Page 53 of 400 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #521
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Dinathanthi - 06-07-2017




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan

    பழைய படங்கள் டிஜிட்டலில்
    வந்தால் பிரமாண்டம் அல்ல
    நடிகர்திலகம் இருந்தால்
    அது தான் உண்மையான பிரமாண்டம்.
    ... மக்கள்தலைவரின் எங்கமாமா
    மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #523
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Selvaraj Fernandez


    ஒரு முறை நடிகர்திலகத்தின் முதல் கதாநாயகி நம் பண்டரிபாய் அவர்களுக்கு எதிர்பாராமல் பணத்தேவை ஏற்பட்டது .அவர் நம் நகர்திலகத்திடம் சென்று கேட்டபோது நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி பண்டரிபாய் அவர்கள் வீட்டுக்கு இனாமாக கொடுத்து உதவினார்..நடிகர்திலகம் அவர்கள் எதற்கும் விளம்பரம் தேடிக்கொள்வதில்லை .பள்ளிக்கூடங்கள் , கோயில்கள், திருமணங்களுக்கு விளம்பரம் தேடாமல்;உதவி செய்தவர்.வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் பல உதவிகள் செய்த வள்ளல் நம் நடிகர்திலகம்.5000 ரூபாய் கொடுத்துவிட்டு 5 லட்சம் என்று விளம்பரம் தேடியவரல்ல நம் நடிகர்திலகம் .வாழ்க அவர் புகழ் .தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற மனித உருவில் நம்மோடு வாழ்ந்த மஹான் காமராஜ் அவர்களின் அனைத்துசிலைகளையும் தனது சொந்த பணத்தில் விளம்பரம் தேடாமல் நிறுவிய உத்தம புத்திரன் நமது நடிகர்திலகம்..மதிகெட்ட அறிவிலிகள் எதை வேண்டுமானாலும் கூறட்டும்..கூறிக்கொண்டே அழியட்டும் .
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #524
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    S V Ramani






    "அவர் ஒரு சரித்திரம்" = 012.
    அன்பார்ந்த சிவாஜி ரசிகர்களுக்கு, இன்றைய விருந்து, ஞான ஒளி படத்திலிருந்து "தேவனே, என்னைப் பாருங்கள்" பாடல் காட்சி.
    தான் குற்றவாளி அந்தோணி என்ற சந்தேகத்தில் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தன்னையே சுற்றி சுற்றி வருவதால் மனக் குழப்பம் அடைகிறார் அருண். (எல்லாமே தலைவர்தான்) அவரால் தனது ஆசை மகளிடம் அன்புடன் பழக முடியவில்லை. அப்போது தான்தான் அந்தோணி என்று தெரிந்துவிடுமே என்று. இந்நிலையில் எங்கு நோக்கினும் இன்ஸ்பெக்டரின் உருவமாகவே தோன்றுகிறது தலைவருக்கு. முதலில் மன உளைச்சலுக்கு ஆளாகி, பிறகு கண்ணை மூடி அமைதி பெறுகிறார். அந்த அமைதியுடன் ஏசுபிரானின் திருவுருவச் சிலைக்கு அவர் நடந்து வரும் அழகுதான் என்ன. ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு நடை வைத்துள்ளார்.
    தேவனின் சிலைக்கு அருகில் வந்ததும், கண்களையும் தலையும் சிறிது தாழ்த்தி, பின் உயர்த்தி, தேவனிடம் மன்னிப்புக் கூறும் வகையில் பாடத் துவங்குகிறார்.
    "தேவனே, என்னைப் பாருங்கள்
    என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் "
    பாடும்போது அவர் முகத்தில் என்ன ஒரு அமைதி. பிறகு குரலை சிறிது உயர்த்தி
    "ஆயிரம் நன்மை தீமைகள், நாங்கள் செய்கின்றோம்
    நீங்கள் அறிவீர், மன்னித்தருள்வீர் "
    என்று இரு கைகளையும் விரித்து அடைக்கலம் கேட்பது போல ஒரு பாவனை. இது அவருக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது. பாத்திரத்தை நன்கு உள்வாங்கி பாத்திரமாகவே மாறிவிடுவதால் அவர் நடிக்க அவசியமில்லாமல் போய் விடுகின்றது. இதை மற்ற நடிகர்கள் உணர்ந்தாரில்லை.
    "ஓ மை லார்ட், பார்டன் மீ" கடவுளிடம் மன்னிப்பு கேட்கும்போது உரத்துக் கேட்கிறார் (அவருக்குக் கேட்கவேண்டுமென்றா?)
    "உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன"
    ஆஹா, என்ன ஒரு நடிப்பு இந்த ஒரு வரிக்கும்! 10 அடி நடந்து சென்று கையை உயர்த்தி திசைகள் மாறியதை குறிக்கும் இடம். நடிப்பின் அகராதி. இந்த இடத்தில சும்மா நின்று கொண்டே மற்றவர்கள் போல் நடித்திருக்கலாம். ஆனால் அவரது தொழிலமீது ஈடுபாடு அவ்வளவு. தான் ஆடாவிட்டாலும் அவரது சதை ஆடிவிடும்.
    பிறகு "இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே" என்று இரண்டு கைகளையும் இணைத்து வணங்குவது போல் வைத்து, கழுத்தைக் குறுக்கி ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார் பாருங்கள். நமது மனமும் கூடவே ஏங்குகின்றது.
    இங்கு FLASH BACK ல் அவர் தன் மகள் வீட்டிற்கு செல்வதைக் காண்பிக்கிறார்கள். அவரது மகள் சாரதா (மிகச் சரியான தேர்வு) வந்திருப்பவர் பெரிய மனிதர் என்று அவரை வணங்கி வரவேற்று அமரச் சொல்லும்போது "என்னைத் தெரியல" என்று கேட்கும் ஆர்வம்! சிவாஜி ரசிகர்கள் மட்டுமே உணரக் கூடிய முகபாவனைகள். அவ்வளவு துல்லியம். சாரதா இல்லை என்று சொன்னவுடன், தான் அந்தோணியாக இருந்தபோது, இடது கையால் தோளை இருமுறைத் தட்டி பேசுவது போல் தட்டிக் காண்பிக்க, புரிந்த சாரதா ஒரு கணம் மகிழ்ந்து, மறுநொடியில் வாசலில் இன்ஸ்பெக்டர் நுழைவதைப் பார்த்தவுடன், வாங்க இன்ஸ்பெக்டர் என்று அவரை வரவேற்பது போல் சிவாஜிக்கு அவர் வருகையை உணர்த்துகிறார். உடனே தலைவர் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு ஒரு செருமு செருமுவார். அபாரம். இந்தக் காட்சி மொத்தம் 20 வினாடிகளுக்கு குறைவே, அதில் இத்தனை முகபாவங்கள். நாம் கொடுத்து வைத்தவர்கள்.
    இப்போது
    தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
    செய் மனதிலும் நினைவுகள் மௌனமோ
    காயம் உடலிலா மனதிலா தேவனே
    நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே .ஓ....ஓ.....ஓ....ஓ
    இவ்வரிகள் விரைவான இசையமைப்பிற்கேற்ப என்ன ஒரு விரைவான நடை, மனதில் உள்ள தளர்ச்சி, நடையில் இல்லை, ராஜ நடை.
    நான் அழுவதா சிரிப்பதா என்ற இடத்தில் அவரது முத்திரை கையசைப்பு, தோள்களைக் குறுக்கி பின் கையிரண்டையும் அகல விரிப்பது. கோடி முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று.
    இப்போது மான்களும் சொந்தம் தேடுமே எனும்போது அவர் கழுத்தை அசைத்து காட்டும் பாவனையைப் பாருங்கள், அன்னையிடம் குழந்தை கெஞ்சுவது போல்.
    "மான்களும் சொந்தம் தேடுமே
    இம்மானிடன் செய்த பாவம் என்னவோ
    காவலே சட்ட வேலியே,
    உன் தாய்மையில் பிள்ளைப் பாசம் இல்லையோ"
    செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது
    சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
    தேடித் கொண்டாடிட உறவினர் நண்பர்கள் "
    என்று ஒரு அலட்சிய நடை நடந்து, பின்
    "ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்"
    என்று கழுத்தை அலட்சியமாக அசைத்து
    "NO PEACE OF MIND"
    என்று கூறி கண்களை மூடி வேதனையை வெளிப்படுத்துகிறார், அடடா, என்ன ஒரு பரிதாபம்.
    அடுத்து
    "கேள் தருகிறேன் என்றதே நீயன்றோ
    நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
    என் கருணையே திறக்குமா சன்னதி
    என் கர்த்தரே பிறக்குமா நிம்மதி ஓ....ஓ.....ஓ....ஓ
    "என்கருணையே என்ற இடத்தில கையை விரித்துப் பாடிக் கொண்டிருப்பவர், ஒரு சுற்று சுற்றி கோவிலின் வாயிலருகே வரும் லாவகம்,
    பிறகு "O LORD, PLEASE ANSWER MY PRAYER"
    என்று கைகளை மார்புக்குக் குறுக்கே இணைத்து ஒரு பாவனை செய்யத்தான் வேண்டுமா? அதுதான் நடிகர் திலகம்'
    பின்
    "கண்களில் கண்ணீர் இல்லையே" என்று பாடும்போது மூடியிருந்த கண்களை திறந்து சிறிது தலை சாய்த்து
    "இந்த உள்ளமும் அதைத் தங்கவில்லையே" எனும்போது, அது வரை தான் அனுபவித்த முழு வேதனையையும் அந்த ஒரு கணத்தில் வெளிப்படுத்துகிறார்.
    "கொண்டு வா, இல்லை கொண்டு போ" எனும்போது வான் நோக்கி உயரும் அவரது வலக்கை, வெகு இயல்பாக
    "உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்" எனும்போது கீழிறங்கி இடக்கையுடன் சேர்ந்து வணங்கும். ஒரு துளி செயற்கை இல்லை.
    "முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
    ஆணி அடித்தது சிலுவை அறைந்தது
    அன்று நடந்தது ஆவி துடிக்குது
    இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது'
    என்று சிலுவையிலுள்ள தேவன் முன் மண்டியிட்டு "தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்" என்று சிலுவைக் குறியிட்டு வேண்டுவதுடன் பாடல் நிறைவுறுகிறது.இதில் பங்கு பெற்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. சிவாஜி போலவே டி எம் எஸ் பேசியிருப்பது மிகுந்த ஆச்சரியம். இவ்வாய்ப்பை அவர் கேட்டு வாங்கி கொண்டார். தலைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்து அதற்கு சம்மதித்தார். கவியரசரின் எளிய வரிகள், கிருஷ்ணனாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவாக இருந்தாலும் சரி, அவருக்கு எல்லாரும் பரம்பொருளே மெல்லிசை மன்னரின் இசை எதிர்பார்ப்பிற்கும் மேல் சிறந்ததாகவே அமைந்துள்ளது, அவர் விரல்களில் சரஸ்வதிதான் குடியிருக்கிறாள்.
    ஆனாலும் அனைவரையும் மீறி நம் மனதில் நடிகர் திலகம் மட்டுமே நிற்கின்றார் என்றால் அவரது நடிப்பின் ஆளுமை அத்தகையது. பரம்பரை பணக்காரர் கூட இவ்வளவு மிடுக்குடன் இருக்க முடியாது.
    வாழ்க நடிகர் திலகம். வளர்க அவரது கலை
    ஜெய் ஹிந்த்!

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #525
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain

    எம் கே டி,, பி யூ சி போன்றோர்கள் தங்கள் குரல்களிலேயே பாடி நடித்த காலங்கள்,,, பத்து இருபது பாடல்கள் இருந்தாலும் எல்லாமே ஒன்று போல இருக்கும்,,, குரல் வித்தியாசம் இல்லாமல் வசனங்களை ராகம் போட்டு இழுத்து வருவது போல தோன்றிய காலகட்டத்தில் சிவாஜி வருகை,,, ஆண்மை நிறைந்த குரல் வசனம் உச்சரிக்கப் பயன்பட்டது,, பாடல்களுக்கு சி எஸ் ஜே முதற்கொண்டு எஸ் சி கிருஷ்ணன் வரை வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டது,, டி எம் எஸ் வருகைக்குப் பின் மொத்தமும் புரட்டிப் போடப்பட்டது,,, பாடலின் தன்மைக்கு ஏற்ற...வாறு அவரே குரல்களில் வித்தியாசங்களை அறிமுகப் படுத்தினார்,, சிவாஜிக்கும் எம் ஜி ஆருக்கும் குரல் வித்தியாசம் காட்டினார்,, அதிலும் பிரத்யோகமாக சிவாஜிக்கு சோகப் பாடல்களுக்கு ஹாஸ்ய பாடல்களுக்கு டூயட் பாடல்களுக்கு மற்றும் இதரவகை பாடல்களுக்கு என்று விதவிதமான குரல்களில் தனியாவர்த்தனம் செய்தார்,,, அதுபோக 70களில் எஸ் பி பி ஜேசதாஸ் போன்றோரும் 80களில் வாசுதேவனும் சிவாஜி பாடல்களை ஷேர் பண்ணிக் கொண்டனர்,, அத்தனை பாடகர்களுக்கும் சளைக்காமல் எத்தனை எத்தனை விதமான லிப் மூவ்களை கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது,,,
    பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன்கூட சிவாஜிக்கு பாடியிருக்கிறார்,,, புதிய பாடகர்களிடம் அவர் அறிவுரைப்பது ஒன்றுதான்,, எனக்காக உங்கள் குரல் மாற்றி பாட வேண்டாம்,,, இயற்கையான உங்கள் குரலில் பாடுங்கள்,,, அதற்கேற்றவாறு நான் வாயசைத்துக் கொள்கிறேன் என்பார்,,, திரையில் காணுமபோது அச்சு அசலாக குரலுக்கேற்ற லிப் மூவ்மெண்ட் இருக்கும்,,, கதாபாத்திரங்களை மட்டுமே அவர் கற்பனை வார்க்கவில்லை பாடல்களிலும் பாடகர்களிடமும் அவர் தனது கற்பனைக்கு ஏற்றவாறு தன் பக்கம் திருப்பிக் கொண்டவர்,,, எத்தனையோ பாடலாசிரியர் பாடல்களில் அவர் நடிதது இருப்பினும் அந்தந்த வரிகளுக்கு ஏற்றவாறு தன் உடல் மொழியை பயனபடுத்தியவர்,,,
    பாடல்களுக்கு சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும்.
    அத்தனைத் துல்லியம், அத்தனைப் பொருத்தம், அத்தனை கனகச்சிதம், அத்தனை உணர்வுபூர்வம்.
    இதனை வெறும் வாயசைப்பு என்று மட்டும் பார்க்கமுடியாது.
    பாடலின் வரிகள் உணர்த்தும் உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நிறுத்தித்தான் வாயசைப்பார். அதற்கேற்ப உடல் அசைவுகளில் உடல்மொழி வெளிப்படும்.,
    கண்கள் பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயாராகிவிடும்.
    பாடலின் வரியில் உச்சகட்ட சோகத்தை வெளிப்படுத்தும் வரிகள் வரும்போது வெளியேறுவதற்காக அவர் கண்களில் சில சொட்டுக் கண்ணீர் தயாராகக் காத்திருக்கும். கவிஞர்களின் எந்த வரிக்கு அந்தக் கண்ணீர் கண்களிலிருந்து இறங்கி கன்னத்தில் வழிய வேண்டுமென்பது அந்தக் கலைஞனுக்குத் தெரியும்.
    பாடலில் அந்த வார்த்தை வரும்போது அந்தக் கண்ணீர் சட்டென்று கண்களிலிருந்து இறங்கி கன்னத்தின் வழியே சரசரவென்று வழியும்.
    வசன உச்சரிப்புகளை மட்டுமே சிலாகித்து வந்த நமக்கெல்லாம் அவர் பாடல் வரிகளுக்கு ஏற்றது போலவும் பின்னணி இசைக்கு இணையாகவும் நடித்ததும் வரலாற்றில் பதியம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்,,,

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #526
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vasu Devan

    முரளி சார்,
    'அன்னையின் ஆணை' பதிவு கண்டு அகம் மகிழ்ந்தேன். இப்படத்திற்கு அதிகம் யாரும் விமர்சனம் தராத நிலையில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் முகநூல் நண்பர்களுக்கு தாங்கள் அளித்திருக்கும் இந்தப் பதிவு பிரமாதம்.
    தங்களின் பதிவிலேயே இந்தப் பதிவை பின்னூட்டமாக இட முயற்சி செய்யும்போது 'Try Again Soon Sorry, there's a temporary problem with this post. Please try again in a few moments' என்று வருகிறது. எனவே இதை பின்னூட்டமாக இட முடியாத நிலையில் தனிப் பதிவாக இட வேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும். ஒருவேளை சற்று நீள்பதிவாய் இருப்பதால் பதிவிட இயலாமல் போய் விட்டதோ என்னவோ! .
    இந்தப் படம் அவரது மிகச் சிறந்த விசேஷமான படங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. காட்சிகளும், நடிப்பும் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கும். இதெல்லாம் மிகப் புதிது அப்போதய காலத்திற்கு. அதையெல்லாம் மீறி ஒப்பற்ற பிரம்மாண்ட நடிப்பால் அப்போதைய மக்களின் ரசனை உணர்வை அதிகமாக வளர்த்து விட்டார் நடிகர் திலகம்.
    பழிவாங்கும் மகன் கணேஷ் ரோல் மிக ஸ்டைலிஷாக அமைந்தததால் சிறிது நேரமே வந்து மரணத்தைத் தழுவும் அப்பா சங்கர் பாத்திரம் அதிகம் பேசப்படவில்லை. மிகப் பரிதாபமான தந்தை பாத்திரம். அதிலும் அருமையாக கண்ணாடி அணிந்த கனவான், கண்ணியவான் சங்கரின் புகைப்படம் நம் ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பெற்றது.
    நீங்கள் குறிப்பிட்டது போல படத்தின் ஆரம்பத்தில் வரும் பரிதாபப் பாடல் 'கொல்லாதே இது போலே'காட்சி அமைப்பு நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். அந்தப் பிச்சைக்காரர் நடிகர் டி.கே.சண்முகத்தை ஞாபகப்படுத்துவார்.
    அசோகச் சக்கரவர்த்தியைப் பற்றியெல்லாம் ஒரு யுகம் ஆனாலும் எழுதி மாள முடியாது. அதிலிருந்து மீளவும் முடியாது. புருவங்களே கத்திகளாய் நடிப்பு யுத்தம் செய்யும்.
    'உலகப் புகழ் பெற்ற மார்லன் பிராண்டோ கூட கணேஷைப் போல் நடிப்பது கஷ்டம்தான்' என்ற முரசொலி மாறனின் வசனத்தை சந்தானம் மேடையில் பாராட்டாய் படிக்கும் போது ஒவ்வொரு ரசிகரும் அடையும் புளகாங்கிதத்தையையும், பெருமையையும் அளவிடவே முடியாது. மாறனின் பாராட்டு என்றும் மாறாத பாராட்டாகி விட்டது.
    தாய் பண்டரிபாய் மகன் நடிகர் திலகத்திடம் குடும்பம் ரங்காராவால் சிதைந்த பிளாஷ்பேக் காட்சி மறக்க முடியாததுதான். சங்கர் ஊருக்கு சென்றவுடன் காம வெறியுடன் கௌரியின் படுக்கை அறையில் நுழையும் ரங்காராவை சமாளிக்க பண்டரிபாய் சம்மதம் அளிப்பதாக நாடகம் ஆடும் போது கண்ணாடி பார்த்து மேக்-அப் போடுவார். அப்போது 'பராசக்தி'யின் 'ஓ...ரசிக்கும் சீமானே' பாடலின் மியூஸிக்கை பின்னணியில் ஒலிக்க வைத்திருப்பது நம்மை உரக்க 'சபாஷ்' போட வைக்கும். அருமையான டைமிங் சென்ஸ்.
    சங்கர் நடிகர் திலகம் திரும்பி வந்து நடந்ததைக் கேட்டு கொந்தளித்து, ரங்காராவிடம் 'ஊரான் மனைவியிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்தாயா?...தாய்க்கும், தாசிக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலையே' என்று ஆங்காரப்படுவது அபாரம்.
    'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை' பாடலில் சிலையாக அமர்ந்தபடி கண்ணீர் விட்டு நம்மையும் கண்ணீர் விட வைக்க திலகத்தை விட்டால் யார்?
    சாவித்ரியின் வேதனை நிலைகளுக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில் அருமையான முகபாவங்கள் காட்டுவார். ஆனால் 'வேறு வழி இல்லையே' என்ற நிலையும் காட்டுவார்.
    சாவித்ரியால் பனியன் கிழிக்கப்படும் அந்த சில நிமிடங்கள் அவர் செய்யும் அட்டகாசங்கள் ஆயிரம் ஆஸ்காருக்கு சமம். வாஷ் பேஸினில் கிழிந்த பனியனுடன் நெஞ்சத்தில் பட்ட ரத்த காயத்தை கொஞ்சம் கொஞ்சமாக வரவழைக்கும் கொடூர முகத்துடன் பார்த்தபடி அவர் கைகளால் கழுவி சரி செய்யும் அழகை பலமுறை கண்டு கண்டு ரசித்து வியந்திருக்கிறேன்.
    ரங்காராவை தன் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும்போது சும்மா கலக்குவார். கட்டப்பட்ட நிலையில் ரங்காராவ் சண்டைக்கு அழைக்கும் போது தினவெடுத்த தோள்களுடன் திமிர் விட்டு கைகள் இரண்டையும் தலைக்குப் பின் கோர்த்து,
    'வேங்கைப்புலி வேடனைப் பார்த்து 'வில்லையும் அம்பையும் எறிந்துவிட்டு வா... சமாதான முறையில் சண்டை செய்வோம்' என்று கூறியதாம்'
    என்று நக்கல் விடும் காட்சியை என்ன சொல்ல! முகத்தில் கேலியையும், கொடூரங்களையும் மாற்றி மாற்றி காட்டி நடிப்பின் ஒவ்வொரு அணுக்களையும் பார்ப்பவர்களின் உடலில், உள்ளத்தில் செலுத்துவார்.
    எழுதிக் கொண்டே போகலாம் முரளி சார். ஆசையாக இருக்கிறது. நீங்கள் எடுத்த படம் அப்படி. நினைவில் இருந்ததை எழுதி விட்டேன். எழுத வைத்த உங்கள் எழுத்திற்கு என் தலையாய நன்றிகள் முரளி சார்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #527
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vasu Devan

    விஸ்வநாத நாயகுடு (தெலுங்கு) (1.5.1987)
    1.5.1987- இல் வெளிவந்த நடிகர் திலகத்தின் நேரடி தெலுங்கு வெற்றிச் சித்திரம் 'விஸ்வநாத நாயக்குடு'.
    விஜயநகர சரித்திரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நடிகர் திலகத்தின் மிக அரிய காவியங்களில் ஒன்று.
    ... திரைக்கதை, வசனம், இயக்கம் தாசரி நாராயண ராவ்.
    நாகம்மா நாயக்கர் என்ற அற்புத ரோலில் நடிகர் திலகம். பழைய மனோகராவை நினைவுபடுத்தும் சங்கிலிப் பிணைப்புக் காட்சிகள். அதிர வைக்கும் வசனங்கள். வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என்று தலைவர் மீண்டும் நிரூபித்த படம்.
    நடிகர் திலகத்தின் மகனாக டைட்டில் ரோல் விஸ்வநாத நாயக்குடுவாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா.
    உடன் ஏராளமான நட்சத்திரக் குவியல். கே .ஆர்.விஜயா, கிருஷ்ணதேவராயராக கிருஷ்ணம்ராஜ், (நடிகர் திலகத்தின் மற்றொரு தெலுங்குத் திரைப்படமான 'ஜீவன தீராலு' (தமிழில் வாழ்க்கை அலைகள்) பட ஹீரோ), ராமகிருஷ்ணா ('புண்ணியபூமி' திரைப்படத்தில் தலைவரின் அண்ணனாக வேடமேற்றவர்), கிருஷ்ணாவின் ஜோடியாக, கலாவதியாக ஜெயப்பிரதா, சுமலதா, ராஜசுலோச்சனா, திம்மராசுவாக பிரபாகர் ரெட்டி ('விஸ்வரூபம்' படத்தில் தலைவருக்கு அடைக்கலம் தரும் வில்லன்), சோமையாஜுலு, பிரம்மானந்தம், காந்தாராவ், சரத்பாபு, ரங்கநாத், ஜெயபிரபா என்று தெலுங்குத் திரைப்படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பெருமையடைந்தார்கள்.
    இசை G.ராகவலு.
    ஒளிப்பதிவு V.S.R. சாமி.
    இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் தெலுங்குப் படவுலகின் புகழ் பெற்ற நடிகர் ஜக்கையா அவர்கள்.
    சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான ஆந்திர அரசின் 'நந்தி' விருது இப்படத்திற்காக நம் P.சுசீலா அவர்களுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
    இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.
    இப்படத்தின் DVD கூட இன்னும் கிடைக்கவில்லை.
    நம் அன்பு அங்கத்தினர்களுக்காக இந்த அரிய படத்தின் அரிய நிழற்படங்கள்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #528
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vasu Devan

    நடிகர் திலகத்தின் நாயகி ('அபிநய சரஸ்வதி' B.சரோஜாதேவி ஸ்பெஷல்)
    ஸ்பெஷல் பதிவு.
    நடிகர் திலகத்தின் நாயகி 'அபிநய சரஸ்வதி' B.சரோஜாதேவி
    நடிகர் திலகத்தின் பல வெற்றிப்படங்களின் கதாநாயகி. இந்த கர்நாடகத்துப் பைங்கிளி. கமர்ஷியல் கதாநாயகியாய், கவர்ச்சிப் பாவையாய் தமிழ்ப் படங்களில் வலம் வந்தவர் நடிகர் திலகத்துடன் ஆரம்ப காலங்களில் ஜோடி சேர இயலவில்லை.
    தங்கமலை ரகசியம், 'சபாஷ் மீனா' என்று நடிகர் திலகத்தின் படங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்திருந்தாலும் 1959 இல் வெளியான காலத்தால் அழிக்கமுடியாத காவியமான 'பாகப் பிரிவினை' யில் தலைவரின் நேரடி ஜோடியாக நடிக்கும் தங்க வாய்ப்பை பெற்றார். அழகுப் பதுமையாய், அலங்காரப் பாவையாய் முத்திரை குத்தப்பட்ட இவரது இன்னொரு பரிமாணம் 'பாகப்பிரிவினை' படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறந்த நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்று நிரூபித்து தன் கிளாமர் இமேஜ் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து சிறந்த நடிப்புத் திறமை கொண்ட நடிகை என்ற பெயரை வாங்கத் துவங்கினார். இதற்குக் காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா! கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமே! நாரும் கூட பூவோடு சேர்ந்தால் மணம் பெறுமே!. அதே போல நடிகர் திலகத்துடன் இணைந்தாலே நடிப்பும் தன்னால் வந்து விடுமே!
    கன்னையாவுக்கேற்ற பொன்னியாய் 'தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்த' கனப் பொருத்தமான ஜோடியாய் சேர்ந்து 'அட நம்ம சரோஜாதேவியா இது' என்று அனைவரும் வாய் பிளக்குமளவிற்கு நடித்து பெரும் பெயர் பெற்றுவிட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அன்றும் இன்றும், என்றும். பைங்கிளியின் வாழ்விலே திருப்புமுனை. நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்ததால் திறமையான நடிகை என்று பெயரும் புகழும் பெருக ஆரம்பித்தது. அடுத்து வந்த 'இரும்புத்திரை'யில் வாய்ப்பு. ஆனால் ஜோடி கிடையாது. ஒருதலையாக நம் மாணிக்கத்தைக் காதலிக்கும் வேடம். கிட்டத்தட்ட சிறு வில்லி ரோல் ரேஞ்சிற்கு.
    1959-ல் வெளியான தன்னுடைய 'கல்யாணப்பரிசு' பிரம்மாண்ட வெற்றியின் (கதாநாயகி சரோஜாதேவி) காரணமாகவும், ராசியான கதாநாயகி என்ற சென்டிமென்ட் காரணமாகவும்1960 இல் வெளியான 'விடிவெள்ளி' யில் ஸ்ரீதர் இவரை நடிகர் திலகத்தின் ஜோடியாக்கினார். இதிலும் அருமையான ரோல். 'கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை' என்று அன்பைப் பொழிந்து இரண்டாவது முறையாக அமைந்த இந்த ஜோடி மீண்டும் வெற்றிக்கனியைப் பறித்து சுவைத்து மகிழ்ந்தது. ராசியான ஜோடி என்ற முத்திரையும் விழத் தொடங்கியது. சரோஜாதேவி வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது.
    பாலும் பழமும்
    அடுத்த வருடம் 1961 மிகப் பெரிய திருப்பத்தை இந்த ஜோடிக்கு ஏற்படுத்தித் தந்ததோடல்லாமல் அளவற்ற பெண் ரசிகர்களை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது. அதுமட்டுமல்ல... கணவன் மனைவி என்றால் டாக்டர் ரவி, சாந்தி தம்பதியர் போல இருக்க வேண்டும் என்று ஒரு குடும்ப இலக்கணமே வகுத்துக் கொடுத்தது இந்த 'பாலும் பழமும்' ஜோடி. படமோ மெகா ஹிட். நடிகர் திலகத்துடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்த மூன்றாவது படமும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
    சரோஜாதேவி அவர்களே "நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த பின்னரே நல்ல திறமை வாய்ந்த நடிகை என்ற புகழை அடைந்தேன். இந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்" என்று பலமுறை பேட்டிகளில் மறக்காமல் கூறியிருக்கிறார்.
    பின் 1962 -ல் 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் இந்த ஜோடி இணைந்து மீண்டும் சாதனை புரிந்தது. கொடியசைந்ததும் காற்று வந்ததா... காற்று வந்ததும் கொடியசைந்ததா...நடிகர் திலகத்துடன் இணைந்ததால் நடிப்பு வந்ததா.... நடிப்பு வந்ததால் நடிகர் திலகத்துடன் இணைய முடிந்ததா... தற்போது பெங்களூருவில் வசித்து வரும் சரோஜாதேவி தனது வரவேற்பறையில் மாட்டியிருக்கும் புகைப்படம் என்ன தெரியுமா?
    சாரண உடை அணிந்து 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் அழகான சின்னப் பெண்ணாய் காட்சியளிப்பாரே... அந்தப் புகைப்படம்தான். ஸ்டில் காண்க
    பின் அதே வருடம் வளர்பிறை.
    அதையடுத்து 1962-இல் மீண்டும் ஒரு இமாலய சாதனை புரிந்தது இந்த வானம்பாடி நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து. ஆம்... தமிழ் திரையுலகை ஒரு உலுக்கு உலுக்கிய 'ஆலயமணி' தியாகுவின் மனைவியாக சரோஜாதேவி. மிக அற்புதமாக நடித்து காதலிக்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணியமாக உணர்த்தி, அந்த முள் மீது நடக்கும் கேரக்டரை நடிகர் திலகத்தின் வழிநடத்தல்கள் மூலம் அற்புதமாக பரிமளிக்க வைத்தார் இந்தப் பைங்கிளி. படமோ ராட்சஷ வெற்றி. உன்னதமான பல உயரங்களை நடிகர் திலகத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்ததன் மூலம் அடைந்தார் சரோஜாதேவி. அது மட்டுமல்ல. விருதுகள் பலவும் அவரை நாடி வந்தன. பொன்னை விரும்பும் பூமியிலே தியாகுவை விரும்பிய ஓருயிராக அனைவர் நெஞ்சங்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் இன்று வரை நிலைத்து வாழ்கிறார் இந்த கொஞ்சும் கிளி.
    பின் 'இருவர் உள்ளம்'1963 இல். அதில் செல்வம், சாந்தா ஜோடி மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை எழுதத்தான் வேண்டுமா. அழகு சிரிக்க ஆசை துடிக்க நம் அனைவரையும் வசீகரித்த ஜோடி. சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் TRP (Target Rating Point) rating ஐ எங்கோ எகிற வைத்து விட்ட ஜோடி. கலைஞர் தொலைக்காட்சியில் 'இருவர் உள்ளம்' ஒளிபரப்பப் பட்ட போது அதைக் கண்டு களித்த (உலகம் முழுவதும்) பார்வையாளர்களின் எண்ணிக்கை கணக்கு பல இதர தொலைக்காட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறதாம். கலைஞர் தொலைக் காட்சியில் தற்சமயம் நடிகர் திலகத்தின் பழைய படங்களின் உரிமம் பெற முயன்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இரு படங்கள் இப்போது தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. (திரும்பிப்பார், குறவஞ்சி) மேற்சொன்ன ஒரு உதாரணம் போதாதா இருவர் உள்ளத்தின் வெற்றி ஜோடியின் சாதனைகளைத் தெரிந்து கொள்ள? தாய்குலங்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது இந்த ஜோடி.
    1963 -ல் வெளியான 'குலமகள் ராதை' யிலும் இந்த ஜோடி அட்டகாசம் செய்தது. "ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி" என்று பைங்கிளியின் பின்பக்கமாக நின்று அவரின் இரு ஜடைகளையும் நம்மவர் பிடித்து இழுக்க, இருவர் பிம்பங்களும் எதிரே இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அழகை மறக்க முடியுமா! அருமையான ஜோடியாக அமைந்த இன்னொரு வெற்றிப் படம்.. புகைப்படம் காண்க.
    அதே வருடம் பக்ஷி ராஜாவின் கடைசிப்படம் 'கல்யாணியின் கணவன்'. இதிலும் இந்த ஜோடியே ஆக்கிரமித்தது. அதுவும் முதல் பாதியில் இருவரும் பண்ணும் சேட்டைகளும் அமர்க்களங்களும் மறக்க முடியாதவை. நமது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்தான். இரவுபகல் தூக்கமில்லாமல் செய்த ஸ்டைல் டூயட்டை மறக்க இயலுமா?
    1964 -ல் இந்த ஜோடியின் இன்னொரு சுனாமி. இது கலர் சுனாமி. பிரம்மாண்ட சுனாமி. 'புதிய பறவை' என்னும் சுனாமி. அதுவரை கறுப்புவெள்ளையில் பார்த்து பரவசப்பட்ட இந்த ஜோடி வண்ணத்தில் நம் எண்ணமெல்லாம் குளிர காட்சியளித்தது. கண்பட்டுவிடக் கூடிய அளவிற்கு இன்றைய இளையதலை முறையினரும் வியந்து பார்க்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது இந்த ஜோடி. 'காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை' என்ற வண்ண மயிலாளிடம் 'ஆஹா!...மெல்ல நட... மெல்ல நட... உன் மேனி என்னாகும்?' என்று அழகன் அக்கறைப்பட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்ததைப் பார்த்து அன்றைய திரையுலகில் புதிய பறவைகளாய் பறந்து வந்து புதுமை புரிந்த ஜோடி. ஜோடிகள் எல்லாவற்றிக்கும் அப்போதைய உச்சகட்டம். அபிநய சரஸ்வதியை ரசிப்பதெற்கென்றே கூட ஒரு தனிக் கூட்டம் அலைந்தது. இந்த புதிய பறவை மட்டும் பழைய பறவையாக ஆகவே ஆகாது. தரத்திலும் சரி! வசூலிலும் சரி! 'கோபால்' என்ற வார்த்தை இவர் வாயால் உச்சரிக்கப்பட்டு இன்று வரை புகழடைந்து வருகிறது.
    1968-இல் 'என் தம்பி'யில் தலைவர் தன்னிகரில்லா அழகில் உடல் இளைத்து தம்பி போல ஆகிவிட தம்பிக்கு அக்கா போன்ற தோற்றம் வர ஆரம்பித்தது சரோஜாதேவிக்கு. எவ்வளவு இளமையான கதாநாயகியைப் போட்டாலும் அவர்களையெல்லாம் விட படுஇளமையாக, கல்லூரி மாணவனாக, இல்லை இல்லை பள்ளி மாணவனாக தெரிய ஆரம்பித்து அப்போதைய உலகின் எட்டாவது அதிசயமாக அனைவரையும் ஆச்சரயத்தில் நடிகர் திலகம் ஆழ்த்திக் கொண்டிருக்கும் போது யார்தான் என்ன செய்ய முடியும்? நேற்றுப் பிறந்தவர் போல நடிகர் திலகம் அழகில் மிளிர நேரம் தெரிந்து வந்த அபிநய சரஸ்வதி அவ்வளவாக உறுத்தவில்லை "என் தம்பி"யில். 'நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ' என்று தேவி கேட்டதும் 'நடுக்கமா...எனக்கா?' என்று சாட்டையடி தந்து சடையிலிருந்து பூவையும் ,பாலாஜி கையில் இருந்து சிகரெட் கேஸையும் நடிகர் திலகம் சாட்டையால் பறிக்கும் போது பூலோகம் பூரித்துப் போனதே. அந்த வெற்றிக்கும் இந்த ஜோடிதானே காரணம்!
    1969- ல் 'வள்ளி மலை மான் குட்டி'யுடன் 'அன்பளிப்'பில் ஜோடி சேர மீண்டும் ஜோடிப் பொருத்தம் சற்று இடிக்க, தேரு வந்தது போல் இருந்தது சரோஜாதேவி வரும்போது. வயதாக ஆக அபிநய சரஸ்வதியிடம் முதிர்ச்சி தெரிய, வயது ஏற ஏற நடிகர் திலகத்திடம் இளமை இன்னும் ஏற ( இதிலும் சாதனைத் திலகம் தான்) படம் சுமாரான வெற்றி.
    அதே வருடம் அஞ்சல் பெட்டி 520. காமெடியிலும் கொடி நாட்டுவோம் என்று நிரூபித்து இதிலும் வெற்றி கண்டது இந்த ஜோடி. குறைந்த செலவில் சிம்பிள் சினிமா என்றாலும் திருமகள் தேவையான அளவிற்கு தயாரிப்பாளர் வீட்டில் தேடி சென்று வாசம் செய்த படம். பத்துப் பதினாறு முத்தமிட்ட ஜோடி. புதிய இயக்குனர் கிடைத்தார்.
    1971-ல் 'அருணோதயம்' கண்டு 'முத்து பவழம் முக்கனி சர்க்கரை' அளித்த ஜோடி அதே வருடம் 'தேனும் பாலும்' அளித்து மனதினில் வெள்ளம் கரைபுரண்டோடச் செய்தது.
    அப்புறம்... நாயகியின் வயது முதிர்வு. பல நாயகிகளின் போட்டி. நடிகர் திலகத்திற்கு வேறு ஜோடிகள்.
    பிறகென்ன... நடிகர் திலகத்திற்கும் வயதாகாதா? வயதானதும் ஒன்ஸ்மோர் இந்த ஜோடியை 'ஒன்ஸ்மோரி'ல் நடிக்க வைத்தார் இயக்குனர் சந்திரசேகரன் இன்றைய இளம் கதாநாயகன் விஜய்யுடன். பல சாகசங்களை நிகழ்த்திய ஜோடி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜோடியாக சாகசம் நடத்தி படத்தை மாபெரும் வெற்றியாகியது. அதற்கு தங்கள் பழைய இருவர் உள்ளமும் கலந்தது. அனைவரையும் கவர்ந்தது. வயதாகியும் மீண்டும் போராடி சாந்தாவைக் கைபிடித்தார் நாயகன்.
    1993 ல் பாரம்பரியம் மிக்க இந்த ஜோடி 'பாரம்பரிய'த்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தது. அதன் பின் நம் தெய்வமும் தெய்வங்களோடு சங்கமமானது.
    அபிநயப் பறவையோ நம் இதய தெய்வத்தின் புகழை சென்றவிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறது
    வெறும் கவர்ச்சிப் பதுமையாக தேவர் நாயகனின் அங்கங்களை வர்ணித்து, டூயட்கள் பாடி காட்டில் உள்ள பறவைகள், மிருகங்கள் இவற்றின் பின்னாலேயே அலைந்து பின்னசைவுகளில் இளைஞர்கள் நெஞ்சத்தை உறக்கமில்லாமல் செய்து கொண்டிருந்த இந்த கவர்ச்சி பதுமை சரியான நேரத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக மாறி அவரின் ஆசியினால் நடிப்புப் பறவையாக மாறி நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. பாகப் பிரிவினை, புதிய பறவை, பாலும் பழமும் மூன்றும் இவரை புகழின் உச்சியில் நிலைநிறுத்தியது. கரணம் நடிகர் திலகம். ஆயிரம் படங்கள் சரோஜாதேவி நடித்து வெளிவந்திருக்கலாம். அவைகளெல்லாம் சும்மா பெயரளவில்தான். ஆனால் ஒரு புதிய பறவையும், குலமகள் ராதையும், ஒரு பாகப் பிரிவினையும், ஒரு பாலும் பழமும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்ததை போல வேறு ஏதாவது வாங்கிக் கொடுத்திருக்க முடியுமா?
    எவருமே நடிகர் திலகத்துடன் சேர்ந்தால் மட்டுமே அவர்களுக்குத் தனிப் புகழ். இதற்கு சரோஜாதேவி மட்டும் விதி விலக்கா என்ன!






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Likes Harrietlgy liked this post
  11. #529
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #530
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Today Ananda Vikatan.

    கூட்டுக்குடும்பத்தின் அடையாளம்! நடிகர் திலகம் சிவாஜி வீடு!

    உணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால், ஒரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.

    ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு

    இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.

    “இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று அழைக்கப்பட்டது.

    பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்படார்.



    தந்தை பெயரில் வீடு

    இந்த இஸ்லாமியரிடம் இருந்து1959-ம் ஆண்டு தமது தந்தை பெயரில் சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதன் பின்னர் வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார். செவாலியே விருது வாங்கியதைப் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு போக் சாலைக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயர் வைக்கப்பட்டது".

    சிவாஜியின் வீடு குறித்து சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். "சிவாஜி நடித்த சில படங்களின் படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கின்றன. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.

    அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும். லேசாக அழுக்குத் தென்பட்டாலும், சிவாஜி அதனை சுத்தம் செய்யச் சொல்வார். தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணியாற்றினர்.

    சிவாஜியின் ஆசை

    சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிவாஜியின் சகோதரர் சண்முகம் இறந்தபோது, எம்.ஜி.ஆர் வந்திருந்தார். ஷுட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். இயக்குநர்களிடம் கதை கேட்பது எல்லாம் ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் நடக்கும். சில நேரங்களில் மட்டும் இயக்குநர்களை வீட்டுக்கு வரச்சொல்லிக் கதை கேட்பார். சிவாஜி வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். தமது பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று. காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்தி விட்டுப் போனார். அதற்கு அடுத்த நாள் காமராஜர் மரணம் அடைந்தார். இந்தப் பிறந்தநாள் வாழ்த்தை சிவாஜி அடிக்கடி நினைவு கூறுவார்.



    010-ம் ஆண்டு, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இன்றளவும் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சிவாஜியின் சகோதரர் சண்முகத்தின் குடும்பத்தினரும் இங்குதான் வசிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை சிவாஜி பெருமையுடன் கருதினார். அவரது ஆசை அவர்களின் குடும்பத்தினரால் இன்றளவும் நிறைவேற்றப்படுகிறது" என்றார்.
    சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டுக்கு வந்த 'இசைக்குயில்' யார் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •