனின் வாழ்க்கை கண்முன் நடப்பது மாதிரி உணர வைக்கும்.
    ஒரு கட்டத்துல ரங்கதுரை எல்லாத்தையும் இழந்து நாடகத்தை இழுத்து மூடிவிடுவார்கள். மக்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து நாடகம் தொடங்கச் சொல்கிறார்கள். நாடகம் தொடங்கும்.
    "டூபீ - நாட் டூபீ- வாழ்வதா - வீழ்வதா?"
    அந்த கட்டத்துல அவர் இருப்பார். வாழ்வின் ஒவ்வொரு சிச்சுவேஷனையும் அந்த நாடகம் பிரதிபலிக்கும். முடிவும் அப்படியிருக்கும். செமயா பண்ணியிருப்பார்.
    'தில்லானா மோகனாம்பாள்' அதுவும் அப்படியொரு செமயான படம்தான். அந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    படத்துல நிறைய வில்லன்கள் வருவார்கள். ஆனால் டைரக்டர் வில்லனாக காட்டியது சிவாஜிசாரின் ஈகோவை. அந்த ஈகோ ஒரு சீன்ல உடையும்.
    அந்த ஆஸ்பிடல் நர்ஸ் அவர்மீது கொண்டிருக்கும் மதிப்பைச் சொல்லி அவரது ஈகோவை இடித்துத் தள்ளுவார். அப்போது அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார்.
    புதிய பறவை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்னு சொல்லிட்டே போகலாம். அவர் ஒரு டிக்ஷனரி. நீங்க என்ன பண்ணாலும் ரெஃப்ரன்ஸ் இருக்கும்."
    நன்றி: குமுதம் 29:06:2016 இதழிலிருந்து




    courtesy nadigarthilagam sivsji visirigal
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1862
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    athavan ravi


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1863
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று பிப்ரவரி 10
    " தமிழக முன்னேற்ற முன்னணி " உதயமான நாள்
    இன்று தமிழகத்தை உலகமே காரி உமிழ்கிறது,
    இப்படியான தரம் தாழ்ந்த ஒரு அரசியலை எங்கும் காண முடியவி...ல்லை,
    இந்த இழி நிலைக்குக் காரணமான தற்போதைய அரசியல்
    அன்று மட்டும் எங்கள் நடிகர்திலகத்திற்கு இந்த பாழ் பட்ட மக்கள் அரசியல் ஆதரவு அளித்து இருந்தால் இந்த சசிகலாவும் ஓ பி எஸ் இன்று அரசியல் ஆட்டத்திலேயே இருந்து இருக்க மாட்டார்கள்,
    தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கும்,










    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1864
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    181 வது வெற்றிச்சித்திரம்

    உனக்காக நான் வெளியான நாள் இன்று

    உனக்காக நான் 12
    பெப்ரவரி 1976



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1865
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1866
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Lakshmankumar

    அரிய புகைப்படம்.

    கல்யாணப் பரிசு படத்துவக்க விழாவின் போது நடிகர் திலகம் மூத்த மகன் தளபதி ராம்குமார் காமிராவை முடுக்கி வைத்த போது புகைப்படம். அருகில் சாந்தி, நடிகர் திலகம், சரோஜாதேவி, விஜயகுமாரி, எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.சரோஜா, தங்கவேலு மற்றும் படக்குழுவினர்.






    courtesy nadigarthilagam fans
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1867
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    vee yaar

    ஜெய்கணஷ் - சிவாஜி ரசிகர்களால் மறக்க முடியாத பெயர். தீவிர சிவாஜி ரசிகராக இறுதி வரை வாழ்ந்தவர். வெளிப்ப்டையாகவும் அதை நிரூபித்தவர். 1970களின் கடைசியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மன்ற விழாவும் ஜெய்கணேஷ் பங்கேற்பில் நடந்தது என்றால் மிகையில்லை. தவைரின் புகழை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று பரப்பியவர். வெறுமனே வழக்கமான சம்பிரதாயமான "அவர் சிறந்த நடிகர், அவரைப் போல சிறந்த நடிகர் யாருமில்லை" என்ற புகழுரைகளைத் தாண்டி, நடிகர் திலகத்தின் தேசபக்தி, காங்கிரஸ் இயக்கத்திற்கு அவ...ர் ஆற்றிய பங்களிப்பும் தொண்டும், அவருடைய நன்கொடைகள் போன்று அவருடைய சிறப்பினை எடுத்துக்கூறுவார். நாங்கள் எங்கள் தேசிய இளைஞர் சிவாஜி கணேசன் நற்பணி மன்றம் சார்பாக ஒரு விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றபோது அனைவருடனும் மிகவும் சகஜமாகவும் உரிமையாடும் பேசிப் பழகி, சொன்ன நாளில் சொன்ன நேரத்தில், தலைவரைப் போலவே நேரம் தவறாமையைக் கடைப்பிடித்து வந்து விழாவை நடத்திக் கொடுத்தார்.
    அவருடைய நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1868
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    vikram prabu guna

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஐய்யா பேனர் வைத்துள்ளார்





    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1869
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Selvaraj fernadez

    அன்று பல நடிகர்களும் நம் திரை உலகில் மின்னிக்கொண்டிருந்தார்கள் .தமிழ் திரை உலகில் ஜெயசங்கர் , ரவிச்சந்திரன், ஏவிஎம் ராஜன்,ஜெமினிகணேசன்,முத்துராமன்,எம்ஜிஆர் இவர்களுடன் நம் அய்யன். ஜெயசங்கர் அவர்கள் குடும்பக்கதைகளிலும், CID யாகவும் நடித்தார்கள். ரவிச்சந்திரன் துப்பறியும் கதைகளில் நடித்தார்கள். ஜெமினி கணேசன் காதல் தோல்வி கதைகளில் அதிகமாக நடித்தார்கள்.ஏவிஎம் ராஜன் கடவுள் பக்தி படங்களில் நடித்தார்கள். முத்துராமன் சொல்லும்படியாக இல்லை என்றாலும் குடும்பப் பாங்கான கதைகளில் நடித்தார்...கள். எம்ஜிஆர் அவர்கள் அக்ஷன் கதைகளிலும் ,மன்னராகவும் நடித்தார்கள்.ஆனால் இவர்களின் படங்களில் மக்கள் வாழ்க்கைக்கு தகுந்த கதைகள் என்று குறிப்பிட்டு எதையும் எடுத்துக்காட்டாக சொல்ல இயலாது. படம் பார்த்தபிறகு படம் நன்றாக இருந்தது,பரவாயில்லை.என்றுதான் சொல்லப்பட்டன.மேலும் இந்த நடிகர்களுக்கு இந்த கதைகளை விட்டு வேறு கதைகளில் மின்ன முடியவில்லை என்பது மறுக்க முடியாத சத்தியம். இவர்களின் பல படங்கள் வெற்றி பெற்றதுண்டு. மேலும் இந்த நடிகர் இந்த வேடத்துக்குதான் பொருத்தமானவர் என்று முத்திரையும் குத்தப்பட்டதுண்டு. காரணம் மேற்படி சொல்லப்பட்ட நடிகர்களுக்கு அதைத்தான் செய்ய முடிந்தது. வேற்று கதா பாத்திரங்களில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அய்யன் சிவாஜி அவர்கள் மேற்கூறிய அனைத்து நடிகர்களும் செய்த கதாபாத்திரங்களை நம் அய்யன் மிக அழகாக, நேர்த்தியாக,பார்ப்பவர்களின் மனதில் பதியும்படியாக, பரவசமாக ,படம் பார்த்த பிறகும் நாட்களாக,வாரங்களாக,மாதங்களாக மக்கள் பேசும்படி நடித்தார் என்று சொல்வதை விட ,மக்கள் மகிழும் படி வாழ்ந்து காட்டினார் . அயனின் படங்களில் ஏற்றுக்கொண்ட எந்த கதாபாத்திரமும்,இந்த கதாபாத்திரம் இவருக்கு எடுபடவில்லைஎன்று எவராலும் சொல்ல முடியவில்லை.கரணம். அய்யன்ஏற்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் அய்யன்நடக்கவில்லை வாழ்ந்தே காட்டினார் .எனவேதான் அய்யன் நடிப்பை எவராலும் குறை சொல்ல முடியவில்லை.குறைகள் காணவும் இல்லை. இதில் விசேஷம் என்னவென்றால் மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக கூற நடிகர்திலகத்தின் படங்களே முன்னுதாரணம். காதலனாக, ,குடும்ப தலைவனாக,மன்னர்களாக, தேசத்தலைவர்களாக,மருத்துவராக,முதியவனாக,ரோகியாக,வாலி பனாக,காவல்துறை அதிகாரியாக, அரசாங்க அதிகாரியாக,பார்வையற்றவனாக,கோமாளியாக,வாள் வீசும் வீரனாக,நாடகக்காரனாக,பாதிரியாராக,முற்றும் துறந்த முனிவனாக, சமய பெரியவராக,மாலுமியாக,ரகசியபோலீசாக ,பனைஏறியாக, அன்புள்ள அண்ணனாக,பாசமிகு தந்தையாக, ஆலைகளின் முதலாளியாக,வித்தை காட்டுபவானாக, சூரனாக, தெய்வங்களாக.மீனவனாக,நடை மன்னனாக , இன்னும் பல,பல அவதார புருஷனாக, மேலே கூறிய நடிகர்கள் செய்த ,அவர்கள் செய்து வெற்றி பெறாத அனைத்து கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக,மக்கள் பல மாதங்கள் அல்ல, இப்போதும் பேசி மகிழும் அளவிற்கு எல்லா கதா பாத்திரங்களிலும் நடிக்காமல் வாழ்ந்தார் என்பதே உலக உண்மை. மேலே கூறி நடிகர்கள் செல்வத்திற்காக நடிகர்களாக நடித்தார்கள். இதுதான் என் தொழில் என்று சிரம் ஏற்று ஐய்யனோ சினிமாவில் வாழ்ந்து காட்டினார்,உலகமெல்லாம் ஏற்றுக்கொண்டு , அழைத்து சிறப்பிக்கப்பட்டு, பல பதவிகள் அலங்கரிக்கப்பட்டு,சிறப்புக்கள் பல பெற்று , இந்தியனாக, அதிலும் ஒரு தமிழனாக இன்றும் சுடராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.வாழ்க அய்யனின் புகழ்.



    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1870
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    jahir hussain

    நடிகர் திலகமும் டி.எம்.சௌந்திரராஜனும்... இரட்டைக் குழல் துப்பாக்கி போல நம் இதயங்களை பூந்தோட்டாக்களால் வருடிய பொன்னான கால கட்டங்கள் அது... சில நிகழ்வுகளை அசை போடுவது நமக்கு இனிமையாக இருக்கிறது.. 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.... கௌரவம் படத்தில் பாரிஸ்டர் சிவாஜி பாடுவதாக அமைந்த இரண்டு பாடல்களும் கண்ணன் சிவாஜி பாடுவதாக அமைந்த மெழுகுவர்த்தி எரிகிறது பாடலையும் டி.எம்.எஸ். பாடியிருப்பார்... இதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரல் மாடுலேஷனுக்கு தக்கவாறு பாடி அசத்தியிருப்பார்.. வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ வைக்கச் சொன்னார் டி.எம்.எஸ். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர். நடிகர் திலகத்தை எவ்வளவு க்ளோஸ் ஆக புரிந்து வைத்து இருந்தார் என்பது புலனாகிறது அல்லவா?
    " உயர்ந்த மனிதன்' படத்தின் 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...'ஆகிய இரண்டு பாடல்களையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.
    " சிவந்த மண் படத்தில் "ஒரு நாளிலே" பாடலின் மென்மை கருதி பாலமுரளி கிருஷ்ணாவை பாட வைத்து பதிவு செய்து விட்டார் மெல்லிசை மன்னர்.. ஆனால் நம்மவர் அந்த பாடலின் தனித்தன்மையை சுட்டிக்காட்டி டி.எம்.எஸ். மீதுள்ள நம்பிக்கையினால் அவரையே பாட வைக்க பரிந்துரைத்தார்... பாலமுரளி கிருஷ்ணாவோ சீர்காழி கோவிந்த ராஜனோ டி.எம்.எஸ்.ஐவிட இசை ஞானத்தில் எவ்விதத்திலும் குறைந்தவர் அல்லர்... ஆனால் நம்மவருக்கு பாடும் மோது டி.எம்.எஸ் இன் குரல் ஒற்றுமை அவ்வளவு பாந்தமாக மேட்ச் ஆகிறது... "தெய்வமகன்" படத்தில் சிருங்காரம் ரஸம் மிக்க "காதல் மலர் கூட்டம்" பாடலையும் .. பக்தி ரஸம் மிக்க "கேட்டதும் கொடுப்பவனே" பாடலும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர் திலகத்தின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற புரிதலோடு பாடியதும் குறிப்பிடத் தக்கது... "தெய்வமே" பாடலும் "காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்" பாடலும் இரு வேறு பாடகர்கள் இருவேறு நடிகர்களுக்காக பாடியது போல ஜீவனுடன் அமைந்துள்ளது.. சிறப்பு... "ப்ராப்தம்" படத்தில் "தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்" பாடலையும் குறிப்பிட்டு சொல்லலாம்... டி.எம்.எஸ். உச்சஸ்தானியில் பாடும் போது இடையில் சாவித்ரி "கண்ணா" என்று குரல் கொடுப்பார்... மேலும் உருக்கமாக அமைந்தது அந்தப்பாடல்... அதேபோல "ஞான ஔி" படத்தில் "தேவனே என்னைப் பாருங்கள்" பாடல் இடையே ஓ..மைலார்ட்... பார்டன் மீ... என்ற வசனம் வரும் அதை நம்மவரை பேச சொன்னார் எம்.எஸ்.வி... பாடலை கேட்டு விட்டு வசனம் பேச மறுத்துவிட்டார்... பிறகு அந்த வசனத்தை மெல்லிசை மன்னரின் உதவியாளர் ஜோஸப் கிருஷ்ணா, மற்றும் சதன் போன்றவர்கள் பேசினார்கள் சரியாக வரவில்லை.. டி.எம்.எஸ். யே பேச சொன்னார் எம்.எஸ்.வி.. நேராக நடிகர் திலகத்திடம் னெ்றார் டி.எம்.எஸ். இந்த வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நம்மவரிடம் கேட்டார்.. பந்து இப்போது நம்மவர் கைகளில்... நடிகர்திலகம் தமது பாணியில் தன் சிம்மக் குரலில் பேசிக் காட்டனார்... அப்படியே "கேப்ச்சர்" பண்ணிக் கொண்ட டி.எம்.எஸ். பாடல் ஒலிப்பதிவுக்கு தயாரானார்... மற்ற விபரங்களைத்தான் வெள்ளித் திரையில் பார்த்தோமே நாம்.. இப்படி நிறைய்ய நினைவுகளை அசைபோடலாம்.. ஒரு நடிகருக்கும் ஒரு பாடகருக்கும் உள்ள இதுபோன்ற நுணுக்கமான புரிதல் உலகில் எந்தவொறு ஜோடிக்கும் இருந்தது கிடையாது என்பது உண்மை...




    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •