Page 51 of 400 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #501
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas


    சவாலே சமாளி
    03.07.1971 அன்று வெளியாகி இன்று (03.07.2017) 46 வருடங்களை நிறைவு செய்யும் சவாலே சமாளி பற்றி ஒரு சிறு குறிப்பு.
    மல்லியம் ராஜகோபால் தயாரித்து இயக்கிய சவாலே சமாளி நடிகர் திலகத்தின் 150-வது படமாக வெளிவந்தது. படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு படம் வெளிவந்த நேரத்தில் நடந்த இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வரும். ஒன்று எங்கள் மதுரை சம்மந்தப்பட்டது. மற்றொன்று படவிழா. மதுரை ஸ்ரீதேவியில் 1971 ஜூலை 3 சனிக்கிழமையன்று படம் வெளியானது. சாதாரணமாக சனிக்கிழமை 4 காட்சிகள். ஓபனிங் ஷோ காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும். ஆனால் அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கப்பட்டது. காரணம் 1971 மார்ச் 26 அன்று மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் குலமா குணமா அந்த ஜூலை 3 அன்றுதான் 100வது நாளை நிறைவு செய்கிறது. எனவே 100வது நாளை நிறைவு செய்வதற்காக அன்றைய காலைக் காட்சி மட்டும் குலமா குணமா திரையிடப்பட்டது. இரண்டு விநியோகஸ்தர்களும் ஒப்புக் கொண்டு செய்த ஏற்பாடு. இந்த திட்டத்தின்படி அன்று சவாலே சமாளி 3 காட்சிகள் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த விவரம் தெரியாத பலர் தியேட்டரின் முன் குவிந்துவிடவே கட்டுக்கடங்காத கூட்டமாக மாறிவிட்டது. அதை சமாளிக்க இந்த படம் நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அதுவரை புதுப்பட ரிலீஸில் இந்த ரீதியில் ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை.
    இரண்டாவது படம் வெளியான 8வது நாள் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரத்தில் நடிகர் திலகத்தின் 150வது படவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகமெங்கிலுமிருந்து கலந்துக் கொண்டனர். மிக பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடிகர் திலகம் மேடையில் நின்று பார்வையிட்டார். எப்போதெல்லாம் நமது விழா நடக்கிறதோ அதில் ஒரு தினம் அரசியல் மாநாடாகவும் ஒரு தினம் கலையுலகை சேர்ந்தவர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் நடைபெறும். திருச்சியிலும் அப்படியே நடந்தது. அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பெருந்தலைவர் தலைமை தாங்க அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். கலை விழாவில் அனைத்து கலைஞர்களும் கலந்துக் கொண்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டு சவாலே சமாளி 75 நாட்களை கடக்கும் நேரத்தில் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நினைவில் நிற்கும் ஒரு ஞாபக தீற்றல் என்னவென்றால் இரண்டு நாள் மாநாடு நடைபெறும்போதும் பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு சென்று விட்டபோதிலும் அந்த இரண்டு நாட்களிலும் மதுரையில் கூட்டம் சற்றும் குறையவில்லை. அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது.
    இனி படத்திற்கு வருவோம். படம் வெளியான போது அல்லது மறு வெளியீடுகளில் படம் பார்த்ததை பற்றி சொல்லப் போவதில்லை. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு அதாவது 2013 செப்டம்பரில் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது உடலாண்ட்ஸ் அரங்கில் ஒரு காட்சியும் சத்யம் அரங்கில் ஒரு காட்சியும் திரையிடப்பட்டது. சத்யத்தில் நான் பார்த்தேன். அந்த நேரம் என் மனதில் தோன்றிய எண்ணங்கள் முழு படத்தையும் பற்றி பேசப் போவதில்லை. குறிப்பாக இரண்டே இரண்டு காட்சிகள். அதை பற்றிய ஒரு மினி விமர்சனம்.
    ஒன்று முதல் இரவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மனைவி ஆகி விட்ட நாயகியுடன் மனம் திறந்து பேசும் காட்சி. அதுவரை ஒரு பிடிவாத குணம் கொண்ட ரோஷகார இளைஞன் மாணிக்கம் என்ற முறையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகியிருப்பார். அந்தக் காட்சியில்தான் தான் நாயகி மேல் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவார்.[உன்னை மொத மொத பார்த்தபோதே என் மனசை பறி கொடுத்துட்டேன்] தானும் அவளும் எப்படி இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லுவார். நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் உண்மையான ஜனநாயக சோஷலிசம். இதைதான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க.[இந்த வசனம் வரும்போது 1971 ஜூலை மாதம் ஸ்ரீதேவியில் எழுந்த கைதட்டல் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது]. உன்னளவிற்கு நானும் படிச்சிருக்கேன். ஆயிரம் வயலை உழுதவ்னும் ஆயிரம் புத்தகங்களை படிச்சவனும் ஒன்னும்பாபாங்க.
    இந்த டயலாக் டெலிவரி எல்லாம் தியேட்டரில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த modulation, முக பாவம், உடல் மொழி எல்லாமே அற்புதமாக இருக்கும். பேசிக் கொண்டே வெகு இயல்பாக தோளில் கை வைக்க அதை படாரென்று தட்டி விட்டு என்னை தொடாதீங்க என்று கோபாவேசமாய் பேசும் JJ-வை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, இனி நீயா வந்து என்னை தொடரவரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன் என்று சொல்லி விட்டு போகும் அந்த look பிரமாதம். அன்றைய தினம் இந்தக் காட்சியோடு இடைவேளை விட்டதால் இதைப் பற்றியே நானும் சாரதியும் கிருஷ்ணாஜியும் பேசிக் கொண்டிருந்தோம்.
    இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி. எனக்கு உங்கிட்டே பிடிச்சதே அந்த பிடிவாதம்தான். ஏன்னா நானும் பிடிவாதக்காரன். உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்னுடைய மனைவி ஆன பின்னாடி என்னுடைய வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்தறதுக்கு உனக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா நான் உன்னை கொடுமைப்படுத்தறதா நீ நினைச்சுக்கிட்டே. நான் எப்ப தூங்குவேன்னு நீ பார்த்துட்டிருந்தே நீ எப்ப ஏம்மாத்துவேனு நான் பார்த்துட்டிருந்தேன்.
    இந்த வசனங்களை எல்லாம் [நான் மேலே எழுதின வசனங்கள் படத்தில் verbatim ஆக இருக்காது] அவர் பேசும் போது பார்க்க வேண்டுமே! இத்தனைக்கும் இரண்டு மூன்று ஷாட்களுக்குள் மொத்த காட்சியும் வந்து விடும். ஆனாலும் continuity miss ஆகாமல் உணர்வுகள் அப்படியே அந்த வார்த்தை பிரயோகங்களில் வந்து விழும் அந்த modulation! என்ன ஒரு மேதமை!
    நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
    இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
    எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
    குறிப்பிடத்தக்க மற்றொரு நபர் நாகேஷ். சின்ன பண்ணையாக பெரிய பண்ணை T.S பகவதியுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் அந்த character-ஐ ஜாலியாகவும் வெகு இயல்பாகவும் செய்ய நாகேஷை விட்டால் யார் இருக்கிறார்கள்? பண்ணைக்கு ஆதரவாக பேசுவது போல் சிவாஜியின் மாணிக்கம் character-க்கு lead எடுத்துக் கொடுப்பது [ஏம்பா, தேர்தலிலே தோத்தா பணம் கொடுக்காம அவர் பெண்ணையா உனக்கு கொடுப்பார்?] எல்லாம் அக்மார்க் நாகேஷ். சரியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் படங்களில் நாகேஷ் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். 1965 ஜூலை திருவிளையாடல், 1968 ஜூலை தில்லானா, 1971 ஜூலை சவாலே சமாளி!
    மொத்தத்தில் அந்த ஞாயிறு நண்பகல் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் அற்புதமான பாத்திர சித்தரிப்பினால் மனம் குளிர்ந்து மகிழ்ந்தது.
    அன்புடன்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas

    நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part I

    நம்முடைய முகநூலில் வேறொரு நண்பரின் தளத்தில் கர்ணன் பற்றியும் நடிகர் திலகம் பந்துலு நட்பு பற்றியும் வந்த கேள்விகளுக்கு சற்றே விரிவாக பதிலளித்தேன். இங்கே நமது நடிகர் திலகம் ரசிகர்கள் குழுவில் இருக்கும் நண்பர்கள் ஜோ, ஜாஹிர் மற்றும் தமீம் சார் போன்றவர்களும் அந்த விவாதத்தில் பங்கு பெற்றனர். முதலில் எழுதியிருப்பது கர்ணன் முதல் வெளியீட்டில் தோல்வி அல்ல என்பதற்கான ஆதாரங்கள். பிறகு ஒரு ஒப்பீட்டிற்காக அதே 1964 வருட தீபாவளி படங்களின் ஓடிய விவரங்கள், அதன் பிறகு அந்த நண்பர் கப்பலோட்டிய தமிழன், கர்ணன் மற்றும் முரடன் முத்து படங்களின் வணிக வெற்றியைப் பற்றிய எழுப்பிய கேள்விகளுக்கு பதில் என ஒரு நீண்ட விளக்கம். அந்த காலக்கட்ட நிகழ்வுகள் பலரும் அறியாத ஒன்று என்பதனால் அதை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன்
    இது காலம் காலமாய் சொல்லபப்ட்டு வரும் தவறான தகவல்தான். இப்போதும் அதை சொல்கிறார்கள் என்பதிலதான் கர்ணனின் வெற்றியே அடங்கியிருக்கிறது. கர்ணன் சென்னையில் சாந்தி, சயானி, பிரபாத் ஆகிய மூன்று அரங்குகளில் நூறு நாட்களை கடந்தும்,தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கத்தில் 108 நாட்கள், கோவை கர்நாடிக்கில் 80 நாட்கள், திருச்சி சேலம் போன்ற நகரங்களில் 75 நாட்களையும் தாண்டியது. இவை தவிர பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் 60 நாட்கள்/(ஏன் சென்னை நகரில் ஓடிக் கொண்டிருக்கும்போதே சென்னையின் புறநகர் பகுதியான பல்லாவரம் ஜனதாவில் 44 நாட்கள் ஓடியது). இப்படி ஓடிய படம் தோல்வி என்று சொன்னால் அது வேண்டுமென்றே சொல்வது என்பது புரியும். வேட்டைக்காரன் சென்னை மற்றும் சேலம் தவிர எந்த ஊரிலும் 100 நாட்கள் ஓடவில்லை. (சென்னையிலும் கூட படத்தை வெளியிட்டது எம்ஜியார் பிச்சர்ஸ்! எனும்போது) ஆகவே அது தோல்வி என்று சொல்லலாமா? இல்லை கர்ணன் படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்ற வாதத்தை முன் வைத்தால்,என் கேள்வி இதுதான். நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல், அதைத்தவிர 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் 60 முதல் 80 வரை ஓடிய கர்ணன் தோல்வி படம் என்றால், அதே அளவிற்கு தயாரிப்பு செலவு செய்து எடுக்கப்பட்டு சென்னையில் மட்டும் 100 நாட்கள் ஓடிய (இங்கேயும் எம்ஜியார் பிச்சர்ஸ் தான் வெளியீடு) வேறு எந்த ஊரிலும் 100 நாட்கள் ஓடாத ஆயிரத்தில் ஒருவன் மட்டும் எப்படி வெற்றி படமாக முடியும்? நான் முதலில் சொன்னது போல 53 வருடங்களாக இந்த தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கர்ணனின் வெற்றி வீச்சு விளங்கும்.
    டிஜிட்டல் கர்ணன் மட்டுமல்ல எப்போதெல்லாம் கர்ணன் மறு வெளியீடு கண்டதோ அப்போதெல்லாம் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. மதுரையை மட்டும் எடுத்துக் கொண்டால் 1972-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தினமணி அரங்கில் திரையிடப்பட்டு 4 வாரங்கள் ஓடியது. அங்கேயிருந்து தொடங்கி நகரிலும் வெளியூர்களிலும் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடியது. 1978 நவமபரில் மதுரை மீனாட்சியில் திரையிடப்பட்டு தொடர்ந்து 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது. புது படத்திற்கு கொடுப்பது போல ஒரு பழைய படத்திற்கு மன்ற டோக்கன் கொடுக்கப்பட்டது அதுதான் முதல் முறை. 2005 மார்ச்சில் மதுரை சென்ட்ரலில் வெளியாகி இரண்டே வாரங்களில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் ரூபாய் விநியோகஸ்தர் பங்காக அளித்திருக்கிறது. விளமபரம் இணைத்துள்ளேன். டிஜிட்டல் கர்ணன் சாதனை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. .
    1964 பொங்கலை பற்றி பேசும்போது 1964 தீபாவளியைப் பற்றியும் பேசலாமே. நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியமான நவராத்திரியோடு சேர்ந்து 03.11.1964 அன்று வெளியான கலர் படம் படகோட்டி எந்த ஊரிலும் வெற்றி பெற முடியவில்லையே. சென்னையில் மிட்லண்ட், மகாராணி,உமா மற்றும் ராம் ஆகிய நான்கு அரங்குகளிலும் மதுரை ஸ்ரீதேவி மற்றும் திருச்சி சென்ட்ரலிலும் நவராத்திரி 100 நாட்கள் ஓடியது. படகோட்டி சென்னை பிளாசாவில் மட்டும் 100 நாள். அதுவும் 12 வாரத்தில் எடுக்கப்பட இருந்தது. ஒரு இந்தி படம் வெளியிட இருந்த நேரத்தில் 1965 ஜனவரி 25 அன்று ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் இந்தி படம் வெளியிடப்பட முடியாமல் இந்த படத்தையே தொடர "அன்போடு" உத்தரவு வர இந்த ஒரு திரையரங்கில் மட்டும் 100 நாட்கள். கோவையில் நவராத்திரி மற்றும் படகோட்டியோடு சேர்ந்து அதே தீபாவளி நாளில் வெளியான நடிகர் திலகத்தின் மற்றொரு படமான முரடன் முத்து ஓடிய நாட்கள் 79. படகோட்டி ஓடியது 45 நாட்கள். சாதனைகள் யார் பக்கம் என்பது இதிலிருந்து விளங்கி கொள்ளலாம்.
    நடிகர் திலகம் -பந்துலு நட்பு என்பது 1954-ல் கலயாணம் பண்ணியும் பிரம்மச்சாரி முதல் தொடங்கியதாகும். 10 வருடங்கள் தொடர்ந்து அந்த கூட்டணி பயணித்துக் கொண்டேயிருந்த நேரத்தில்தான் 1964-ல் அந்த பிரிவு ஏற்படுகிறது. ஒரு வேளை அந்த பிரிவு ஏற்படாமல் இருந்திருந்தால் நடிகர் திலகத்தை வைத்து அதிக படங்களை தயாரித்த பெருமை பந்துலுவை சேர்ந்திருக்கும். அந்த பெருமை இறுதி வரை துணை நின்ற பாலாஜிக்கு கிடைத்தது. சிவாஜி நாடக மன்றத்தால் நடத்தப்பட்ட கட்டபொம்மன் நாடகத்தை பந்துலு திரைப்படமாக தயாரித்ததும் அது பெற்ற மகத்தான வெற்றியும் நமக்கு தெரியும். 1959 மே 16 அன்று வெளியான கட்டபொம்மன் திரைப்படம் 27 சென்டர்களில் 100 நாட்களை நெருங்கும்போது நடிகர் திலகத்தின் அடுத்த படமான மரகதம் 1959 ஆகஸ்ட் 21 அன்று வெளியாக கட்டபொம்மன் 14 திரையரங்குகளிலிருந்து 97 நாட்களை நிறைவு செய்த நிலையில் மரகத்திற்க்காக எடுக்கப்பட்டது. கட்டபொம்மன் மதுரை நியூசினிமாவில் 181 நாட்கள் ஓடியது. அதற்கு அடுத்தபடியாக தயாரிக்கப்பட்டதுதான் கப்பலோட்டிய தமிழன். இடையில் நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த பந்துலு தயாரித்த குழந்தைகள் கண்ட குடியரசு 1960 -ம் ஆண்டு வெளியாகிறது..பந்துலுவின் மற்றொரு படமான ஸ்கூல் மாஸ்டர் படத்திலும் நடிகர் திலகம் சிறப்பு தோற்றம் ஏற்று நடித்தார். இந்த இரண்டு படங்களும் தமிழ் தவிர மற்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது. கப்பலோட்டிய தமிழன் 1961 நவம்பர் 7 தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த 1961-ம் ஆண்டில்தான் நடிகர் திலகத்தின் மூன்று பா வரிசை காவியங்கள் வெளியாகிறது [பாவ மன்னிப்பு, பாச மலர் மற்றும் பாலும் பழமும் ஆகிய மூன்று படங்களுமே 1961 என்ற ஒரே காலண்டர் வருடத்தில் வெளியானது என்பதே பலருக்கும் புதிய செய்தியாக இருக்க கூடும்]. நம்மோடு வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகியின் சுய சரிதம் திரை வடிவம் பெற்றபோது அந்த பா வரிசை படங்களின் பாதிப்பில் இதை மக்கள் முழு மனதோடு ஏற்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அதாவது ரஹீம், ராஜசேகர் மற்றும் Dr ரவி என்ற மூன்று கற்பனை கதை மாந்தர் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்த நிஜம் பெற வேண்டிய வரவேற்பை பெறவில்லையோ என்பது என் எண்ணம். நடிகர் திலகம் என் உயிரே இந்தப் படத்தில்தான் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் முதல் 25 நாட்களில் 40 லட்சம் பேர் இந்த படத்தை பார்த்ததாக பந்துலுவே விளமபரம் கொடுத்திருக்கிறார். விளம்பரத்தை இணைத்துள்ளேன். அதை வைத்து பார்க்கும்போது படம் வணிக ரீதியாக நட்டம் ஏற்படுத்தியது என்று சொல்லப்படுவதில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கிறது. அதிக பட்சமாக எங்கள் மதுரையில் 10 வாரங்கள் ஓடுகிறது. ஆனாலும் தனக்காக பந்துலு இதை எடுத்ததன் காரணமாக உடனே பணம் பெற்றுக் கொள்ளாமல் பலே பாண்டியா படத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறார். அதுவும் அமெரிக்கா அரசின் அழைப்பின் பெயரில் இரண்டு மாதம் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் 1962 மார்ச் 2 முதல் 13 வரை கால்ஷீட். அதுவும் மூன்று வேடங்கள் கடைசி நாள் ஷூட்டிங்கில் (மாலை அவருக்கு விமானம் என்றால்) மதியம் வரை நடித்து விட்டு (அன்றுதான் வாழ நினைத்தால் வாழலாம் பாடல் எடுத்தார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்) வீட்டிற்கு கூட போகாமல் நேரே விமான நிலையம் போய் விட்டாராம். கமலாம்மாவையும் குழந்தைகளையும் நேரே ஏர்போர்ட் வர சொல்லி பார்த்துவிட்டு போனாராம். அப்போதும் பந்துலுவிற்கு லாபம்தான்.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. Thanks Gopal.s thanked for this post
  5. #503
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas






    நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part II


    இதன் பிறகுதான் கர்ணன் ஆரம்பிக்கப்படுகிறது. அதற்கு நடிகர் திலகம் கொடுத்த ஒத்துழைப்பு அளவிடமுடியாதது. எப்படி என்று சொல்கிறேன். கர்ணன் படத்துக்காக மொத்த குழுவும் ஜெய்பூர் போயிருக்கிறார்கள். இரண்டு மாதம் ஷூட்டிங். இது நடபபது 1963 ஜூலை ஆகஸ்ட் மாதங்களில். அந்த நேரம் பாசமலர் படம் எடுத்த ராஜாமணி பிக்ச்ர்ஸ் அடுத்த படமான குங்குமம் எடுத்து திரையிடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். 1963 ஆகஸ்ட் 2 படம் வெளியாக இருக்கிறது. படம் சென்சாருக்கு செல்கிறது. கதைப்படி நடிகர் திலகத்தின் தந்தை வேடத்தில் ரங்காராவ் மற்றும் முறைப்பெண் மாமன் மகளாக விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத சூழலில் கூட இருக்கும் வில்லன் OAK தேவர் சூழ்ச்சியால் ரங்காராவ் கொலை செய்வது போல் வரும். அங்கு தற்செயலாக வரும் நடிகர் திலகம் தன தந்தையை தப்பிக்க விட்டு, தான் கொலைப் பழியை ஏற்றுக் கொள்வார். போலீசிடம் தன் தந்தை மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக ஒரு கட்டத்தில் விஜயகுமாரியின் தந்தையாக ரங்காராவை நடிக்க வைப்பார். படம் தணிக்கைக்கு சென்றபோது இந்த திரைக்கதையமைப்பு தணிக்கை அதிகாரிகளுக்கு புரியாமல் போக அது எப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே தந்தை இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பி அவர்கள் பல காட்சிகளிலும் கத்திரி போட்டு விட்டனர். இயக்குனர்களும் தயாரிப்பாளரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தணிக்கை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்து விட பல காட்சிகள் வெட்டப்பட்டதினால் படத்தின் சீரான ஓட்டம் தடைப்பட்டு பல ஜம்ப்கள் ஏற்பட்டன. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ரீஷூட் செய்ய வேண்டும் என்ற நிலை. படம் தணிக்கைக்கு செல்வது 1963 ஜூலை 19 அன்று. படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தேதி 1963 ஆகஸ்ட் 2. தமிழகமெங்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.
    சோதனையாக அந்நேரம் நடிகர் திலகம் கர்ணன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்றிருந்தார். இரண்டு மாத schedule. நடிகர் திலகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அங்கே ஜெய்பூர் படப்பிடிப்பை விட்டு விட்டு வந்தால் பந்துலுவிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் தன்னால் வர முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் குங்குமம் படத்தின் ரீஷூட் என்றால் அனைத்து ஆர்டிஸ்ட் combination கால்ஷீட் வேண்டும். ஆகவே அதுவும் பிரச்சனை. இங்கே கர்ணன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வந்தால் ஏற்படக்கூடிய நஷ்டம். ஆகவே இதற்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டு கர்ணன் படப்பிடிப்பு முடிந்து தான் வந்தவுடன் ரீஷூட் வைத்துக் கொள்ளலாம். இதற்கு விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இரண்டாவது வழியாக இப்போது இருக்கும் படத்தையே எடிட் செய்து திரையிட வேண்டியதுதான் என்று சொல்லியிருக்கிறார். விநியோகஸ்தர்களும் அரங்க உரிமையாளர்களும் இரண்டு மாத காலம் காத்திருக்க தயாராக இல்லாத காரணத்தினால் இருக்கும் காட்சிகளை எடிட் செய்து முன்னரே அறிவித்தபடி 1963 ஆகஸ்ட் 2 அன்று படம் வெளியானது. படத்தின் திருப்பங்களை புரிந்துக் கொள்ளும் இடத்தில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட காரணத்தினால் சாதாரண மக்களுக்கு கதையமைப்பை புரிந்துக் கொள்வதில் கஷ்டம் ஏற்பட்டது. படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த இடத்தில ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். குங்குமம் படத்தை தயாரித்தது ராஜாமணி பிச்சர்ஸ் சார்பில் மோகன் ஆர்ட்ஸ் மோகன். கிட்டத்தட்ட சொந்தப படம். படத்தை இயக்கியவர்களோ நடிகர் திலகத்தை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். அப்படிப்பட்ட சூழலில் கூட பந்துலுவிற்கு பிரச்னை வரக்கூடாது என்று எண்ணி நடந்தவர் நடிகர் திலகம். ஆனால் பந்துலு செய்த பதில் மரியாதையோ?
    கர்ணன் வெளியாகி எப்படி ஓடியது என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதில் மற்றொரு விஷயமும் அடங்கியிருந்தது. கட்டபொம்மன் வெற்றி வீச்சை முன்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. கட்டபொம்மன் படத்தை பந்துலு அனைத்து ஏரியாகளுக்கும் விநியோகஸ்தர்களுக்கு outright முறையில் (5 வருடங்களுக்கு) விற்று விட்டார். அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் அபரிமிதமான லாபம். அதை பார்த்த பந்துலு கர்ணனை யாருக்கும் கொடுக்காமல் தானே நேரிடையாக வெளியிட்டார். பல விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக்கொண்டு விலை கேட்டபோதும் பந்துலு கொடுக்கவில்லை. அதுதான் அவர் செய்த தவறு. மொத்தம் 9 ஏரியாகளுக்கும் அவர் outright கொடுத்திருந்தால் படம் வெளியாவதற்கு முன்பே அவருக்கு லாபம் வந்திருக்கும். தனிப்பட்ட 9 விநியோகஸ்தர்களும் லாபம் பார்த்திருப்பார். பந்துலு அதை செய்யவில்லை. இதனால் என்ன நட்டம் என்றால் இன்றைய தினம் போல் 300 பிரிண்ட்கள் கிடையாது வெறும் 36 பிரிண்ட்கள்தான் வெளியானது (அதுதான் அன்றைய நார்மல் ரிலீஸ்). இதனால் பந்துலுவிற்கு வரவேண்டிய returns (இங்கே நான் குறிப்பிடுவது share) சின்ன துளியாக வர ஆரம்பித்தது. அதுவும் தவிர அந்தந்த ஏரியா விநியோகஸ்தர் வெளியிட்டாலே நகரம் தாண்டிய மொபஸலில் தியேட்டர்காரர்கள் விநியோக பிரதிநிதியை கையில் போட்டுக் கொண்டு எளிதாக வசூலை குறைத்து காண்பித்துவிடுவார்கள். அப்படியிருக்கும்போது இவர் சென்னையில் உட்கார்ந்து எப்படி கண்காணிக்க முடியும்? ஆகவே அந்த வகையிலும் இவருக்கு பண வரவு ஸ்லோவாக இருந்தது.அப்போதும் நடிகர் திலகத்திடம் வருகிறார். விநியோகத்தில் நடைபெற்ற குளறுபடி என்ற உண்மை தெரிந்தும் கூட நடிகர் திலகமும் வி.சி சண்முகமும் உடனே கால்ஷீட் அதுவும் பணம் வாங்கி கொள்ளாமல் கொடுக்கின்றனர். அப்படிதான் முரடன் முத்து ஆரம்பிக்கப்படுகிறது. குறைந்த செலவில் ஒரு கிராம கதை. செலவை குறைப்பதற்காக மெல்லிசை மன்னர்களை தவிர்த்து T G லிங்கப்பாவை இசை அமைக்க வைக்கிறார் பந்துலு.
    இது நடப்பது 1964 மத்தியில். கர்ணன் 1964 ஜனவரி 14 அன்று வெளியாகிறது. நடிகர் திலகத்தின் அடுத்த படம் பச்சை விளக்கு ஏப்ரல் 3 அன்று வெளியாகிறது. அதற்கு அடுத்து ஆணடவன் கட்டளை ஜூன் 12 அன்று வெளியாகிறது. ஜூலை 18 கை கொடுத்த தெய்வம் ரிலீசாகிறது. இதே சமயத்தில் புதிய பறவை, முரடன் முத்து, பழனி, அன்புக்கரங்கள், சாந்தி மற்றும் நடிகர் திலகத்தின் பல்வேறு படங்கள் படப்பிடிப்பில் இருக்கின்றன. அந்த நேரத்தில் இயக்குனர் ஏபிஎன் நடிகர் திலகத்தை அணுகுகிறார். முதலில் விகேஆருடன் சேர்ந்து லட்சுமி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஏபிஎன் ஒரு சில கருத்து வேறுபாட்டினால் விலகி விஜயலட்சுமி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் சார்பில் எடுக்கவிருக்கும் படத்திற்கு கால்ஷீட் கேட்கிறார். நடிகர் திலகமோ உடனே நடித்துக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறார். மேலே சொன்னது போல் பல்வேறு commitments. ஆனாலும் ஏபிஎன் சொன்ன கதை அவருக்கும் சண்முகத்திற்கும் பிடித்துப் போகிறது. உடனே ஏபிஎன் இந்த கதையே ஒன்பது ராத்திரிகளில் நடப்பதாக திரைக்கதை அமைத்திருக்கிறேன். ஆகவே எனக்கு நைட் கால்ஷீட் கொடுத்தால் கூட போதும் என்கிறார். ஒப்புக் கொண்டு படம் ஆரம்பிக்கபப்டுகிறது. இந்த சூழலில் பிலிம் நியூஸ் ஆனந்தன் நடிகர் திலகத்தையும் சண்முகத்தையும் சந்தித்து கை கொடுத்த தெய்வம் நடிகர் திலகம் நடித்து வெளிவந்துள்ள 97வது படம் என்றும் 100 படங்களுக்கு இன்னும் மூன்று மட்டுமே பாக்கி இருப்பதாக தெரிவிக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு நடிகர் 100 படங்களில் கதாநாயகனாகவே நடிப்பது என்பது அப்போதுதான் முதன் முறையாக நடக்கப் போகிறது.[மலையாளத்தில் நசீர் இதை செய்திருந்தாலும் அவர் ஆரம்ப காலத்தில் மலையாளத்திலும் தமிழிலும் துணை வேடங்கள்தான் செய்தார் என்பதனால் அதை விட்டு விடலாம்]. 1964 செப்டம்பரில் புதிய பறவை வெளியாவதற்கு தயாராக இருக்கிறது. அது 98-வது படமாக அமையும்.
    இந்த நேரத்தில் இந்த செய்தியை கேள்விப்படும் பந்துலு முரடன் முத்து படத்தை 100-வது படமாக அறிவிக்க சொல்கிறார். நடிகர் திலகமும் சண்முகமும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. 100-வது படம் என்ற ஒரு முக்கியமான நிகழ்வு நடக்க இருக்கும்போது அது குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தால் நன்றாக இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு பொருத்தமாக நவராத்திரி அமைகிறது. முதன் முறையாக ஒரு நடிகர் 9 வேடங்களில் நடிக்கும் படம் என்ற தனி சிறப்பும் இருக்கிறது. ஆகவே அந்த படத்தை 100-வது படமாக அறிவிக்கலாம் என சொல்கிறார்கள். நடிகர் திலகம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பந்துலு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய காரியத்திலே குறியாய் இருக்கிறார். நடிகர் திலகம் நினைத்திருந்தால் இந்த இரண்டு படங்களையும் விட்டு விட்டு புதிய பறவை படத்தை 100-வது படமாக அறிவித்து வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. திட்டமிட்டபடி புதிய பறவை செப்டம்பர் 12 அன்று வெளியானது. இதே நேரத்தில் இந்த செய்திகளெல்லாம் ராமாவரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. எப்படியடா நடிகர் திலகம் பக்கம் இருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர்களையெல்லாம் தம் பக்கம் திருப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது அல்வா சாப்பிடுவது போல் ஆகிறது. முரடன் முத்து படப்பிடிப்பில் கூடவே இருந்த அசோகன் மூலமாக குணச்சித்திர நடிகையும் பந்துலுவின் இரண்டாவது மனைவியுமான M V ராஜம்மா வழி பந்துலு அணுகப்படுகிறார். அனுதாப வார்த்தைகளும் ஆசை வார்த்தைகளும் சொல்லப்பட்டு முகாம் மாறி வந்தால் ஏக் தம் கால்ஷீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.100-வது படமாக தன் படம் வராது என்று உறுதியானவுடன் பந்துலு முகாம் மாறுகிறார். புதிய படம் துவக்க வேலைகள் ஜரூராக நடக்கிறது. முன்னர் திட்டமிட்டபடியே நவராத்திரி முரடன் முத்து இரண்டுமே 1964 நவம்பர் 3 தீபாவளியன்று வெளியாகிறது. அதே நாளில் பத்மினி பிச்சர்ஸ் தங்கள் அடுத்த தயாரிப்பு என்று ஆயிரத்தில் ஒருவன் பட விளமபரம் வருகிறது. முரடன் முத்து வெற்றியா தோல்வியா லாபமா நட்டமா என்ற கேள்வியே அங்கே எழவில்லை. முரடன் முத்து தோல்வி அதனால் முகாம் மாறினார் பந்துலு என்பதெல்லாம் அள்ளி விடப்பட்ட கதைகள்.
    நடிகர் திலகம் பந்துலுவை அதற்கு பிறகும் கூட வெறுக்கவில்லை. தனது ஒவ்வொரு படத்தையம் பற்றிய ஒரு வரி விமர்சனம் செய்த அவர் முரடன் முத்துவை பற்றி குறிப்பிடும்போது நண்பர்கள் பிரிந்தனர் என்றுதான் சொல்லியிருப்பார். தன வீட்டு விசேஷங்களுக்கு பந்துலுவை அவர் அழைக்க தவறியதே இல்லை. நடிகர் திலகம் அணிவித்த மோதிரம் ஒன்று பந்துலுவின் கையில் எப்போதும் இருந்தது. அதை "அந்த" படப்பிடிப்புகளின்போது பந்துலு மறைத்து வைத்துக் கொள்வாராம். ஆனால் வரலாறு எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்கும் என்பதற்கு உதாரணம் பந்துலு மாற்று முகாம் சென்ற பிறகு எடுத்த எந்தப் படமும் (நாடோடி, , தேடி வந்த மாப்பிளை மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) 100 நாட்களை எட்டி பிடிக்க முடியவில்லை என்பதுதான். ஆயிரத்தில் ஒருவன் கூட நான் முன்பே சொன்னது போல சென்னையில் மட்டும் 100. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் சொல்வது கூட உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். அவரின் உண்மையான நிலைமை எப்படி இருந்தது எனபதை அவரது மகளே தொலைக்காட்சியில் பதிவு செய்தார். அதுவும் எம்ஜிஆர் நினைவாக நடத்தபப்ட்ட விஜய் டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருதினராக கலந்துக் கொண்ட பந்துலுவின் மகளும் ஒளிப்பதிவாளருமான் BR விஜயலட்சுமி சொன்னது என்னவென்றால் 1976-ல் பந்துலு இறக்கும்போது எங்களுக்கு (அதாவது அவர் குடுமபத்தினருக்கு) இரண்டு options தான் இருந்தன. தலைக்கு மேல் கடன் சுமை இருந்த காரணத்தினால் ஒன்று நாங்கள் குடுமபத்துடன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் insolvency file செய்ய வேண்டும்.(மஞ்ச கடுதாசி) என்றார். சிவாஜியால் நட்டபப்ட்ட பந்துலு எங்கள் பக்கம் வந்தார் லாபம் அடைந்தார் என்று சொல்கிறார்களே, 1965 முதல் 1976 வரை அவர் விசி கணேசனை வைத்து படம் எடுக்கவில்லையே, "மினிமம் கியாரண்டி" ராமச்சந்திரனை வைத்துதானே படம் எடுத்தார். அப்படிப்பட்டவரை வைத்து எடுத்து மஞ்ச கடுதாசி கொடுக்கும் நிலைமை வந்தது என்றால் உண்மை நிலவரம் என்ன என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்! மிக மிக நீண்ட பதிவுகளை பொறுமையாக படித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி!

    Last edited by sivaa; 5th July 2017 at 08:06 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. Thanks Gopal.s thanked for this post
  7. #504
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Uma Sridhar

    அனைத்து சிவாஜியவாதிகளுக்கும் எனது வணக்கங்கள்.சிவாஜி,பந்துலு பற்றிய பதிவைப் படித்ததில் இருந்து என் மனதில் ஒரு எண்ணம் சுழன்று கொண்டே இருக்கிறது.சிவாஜியைப்பற்றி தவறான பிராசரங்கள் எத்தனையோ காலம்காலமாக பரப்பப்பட்டு நம்பப்பட்டும் வந்துள்ளன;அவர் ஒரு கருமி,தானதர்மம் செய்யாதவர்,பிராப்தம் படம் படு தோல்வி, சாவித்திரியின் உடல்நலக்குறைவே அந்தப் படத்தால்தான் ஏற்பட்டது, சாவித்திரியின் இறுதி நாட்களில் அவரது அண்ணணாக நடித்த சிவாஜி அவருக்கு எதுவும் செய்யவில்லை(கணவர் ஜெமினியைப்பற்றி யாரும் குறை... சொல்வதில்லை)தீய பழக்கங்ளுக்கு அடிமையானவர்,அவரால் நிறைய தயாரிப்பாளர்களுக்குப் பிரச்சினை என்று எத்தனையோ குற்றச்சாட்டுகள்.இவற்றைப் பொய்யென நிரூபிக்கும் பொருட்டு சில உயர்ந்த உள்ளங்கள் தகுந்த ஆதாரங்களோடு பதிவுகளை சமர்ப்பித்து வருகிறீர்கள்.
    எனது வேண்டுகோள் என்னவென்றால் இப்படிப்பட்ட வாதங்களும் சான்றுகளும் இந்த முகநூல் பக்கத்தோடு முடங்கி விடாமல் தமிழரர் அனைவரையும் போய் சேர வேண்டும். அதற்கு இப்பதிவுகள் பிரபல பத்திரிக்கைகளில் பிரசுரமாக வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு சிவாஜி ரசிகர்களான Y.g.மகேந்திரன் போன்ற பிரபலங்களைக்கூட அணுகலாம்.இது எனது கருத்து. ஜாம்பவான்கள் கலந்து ஆலோசித்து இதற்கான நல்ல முடிவை அதி விரைவில் எடுக்க பிரார்த்ததிக்கிறேன்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #505
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.

    1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

    மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

    விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

    இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

    வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

    சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

    வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

    பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

    நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
    supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

    சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

    வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )

    இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

    ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

    நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

    எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes sivaa liked this post
  10. #506
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் தங்க ராஜா- 15/07/1973.


    நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.

    இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.

    ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.

    இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)

    ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.

    ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.

    உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..

    வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.

    அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.

    வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.

    கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.

    கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.

    சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.

    முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.

    சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.

    எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.

    இனி நடிகர்திலகம்.

    அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)

    பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.

    வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.

    படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.

    சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).

    தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)

    முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).

    மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .

    கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .

    போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.

    Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.



    எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes sivaa liked this post
  12. #507
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #508
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like








    Subbiah'





    ஜூலை 21-ல் சிவாஜி மணிமண்டபம் திறப்பு
    சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ...கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபத்தின் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை காட்டிராக்டருக்கு பொதுப்பணித்துறை வழங்கி உள்ளது.நான்கு வாயில்களை கொண்ட இந்த மணிமண்டபத்தின் நடு நாயகமாக சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்படத்தில் சிவாஜி வாழ்க்கையை சொல்லும் புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
    தற்போது வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.வருகிற ஜூலை 21-ம் தேதி சிவாஜி அவர்களின் நினைவு நாள். அன்று மணிமண்டபம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதல்வர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள், சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #509
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 49வது திரைக்காவியம்

    அன்னையின் ஆணை வெளியான நாள்

    இன்று 4 ம் திகதி யூலை மாதம் 1958 ம் ஆண்டு




    4 ஆம் திகதி யூலை 1958 அன்னையின் ஆணை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. #510
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ‘சிவாஜி’ கணேசன், சத்யராஜ், கௌதமி மற்றும் பலர் நடித்த “புதிய வானம்” திரைப்படத்தை இன்று காலை 10 மணிக்கு கே டிவியில் கண்டு மகிழுங்கள்! #KTV
    · Provide translation into English



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •