Page 107 of 400 FirstFirst ... 75797105106107108109117157207 ... LastLast
Results 1,061 to 1,070 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1061
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்?









    மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
    படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைAVMPRODUCTIONS Image caption பராசக்தி படத்தில் சிவாஜி.

    முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவைத் தொடர்பு கொண்டு பிபிசி கேட்டபோது, அவர் "இது ஒரு வழக்கமான நிகழ்ச்சி. ரூ.2.8 கோடி செலவில், முக்கியமான பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக நான் அதைத் திறக்கிறேன். அம்மா இருந்திருந்தால் அவர் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்திருப்பார். இப்போது நாங்கள் நேரில் சென்று திறக்கிறோம்," என்றார்.
    சசிகலா குடும்பத்தை தொடர்பு படுத்தி...


    அரசியல், திரைப்பட விமர்சகரான சுபகுணராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் "சிவாஜி தமிழகத்தின் மிக முக்கியமான திரைப்பட ஆளுமை. எத்தனை காலம் கழித்தாலும் சிவாஜியின் திரைப் பங்களிப்பு நினைவுகூரப்படும். ஆய்வுக்குள்ளாகும். தமிழ்நாட்டின் குறிப்பிட்ட தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் சிவாஜியை தம் குடும்பத்தில் ஒருவராக அடையாளம் கண்டனர். அவர் நடித்த ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தோடு எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர்," என்றார்.
    தம்மைப் போன்ற பலருக்கும் அவரது உருவம் தந்தைமையை உருவகப்படுத்தும் உருவம் என்று கூறிய அவர், "பல சிக்கலான காரணங்களால் ஜெயலலிதா சிவாஜிக்கு உரிய மரியாதையைத் தரத் தவறினார். இப்போதுள்ள அரசு, சிவாஜியை சசிகலா குடும்பத்தோடு அடையாளம் காண விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. மற்றபடி அடி நீரோட்டத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. இது உண்மையில் வேதனையாக இருக்கிறது. அவருக்கு மரியாதை செய்திருந்தால் உண்மையில் இவர்களுக்குத்தான் மரியாதை கிடைத்திருக்கும்," என்றார்.
    ஆனால், இந்த அரசு அமைத்திருக்கிற மண்டபமும், திறப்பு விழாவும் அவருக்கு மரியாதை செய்வதற்குப் பதிலாக அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளன என்றார் சுபகுணராஜன்.
    கருணாநிதி தொடர்பு
    எழுத்தாளரும், விமர்சகருமான தியோடர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மண்டபத் திறப்பு விழாவுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லையோ என்ற வாதத்தை அவர் மறுத்தார்.
    "ஒரு காலத்தில் முக்கிய நட்சத்திரமாக விளங்குகிறவர்கள் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழப்பது இயல்பாக நடக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஆள்கள் வருவதில்லை, அரசே மாணவர்களை அழைத்துவர வேண்டிய சூழல் இருக்கிறது என்பதைக் காணலாம்" என்றார் அவர்.
    Image caption அகற்றப்பட்ட சிவாஜி சிலை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஆர்வம் காட்டாதது குறித்துக் கேட்டபோது, "சிவாஜியின் ரசிகர்களுக்கென்று அரசியல் வலிமை ஏதுமில்லை. அதுவுமில்லாமல், இவர்கள் சிவாஜியை கருணாநிதியின் ஆதரவாளராகப் பார்க்கிறார்கள்," என்றார் அவர்.
    சிவாஜியையும், அவரது குடும்பத்தாரையும் எடப்பாடி தலைமையிலான அரசு சசிகலாவோடு இணைத்துப் பார்ப்பதாகவே பல தரப்பினரும் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்கின்றனர்.
    மேடையைப் பகிரத் தயக்கம்
    சிவாஜி குடும்பத்தாரோடு ஒரு மேடையைப் பகிர்ந்துகொள்வதை முதல்வரோ, துணை முதல்வரோ விரும்பவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத சிவாஜி ரசிகர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
    கடந்த திமுக ஆட்சியின்போது அவருக்கு சென்னை கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஜெயலிதா முதல்வராக இருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் அந்தச் சிலை அகற்றப்பட்டது.
    அவருக்கு உரிய முறையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
    சென்னை அடையாறு பகுதியில் 2.8 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபமும் அமைத்தது. அதன் திறப்பு விழா அக்டோபர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த மண்டபத்தை திறப்பார் என்று அந்த அறிவிப்பில் உள்ளது.

    B B C tamil
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1062
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Jahir Hussain


    ஒரு லாஜிக் புரியவில்லை,,, எம் ஜி ஆரை பாராட்டும் எல்லோரும் ஏன் சிவாஜியை மட்டம் தட்டியே எம் ஜி ஆரை பாராட்டுகிறார்கள்?, சிவாஜி அரசியல் வேறு வகையானது,,, எத்தனை அவமானங்கள் ஏற்பட்ட போதும் தனிமனிதனை முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை,, காமராஜரின் சாதனைகளை சொல்லி சொல்லித்தான் அவர் காமராஜர் பின்னால் நின்றார்,,, அவருக்குப் பினனால் பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட படை நின்றது,, காலம் முழுதும் அவர் காங்கிரஸுக்காக உழைத்தார்,,, அவர் காங்கிரஸில் உழைத்த காலங்களில் அவரால் காங்கிரஸுக்கு கிடைத...்த வெற்றிகளை வசதியாக மறந்து விடுகிறார்கள்,,, மாறாக நன்றாக ஞாபகப் படுத்தி அவர் ஏற்றுக கொண்ட தோல்விகளைப் பற்றி மட்டுமே கேலிபேசுகிறார்கள்,,, அரசியலில் தோல்வியடைந்த யாரும் கேலிக்குரிய மனிதர்கள் அல்ல,,, மாறாக கொள்கைகளில் தோற்றுப் போன தலைவர்களே உண்மையான கேலிக்குரியர்கள்,,, எம் ஜி ஆரிடம் வலுவான கொள்கைப் பிடிப்பு இருந்திருந்தால் அ தி முக இந்த நேரம் கேலிக்குரிய கட்சியாக கிண்டல்களுக்கு ஆட்பட்டு இருக்காது,, சிவாஜி தான் மரணிக்கும் வரையில் கொண்ட கொள்கையாலேயே உறுதியாக இருந்தவர்,, அதுதானே உண்மையான வெற்றியே தவிர,,, பதவிக்காக ஜெயிப்பது எல்லாம் எவ்வித வெற்றியும் அல்ல,,, ஆட்சி அதிகாரத்தில் காமராஜர் இருந்த போது எந்தவித பதவியையும் அடையும் செல்வாக்கு பெற்றிருந்தவர் சிவாஜி,,, ஆனால் எதையும் விரும்பியதில்லை,, காமராஜரிடம் கேட்டதும் இல்லை,, எதற்காகவும் கையேந்தியதில்லை,, இன்று ஆட்சியதிகாரம் இல்லை என்பதற்காக யாரும் எதையும் பேசிவிட செய்துவிடலாம் என்பது மடமை,,. காலம் திரும்புகிறது,. இவர்கள் ஊழலை உற்று நோக்குகிறது, காமராஜர் போன்ற மஹான்களின் ஆட்சி வராதா என்ற ஏக்கம் மனதை தாக்குகிறது,, இதுவே சிவாஜி அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட கொள்கையின் "வெற்றி" ஆகும்,


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1063
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 159 வது வெற்றிக்காவியம்

    வசந்தமாளிகை வெளிவந்த நாள் இன்று

    வசந்தமாளிகை 29 செப்ரெம்பர் 1972


    10.01.1973
    திரையிடப்பட்ட
    வசந்த மாளிகை
    யாழ்நகர்
    வெலிங்டன்.....208 ..நாட்கள்
    லிடோ...............28......நாட்கள்

    ஓடிமுடிய பெற்ற மொத்த வசூல்
    5.54.419.00
    யாழ்நகரில் முதல்முதலாக 5லட்சத்தை தாண்டிய படம் வசந்த மானிகை
    இரண்டாவதாக 5லட்சத்தை தாண்டிய படம் பைலட் பிரேம்நாத்
    மூன்றாவதாக 5 லட்சத்தை தாண்டிய படம் உத்தமன்


    சாதனையின் சிகரம் சிவாஜி சிவாஜி சிவாஜி








    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1064
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
    * சரஸ்வதி சபதம்*



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1065
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1066
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Sekar Parasuram









    +5





    Sekar K added 9 new photos. · 14 hrs ·


    முகநூலில் ஒரு அன்பர் கேள்வி கேட்டிருந்தார் சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று?
    அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்ன...செய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று.
    1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
    2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
    3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
    4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
    5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
    6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
    7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
    8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
    9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
    10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
    11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
    12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
    13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
    14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
    15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
    16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
    17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம்.
    இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்து இருந்தால் இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களை தெய்வம் மன்னிக்காது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1067
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Sekar Parasuram





    நடிகர் திலகம் பற்றிய செய்திகள், மணி மண்டபம் தொடர்பாக அனைத்து செய்தி சேனல்களும் ஒளி பரப்பி வருகின்றன, அதன் காரணம் இளைய திலகம் அவர்களின் அறிவிப்பு, மற்றும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் திரு சந்திர சேகர் அவர்களின் அரசிற்கு எதிரான கண்டனமுமாகும், அதனால் தான் அனைத்து நடிகர் திலகத்தின் பக்தர்களும் அன்னை இல்லத்தை எதிர் நோக்குகிறார்கள்,
    அதே தருணத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் சமீபத்தில் ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன் ஆகிய படங்கள் 100 நாட்களு...க்கு மேல் ஓடி வெற்றி விழாக்கள் மிகப் பிரமாண்ட அளவில் நடத்தப் பட்டன,
    சமீபத்தில் ஆந்திரா மற்றும் வேலூர் காங்கேய நல்லூரில் திரு உருவச் சிலைகள் மூன்று இடங்களில் நிரு வப் பட்டு கோலாகலமாக விழாக்கள் நடத்தப் பட்டன,
    இவையெல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை,
    ஊடகங்கள் பொறுத்த அளவில் அரசியல் தொடர்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன
    இந்தத் தருணத்தில் இப்போது உள்ள அரசியல் சூழலில் நடிகர் திலகம் பெயரிலான அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைப்பு செய்து இளைய திலகம் அவர்கள் நல் வழி காட்டிடும் பட்சத்தில் ஊடகங்கள் நம்மையே சுற்றும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை,
    ஜெயக்குமார் போன்ற தலை மறைவு அரசியல்வாதிகள் பேசுவதற்கு அஞ்சுவார்கள்,







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1068
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Vasudevan Srirangarajan





    திரு சேரன் அவர்களின் Whatsapp பதிவு[9/30, 6:23 PM] ‪+91 95662 02582‬: தமிழகம் மட்டுமன்றி பிறமொழிகளிலும் வாழும் அத்துணை சிவாஜி ரசிகர்களின் இதயங்களில் உண்மையான மணிமண்டபம் உள்ளது.. யாராலும் அகற்றமுடியாத இடிக்கமுடியாத மணிமண்டபம்... அதுவே உண்மையான மணிமண்டபம்.. சிவாஜியை மக்களுக்கு ஞாபகப்படுத்த அவரின் திரைப்படங்கள் மட்டுமே தகுதியானது போதுமானது.. இந்த மணிமண்டபத்தை பார்த்து என் தலைவன் புகழ் பரவப்போகுது என நினைத்தால் அது முட்டாள்தனம்.. அவரை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் தகுதிகூட அவ...ருக்கே உண்டு.
    [9/30, 6:27 PM] ‪+91 95662 02582‬: கடந்த 15 ஆண்டுகளில் யார் வளர்த்தது அவர் புகழை.. யார் அவருக்காக குரல்கொடுத்து கர்ணன், சிவ்காமியின்செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை எல்லாம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்டது.. வீணர்களே வாயை மூடிக்கொண்டு அமருங்கள்.. உங்க தாத்தாவுக்கே தண்ணி காட்டிய தலைவனுக்கு நீங்க அடையாளம் தர்றீங்கன்னு நினைக்கும்போதே காமெடியாக இருக்கிறது..
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1069
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1070
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •