Page 227 of 400 FirstFirst ... 127177217225226227228229237277327 ... LastLast
Results 2,261 to 2,270 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2261
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2262
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2263
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று மாலைக் காட்சி தி.நகர் கிருஷ்ணவேனி திரையரங்கில் கொண்டாட்டம்
    சவாலே சமாளி










    courtesy sekar f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2264
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தற்போது 10 மணி முதல் கலைஞர் தொலைக்காட்சியில்



    courtesy sekar f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2265
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2266
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2267
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1992ம் ஆண்டு,,,, கமல்ஹாசன் சிவாஜியோட கால்ஷீட்க்காக அன்னை இல்லம் வந்திருக்கிறார்,,, ராம்குமார் சொல்றார்,,, அண்ணே.. அப்பாவுக்கு உடல்நிலை சீராக இல்லை என்ன செய்...வது என்று தன் தர்மசங்கடத்தை கமலிடம் சொல்றார்,,, ஐயாவை உன்னைவிட கவனமாக பார்த்துக் கொள்வேன்னு உனக்கு தெரியாதா? அவர் இந்தப் படத்தில் இல்லாவிட்டால் இந்தப் படத்தையே ட்ராப் பண்ணிடுவேன் என்று கூறி சம்மதிக்க வைத்து விடுகிறார்,,, 1985ம் ஆண்டு சிவாஜி அவர்களின் நெருங்கிய நண்பர் வீராசாமி என்ற தயாரிப்பாளர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்புகிறார்,,, ரஜினியும் அந்த அண்ணன் கதாபாத்திரத்திற்கு சிவாஜி நடித்தால் தான் ஒத்துக் கொள்வதாக கூறியிருந்தார்,,, வீராசாமியும் சிவாஜியிடம் கதை சொல்லிவிட்டு ரஜினிக்கு எவ்வளவு சம்பளமோ அதே சம்பளம் உங்களுக்கு தருவதாக கூறினார்,,, சிவாஜி சம்பளத்திற்காக சம்மதிக்க மறுத்து விட்டு நட்புக்காக சம்மதிக்கிறார்,,, மேற் சொன்ன இரண்டுமே சிவாஜி அவர்களுக்கு லீட் ரோல் இல்லை,,, இருப்பினும் சிவாஜி இல்லாவிட்டால் இரண்டு சினிமாக்களுமே உயிரற்ற உடல்கள் போலத்தான் என்று அந்த இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் தெரியும் அதில் ஹீரோவாக நடித்த கமல் மற்றும ரஜினிக்கும் தெரியும்,,, வயதானாலும் சிங்கம் காட்டு ராஜா,,, அது போலத்தான் சிவாஜியும் தமிழ்திரை ராஜா,,, இதற்கு முன் கந்தன் கருணை, காவல் தெய்வம் போன்ற படங்களில் லீட் ரோல் இல்லாமல் சின்ன ரோல் செய்து அந்தந்த படங்களின் ஹீரோக்களுக்கு பெரிய ப்ரேக் கொடுத்தவர்,,, இந்த நல்லெண்ணங்கள் கொண்ட மனிதனை தமிழ் திரையுலகம் கண்டதுண்டா? சிவாஜி மட்டுமே அந்த பசும்பொன் மனதுக்கு சொந்தக்காரர்,,,,
    இதற்குமுன் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும், சத்யம், நாம் பிறந்த மண் ஆகிய படங்களில் சிவாஜி என்கிற இமயத்தோடு இணைந்து நடித்திருந்தாலும் "தேவர் மகன்" படம் ரொம்பவே ஸ்பெஷல்,,, காரணம் இந்தப் படத்திற்கு பின்னர்தான் அவர் உலக நாயகன் எனகிற பட்டம சூட்டிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார்,,, ரஜினியும ஜஸ்டிஸ் கோபிநாத், நான வாழ வைப்பேன் ஆகிய இரண்டு படங்களில் அவர் சிவாஜியுடன் இணைந்திருந்தாலும் "படிக்காதவன்" படத்திற்கு பிறகு தான் சூப்பர் ஸ்டார் என்று முன்னேறிக் கொண்டு வந்தார்,,, அதன் பிறகு விடுதலை, படையப்பா போன்ற படங்களில் இணைந்தாலும் ரஜினிக்கு திருப்புமுனைப்படம் படிக்காதவன் தான்,,, இப்படி உலக நாயகன் எனறும் சூப்பர் ஸ்டார் என்றும் இவர்களுக்கு கிரீடம் சூட்ட காரணமானவர் ஏறக்குறைய 47 ஆண்டுகளாக தமிழ் சினிமா சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி சிவாஜிதான் என்றால் அது மிகையாகாது,,, தேவர் மகனில் பெரிய தேவராக வரும் அந்த எபிஸோட்டில் வாழந்து காட்டி இருப்பார்,,,, எந்தெந்த வகை நடிப்பு எந்தெந்த காலகட்டத்திற்கு க்யூட் ஆகும் என்று கச்சிதமாக கணித்து தமிழ்த் திரை உலகிற்கு அர்ப்பணித்தவர்,,, அந்த கிராமத்து பெரிய மனிதாக அந்த மக்களுக்கு ஆப்ந்தவனாக அவர் கொடுத்திருக்கும் நடிப்பு படத்தின் தரத்தினை பன்மடங்கு உயர்த்திப்பிடித்தது,,, முதலில் இந்தப் படத்திற்கு வைக்கப்பட்ட நம்மவர் என்ற டைட்டிலை மாற்றி தேவர் மகன் என்று சிவாஜியின் பரிந்துரையால் வைக்கப்பட்டது,,, வெளிநாட்டிலிருந்து வந்த இளைய மகனை அரவணைத்து பொங்குவதாகட்டும்,,, குடியடிமை மூத்த மகனை கண்டு கலங்குவதாகட்டும் உடன் பிறந்த தம்பி காகா ராதாகிருஷ்ணனின் குரோதம் கண்டு துடிப்பதாகட்டும்,,, தம்பி மகன் நாஸரின் வஞ்சனையைக் கண்டு கொதிப்பதாகட்டும்,,, பேரப் பிள்ளைகளின் கொஞ்சல்களைக் கண்டு நெகிழ்வதாகட்டும்,, கௌதமியின் ஒட்டாத கலாச்சாரத்தை கிண்டல் அடிப்பதாகட்டும் அந்த பாதி படம் முழுக்க ஹீரோ அவதாரம் சிவாஜிதான்,,, கமல்கூட சிவாஜி ஐயா வராத சீன்களில் மட்டுமே தான் ஹீரோவாக நடித்திருப்பதாக கூறுவார்,,, உண்மையும் அதுதான்,,, அணைக்கட்டு உடைக்கப்பட்டு ஊரை புரட்டிப்போட்டு குழந்தைகள் முதற்கொண்டு வாயில்லா கால்நடைகள் வரை மடிந்து கிடக்கும் காட்சி,, மௌனமாக சோகம் மற்றும் குழப்பத்துடன் வலம் வருவாரே,,, அவரது தோள்களை அலங்கரிக்கும் அந்த சால்வையும் நடிக்கும்,, நீ ஊர் ஊராக போயிட்டு இருக்கும்போது இந்த ஐயா போயிட்டா நீ என்ன செய்வே என்று கமலிடம் கலங்கும் போது அந்த மீசையும் நடிக்கும்,,, அம்ம பய லேட்டாத்தேன் வருவே அதுவரை பொறுக்கனும் என்று கமலுக்கு அறிவுரை சொல்லும் போது அந்த உதடுகளும் நடிக்கும்,,, போற்றிப்பாரடி பெண்ணே பாடல் காட்சியில் அந்த சாப்பாட்டு பந்தி நடுவே நடந்து வரும் நடையழகு அவரது உடுப்புகளும் நடிக்கும்,, தரையில் அமர்ந்து சாப்பிட்டவாரே கௌதமியை கிண்டலடிக்கும் போதும் சரி பஞ்சாயத்தில் கமல் நிற்க ராஜாவாட்டம் மீசையை தடவியவாறு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோரணை,,, பஞ்சாயத்தில் நாசரின் பேச்சைக் கண்டு கோபமுற்று வெடுக்கென்று கார் கதவை மூடுவது,,, சங்கிலி முருகனிடம் ரயில் டிக்கட் போடுவதை கைகளாலே உணர்த்தும் சீனகளும் அப்பப்பா ஒரு நடிப்பு பாடமே நடத்தி இருப்பார்,,, பேரப்பிள்ளைகளின் மழலை சொல் கேட்டவாரே கட்டிலில் ஒருக்களித்து படுத்த படியே மரணிப்பாரே,,, அதுவரை அவர் ராஜ்யம்தான் அதன் பிறகு படம் முடியும் வரை அவரை அடியொற்றியே கமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டுத்தான் மரணிப்பார்,,, இப்போதும் அவரைப்பற்றியே பேச எழுத நிறைய விஷயங்களை விட்டு விட்டுத்தான் மரணித்திருக்கிறார்,,,
    குத் ஆர் என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக்தான் படிக்காதவன்,,, அதில் சஞ்சீவ் குமார் செய்த பிக் பிரதர் கதாபாத்திரம்தான் சிவாஜிக்கு,, வெள்ளையுடை அதற்குமேல் மஞ்சள் சால்வை இருபக்கமும் தம்பிகள் சூழ ஒருகூட்டுக்கிளியாக என்று பாடியவாரே படத்தை துவக்கி வைப்பதில் தொடங்கி கிளைமேக்ஸ் கோர்ட் சீன்ல் ஜட்ஜ் ஆக அமர்ந்து சபை நடவடிக்கைகளை கண்காணிக்கும் வரை உயிர்துடிப்புள்ள நடிப்பை வழங்கி இருப்பார்,,, பராசக்தி படத்தில் குணசேகரனாக கூண்டில் நின்று நீதி கேட்கும் போது நீதிமானாக அவரது அண்ணனே அமர்ந்து நீதி வழங்கும் கட்டாயம் இருக்குமல்லவா அது போன்ற அந்த காட்சி ,, அதில் சகஸ்ரநாமம் அமர்ந்த அதே சூழ்நிலை இதில் சிவாஜிக்கு,,, 33 ஆண்டுகளுக்குப் பிறகு அதுபோன்ற சிட்சுவேஷனில் இன்னொறு கதாபாத்திரமாக நடித்த சிவாஜி எவ்வளவு உணர்ந்து நடித்திருப்பார்,, தத்ரூபமாக அமைந்த காட்சி அவரது அனுபவத்தில் கண்டதே,,, தம்பிகளை பிரிந்த பின் வரும் சிவாஜி பார்க்கும் பார்வை எந்தவொறு இளைஞனையும் தன் தம்பி உருவத்தோடு மேட்ச் பண்ணி பார்க்கும் அளவுக்கு கூர்மையானதாக இருக்கும்,, அந்த ஏக்கம் பரிதவிப்பு அவருடைய ஸ்டேட்டஸ் இப்படி சகல உணர்ச்சிகளையும் அஸ்திரங்களாக மாற்றி அந்தந்த காட்சிகளில் பாய விட்டிருப்பார்,,, ரஜினிதான் தன் தம்பி என்று தெரிந்தும் தெரியாமலும் அவர் உணர்ந்து கொள்ள துடிக்கும் முயற்சி சூப்பர்,,, ரஜினி தான் என்ன எக்ஸ்பிரஸன்ஸ் காட்டுவது என்று தெரியாமல் சிவாஜியையே வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது சிவாஜி நடிப்பின ஆச்சர்யக்குறி! பொதுவாக தாய்மை உணர்வுகளைத்தான் வெளிக்காட்ட முடியாத உணர்வுகளை காட்ட காட்சியாக வைப்பார்கள் இதில் சிவாஜி இருக்கிறார் என்கிற தைரியத்தில் சிவாஜி ரஜினிி பாசப் போராட்ட காட்சிகளை மைய இழையால் இழைத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்,,, வருவாரா மாட்டாரா என்று திருமண மண்டபத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும காட்சியில் காரில் சிவாஜி வந்து இறங்கி நான் வந்துட்டேன்.,, மூத்தவன நானிருக்கிறேன மனமே சாந்தி கொள் என்று வாயால் சொல்லாமல் கண்களாலேயே ரஜினிக்கு சொல்லுமிடம் ரொம்பவும் கவனிக்க வேண்டிய பகுதி,,,
    தான் உட்ச நட்சத்திரமாக இருக்கும் போது வளரும் நடிகர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி இருக்கும் அப்போதும் எப்போதும் சிவாஜிக்கு அந்த கெட்ட குணங்கள் எள்ளளவும் கிடையாது,,, தான் முன்னேறிவரும் அந்த கால கட்டத்தில் தனக்கு போட்டியாளராக கருதப்பட்ட தன்னில் அடுத்த நிலை ஹீரோக்களான ஜெமினி எஸ் எஸ் ஆர் போன்ற நடிகர்களாகட்டும் பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்களான ஜெய்சங்கர் சிவகுமார் ஆகட்டும் இளையதலைமுறை நடிகர்களான கமல் ரஜினி ஆகட்டும் எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாக நடித்து வந்தவர் சிவாஜி ஒருவரே,,, கூண்டுக் கிளிக்குப் பிறகு எம் ஜி ஆர் உடன் காம்பினேஷன் ஏற்படாததற்கு எந்தக்காலத்திலும் சிவாஜி காரணமல்ல,,, இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால் தன்மீது தான் வைத்துள்ள நம்பிக்கை,,, நடிப்பின் மீது தான் கொண்ட தொழில் பக்தி,,, புதியவர்களையும் அரவணைத்து திரைத்துறைக்கு தொண்டாற்ற வேண்டிய கடமை உணர்ச்சி,,, இவையெல்லாம் கலந்த உருவம்தான் சிவாஜி,,, பொதுவாக சிவாஜிக்கு தீபாவளிப்படங்கள் செம லக்கி,,, அந்த பண்டிகை சிவாஜி சினிமாக்கள் தயாரிப்பாருக்கு பெட்டிகளை நிறைத்து இருக்கிறது,,, இந்த படிக்காதவன் படமும் தேவர் மகன் படமும் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தீபாவளிப் படங்களே,,, அந்தப்படங்கள் ரஜினியையும் கமலையும் மட்டுமா உயர்த்தியது அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு "ஜாக்பாட்" அல்லவா அடித்துக் கொட்டியது,, இரண்டு படங்களுமே தாறுமாறாக ஒடிய படங்கள்,, சாதாரண படங்களாக அமையவிருந்த இந்தப்படங்கள் சிவாஜி பங்குபெற்றதால் வேறு ஒரு "கலருக்கு" மாறிப்போனது,, வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது,, அதனால்தான் அவரின் இறுதிக் காலம் வரை தயாரிப்பாளர்கள் சிவாஜியை வேண்டி விரும்பினர்,,,,

    "படிக்காதவன்" ராஜ சேகரும்,,, " தேவர் மகன்" பெரிய தேவரய்யாவும் இன்றும் நினைவுகளில் நிற்பதற்கு சிவாஜி என்ற தூண்தான் காரணம்,,, இந்த கதாபாத்திரங்களை வேறு நடிகர்கள் யாராவது செய்திருந்தால் இந்நேரம் யாரோ எவரோ என்று பத்தோடு ஒன்றாக போயிருக்கும்,,, அதனால்தான் தேவர் மகன் தயாரிப்பாளரும் படிக்காதவன் தயாரிப்பாளரும் "சிவாஜி" தான் வேண்டும் என்று அடம் பிடித்தது புரிகிறதா? ஸோ சிவாஜி பிராண்டுக்கு எக்காலத்திலும் மார்கெட்டில் மவுசு அதிகம்தான்,,,,





    courtesy krishmurthy geetha f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2268
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2269
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2270
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •