Page 134 of 400 FirstFirst ... 3484124132133134135136144184234 ... LastLast
Results 1,331 to 1,340 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1331
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    sivajiperavai chennai

    நண்பர்களுக்கு வேண்டுகோள்:
    ஒரு ரூபாய் கொடுத்து நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை கொடைவள்ளல் என்றும், சத்தமில்லாமல் சமுதாய பணிகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும் அவதூறு பரப்பியவர்கள் இன்று நாம் கொடுக்கும் ஆதாரப்பூர்வ தகவல் மற்றும் செய்திகளால் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் சிவாஜி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
    இப்போது, அடுத்த கட்டமாக அரசியலில் சிவாஜி ராசி இல்லாதவர் என்ற அவதூறை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடியாகவும், மக்கள் உணரவும், தந்தி தொலைக்காட்சியின் இந்த வீடியோவை முடிந்த மட்டும், WhatsApp, Facebook குழுக்கள் மூலம் பரப்புங்கள்.





    Sivaji Sentiment Reason behind CM's denial to Inaugurate Sivaji Manimandapam
    சிவாஜி ராசியில்லாதவரா ? விளாசும் சிவாஜி…
    youtube.com
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1332
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri

    இன்று விஜய் டீவியில் நடைபெறும் நீயா நானா நிகழ்ச்சிப் பதிவில் அன்பு நண்பர்கள் அப்துல் ரஜாக், சேகர் பரசுராம், M.L.கான் மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை சந்திரசேகர் ஆகியோர்.படப்பிடிப்பு தளத்தில் இருந்து நேரடியான போட்டோ.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1333
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like












    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1334
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நீயா நானா நிகழ்ச்சியில்



    .................................................. ..........................
    B K Kalyanasundaram

    நண்பர்களே
    உண்மை என்ன வென்றால் இந்த ஷோ கோபி இஷ்ட ப்படி தான் நடக்கும். எவ்வளவு விவரங்களை நம் நண்பர்கள் அள்ளி விட்டாலும் அதை அவருடைய ஈகோ ஏற்று கொள்ளாது.பேசும்போதே குறுக்கிடுவார்.என் நண்பர் கள் சென்று அனுபவித்திருக்கிறார்கள்.
    இதில் ஆபோசிட் குரூப் வேற. சண்டை வர வாய்ப்பு கள்உண்டு.நான் முன்பு ஓரு சானல் செலக்ஷ்னில் நேரிடையாக பார்த்திருக்கிறேன்.
    நண்பர்கள் வந்தால் தான் தெரியும். உங்கள் கருத்துக்கள் சரியானது.

    .................................................. ..................................

    Chandrasekaran Muniyandiapillai


    நீங்கள் கூறுவதுதான் உண்மை. திரு.கோபி ஒரு எம்ஜிஆரிஸ்ட். அதையும் தாண்டி வாதிட்டு நம் குழுவினர் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்த்தில் உள்ளனர் என்பதே நிஜம்.

    .................................................. ............

    TsRajendran Mcom


    கோபிநாத் - பாண்டே இருவரும் முதலிலே தன்னை தயார் படுத்திக் கொண்டு அவர்களின் தயாரிப்புக் கேற்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை பேசத் தூண்டி தங்களை மேதாவிகளாக காட்டிக் கொள்வார்கள் இவர்களின் வழிக்கு வராமல் பேச்சை வேறு திசையில் கொண்டு சென்று அவர்களின் புத்திசாலித்தனத்தை காட்ட ஆரம்பித்தால் இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் செய்து விடுவார்கள் இந்த இரு மா(ட்டு) மேதை......

    ................................................
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1335
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri



    நிகழ்ச்சி இப்போதுதான்( மாலை 5.45) நிறைவு பெற்றுள்ளது.
    வந்த செய்திகள் இனிப்பும் கசப்பும் கலந்துதான் இருக்கின்றன.
    முதல்பகுதியில் நம் அணி சற்றே சுரத்துக் குறைவாகவே இருந்ததாம். முதல்பகுதி கிட்டத்தட்ட குத்துப்பாட்டு நிகழ்ச்சி போலவாம்.பாட்டுக்குப் பாட்டு போல அமைந்து விட்டதாம்.
    ... அடுத்த பகுதியில் நம் அணியினர் அட்டகாசமாக ஆர்த்தெழுந்து விட்டார்களாம். காரணம் இப் பகுதி முழுவதும் அன்பு, பாசம், குடும்பம் போன்ற உயர்வான விசயங்களைப் பற்றி இருந்ததாம்.
    ஏற்கெனவே நாம் எண்ணியபடி, எதிரணிக்குத்தான் அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டதாம். நம்மவர்களை அதிகம் பேச விடாமல் பேச்சுக்கள் பாதியிலேயே இடைமறிக்கப்பட்டு திசை மாற்றப்பட்டதாம்.
    ஒருகட்டத்தில் நம்மவர்கள் பொறுக்க இயலாமல் பொங்கி எழுந்து, ஒரு காரசாரமான நிலை உருவாகி, அதன் பின்னரே நிலைமை ஒரு சுமுகமான நிலைக்கு வந்திருக்கிறது.
    இது முதல் சுற்றுச் செய்திதான். ஓரிரு நிமிடங்களில் விவரங்கள் அவசரமாகப் பெறப்பட்டது. முழு விவரமும் போகப் போகத்தான் தெரிய வரும்.
    நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் பற்றிய அறிய விவரம் எதுவும் இன்று அறிவிக்கப்படவில்லையாம்.



    .................................................. ..........

    Comments

    Uma Sridhar
    Ippadithaan irukkum enru ninaithen......................................... .









    Thilagam Senguttuvan

    ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் செய்தி ஊடகங்களே தங்கள் பொறுப்பு மறந்து பாரபட்சமாக இயங்கும் போது பொழுதுபோக்கு ஊடகமான விஜய் டிவி யிடம் இதற்கு மேல் நாம் எதிர்பார்ப்பது கடினம்தான்.ஆனால்
    நமது நடிகரின் புகழ் காலம் கடந்தும் நிற்பது உறுதி............................................. ...........
    Seyed Abbas


    தெரிந்தது தானே
    முதலிலே
    திரைக்கதை அமைத்து விட்டு
    படம் இயக்கிய கதைதான் இந்த நிகழ்ச்சி








    .................................................. .............................

    Ghovi Veer

    அது அவங்க இஷ்டத்துக்கான நிகழ்ச்சி.








    ..............................................
    Seyed


    உண்மை

    ..............................................



















    Baskaran Ratnasabapathy எதிர்பார்த்தது தானே.
    உண்மை வெல்லும். மிகுதியை முகநூலில் பதிவு செய்வோம்
    Last edited by sivaa; 15th October 2017 at 09:03 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1336
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    athavan ravi



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1337
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sukumar Shan shared Cine Museum's photo.

    நடிகர் திலகம் பற்றி ஏ.வி. எம். சரவணன் அவர்கள் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையில் அறிமுகமான படம், பராசக்தி. இப்படத்தை, பி.ஏ.பெருமாளுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பன். ஏ.வி.எம்., மகனும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர்; சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை, வாரமலர் இதழுக்காக பகிர்ந்து கொண்டார். அது:
    கடந்த, ஏப்., 9, 1958ஐ என்னால் மறக்க முடியாது. அன்று தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஸ்டுடியோ நிர்வாகியான ரங்கஸ்வாமி அய்யங்கார், ஸ்டுடியோவில் இருந்தோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, ஸ்டுடியோவின் ஐந்தாவது தளத்தில், தெய்வப் பிறவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலில் சிவாஜியைச் சந்தித்தேன். அவருடைய நல்வாழ்த்துக்களுடன் என் சினிமாப் பயணம் துவங்கியது.
    எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர் சிவாஜி. என்னை எங்கு எப்போது சந்தித்தாலும், 'நல்லா இருக்கிங்களா?' என்று மனதார கேட்பார். அத்துடன், 'உங்க மனைவி லட்சுமி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா...' என்று பாசத்தோடு கேட்பதுடன், 'மறக்காமல் உங்க மனைவி லட்சுமிகிட்டே நான், அவங்களை விசாரிச்சேன்னு சொல்லுங்க...' என்பார். அடுத்து, எப்பவாவது என் மனைவியை சந்திக்கும் போது, 'என்னம்மா லட்சுமி... நான் உங்களை விசாரிச்சேனே... உங்க வீட்டுக்காரர் சொன்னாரா?' என்று, 'கன்பர்மேஷனு'க்கு கேட்டு விடுவார்.
    என் தந்தையிடம் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர் சிவாஜி. அவரது மகள் சாந்தியின் திருமணத்தின் போது, என் தந்தைக்கு தான் முதல் பத்திரிகை கொடுத்தார். எங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், சிவாஜியை முதல் வரிசையில் உட்கார வைப்பார் என் தந்தை.
    அதேபோன்று, தன் அமெரிக்க நண்பர்களிடம், சிவாஜியை அறிமுகம் செய்யும் போதெல்லாம், 'தமிழகத்தின் அதிர்ஷ்டம், சிவாஜி கணேசன் இங்கு பிறந்திருக்கிறார்; அமெரிக்காவின் துரதிருஷ்டம், அவர் அங்கு பிறக்கவில்லை...' என்று கூறுவார்.
    சிவாஜி சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல குடும்பத் தலைவர். சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக, ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்.
    இப்படத்தின் ஐம்பதாவது ஆண்டை, ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்று மிகவும் விரும்பினார் சிவாஜி. ஆனால், துரதிருஷ்டவசமாக விழா எடுக்க அவர் இல்லை. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் காட்சியில், 'சக்ஸஸ்...' என்று சொல்வார் சிவாஜி. அக்காட்சி, ஸ்டுடியோ தளத்திற்குள் எடுக்கப்படாமல், ஏ.வி.எம்.,மில் வெளிப்புற காட்சியாக எடுத்திருந்தனர். அதே இடத்தில், அவரது நினைவு சின்னம் ஒன்றை வைத்தோம். சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும், 'நினைவுச் சின்னம் திறப்பதற்கு நடிகர் கமலை கூப்பிடலாம்; அது தான் பொருத்தமாக இருக்கும்...' என்றனர். தன் கலை வாரிசு என்று, சிவாஜியால் அறிவிக்கப்பட்ட கமல், அக்.,19, 2002ல், சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.
    அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற உலக அமைப்பிற்கு, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகவும், சர்வதேச சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதன் தலைமை செயலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்காக, சிவாஜி தன்னுடைய தலைமையில் எல்லா நடிகர்களையும் அழைத்து, எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அத்துடன். தனிப்பட்ட முறையிலும், தேனீர் விருந்தும் கொடுத்தார். அவர், என் மீது கொண்டிருந்த பாசத்தை நினைத்தால், இன்னும் மெய் சிலிர்க்கிறது.
    சிவாஜி நடித்த, 125வது படம் ஏ.வி.எம்.,மின், உயர்ந்த மனிதன். உத்தர் புருஷ் என்ற வங்காள மொழி படத்தை, தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம். அப்படத்தை சிவாஜிக்கு போட்டு காண்பித்தோம். படத்தை பார்த்ததும், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
    உத்தர் புருஷ் படத்தின் கதைக் கருவை ஒட்டி எடுக்கபட்ட, உயர்ந்த மனிதன் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனிடம், சிவாஜியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக எழுதும்படி கேட்டுக் கொண்டோம். கிருஷ்ணன் - பஞ்சு இயக்குனர்கள். இப்படத்திற்கு சிவாஜி முன்பணமோ, வேறு தொகையோ வாங்கிக் கொள்ளவில்லை. படம் வெளியான பின் தான் அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்.
    கலைத்துறைக்கு சிவாஜி ஆற்றியுள்ள அளப்பரிய சேவையைப் பாராட்டி, பிரஞ்சு அரசு, மிக உயர்ந்த, 'செவாலியே' விருதை அளித்து கவுரவித்தது. அதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சத்ரபதி சிவாஜி குதிரையில் அமர்ந்திருப்பது போன்று வெள்ளியில் செய்யப்பட்ட (தோட்டா தரணி உருவாக்கியது) சிலையை, தமிழ்த் திரை உலக சார்பில், சிவாஜிக்கு வழங்கினேன்.
    ஒரு முறை, திருலோகசந்தர் டைரக்ட் செய்யும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு, படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை பார்த்து, 'ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள், உடம்பு சரியில்லையா?' என்று கேட்டேன். 'உடம்பைத் தொட்டுப்பார்...' என்றார். தொட்டுப் பார்த்தால், உடம்பு அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. 'உடம்பு கொதிக்கிறதே... ஓய்வு எடுத்துக்க வேண்டியது தானே?' என்று கேட்டேன்.
    'நாளை, 'வியட்நாம் வீடு'ன்னு ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றேன்; அதிலே எனக்கு ஒரு பிராமணர் கேரக்டர். அதை சிறப்பாக செய்யணுமேன்னு டென்ஷன்; அதனால் தான் ஜுரம்...' என்றார் சிவாஜி.
    'பிராமணர் கேரக்டரிலே நடிக்கிறது உங்களுக்கு ஒன்றும் சிரமமானது இல்லையே...' என்றேன்.
    'அது, சாதாரண பிராமணர் ரோல் இல்லை; பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற எமோஷனலான கேரக்டர். அந்த சீரியசான கேரக்டரிலே நடிக்கிறபோது, ஏதாவது தப்பா போயிட்டா மக்கள் காமெடியா நினைச்சு சிரிச்சுடுவாங்க...' என்றார்.
    அவர் அழைத்ததை அடுத்து, மறுநாள் மியூசிக் அகாடமியில் நடந்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன்; திரை விலகியது... நான் அங்கே சிவாஜியைப் பார்க்கவில்லை; பிரஸ்டீஜ் பத்மநாபனைத்தான் பார்த்தேன்.
    ஒரு முறை கமல்ஹாசன், சிவாஜியைப் பற்றி கூறும் போது, 'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கிற பர்பெக் ஷனை தன் முதல் படத்திலேயே கொடுத்தவர் சிவாஜி...' என்று குறிப்பிட்டார். 'சிவாஜியிடம் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் பிடிக்கும்?' என்று கேட்டால், 'நடிக்க, 'ஸ்கோப்' இருக்கிற கேரக்டர்களில்...' என்று சொல்வார்.
    நடிப்பில் ஈடு இணை இல்லாத நடிகராக இருந்த போதும், கடைசி வரை சிறந்த நடிகருக்கான, 'பாரத்' விருது அவருக்கு தரப்படவில்லை என்பது வருத்தமான விஷயம். முதல் மரியாதை படத்துக்காக அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய விருது கூட நழுவி, ஒரு வங்காள நடிகருக்கு போய்விட்டது.
    எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய, 'பால்கே சாகிப்' விருது கூட, அரசியல் காரணமாக தள்ளிப்போய், 1997ல் தான் கிடைத்தது. அவருக்கு விருது அளித்ததற்காக, அப்போதைய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஜெயபால் ரெட்டியை சந்தித்து, நன்றி சொன்னேன். 'இந்த விஷயத்தில் நான் தலை இடவே இல்லை; அவார்டுக்குரிய தேர்வு கமிட்டி அவரை தேர்ந்தெடுத்தது; எனவே, எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்...' என்று கேட்டார். 'ஒரு கமிட்டியை போட்டு, அதில் எந்தத் தலையீடுமின்றி சுதந்திரமாக தகுதியான நபரை தேர்ந்தெடுத்து, கவுரவிக்க வாய்ப்பு தந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றேன் பதிலுக்கு!
    சிவாஜி - சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரம்!



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1338
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan.







    Sundar Rajan

    அன்பிற்குரியரிய சிவாஜியவாதிகளே,நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் கலையுலகிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் என்பது அனைவரும்... அறிந்ததே.
    கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்து தான் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாக பல முறை சொல்லி இருக்கிறார்
    நமது நடிகர்திலகம்.
    பின்னாளில் திரையில் உச்சம் தொட்ட போதும் கட்டபொம்மன் நாடகத்தை நடத்தியுள்ளார் நமது நடிகர்திலகம்.
    கட்டபொம்மன் திரைப்படமாக்கபட்டு் மாபெரும் வெற்றியும், பல சாதனைகளையும் நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல், உலகளவில் தமிழின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் உயர்த்தியது.
    திரைப்படமாக வந்த பின்னரும் பலமுறை நாடகம் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருவாய் ரூபாய் 25 இலட்சத்தை கல்விக் கூடஙகளின் வளர்ச்சிக்கு கொடுத்து உதவியவர் உண்மை கர்ணன் சிவாஜி அவர்கள். இன்றைய மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும்.
    மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் கலர் படம் கட்டபொம்மன், மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்டவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்.
    1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் கலந்து சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை பெற்றவர் சரித்திரநாயன் சிவாஜி அவர்கள்.
    இன்றும் கட்டபொம்மனை இன்றை சமுதாயத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர் நமது நடிகர்திலகம்.
    கட்டபொம்மனின் நினைவுநாளில் கட்டபொம்மனை வணங்குவோம்.
    மக்கள்தலைவரை போற்றுவோம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1339
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Udaikumar Rangayan‎ to nadigar thilagam sivaji visirigal · 58 mins ·

    சுமதி என் சுந்தரி சன்லைப் சேனலில் தற்போது


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1340
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கலைத் தெய்வத்தின் 1 வது வெற்றிச்சித்திரம்

    பராசக்தி வெளியான நாள் இன்று

    பராசக்தி 17 ஒக்டோபர் 1952


    65 வருடங்கள்





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •