Page 189 of 400 FirstFirst ... 89139179187188189190191199239289 ... LastLast
Results 1,881 to 1,890 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1881
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1882
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    30 வது வெற்றிச்சித்திரம்

    பெண்ணின் பெருமை வெளியான நாள் இன்று

    பெண்ணின் பெருமை 17
    பெப்ரவரி 1956

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1883
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    240 வது வெற்றிச்சித்திரம்

    சிரஞ்சீவி வெளியான நாள் இன்று

    சிரஞ்சீவி 17
    பெப்ரவரி 1984

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1884
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1885
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1886
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vaannila vijayakumar

    தமிழ்த்திரையில் நடிகர்திலகம் படைத்த சாதனைகள் இன்று ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டாலும், அது மேகங்கள் கூடி சூரியனை மறைப்பதற்கு ஒப்பானதே.
    ஒளிவீசும் வைரம் ஒருநாளும் பூமிக்குள் தங்காது. இன்றல்ல... என்றேனும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
    அய்யனின் அளப்பதற்கரிய தமிழ்ப்பட சாதனைகளில் இருந்து இதோ சிலதுளிகள்...
    மாதத்தின் '31' தேதிகளிலும் அவரின் படங்கள் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் விந்தையினைப் பாரீர்.


    திட்டமிட்டு ஒரு நாயகனை உருவாக்கி, இதுபோல் தேதிதோறும் படங்களை வெளியிட முயற்சித்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை மிகவும் தலைக்கனத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.
    இதோ பார்வைக்காக...

    01:06:1974. தங்கப்பதக்கம் 26W
    02:08:1975. மன்னவன் வந்தானடி H
    03:03.1954. மனோகரா 23W
    04:03:1978. தியாகம் 25W
    05: 09:1969. தெய்வமகன் H
    06:05:1972. பட்டிக்காடா பட்டணமா 26W
    07:12:1972. நீதி H
    08:12:1979 வெற்றிக்கு ஒருவன்
    09:11:1969. சிவந்தமண் 21W
    10:01:1986. சாதனை 19W
    11:04:1975. அவன்தான் மனிதன் H
    12:04:1957. வணங்காமுடி H
    13:04:1960. தெய்வப்பிறவி H
    14: 04:1958. சம்பூர்ண ராமாயணம் 23W
    15:08:1985. முதல் மரியாதை 25W
    16.05:1959. வீரபாண்டிய கட்டபொம்மன் 26W
    17:10:1952. பராசக்தி 42W
    18:07:1964. கைகொடுத்த தெய்வம் H
    19:08:1996. ஒரு யாத்ரா மொழி H
    20:02:1970. விளையாட்டுப்பிள்ளை H
    21:05:1982. தீர்ப்பு 25W
    22:12:1973. ராஜபார்ட் ரங்கதுரை H
    23:11:1962. ஆலயமணி H
    24: 03:1973. பாரதவிலாஸ் H
    25:06:1960. படிக்காத மேதை 22W
    26:01:1983. நீதிபதி 25W
    27:01:1979. திரிசூலம் HH
    28:08:1987. ஜல்லிக்கட்டு H
    29:09:1972. வசந்தமாளிகை 41W
    30:10:1978. பைலட் பிரேம்நாத் HH ( இலங்கையில் அரங்கம் விட்டு அரங்கம் மாற்றி மூன்று வருடங்கள் வரை தொடர்ந்து ஓடிய மாபெரும் வெற்றிக்காவியம்.)
    31:10:1959. பாகப்பிரிவினை 32W
    பின்குறிப்பு: இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி இலக்கைத் தொட்டவை... வெற்றிக்கு ஒருவன் தவிர. அப்படம் மட்டுமே 100 நாட்களை எட்டவில்லை.
    இப்பட்டியலைப் படித்தவுடன் 'இதென்ன பிரமாதம்' என்று ஆராயாதீர்கள். எல்லோர் பட்டியலையும் ஒப்பீடு நடத்தி விட்டுத்தான் இப்பதிவையே பதிவிடுகிறேன்.



    courtesy nadigar thilakaM SIVAJI VISIRIKAL
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1887
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    vaannila vijayakumar

    தமிழ்த்திரையில் நடிகர்திலகம் படைத்த சாதனைகள் இன்று ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டாலும், அது மேகங்கள் கூடி சூரியனை மறைப்பதற்கு ஒப்பானதே.
    ஒளிவீசும் வைரம் ஒருநாளும் பூமிக்குள் தங்காது. இன்றல்ல... என்றேனும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
    அய்யனின் அளப்பதற்கரிய தமிழ்ப்பட சாதனைகளில் இருந்து இதோ சிலதுளிகள்...
    மாதத்தின் '31' தேதிகளிலும் அவரின் படங்கள் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் விந்தையினைப் பாரீர்.


    திட்டமிட்டு ஒரு நாயகனை உருவாக்கி, இதுபோல் தேதிதோறும் படங்களை வெளியிட முயற்சித்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை மிகவும் தலைக்கனத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.
    இதோ பார்வைக்காக...

    01:06:1974. தங்கப்பதக்கம் 26W
    02:08:1975. மன்னவன் வந்தானடி H
    03:03.1954. மனோகரா 23W
    04:03:1978. தியாகம் 25W
    05: 09:1969. தெய்வமகன் H
    06:05:1972. பட்டிக்காடா பட்டணமா 26W
    07:12:1972. நீதி H
    08:12:1979 வெற்றிக்கு ஒருவன்
    09:11:1969. சிவந்தமண் 21W
    10:01:1986. சாதனை 19W
    11:04:1975. அவன்தான் மனிதன் H
    12:04:1957. வணங்காமுடி H
    13:04:1960. தெய்வப்பிறவி H
    14: 04:1958. சம்பூர்ண ராமாயணம் 23W
    15:08:1985. முதல் மரியாதை 25W
    16.05:1959. வீரபாண்டிய கட்டபொம்மன் 26W
    17:10:1952. பராசக்தி 42W
    18:07:1964. கைகொடுத்த தெய்வம் H
    19:08:1996. ஒரு யாத்ரா மொழி H
    20:02:1970. விளையாட்டுப்பிள்ளை H
    21:05:1982. தீர்ப்பு 25W
    22:12:1973. ராஜபார்ட் ரங்கதுரை H
    23:11:1962. ஆலயமணி H
    24: 03:1973. பாரதவிலாஸ் H
    25:06:1960. படிக்காத மேதை 22W
    26:01:1983. நீதிபதி 25W
    27:01:1979. திரிசூலம் HH
    28:08:1987. ஜல்லிக்கட்டு H
    29:09:1972. வசந்தமாளிகை 41W
    30:10:1978. பைலட் பிரேம்நாத் HH ( இலங்கையில் அரங்கம் விட்டு அரங்கம் மாற்றி மூன்று வருடங்கள் வரை தொடர்ந்து ஓடிய மாபெரும் வெற்றிக்காவியம்.)
    31:10:1959. பாகப்பிரிவினை 32W
    பின்குறிப்பு: இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி இலக்கைத் தொட்டவை... வெற்றிக்கு ஒருவன் தவிர. அப்படம் மட்டுமே 100 நாட்களை எட்டவில்லை.
    இப்பட்டியலைப் படித்தவுடன் 'இதென்ன பிரமாதம்' என்று ஆராயாதீர்கள். எல்லோர் பட்டியலையும் ஒப்பீடு நடத்தி விட்டுத்தான் இப்பதிவையே பதிவிடுகிறேன்.



    courtesy nadigar thilakaM SIVAJI VISIRIKAL
    அருமையான தொகுப்பு. innovative imagination - NT ரசிகர்களும் நடிகர் திலகம் போன்று திறமைசாலிகளே!!

    இந்த சாதனையை நமது NT மட்டுமே செய்ய முடியும் என்பதை கர்வத்துடன் சொல்லி பெருமை அடைவோம். நமது NT புகழ் வளரட்டும்.

    நன்றி vaannila விஜயகுமார் மற்றும் சிவா!! தங்களின் சேவை தொடரட்டும்

  10. #1888
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Tamil Hindu on One and only Uththama Puththiran: http://tamil.thehindu.com/cinema/cin...le22770413.ece

    உத்தமபுத்திரன் 60 ஆண்டுகள்: பார்த்திபன் நல்லவன், விக்ரமன் கெட்டவன்

    சிவாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது.


    செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நேரத்தில் படத்தின் உச்சக்கட்டச் சிக்கலுக்குள் அழைத்துச்சென்றுவிடுகிறது இப்படம். முதல் காட்சியிலேயே திரைப்படம் தொடங்கிவிட வேண்டும் என்ற திரைக்கதையின் வெற்றிச்சூத்திரம் சரியாகப் பொருந்திவந்த மிகச் சில தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

    வியப்பூட்டும் அம்சங்கள்

    படத்தில் இடம்பெறும் முதல் பாடல் ஒரு தாலாட்டு. தாய்மாமனின் தவறான வழிநடத்தலில் வளரும் விக்கிரமனையும் அரண்மனைப் பணியாளரின் பொறுப்பில் தலைமறைவாக வளரும் பார்த்திபனையும் அந்த ஒரே பாடலில் அடுத்தடுத்து காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் இன்னமும் ஆச்சர்யப்படுத்துகிறது. அரண்மனை இளவரசன் பொம்மைக் குதிரையில் ஆடிக்கொண்டிருக்கும்போது கானகத்தில் வளரும் அவனுடைய சகோதரன் உண்மையான குதிரையிலேயே பவனிவந்துகொண்டிருக்கும் காட்சியே இரண்டு பேரையும் ஒப்பிட்டுக் காட்டும் ஒரு சிறந்த குறியீடுதான்.

    ‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று ஸ்ரீதர் எழுதிய நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனம் படத்தின் முழுக்கதையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லி முடிக்கிறது. முடிசூட்டும் விழா மண்டபத்துக்கு சிவாஜிகணேசன் நடந்துவரும் காட்சியும் தாய்மாமன் நாகநாதனை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, அவையினரிடம் சம்மதம்தானே எனக் கேட்டு இல்லையா என ஒரே வார்த்தையில் அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமும் இன்னமும் ரசிக்கவைக்கின்றன.

    ‘முல்லை மலர் மேலே’ என்று கனிந்துருகும் காதலும் ‘யாரடி நீ மோகினி’ என்று நடனமிடவைக்கும் கொண்டாட்டமும் ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று காதலின் ஏக்கமும் பாடல்களை இன்னமும் முணுமுணுக்கவைத்துக்கொண்டிருக்கிறது. பாடல்களுக்கான முக்கியத்துவம், படம் முழுக்கத் தொய்வே இல்லாமல் விறுவிறுப்பாக நகர்வது, கவனம் ஈர்க்கும் ஒளிப்பதிவு என்று ஸ்ரீதர் பின்னாட்களில் இயக்கிய படங்களில் இந்தக் கூறுகளைப் பார்க்க முடிகிறது.

    இலக்கியத்தின் வழியாக

    சிவாஜி-பத்மினி- எம்.என்.நம்பியார் என்று திறமையான கலைஞர்களின் நடிப்பும் ஜி.ராமநாதனின் இசையும் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு மேலும் செழுமை சேர்த்தன. எனினும், இந்தப் படத்தின் மையம், உருவத்தில் ஒத்திருக்கும் இரட்டைச் சகோதரர்களின் கதை என்பதுதான்.

    இதே கதை இதே பெயரில் 1940-ல் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடிக்கப் படமாகியிருக்கிறது. பி.யு.சின்னப்பா நடித்த அந்த முதலாவது ‘உத்தமபுத்திரன்’தான் தமிழின் முதல் இரட்டை வேடப் படம். 1929-ல் ஆலன் வான் இயக்கத்தில் வெளிவந்த ‘தி அயன் மாஸ்க்’ படத்தின் தழுவல்தான் அந்தப் படம். அந்தப் படத்துக்கான ஆதாரக் கதை பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் த்யுமா 1850-ல் எழுதிய ‘தி மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற நாவல்.

    பி.யு.சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் சிவாஜி நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் நடுவில் இன்னொரு உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட இன்னொரு தமிழ்த் திரைப்படமும் வெளிவந்தது. அந்தப் படம் 1949-ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’. சிவாஜியின் ‘உத்தமபுத்திர’னில் அவருக்குத் தந்தையாக நடித்தாரே எம்.கே.ராதா. அவர்தான் அபூர்வ சகோதர்களாக நடித்தவர்.

    அந்தப் படத்தின் மூலக்கதையாசிரியரும் அலெக்ஸாண்டர் த்யுமாதான். அவர் எழுதிய தி கார்சிகன் பிரதர்ஸ் நாவலைத் தழுவித்தான் ‘அபூர்வ சகோதரர்கள்’ உருவானார்கள். ஆக, திரைப்படத்தின் வித்தியாசமான கதைகளுக்கும் களங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் இலக்கியமே அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருந்துவருகிறது என்பதற்கு ‘உத்தமபுத்திரன்’ ஓர் உதாரணம்.

    தமிழில் அதன் பிறகு வெளிவந்த உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களின் கதைகளில் எல்லாம் ‘உத்தமபுத்திர’னின் தாக்கம் கொஞ்சமாகவோ முழுமையாகவோ இருக்கிறது. இயக்குநர்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பதைத் தாண்டி ‘உத்தமபுத்திரன்’ ரசிகர்களிடத்தில் உருவாக்கிய தாக்கம்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

    ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ அதே கதையை நகைச்சுவை, சமகால அரசியலோடு சேர்த்துச் சொல்லி வெற்றிபெற்றது. அடுத்த பாகமும் தயாராகிவருகிறது. தழுவல் ஒருபக்கம் இருக்கட்டும், ஒரிஜினல் ‘உத்தமபுத்திரன்’ படத்தின் கதையும் வசனங்களும்கூட இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருத்தமாகத்தானே இருக்கின்றன.

    ‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’.
    Last edited by tacinema; 18th February 2018 at 09:56 AM.

  11. Likes sivaa liked this post
  12. #1889
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    COMMENTS SECTION on Uththama Puththiran from Tamil Hindu:

    Reginald 9115 points
    21 hours ago
    " யாரடி நீ , உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே இந்த இரண்டு பாடலின் காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் ஸ்டைல் ஐ மட்டும் நினையுங்கள் அப்பப்பா அற்புதம் . தாய்மாமனின் திட்டத்துக்கு தெளிவு கேட்பார் சிவாஜி " மாமா பார்த்திபன் என்று நினைத்து யாரேனும் என்னை கொன்றுவிட்டால் , நம்பியார் பதிலளிப்பார் ஆமாம் யோசிக்க வேண்டிய விஷயம் , சிவாஜி : இல்லை அடியோடு மறந்துவிட வேண்டிய விஷயம் . அற்புதமான படம் , ஹெலனின் அருமையான மேலை நாட்டு நடனம் .

    VCS 400 points
    a day ago
    ஸ்ரீதரின் வசனத்திற்கு எடுத்துக்காட்டு:
    "எப்படி வந்தீர்கள்? அரண்மனையில் யாராவது பார்த்திருந்தால் ஆபத்து"
    "பார்த்தவர்களுக்குத் தான் ஆபத்து"


    Sathya Ravi25 points
    a day ago
    " உத்தம புத்திரன் "
    இரு வேறு தோற்றங்களுக்கு அருமையாக ஒப்பனை செய்த ஒப்பனை கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியாது .... நடிப்பில் சிவாஜி அவர்கள் வித்தியாசம் காட்டுவது அவரது தனி பாணி ... நடித்த அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரியது .... ஸ்ரீதர் அவர்களின் வசனங்கள் உயிரோட்டம் ..
    படப்பதிவு மிகவும் அருமையாக இருக்கும் .. ஒரு காட்சியின் கேள்வி ... அடுத்த காட்சியில் விடையாக வரும் ...
    பல முறை பார்த்து வியந்திருக்கிறேன் இந்த படத்தை ... இப்போதும் எனது மனமகிழ் திரைப்படங்களில் இந்த படமும் உண்டு ....

    R. BALAKRISHNAN4160 points
    2 days ago
    இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும் அலுக்காது. சலிக்காது. இரண்டு வேடங்களுக்கும் சிவாஜி அவர்கள் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் 'யாரடி நீ மோஹினி' பாடலுக்கு அவரின் நடனமும் அப்பப்பா..வார்த்தைகளால் சொல்லி மாளாது.

  13. #1890
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    உத்தம புத்திரன் - இது போல் ஒரு படத்தை தமிழ் திரையுலகம் கண்டதில்லை ... இனியும் காணப்போவதும் இல்லை . Nt வெறியர்களை கட்டிப்போடும் படம்.

    மென்மேலும் 100 ஆண்டுகள் காண உத்தம புத்திரனை வாழ்த்துவோம்..... வாழ்வார்!!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •