Page 175 of 400 FirstFirst ... 75125165173174175176177185225275 ... LastLast
Results 1,741 to 1,750 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1741
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    53 வது வெற்றிச்சித்திரம்

    தங்கப்பதுமை வெளியான நாள் இன்று

    தங்கப்பதுமை 10 ஜனவரி 1959

    Last edited by sivaa; 10th January 2018 at 07:52 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1742
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடராஜன்.P

    தி இந்து
    நடிப்புக்கு சிவாஜி!
    பூ. கொ. சரவணன்

    சிவாஜி கணேசன் - சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கலைஞன். தமிழ்நாட்டின் தமிழ் அவர் வருவதற்கு முன் சினிமாவில் எப்படி இருந்தது என்று நீங்கள் அன்றைய படங்களை பார்த்து இருந்தால் நொந்து போவீர்கள். அந்த சிம்மக்குரல் அதை புரட்டிப்போட்டது. உச்சரிப்பு என்பதையும்,வெளிப்படுத்தல் என்பதிலும் பலரும் அவரைத்தான் திருட்டுத்தனமாக பிரதி எடுத்தார்கள்.
    பானர்மன் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி நடந்தார் என்று விவரித்து இருந்தாரோ அப்படியே இருந்தது சிவாஜியின் நடை . சிவாஜியிடம் அதை தாங்கள் படித்து இருக்கிறீர்களா என்று பிற்காலத்தில் கேட்ட பொழுது ,"நானெங்கே அதெல்லாம் படிச்சேன். ஒரு வீரன் அப்படினா அப்படித்தான் நடப்பான் !" என்றாராம் கம்பீரமாக
    அண்ணாவின் ‘சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து மெச்சிய பெரியார், ‘ சிவாஜி’ என்று பட்டம் தர வி.சி.கணேசன் ‘சிவாஜி’ கணேசன் ஆனார்.
    திமுகவை விட்டு சிவாஜி விலகியதும்,"நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர்!" என்று கட்சியினர் சொல்ல ,"என்ன பேசறீங்க? அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டித்தான் அதுக்கு பெருமை அப்படிங்கற மாதிரி இருக்கே இது. " என்று அண்ணா வேகமாக மறுத்திருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு பெரியாராக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இறுதிக்காலம் வரை இருந்தது. நிறைவேறத்தான் இல்லை.
    என்றைக்கும் அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக போக மாட்டார். ஒருமுறை மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் இவர் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் அதிகாலை மூன்று மணிக்கு சூட்டிங் என்றார்கள், இவர் மேக்கப் உடன் வந்து நின்றிருந்தார். யாரும் வந்திருக்கவில்லை. லேட்டாக வந்து தலை சொரிந்தவர்களை பார்த்து “நாளைக்கு மூன்று மணிக்கு சூட்டிங் வைத்துக்கொள்ளலாம்" என்றாராம் கூலாக.
    ஒரு வசனத்தை ஒரு முறை அல்லது இருமுறை படித்து காட்டினால் போதும் அப்படியே சொல்லி நடித்து விடுவார் "நீயும் நானுமா.. கண்ணா நீயும் நானுமா ? " பாடலை டி.எம்.எஸ் அவர்களை பலமுறை பாடச்சொல்லி நடித்திருக்கிறார். "ஏன் ?" என்று கேட்டதற்கு "ஒவ்வொரு சரணத்துக்கும் ஒவ்வொரு உணர்ச்சி காட்டியிருக்கார் டி.எம்.எஸ். அவர் பாடின பாட்டுக்கு நான் நியாயம் பண்ணனும் இல்லையா ?" என்று கேட்டாராம்.
    யாருக்கும் வாழ்த்து சொல்ல போகாத காமராஜர் கொட்டும் மழையில் இவரைத்தேடி வந்து மாலை போட்டுவிட்டு போகிற அளவுக்கு இருவரும் நெருக்கம். நயாகரா நகரத்தந்தையாக பண்டித நேருவுக்கு பின்னர் பொறுப்பேற்க வைக்கப்பட்ட இந்தியர் இவர் தான்.
    திலீப் குமார் ஹிந்தி திரைப்பட விழாவில் சிவாஜியை அவரின் மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். "உங்க அளவுக்கு பெரிய நடிகரா ?" என்று அவரின் மகன் கேட்க அவர் அவசர அவசரமாக தலையசைத்து மறுத்து ,"எங்களுக்கெல்லாம் பல மடங்கு மேலே !" என்று சொல்லி கைகளை மேலே உயர்த்தி காண்பித்து இருக்கிறார்.
    சிறந்த நடிகருக்கான விருது எப்பொழுதும் அவருக்கு வழங்கப்பட்டதில்லை. ‘தேவர் மகன்’ படத்துக்கு ஸ்பெஷல் ஜூரியின் விருது தரப்பட்ட பொழுது கம்பீரமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ‘செவாலியே’ விருதுக்கு பிறகு, தமிழகத்துக்கான முதல் தாதா சாகேப் பால்கே விருது இந்த மகத்தான கலைஞனுக்கு வழங்கப்பட்டது. அறுபதில் கெய்ரோ நகருக்கு சிவாஜி ஆசிய ஆப்ரிக்க நடிகர்களின் விழாவுக்கு போயிருந்தார். இவரை ஏதோ தொழில்நுட்ப கலைஞர் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான விருது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்கு என்று அறிவிக்கப்பட்ட பொழுது உணர்ச்சிவேகத்தில் விழப்போன இவரை நடிகை பத்மினி தான் தாங்கிப்பிடித்தார்.
    நடிப்பின் பால நூல்களில் ஒன்றான ஸ்டெனிஸ் லாவோஸ்கி தியரி நூலில் ‘அறுபத்தி நான்கு முகபாவங்களை காட்டும் கலைஞர்’ என்று குறிப்பிடப்படுவது சிவாஜி தான்.
    "நடிப்பு என்பது புலி வேட்டைக்கு போகிற மாதிரி,நெத்தியில் குறி பார்த்து சுடணும். இல்லைனா புலி உன்னை சாப்பிட்டுடும். அந்த பயம் இந்த நாற்பது வருசமும் என் அடி வயித்தில் இருக்கு. அதான் இன்னமும் முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு போறேன். " என்ற அவரின் வரிகளை அவர் எப்படி தன் கலையை மதித்தார் என்பதற்கு சாட்சி.
    சிவாஜியின் மரண ஊர்வலம் . மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் ஆவேசத்துடன் " இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!" என்று கதறினார்.
    நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். நிறைய நடிகர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதே சிவாஜி என்னும் மகாக் கலைஞனின் பெருமைக்குச் சான்று.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1743
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sundar Rajan

    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
    பராசக்தியிலிருந்து
    பூப்பறிக்கவருகிறோம் வரை
    அனைத்துப் படங்களிலும்,
    ... நடிகர்திலகத்தின் ஸ்டைலான போஸ் இருக்கும். அதிலும் சில படங்களில் அவர் கொடுக்கும் ஸ்டைலான போஸ், இனி யாரும் அப்படிப்பட்ட போஸ் கொடுக்க முடியாது.
    ஆனால் படத்தின் சுவரொட்டிகளில் பார்த்தோமென்றால் அந்த ஸ்டைலான போஸ் இடம் பெறாது. ஏன் என்று தெரியவில்லை.
    ஆனால்,
    இன்று நமது இதயங்கள் வெளியிடும் போட்டோவில் தலைவரின் ஸ்டைலைப் பார்க்கும் போது, நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வியப்பளிக்கிறது,
    இதோ இந்தப் போட்டோ,
    இன்பா அவர்கள் எழுதிய கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற நுாலிலிருந்து,
    சிறிய மாற்றத்துடன்,
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1744
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vasudevan

    இன்று ரொம்ப ஸ்பெஷலான ஸ்டில்.
    . இந்த ஸ்டில்லை பார்த்துப் பார்த்து வியந்து கொண்டே பதிகிறேன். ஆச்சரியம் தீர்ந்தபாடில்லை. குறைந்தபாடில்லை. என்ன ஒரு ஸ்டைல்! பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு, லேசாக தலை சாய்த்து ,படுஸ்டைலாக ஸைட் லுக் விட்டுக் கொண்டு, அம்சமான உடையில் இந்த 'ஸ்டைல் சக்கரவர்த்தி' நடக்கும் அழகை எவரேனும் வர்ணித்துவிட முடியுமா? திரு ரஜினிகாந்த் அவர்கள் இந்தக் காட்சியை பலமுறை கண்டிப்பாகப் பார்த்திருக்க வேண்டும். அவர் அப்படியே நம் தலைவரைப் பின்பற்...றி இந்த நடையை பல படங்களில் நடப்பார்.
    இந்த புதிர் முடிவில் அந்த நடையை மட்டும் வீடியோ காட்சியாக அளிக்க முயல்கிறேன். இப்படி ஒரு ஸ்டைலை அப்போதே செய்து காட்டிய நம் இதய தெய்வத்தின் மகிமையை என்னெவென்று புகழ்வது?
    எப்படித்தான் இதையெல்லாம் செய்தார்? எங்குதான் கற்றுக் கொண்டார்? இல்லை ..இல்லை...இறைவன் எதையும் கற்பதில்லை. எல்லோருக்கும் கற்றுக் கொடுப்பான் தானே! அந்த இறைவனுக்கும் கற்றுக் கொடுப்பவர் நம் இறைவன் ஆயிற்றே!
    . இந்த ஸ்டைலில் மயங்கி வீழ்ந்தவன்தான். இன்னும் மூர்ச்சை தெளியவில்லை.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1745
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    257 வது வெற்றிச்சித்திரம்

    சாதனை வெளியான நாள் இன்று

    சாதனை 10 ஜனவரி 1986

    நடிகர்திலகம்அவர்கள் நடித்த
    257வது படம் -சாதனை -வெளியான நாள்=10/1/1986.

    சாதனை படமானது தேவி பாரடைஸில் பகல் காட்சி 133 நாட்கள் ஓடியது. நாகேஷ் திரையரங்கில் 112 நாட்கள் ஓடிய ஓரே திரைப்படம்.32ஆண்டுகளுக்கு முன்பாக அன்றய காலத்திலேயே தயாரிப்பாளர் A S பிரகாசம் அவர்களுக்கு பத்து இலட்சம் இலாபம் கொடுத்த படம் என்று தினமனி கதிரில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.(தகவல் net)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1746
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    35 வது வெற்றிச்சித்திரம்

    பராசக்தி (தெலுங்கு) வெளியான நாள் இன்று

    பராசக்தி (தெலுங்கு) 11 ஜனவரி 1957
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1747
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    44 வது வெற்றிச்சித்திரம்

    பொம்மல பெள்ளி ( தெலுங்கு) வெளியான நாள் இன்று

    பொம்மல பெள்ளி ( தெலுங்கு) 11 ஜனவரி 1958

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1748
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    174 வது வெற்றிச்சித்திரம்

    மனிதனும் தெய்வமாகலாம் வெளியான நாள் இன்று

    மனிதனும் தெய்வமாகலாம் 11 ஜனவரி 1975

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1749
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    276 வது வெற்றிச்சித்திரம்

    ஞானப்பறவை வெளியான நாள் இன்று

    ஞானப்பறவை 11 ஜனவரி 1991

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1750
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vetrivel vetri

    அமெரிக்கா அரசு முறை சுற்று பயணத்தின் ஒரு கட்டமாக பிரபல அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோ அவர்களிடம் நடிகர்திலகம் உரையாடிக் கொண்டிருந்தார்.
    அப்போது சத்யஜித் ரே அவரின் படங்களை குறிப்பிட்டு இந்தியா முழுவதும் பஞ்சை பராரிகள் என்ற பொருள் பட பேசினார் பிராண்டோ.
    கொதித்து போன நடிகர் திலகம் மிஷ்டர் பிராண்டோ நீங்கள் அணிந்துள்ள உடைக்கும் என்னுடைய உடைக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா ரே அவர்கள் படமெடுத்தது உங்களுக்கல்ல எங்கள் நாட்டு அரசியல் வாதிகளுக்கு ஏழ்மைபட்ட மக்களை அடையாளம் காட்ட அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபட வேண்டவே என்று பதிலழிக்க பிராண்டோ வெலவெலத்து விட்டாராம்
    எந்த சூழ்நிஸையிலும் தாய்நாட்டை விட்டு கொடுக்காத தேசபக்தனல்லவா

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •