Page 161 of 400 FirstFirst ... 61111151159160161162163171211261 ... LastLast
Results 1,601 to 1,610 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1601
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    courtesy .nadigarthjlagam fans
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1602
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Murali Srinivas



    ஊட்டி வரை உறவு பொன்விழா


    1967ம் ஆண்டு நவம்பர் 1ந் தேதி. தமிழ் சினிமா சரித்திரத்திலேயே முதன் முறையாக ஒரே நாளில் வெளியான ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை நிகழ்த்திய படங்கள் வெளியான நாள். அந்த இரண்டு படங்களும் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா கொண்டாடும் இந்த வேளையில் இவ்விரண்டு படங்களின் பொன்விழா கொண்டாட்டம் நமது NT Fans அமைப்பின் சார்பாக கொண்டாடப்பட்டது. சென்ற அக்டோபர் மாதம் 22ந் தேதி இரு மலர்கள் படத்தின் பொன்விழா நடைபெற்றது. ஊட்டி வரை உறவு படத்தின் பொன்விழா நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 26 அன்று ரஷியன் கலாச்சார மையத்தில் நடத்தினோம்.
    இது வரை நாம் திரையிட்ட பெரும்பாலான படங்களை விட ஊட்டி வரை உறவு படத்தில் பணியாற்றியவர்கள் பங்கு பெற்றவர்கள் அதிகமாக நம்மிடையே இருப்பது ஒரு சந்தோசம் என்றே சொல்ல வேண்டும். இந்த விழாவின் ஆரம்ப வித்தே இந்த வருடம் ஜனவரி மாதமே விழுந்து விட்டது. 2017 ஜனவரியில் நமது டார்லிங் இயக்குனர் திரு சிவிஆர் அவர்களுக்கு அவரின் 50 ஆண்டு கலைத்துறை சேவையை பாராட்டி ஒரு விழா எடுத்தோம். அதில் மனம் நெகிழ்ந்த சிவிஆர் நான் இந்த அமைப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று கேட்க நாம் இந்த ஊட்டி வரை உறவு படத்தின் பொன்விழா வருகிறது. அதை நாம் கொண்டாட நீங்கள் உறுதுணையாக இருங்கள் என கேட்டுக் கொண்டோம். அந்த படத்தில் அஸோஸியேட் டைரக்டர் சிவிஆர்தான். ஆக அப்போதே இதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. நாம் முதலில் தொடர்பு கொண்டது சச்சு அவர்களைத்தான். அவர் உடனே ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் அவரே போன் செய்து சொல்லிவிட்டார். அதிலும் குறிப்பாக சென்னையில் வசிக்கும் திருமதி எல்.விஜயலட்சுமியின் சகோதரர் தொலைபேசி எண்ணை நமக்கு கொடுத்தார். அவர்களை தொடர்பு கொண்டு எல்.விஜயலட்சுமியின் அமெரிக்கா தொடர்பு எண் வாங்கி அவர்களிடம் தொடர்பு கொண்டோம். இதற்கு அமெரிக்காவில் வசிக்கும் நமது நண்பர் ராஜேஷ் உதவி செய்தார். எல்விஜி அவர்கள் தான் அக்டோபர் மாதமே இந்தியா வருவதாக நம்மிடம் தகவல் சொன்னார். அவரது கணவரின் குடும்பத்தினர் கல்கத்தாவில் வசிப்பதாகவும் அங்கே ஒரு மாதம் தங்க போவதாகவும் சொன்னவர் நிகழ்ச்சிக்கு வருவதாக முயற்சி செய்வதாக சொன்னார். அதன் பிறகு நவம்பர் 25,26 தேதிகளில் கல்கத்தாவில் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் அவரால் வர இயலாத சூழலை வருத்தத்துடன் தெரிவித்த அவர் சென்னை வரும்போது நிச்சயம் சந்திப்பதாக சொன்னார்.
    புன்னகை அரசி இந்த மாதம் முழுக்க திருவனந்தபுரத்தில் மலையாள சீரியல் படப்பிடிப்பில் இருப்பதாகவும் 24-ந் தேதி சென்னை வந்துவிடுவதாகவும் சொன்னார். அது போல் சுசீலாம்மாவும் வருவதாக சொன்னார். கோபு அவர்கள் மிகுந்த மகிழ்வோடு வருவதாக ஒப்புக் கொண்டார். திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர்களையும் திரு ஸ்ரீதர் அவர்களின் மகன் திரு சஞ்சய் ஸ்ரீதர் அவர்களையும் அவரது வீட்டில் சென்று சந்தித்து அழைத்தோம். திரு ஜூனியர் பாலையா, திரு ஆனந்த் பாபு அவர்களை தொடர்பு கொள்ள சச்சு அவர்கள் பெரிய அளவில் உதவி செய்தார்கள். திருமதி சுந்தரிபாயின் மகன் திரு முரளிகிருஷ்ணன் அவர்களை அழைக்க நமது உறுப்பினரும் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வியாருமான திருமதி லலிதா சபாபதி உதவி செய்தார். திரு எம்எஸ்வி கோபி அவர்களையும், திரு டிஎம்எஸ் பால்ராஜ் அவர்களையும், திரு பிபிஎஸ் Phannindar அவர்களையும் அழைத்தோம். திரு கார்த்திக் அவர்களையும் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னோம். இதை தவிர ஸ்டில்ஸ் திருச்சி ஆனாரூனா அவர்களின் குமாரர் திரு ரமேஷ்குமார் அவர்களையும் அழைத்திருந்தோம். படத்தின் தயாரிப்பாளர் திரு கோவை செழியன் அவர்களின் இளைய மகன் திரு கபிலன் செழியன் அவர்களையும் நேரில் சென்று அழைத்தோம்.
    விழாவிற்கு முந்தைய ஒரு வாரம் வரை ஏன் முதல் தினம் வரை வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. விழாவன்று அதிகாலை முதல் மழை. விழாவைப் பற்றிய சிறு குறிப்பு தினசரி பத்திரிக்கைகளில் வந்தால் விழாவைப் பற்றிய செய்தி பரவலாக மக்களை சென்றடைய உதவியாக இருக்கும் என்பதனால் நமக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக Hindu, Times of India, Indian Express மற்றும் DT Next ஆகிய இதழ்களில் செய்தி போடுவதற்கு சொல்லியிருந்தோம். ஆனால் நம்முடைய துரதிர்ஷ்டம், ஞாயிறு பதிப்புகளில் இடமில்லாத காரணத்தினால் எந்த பத்திரிக்கையிலும் செய்தி வரவில்லை. வரும் என்று நினைத்திருந்தோமே வரவில்லையே என்ற வருத்தமும் மழை ஏற்படுத்திய கவலையும் மனதில் சற்றே கேள்விக்குறிகளை விதைக்க, ஆங்கிலத்தில் keeping the fingers crossed என்பார்களே அது போல் மாலை நிகழ்வு பற்றிய எதிர்பார்ப்புகளோடு காத்திருக்க ------
    (தொடரும்)
    அன்புடன்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1603
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1604
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1605
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir hussain‎

    காமராஜர் மீது சிவாஜி அவர்கள் அளவுகடந்த மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார். அதற்கு உதாரணமாக ஒரு சிறிய சம்பவம்..இருவருக்கும் அப்பா மகன் உறவு போல அப்படி ஒரு பிணைப்பு. எப்போதெல்லாம் ஒய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காமராஜரைத் தேடி சிவாஜி சென்று நலம் விசாரிப்பார்.
    நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு முறை சிவாஜி, “நான் நடித்த படங்களைக் கூட காண வருவதில்லையே? என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா?.என்று ஆதங்கத்துடன் கேட்டாராம்.
    ... அதற்கு சிரித்தபடியே காமராஜர் சொன்னாராம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் கணேசா.. ஏனென்றால் உனக்கு வெளியில் நடிக்கத் தெரியாது ஆனால் பெரும்பாலும் நடிகர்கள் சினிமாவுலேயும் நடிக்கிறார்கள் வெளியிலேயும் நடிக்கிறார்கள் யாரை நம்புவது என்று தெரியவில்லை. "கதை எழுதுகிறவங்களும் நடிக் கிறாங்க..”
    “சினிமா கொட்டகைக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு.. ஹரிச்சந்திரா நாடகம் பார்த்ததோட சரி..! கொட்டகைல உட்கார்ந்து சினிமா பார்க்கிற நேரத்துல நாலு பைல் பார்த்தால் மக்களுக்கு பிரயோஜனப்படும். நீ நடிகனாக இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும் கவலைப்படாதே போ.. என்று கூறி வழியனுப்பி வைத்தாராம். தான் ஏற்றுக் கொண்ட தலைவர் தன்னை எந்த அளவுக்கு மனதில் வைத்திருக்கிறார் என்கிற ஆதங்கம் நம்மவர் மனதில் இருந்து இருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருப்பார்... நாடே போற்றும் நெ1. திரைப்பட நடிகர் என்கிற எண்ணம் துளியும் இன்றி கோவிலில் உள்ள தெய்வத்திடம் சாதாரண மனிதன் ஒருவன் வேண்டுகோள் வைப்பதைப் போல் அல்லவா இருந்தது... பெருந்தலைவருக்கும் அவர்தம் பெருந் தொண்டருக்கும் இடையில் உள்ள உறவு நெகிழ்ச்சியான உறவு அல்லவா? இது...








  7. #1606
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  8. #1607
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  9. #1608
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  10. #1609
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அற்புத நடிகரின்டிசம்பர் மாதவெளியீடுகள்

    1) மனிதனும் மிருகமும் 4 டிசம்பர் 1953

    2) பாட்டும் பரதமும் 6 டிசம்பர் 1975

    3) நீதி 7 டிசம்பர் 1972

    4) மனிதரில் மாணிக்கம் 7 டிசம்பர் 1973

    5) வெற்றிக்கு ஒருவன் 8 டிசம்பர் 1979

    6) எதிர்பாராதது 9 டிசம்பர் 1954


    7) நீலவானம் 10 டிசம்பர் 1965

    8) நெஞ்சங்கள் 10 டிசம்பர் 1979

    9) மண்ணுக்குள் வைரம் 12 டிசம்பர் 1986

    10) புதியவானம் 12 டிசம்பர் 1988

    11) ஜஸ்டிஸ் கோபிநாத் 16 டிசம்பர் 1978

    12) ராஜபார்ட் ரங்கதுரை 22 டிசம்பர் 1973

    13) ரோஜாவின் ராஜா 25 டிசம்பர் 1976

    14) பணம் 27 டிசம்பர் 1952

    15) பாக்கியவதி 27 டிசம்பர் 1957

    ) 16) விடிவெள்ளி 31 டிசம்பர் 1960
    Last edited by sivaa; 5th December 2017 at 10:01 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1610
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Murali Srinivas

    ஊட்டி வரை உறவு பொன்விழா - Part II


    விழாவன்று காலையில் பெய்த மழை பத்து மணிக்கு மேல் ஓய, வானம் மேகமூட்டமாக இருந்தபோதிலும் விழா ஆரம்பித்து இரண்டு மணி நேரம் வரைக்கும் மழை பெய்யாமல் இருந்தது ஒரு மிக பெரிய சந்தோஷமாக இருந்தது. எப்படி ஊட்டி வரை உறவு படப்பிடிப்பிற்கு வருண பகவான் பல முறை தடங்கலாக இருந்து பின் உதவி செய்தாரோ அதே போல் அந்த படத்தின் பொன்விழா கொண்டாட்டத்திற்கும் உதவி செய்தார் என்றே எடுத்துக் கொண்டோம்.


    விழாவிற்கு முதலில் வந்தவர் திரு கோபு அவர்கள். தன் மகன் ஸ்ரீராமோடு (சித்ராலயா ஸ்ரீராம் என்ற பெயரில் நாடகங்கள் எழுதுபவர்) வந்தார். தொடர்ந்து சிவிஆர் வந்தார். அவர் பின்னாலேயே திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர் மகன் சஞ்சய் ஆகியோர் வந்தனர். பிறகு திரு ஆனந்த்பாபு, ஜூனியர் பாலையா, குமாரி சச்சு ஆகியோர் வருகை புரிய இதற்கிடையே நமது உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர். நாம் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருந்த திரு ரமேஷ்கண்ணா, திரு சித்ரா லட்சுமணன் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். திருமதி கே.ஆர்.விஜயா அவர்கள் வந்து கொண்டேயிருப்பதாக அலைபேசியில் தகவல் சொன்னார். அப்போது சுசீலாம்மா வீட்டில் இருந்து அழைப்பு. விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா சென்றிருந்த சுசீலாம்மா அங்கே கலந்து கொண்ட ஒரு விழாவில் கால் சற்றே பிசகியதால் வலியால் அவதிப்படுவதாகவும் தகவல் சொன்னார்கள்.

    சற்றே ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் அவர் உடல் நலம் பெற வாழ்த்தினோம். (அவரது தோழியார் மறுநாள் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்) இதற்கிடையே திருமதி சுந்தரிபாயின் புதல்வர் திரு முரளிகிருஷ்ணனும் வந்து விட்டார். விழா ஆரம்பிக்கும் நேரம் விஜயாவும் வந்து விட்டார். நமது விழாக்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் திருமதி AL S ஜெயந்தி கண்ணப்பன் அவர்களும் வந்தார். அவருடன் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் திரு விக்ரமன் அவர்களின் மனைவியார் திருமதி ஜெயப்ரியாவும் கலந்து கொண்டார். நாம் விருந்தினர்களை வரவேற்க வாசலில் காத்து நின்றபோது நம்முடைய அமைப்பின் துணைத்தலைவர்கள் திரு மோகன்ராம் அவர்களும் திரு ஆடிட்டர் ஸ்ரீதர் அவர்களும் விழா அரங்கில் வந்திருந்த விருந்தினர்களுடன் அளவளாவி அவர்களை comfortable ஆக இருக்க வைத்தனர்.

    முதலில் வரவேற்புரையை நான் துவக்கினேன்.
    இந்த விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினேன்.
    பல கலைஞர்கள் வந்ததால் மட்டும் இந்த விழா சிறப்பு பெறவில்லை. இந்த திரைப்படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஒரு சாதனை புரிந்த படம் என்பதை குறிப்பிட்டேன்.

    ஒரே நாளில் ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாவது எனபதை நடிகர் திலகம் மட்டுமே செய்திருக்கிறார். 1954 ஏப்ரல் 13 அன்று வெளியான அந்த நாள் மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி முதல் 1987 ஆகஸ்ட் 28 அன்று வெளியான ஜல்லிக்கட்டு மற்றும் கிருஷ்ணன் வந்தான் வரை 34 வருடங்களில் 17 முறை இது நடைபெற்றிருக்கிறது. 34 படங்களில் 15 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன. அவற்றுக்கு சிகரம் வைத்தாற் போல் 1967 நவம்பர் 1 தீபாவளியன்று வெளியான இரு மலர்களும் ஊட்டி வரை உறவும் 100 நாட்கள் ஓடி தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஒரு முதன் முதல் சாதனை படைத்தது என்பதை அவையோருக்கு சொன்ன நான், கேஸீ பிலிம்ஸ் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவை செழியன் முதன் முதலாக தயாரித்த படம் எனபதையும் முதலில் வயது 18 ஜாக்கிரதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின் காலமெல்லாம் காத்திருப்பேன் என்று பெயர் மாறியதையும் அதன் பின் ஊட்டி வரை உறவு ஆன கதையையும் சுருக்கமாக கூறினேன். படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னர் அவர்களின் இசையும், டிஎம்எஸ், சுசீலா, பிபிஎஸ் மற்றும் ஈஸ்வரி அவர்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டேன்.


    பின் விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடையேறினர்.

    முதலில் சச்சு அவர்கள் பேச வந்தார். இந்த விழாவிற்கு வந்ததில் மிகுந்த சந்தோசம் என்று குறிப்பிட்ட அவர் ஒரு பழைய படத்தின் விழாவிற்கு அரங்கு நிறைந்திருப்பதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்றார்.


    படத்தில் நடித்தது ஒரு குடும்பமாக பழகியது போல என்றும் நகைச்சுவை காட்சிகள் இரண்டு மூன்று டேக் வாங்கியது என்றும் அதற்கு காரணம் ஸ்ரீதர் அவர்களே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விடுவார் என்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு மற்றும் சிவந்த மண் போன்ற ஸ்ரீதர் படங்களில் தான் பங்கு பெற்றது மறக்க முடியாது என்றார். நடிகர் திலகம்,பாலையா நாகேஷ் மற்றும் விஜயா அவர்களுடன் நடித்ததை மறக்கவே முடியாது என்றார். இறுதியாக இந்த விழாவை பார்க்கும்போது இது படம் வெளியாகி 50 வருடம் ஆன விழா போல் தெரியவில்லை என்றும் ஏதோ படத்தின் 100வது நாள் விழா போல் இருக்கிறது என்றும் கூறி விடை பெற்றார்.


    ஜூனியர் பாலையா பேச வந்தார். சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். மாபெரும் கலைஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய ஒரு மாபெரும் திரைப்படத்தை அது பொன்விழா கொண்டாடும் நேரத்தில் அதில் கலந்து கொள்ளும் பாக்கியம் தனக்கு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்றார். அன்றைய படங்கள்தான் படங்கள் என்பதை குறிப்பிட்ட அவர் இப்போதும் தன் தந்தை மற்றும் நடிகர் திலகம் போன்ற நடிகர்கள் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டார். காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் ஸ்ரீதர் புகழை என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்றார். தன்னை அழைத்ததற்கு நன்றி கூறி விடை பெற்றார்.


    அடுத்து ஆனந்த்பாபு. மிக தெளிவாக பேசினார். நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் தன் தந்தை நாகேஷ் என்றும் அந்த பெருமையை தனக்கு வாங்கி தந்த அவரை வணங்குகிறேன் என்றார். இந்த படத்தின் பாடல்களை மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டவர் பூமாலையில் ஓர் மல்லிகை பாடலின் ஆரம்ப ஹம்மிங்கை அசத்தலாக பாடினார். சிவாஜி சார் ஸ்டைல், அவர் நடிப்பு எல்லாம் பிரமாதமாக இருக்கும் என்றார். ஸ்ரீதர் போன்ற ஒரு டைரக்டரை மறக்கவே முடியாது என்றும் சொன்னார். தன்னை அழைத்ததற்கு நன்றி கூறி விடை பெற்றார்.


    திருமதி சுந்தரிபாயின் புதல்வர் திரு முரளிகிருஷ்ணன் பேச வந்தார். இந்த படத்தை பற்றி தன் தாயார் தன்னிடம் நிறைய சொல்லியிருப்பதாக சொன்னவர் இந்த படத்தை 18 முறை பார்த்திருப்பதாகவும் பெரும்பாலான வசனங்கள் மனப்பாடமாக தெரியும் என்றார். இந்த படமும் அந்த வசனங்களும் என்றும் சலிப்பதில்லை என்று சொன்னவர் இது போன்ற விழாவில் தன்னை அழைத்து மரியாதை செலுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு விடை பெற்றார்.


    பின் வந்தார் சித்ரா லட்சுமணன். ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தார். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதையோ ஒன்றை எதிர்பார்த்துதான் அவன் ரசிகனாக இருக்கின்றான். ஆனால் எந்த வித எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் அன்று முதல் இன்று வரை இருக்கிறார்கள் என்று சொன்னால் அது சிவாஜிக்கு மட்டும்தான் என்றபோது அரங்கமே ஆர்ப்பரித்தது. திரு முரளிகிருஷ்ணன் சொன்ன 18 முறை பார்த்தேன் என்ற விஷயத்தை குறிப்பிட்டு அதெல்லாம் ஒண்ணுமேயில்லை. 100, 150 முறை சர்வ சாதாரணமாக பார்த்தவனெல்லாம் இருக்கான். ஒரு சிலர் எல்லாம் எத்தனை முறை பார்த்தங்கற கணக்கே வச்சுக்கறேதேயில்லை என்றார். அன்றைய ஆர்ட்டிஸ்ட் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் போன்று இன்று யாருமில்லை என்றும் இன்றைய சினிமாவின் நிலைமை சரியில்லை என்றும் சொன்னார். இது போன்ற விழாக்கள் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தான் கலந்து கொண்டதில் மிகுந்த சந்தோசம் அடைவதாகவும் சொல்லி நிறைவு செய்தார்.


    அடுத்து ரமேஷ்கண்ணா. இந்த விழாவில் தன்னை பார்ப்பவர்களுக்கு இவர் எதற்கு வந்தார் என்று தோன்றும் என்றும் நம்மையெல்லாம் இணைத்தது நடிகர் திலகம்தான் என்றும் ஒரு ரசிகனாக கலந்து கொள்வதில் பெருமைபடுகிறேன் என்றார். நான் அவரை ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாவிற்கு அழைப்பதையும் இந்த விழாவிற்குத்தான் வர முடிந்ததையும் சொல்லி அதற்கு நன்றி சொன்னார்.அவரும் திரு முரளி குறிப்பிட்ட 18 முறை பார்த்ததை சொல்லி தான் எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கே கிடையாது என்றும் நிச்சயமாக 100 தடவைக்கு மேல் இருக்கும் என்றவர் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அனைத்து வசனங்களும் மனப்பாடம் என்றார்.

    கோபு போன்ற ஒரு நகைச்சுவை எழுத்தாளரை தமிழ் சினிமா பார்த்ததில்லை என்றும் தான் உட்பட பலரும் கோபுவின் வசனங்களைத்தான் அப்படி இப்படி மாற்றி போட்டு கைதட்டல் வாங்குகிறோம் என்றார். உதாரணத்திற்கு ஊட்டி வரை உறவு படத்தில் செந்தாமரையை நாகேஷ் அவன் என்று சச்சுவிடம் சொல்லும் காட்சியை குறிப்பிட்டு செந்தாமரை முறைத்தவுடன் அவர் என்று மாற்றும் வசனத்தை குறிப்பிட்டு இப்போது தான் எழுதிக் கொண்டிருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் இதே டெக்னிகை தான் follow செய்திருப்பதாகவும் அதை சொல்வதில் தனக்கு வெட்கமில்லை என்றும் சொன்னார்.

    தனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் ஸ்ரீதர் என்ற ரமேஷ்கண்ணா தன் குருநாதர் இயக்குனர் விக்ரமன் அவர்களிடம் எப்போதும் ஸ்ரீதர் பற்றியும் அவரது படங்கள் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பேன் என்று குறிப்பிடவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி ஜெயப்ரியா விக்ரமன் அவர்களை பார்த்து அவருக்கே இது பற்றி நன்றாக தெரியும் என்று குறிப்பிட்டார். திரைப்படத்துறைக்கு வரும் முன் புன்னகை அரசி அவர்களை ஒரு முறையேனும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய காலம் இருந்தது. இன்று மேடையில் அவர் அருகிலே அமரும் பாக்கியம் கிடைத்தது என்றும் நெகிழ்ந்தார். படம் பார்க்க மற்றவர்களை போலவே ஆவலாக இருப்பதாகவும் ஆகவே பேச்சை இத்துடன் முடித்துக் கொள்வதாக சொல்லி விடை பெற்றார்.

    படத்தில் பங்கு பெற்றவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு படத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நினைவு பரிசு வழங்கப்பட்டது. சித்ரா லட்சுமணன் மற்றும் ரமேஷ்கண்ணா அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
    கேஆர் விஜயா, கோபு மற்றும் சிவிஆர் பேச்சு ---

    (தொடரும்)

    அன்புடன்





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •