Page 186 of 400 FirstFirst ... 86136176184185186187188196236286 ... LastLast
Results 1,851 to 1,860 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1851
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1852
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1853
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1854
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    courtesy sivajganesan.in
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1855
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post



    courtesy sivajganesan.in
    அருமையான படம். அருமையான நடிப்பு. A movie for all generations forever.

    மதுரை என்றுமே எங்கள் நடிகர் திலகத்தின் கோட்டை.

    நன்றி சிவா! உங்கள் சேவை தொடரட்டும்.

  7. #1856
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1857
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Quote Originally Posted by tacinema View Post
    அருமையான படம். அருமையான நடிப்பு. A movie for all generations forever.

    மதுரை என்றுமே எங்கள் நடிகர் திலகத்தின் கோட்டை.

    நன்றி சிவா! உங்கள் சேவை தொடரட்டும்.
    நன்றி tacinema

    பாவமன்னிப்பு மிகச்சிறந்த படம் அத்துடன் வசூலிலும் சாதனை படைத்த படம்
    சென்னையில் 10 லட்சம் கண்ட முதல் படம் மட்டுமல்ல
    இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களின் வசூல் சாதனைகளை எல்லாம்
    முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய படம்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1858
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1859
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas

    சித்தூர் ராணி பத்மினி - Part I
    தயாரிப்பு: உமா பிக்சர்ஸ்
    இயக்கம்: Ch.நாராயண மூர்த்தி
    வெளியான நாள்: 09.02.1963
    இன்றைக்கு சரியாக 55 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான திரை காவியம். ரஜபுத்திர வீரத்தையும், பத்மினி என்று அறியப்பட்ட பத்மாவதியின் கதையை அன்றே திரைபடமாக்கிய புதுமை. அந்த காவியத்தைப் பற்றிய ஒரு பார்வை இரண்டு பகுதிகளாக. (பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் முதல் பகுதி திரைக்கதைக்கு ஒதுக்கப்படுகிறது).
    சரித்திர பின்னணியில் அமைந்த கதை. தமிழக வரலாற்று பின்னணியைக் கொள்ளாமல் ராஜஸ்தானின் ரஜபுத்திர சாம்ராஜ்ஜியத்தில் நிகழும் கதையை தமிழில் எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் வழக்கில் இருக்கும் (இப்போதும் அவர்கள் நம்பும்) வரலாற்று நிகழ்வுகளை (அதாவது மாற்றான் கையில் சிக்கிக் கொள்வோம் என வரும்போது அதை விட உயிரை விடுவது மேல் என ரஜபுத்திர வம்ச பெண்மணிகள் தீக்குளித்தார்கள்) சற்றே மாற்றி எழுதப்பட்ட முடிவு.
    ரஜபுத்திர நாடான உதயபூர் (உதய்பூர்) தலைநகரில் இளவரசி பத்மினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களோடு கதை தொடங்குகிறது. அன்றைய டெல்லி பாதுஷா அலாவுதின் கில்ஜியின் தூதுவனான மாலிக்காபூர் விருந்தினராக வந்திருக்கிறான். இளவரசியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் போட்டியில் மாலிக்காபூரை வெல்கிறான் சித்தூர் சிப்பாய் என்ற மாறு வேடத்தில் வரும் சித்தூர் மன்னன் பீம்சிங். இளவரசியின் கையிலிருந்து பரிசு பெறும் அவன், அவள் அழகில் கவரப்படுகிறான். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அவளை சந்திக்கும் பீம்சிங் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.அவளுக்கும் அது சம்மதமே.
    மன்னன் என்பதை காட்டிக் கொள்ளாமல் சிப்பாய் போன்றே நடிக்கிறான். ஒரு சமயம் அவன் பாட பத்மினி நடனம் ஆடுகிறாள். ஒரு போட்டி அங்கே அரேங்கேறுகிறது. யாருக்கு வெற்றி என்று தெரியும் முன்னரே மன்னரே போட்டியை நிறுத்தி விடுகிறார். பீம்சிங்கிடம் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க அவன் அவரது மகளையே பரிசாக கேட்க, அவன் அரசன் என்று தெரியாமலே அவனை கைது செய்து தண்டிக்க முற்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பீம்சிங் தப்பித்து செல்கிறான்.
    இதனிடையே டெல்லி சென்றடையும் மாலிக்காபூர், அலாவுதினிடம் பத்மினியின் அழகை வர்ணிக்க, டெல்லி பாதுஷாவிற்கு அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது. பத்மினியை மணந்து கொள்ள மன்னரிடம் மாலிக்காபூரையே தூது அனுப்புகிறான். செய்தி கேட்டவுடன் மன்னன் பெண் தர மறுத்து விடுகிறான். அந்நேரம் பீம்சிங் சித்தூர் நாட்டின் தூதனாக (மறுபடியும் மாறு வேடம்) வந்து தங்கள் மன்னனுக்கு பத்மினியை பெண் கேட்க, மாலிக்காபூர் முன்னிலையிலே மன்னன் சம்மதித்து விடுகிறான் . மிகுந்த கோவத்துடன் மன்னனை எச்சரிக்கும் மாலிக்காபூரை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
    மன்னன் பீம்சிங்கும் தன் காதலன் சிப்பாயும் ஒன்றே என்றறியாத பத்மினி திருமணத்திற்கு மறுக்கிறாள். அவளை சந்திக்கும் சிப்பாய் கல்யாணத்தன்று தான் வந்து அவளை அழைத்து செல்வதாக கூறி சம்மதிக்க வைக்கிறான். கல்யாணத்திற்கு முதல் நாள் பரிவாரங்களோடு வரும் பீம்சிங் இரவு நேரத்தில் அந்தபுரத்தில் பத்மினியை சந்திக்கும் போது மன்னர் வந்து விடுகிறார். அவனை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது, சித்தூர் நகர பிரதானிகள் வந்து உண்மையை விளக்க அனைவரும் மகிழ்ந்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
    பத்மினி தனக்கு கிடைக்கவில்லை என்றதும் மிகுந்த கோவம் அடையும் அலாவுதின் சித்தூர் நாட்டின் மீது படை எடுக்கிறான். கோட்டையை முற்றுகையிட்டும் அவர்களால் சித்தூரை பிடிக்க முடியவில்லை. படை பலம், ஆயுத பலம் பலன் தராது என்பதை உணரும் அலாவுதீன் மாலிக்காபூரை சமாதான பேச்சுக்கு அனுப்புகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் பீம்சிங் அலாவுதினை விருந்தினராக வரவேற்கிறான்.
    பத்மினியின் நடனத்தை காண வேண்டும் என்று ஆவலை வெளிப்படுத்தும் அலாவுதினிடம் ரஜபுத்திர வம்சத்து பெண்கள் திருமணத்திற்கு பிறகு அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் ஆட மாட்டார்கள் என பீம்சிங் மறுத்து விடுகிறான். மீண்டும் மீண்டும் அலாவுதீன் வற்புறுத்தவே, வேறொரு அறையில் பத்மினியை நடனமாட செய்து அதை கண்ணாடி மூலம் அலாவுதின் காண ஏற்பாடு செய்கிறான். தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குமுறும் அலாவுதீன் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் திரும்பி செல்கிறான்.
    தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்க நினைக்கும் அலாவுதீன் தன் பிறந்த நாளுக்கு மனைவியுடன் வருமாறு பீம்சிங்கிற்கு ஓலை அனுப்புகிறான். போக வேண்டம் என்று பீம்சிங்கின் தாய் தடுக்க, தன்னை கோழை என்று நினைத்து விடுவான் என்று பீம்சிங் வாதிடுகிறான். அப்படியென்றால் பீம்சிங்கை மட்டும் போய் விட்டு வரும்படி தாய் சொல்ல, அவன் செல்கிறான்.
    அங்கே நடக்கும் ஒரு நடன நிகழ்ச்சியிலே அவனை கொல்ல நடக்கும் சாதுர்யமான முயற்சியிலிருந்து தப்பிக்கும் பீம்சிங்கை அவன் இரவு உறங்கும் போது கட்டிலோடு சேர்ந்து கட்டி போட்டு சிறை பிடிக்கிறார்கள். அவன் மனைவியை வரச்சொல்லி ஓலை அனுப்புகிறார்கள். அவள் தங்கள் அரச சபையில் ஆடினால் அவளது கணவனை விடுதலை செய்வதாக சொல்கிறார்கள். நூறு சேடி பெண்களுடன் வருவதாக அவள் தகவல் கொடுத்து விட்டு வருகிறாள். பீம்சிங்கிற்கு இது அவமானமாக இருக்கிறது. சபைக்கு வரும் பத்மினி தன்னுடன் அழைத்து வந்தது எல்லாம் ஆண்கள். அரசவையில் அவர்கள் தீடீர் தாக்குதல் நடத்த, பீம்சிங்கும் பத்மினியும் தப்பித்து செல்கிறார்கள்.
    பின் தொடர்ந்து வரும் அலாவுதீன் இம்முறை தாக்குதலை தீவிரப்படுத்துகிறான். தன்னை சிறைப் பிடித்ததனால் மனம் தளர்ந்த பீம்சிங் ஆரம்பத்தில் போருக்கு செல்லாமல் இருக்க, அவனது படைகள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. இறுதியில் களத்திற்கு செல்லும் பீம்சிங், எதிரி ஒருவன் எறியும் ஈட்டி கொண்டு மரணமடைகிறான். போரில் தன் கணவனுக்கு உதவியாக பங்கு பெறும் பத்மினியும் அதைக் கண்டு மரணத்தை தழுவ, படம் நிறைவு பெறுகிறது.
    (தொடரும்)



    courtesy net nadigarthilagam fans
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1860
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    murali srinivas

    சித்தூர் ராணி பத்மினி - Part II
    இந்தப் படத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக பார்க்கிறேன். [இதை எழுதியது 2009ல்] ஏனென்றால் அவ்வளவாக மறு வெளியீடு காணாத திரைப்படம். படத்தைப் பற்றி செய்திகளும் குறைவாகவே கேள்விப்பட்டிருந்தேன்.
    எந்த வித முன் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் படம் பார்த்தேன்.டைட்டில் போடும் போது இரண்டு ஆச்சர்யங்கள். கதை வசனம் ஸ்ரீதர்- இளங்கோவன் என்பது ஒன்று. பின்னணி பாடியவர்கள் பட்டியலில் டி.எம்.எஸ். பெயர் இல்லை என்பது இரண்டாவது.
    தூய தமிழில் அடுக்கு மொழி வசனம் எழுதி தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் இளங்கோவன் என்றால் இயல்பான வசனம் மூலம் மக்களை கவர்ந்தவர் ஸ்ரீதர். இந்த இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு புதுமையாக இருந்தது. ஜி.ராமநாதன் இசையில் படத்தில் நடிகர் திலகம் பாடும் அனைத்துப் பாடல்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார் சீர்காழி. இது வரை இதைப் பற்றி கேள்விப்படாததால் இதுவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.
    இனி படத்திற்கு வருவோம். மாற்றான் ஒருவன் தன் மீது ஆசைக் கொண்டு கணவனை சிறை செய்து தன் மானத்தை விலை பேசிய போது, தந்திரமாக செயல்பட்டு தன் கணவனை காப்பாற்றிய ரஜபுத்திர ராணியின் கதை சரித்திரத்தில் இருக்கிறது. ராணி உட்பட பெண்கள் அனைவரும் மாற்றான் கையில் சிக்காமல் தீக்குளித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அது நடந்ததா இல்லை கற்பனையா என்பது பற்றி அண்மை காலத்தில் பெரிய விவாதமானது நமக்கு தெரியும். அந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் எடுக்கப்பட்ட படம். கதாநாயகியின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையமைப்பு. இதற்கு ஒரு நடிகர் திலகம் தேவையில்லை. எப்பவும் போல் யாருக்கோ உதவி செய்ய நடிகர் திலகம் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். கதையும் பாத்திரமும் எப்படி இருந்தாலும் தன் முழு பங்களிப்பையும் தருபவர் நடிகர் திலகம். இதிலும் அப்படியே.
    சித்தூர் சிப்பாய் வேடத்தில் வந்து மாலிக்காபூரை வெற்றிக் கொண்டு இளவரசியிடம் இளமைக் குறும்போடு பேசும் அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அவரது presence படத்திற்கு உதவியிருக்கிறது. தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் வைஜயந்தியிடம் அவர் சரசமாடும் காட்சிகள் எல்லாம் சுவை. மாறு வேடங்களில் அவர் வைஜயந்தியை ஏமாற்றும் காட்சிகளும் அப்படியே. வைஜயந்தி நடனமாட சிவாஜி பாடும் அந்த பாடல் காட்சி ["பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்"] பிரமாதம். இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு ஸ்வர பிரஸ்தாரங்கள் / ஜதிகள் ஒரு பாடலில் பயன் படுத்தப்பட்டு நான் கேட்டதில்லை. அதற்கு அவர் வாயசைப்பு அற்புதம். மாலிக்காப்பூரை வாதத்தில் அடக்குவது, சிறையில் அவனை எடுத்தெறிந்து பேசி விட்டு சிரிப்பது, தன்னை சூழ்ச்சியின் மூலமாக கட்டிப் போட்ட அலாவுதினிடம் அவர் காட்டும் பாவம், அவர்களை துச்சமென மதித்து அவர் பேசுவது எல்லாம் அக்மார்க் சிவாஜி முத்திரை. என்னதான் மனைவி சாதுரியமாக செயல்பட்டு தன்னை மீட்டாலும், தன் வீரத்தின் மூலமாக விடுதலை பெறாமல் இப்படி தப்பித்து வரும் படியாகி விட்டதே என்று மனம் தளர்ந்து அவர் ஒரே இடத்தில சலனமற்று உட்கார்ந்திருக்கும் காட்சி குறிப்பிட தகுந்த ஒன்று. அதே போல் நடனம் ஆடிக் கொண்டே தன் உடை வாள் கத்தியை எடுத்து குத்த வரும் நடன மங்கையை அவர் அலட்சியமாக சமாளிக்கும் இடம். இப்படி நடிகர் திலகம் என்ற யானைக்கு சோளப் பொறியாக சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.
    நடனத்தில் தேர்ந்த ராணி என்றதும் பத்மினி அல்லது வைஜயந்தி தான் நினைவுக்கு வருவார்கள். இந்த படம் தயாரிக்க தொடங்கிய போது பத்மினி திருமணம் செய்துக் கொண்டு திரையுலகத்திலிருந்து விலகிய நேரம் என்பதால் வைஜயந்தி நாயகியாகி இருக்கிறார். அவரும் அந்த நேரம் இந்தி படவுலகில் பிசியாகி விட படம் தாமதமாகி இருக்கிறது.
    அழகான வைஜயந்தி. நடனக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தும் வைஜயந்தி மற்ற காட்சிகளிலும் சோடை போகவில்லை. ஆனால் அந்த பாடல் vs நடனம் போட்டி காட்சியில் பாடல் சிறப்புற்ற அளவுக்கு நடனம் அமையவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை பார்த்த நமக்கு இது அந்த ரேஞ்சுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. காதல் காட்சிகளில் அவரிடம் நல்ல இளமை துள்ளல்.
    மாலிக்காபூராக நம்பியார், அலாவுதினாக பாலையா. நம்பியார் எப்போதும் போல. பாலையா என்பதால் அலாவுதீன் பாத்திரம் அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறதா இல்லை சரித்திரத்திலேயே இப்படித்தானா என்று தெரியவில்லை. படம் முழுக்க மது மாது மயக்கத்திலே கேளிக்கை போகத்தில் திளைக்கும் அரசனாகவே அந்த பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் பாலையா பளிச்சிடுகிறார்.
    மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. சித்தூர் நாட்டின் தளபதியாக கவர்ச்சி வில்லன் கண்ணனை அடையாளம் தெரிகிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கு ஹெலன் மற்றும் ராகினி வந்து போகிறார்கள்.
    காதலனை சிப்பாய் என்றே குறும்போடு அழைக்கும் பாங்கு எல்லாம் ஸ்ரீதர் டச்.அரண்மனை ஆவேச வசனங்கள் எல்லாம் இளங்கோவனின் கைவண்ணம் என்று தோன்றுகிறது.
    இசையமைப்பு ஜி.ராமநாதன் என்று சொல்லும் போதே கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட மெட்டுகள் என்பது மட்டுமல்ல இனிமையான சுவையைக் கொண்டவையாய் இருக்கும் என்பது இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.
    1.தேவி விஜய பவானி
    வைஜயந்தியின் அறிமுக பாடல்
    2. ஓஹோ நிலா ராணி
    சிப்பாய் வேடத்தில்வரும் நடிகர் திலகம் நிலவை நாயகியோடு ஒப்பிட்டு பாடும் பாடல்.
    3. பார்த்து கொண்டு இருந்தால் போதும்
    போட்டி பாடல். சீர்காழி பிய்த்து உதறி விட்டார். Hats off to him.
    4.ஹம் தேகே மேல பாருங்கோ
    அலாவுதினின் தர்பாரில் ராகினி ஆட இடம் பெறும் பாடல்.
    5.சிட்டு சிரித்தது போல
    சிவாஜி -வைஜயந்தி டூயட் பாடல்
    6. வானத்தில் மீன் ஒன்று
    வைஜயந்தி வேறொரு அறையில் கண்ணாடி முன் நின்று ஆடும் போது வரும் பாடல்.
    7. ஆடல் பாடல் காணும் போது
    அலாவுதினின் அரண்மனைக்கு பீம்சிங் வரும் போது ஹெலன் ஆடும் நடனப் பாடல்.
    எல்லாமே கேட்க இனிமையானவை.
    நடிகர் திலகத்தின் அன்னையின் ஆணை போன்ற படங்களை இயக்கிய நாராயண மூர்த்தி இதை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் கதையும் திரைக்கதையும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
    Curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முழுமையாக இல்லாமல் அங்கங்கே நன்றாக இருப்பது. இந்த படத்திற்கு அது பொருந்தும். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம், சரித்திர கதைகள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு காலக்கட்டத்தில் வெளியானது, நடிகர் திலகத்திற்கு ஏற்ற பாத்திரப் படைப்பு அமையாமல் போனது, இப்படிப்பட்ட காரணங்கள் இருக்கும் போது படம் வெற்றி வாய்ப்பை இழந்ததில் வியப்பொன்றுமில்லை தவிரவும் எப்போதும் நடப்பது போல் இந்த படம் வெளியான மூன்று வாரத்தில் 01.03.1963 அன்று அறிவாளி ரிலீஸ். அதற்கு அடுத்த நாலு வாரத்தில் 29.03.1963 அன்று இருவர் உள்ளம், அதற்கு இரண்டு வாரம் கழித்து 12.04.1963 அன்று நான் வணங்கும் தெய்வம் வெளியாகின்றன. போதாக்குறைக்கு சித்தூர் ராணி பத்மினி வெளியாகும்போது 78 நாட்களை கடந்து ஆலயமணி வேறு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் நேரம். இத்தனையும் தாண்டி படம் பேசப்பட்டதே சாதனைதான்.
    அன்புடன்



    courtesy net nadigarthilagam fans
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •