Page 178 of 400 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1771
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    .................................................. ...................................
    Udaikumar Rangayan

    ஶ்ரீதருக்கே வாழ்வு கொடுத்தவர் நடிகர் திலகம் தான். ஶ்ரீதரும் அவர் நண்பர்கள் சிலரும் சேர்ந்து வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை குறைந்த முதலீட்டில் துவங்கினார்கள்.அப்போது அவர் நடிகர் திலகத்தை அணுகி எங்கள் தயாரிப்பில் நீங்கள் நடிப்பதாக விளம்பரம் கொடுக்கிறோம்.அதைப் பார்த்து வினியோகஸ்தர்கள் முன் பணம் கொடுப்பார்கள் எங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார். திலகமும் சரியென்று கூற வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அமர தீபம் விளம்பரம் செய்யப்பட்டது.

    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1772
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணக்கம்.NT ரசிகர்களே! பூஜையின்போது வைத்த தலைப்பு படம் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது என்ன படம்..?







    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1773
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    jahir hussain

    சந்தர்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் சில நடிகர்கள் சில ஊடகங்கள் நம்மவரைப்பற்றி மட்டம் தட்டி எங்கேயோ கிடைக்கிற எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு பேசிவிட்டு போய் விடுகிறார்கள்... நாமும் கொசு கடிப்பதுபோல நினைத்து அந்தந்த தருணங்களில் அதை தட்டிவிட்டு போய் விடுகிறோம்... அது நன்றன்று... அவர்கள் மட்டம்தட்டி பேசுவதை தட்டிக் கேட்க கடமைப் பட்டுள்ளோம்... தட்டிக் கேட்பது என்றால் தடியெடுத்து அடிப்பதல்ல... பதிவுகள் மூலம் அவர்களது மூளைக்கு உறைக்கும் அளவுக்கு புள்ளி விபரங்களை சளைக்காமல் சலிக்க...ாமல் பதிவிட வேண்டும்... பத்துக்கு ஒரு பதிவேனும் அந்தந்த மூடர்கள் கண்ணில் படும்... இந்த மட்டம் தட்டும் வேலை இன்றல்ல நேற்றல்ல "உத்தம புத்திரன்" பட காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது... எம்.கே.டி மற்றும் சின்னப்பா காலகட்டங்களில் அவர்களுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள்... ஆனால் குழுக்களாக இல்லை... முதன்முதலில் ரசிகர்கள் குழுக்களாக இணைந்து மன்றங்களாக உருமாறியது ஐயன் சிவாஜி அவர்களுக்குத்தான்... அதுதான் எதிர்முகாமில் உருவாகிக் கொண்டிருந்த திரு. எம்.ஜி..ஆர் அவர்களின் "நலம் விரும்பி"களுக்கு புளியை கரைத்தது... சிவாஜி மன்றங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போல செயல்பட துவங்கியதும் பொறுக்க முடியவில்லை... அப்போதுதான் இந்த மட்டம் தட்டும் பணி துவங்கியது... எப்படி? சிவாஜி சினிமாக்கள் பெரும் பொருட்செலவில் தயாராகும் போதெல்லாம் அவர்களுக்கு மூக்கு சிவந்து விடும்... உடனே அந்தந்த படங்களின் தவறான புள்ளி விபரங்களை பதிவேற்றி அவை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்தனர்... அதனால்தான் கர்ணன், சிவந்த மண், ராஜராஜசோழன் போன்ற பிரம்மாண்ட படங்களின் வெற்றியை குறைத்து மதிப்பிட நெகடிவ் விமர்சனங்களை கையாண்டனர்... அதையும் மீறி அந்தந்த படத்தயாரிப்பாளர்களையும் தம்பக்கம் இழுத்து பக்கவாத்தியங்கள் போல பயன்படுத்திக் கொண்டனர்.. இயக்குநர் கம் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் மற்றும் பி.ஆர்.பந்துலு போன்றவர்கள் வெளிப்படையான உதாரணங்கள்... நல்ல வேளை வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்களின் மீது கை வைக்கவில்லை... ஏ.பி.என். அவர்களும் ஒரு ஸ்டேஜில் இந்த சூழ்ச்சிக்கு பலியாகி நவரத்தினம் படம் எடுத்து புகைந்து போனார்... அந்த மட்டம்தட்டும் பணியின் நீட்சிதான் இன்றைய விவேக்குகளும் தந்தி போன்ற ஊடகங்களும்... எத்தனையோ சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொடுத்து அந்தந்த தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் ஔியேற்றி வைத்தவர் நமது அண்ணல் சிவாஜி.. இயக்குநர்கள் பி.மாதவனும் ஏ.சி.திருலோக சந்தரும் தயாரிப்பாளர்களாக பவனி வந்தது சில உதாரணங்கள்... நடிகர் பாலாஜி ... சிறந்த தயாரிப்பாளாக வெற்றி பவனி வந்தது திரையுலகமே நன்கறியும்... அதையெல்லாம் சொல்லிக்காட்ட துப்புக் கெட்டவர்கள்தான் இந்த மட்டம் தட்டும் மைனர் குஞ்சுகள்... இவர்களுக்கு தக்க புத்தி புகட்டுவது என்பதே நடிகர் திலகத்திற்கு உண்மையாக இருப்பதற்கு சமம் ஆகும்... பல நண்பர்கள் இதுபற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்... நானும் என் கடமையை செய்து இருக்கிறேன்...




    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1774
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vee yaar





    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1775
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    naterajan.p

    மலேசியாவில் சிங்கத்தமிழனுக்கு விழா


    உலகமெல்லாம் சிங்கத்தமிழன் புகழ்
    மங்காது ஒலிக்கட்டும்.
    இங்கிருக்கும் தமிழ்மண்,
    எள்ளி நகையாடும் போது
    எங்கிருந்தாலும் தமிழினம் மானத்தை காக்குமல்லவா...
    மலேசிய தமிழன்
    மானம் காக்கின்றான்.
    மனதால், இனத்தால் நினைக்கின்றோம்
    நீவீர் மறத்தமிழனன்றோ...
    ஆட்சி ஆண்டுவிட்டால் போதுமா?
    அதற்குரிய அமைப்பு வேண்டுமில்லையா?
    பாரடா என்தமிழா...
    பாரதத்தை தாண்டியும்
    எம்தமிழன் புகழ்
    வீருகொண்டு பறக்கிறது.
    இனத்துரோகம் செய்பவர்
    இன்னும் எத்தனை நாள்
    ஆளப்போறார்?
    'ஆண்டவன் கட்டளை' இது...!
    "எங்களுக்கும் காலம் வரும்,
    காலம் வந்தால் வாழ்வு வரும்...
    வாழ்வு வந்தால்
    அனைவரையும் வாழவைப்போமே..."
    "நெஞ்சிருக்கும் எங்களுக்கு
    நாளையென்ற நாளிருக்கு
    வாழ்ந்தே தீருவோம்.
    எங்கே கால் போகும் போகவிடு
    முடிவை பார்த்துவிடு
    காலம் ஒருநாள் கை கொடுக்கும்
    அதுவரை பொறுத்துவிடு..."




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1776
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan



    "பள்ளிச் சாலை தந்தவன்"
    ......

    "தங்கங்களே நாளை தலைவர்களே..
    நம் தாயும் மொழியும் கண்கள்..
    சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
    நம் தேசம் காப்பவர் நீங்கள்..
    தங்கங்களே நாளை தலைவர்களே..
    நம் தாயும் மொழியும் கண்கள்..
    சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
    நம் தேசம் காப்பவர் நீங்கள்..
    நம் தாத்தா காந்தியும்
    மாமா நேருவும்
    தேடியச் செல்வங்கள்..
    பள்ளிச் சாலை தந்தவன்
    ஏழைத் தலைவனை
    தினமும் எண்ணுங்கள்..."
    இருக்கும் வரை அந்த இனியவன் 'கணேசன்' நம் அய்யன் நடிகர்திலகம் சிங்கத்தமிழன் சிவாஜிகணேசன் சிந்தையெல்லாம் தம் தங்க தலைவனை நினைத்துச் சென்றார். நாமும் அன்னவர் புகழை நினைத்துப் பார்த்து பெருமைக்கொள்வோம்.
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
    ........................

    அறிவானந்தன்
    கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை
    Tuesday, December 12, 2006
    காமராஜ் மதிய உணவு திட்டம்
    ....

    .காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் நடந்த கல்விப்புரட்சி
    காமராஜர் "கல்வி வள்ளல்" என்றும், "கல்விக்கண் திறந்த வர்" என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956-ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும்.
    .....

    1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு" நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடி வேலு அமர்ந்திருந்தார்.
    ......

    தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தர வடிவேலுவிடம்
    காமராஜர் விசாரித்தார்.
    .....

    "தொடக்கப்பள்ளி களில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர் களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார்.
    .............

    மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.
    ....

    அவர் கூறியதாவது:-
    "தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும்.
    .............

    பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
    ................

    அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்.
    ...

    இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.

    .................

    தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்."
    இவ்வாறு காமராஜர் கூறினார்.

    ........................

    அமைச்சரவை ஆலோசனை
    மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    ..........................

    வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந் தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.
    .............

    முடிவில் சத்துணவு திட் டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    .............

    அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட் டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறிய தாவது:-
    "அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்.
    .................

    எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்."
    இவ்வாறு காம ராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆர வாரம் செய்தனர்.


    .......................

    15 லட்சம் பேர்
    1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது.
    15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.
    .....

    பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.

    ......

    மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.
    .......

    1954-ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962-ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.
    ......

    இதேபோல் 1954-ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964-ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது.
    ......

    இலவச கல்வி
    எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960-ல் காமராஜர் கொண்டு வந்தார்.
    ......

    ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200-க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது.
    .....

    1962-ம் ஆண்டில், "வரு மான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி" என்று காமராஜர் அறிவித்தார்.

    ......

    1963-ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது.




























    Last edited by sivaa; 19th January 2018 at 07:48 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1777
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Palaniappan Subbu

    ரொம்ப பிடிச்சவங்க !...... இந்தத் தலைப்பில் நான் ரசிக்கும் பிரபலங்கள் பற்றி .......
    1. சிவாஜி கணேசன்.
    எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என எல்லோருக்குமே இவரைப் பிடிக்கும். அதனால் எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது. அப்புறம் விடவே இல்லை! அம்மாவுக்கு எம்.ஜி.ஆரையும் பிடிக்கும். அக்காவிற்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் இவரது நடிப்பு. அப்பாவிற்கு சிவாஜி படங்கள் பிடிக்குமாதலால் எங்களுக்கும் ரசிப்புத் தன்மை வந்தது. ஒரு அண்ணன் மட்டும் ரஜினி ரசிகன். இன்றளவும் எங்கள் சொந்தபந்தங்கள் அனைவருக்குமே நான் சிவாஜி ரசிகன் என நன்றாகத் தெரியும் வகையில் எனது ஈர்ப்பு சிவாஜி பால் இருக்கிறது.

    1965ல் பிறந்த எனக்கு எனது பள்ளி இறுதிக்காலங்கள் மற்றும் கல்லூரிக் காலங்களில்...... (அதாவது 1980-85 காலங்கள்).... கமல், ரஜினி ரசிகர்களாக நண்பர்கள் இருந்தார்கள். சிவாஜியின் விஸ்வரூபம், அமரகாவியம், கல்தூண், மாடி வீட்டு ஏழை, கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, கருடா சௌக்கியமா, சங்கிலி, தீர்ப்பு, பரீட்சைக்கு நேரமாச்சு போன்ற படங்கள் வந்து கொண்டிருந்தன. அனைவற்றிலுமே வயதான அல்லது நடுத்தர வயதுடைய நாயகன் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயம். , ஆயினும் அவரது படங்கள் காந்தமாய் இழுத்தது. முதல் நாள் படம் பார்க்கும் அனுபவமே தனி. சிவாஜி படங்கள் பெரும்பாலும் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் அவரது மன்றங்களுக்கே போய்விடும். இவனை அவனைப் பிடித்து ஒரு டிக்கெட் வாங்குவதே பெரிய கஷ்டம், ஆனால் வாங்கி விடுவேன். எனக்கு எப்போதுமே சீட்டி அடிக்க வராது. கரவொலி தான் கைவந்த கலை. மாடி வீட்டு ஏழை ரிலீசின் போதெல்லாம் ஒரே தள்ளுமுள்ளு தான். எனது ஆஸ்தான தியேட்டர் புரசைவாக்கம் புவனேஸ்வரி தான். ஒவ்வொரு சிவாஜி படத்திற்கும் ரிலீஸ் நாளில் எத்தனை ஸ்டார் கட்டி இருக்கிறார்கள், தோரணம், பந்தல் அலங்காரங்கள் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பேன்.
    என்னை விட மூத்தவர்கள் அடங்கிய குழாம் ஒன்று எப்போதும் படரிலீஸ் முதல் சில நாட்கள் தொடர்ந்து மாலை நேரங்களில் புவனேஸ்வரி வாசலில் கூடுவோம்.அவர்கள் பேசப்பேச கேட்டுக் கொண்டே இருப்பேன். திலகத்தின் 225வது படமான தீர்ப்பு படத்திற்கு மிக நீளமான க்யூ பார்த்து பூரித்துப் போனோம். ரோட்டு மேலேயே தியேட்டர் இருந்ததால், டிக்கெட்டுகள் தீர்ந்த அடுத்த நொடியே ஹவுஸ்ஃபுல் போர்டை மாட்டி அழகு பார்ப்போம். ஒரு நாள் தியேட்டருக்கு காசெட் ப்ளேயர் (3 பெரிய பேட்டரிகள் போட்டு) கொண்டு போய் முதல் வரிசையில் அமர்ந்து முழு படத்தையும் ரிக்கார்ட் செய்தது தனி அனுபவம். சுவாரஸ்யமான காலங்களாக இருந்தது.
    சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1ல் மற்ற நண்பர்கள் எல்லாம் தவறாமல் அவர் வீட்டுக்குச் செல்வார்கள். ஒரு வருடம் நானும் போனேன். அனுமார் வால் போல நீண்ட வரிசையில் பொறுமையாகச் சென்றோம். கிட்டத்தில் சிவாஜியைப் பார்த்தேன்! டயர்டாக அமர்ந்திருந்தார். ஒரு பக்கம் வி.ஐ.பிக்கள் வரும் வரிசை, மறுபக்கம் நாங்கள். அவர் கட்சி ஆரம்பிக்கும் போதும் அங்கே சென்றேன், டி.நகர் கொள்ளாத கூட்டம். கொடியேற்றினார். ஒளிமயமான எதிர்காலம் பாடல் ஒலிபரப்பப்பட்டது. எல்லோரும் கோஷம் எழுப்பினார்கள். சௌகார், மேஜர், வி.கே.ஆர் என சிலரும் அவர் கட்சியில் பின்னர் சேர்ந்தார்கள். பின்னர் மறுமுறை அங்கு சென்றது தான் பெரிய சோகம். அவரது மறைவிற்குச் சென்றேன். கூட்டம்னா கூட்டம் அவ்வளவு கூட்டம். ஒரு சகாப்தம் துயில்கிறது என்றே தோன்றியது. உடன் வந்தவர் அழுதார். மாபெரும் நடிகர். அவரை ரசிக்கத் தெரிந்தவர்கள் எல்லாருமே பாக்கியசாலிகள் தான்.. ... நான் உட்பட.







    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1778
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிங்கம் சிங்கந்தான்"
    ................
    நல்ல நல்ல படங்கள் நடிகர்திலகத்தின் படங்கள்
    இன்றைக்கு புதுமையாக சொல்ல வேண்டிய கருத்துக்கள் அத்தனையும் அவரின் படங்கள் சொல்லிவிட்டன.
    .
    *இப்படித்தான் நடக்கவேண்டுமென கருத்துக்கள் கொண்ட படங்கள்.
    *இப்படி நடக்கக்கூடாதென
    சொன்ன படங்கள்.
    .
    நேர்மறை பாத்திரங்களை மட்டுமே நடிக்கும் அறிமுக வில்லன் நடிகர்கள் இன்றுமிருக்க...
    "அந்தநாள்" அவர் நடித்ததை கொஞ்சம் "திரும்பிப்பார்"க்க வேண்டிய காலம் இருக்கத்தான் செய்கிறது.
    .
    தங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ள நெஞ்சுரமிக்க இன்றைக்குள்ள கதாநாயகர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே! என்பதைவிட, அப்படி ஒருவரும் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல...
    .
    நடிப்பென்று வந்துவிட்டால் கௌரவ வேடம் ஏற்கவும் தயங்காதவர். விந்தனையான நடிகர் நம் அய்யன் மட்டுந்தானென உறுதியிட்டு சொல்லலாம்.
    .
    வில்லனாக நடித்த நடிகர் ஒருவரை விரும்பி மக்கள் ஏற்றார்கள் என்றால், அது நம்மவர் மட்டுந்தான்.
    .
    அவர் பரிசோதனை செய்து பார்க்கவேண்டி நடிக்கவில்லை. அசட்டு தைரியமும் இல்லை. அவர் நடிப்பின் மேலுள்ள அவ்வளவு மரியாதை.
    வில்லன் நடிகன் பாத்திரம் ஏற்ற பிறகு அதேபோன்ற வேடங்கள் ஏற்கச்சொல்லி தனக்கு வில்லன் முத்திரை குத்தி விடுவார்களோ என்ற துளியளவும் இல்லாமல்தான் "துளிவிஷம்" என்ற படத்தில் நடித்தார். அவர் அழகு திருமுகத்தை கதாநாயகனாக பார்த்தவர்கள்
    அவ்வளவு சீக்கிரம் வில்லனாக ஆக்கிவிடுவார்களா?
    .
    நடிகர்திலகம் படத்தில் மட்டும் நல்லவன் போல் நடிக்கும் கதாநாயகன் அல்ல, நடைமுறையிலும் அப்படித்தான். ஒரே வித்தியாசம் அவருக்கு நடிப்புலகில் மட்டுந்தான் நடிக்க தெரியும்.
    .
    நடைமுறை வாழ்க்கையில் நடிக்க தெரிந்திருந்தால் நாடாண்டிருப்பார். நாடார் பின் போயிருக்க மாட்டார்.
    .
    "பொன்னையும் நாடார்
    பொருளையும் நாடார்
    தன்னையும் நாடார்
    தன் வீடும் நாடார்
    அறுபது கோடி மாந்தரை நாடி
    அவர்களின் வாழ்வில் அமைதியை தேடி
    அல்லும் பகலும் சிந்தனை செய்தான்
    அவனம்மா...
    அவன் ஆக்கிய வழியில் ஆக்கிய தலைவன்
    எவனம்மா?"
    என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதுவதற்கு முன்பாகவே காமராஜரை நாடி, தேடி போனவர்தான் நடிகர்திலகம்.
    .
    நடிகர்திலகமாவது நடிப்புலகத்தில் நடித்தார்.
    காமராஜர் அவர்களுக்கு இயல்புலகம் மட்டுந்தான். அவருக்கு நடிப்பென்றால் என்னவென்று தெரியாது. நடிகர்திலகம் படங்களை பார்த்து பின்புதான் நடிப்பென்றால்
    இதுதான் போலிருக்கிறதென தெரிந்துக்கொண்டார். ஆனால் நடிகர்திலகத்தின் பழக்கத்தில் போலி இல்லையென்று தெரிந்துக்கொண்ட பிறகே, அவரை தன் தொண்டனாக ஏற்றுக்கொண்டார்.
    .
    ஒரு தலைவனுக்கு உதாரணம் காமராஜர்.
    ஒரு தொண்டனுக்கு உதாரணம் நடிகர்திலகம்.
    .
    அப்படியாபட்ட நடிகர்திலகம் நடிப்புலகில்
    நடிப்பை எவ்வாறாக நோக்கினார்...?
    .
    நடிப்பென்று ஒன்று வந்தால் நவரசமும் தெரிந்தவன் ஓர் நல்ல சிறந்த நடிகனாக போற்றப்படுவான் என்பதை ஆழ்மனதில் எந்த ஒரு தயக்கமும் இன்றி உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் உலகமெங்கிலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சிறந்த நடிகனாக புகழ் பெற்றார்.
    .
    ஹாலிவுட் படங்களில் நடிக்காமலே ஹாலிவுட் நடிகர்களுக்கு பரீட்சயமானார். ஆசிய-ஆப்ரிக்காவின் சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    .
    இவரை பெற்ற தாய் பெருமைகொண்டது முக்கியமல்ல. நாம் பெருமைகொள்வதுதான் முக்கியம். நாம் ஒரு தமிழென பெருமை கொள்கிறோம். ஆனால் உலகம் ஒரு பெரும் நடிகனாகவும், பாரதம் நம் நாட்டில் பிறந்த பாரத பெரும் நடிகராகவும் பார்க்கிறது. நாம் எப்படி பார்க்கின்றோம்...?
    .
    நம் தமிழ்நாடு எப்படி பார்க்கிறது? என்பது முக்கியமில்லையா? வேதனைதான் அவர் சிலையை எடுத்தது...
    .
    என்றுமே மானமுள்ள தமிழனனால் மறக்கமுடியாதது. தமிழை ஒவ்வொரு பெரியோர்களும் ஒவ்வொரு விதத்தில் வளர்த்திருக்கலாம். ஆனால் ஒன்றுமே தெரியாத ஒரு பாமர தமிழனையும் நற்றமிழ் பேசவைத்த பேராசிரியன் அய்யன் சிவாஜி!
    .
    சிவாஜியை உயிராய் மதிக்கக்கூடிய ஒவ்வொரு பக்தருக்கும், 'மணிமண்டபம்' ஆலயமே ஆனாலும் அவரை அங்கு கொண்டுபோய் வைத்தது, சிறையில் அடைத்ததற்கு சமம்தான். சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்... அது 'சிங்கம் சிங்கந்தான்.
    .
    "அவனோ நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லைக்கு இலக்கணத்திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம்மோடு ஒவ்வாதவன். அவன் கத்தி பார்த்தேனும் கலங்காதே, ஆனால் அவன் பேச்சு கேட்டு மட்டும் வாழாதே. நான் கூறுவது உனக்கு மட்டுமல்ல, எங்களோடு சிங்கங்களாய் பிறந்து, இங்கு குரங்குகளாய் கூணி நிற்கும் இதோ அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். சீ, கூறுவதென்ன? தூ... காறி உமிழ்கிறேன்."
    அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பேசியது வெள்ளையர்களை பார்த்து மட்டுமல்ல, இந்த கொள்ளையர்களையும் பார்த்துந்தான்.
    .
    "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா"
    .
    "நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா.."
    .
    நடிகர்திலகத்தை நாமிருக்கும் வரை...
    "எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்"

    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:








    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1779
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    28 வது வெற்றிச்சித்திரம்

    நானே ராஜா வெளியான நாள் இன்று

    நானே ராஜா 25 ஜனவரி 1956

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1780
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •