Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan





    "நடிகர்திலகத்தை பற்றி எழுத்தாளர் சுஜாதா"
    ++++++++++++++++++++++++++++++++++++++++
    சிவாஜி அவர்களை பற்றி எத்தனையோ பேர் சொல்லி அறிந்திருக்கிறோம். சுஜாதா என்ன சொன்னார்? என்பதை அறியுமுன்னர், சுஜாதாவை பற்றி சின்னதான தகவலை தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
    சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் 'அப்துல் கலாம்' சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
    அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்) ,காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும்,
    ஆனந்த தாண்டவம், சைத்தான்(திரைப்படம்)
    பணியாற்றிய திரைப்படங்கள்:
    ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், உயிரே, விசில்,
    கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி, த பாஸ்,
    எந்திரன், வரலாறு, செல்லமே.
    எழுத்தாளர் சுஜாதா இப்படி சொல்லியிருந்தார்... "எனக்கு பிடித்த சிவாஜியின் படங்கள் அவருடைய `அன்னையின் ஆணை.’ அதுபோல `அந்த நாள்’ ஒரு பாட்டில்லாத த்ரில்லர். சிவாஜியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்குள் இருக்கும் மனிதரை கண்டுபிடிக்க எனக்கு அவகாசம் போதவில்லை. சிவாஜியை மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டி நீரோ போன்ற நடிகர்களுக்கு ஈடாகச் சொல்லலாம். அவருடைய இறுதி ஊர்வலத்தில் அழுதவர்கள் கண்ணீரில் உண்மை இருந்தது" என்றார்.
    ஆம் தமிழகத்தில் அண்ணா, காமராஜர்,அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் மறைந்த போது இருந்த கூட்டத்திற்கும் எந்த விதத்திலும் குறைவில்லாத கூட்டந்தான். அவர்கள் ஆண்டவர்கள் அவர்களுக்கென ஒரு பின்புலம் இருந்தது. இவருக்கு எந்த பின்புலமும் இல்லாமலே இவ்வளவு கூட்டம். என்ன ஒன்று அவர்களுக்கெல்லாம் அரசு விடுமுறை அளித்தது. அன்று ஆண்ட முதல்வர் அம்மையார் அது நடவாமல் போனது. ஆழிப் பேரலைகளாக ஜனசமுத்திரம் அழுதுக்கொண்டு போனதை சன் தொலைகாட்சி நேரலையாக ஒளிபரப்பியது. அதன் பிறகு ஊடகங்கள் புகைப்பட பதிவுகளையும் காணொளியையும் இருட்டடிப்பு செய்ததோ என்னவோ... இறுதி ஊர்வலத்தின் பதிவை இணையதளத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை.
    இன்னும்மொரு சின்ன தகவல். சிவாஜி மறைந்த செய்தி குல்மனாலியில் எட்ட அன்றிரவு 11.00 மணியானது அன்று "பூவெல்லாம் உன் வாசம்"
    படப்பிடிப்பில் தல அஜீத் இருந்தார். கேள்விப்பட்டவுடன் கிளம்ப வாகன வசதி ஏதுமில்லை. ஒரு பஸ்கூட இல்லை. அவரே தன்னுடைய காரை டில்லி விமானம் நிலையம் ஓட்டிவந்து சென்னை வந்து சேர்ந்து அவருடைய மனைவி ஷாலினியுடன் சிவாஜி அய்யனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இது அவர் சிவாஜி என்றவருக்கு அவர் அளித்த சாதாரண மரியாதையல்ல. இந்திய நாட்டின் இணையில்லா உலக பெருநடிகருக்கு செலுத்திய உண்ணத மரியாதை. அதன்பின் மறுநாளே குல்மனாலியில் இருந்தார்.
    அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான மனிதர்கள், மெத்த படித்தவர்கள், உலகத்தின் ஞானம் விஞ்ஞான ரீதியாக உணர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், இந்தியாவில் வெகு சிலரே... அதில் சுஜாதாவும் ஒருவர்.
    இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ஹாலிவுட் நாயகர்களுக்கு இணையானதாக இருக்கும். இந்த படத்திற்கு தனிபதிவு நம்மில் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
    1958ல் வெளியான "அன்னையின் ஆணை" படத்தில் ஒருகாட்சியில் சாவித்திரியின் காணமல் போன தன் தந்தையின் உடைகளை தன்வீட்டிலிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறார். தன் கணவர் சிவாஜிதான் தன் தந்தையை ரங்காராவை எங்கோ மறைத்துவைத்துவிட்டார் அல்லது கொன்றுவிட்டிருக்க கூடும் சிவாஜியின் மேல் கோவப்பட்டு சட்டையை பிடித்து உலுக்குவதாக காட்சி. ஆனால் காட்சியில் உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியின் பனியனை பிடித்து உலுக்கும்போது சாவித்திரியின் கைவிரல்களின் நகங்கள் சிவாஜி மார்பையும் பிராண்டி இரத்தம் அதிகமாக பீறிட்டது. அப்போதும் சிவாஜி நடித்துக்கொண்டே டவலினால் சாவத்திரியை அடித்த பின்னர்தான் உணர்வசப்பட்டதிலிருந்து மீண்டார்கள். இப்படியெல்லாம் நடித்திருக்கிறார்கள். இதில் யதார்த்தம் இல்லையா? அதனால்தான் என்னவோ இந்த படத்தையும் சிவாஜியையும் சுஜாதா விரும்பினாரோ என்னவோ...
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •