Page 106 of 400 FirstFirst ... 65696104105106107108116156206 ... LastLast
Results 1,051 to 1,060 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1051
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1052
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1053
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1054
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    27/9/1975 ல் வெளிவந்த படம்.அன்பே ஆருயிரே

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1055
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று (28/9/17)பகல் 2மணி க்கு வசந்த்டிவியில் திருவருட்செல்வர் படத்தை கண்டு மகிழுங்கள்.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1056
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1057
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1058
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan



    கொதித்தெழுந்த சிவாஜி ரசிகர்கள்,


    அன்பு இதயங்களே,
    திருச்சியில் பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் சிவாஜி சிலையை திறக்கச்சொல்லி பலமுறை அரசை வற்புறுத்தியும் திறப்பதற்கான வழி இல்லை. பழைய சாக்கு போட்ட மூடி வைத்திருந்தனர்.
    ... இன்று அதிகாலை திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நமது அன்பு இதயங்கள் ஒன்று கூடி, சாக்கால் மூடிய சிவாஜி சிலை திறப்பை நடத்தி, சிலைக்கு மாலையும் போட்டு விட்டனர்.
    இதை அறிந்த காவல்துறை அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கண்டித்து அனுப்பி விட்டனர். சிலையை திறக்கும் போது பலர் இருந்த போதிலும் காவல் நிலையத்திற்கு 7 பேர் மட்டும் சென்றுள்ளனர்.
    சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி.
    சிவாஜி ரசிர்கள் கொதித்தெழுந்தால் நாடு தாங்காது.
    அன்னை இல்லத்தின் தளபதிகள் காட்டும் அன்பு வழியில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள்.
    வீரமிகு அன்பு இதயங்கள்
    T.சீனிவாசன் பழக்கடை ராஜா R.C.பிரபு
    கறிக்கடை ஜெயராமன் நாராயணசாமி நாகராஜ் ஆகியோரை உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ்ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1059
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1060
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    murali srinivas

    வசந்த மாளிகை ரிலீஸ் நினைவலைகள் - பார்ட் I
    காலத்தால் அழியாத காதல் காவியம். தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன, வருகின்றன இனியும் வரும். ஆனால் வசந்த மாளிகை போன்ற ஒரு படம் வருமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். 29.09.1972 அன்று திரையில் முதன் முதலாக தோன்றி இப்போது 45 வருடங்களை கடந்து செல்லும் அழகாபுரி சின்ன ஜமீன் விஜய் ஆனந்த் அவர்களை முதல் முறை பார்த்த அந்த நாளை பற்றிய எனது நினைவலைகள்.
    வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தத நேரம், வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.
    படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் கதாபாத்திரம் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது
    நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.
    நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது.
    செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
    இந்த தொடரில் பலமுறை நான் மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் ஒரு காட்சியை மட்டும் ஒதுக்கி அந்த ஷோவிற்குண்டான அனைத்து டிக்கெட்டுகளும் மன்றத்திடம் கொடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவது அனைவரும் அறிந்திருக்க கூடும். அன்றைய நாட்களில் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட்டுகள் மன்றத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவை ரசிகர்களுக்கு அல்லது கேட்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். நான் முன்பே குறிப்பிட்டிருப்பது போல் எங்களைப் போன்றவர்களுக்கு இதில் உள்ள மிகப் பெரிய advantage என்னவென்றால் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டாம். அதுவும் தவிர மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. என் கஸினுக்கு மன்ற ஆட்களை தெரியும் என்பதனால் வாங்கி விடுவோம். இந்த டிக்கெட்டுகள் ரீலிசிற்கு ஒரு வாரம் முன்னதாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
    செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் 1972-ல் முதன்முறையாக வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். 72-ல் முதல் படமான ராஜா ஜனவரி 26 ரிலீஸ். அது புதன்கிழமை. அதன் பிறகு வெளியான நான்கு படங்களும் [ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே மற்றும் தவப்புதல்வன்] சனிக்கிழமை வெளியானதால் தானாகவே முதல் நாள் 4 காட்சிகள் என்று ஆகிவிட்டது. ஆனால் இது வெள்ளிக்கிழமை என்பதனால் 3 காட்சிகள்தான் இருக்குமா அல்லது காலைக்காட்சி போடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அன்று 4 காட்சிகள் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட மார்னிங் ஷோதான் ஓபனிங் ஷோ என்பது confirm ஆனது.
    ஸ்கூல் வேறு லீவ் ஆகவே ஓபனிங் ஷோ டோக்கன் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தோம் நமக்குதான் அனைவரையும் தெரியுமே அது மட்டுமல்ல இரண்டு டிக்கெட்டுகள்தானே என்ற நினைப்பில் என் கஸின் சற்று தாமதமாக போய் விட ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் எல்லாம் விற்று விட்டன. அன்றைய நாட்களில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஓபனிங் ஷோவாக இருக்கும். அதற்கு அடுத்த சாய்ஸ் நைட் ஷோ. பிறகு ஈவினிங் ஷோ. கடைசி சாய்ஸ்தான் மாட்னி ஷோ. எவ்வளவு முயற்சித்தும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. மாட்னி ஷோ டிக்கெட் மட்டும்தான் இருந்தது என்பதனால் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். எப்படியாவது ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் தேற்றி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் மார்னிங் ஷோ டிக்கெட் கிடைக்கவேயில்லை. வீட்டருகே நியூசினிமா தியேட்டர் என்பதனால் காலையில் தியேட்டர் பக்கம் போய் பார்த்தோம். பயங்கரமான கூட்டம். தெரிந்தவர்கள் யாரைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கை விரித்து விட்டார்கள். ராஜா, பட்டிக்காடா பட்டணமா தர்மம் எங்கே போன்ற படங்களுக்கு எங்களுக்கு உதவி செய்த அதிர்ஷ்டம் இந்த முறை கை கொடுக்கவில்லை.
    எப்படா 1 மணி ஆகும் என்று காத்திருந்து வீட்டை விட்டு கிளம்பி தியேட்டருக்கு போய் விட்டோம். 1.15 மணி வாக்கில் தியேட்டரின் மெயின் கேட் திறந்து வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க திடீரென்று ஒரு பெரிய கூட்டம் வெளியே வந்து சந்தோஷக் கூச்சலிட பட்டாஸ் வாலாக்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெளியே வருபவர்கள் அப்படியே உற்சாகமும் சந்தோஷமும் துள்ள படம் டாப் என்று ரிசல்ட் சொல்ல (நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல சூப்பர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை) அந்த ஏரியாவே ஜெகஜோதியானது.
    தெரிந்தவர்கள் முகம் தென்பட அவர்களிடம் படம் பற்றி கேட்கிறோம். அந்நேரம் கஸினின் நண்பர்கள் குழாம் ஒன்று படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறது. அதில் ஒருவர் என் கஸினிடம் " காலையிலே எங்கடா போனே? டிக்கெட் எக்ஸ்ட்ரா இருந்தது. சரி உனக்கு கொடுக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ வெளியே போயிட்டேன்னு சொன்னாங்க. தியேட்டருக்கு வந்து பார்த்தேன். உன்னை காணோம். நம்ம பசங்க அவன் (என் கஸின் பெயர் சொல்லி) எப்படியாவது டிக்கெட் வாங்கியிருப்பான்னு சொன்னதனாலே அதை வேற ஆட்களுக்கு கொடுத்துட்டேன்" என்று சொல்ல எத்தனை டிக்கெட்-னு என் கஸின் கேட்க இரண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததுனு நண்பர் சொல்ல எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது நான் விளக்காமலே அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நாங்கள் காலையில் தியேட்டர் போய் டிக்கெட்டுகளுக்காக அலைந்த நேரத்தில் அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரமாகி விட்ட காரணத்தினால் நாங்கள் உள்ளே செல்வதற்கு மெயின் கேட் பக்கத்தில் இருக்கும் சைடு கேட் அருகே சென்றோம். மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் அந்த கேட் வழியாகதான் போக வேண்டும் என்று சொல்லி விட்டதால் அங்கே போய் நின்றோம். கையில் டிக்கெட் இருந்தும் உள்ளே போவதற்கு நாங்கள் பட்ட பாடு?
    நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் குறிப்பிடும் சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.
    டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 45 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
    ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -
    (நாளை தொடரும்)



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •