Page 151 of 400 FirstFirst ... 51101141149150151152153161201251 ... LastLast
Results 1,501 to 1,510 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1501
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1502
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1503

  5. #1504

  6. #1505
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vaannila vijayakumaran

    மண்ணாண்ட மன்னவர் கோட்டையல்ல... நடிப்புலக மன்னர்மன்னனின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் முதல் வெளியீட்டில், சேலம் ஓரியண்டல் தியேட்டரின் அலங்கார முகப்பு....(1959)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1506
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1507
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas

    சிவந்த மண் - 09-11-1969

    இன்று சிவந்த மண் வெளியான நாள். படம் வெளியான 1969 நவம்பர் 9-ந் தேதி அன்று மதுரையில் என்னுடைய நேரிடையான அனுபவத்தை ஒரு சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். இந்த நாளின் நினைவிற்காக மீண்டும் அந்த பதிவு. இதில் படத்தைப் பற்றிய எந்த விமர்சனமும் இருக்காது. காரணம் நான் முதல் நாள் படம் பார்க்கவில்லை. ஒரு வாரம் கழித்துத்தான் பார்க்க முடிந்தது.
    ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில்
    மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போல்

    எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள். அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.
    நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். பொதுவாக சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம். 8-ம் நம்பரை சினிமாவில் ராசியில்லை என நினைப்பார்கள். கூடுமானவரை படத்தலைப்பில் கூட எழுத்துக்களின் கூட்டு தொகை எட்டு வராமல் இருக்க பெயரை முடிவு செய்யும்போதே கவனம் எடுத்துக் கொள்வார்கள்.. தீபாவளி 8ந் தேதி வந்ததால் ஒரு படம் ஒரு நாள் முன்னதாகவும் அடுத்த படம் ஒரு நாள் பின்னரும் வெளியிடப்பட்டது. பொதுவாக இன்று முதல் விளம்பரம் பார்த்திருப்போம். சிவந்த மண் விளம்பரம் மட்டுமே நாளை முதல் என்று கொடுக்கப்பட்டிருக்கும். காரணம் தீபாவளிக்கு பத்திரிக்கை அலுவலகம் விடுமுறை என்பதனால் அதன் காரணமாக படம் வெளியாகும் நவம்பர் 9ந் தேதி பத்திரிக்கைகள் வெளி வராது என்பதானாலும் முதல் நாள் அதாவது தீபாவளி நாளான நவம்பர் 8ந் தேதி தினசரிகளில் நாளை முதல் என்ற விளம்பரம் வெளியானது.
    அன்றைய நாட்களில் எங்களது வீடு நகருக்கு சற்றே ஒதுக்குப்புறமான ஆரப்பாளையம் பகுதியில் இருந்தது.. அங்கே தீபாவளியை கொண்டாடி விட்டு மாலை எனது தாத்தா வீட்டிற்கு (நகரத்தின் மையப் பகுதி) வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள்.
    மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம்.
    மாலை எங்களது வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மறுநாள் ஸ்கூல் போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்]. அது போன்ற ஒரு கூட்டத்தை நான் வேறு எந்தப் படத்திற்கும் பார்த்ததில்லை. இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது மட்டும் அப்போது தெரிந்து கொள்ள முடிந்தது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அதை தொடர்ந்து வந்த 6 நாட்களிலும் ஸ்கூல் இருந்ததால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது. அதுவும் சித்ராலயா ஆபிஸில் தெரிந்தவர் மூலமாக சொல்லி ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சிதான் கிடைத்தது.
    ஆயிரம் படம் வரலாம். பிரம்மாண்டமான கூட்டம் என சொல்லலாம். ஆனால் 1969 நவம்பர் 9ம் சரி சிவந்த மண்ணும் சரி பாரத் நடிகர் திலகமும் சரி சரித்திரத்தில் சாதனையாளராக என்றும் நிலைப்பார்கள். எதுவும் எவரும் நெருங்க முடியாத தூரத்தில்.
    படம் வெளியானபோது தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட ஒரிஜினல் போஸ்டர் உங்கள் பார்வைக்கு (நன்றி ராகவேந்தர் சார்). அத்துடன் நாளை முதல் விளம்பரமும் உங்கள் பார்வைக்கு.
    மீண்டும் அந்த இனிமையான நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த நவம்பர் 9-ற்கு நன்றி.
    அன்புடன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1508
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1509
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    191 வது வெற்றிச்சித்திரம்

    அண்ணன் ஒரு கோயில் வெளியான நாள் இன்று

    அண்ணன் ஒரு கோயில் 10 நவம்பர் 1977

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1510
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan

    ·

    1962-ல் சீனப் படையெடுப்பின் போது நடிகர்திலகம் ரூ.40,000/- நிதியளித்தார்.
    1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம் அளித்தது மட்டுமல்லாமல் ரூ 17 இலட்சம் வசூல் செய்து கொடுத்தார்.
    1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.
    1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.
    1965 நவம்பர் மாதம். சிவாஜி கணேசன் தலைமையில் தமிழக நட்சத்திரங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து. பாகிஸ்தான் போரில் எல்லையில் படுகாயமுற்ற ராணுவ வீரர்களின் மத்தியில் ஆறுதலாக ஆடிப்பாடி, உற்சாகப்படுத்திவிட்டு வந்தவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.
    'யாராவது ஏதாவது பாடுங்களேன்...’ என்றார் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். சிவாஜி, 'ஆர்மோனியம் இல்லாம முடியாதே...’ எனவும், ஜனாதிபதிக்குச் சுடச்சுட கோபம் வந்துவிட்டது.
    ‘பத்தாயிரம் பேருக்கு மேல் இங்கே வேலை செய்கிறீர்கள். ஒருவருக்குக்கூட சங்கீத ஞானமில்லையோ...’
    அறிவார்ந்த அரிமாவின் அதட்டலில் கலைஞர்கள் கலங்கினர். ஏ.எல்.ராகவன், 'ஆர்மோனியம் இல்லாமலே பாடறேன் சார்...' என்று சிந்து நதியின் இசை நிலவினிலே என முந்திக்கொண்டார். பி.சுசீலா, 'அத்தை மடி மெத்தையடி' பாட, கச்சேரி களை கட்டியது. 1965-ன் சிறந்த புதுமுகம் ஜெயலலிதா. ஜனாதிபதி முன்பாக ஆடினார். பி.எஸ்.வீரப்பா கணக்காக, மேதகு ஜனாதிபதி, கலைச் செல்விக்கு சபாஷ் போட்டார்.
    நடிகர் திலகம் - நடிகையர் திலகம் இருவரும் இணைந்து நவராத்திரியில் ஆடிய சத்யவான் - சாவித்ரி தெருக்கூத்தை அரங்கேற்றினர். ஜனாதிபதி தன்னுடைய ஸ்பெஷல் பாராட்டை சிவாஜிக்குத் தெரிவித்தார். சாவித்ரியிடம் திரும்பி, 'புதிதாகப் பிறந்த குழந்தை சவுக்கியமாக இருக்கிறதா... பார்த்தாயா உன் வளர்ச்சியை நான் எப்படி கவனித்துக்கொண்டு வருகிறேன்!’
    நடிகையர் திலகம் சாவித்ரி
    By நவீனன், August 10, 2016 in வண்ணத் திரை
    மற்றும் இணையத்தின் பதிவுகளின் தொகுப்பு.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •