Page 237 of 400 FirstFirst ... 137187227235236237238239247287337 ... LastLast
Results 2,361 to 2,370 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2361
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்.
    சபாஷ்மீனாவைத் தொடர்ந்து வெளியான காத்தவராயன் இலங்கையில் நூறு நாட்களும், சேலம் மற்றும் மதுரையில் இணைந்து நூறு நாட்களும்,
    தங்கப்பதுமை சேலத்தில் 102 நாட்களும், ஷிஃப்டிங்கில் வெள்ளிவிழாவும், மதுரையில் 94 நாட்களும் , இணைந்து வெள்ளிவிழாவும் ஓடின.
    இவற்றைத் தொடர்ந்து சென்னையில் நூறு நாட்கள் ஓடிய படப்பட்டியலில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன்...






    courtesy vaannila f book
    Last edited by sivaa; 2nd June 2018 at 09:48 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2362
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கட்டபொம்மனைத் தொடர்ந்து சென்னையில் நாறு நாட்கள் ஓடிய நடிகர்திலகத்தின் படப் பட்டியலில் இன்று மரகதம்.
    கருங்குயில் குன்றத்துக் கொலை என்னும் நாவலின் திரை வடிவம்...
    படத்தில் சிறப்பு அம்சம் நடிகர்திலகம் பத்மினி இருவருக்கும் தரப்பட்டிருந்த விதவிதமான ஆடை வடிவமைப்பு.




    courtesy vaannila f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2363
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2364
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    படித்ததில் பிடித்தது:
    யுவகிருஷ்ணா
    August 5, 2017
    சிவாஜி சிலை
    ஜூலை 21, 2006.
    அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.
    சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.
    அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.
    அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.
    ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.
    சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.
    ஸ்டாப்.
    சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
    தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.
    சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.
    ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.
    தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.
    மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.
    மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.
    ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.
    “ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
    ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’
    அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’
    சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”
    திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.
    ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.
    இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு, ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.
    #######################################
    படத்தை பெரிதாக்கி பாருங்கள். நமது உள்ளத்திலிருப்பவர்தான் உள்ளே இருக்கிறார். சாலையில் நின்றவரை அகற்றி மண்டபத்தில் அடைத்தாலும், நம் உள்ளத்தில் அடைந்தவரை அகற்றுபவர் யார் இருக்கின்றார்?
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:



    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2365
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தேவிகா.. நடிகர் திலகத்தின் திரை ஜோடிகளில் தவிர்க்கவியலாத இடத்தை பெற்றவர்... பாவமன்னிப்பு படம் தொடங்கி எண்ணெற்ற சிவாஜி சினிமாக்களில் முத்திரை பதித்தவர்... இன்றும் இந்த ஜோடியை ரசிக்கும் 50 வயதை கடந்த "இளைஞர்கள்" ஏராளம்... நடிகர் திலகத்துடன் திரை அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டு இருக்கிறார் நண்பர் ப.தீனதயாளன்... அவரது கட்டுரையில் இருந்து சில விஷயங்களை பார்க்கலாம்.. நீலவானம் பட விமர்சனத்தில் ஆனந்த விகடன் தேவிகாவை கை கொடுத்த தெய்வம் சாவித்திரி அளவுக்கு உயர்த்தி எழுதியது.

    அன்புக் கரங்கள்- அன்னம் கதாபாத்திரமும், நீலவானமும் கௌரி கேரக்டரும் 1965ல் பேசும் படம் இதழால் தேவிகாவின் சிறந்த நடிப்புக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது... இப்படிப்பட்ட பாராட்டுகள் கிடைக்க நடிப்பால் பட்டை தீட்டப்பட காரணியாக இருந்த நம்மவரை மனம் நிறைந்து பாராட்டுகிறார் தேவிகா....

    ‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!
    பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.

    உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.
    சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.

    சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.

    ‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.

    அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,
    கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.

    அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.

    அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடித்துக் காட்டுகிறேன்.

    நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?

    நீ மணிமாலாவுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.

    டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவருக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.

    போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன். அவரோட நடிச்சதாலதான் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,
    ‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.

    ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.

    அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’

    அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.

    நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
    நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.

    அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தன்மை குணம்!
    திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.
    சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த நடிகர் திலகத்தின் பாராட்டு மிக மிக அபூர்வம்...

    ‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு இரண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும் என்றெல்லாம் சிலாகிக்கிறார்....
    நடிப்பு என்பது தனக்கு மட்டுமே உரித்தானது அல்ல... திறமை உள்ளவர்கள் யாராகினும் உடன் நடப்பவர்களின் நடிப்புத் திறமையை பட்டைதீட்ட தயங்கியதில்லை... காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறைதான் அவரை உயர்ந்த நடிகராக நிலை நிறுத்தி இருக்கிறது...











    courtesy jahir hussain f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2366
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    thanks vijaya raikumar f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2367
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2368
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2369
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2370
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தினகரன் வெளியிட்ட திரிசூலம் சிறப்பு மலர்....

    (senthilvel)


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •