Page 39 of 400 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #381
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post


    Sundar Rajan








    அன்புள்ள சிவாஜியவாதிகளே,

    மதுரையில் 50வது நாளை நோக்கி மாபெரும் வெற்றிநடைபோடும் மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியத்திற்கு 25.06.2017 அன்று ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்களுக்காக சிறப்பு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
    கலையுலக வரலாற்றில் பழைய படத்திற்கு ரசிகர்களுக்கு சிறப்பு டோக்கன் வழங்கப்படுவது நமது மக்கள்தலைவர் படங்களுக்கு மட்டுமே.
    தொடர்ந்து இரண்டு வாரங்களாக ரசிகர்கள் டோக்கன்... வழங்கப்பட்டு வருவது சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் ராஜபார்ட் ரங்கதுரைக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    நாளை மாலை அனைவரும் தவறாமல் ராஜபார்ட் ரஙகதுரையைக் காண வாருங்கள் மதுரை மீனாட்சிபாரடைஸ் திரையங்கிற்கு..
    வரலாறு படைத்தார் .... படைக்கிறார் ... படைப்பார்.... இது தான் உண்மையான சாதனை... எங்கள் நடிகர் திலகத்தின் மலைக்க வைக்கும் சாதனை. நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் ... rajapart rangadurai - a smash hit

    Special thanks to Siva for bringing these great news online.

    Ever NT fan

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #382
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #383
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் புனித ரம்லான் வாழ்த்துக்கள்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #384
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Ganesan Samiayya
    வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியான சிவந்த மண்.
    வெளிநாட்டின் இயற்கை அழகுடன், ஆருயிர் அண்ணன் நடிகர்திலகம் மேக்கப் இல்லாமல் நடித்த ( பட்டத்து ராணி பாடல் காட்சி தவிர படம் முழுவதும் மேக்கப் இல்லை) கலைகுரிசில் சிவாஜி இயற்கை அழகுடன் கூடிய சிவந்தமண் மக்களிடயே பெரும் வரவேற்புடன் மாபெரும் வெற்றி பெற்றது,
    நடிகர் திலகம் மேக்கப் இல்லாமல் நடித்த பல படங்கள், அனைத்தும் இமாலய வெற்றி பெற்றன,உதாரணத்துக்கு சில படங்களை குறிப்பிடுகிறேன்,
    நெஞ்சிருக்கும் வரை, மூன்று தெய்வங்கள் (வசந்தத்தில் ஓர் நாள் பாடல் காட்சி மட்டும் மேக்கப்), சிவந்தமண், பராசக்தி யில் பெரும் பகுதி மேக்கப் இல்லை,
    இன்னும் பல படங்கள்
    ........................................

    தன்நம்பிக்கையுடன் உயர்வடைந்தார்
    பிறர் சாதனையை ,பிறர் திறமையை வைத்து, தன் உயர்வை
    வளர்த்துக்கொள்ளவில்லை, குறிக்கோளை
    நிலைநாட்டவில்லை.

    தன் வெற்றியை, தன் முன்னேற்றத்தை
    தன் உயர்வை,தன் குறிக்கோளை
    தன் திறமையை வைத்து நம்பிக்கையுடன் எதிர்கொண்டு
    வாழ்வில் வெற்றிகண்டார்.
    Last edited by sivaa; 25th June 2017 at 07:17 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #385
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    S V Ramani

    அவர் ஒரு சரித்திரம் - 011
    பாபு.
    கார் பழுதாகி நிற்கும் ஒரு செல்வந்தரின் குடும்பத்தை தன் கை ரிக்ஷாவில் அவர்கள் வீட்டுக்கு சென்று சேர்கிறார் சிவாஜி. அவர்கள் அவரை உள்ளே அழைத்து அவருக்கு உணவளிக்கின்றனர். தன்னையும் மதித்து தனக்கு ஒருவேளை சாப்பாடு போட்ட செய்நன்றிக்காக அந்த நல்ல மனிதனின் குடும்பம் தலைவனை இழந்து தவிக்கும் போது,அந்தக் குடும்பம் தழைக்க காலமெல்லாம் கைரிக்ஷா இழுத்து அவர் மகளை தன் மகளாக பாவித்து, அவளைப் படிக்க வைத்து உழைப்பாலும்,முதுமையாலும் உருக்குலைந்து தன்னை முழுவதுமாக அந்தப் பெண்ணின் வாழ்வுக்காகத் தியாகம் செய்து தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் உயிர் நீக்கும் பாத்திரம் நமது நடிகர் திலகத்திற்கு.
    அவரது வாழ்விலும் காதல் மலர்கிறது. அவள் அலுவலகம் செல்பவர்களுக்கு உணவு எடுத்து செல்லும் பெண். அவளிடம் ஆசைமொழி பேசிக் காதல் புரியாமல், அவள் கொண்டு வரும் உணவுக்காக ஆசையுடன் காத்திருந்து பசியாறும் அப்பாவியாய் நடிகர் திலகம் வெளுத்துக் காட்டுகிறார். இதில் "வரதப்பா, வரதப்பா கஞ்சி வரதப்பா" என்று ஒரு டப்பாங்குத்து பாடல் வேறு. மிகவும் இயல்பாக நடனமாடுகிறார், நடிகர்திலகம். சாதாரண டப்பாங்குத்துதானே என்று அலட்சியமாக இல்லாமல், கிண்டலும் கேலியும் கலந்த முகபாவனைகள். மற்ற நடிகர்கள் இவரிடம் உருண்டை சோறு கையில் வாங்கி வாங்கித் தின்றாலும் இவரது நடிப்பு அவர்களுக்கு வரவே வராது.
    காதலியை கயவன் ஒருவன் மானபங்கப் படுத்திக் கொன்று விட, அதை பார்த்து விடுகிறார் சிவாஜி. இறந்து கிடக்கும் ஆசைக் காதலியைப் பார்க்கும்போது அவரது முகத்தில்தான் எத்தனை துக்கம். அப்படியே அது வெறியாக மாறுவதை எவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துகிறார் நமது நடிகர் திலகம். அக்கயவனைத் தாக்கும்போது அவன் இறந்து விடுகிறான். சிவாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்.
    சிறையில் இருந்த வெளிவந்த பாபுவுக்கு (இனி அவரின் பாத்திரப் பெயர் சொல்லியே அழைப்போம்) முன்பு அவருக்கு ஆதரவாக இருந்த ஹோட்டல் முதலாளி ஒரு புது கைரிக்ஷா தருகிறார். பாபு முன்பு தன்னிடம் சேர்த்து வைக்கக் கொடுத்திருந்த பணத்தில்தான் அது வாங்கியது என்றும் இனி அது அவருக்கே சொந்தம் என்றும் கூறுகிறார்.
    அவரது வாழ்க்கை ரிக்ஷா ஓட்டுவது என்றாகிறது. ஒருநாள் ஒரு சிறுமியை ஒருவன் அடிப்பது காண்டு, அவனிடமிருந்து சிறுமியைக் காப்பாற்றுகிறார். அந்த சிறுமி முன்பு தன்னை ஆதரித்த செல்வந்தரின் மகள் என்று தெரிய வருகிறது. கிழிந்த உடையுடன் இருக்கும் அவளை பார்த்து அதிர்ச்சியடையும் பாபு அவளை என்ன நேர்ந்தது என்று கேட்க, அவள் தனது தந்தை இறந்து விட்டதாகவும், தாங்கள் இப்போது ஏழைகள் என்றும் சொல்ல, அவளை அழைத்துக் கொண்டு, அவளது தாய்க்கு உணவு வாங்கி கொண்டு அவரைக் காணச் செல்கிறார். அங்கு அவரை கிழிந்த உடையில் பார்த்தவுடன், அவரது மனக்கண்ணில் முன்பு அவரை மஹாலக்ஷ்மியாக பார்த்த நினைவு தோன்றுகிறது. அப்போது நடிகர்திலகம் தமது உணர்வுபூர்வமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்து விடுகிறார்.
    அனாதரவாக இருக்கும் அவர்களை கயவர்கள் கெட்ட எண்ணத்துடன் நெருங்க, பாபு அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார். இனியும் இது போன்று நடவாதிருக்க அவர்களுக்கு காவலாக அவர்கள் வீட்டுத் திண்ணையில் வசிக்காத துவங்குகிறார்.
    அந்த சிறுமியை படிக்க வைக்கிறார். அதன்மேல் மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்.அது சாப்பிட அடம்பிடிக்கும்போது அதற்கு பாட்டுப் பாடி சோறூட்டுகிறார். இப்படத்தில் இதுதான் மிகவும் சிறந்த காட்சி. அவர் சோறூட்டி வளர்க்கவில்லை. பாசத்தை ஊட்டி வளர்க்கிறார். என்ன ஒரு வாஞ்சை! பெற்ற தாய் கூட தன்னுடைய வாஞ்சையை திலகம் போல காட்ட முடியாது.
    காலம் உருண்டோடுகின்றது. குழந்தை வளர்ந்து பெரியவளாகிறது. கல்லூரியில் படிக்க வைக்க மேலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.பழுத்த முதுமை அடைந்த பின்னரும், முதுகு வளைந்து கால்கள் அகன்று நொடித்து தள்ளாடிய ஓட்டமாய் இருமிக்கொண்டே தன்னை வருத்தி ,ஓடாய்த் தேய்ந்து, கைரிக்ஷாவண்டி இழுத்து உருக்குலைந்தபோதிலும் அவர் உழைப்பதை நிறுத்தவில்லை..
    அவள் படித்துப் பட்டம் பெற்று வரும் காட்சியைக் கண்டு மகிழ்ந்து ஓடி வந்து அவளின் தாயாரிடம் அதை சொல்லி மகிழும் காட்சியில் நடிகர்திலகம் தான் பெற்ற மகளே பட்டம் வாங்கியது போன்று ஆனந்தம் அடைகிறார். இவ்விடத்தில் அவரது நடிப்பு ரசிகர்களையும் அதே போன்று உணர வைக்கின்றது என்றால் மிகையில்லை.
    அப்பெண் காதல் வயப்படுகிறாள். காதலன் நல்ல பையன் என்றறிந்து அவனுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். அப்பையனுடைய தந்தை திருமணம் பேச குடிசைக்கு வரும்போது, சிவாஜியின் மிடுக்கும், தோரணையும், அடடா, நாடாளும் மன்னர்களிடம் கூட பார்க்க முடியாது. முதலில் திருமணத்திற்கு சம்மதிக்காமல் வீம்புடன் இருக்கும் பாபு, பின்னர் அவர்களது நல்ல குணத்தை அறிந்தவுடன் சம்மதிக்கும் காட்சியில், என்ன ஒரு பணிவு அவரிடத்தில். இந்த மாற்றத்தை முதல் முறை பார்க்கும்போது நாம் உணராமல் அவரது நடிப்பில் ஒன்றிப் போகின்றோம். பையனின் அப்பா சம்பந்தம் பேசிக் கிளம்பும்போது ஓடிச் சென்று கார் கதவை திறந்து விடும்போது அவர் முகத்தில்தான் என்ன ஒரு ஆனந்தம்.
    திருமண நாள் நெருங்கிகின்றது. பெண்ணை அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். அவரைப் பிரிய மனமில்லாமல் கலங்கும் பெண்ணைத் தேற்றி, தன் நினைவாக ஒரு நாய் பொம்மையை பரிசளித்து அனுப்புகிறார். தான் பின்னால் வருவதாக கூறி அவர்களை வழியனுப்பி வைக்கிறார். உருக்குலைந்த தோற்றத்துடன் திருமணத்தை காண ஆவலுடன் வரும் அவரை, பிச்சைக்காரர் என நினைத்து விரட்டியடிக்கின்றனர். பிச்சைக்காரர்களுக்கு தனிப் பந்தி போட்டு சாப்பிட அழைக்கும்போது, ஆனந்தத்துடன் சென்று அமர்கிறார். துளியும் வருத்தமில்லை அவரிடத்தில்.
    அவர்களுக்குப் பரிமாற வந்த பெண், மாப்பிள்ளை, இவரது இருமல் சத்தம் கேட்டு இவரை கண்டு கொள்கின்றனர். அனைவரும் வருந்துகின்றனர். அவரது ஆசீர்வாதம் வேண்டுமென அனைவரும் வேண்டிக் கேட்க, தனது பெண்ணைப் போல ஆசீர்வாதம் வழங்கும்போது அவரது குரலில்தான் என்ன ஒரு பாவம். உணர்ச்சிப் பெருக்குடன் அவர் பேசும் வசனங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. ஆசி வழங்கியவாறே பெண்ணை, தான் முதல் முதல் கண்ட சிறுமியாக, சற்று வளர்ந்த பெண்ணாக,கல்லூரி மாணவியாக மனக்கண்ணில் கண்டவாறே அவரது உயிர் நின்றுவிடுகிறது. அங்கு இருப்பவர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும்தான் அந்த இழப்பைக் காண முடியாது கண்கலங்குகிறார்கள். அத்துடன் படம் முடிவடைகிறது. நாம் கனத்த இதயத்துடன்தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.
    எல்லாவற்றுக்கும் மேல் முதுமைத் தோற்றத்தைக் கொண்டுவருவதற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாடி ஒட்டி, முகம் ரணகளமாக சுருக்கங்கள் ஏற்றி ,அந்த இளம் வயதில் கண்களை ஒளி குன்றச் செய்து ஒரு அழுக்குக் கைலியையும், கிழிந்த சட்டையும் அணிந்துகொண்டு மேக்-அப் என்ற பெயரில் தன் மேனியினை நோக வைத்து அரும்பாடுபட்டும் பட்டபாட்டிற்கு பலனே இல்லாமல், சொந்த மண்ணில்லேயே நிராகரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட எங்கள் அப்பாவி பாபுவை (நடிகர் திலகத்தை) யாராலும் மறக்க முடியாது. இன்றும் என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார் எங்கள் பாபு. ரிக்ஷாக்காரனாக நடிக்கவில்லை, வாழ்ந்தே காட்டுகின்றார்.
    ஜெய் ஹிந்த்!

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #386
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில் " வெள்ளை ரோஜா"

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #387
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sivaji Palanikumar

    6வதுவாரம்.
    ஆராவாரம்.
    ராஜபார்ட்ரங்கதுரை.வெல்கசிவாஜிபுகழ்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #388
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #389
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #390
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •