Page 120 of 400 FirstFirst ... 2070110118119120121122130170220 ... LastLast
Results 1,191 to 1,200 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1191
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sridharan Renganathan

    திரைக்கலையின் தன்னிகரில்லா தமிழ் தாயின் தலை மகன் ! திரைத் திறனில் தனித்துவமிக்க தெய்வமகன்! எழேழு ஜென்மங்கள் கடந்தாலும் ஈடிணை என்ற சொல்லுக்கே இடமளிக்காத கலைத்துவம் கொண்டு, சாதனைகள் படைத்த பல்சுவை பாவ(BHAAVA) நடிப்புலக பராக்கிரமன் சிம்மக்குரலோன் ஜெனித்த நன்னாளன்று திரைதேனிசை மெட்டில் என் வாழ்த்தொலி!
    ************************************************** ****************
    சாதனையாளும் சீலன்!
    (மெட்டு; ஒரு கோப்பையிலே) ... பாடல்;
    திரு முகத்தினிலே நல் தெளிவிருக்கும்;
    திரை நடிப்பினிலே மொழி சுவையிருக்கும்;
    பல பாவத்திலே அது பரிமளிக்கும்;
    நாம் பிரமித்திடவே அது நிலைத்திருக்கும்; (திரு)
    காவியத் தாயின் தவப்புதல்வன்-உயர்
    தனித்துவமாகும் திரைக்கலைஞன்; (பெரும் காவியத்)
    சாதனையாளும் சீலனவன்;-புவி
    சரித்திரம் போற்றும் சிவாஜியவன்; (திரு)
    மானுட உலகை மயங்கவைக்கும்;-மக்கள்
    மனங்கள் யாவையும் நெகிழவைக்கும்; (இம்மானுட உலகை)
    நடிப்பினில் நிகரில்லா நிறைவிருக்கும்;-அதில்
    நடிகர் திலகத்தின் திறனிருக்கும்; (திரு)
    BY. R. SRIDHARAN.















    https://www.facebook.com/SridharanRe...7867366256481/
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1192
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    =esvee;1326991]குப்பனும் சுப்பனும் நினைத்திருந்தால் ...
    அல்லது நேர்மையாக உழைத்திருந்தால் ...
    இன்று அவர்களின் மனக்குமுறல்கள் நியாயமாக இருந்திருக்கும் .
    இவர்களின் அறிவுக்கு கண்கள் பழுதாகிவிட்டது என்பதே உண்மை .

    அவர்களின் நாயகன் சிம்மக்குரலில் கர்ஜித்து , உரத்த குரலில் விழி பிதுங்கி ரத்தத்தை கக்கி பல் வேறு பாத்திரங்களில் நடித்தது அவருடைய திறமை . தன்னுடைய நடிப்பில் அரசியல் மற்றும் மக்கள் விரும்பும் ரசனைகள் கொண்ட சண்டைக்காட்சிகள் , பிரமாண்ட அரங்கங்கள் ,இத்யாதிகளை செய்ய வேண்டாம் என்று யார் தடுத்தது ? மக்கள் அவரை ஏற்று கொண்டது ஒரு சிறந்த நடிகராக மட்டுமே .

    அவருக்கு வாழ்ந்த காலத்தில் எது கிடைக்க வேண்டுமோ அவைகள் கிடைத்தது .
    இப்போது எது கிடைக்கிறதோ அதை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும் சுப்பா ....
    முழு நிலவு சந்திரன் .... என்றுமே பேரழகு ...
    ஒளி வீசும் குளிர் நிலவு ...
    நாங்கள் நினைத்தோம் ...
    நினைத்ததை நடத்தி காட்டினோம் .
    இன்றும் வெற்றிகளை குவிக்கிறோம்
    எங்களை பார்த்து ..............
    உங்களுக்கு கிடைத்தது இவ்வளவுதான் ...
    மனசாந்தி அடையவும் .

    நன்றி .
    திரு கார்மேகம்
    முகநூல்
    குப்பனும் சுப்பனம் நேர்மையாகத்தான்
    உழைத்தார்கள் உங்களைப்போல் சண்டித்தனம் செய்யவில்லை
    எங்கள் படங்கள் ஓடும் தியெட்டர்களை நீங்கள் சென்று பயமுறுத்தியதுபோல்
    குப்பனும் சுப்பனும் செய்யவில்லைதான்
    விநியோகஸ்தர்களை பயமறுத்தவில்லைதான்
    சட்டத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு படங்களை ஓடவிடாமல் தடுக்கவில்லைதான
    பாரத் பட்டத்தை கைகூலி வைத்து களவாடவில்லைதான்
    படத்தோவுக்குழுவில் உள்ளவர்களிடம் பேரம் பேசவில்லைதான்

    இவற்றையெல்லாம் கப்பனும் சுப்பனும் செய்யவில்லைதான்
    செய்திருந்தால் உன் ஆளின் இடமே தெரிந்திருக்காது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1193
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1194
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு

    பதிவு: அக்டோபர் 01, 2017 15:02







    சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.







    சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.

    சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

    இந்த விழா மிகவும் மகிழ்ச்சிகரமானது. எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். கமலும், ரஜினியும் ஒன்றாக இருக்கிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா. சரத்குமாரும், நாசரும் அருகருகே இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு.

    கமலுடன் அமைச்சர் ஜெயக்குமார் கைகுலுக்குகிறார். எல்லோரது முகத்திலும் புன்னகை தவழ்கிறது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் அழைத்ததும் திறப்பு விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் வந்து இருக்கிறார். நடிகர் திலகத்தின் பெருமையை அவரது குடும்பத்தினர் கட்டிக்காத்து வருகிறார்கள்.

    அவரது வசனத்தை பேசிதான் பலர் நடிப்பதற்கே வந்தனர். பராசக்தி வசனத்தை பேசிதான் நான் எஸ்.பி.முத்துராமனிடம் வாய்ப்பு கேட்டேன். நடிப்பு துறைக்கு வருபவர்களுக்கு பாலபாடமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.

    இவ்வாறு அவர் கூறினார்.







    நடிகர் விஜயகுமார் பேசும் போது, கலை என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் நடிகர் திலகம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் புகழப்படுவர் என்றார்.

    நடிகர் சரத்குமார் கூறும் போது, இது மகிழ்ச்சியான விழா. இந்த இடத்தை கொடுத்து மணிமண்ட பம் கட்டிய மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அமைச்சர்கள் படைசூழ மண்டபத்தை திறந்து வைத்த துணை முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த மண்டபம் வெறும் மண்டபமாக இல்லாமல் கலை உலகின் சிறப்புகளையும், நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து நிகழ்வாகவும் அமைய வேண்டும் என்றார்.

    malaimalar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1195
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.






    எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

    சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

    மாநில, தேசிய-ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் சிவாஜி. ஒருவேளை நான் சினிமாவுக்கு நடிக்க வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன். அப்படி பார்த்தாலும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளே வர அனுமதி கிடைக்காவிட்டாலும், வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஆக இந்த விழாவுக்கு எப்படியும் நான் வந்திருப்பேன். யார் தடுத்தாலும் வந்திருப்பேன்.

    அரசியல் எல்லை, தேசிய-ஆசிய எல்லையெல்லாம் கடந்த இந்த நடிகருக்கு அரசு சொல்லும் நன்றி அறிவிப்பு என்று தான் நான் கருதுகிறேன். நம் வாழ்க்கையை மேம்படுத்திய அவரது கலைக்கு நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் நன்றி அறிவிப்பு இது.



    பிரபு பேசும்போது எத்தனை முதல்வர்கள் மரியாதை செய்வதற்கு முன் வந்தார்கள் என்பதை பெயர் பட்டியலிட்டு குறிப்பிட்டார். நான் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தாக வேண்டும். மதிப்பார்கள் என்பது உறுதி.

    அதற்கு யாரையும் நாம் வற்புறுத்தியோ, கிள்ளியோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னால் நடக்கும். தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். எப்போதும் இந்த கலைஞனை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர் அடியொற்றி தவழ்ந்த குழந்தைகளில் நானும் ஒருவன்.

    பிறகு அதே நடையில் நடக்க வேண்டும் என்று முயன்று தடுமாறிய பல்லாயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன். அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக மட்டுமே இங்கு எனது தன்நிலை மறந்து, என்நிலை மறந்து நான் ஒரு கலை ரசிகன் என்கிற முறையில் வந்திருக்கிறேன்.



    எத்தனையோ நடிகர்கள் பேசிப்பேசி பார்த்து தோற்றவர்கள். பேசித் தோற்றவர்கள் என்று சொல்லும் போதெல்லாம் என்னைச் சொல்வது போலவே எனக்கு தோன்றும். இன்றும் முயன்று கொண்டிருக்கிறோம். அதுபோல் நடிக்க வேண்டும் என்று, அதுதான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நடிகர் திலகத்துக்கு நன்றி சொல்ல இங்கு வந்திருக்கிறேன். அதற்கு அனுமதி அளித்த கலை உலகிற்கும், அரசிற்கும், அரசியலுக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    malaimalr
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1196
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்னை அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.






    சென்னை அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.

    சென்னை:

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.

    நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று மணிமண்டபத்தை (அக்டோபர்) 1-ந்தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார். அதன்பின்னர், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

    malaimalar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1197
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1198
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: ஓ.பி.எஸ், ரஜினி, கமல் பங்கேற்பு

    • 1 அக்ட












    மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார்.


    சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட பல நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாநில அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
    விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன் பேசுகையில், '' நடிகர் திலகம் சிவாஜி, மாநில, தேசிய மற்றும் ஆசிய எல்லைகளை கடந்தவர். இந்த விழாவுக்கு யார் தடுத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்'' என்று பேசினார்.


    ''மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். எப்போதும் மக்களின் நினைவுகளில் வாழ்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் கமல் ஹாசன் புகழாரம் சூட்டினார்.
    'அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமலுக்கு தெரியும்'
    சிவாஜி சிலையமைத்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மேலும் உரையாற்றுகையில், '' சிவாஜி தேர்தலில் நின்று தோல்வியுற்றது அவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. மக்களுக்குத்தான் அது அவமானம்'' என்று தெரிவித்தார்.
    அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், தனக்கு தெரியாது என்று கூறிய ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமல் ஹாசனுக்கு தெரிந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
    Image caption துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபு, சிவாஜிகணேசனின் சிலையை கடற்கரையில் நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகையால், அவரது பெயரை இந்த மணி மண்டபத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
    விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ''தனது திரையுலக வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளவர் சிவாஜி கணேசன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான் போன்றோரை நாம் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று திரையில் வாழ்ந்து காட்டியவர் சிவாஜி'' என்று சிவாஜிக்கு புகழாரம் சூட்டினார்.


    bbc tamil
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1199
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1200
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    ஒரே மேடையில் ரஜினி, கமல்... சிவாஜி மணிமண்டபம் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் , கமலஹாசன், அருகருகே அமர்திருந்தனர். இடம் : அடையார்.

    dinamalar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •