Page 141 of 400 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1401
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan







    Sundar Rajan

    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
    பத்திரிக்கையாளர்களுக்கும், மீடியாக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு மாபெரும் குழப்பம்,
    சிவாஜி அவர்கள் இறந்து 16 வருடங்கள் ஆகிவி...ட்டது, ஆனால் அவர் மீது அன்பு வைத்திருந்த ரசிகர் கூட்டம் குறைந்தபாடில்லை. எந்தவித அரசு பதவிகளை வகித்தவரில்லை. பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க முடியாமல், பள்ளி மாணவர்களை வைத்தும் கூட்டம் சேர்க்க முடியவில்லை. ஆனால்
    சிவாஜி என்று சொன்னால் தானாக கூட்டம் வந்து விடுகிறது என்பது புதிராக இருக்கிறது.
    இதோ இந்த படத்தைப் பாருங்கள், இந்த போட்டோ கிட்டத்தட்ட 72ல் இருந்து 78க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது நமது மக்கள்தலைவர் அவர்கள் உச்சத்தில் இருந்த நேரம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் ரசிகர்களுக்கு மத்தியில் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள்.
    இப்போது சில நடிகர்களை பார்ப்பதே குதிரைக்
    கொம்பாக இருக்கிறது. பிறகு எப்படி போட்டோ எடுப்பது.
    உலகில் எந்த நடிகரும் இப்படி தன் ரசிகர்ளுடன் அளவளாவியது கிடையாது என உறுதியாக சொல்லலாம்.
    அது போல், அதிக ரசிகர்கள் திருமணத்திலும், அவர்களது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்.
    இது தான் இன்றும் சிவாஜி என்ற மந்திர வாா்த்தைக்கு மயங்கி கிடக்கிறோம்.
    என்றும் மயங்கிக் கிடப்போம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1402
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1403
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1404
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1405
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    நடிகர் திலகத்துடன்

    இடதுபக்கம் நிற்பவர் இலங்கை சிங்கள நடிகர் காமினி பொன்சேகா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1406
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Abdul Razack



    நீயா? நானா? நிறைவுபகுதி .,,,,,,,, இந்த சுற்றில் கேட்கபட்ட பாடல் மனதை நெருடும் தனி மனிதசோகபாடல் எதிர் அணியில் பாடிய சிலபாடல்கள் யார் மனதையும் கவரவில்லை நம் பக்கம் அடைமழைதான் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ,,,,,நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ,,,,,,ஆட்டுவித்தால் யாரொருவர் ...மனிதன் நினைப்பதுண்டு,...அம்மம்மா தம்பி என்று நம்பி ,,,,அண்ணன் என்னடா தம்பி என்னடா ,மலர்ந்தும் மலராத பாதி மலர் போல் ஒரு சகோதரி... கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு காப்பற்ற சிலபேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்கு தேவை சில சாட்சி குணத்திற்கு தேவை மனசாட்சி உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உணக்கு நீ தான் நீதிபதி ..என்ற பாடலைபாடி பயங்கரமான கைதட்டல் வாங்கினார் பாவம் கோபி என்ன படம் என்று நம்மீடம் கேட்டு கொண்டே இருந்தார் அது சமயம் நான் பாடிய பாடல் தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை ,,,பார் மகளே பார் ...அடுத்த சகோதரி ஒரு காலத்திலே என்னை கட்டி போட ஒரு ராஜ்யம் இருந்ததது என்று அமர்க்களபடுத்தி எதிர் அணியில் ஆளே இல்லாமல் அதிக கோல்கள் அடித்தோம் அவர்களுக்கு இந்த நேரத்தில்தான் கோபிநாத் மீது கோபம் வந்தது இந்த சுற்று மிக சிறப்பாக எங்களுக்கு அமைந்தது அடுத்த இறுதி சுற்று சிவாஜி பாடியபாடல்களில் இந்த பாட்டை எம்ஜிஆர் பாடி இருந்தால் நல்ல இருக்கும் என்று எந்த பாட்டை நினைக்கிறீர்கள் அதே போல் எம் ஜி ஆர் பாடலை சிவாஜிக்கு இருந்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கும் பாடல் காரணம் என்ன என்று கேட்டார் நம் பக்கம் நாஞ்சில் இன்பா பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடலை பாடி எல்லா திருமண வீடுகளிலும் இந்த பாடல் பாடுகிறது அது சிவாஜி பாடி இருக்கனும் என்று சொல்லி சிறப்பான பாராட்டை பெற்றார் எதிர் அணியில் ஒருவர் புதியபறவை எங்கே நிம்மதி,,பாடலை எம் ஜி ஆர் பாடி இருந்தால் சிவாஜியை விடசிறப்பாக நடித்து இருப்பார் என்று சொல்லவும் அனைவரும் சிரித்து விட்டோம் ஆதற்கு கோபிநாத் அந்த பாடல் இருந்தால் எம் ஜி ஆரே வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்று சொன்ன பிறகு மைக் என் கைக்கு வந்து என்அண்ணன் படத்தின் கடவுள் ஏன் கல்லானான் பாடல் என்றேன்காரணம் என்ன என்றார் நான் சொன்னேன் சிவாஜி படங்களில் கடவுளாகவும் நடித்து உள்ளார் அவரே கடவுளை திட்டியும் உள்ளார் அவர் அளவிற்கு யாரும் திட்டவில்லை என்றேன் அதற்கு கோபிநாத் என்ன கடவுளையே திட்டினாரா என்ன பாட்டு என்றார் அதற்கு நான் ,.,,கடவுள் என் வாழ்வில் கடன்காரன் கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும் ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் என்று பாடியதும் மிகவும் நல்ல பாடல் என்று சொல்லி மேலும் சில பாடல்களை இருதரப்பினரும் பாடிய பிறகு எதிர் அணியில் ஒரு பெரியவர் இருந்தார் நெற்றியில் நாமம் போட்டு அவரிடம் சிவாஜி பாட்டு பாடுங்கள் என்று கேட்டதற்கு சிறிது நேரம் யோசித்து நான் பாடமாட்டேன் எம் ஜி ஆர் பாட்டுதான் பாடுவேன் என்று அவர் பெருந்தன்மையை காட்டினார் இரு அணியினரும் நடிகர் பாடலை மாற்றி பாடுங்கள் என்று எங்கள் பக்கம் சொன்னார் அதுவரையிலும் குரல் நல்ல இருந்தாலும் சிவாஜி பாடல்களை வரியை மறந்தும் மாற்றியும் பாடி எங்களிடம் ஒரு பாசத்தை ஏற்படுத்திய நபர்தான் ஸ்லீப்பர் செல் என்பது எங்கள் அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது காரணம் எம் ஜிஆர் பாடலானா நீங்க நல்லா இருக்கனும் என்ற பாடலை முதல் அடியான தென்னகமாம் என்று தொடங்கி கடைசி வரி வரையும் சிறு பிழையும் இல்லாமல் பாடி எதிர் அணியினரிடம் பயங்கர கைதட்டல் வாங்கினார் எங்களுக்கு அதிர்ச்சி எனக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டு குழம்பிவிட்டேன் இந்த சமயத்தில் எதிர் அணியினர் சிவாஜி பாடல் ஒன்று பாடினார்கள் அது என்ன பாடல் என்று என் கவனத்தில் ஏறவில்லை,இதோடு இறுதி சுற்று முடிந்து முடிவு சொல்லும் நேரம் வந்தது இரண்டு பக்கமும் சிவாஜி பாடல்களா எம் ஜி ஆர் பாடல்களா என்பதையும் கடந்து இன்னும் எளிமையாக சொன்னால் நல்லா இருக்கும் என்று இரு பக்கமும் கேட்டார் அந்தபக்கம் சொன்னது யாரும் கண்டுக்கொள்ளவில்லை நம் பக்கம் நாஞ்சில் இன்பா அகம் புறம் என்ற வுடன் கோபிநாத்தே ஆச்சர்யாமாக இது அருமையான தலையங்கம் காரணம் சொல்லுங்கள் என்றார் அதற்கு இன்பா சிவாஜி பாடல்கள் அகம் நம் மனதில் ஆழத்தில் உட்காரும் எம்ஜி ஆர் பாடல்கள் புறம் வெளியில் கேட்க நல்ல இருக்கும் ஆழ் மனதில் அமராது என்று சொன்னார் அதன் பிறகு கோபிநாத் இரண்டு குரூப்பையும் பாராட்டி மிக அருமையாக நடந்து கொண்டீர்கள் முக்கியமாக நீங்கள் யாரும் மேடைபாடகர்கள் இல்லை இருந்தாலும் குறை இல்லாத அளவிற்கு செய்தீர்கள் இன்றைய புதிய பாடல்கள் கேட்பதற்கு ஒன்றும் புரியவில்லை சிவாஜியின் பாடல்கள் அகம் எம் ஜி ஆரின் பாடல்கள் புறம் இந்த அகம் புறம் ஆன இருவரது பாடல்களுமே சிறந்த பாடல்கள்தான் அவர்களின் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் சென்று அடையனும் அவர்களும் இந்த இருவரின் பாடல்களையும் கேட்க வேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன் என்று புறப்பட்டார் நாங்களும் அங்கு இருந்து நிறைவான மனதுடன் இந்த நிகழ்ச்சியை ஏறத்தாழ எட்டு மணி நேரம் நடத்தியதற்கு காரணமான திரு கோபிநாத் அங்கு பணியாற்றும் கேமராமேன்கள் லைட்பாய்கள் அரங்கவடிவமைப்பாளர்கள் டெக்னீசன்கள் இன்னும் நமக்கு தெரியாத தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் விஜய்TV நிறுவனத்திற்கும் நன்றி சொல்லி அரங்கை விட்டு வெளியே வந்தோம் அங்கு என்னையும் மற்றவர்களையும் காண்பதற்கு எனது மாமா திரு B,K, கல்யாண சுந்தரம் அவர்களும் நண்பர் திரு சையது அப்பாஸ் அவர்களும் காத்து இருந்தார்கள் அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு அருகில் இருந்த கடையில் டீ சூடாக சாப்பிட்டோம் பிறகு நண்பர்கள் சேகர் பரசுராம் சார் ராம்குமார் அவரின் இரு சகோதரிகள் அனைவரும் தி நகரில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் பாடல் நிகழ்ச்சி பின்னனி பாடகி L,R. ஈஸ்வரி அவர்கள் பாட நடந்து கொண்டு இருந்தது அதை சிறிது நேரம் பார்த்து விட்டு இரவு 10 மணி இரயிலுக்காக அங்கு இருந்து புறப்பட்டு எக்மோர் ஸ்டேசன் வந்து என் பெட்டியில் ஏறினேன் அப்போது பின் சீட்டில் இருந்து ஒருவரின் செல்போனில் சிவாஜி பாடல் பாடிகொண்டு இருந்தது என் இருக்கையை நான் சரி செய்து விட்டு அமர்ந்தேன் அடுத்த பாடல் எம் ஜி ஆர் பாடல் கேட்டது மீண்டும் சிவாஜி பாடல் சிறிது நேரத்தில் ஜெய்சங்கர் பாடல் அடுத்து அதே கண்கள் ரவிச்ந்திரன் பாடல் எனக்கு ஒரே ஆச்சரியம் மனிதர் எல்லா நடிகர் பாடலும் கேட்கிறாரே என்று சில நிமிடத்தில் ஜெமினி கணேசன் பாடல் இந்த சமயத்தில் இரயில் புறப்பட்பது நான் எனக்கு ஒதுக்கபட்ட பர்த்தில் வசதியாக படுத்துகொண்டே அந்த பாடல்களை கேட்டேன் என் எண்ணம் சிந்திக்க ஆரம்பித்தது பழைய நடிகர்கள் பாடல்கள் கேட்கிறோம் நடிகர்கள் சிவாஜி எம் ஜி ஆர் இருவரை தவிர மற்றவர்களை எல்லாம் சிறிது சிறிதாக மறந்து விட்டோம் மீதம் இருப்பது சிவாஜி எம்ஜிஆர் அதிலும் ஒருவர் சார்ந்து இருந்த கட்சிதான் தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது சேர்ந்து சில ஆண்டுகள் தனியாக சில ஆண்டுகள் இன்றும் அவரது கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது ஆட்சியினால் பலன் அடைந்த கட்சிக்காரர்கள் அவரை தூக்கி பிடிப்பதில் ஆச்சர்யம் இல்லை ஆனால் தன் திறமை ஒன்றை வைத்து கோடிகணக்கான தன் ரசிகர்ளுக்கு எந்த பிரதிபலனும் தராமல் மறைந்தாலும் இருக்கும் ஒவ்வொரு ரசிகனும் சிவாஜி சிவாஜி என்று தங்கள் மூச்சாக அவரை சுவாசிக்கிறான் எந்த விழா என்றாலும் தன் கைகாசை செலவழித்து இருக்கும் வேலைகளையும் சற்று ஒதுக்கிவைத்து சிவாஜி இன்றும் என்றும் கொண்டாடிகிறானே அவன் வைத்து இருப்பது தானே உண்மையான நேசம் பாசம் ஒரு வேலை எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க முடியாமல் போய் இருந்தால் மற்ற நடிகர்கள் போல் இவரையும் இன்றைய தலைமுறையினர் மறந்து இருப்பார்களோ? என்று யோசித்து கொண்டுஇருக்கும் போதே பின் இருக்கை செல்போனில் ஒருகோப்பையிலே என் குடியிருப்பு என்ற பாடலில் "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்ந நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று கண்ணதாசன் எழுதியதை TMS படித்தாலும் அந்த இரத்த திலகம் படத்தின் நாயகன் எங்கள் சிவாஜி கணேசன் தானே அவர்க்குதான் என்றும் அழிவும் இல்லை மரணமும் இல்லை என்று நினைத்தபடியே கண் உறங்கினேன் இரயிலும் தாம்பரத்தை கடந்து திருச்சியை நோக்கி தடக்,,...தடக்,,,என்று ஒடிக்கொண்டு இருந்தது அதேபோல்தான் என் இதயமும் சிவாஜி ..சிவாஜி....என்று ஓடிக்கொண்டே இருக்கும்....சுபம்......இதைபடித்து தங்கள் கருத்துக்களை சொன்ன அத்தனை நல் இதயங்களுக்கும் என் நன்றிகள் .





    Last edited by sivaa; 26th October 2017 at 09:57 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1407
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    218 வது வெற்றிச்சித்திரம்


    கீழ்வானம் சிவக்கும் வெளியான நாள் இன்று


    கீழ்வானம் சிவக்கும் 26 அக்டோபர் 1981



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1408
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1409
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain



    மாஸ்டர் பீஸ்... பகுதி 4.....................

    தென்னக மொழிகளில் நிறைய படங்கள் இயக்கி இருந்தாலும் தம் தமிழ் சினிமாவுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது.. அவர்தான் பழம்பெரும் இயக்குநர் பி.ஆர். பந்துலு.. தானே ஒரு தயாரிப்பாளராகவும் இருந்த காரணத்தினால் இயக்குநராக முழு சுதந்திரம் பெற்றவராக விளங்கினார்... நடிகர் திலகத்தை வைத்து தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், முரடன் முத்து, பலே பாண்டியா ஆகிய படங்களையும் திலகம் கௌரவ நடிகராக தோன்றிய குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களையும் இயக்கியவர்..

    பெருமை மிகு படங்களை தந்த இவர் துரதிஷ்டவசமாக திலகத்தை பிரிய நேர்ந்தது.. பிறகு எம் ஜி ஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன், நாடோடி, ரகசிய போலிஸ், தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்கள் உட்பட வேறு சில நடிகர்கள் நடித்த படங்களையும் இயக்கினார்.. இதில் ஆயிரத்தில் ஒருவன் படம் தவிர மற்ற படங்களை முதல் சுற்றுலேயே ஃபில்டர் பண்ணி விடலாம்.. தங்கமலை ரகசியம்தான் நம்மவர் காம்பினேஷனில் முதல் படம் .. படவசூல் நிறைவைத் தந்த காரணத்தால் தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து படங்கள் தயாரித்து இயக்கத் துவங்கினார்.. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த படம் சபாஷ் மீனா.. முழுநீள நகைச்சுவைச் சித்திரமான இந்தப்படம் மிகவும் முக்கியமான படம்தான்... அப்போது ஒரு விஷயம் உணர்ந்தார்.. சிவாஜி சினிமாக்கள் எந்தக்காலத்திலும் நம்மை ஏமாற்றி விடாது என்ற தைரியத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற வீரபாண்டிய கட்ட பொம்மனை உருவாக்கினார்.. தரத்திலும் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.. இந்தியாவை கடந்து ஒரு படம் உலக சினிமாவாக பரிமளி்த்த படமாக கட்ட பொம்மன் விளங்கியது...



    அடுத்ததாக கப்பலோட்டிய தமிழனை உருவாக்கினார்.. கட்டபொம்மனைப்போல தரத்தில் உயர்ந்த படம்தான் ஆனால் ஏனோ குறைந்த பொருட் செலவில் படத்தை நிறைவு செய்தார்.. வரலாற்று ஆவணங்களை செல்லூலாய்டில் பதிவேற்றம் செய்யும் போது பிரம்மாண்டம் தவிர்க்க இயலாதது.. பந்துலு அதை செய்யவில்லை.. எதிர் நோக்கிய வெற்றி இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லை.. ஆனால் பொருள் நஷ்டம் என்ற புரளி கிளப்பப் பட்டது.. ஆனால் நம்மவர் அதற்காக குறுகிய காலப்படமாக பலே பாண்டியாவில் நடித்துக் கொடுத்து பந்துலுவை மனநிறைவு அடையச் செய்தார்... மிக குறுகிய காலத்தில் மிக குறைந்த பட்ஜெட்டில் நல்ல வசூலை அள்ளித் தந்தது பலே பாண்டியா... "பலே கணேசா" என்று பெயர் வைத்திருக்க வேண்டிய படம்.. மும்மூர்த்திகளாக வந்து நகைச்சுவையில் முத்திரை பதித்தார் நம்மவர்.. அதன் வெற்றிதான் கர்ணனை மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கும் தெம்பைக் கொடுத்தது.. கர்ணன் இன்னொறு வலராறு ஆனது.. அதன் வெற்றி பலரது புருவங்களை உயர வைத்தது.. அதே சமயம் சிவாஜி மீது ஒருவருக்கு காழ்ப்புணர்வு கொள்ள வைத்தது.. மறுபடியும் திட்டம் தீட்டி ஒரு பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது.. அதற்காகவும் பந்துலுவுக்கு உதவி புரிந்தார் நம்மவர்... குறைந்த செலவில் முரடன் முத்து படத்திற்கு முழு மனதுடன் கால்ஷீட் கொடுத்தார்.. முரடன் முத்து படமும் பந்துலுவுக்கு செல்வம் வாரி வழங்கியது...


    இவ்வளவு செய்தும் என்ன பலன் சூழ்ச்சி சலங்கை கட்டி ஆடியது துரோகம் தூளி கட்டி ஆடியது.. பத்துலு அதற்கு செவி சாய்க்காமல் இருந்திருந்தால் இன்னும் பல வரலாற்று நாயகர்களை நாம் தரிசித்து இருக்க முடியும்.. அதிக பொருட் செலவில் ஆயிரத்தில் ஒருவனை எடுத்தார்.. என்ன புண்ணியம் ஒரு மசாலா இயக்குநராகத்தான் அந்தப்படம் பந்துலுவை காட்டியது மற்ற இரு படங்கள் ரகசிய போலிஸ் மற்றும் தேடிவந்த மாப்பிள்ளையும்.. 1970 உடன் பந்துலுக்கு குட் பை சொல்லிட்டார் எம் ஜி ஆர்.. அப்போது நினைவில் வந்திருப்பார் நம்மவர்.. என்ன பயன் கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழி பந்துலுவுக்கு பொருந்தி வந்தது.. ஆனால் நம்மவர் 70களில் மோஸ்ட் வாண்ட்டடு ஹீரோ ஆகிட்டாரே.. தேடி வந்திருந்தால் பந்துலுவுக்கு உதவியிருப்பார்.. வீம்பு, நாணம் இரண்டும் அவரை தடுத்து இருக்கக் கூடும்...


    இப்போது மாஸ்டர் பீஸ் எது என்பதற்கு வருவோம்.. என்னைப் பொறுத்தவரை பந்துலு அவர்கள் சிவாஜியை வைத்து இயக்கிய 7 பங்களுமே நல்ல படங்கள்தான்.. ஆனாலும் எலிமினேஷனில் ஆயிரத்தில் ஒருவன் படம் உட்பட சிவாஜி படங்கள் நான்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன் ஆகிய மூன்றும் ஃபைனலில் நிற்கிறது.. என்னால் இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய இயலாது... 1,2,3 என்றுகூட வரிசைப்படுத்த இயலாது.. முக்கனியில் எக்கனியில் சுவை என்பது சொல்ல முடியாது... ஆகவே இம்மூன்றையும் போட்டியில் வைத்து விட்டு கட்டுரையை முடிக்கிறேன்.. நண்பர்களே தேர்வு செய்யட்டும்..


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1410
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •