Page 9 of 400 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #81
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    வாழ்த்துக்கள் சிவா சார்.....


    நன்றி சந்திரசேகர் சார்

    இத்திரியியில் தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கின்றேன் .
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    புன்சிரிப்புடன்கூடிய நடிகர்திலகத்தின்
    அழகிய புகைப்படம் நன்றி சதீஷ்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #83
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    "அவன் தான் மனிதன் "
    நடிகர் திலகத்தை எங்கள் நெஞ்சங்ககளில் சிம்மாசனம் போட்டு அமர வைத்த காவியங்களில் ஒன்று,
    இக்காவியத்தில் ஒவ்வொரு காட்சியும் ஒரு படிப்பினையை கொடுக்கும்,
    நடிகர் திலகத்தை நேசித்தவர்கள் அவரது நடிப்பினால் மெருகூட்டப்பட்ட காட்சிகளை தங்களது இரத்த நானங்களில் தேக்கி வைத்துக் கொண்டனர், அது அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் பயணிக்கும்,
    அதனால் தான் நாங்கள் கட்டுண்டு கிடக்கிறோம், ...
    பிற நடிகர்களின் ரசிகர்கள் இப்படி அமைய வாய்ப்பே இல்லை, அவர்கள் கொண்டாடிய வேகத்தில் மறந்து பிறரை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள், அதன் காரணம் அந்தக் காட்சி அமைப்புகள் அப்படி, ஒருவரால் எத்தனை பேரை அடிக்க முடியும், படம் பார்க்கும் போது உற்சாகம் கரை புரண்டு ஓடும், ஓடிய வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் அதை செயல் படுத்திக் கொள்ள முடியாத ஒன்று, அதனால் அந்தக் காட்சிகள் நிலைத்து நிற்கும் நிலை இல்லை,
    ஆனால் நடிகர் திலகத்தின் காவியங்களில் வரும் காட்சிகள் நிகழ்கால நிஜங்கள், பாசமலரை பார்த்த நடிகர் திலகத்தின் ரசிகன் தங்கைகள் மேல் கூடுதல் பாசத்தை பொழிகிறான், வீரபாண்டிய கட்டபொம்மனை கண்டவர்கள் தாய் நாட்டின் மீது தேச பக்தியை வளர்த்துக் கொள்கிறார்கள்,
    இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,
    சரி நாம் அவன் தான் மனிதனின நெஞ்சை பிழிந்த ஒரு காட்சிக்கு வருவோம்,
    தனது அன்பு மனைவியை இக்கட்டான சூழலில் பிரசவத்திற்காக அனுமதித்து காத்திருக்கையில் டாக்டர் வந்து குழந்தையை காப்பாற்றி விட்டதாகவும் உங்கள் மனைவியை காப்பாற்ற முடியவில்லை என்று சொல்லும் போது ஒரு சைரன் அலரல் சத்தம்
    அதனால் டாகடர் சொல்லியதை சரியாக கேட்க முடியாமல் போனதால்
    What you say என்ற நடிகர் திலகத்தின் அலறல்
    ஆங்கிலம் தெரியாத பார்வையாளர்கள், ரசிகர்கள் ஸ்தம்பித்து போவார்கள்,
    முதன் முதலாக இந்தப் படத்தை எனது 12 வயதில் பார்த்தேன் , அப்போது இந்தக் காட்சி எனக்கு ஏற்படுத்திய தாக்கம் வேறு, இதே காட்சியை எனது 24 வயதில் பார்த்த போது வேறு ஒரு தாக்கம், 33 வயதில, 43 வயதில் என்று நடிகர் திலகத்தின் தாக்கம் நம்மோடு ஒன்றி ஒவ்வொரு நாளும் பயணிக்கிறது.


    (முகநூல் சேகர் பரசுராம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Harrietlgy liked this post
  6. #84
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    குலமகள் ராதை - 2009-ல் எழுதியது.
    இன்றைக்கு சரியாக ஐம்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு (07.06.1963) வெளியான குலமகள் ராதை பற்றி.
    இந்த படத்தின் கதையைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு காதல் கதை. கல்யாணத்திற்கு நாயகி வீட்டில் எதிர்ப்பு. ஊரை விட்டு போய் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் நாயகியை மிரட்டி தேடி வரும் காதலனை அவள் வாயாலே போக சொல்லி பின் தூக்க மருந்து கொடுத்து அவளை தூங்க வைத்துவிட காத்திருந்த நாயகன் கோவித்துக் கொண்டு ஊரை விட்டு போய் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து விட அங்கே முதலாளி மகள் ஒருதலையாய் நாயகனை காதலிக்க, காதலனை தேடி வரும் நாயகி, நாயகன் மற்றும் முதலாளி மகள் இவர்களுக்கிடையே நடந்து முடியும் கிளைமாக்ஸ்.
    அகிலன் எழுதிய வாழ்வு எங்கே நாவலே குலமகள் ராதை திரைப்படமானது.
    இந்த படத்தை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது பார்த்த போது பளிச்சென்று தெரிந்த இரண்டு விஷயங்கள். லாஜிக் மற்றும் இயல்பு தன்மை.
    பொதுவாக படங்களில், தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அது இருக்கிறது. காதலித்து ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடும் போது செய்யும் ஏற்பாடுகளில் லாஜிக் இருக்கிறது. திட்டப்படி காதலி வரவில்லை என்றால் காதலன் தேடி போக மாட்டானா என்ற கேள்விக்கு லாஜிக்கான பதில் இருக்கிறது. திடீரென்று காதலி மறுத்து பேசினால் காதலன் சந்தேகப்பட மாட்டானா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. சென்னையில் காதலனின் அட்ரஸ் எப்படி தெரியும்? பதில் இருக்கிறது. இரண்டாவது நாயகி நாயகனை சந்திப்பதில் லாஜிக். சென்னையில் வேலை, வருமானம் இல்லாமல் ஒருவன் வாழ முடியுமா என்ற கேள்வி வரும் அதற்கும் பதில் இருக்கிறது. அதன் பின் நிகழும் சம்பவக் கோர்வைகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறது. ஒரு வேலை அகிலன் கதையிலே இப்படி தான் எழுதியிருந்தாரோ தெரியவில்லை (படித்ததில்லை). எப்படியிருப்பினும் ஏ.பி.என் அதை அழகாக செய்திருக்கிறார்.
    இரண்டாவது விஷயம் வசனம். ரொம்ப ரொம்ப இயல்பான வசனம். கூடுதலோ குறைவாகவோ இல்லாமல் எந்த இடத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே எழுதியிருக்கிறது ஏ.பி.என்னின் பேனா. ஒரு பெண் தான் காதலிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் போது அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் ஒவ்வொரு பாத்திரமும் தன் நிலையை விளக்கும் போது கொஞ்சம் கூட செயற்கை தன்மை இல்லாமல் இருப்பது சிறப்பு.
    நடிகர் திலகத்தை பொருத்த வரை அவர் ஹேர் ஸ்டைல்(சொந்த முடி) தொட்டு ஒவ்வொரு விஷயமும் இயல்போ இயல்பு. இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது அவரைப்பற்றி அவர் படங்களை பற்றி எந்தளவுக்கு தவறாகவே மதிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு காட்சியிலும் இயல்பான நடிப்பை தாண்டி அவர் எதுவும் செய்யவில்லை. இந்த காலக்கட்டதில் இப்படி ஒரு நடிப்பு வந்திருந்தால், அந்த நடிகர் இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று உயர்வு நவிற்சி செய்திருப்பார்கள்.
    முதல் காட்சியில் கொஞ்சி பேசும் கன்னடத்து பைங்கிளியை மிமிக்ரி செய்வதில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை ஒரே லெவல் மெயின்டெயின் செய்திருக்கிறார். உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு வரும் போது கூட(காதலி வரமாட்டேன் என்று சொல்லும் போது) என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். அது போல் ஊருக்கு திரும்பி போகலாம் என்று சொல்லும் அத்தையிடம் பேசும் இடமும் அப்படியே. காதலி மேல் கோபமாக இருக்கும் அவர் ராதா கல்யாணம் என்ற போஸ்டரை கிழித்து விட, அவரை ஒருவன் துரத்த, திருடன் என்று நினைத்து ஒரு கும்பல் துரத்த, சர்க்கஸ் கம்பெனி கூடாரத்தில் நுழையும் அவரை கூர்கா பிடிக்க அங்கு வரும் தேவிகா கூர்காவை போக சொல்லிவிட்டு எதாவது தேவை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என்று சொல்ல, இந்த மாதிரி காட்சியில் நாயகன் ரோஷம் பூண்டு பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர் அந்த இடத்தில் "அடங்கொப்புரானே! திருடன்னே முடிவு கட்டியாச்சா? விவரம் தெரியாமே ஒருத்தன் துரத்த, விஷயம் தெரியாமே ஒரு கூட்டம் துரத்த, பாஷை தெரியாமே உங்க கூர்காகிட்டே நான் மாட்டிக்கிட, உங்க பங்குக்கு நீங்களும் அட்வைஸ் பண்ணுறீங்களா?".
    காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்ளும் தேவிகா இவர் படித்துக்கொண்டிருக்கும் பாரதி கவிதைகளை வாங்கி தீர்த்தக்கரையினிலே -- என்று படிக்க ஆரம்பித்து, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று படிக்க, இவர் பிடுங்கி வைக்க, ட்ரான்சிஸ்டர் எடுத்து பாடல் வைக்க, அது காதல் பாட்டு பாட அதையும் பிடுங்கி வைத்து விட்டு " சும்மா உட்கார்ந்து வர மாட்டீங்களா?" என்று அவர் சொல்லும் அழகு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவரது அத்தை இவரிடம் லீலாவே தன் ஆசையை உன்னிடம் வெளிப்படுத்தினால் என்று கேட்க எதோ பதில் சொல்வது போல் எழுந்து "போ தூங்கு! அப்புறம் பேசிக்கலாம்" என்று பதில் சொல்வது கிளாஸ். அது போல இமேஜ் பற்றி துளி கூட அலட்டி கொள்ளாதவர் இவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தேவிகா நடிகர் திலகத்திடம் தன் ஆசையை வெளிப்படுத்தும் சீன். "நாம் இருவரும் சேர்ந்து சர்க்கஸ் அரங்கில் நிற்பதை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பாங்கா" என்று தேவிகா கேட்க, அதற்கு நடிகர் திலகம் சொல்லும் பதில் " இவ்வளவு எக்ஸ்ஸர்சைஸ் பண்ணியும் இவ்வளவு குண்டா இருக்காங்களேன்னு நினைப்பாங்க". எந்த நாயகன் சொல்லுவான்? இப்படி நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
    சரோஜாதேவி முற்பகுதியில் அழகு + குறும்பு. அச்சகத்திற்கு வரும் அவரை சிவாஜி ஏன் வந்தாய் என்று கேட்க அவர் வரக்கூடாதா என்று திருப்பி கேட்க இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லுவார். சரோஜாதேவி கிளம்பும் போது நடிகர் திலகம் பக்கத்தில் வர இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லிவிட்டு போவது அவருக்கே உரித்தான குறும்பு. கதையின் போக்கிலே அவரது அந்த குறும்பு தொலைந்து போனாலும் கூட சோகத்தை அடக்கியே வாசிக்கிறார்.
    தேவிகா எப்போதும் போல குறை வைக்காத நடிப்பு. அழகாக இருப்பதிலும் சரி, பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதிலும் சரி தான் ஒரு நல்ல நடிகை என்பதை நமக்கு உணர்த்துகிறார்.
    சிறிது நேரமே வந்தாலும் சந்தியா அண்ணி கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சரோஜா தேவியின் தாயாக கண்ணாம்பா, நடிகர் திலகத்தின் படத்தில் கடைசியாக இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். வேலைக்காரி முனியம்மாவாக வரும் மனோரமா தில்லானா டயலாக் ஸ்டைலை இந்த படத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் மனோகர் நல்லவனாக வர, சாரங்கபாணி வில்லனாக வருகிறார். சரோஜாதேவியின் அண்ணனாக பகவதி ஜஸ்ட் like that வருகிறார். அது போல சர்க்கஸ் முதலாளியாக வி.கே.ஆர். பத்மினியாக வந்து சரோஜா தேவிக்கு உதவி செய்யும் ரோலில் டி.வி.குமுதினி.
    முதலில் சொன்னது போல ஏ.பி.என். வசனங்கள் வெகு இயல்பு. போனஸ் மற்றும் சம்பள உயர்வு கேட்கும் சர்க்கஸ் கோமாளிகள் கூட்டத்தில் தன் வேலையாளும் இருப்பதை பார்த்து விட்டு "உன்னை மாதிரி விஷயம் தெரியாமலே கூட்டம் கூடறவன் நாட்டிலே அதிகமாகிட்டான்" என்று நடிகர் திலகம் சொல்லும் வசனம் அன்றைய சூழலுக்கு எழுதப்பட்டது போலும்.
    இசை மாமா மஹாதேவன். எட்டு பாடல்கள். மருதகாசி மற்றும் கண்ணதாசன்.முற்பகுதி முழுக்க டி.எம்.எஸ். பிற்பகுதி முழுக்க சுசீலா. அனைத்துமே நல்ல பாடல்கள்.
    உலகம் இதிலே அடங்குது - பத்திரிக்கை செய்திகளை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்ணதாசன் கலந்து எழுதிய பாடல்.
    சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா- ஒரே டூயட். மருதகாசியின் வரிகள். நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடை மற்றும் இயல்பான குறும்புகளை பார்க்கலாம்.
    ராதே உனக்கு கோபம் ஆகாதடி- தன் ரோல் மாடல் பாகவதரின் பாடலை டி.எம்.எஸ். பாட கிடைத்த சந்தர்ப்பம். நடிகர் திலகம் இந்த காட்சியில் அழகோ அழகு!
    உன்னை சொல்லி குற்றமில்லை- படத்தின் மிக பெரிய ஹிட் பாடல். தியேட்டரே ரசிகர்களின் அலப்பறையில் அலறும்.
    இரவுக்கு ஆயிரம் கண்கள்- மற்றுமொரு ஹிட் பாடல்.தேவிகா பாடுவது.
    ஆருயிரே மன்னவரே- சரோஜாதேவி, லெட்டர் திரும்பி வந்தவுடன் பாடுவது.
    கள்ள மலர் சிரிப்பிலே- தேவிகா தனி பாடல்
    பகலிலே சந்திரனை பார்க்க போனேன்- மீண்டும் கண்ணதாசனின் வார்த்தை ஜாலம்.
    ஆற்றொழுக்கு போன்ற கதை, தெளிந்த நீரோடை போன்ற பாத்திரங்கள் அதேற்கேற்ற நடிகர்கள், நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு, இவை அனைத்தும் இருந்தும் 07.06.1963 அன்று வெளியான இந்த படம் பெரிய வெற்றியைப் பெறாமல் ஒரு average வெற்றியை மட்டுமே பெற்றது. ஒரு வேளை சினிமாடிக் திருப்பங்கள் எதுவும் இல்லாத கதை என்பதே கூட ஒரு மைனஸ் பாய்ன்டாக இருந்திருக்கலாமோ? இல்லை இந்த கதைக்கு இவ்வளவு பெரிய நடிகர் திலகம் தேவையில்லை என்று நினைத்திருப்பார்களோ? இல்லை வழக்கம் போல் இதற்கு எழுபது நாட்களுக்கு முன்பு வந்த இருவர் உள்ளம், இந்த படம் வெளியாகி 35 நாட்களில் ரீலீஸான பார் மகளே பார் என்று இரண்டு பவர்புல் படங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டது தான் காரணமோ?
    எப்படியிருப்பினும் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போன படங்களில் குலமகள் ராதைக்கும் இடம் உண்டு. பின்னாட்களில் மறு வெளியீடுகளில் வட்டியும் முதலுமாக சேர்த்து வசூலித்தது. ஒரு வாரத்தில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்த சாதனையும் புரிந்தது.
    அன்புடன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #85
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Aathavan Ravi நடிகர் திலகம்-
    ஒரு அதிசயம்.

    ஒன்றேகால் ரூபாய் செலவழித்தவனுக்கு
    உலகத்தின் மிகச் சிறந்த மனப் பரசவங்களைப்
    பரிசளித்த மகா அதிசயம்.

    பிம்பங்கள் உலவிய சினிமாத் திரைகளில்
    உயிருள்ள, உயிர்ப்புள்ள மனிதர்களைக் காட்டிய
    அதிசயம்.

    பாட்டுக் கடலில் வீழ்ந்து மடியவிருந்த ஐம்பதுகளின் தமிழை, வசன சிகிச்சை செய்து
    காப்பாற்றிய அதிசயம்.

    தமிழ் என்கிற அற்புதமான மொழியின்
    விசாலமான அழகை, ஒரு சின்னஞ்சிறு சொல்லுக்குள் காட்டிவிட்ட அதிசயம்.

    தொழிலைத் தவமாகவும், கலையை உயிராகவும்
    கொண்ட அதிசயம்.
    -----------------------------

    நடிகர் திலகத்தின் புன்னகை-
    அதிசயத்தின் அதிசயம்.

    ஓர் பள்ளி விடுமுறைக் காலத்தில், மாமா வீட்டுக்குப் போயிருந்த போது மதுரையில்
    "குலமகள் ராதை" பார்த்தேன்.

    அதில் வரும் இந்த "ராதே உனக்கு" பாடல் எனக்கு
    அநியாயத்துக்குப் பிடித்துப் போனது.

    நடிகர் திலகத்தின் மென்பாடல்கள் மீதான என்
    ஈர்ப்பைத் துவக்கி வைத்த பாடலிது.

    அழகான காதலன்.
    அழகான காதலி.
    அழகான கிண்டல்.
    அழகான கோபம்.
    மீண்டும் அழகான இசைக் கேலி.
    அழகான காதல்.

    மனசு முழுக்க மகிழ்வோடு இருப்பவனை ஒரு புன்னகை கொண்டே நம் முன்னே
    காட்சிப்படுத்துகிற வல்லமை, நடிகர் திலகத்திற்கே வாய்த்திருக்கிறது.

    அபிநய சரஸ்வதியைக் கேலியும், காதலுமாய் துரத்துகிற போது,

    கைபிடித்திழுத்து, முகம் திருப்பி, முகத்தில் முகம்
    பொருத்தி, பாடாய்ப் படுத்தும் போது,

    "உன்னை மணம் புரி...பவன் நானல்லவோ...?" என்று மெலிசான சங்கதியோடு இரண்டாம் முறை பாடும் போது,

    அகலமான நிலைக்கண்ணாடியில் தமது அழகு பிம்பங்கள் தெரிய, காதலியின் உச்சந்தலையில்
    முகவாய் பொருத்தி அழகுறப் பாடும் போது,

    காதலி விலகி ஓட, ஓட்டமில்லாத வேக நடையில்
    ஒயிலாக விரட்டி வரும் போது,

    நடிகர் திலகத்தின் முகத்தோடு ஈஷிக் கொண்டு, விதவிதமாய்க் கதை பேசுகிற அந்தப் புன்னகை...

    அதிசயத்தின் அதிசயம்.

    ஒரு கடமையாக, தன் தொழில் சார்ந்த செயலாக, அந்தச் செயலின் விளைவாக அல்லாமல், நடிகர் திலகத்தின் அந்த அற்புதப் புன்னகையை,
    கடவுள்-ஒரு கலைஞன் வழியே நமக்களித்த பரிசாகப் பார்க்கிறேன்.

    நடிகர் திலகத்தை நேசித்துப் பூஜிக்கும் அத்தனை பேருக்கும் வாழ்வு நெடுக அப்படியொரு புன்னகை நிலைக்க பிரார்த்திக்கிறேன்.


    ராதே உனக்கு கோபம் ஆகாதடி - Radhe unakku kobam aag…: http://youtu.be/Z2LRlbRyCM8
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #86
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #87
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Kulamagal Radhai 1


  11. #88
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Kulamagal Radhai 2


  12. #89
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Kulamagal Radhai 3


  13. #90
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Kulamagal Radhai 4


Page 9 of 400 FirstFirst ... 78910111959109 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •