Page 108 of 400 FirstFirst ... 85898106107108109110118158208 ... LastLast
Results 1,071 to 1,080 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1071
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1072
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1073
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1074
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1075
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Subbiah




    திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்தவர் நடிகர்திலகம் என்று சொல்கிறார்கள்.என்னைப்பொருத்த வரை திரையில் கூட அவர் நடிக்கவில்லை.அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்வேன்.திரையில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் சிலரைப்போல் நல்லவனாக மட்டுமே நடித்துவிட்டு போயிருப்பார்.கொடுக்கப்பட்ட கேரக்டரின் கதாபாத்திரமாக வாழ்ந்தார் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1076
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas

    வசந்த மாளிகை ரிலீஸ் நினைவலைகள் - பார்ட் II
    நேற்று எழுதி நிறுத்திய இடம் முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் வாங்கி படாதபாடு பட்டு உள்ளே சென்று அமர்ந்து படம் தொடங்குகிறது.
    படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? முதன் முதலில் பார்த்தபோது நிகழ்ந்ததவற்றை வர்ணிப்பது கடினம் என்றபோதிலும் முயற்சிக்கிறேன்.
    பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.
    ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.
    ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி முடிந்து விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ஆட்டம் காண அனைவரும் உயிர் பயத்தில் அலற தலைவர் மட்டும் சிரித்துக் கொண்டே "வாழ்க்கையிலே மிஸ் பண்ண கூடாததை போய் மிஸ் மிஸ்ங்கிறீங்களே" என்பது, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்தும்போது "உன்னை மாதிரி நல்லவங்க ஆசி இருந்தா போதும் நூறு வயசு என்ன ஆயிரம் வயசு நல்லாயிருப்பேன்" பிறந்த நாள் பார்ட்டியின் முடிவில், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, சரின்னா யாராயிருந்தாலும் டயலாக், நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது, வானத்திலிருந்து எப்போ பூமிக்கு வந்த? வாட் மிருகம் வாட் காப்பாத்தினேன்? இவையெல்லாம் கைதட்டல் அள்ளியது. அது போல் சொத்துகளை பாகம் பிரிக்கும் காட்சிக்கு ("பத்திரத்தை படிக்கனுமுனு சொன்னவுடனே பெரிய துரை ஏன் சீர்றாரு, அப்போ இதிலே ஏதோ விஷயம் இருக்கு") அதிலும் வாணிஸ்ரீ இரண்டாம் முறை "எந்த விதமான பாத்யதையும் இல்லையென்று" என்று அழுத்தம் கொடுக்கும்போதும் அதற்கு அடுத்த சில நொடிகளில் நடிகர் திலகம் "அதைத்தான் அவங்க பாசமுன்னு சொல்றாங்க. நீ மோசமுன்னு நினைக்கிறியா" என்ற வசனத்திற்கெல்லாம் ஆர்ப்பாட்டம், அலறல். "பாசமா அது எங்கம்மா இங்கே இருக்கு?", "உங்கக்கா வரலையா?", "பெருங்குடியில் பிறந்தவன் டாக்டர்" "மனமா அது மாறுமா?", "விஸ்கியைதானே குடிக்கக் கூடாதுனு சொன்னே, விஷத்தை குடிக்கக்கூடாதுனு சொல்லலையே" பிற்காலத்தில் கல்வெட்டாய் பதிந்துப் போன வசனங்களெல்லாம் அந்த முதல் நாளிலேயே பிரமாதமாக வரவேற்கப்பட்டது. பாலமுருகன் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இவ்வளவு ஏன் அது நாள் வரை சாதாரண பெயர்களில் ஒரு பெயராக இருந்த "லதா" ஓவர் நைட்டில் பாப்புலர் ஆனதும், ஆண்கள் அனைவரும் லதா என்ற பெயர் கொண்டிருந்த பெண்களை "லத்தா" என்று விளித்ததும் வரலாறு.
    ஓ மானிட ஜாதியே - ஸ்லோவாக ஒரு கவிதையை ராகத்தில் பாடுவது போல் இருக்கும். முத்தாய்ப்பாக எல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ. வாழ்த்தொலி அதிர்ந்தது.
    ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் அரங்கத்தில் ஆட்கள் சீட்டில் அமரவேயில்லை. அலப்பறை அதிகமாகி அதிகமாகி உச்சகட்டமாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ் வந்தபோது வானம் இடிபட, பூமி பொடிபட என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற ஒரு ஆடல் பாடல் காட்சியை சொல்ல முடியுமா என்று மாற்று முகாம் ரசிகர்களோடு வாக்கு வாதம் செய்தது நினைவுக்கு வருகிறது.
    குடிமகனே பாட்டிற்கு பின் பக்கமாக ஸ்டெப் போட்டு ஆடுவது, கலைமகள் கைப்பொருளே பாடலில் ஏனோ துடிக்கிறேன் வரியில் திரும்பி பார்ப்பதில் ஆரம்பித்து நடந்து படியிறங்கி ரூமுக்கு வரும் வரை, மயக்கமென்ன பாடலுக்கு தூணை பிடித்து நிற்கும் போஸ், ஸ்லோமோஷன் காட்சிகள், இரண்டு மனம் வேண்டுமில் கடவுளை தண்டிக்க என்ன வழி என்ற அந்த கை உயர்த்தல், யாருக்காக மொத்தமும், எதை சொல்வது எதை விடுவது. இவற்றுக்கெல்லாம் அரங்கத்தில் நடந்த அலப்பறையை வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம்.
    இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். வேறு படமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் காட்சிகளை பற்றி எழுதலாம். மாளிகை எனும்போது குறைந்தபட்சம் 10 முறையாவது பார்க்காத ரசிகர் இருக்க முடியாது என்றிருக்க அதுவும் காட்சிகளையும் வசனங்களையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டல் கூட சொல்லக் கூடியவர்கள் எனும்போது அதையெல்லாம் விவரிப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமம். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.
    படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.
    நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.
    அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான ஒரு வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் மதார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான மற்றொரு வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. பால்கனி வரிசையோ தெற்காவணி மூல வீதியை தொடுகிறது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.
    திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட மதார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.
    வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.
    மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.
    ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.
    இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.
    ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.
    அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் பொழுது புலர்ந்தது அந்த வெற்றி இன்று வரை தொடர்கிறது என்பதுதான் வசந்த மாளிகையின் சிறப்பே. தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் மறு வெளியீடுகளில் கின்னஸ் சாதனை புரிந்த படம் எது என்றால் அது நிச்சயமாக வசந்த மாளிகைதான். முதல் வெளியீட்டில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 200 நாட்கள் ஓடியது எங்கள் மதுரை நியூசினிமாவில்தான் என்பது இப்போதும் காலரை தூக்கி வீட்டுக் கொள்ளும் பெருமையாகவே எங்களுக்கு இருக்கிறது.
    அன்புடன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1077
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    Sundarraj Balasubramaniam



    வசந்த மாளிகை யின் மழைக்காலம் மறக்க முடியாதது
    என் அப்பா , அம்மா என்று குடும்பத்துடன் வடக்கு வெளி வீதியில் இருந்து கிளம்பி நியூ சினிமா வரும் போது வழியெல்லாம் நீர் வடியாமல் ஓடுகிறது மழையும் விடவில்லை கண்டி கலைமகள் வாசலில் சற்றே நிற்கிறோம்
    படம் பார்க்கும் ஆவல் இரவுக் காட்சி மழையும் நிற்கவில்லை
    நனைந்து கொண்டே போகிறோம்
    90 பைசா டிக்கெட் எடுத்து முன் வரிசையில் அப்பா , 80 பைசா டிக்கெட் எடுத்து கடைசி வரிசையில் அம்மா
    டிராயர் போட்டிருக்கும் நான் தட்டித் தடுப்பின் மீதேறி இங்கும் அங்குமாய்
    சட்டையை பிழிந்து காய வைத்தாயிற்று
    எனக்கு விவரம் தெரிந்து நடிகர் திலகத்தின் தீவிர விசிறியான நாள் அன்று
    ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வசனமும் இசையோடு மனப்பாடம்
    பின் எத்தனையோ முறை அதே நியூ சினிமாவில் இந்தப் படம் பார்த்தாயிற்று ஆயினும் முதல் முறை பசுமரத்தானி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1078
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1079
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Subbiah




    இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1080
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Subbiah




    பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •