Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் !

    ஆர்வமாய் எழுதிய என் வலக்கரத்துடன் மறுகரமும் இணைத்து, மனங்குவித்து வணங்குகிறேன்... திரி சார்ந்த நல்லோர்கள் யாவரையும்.

    சென்ற வருடம் நான் துவக்கிய நம் நடிகர் திலகம்
    திரி பாகம் -18 இனிதே நிறைவாகியிருக்கிறது.

    துடிப்பும், வேகமுமாய் அய்யனின் புகழ் வளர்க்கும்
    அன்புக்குரிய கனடா திரு. சிவா அவர்களால் திரியின் பாகம் -19 அற்புதமாய் ஆரம்பமாகியிருக்கிறது.

    இடைவெளியே விடாமல் தொடர்ந்துழைத்து கலை வளர்த்த அய்யனுக்கான அடுத்த திரியும்
    இடைவெளியே இல்லாமல் வேகப்பட்டிருக்கின்றது.

    நெகிழ்வான இத்தருணமே நான் நன்றி சொல்ல
    ஏற்ற தருணம்.

    அய்யனின் நடிப்பில் வந்த அத்தனை காவியங்களுமே ரசிகர்களுக்கு அமிர்தம் என்றாலும், ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏதாவது ஒரு படம் மிகப் பிடித்ததாயிருக்கும்.. எனக்கு "இரு மலர்கள்" போல.

    நெய்வேலியாருக்கு " ஞான ஒளி" போல.

    ராகவேந்திரா சாருக்கு " சுமதி என் சுந்தரி" போல.

    இப்படி அதீதமாய்ப் பிடித்துப் போவதற்கு சொல்லத் தெரியாமல் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.

    அப்படித்தான் எனக்கு திரியின் பாகம்- 18 மிகவும்
    பிடித்துப் போனது.

    யாரேனும் " இரு மலர்கள்" பற்றி சிலாகித்து எழுதும் போது, " என் படம், என்படம்" என்று உள்ளே ஒரு சந்தோஷம் ஓடுமே..? அது போல, திரியில் நல்ல நல்ல பதிவுகளை திரியின் முன்னோடிகள்
    இடும் போதெல்லாம் " என் திரி, என் திரி" என்றொரு சந்தோஷம் என்னுள் பரவியது உண்மை.

    திரி எண் 18 எனக்குத் தந்த கௌரவமும், பரவசமும், உயரங்களும் மறத்தற்கியலாதவை.

    நன்றிகளுக்குரிய திரியின் நெறியாளர் முரளி சார் எனக்களித்த பொன்னான வாய்ப்பிற்கான என்
    புல்லரிப்புகள் 18 ல் தான் ஒட்டிக் கிடக்கின்றன.
    " திரியின் சூப்பர் ஸ்டார்", "கவித் திலகம்" என்று
    அவர் மனமாரச் சூட்டிய மகுடங்கள் 18 ல் தான்.

    எல்லோருக்கும் நெற்றிக் கண் காட்டும் கோபால் சார் என் கண்ணில் ஆனந்த நீர் கொட்ட வைத்த நிகழ்வுகள் 18 ல் தான். " உன்னை என்ன சொல்லிப் பாராட்ட?" என்று அவர் வார்த்தைகள் தேடிய வியப்புகள் 18 ல் தான்.

    " அவரிடம் இல்லாத தமிழ்..
    உதட்டளவில் பேசாத தமிழ்!

    அவரிடம் உள்ள தமிழ்
    உயிரோடு கலந்த தமிழ்!"
    - என்று ராகவேந்திரா சார் என்னைக் குறித்து
    எழுதிய தமிழ் என்னை அழ வைத்தது.. 18 ல் தான்.

    இரு மலர்களில் திடீர்ப் பரீட்சை வைத்த நெய்வேலியார் நான் எழுதித் தேறியதை ஆர்வமாய் அறிவித்ததும், என்னை வாழ்த்தியதும்
    18 ல் தான்.

    பழைய திரிகள் கொண்டாடும் சாரதா என்கிற எழுத்தரசி பண்போடு என்னை வாழ்த்திய நெகிழ்வும் 18 ல் தான்.

    " உங்கள் கவிதைகளைப் படித்தால் நடிகர் திலகத்தோடு தினமும் கலந்துரையாடும் உணர்வு ஏற்படுகிறது" என்று எழுதி அன்பின்
    திரு. K. சந்திரசேகரன் அவர்கள் என்னை மகிழ்வில் திக்குமுக்காடச் செய்ததும் 18 ல் தான்.

    சரியான தருணங்களில் சரியான வார்த்தைகளால்
    என்னைப் பாராட்டிய நண்பர் திரு. செந்தில்வேல்
    அவர்கள் எனக்களித்த மகிழ்வெல்லாம் 18 ல் தான்.

    என் எழுத்துகளில் மிக வியந்து திரு. ஆதிராம் அவர்கள் எழுதியதால் வந்த சந்தோஷம் 18 ல் தான்.

    இன்னும் இதில் நான் குறிப்பிடாத திரி சார்ந்த அத்தனை நல்லியதங்களுக்கும் நான் அனுப்பிய நன்றிகள் 18 ல்தான்.

    என் பகவானைத் தரிசிக்க நான் பயபக்தியோடு
    பாதம் பதித்தது 18 ல் தான்.

    நெஞ்சள்ளும் அய்யனின் படங்களை அள்ளித்
    தந்த அமரர் முத்தையன் அம்மு அவர்களுக்கான
    எனது அஞ்சலி 18 ல் தான்.

    என் பதினெட்டை அர்த்தமுள்ளதாய், அழகானதாய், அருமையானதாய் மாற்றித் தந்த
    நல்லவர்களுக்கான என் நன்றி என்றென்றும்
    இருக்கும்.

    அந்த நன்றிக்குரியவர்களின் ஆத்மார்த்த பங்களிப்பில் திரியின் பாகம் பத்தொன்பதும் சிறக்கும்.

    - நன்றிகளுடன்-
    ஆதவன் ரவி.

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •