Page 174 of 400 FirstFirst ... 74124164172173174175176184224274 ... LastLast
Results 1,731 to 1,740 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1731
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    paravasam nayagnr

    பொம்மை சினிமா பத்திரிக்கை விருது வழங்கும் நிகழ்ச்சியில்...

    எம்ஜிஆா்,
    சிவாஜி கணேசன்
    &
    சாவித்திரி

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1732
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1733
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Edwin Prabhakaran Eddie

    பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதி மதங்களை கடந்த ரசிகர்களே அதிகம்....சிவாஜிக்கு எந்த வர்க்க பின்னணியோ ,சாதி பின்னணியோ கிடையாது,அவரை சாதி மதம் கடந்து தமிழர்கள் நேசித்தார்கள்,(அரசியல் காரணமாக வெறுத்தவர்கள் தவிர)
    தீந்தமிழை வளர்த்தவர்கள், பரப்பியவர்கள் என்ற வகையில் சான்றோர் பலரை நம்மால் சுட்டிக்காட்ட இயலும். ஆனால் அமிழ்தினும் இனிதான தமிழை, தமிழ் மக்களுக்கு உச்சரிக்க கற்றுத் தந்தவர் என்றால் அந்தப் பெருமை சிவாஜி கணேசன் ஒருவரையே சாரும். கலைஞர் க...ருணாநிதியின் கன்னல் தமிழ் வசனங்களை தனது சிம்மக் குரலால் சாஸ்வதமாக்கியவர் சிவாஜி. சராசரி தமிழனின் உயரம்தான் சிவாஜிக்கும். ஆனால் தனது அற்புதமான பாடி லாங்க்வேஜ் மூலம் 6 அடிக்கும் அதிகமாக விஸ்வரூபம் எடுக்கும் திறன் அவருக்கு இருந்தது. ..அதற்கு சிறந்த உதாரணம் .கவுரவம் படத்தில், கண்ணன் என்ற கதாபாத்திரம் நார்மலாக வடிவமைக்கப்பட்டது மாதிரி இருக்கும்.. .ஆனால் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆகவரும் சிவாஜியின் கதாபாத்திரம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்.....நடக்கும் நடையும் . அசைவும் , திமிரும் பார்வையும் ..நிமிர்ந்து நிற்கும் கம்பீரமும் .ஆறடியை தாண்டியதாக உணர்வோம் நாம் , திரையில் பார்க்கும்போது .
    அதே போல்
    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காக ஆசிய- ஆப்ரிக்க திரைப்பட விழாவில் இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் விருதுக்கு சிவாஜி தேர்வு செய்யப்பட்டார். விருதை வாங்க சிவாஜி மேடைக்குச் சென்றபோது, தேர்வுக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர்.....இந்த உடலா இத்தனை உணர்ச்சிகளை ஆற்று வெள்ளமென வெளியே கொண்டுவந்தது என்று .அதுதான் நடிப்பின் இமயம்
    தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய அமைப்பு சிவாஜிக்கு வாய்த்தது. அவர் பராசக்தியில் அறிமுகமாகியபோது கோலிவுட்டில் கதாநாயகர்கள் பஞ்சம். அதை சிவாஜியும், அவரை திரையுலகினரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
    ஆக்ஷன் படம் என்றால் எம்ஜிஆர், காதல் படம் என்றால் ஜெமினி என்று இருந்த நிலையில், தன் மீது எந்த முத்திரையும் விழாமல் பார்த்துக் கொண்டார் சிவாஜி. அதன் காரணமாக சரித்திரம், புராணம், நகைச்சுவை, வில்லன், காதல், குடும்பம் என்று சகலவிதமான ரோல்களில் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அதனுடன் சேர்ந்த ஸ்டைல் அது சிவாஜி அவர்களுக்கே சொந்தம் சூரியன் போல் நடிகர் திலகம் எப்போதும் பிரகாசிப்பார் .







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1734
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vasu Devan




    நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சி
    படம்: தங்கச் சுரங்கம்
    வெளிவந்த ஆண்டு: 1969
    ... தயாரிப்பு: E.V.ராஜன் ('தங்கச்சுரங்கம்' காவியத்தில் கதாநாயகர் நடிகர் திலகத்தின் பெயரும் படத் தயாரிப்பாளர் பெயர் 'ராஜன்'தான்)
    சண்டைப் பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்
    இயக்கம்: ராமண்ணா
    சும்மா பொறி பறக்கும் சண்டைக்காட்சி. படு ஸ்லிம்மாக காலேஜ் மாணவன் போல் நடிகர் திலகம். பாரதியை விசாரணை செய்யும் இடத்தில் பேச்சுக் கொடுத்தபடியே ஒளிந்திருக்கும் எதிரிகளை கண்டு பிடித்து கொடுக்கும் "அட்டாக்"... ஸ்டைலாகவும், லாவகமாகவும் புகுந்து விளையாடும் நம் தங்க ராஜாவின் 'கும் கும்' குத்துக்கள்... சும்மா சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் நிறைந்த நெத்தியடி பைட். ஜேம்ஸ்பாண்டுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வு... புத்திசாலித்தன பிரதிபலிப்பு... வேகம்... விவேகம் என ஒருசேரக்கலந்து கலைக்குரிசில் கலக்கும் கலக்கல் பைட்.
    என்ன ஒரு ஸ்டைலான கலக்கல் டிரஸ்! எதிரிகளை துவம்சம் புரிந்து விட்டு பாரதியிடம் வந்து "மேடம், இதெல்லாம் உங்க ஏற்பாடா?... இவங்கல்லாம் உங்க ஆட்களா?...எப்படி நம்ம விளையாட்டு! (இந்த இடத்தில் அவரது முகத்தில் பொங்கி வழியும் அந்தப் பெருமையைப் பார்க்க வேண்டுமே!) இப்பவாவது உண்மையை சொல்லுங்க,"... என்று கைகளில் உள்ள கிளவுசைக் கழற்றிய படியே ஷர்ட் பாக்கெட்டிலிருந்து 'தம்' மை எடுத்து, படு ஸ்டைலாக வாயில் வைத்து, மேட்ச் பாக்ஸை எடுத்து, பாரதி அணிந்துள்ள மேலாடையின் பின்புறமுள்ள கொக்கியில் வத்திக்குச்சியை உரசி சிகரெட்டை பற்ற வைக்கும் அந்த அட்டகாச அமர்க்கள ஸ்டைலை என்னவென்று சொல்வது! ஸ்டைலில் எல்லோருக்கும் 'அப்பன்' அல்லவா அவர்! அனைத்து நடிகர்களுக்கும், ஏன் அனைத்து மனிதர்களுக்கும் 'ரோல் மாடல்' நடிகர் திலகம் தானே!
    இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக இதோ





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1735
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Selva Kumar




    கேட்டவரெல்லாம் பாடலாம்...என்
    பாட்டுக்குத்தாளம் போடலாம்...!!!
    கே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும்.
    திருலோக் சிச்சுவேஷனைச் சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.
    முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.
    அப்போது கண்ணதாசன் கோபத்துடன் “விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே” என்று சொல்ல எம்எஸ்வி முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.
    “சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.
    அப்போது வாசலில் “சார்..போஸ்ட்” என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து “யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு” என்றார். “அவனை எதுக்கு கூப்பிடுறீங்க?” என்று பாலாஜி கேட்க “பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்” என்றார்.
    போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் “தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?” என்று கேட்க “சரி, சொல்லுங்க சார்” என்றார்.
    “இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்” என்று சொல்லி விட்டு “விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு” என்று சொல்ல எம்எஸ்வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் “சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்” என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.
    “ரொம்ப நன்றிப்பா” என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.
    புன்னகையுடன் பாலாஜியைப் பார்த்தார் இயக்குனர். “பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்” என்றார்.
    அப்போது கண்ணதாசன் “விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா” என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார்.
    கேட்டவரெல்லாம் பாடலாம்
    என்பாட்டுக்கு தாளம் போடலாம்
    பாட்டினிலே சுவையிருக்கும்
    பாவையரின் கதையிருக்கும்
    மனமும் குளிரும் முகமும் மலரும்
    ஓ….ஓ….ஓ….ஓ…ஓஓஓஓஓஓஓஓ
    பாடல் அருமையாக அமைந்ததுடன், 1967 ல் டாப் டென் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
    ஒரு பொதுஜனப் பிரதிநிதி தேர்ந்தெடுத்த மெட்டு இது.
    இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இது போல நாலைந்து ட்யூன்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, எம்எஸ்வி அவர்களைப்பார்த்து கவிஞர் கண்ணதாசன் “விசு, வாசல்லே யாராவது போஸ்ட்மேன் வர்ரானா பார்” என்று கிண்டலடிப்பார்.





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1736
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Balasubramanian bk

















    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1737
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Paravasam nayagan

    நடிகர் திலகமும், அவரது நாடகக்கலை ஆசான் சக்தி கிருஷ்ண சாமியும் கோயில்பட்டியில் ஒரு நாடகம் முடித்துக்கொண்டு திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருக்கிறாா்கள். வழியில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு ஊா் வருகிறது.
    சிவாஜியின் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி போகிறது.
    திருச்சியில் சிறுவயதில் தான் பாா்த்த கட்டபொம்மு தெருக்கூத்து. எந்த கூத்தை பாா்த்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நாடக உலகத்துக்குள் நுழைந்தோமோ அந்த கட்ட பொம்மனின் வரலாற்றை நாடகமாக செய்தால் என்ன எனும் எண்ணம் கொ...ப்பளிக்க தொடங்கியது.
    தன் ஆசையை ஆசானிடம் சொன்னாா்.
    சக்தியும் ஒப்புகொண்டாா்
    ஒரே மாதத்தில் நாடக திரைக்கதையை தயாரித்து சிவாஜியிடம் ஒப்படைத்தாா்.
    நாடகத்தில் இருந்த புதுமையான திரைக்கதை அமைப்பும், தரம் வாய்ந்த வசனங்களும் சிவாஜியை வெகுவாக கவா்ந்தன.
    உடனடியாக சிவாஜி நாடக மன்றத்தை உருவாக்கினாா்.
    மொத்தமாக ரூ.50,000 செலவானது.
    1957ம் ஆண்டு ஆகஸ்டு 28ம்தேதி, சேலத்தில் பொருட்காட்சியில் வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகம் அரங்கேறியது.
    நாடகம் மாபெரும் வெற்றி.
    அடுத்தடுத்து நாடகம் பல ஊா்களிலும் அரங்கேறியது.
    நான்கே வருடங்களில் நூறுமுறை அரங்கேறும் அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றது.
    100 அரங்கேற்றங்கள் முடிந்த பின்பு வசூலித்த தொகையை கணக்கிட்டு பாா்த்த சிவாஜிக்கு நம்பவே முடியவில்லை.
    மொத்த வசூல் ரூ.32 லட்சங்கள். மிகுந்த மகிழ்ச்சியடைந்தாா்.
    அந்த முழுத்தொகையையும் தமிழகம் முழுவதிலுமுள்ள பல பள்ளிகளுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டாா்.
    வரி கட்ட மறுத்த கட்டபொம்மன்
    வாரி வழங்கும் நடிகர் திலகமாக மாறினாா்....!





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1738
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram


    விடுமுறை நாள் கொண்டாட்டம்,

    HOLIDAY SPECIAL

    தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுவதில் வேறு எந்த ஒரு நடிகரின் திரைப்படங்களும் இத்தனை இடம் பிடிக்க முடியாத ஒன்று,

    நடிகர் திலகத்தின் சரித்திர சாதனை நிகழ்த்திய காவியங்கள் இன்று

    தங்கப் பதக்கம்,

    திரிசூலம்,

    கௌரவம்,

    அவன் ஒரு சரித்திரம்,

    புண்ணிய பூமி...

    என நம்மை திகப்பில் மூழ்கடிக்கிறது!!

    பிற்பகல் 1:30 க்கு கேப்டன் டிவியில்- புண்ணிய பூமி,

    பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்-- அவன் ஒரு சரித்திரம்,

    பிற்பகல் 2:00 மணிக்கு ஜெயா டிவியில்-- தங்கப் பதக்கம்,

    இரவு 7:00 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்-- திரிசூலம்,

    இரவு 10:00 மணிக்கு ஜெயா மூவியில்-- கௌரவம்,





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1739
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sundar rajan


    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    தேசியம், தேசத்திற்காக, தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர்களை நம் முன் நிறுத்தி இன்றளவும் அவர்களின் பெருமையை இன்றைய தலைமுறையினரும் உணர வைத்துக் கொண்டிருப்பவர் நமது நடிகர்திலகம் அவர்கள்,
    சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாட தகுதி பெற்றவர்கள் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள், மற்ற இயக்கத்தினர் இந்த நாட்களைக் கொண்டாட மறந்தாலும், நம் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும், சுதந்திரதினம் மற்றும் குடியரசுத...ினத்தன்று நிகழ்ச்சி நடத்திக் கொண்டாடுவார்கள்.
    இந்தக் குடியரசுதின விழா மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பு இதயங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
    ஆம், அன்பு இதயங்களே
    வரும் 26.01.2018,வெள்ளி முதல் குடியரசுதினத்தை முன்னிட்டு, மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியம் பாவமன்னிப்பு வெளியாகிறது.
    இந்த ஆண்டின் மதுரையில் வெளியாகும் நடிகர்திலகத்தின் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெறுகிறது பாவமன்னிப்பு,
    அன்பு இதயங்களே, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு தயாராவீர்.......

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1740
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •