Page 40 of 400 FirstFirst ... 3038394041425090140 ... LastLast
Results 391 to 400 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #391
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #392
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #393
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #394
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #395
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    (நேற்று) உத்தமனுக்கு 51 வயது

    1976 ஆம் ஆண்டு யூன் 25ஆம் திகதி
    வெளிவந்த நடிகர் திலகத்தின் 184 வது
    திரைக்காவியம்

    உத்தமன்.

    இலங்கையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய
    திரைக்காவியம்




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #396
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #397
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri

    இதுவும் ஒரு காதல் பாடல்தான். இதைச் சோகப் பாடல் என்று சொன்னால் நிச்சயம் நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். கண்ணே, மணியே, கற்கண்டே, கட்டிக்கரும்பே என்று சொல்வது மட்டுமே காதல் பாடலா ? இளமைத் துடிப்பில் இணையை இம்ப்ரஸ் செய்யச் சொல்லப்படும் இனிய வார்த்தைகள் என்ற அளவில் மட்டுமே அவற்றை எடுத்துக் கொள்ள முடியும்.
    ஆனால் இந்தப்பாடல் இளையோர் பாடும் பாடலும் அல்ல, இணயை வசீகரிக்கப் பாடும் பாடலும் அல்ல. வயோதிகம் முற்றிய காதலில் ஆத்மாவில் இருந்து வருவது...கண்ணில் இருந்து நீரை மட்டும் அல்ல, இதயத்தில் இருந்து ரத்தத்தையே வழிய வைக்கும்.
    அவர், தன் வாழ்நாள் முழுவதும் தன் உயர்ந்த பண்பாகவும், குறிக்கோளாகவும் கொண்டு வாழ்ந்த நேர்மை, அவரது இறுதிக்காலத்தில் பெரியதாக மதிப்பையும் மரியாதையையும் ஒன்றும் பெற்றுத் தந்து விடவில்லை. சற்றும் வளைந்து கொடுக்காமல் நீண்ட நெடுமரமாக வாழ்ந்ததில் அவருக்கு மிஞ்சியது மனத்திருப்தி ஒன்றுதானே தவிர அரைச்சல்லிக் காசு கூட அல்ல.
    தன்னைத்தவிர வேறு எதையுமே அறியாத அப்பாவியாக, வாசல் படி அறியாதவளாக, தன் இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்நாள் முழுக்கத் தோள் கொடுத்து, குடும்பச்சுமையைத் தாங்கிக் கொண்டவள் அவள்தானே ! அவளுக்கென்று தான் ,பணம், காசு, சொத்து, சுகம் என்று எதையும் சேர்த்து வைக்கவில்லையே, தனக்குப் பின்னர் வாழ்க்கையை நடத்த இவள் என்ன பாடுபடப்போகிறாளோ ? பெற்ற மூன்றில், தலைச்சன், தனக்குப் பின்னர் இக்குடும்ப பாரத்தைத் தன் தோளில் தாங்கிக் கொள்வான் என்று மனதார நம்பிக்கை வைத்திருந்தவன், பொண்டாட்டி தாசனாக, hen pecked கணவனாக இருப்பான் என்று அவர் கனவிலும் நினக்கவில்லை. அடுத்தவனோ ஒரு பொறுப்பற்ற ஹிப்பியைப் போலவும் , ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்யும் ஊதாரியாக இருப்பதும் இதயத்தில் விழுந்த இரண்டாவது இடி. மூன்றாவதோ திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்பிள்ளை, பாவம் அம்மாவைப் போல அவளும் அடுக்களையை மட்டுமே அறிவாள்.
    பல ஆண்டு காலம் அவ்வளவு பெரிய கம்பெனியைத் திறம்பட நிர்வகித்த இவருக்கு, இனி தன் குடும்பத்தை எப்படி நிர்வகிக்கப் போகிறோமோ, மகளுக்கு எப்படி மணம் முடிக்கப் போகிறோமோ என்ற எண்ணத்தில் எதிர்காலம் இருளாகத் தெரிய, மனம் நொந்து வருந்துகிறார். எதற்கும் இதுவரை மனம் கலங்காத அந்தப் பிரஸ்டீஜ் பத்மனாப அய்யரின் இந்தத் தவிப்பைப் பார்த்து அவர் மனைவி சாவித்ரியின் கண்களில் கண்ணீர் தழும்புகிறது. இந்தச் சூழ்நிலையில் தன் மனைவியிடம் இவர் பாடுவதாகக் காட்சி அமைப்பு. படம் : வியட்நாம் வீடு. பிரஸ்டீஜ் பத்மநாப ஐயராக நடிகர் திலகமும், அவர் மனைவி சாவித்ரியாக பத்மினியும்.
    "சாவித்ரி! என்னில் ஒரு பாதியானவளே ! என்றைக்கு உன்னை அக்னிசாட்சியாகக் கைப்பிடித்து ஏழடி நடந்தேனோ, அன்றிலிருந்து உன்னை என் இதயத்தில் அல்லவா குடி வைத்திருக்கிறேன் ? உன் முகத்தில் அந்த நாள் முதல் இந்த நாள் வரை, இனிய புன்னகையையும் சிரிப்பையும் தவிர நான் வேறு எதையுமே கண்டதில்லையே... இன்று என்னடி உன்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் இப்படி மாலையாகக் கொட்டுகிறதே! இந்தக் கொடுமையான காட்சியைப் பார்க்கும் போது, உன்னைக் குடி வைத்திருக்கும் என் நெஞ்சமெல்லாம் பதறுகிறதே ! உன் துன்பத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் என் இதயத்தின் சுவர்கள் நொறுங்கி ரத்தம் ஊற்றாய்ப் பெருகிக் கொட்டுகிறதே !
    கண்ணம்மா! என்னுடைய கண்ணின் மணியே! உன் மூலமாகத்தான் நான் இந்த உலகையே பார்க்கிறேன். உன் கண்களில் வழியும் நீர் என் கண்களையும் மறைக்கிறதே. என்னுடைய உயிரும் என்னிடம் இல்லையே. அது உன்னிடமல்லவா இருக்கிறது ? நீ அழும்போது என் உயிரும் துடிக்கிறதே !
    சாவித்ரி! உன்னை என் வாழ்க்கைத் துணைவியாக நான் கைப்பிடித்த நாள் இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று தொடங்கியது எனது ஒளிமயமான வாழ்க்கை. அன்றைய நாளில் இருந்து வாழ்வில் உயரத் தொடங்கினேன். பொன்னைப் போன்று மிகுந்த மதிப்பும் சிறப்பும் கொண்ட உன்னைத் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் இந்தச் சமுதாயத்தில் என் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து என் புகழும் மிக மிக வளர்ந்தது.
    காலப்போக்கில், என் வாழ்க்கைப் பாதையில் எண்ணற்ற கஷ்டங்களும், சிரமங்களும், துன்பங்களும், ஒவ்வொன்றாக முளைத்து வரத்தொடங்கின. அலுவலகத்தில் ஆயிரம் பிரச்சினைகள். அவற்றைச் சரி செய்வதற்குள் குடும்பத்திலும் தினசரிச் சிக்கல்கள் இருக்கும். எந்த ஒரு பிரச்சினையும் துன்பமும் காலப்போக்கில் குறைந்து விடும் அல்லது மறைந்து விடும் என்று சொல்வார்கள். எந்த ஒரு மாபெரும் துயரமாக இருப்பினும் அதற்குக் காலம் தான் துயர் துடைக்கும் அருமருந்து என்று சொல்லுவார்கள். காலம் ஒரு சுமைதாங்கியைப் போன்றது. போவோர் வருவோர் எல்லாம் தங்கள் சுமைகளை இறக்கி வைத்து இளைப்பாற உதவுவது. ஆனால் நீயோ, எப்போதெல்லாம் எனக்குத் துன்பச்சுமைகள் அதிகமாகி, அவற்றைத் தாங்க முடியாமல் நான் தவிக்கும் போது , என்னுடைய துன்பங்களையும் துயரங்களையும் நீ தாங்கிக் கொண்டு, என்னுடைய வருத்தங்களைப் போக்கினாய். வீட்டுச்சுமை எல்லாவற்றையும் நீ மட்டுமே ஏற்றுக் கொண்டு, என் பாரங்களைக் குறைத்தாய். உன்னுடைய இந்தச் செயல்களினால், துன்பச்சுமைகள் தாளாமால் நொந்து நொறுங்கிப் போயிருக்கும் என் மனத்துயரங்கள் தணிந்து அமைதி ஏற்படும்.
    நமக்கு உற்றார் உறவினர் என்று ஏராளமானவர்கள் இருக்கின்றனர். எனக்கு வரும் துன்பங்களும் சோதனைகளும் மிகப் பெரியவை. சமயங்களில் என்னால் அவற்றைச் சமாளிக்க முடியாமல் நான் தடுமாறி விழக்கூடிய நிலை கூட ஏற்படும். இந்த ஆலமரத்துக்கு ஏராளமான விழுதுகள் இருக்கின்றன, உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் என்ற வடிவங்களில். "சிதலை தினப்பட்ட ஆலமரத்தை மதலையாய் மற்றதன் வேர்தாங்கும்" ( சிதலை - கறையான் ) என்பார்கள். இந்த மரம் வலுவிழந்து விழப்போகிறது. விழுதுகள் தாங்கிக் கொள்ளும் என்று நினைத்தால் அவை பழுதுகளாகத்தான் இருக்கின்றன. ஆனால் இந்த மரத்தின் ஆணிவேர் நீதான். நீதான் என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். உன்னால்தான் நான் விழுந்து விடாமல் இருக்கிறேன். ஆனால் ஆணிவேரை யாராலும் கண்ணால் பார்க்க முடியாததைப் போல உன்பலத்தால்தான் நான் விழாமல் நின்று கொண்டிருக்கிறேன் என்பது மற்றவர்களுக்குத் தெரியாதே !
    உன் தற்போதைய ஆதரவற்ற நிலையையும் அதற்குக் காரணமான என்னையும் நினக்கும்போது இரவுகளில் எனக்கு உறக்கமே வருவதில்லை. இது போதாதென்று பிள்ளைகள் என்ற பெயரில் நாம் பெற்று வைத்திருப்பவர்களின் செயல்கள்,எனக்கு முள் படுக்கையில் படுத்திருப்பது போன்று தாங்க முடியாத துன்பத்தைத் தருகின்றன. அவற்றை எல்லாம் நினைக்கும் போது என்னால் ஒரு நொடி கூடக் கண்மூடிப் படுக்க முடிவதில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலையும் நினைக்கும் போது எனக் குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது.
    நாம் பெற்றெடுத்த பிள்ளைகளை ஊருக்கும் உறவுக்கும்தான் நம்முடைய குழந்தைகள் என்று நம்மால் சொல்லிக் கொள்ள முடியும். அவர்களால் இக்குடும்பத்துக்கு எந்த விதமான பயனும் இல்லை. அதே மாதிரிதான் நம் சொந்தங்களும் உறவுகளும். ஒரு பேச்சுக்கு வேண்டுமானாலும் அவர்களை உறவுகள் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர உண்மையில் அப்படி இல்லை. உறவுகள் என்னைப்பற்றியும் என் உயர்ந்த கொள்கைகளைப் பற்றியும் வெளியில் கேலியாகவும் கிண்டலாகவும் பேசுவதற்கு மட்டுமே இருக்கிறார்களே தவிர வேறு எதற்காகவும் இல்லை.
    இந்த உலகில் ஒரு நல்ல நெறிமுறையுடன் கூடிய ஒரு மனிதனாக நான் வாழ முயற்சித்தேன். என் நல்ல எண்ணங்களையும், என் கொள்கைகளையும், அவற்றை அடைய நான் கடைப்பிடித்த கடினமான வாழ்க்கை முறையையும் , யாரால் உணர முடியும் ? அன்பு தெய்வமாக என்னுடன் வாழ்ந்து என் வாழ்வை இவ்வளவு காலமும் அர்த்தமுள்ளாகச் செய்து கொண்டிருக்கும் உன்னைத்தவிர வேறு யாரால் முடியும் ? நீ என்னை முழுமையாக அறிந்து கொண்டிருப்பதைப் போல ஒருவேளை அந்த தெய்வம் வேண்டுமானால் அறிந்திருக்க முடியும் "
    இவ்வளவில் பாடல் முடிகிறது.

    நண்பர்களே ! நடிகர்திலகமும் பத்மினியும் நிறையப் படங்களில் காதல் ஜோடிகளாக நடித்திருப்பது உண்மைதான். அவற்றில் எக்கச்சக்கமான காதல் பாடல்கள் இன்றும் அற்புதமாக நம் காதுகளில் இனித்துக் கொண்டிருப்பதும் நிஜம்தான்.ஆனால், இந்தப் பாடலைப் போல மனைவி மேல் கணவன் கொண்ட உண்மையான அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும் பாடல் வேறு ஒன்று இருக்கிறதா என்ன?
    இப்பாடலில் திலகத்தின் பெர்பார்மென்ஸ் பற்றி என்ன சொல்வது ? பின் உச்சியில் குடுமி வைத்த, இரு காதுகளிலும் நீண்ட ரோமமும், அடர்ந்த கண் புருவங்களும் கொண்ட வயதான ஒரு டிப்பிகல் பிராமண வேடம். தன் முழுத் திறமையையும் காட்ட நல்ல ஸ்கோப் உள்ள காட்சிக் களம். லட்டு மாதிரிப் பாத்திரம். அப்படியே பின்னி எடுத்து விட்டார். கண்களும், கண்களில் தெரியும் ஆழ்ந்த சோகமயமான பார்வையும், உதடுகளும், கன்னக் கதுப்பும் ஏன் அந்த அடர்ந்த புருவங்களும் கூட அல்லவா நம்மை அழ வைத்தன ?

    இவரது இவ்வளவு அருமையான நடிப்பைப் பற்றிச் சொல்லும்போது, சைலன்ட் பார்ட்னராகக் காட்சி முழுக்க இருந்த பத்மினியின் உயர்தரமான நடிப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பாடல் முழுவதும் அவரது உதடுகளும் கண்களும் மட்டும் நடித்துக்கொண்டே இருக்கும், கவனித்துப் பார்த்தீர்களானால் தெரியும். திலகம் வார்த்தையில் சொல்லும் சோகத்தை இவர் கண்களாலும் உதட்டுத் துடிப்பாலும் காட்டி இருப்பார். இவ்வளவு சோகத்திலும் அவர் முகம் ஒரு நொடி சந்தோசத்தைக் காட்டும், 'பொன்னை மணந்ததனால்' என்று திலகம் பாடும்போது அதை தன்னைக் குறிக்கிறது என்றுணர்ந்து. 'என் தேவையை யார் அறிவார்' என்று திலகம் பாடும் போது, ஒரே ஒரு நொடி 'நான் இருக்கும் போது நீங்கள் இப்படிச் சொல்லலாமா, நான் கூடவா உங்களை அறியவில்லை' என்று அவர் முகம் துடிக்கும். அடுத்து 'உன்னைப் போல் தெய்வமொன்றே அறியும்' என்று சொல்லும்போது மனம் நிறைந்த நிம்மதிப் பெருமூச்சுடன், பின்புற தூணில் தலையைச் சாய்த்துக் கொள்வதும் ஹை கிளாஸ் பர்பார்மென்ஸ்.
    இப்போது சொல்லுங்கள் நண்பர்களே! இது காதல் பாடல்தானே ?

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #398
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    07-07-2017 முதல் மகாலட்சுமி திரைஅரங்கிற்கு வருகிறார்
    எங்க மாமா
    தொடரும் வெற்றி
    நாகர்கோவில் - வசந்தம் பேலஸில்
    100 வது நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது
    மதுரை - மீனாட்சி பாரடைசில் வெற்றி முழக்கமிடும் 6 வது வாரம்
    நடிகர்திலகம் சிங்கத்தமிழனின்
    மதுரை - மீனாட்சி பாரடைசில் வெற்றி முழக்கமிடும் 6 வது வாரம்
    நடிகர்திலகம் சிங்கத்தமிழனின்
    Last edited by sivaa; 26th June 2017 at 08:06 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #399
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Vee Yaar


    மேல் உலகத்தில் தலைவர் சிவாஜி
    தலைவர்
    தலைவர் என்பவர் யார்
    ... பெருந்தலைவர் காமராஜரும் மக்கள் தலைவர் நடிகர் திலகமும் மட்டுமே இந்த வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.
    தொண்டர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும், நல்ல பாதையில் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும், அவர்கள் பாதையை விட்டு மாறாத அளவிற்கு அவர்களுக்குத் தங்கள் மேல் நம்பிக்கையும் உறுதியான பிடிப்பும் வரவழைத்திருக்க வேண்டும்.
    இந்த பாக்கியம் பெருந்தலைவருக்குக் கூட கிடைக்கவில்லை.
    நடிகர் திலகம் ஒருவரைத் தவிர இறுதி வரை காமராஜரைத் தலைவராகப் போற்றியவர் யாருமில்லை. அவர் பெயரை சொல்லக் கூட யாருமில்லை. என்னே பரிதாபம்.
    1975ல் மாற்றுக்கட்சிகளின் சதியில் சிக்கிய சில சிவாஜி ரசிகர்கள் யாரையோ நம்பி மக்கள் தலைவரை விட்டு சென்றார்கள். என்ன ஆயிற்று. இன்றும் நடிகர் திலகம் மங்கா புகழுடன் விளங்குகின்றார். யார் யாரெல்லாம் நடிகர் திலகத்தை ஏசினரோ அவர்கள் அத்தனை பேரும் அதே இந்திரா காங்கிரஸில். இன்று ஸ்தாபன காங்கிரஸும் இல்லை. காங்கிரஸ் என்ற ஸ்தாபனமும் இல்லை.
    இன்று காமராஜரை நினைவூட்ட நடிகர் திலகமும் சிவாஜி ரசிகர்களும் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் பார்த்தால் காமராஜர் கொடுத்து வைக்காத தலைவராகி விட்டார்.
    மற்ற கட்சிகளைப் பற்றி நாம் சொல்லவே வேண்டாம். எவ்வளவு அதிகமாக ஊடகங்கள் தலையில் தூக்கி ஆடமுடியுமோ அவ்வளவு ஆடியும் ஒன்றும் பயனில்லை. தலைவர்கள் நல்லவர்களாக இருந்து பயனில்லை. அவருடைய தொண்டர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும். அப்படி எந்த ஒரு கட்சியையும் இன்று அடையாளம் காட்ட முடியுமா. மிகவும் பரிதாபமான நிலையில் காட்சி அளிக்கின்றன மற்ற கட்சிகள்.
    ஒரே ஒருவர் மட்டுமே வானில் இருந்து பார்த்து மந்தகாச புன்னகை புரிகிறார். தலைவன் என்றால் நான் தானடா என்று இறுமாப்புடன் மார் தட்டுகிறார்.
    இங்கே தமிழகத்தில் நிலைமை இவ்வாறிருக்க, மேல் உலகத்தில் என்ன நடக்கும். ஒரு சின்ன கற்பனை.
    மேல் உலகத்தில் இருக்கும் தலைவர்கள் அத்தனை பேரும் அவரிடம் வந்து புலம்புகின்றனர். நாங்களெல்லாம் உன்னை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவிற்கு இழிவு படுத்தினோம். ஆனால் இன்று எங்கள் நிலை மிகவும் பரிதாபமாயுள்ளது. இதற்கா நாங்கள் உழைத்தோம் என்று வருத்தப்படுகிறோம். ஒரே ஒரு தேர்தலில் தோற்றுவிட்டதற்கே உன்னை நாங்கள் அவ்வளவு கிண்டல் செய்தோம். ஆனால் நீயோ இமயமாக உயர்ந்து நிற்கிறாய். உன் தொண்டர்கள் ஒருவரும் உன்னை விட்டுப் போகவில்லை, ஒருவரும் உன் கொள்கையை விடவில்லை, மத நல்லிணக்கம், நேர்மை, தூய்மை, சத்தியம் என நீ சொன்ன கொள்கையை ஒன்று விடாமல் உன் தொண்டர்கள் பின்பற்றுகிறார்கள். உனக்கு முன்னால் நாங்கள் வெட்கித் தலைகுனிகிறோம்.
    சிவாஜி, தலைவன் என்றால் நீ மட்டும் தான் என்று நிரூபித்து விட்டாய்.
    இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து யார் யார் பின்னாலோ போனார்களென்றால் அவர்களை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது.
    உன்னைத் தலைவனாக ஏற்று உன் வழி நடக்கும் சிவாஜி ரசிகனால் மட்டுமே இனி இத்தமிழ் நாட்டிற்கு விடிவு காலம்.
    தலைவர்கள் அத்தனை பேரும் மேல் உலகத்தில் நடிகர் திலகத்திடம் இவ்வாறு கூறி விட்டு கலைகிறார்கள்.
    புன்னகை புரிகிறார் நடிகர் திலகம்.
    அவர் மட்டுமா.. அவருடைய தொண்டர்களாகிய நாமும் தான்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #400
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1:30 pm, ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் Ramzan special




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •