Page 205 of 400 FirstFirst ... 105155195203204205206207215255305 ... LastLast
Results 2,041 to 2,050 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2041
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2042
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2043
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2044
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2045
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    திரு . நந்தமூரி தாரக ராமாராவ் (NTR) அவர்களும் நடிகர் திலகமும்.
    திரு NTR அவர்கள் பல படங்களில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்துள்ளார் . திரு.ஏ.பி. நாகராஜன் திரைக்கதை, சோமு இயக்கத்தில் தயாரித்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் என். டி. ஆர் . ராமராகவும் , சிவாஜி அவர்கள் பரதராகவும் ந டித்து 1958 ல் விடுதலையானது.
    அந்த படத்தில் நடிக்க பரதனாக நடிகர் திலகம் சிவாஜி கனேசனவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட NTR ராமாயணத்தில் பரதனின் ஏற்றம் இனி தமிழகம் முழுதும் பரவும் என்றாராம். டைரக்டர...ும் தயாரிப்பாளரும் ஐயனிடம் தயங்கி தயங்கி தங்களுக்கு பரதனாக சிறிய பாத்திரம் தரும்படி உள்ளது என்றபோது கதையமைப்பு சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டார் !
    சூட்டிங் சமயம் NTR அவர்கள் இல்லாத காட்சி. பரதனாக சிவாஜி அவர்கள் மட்டுமே அயோத்திய ராஜ்ய கொளு மண்டபத்தில் உள்ள நவகிரஹ ங்கள் ஒவ்வொன்றின் முன் நின்று ராமன் காட்டுக்கு போக காரணமான எனக்கு இன்னின்ன பாபங்கள் வந்து சேரட்டும் என கூறி கடைசியாக சூரிய கிரகத்தின் முன் விழுந்து , புழுவாய் துடித்து , மூர்ச்சையாகும் காட்சி. இந்த காட்சியில் NTR .கிடையாது . காட்சியில் தான் இல்லாததால் பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்தவர், நடிகர்
    திலகத்தின் நடிப்பில் ஆழ்ந்து விட்டார். தான் ராமன் என்பதும் ஐய்யன் பரதன் என்பது மட்டுமே நினைவு. சூட்டிங் என்பது நினைவில்லாமல் போனது. நல்ல உச்சக்கட்ட நடிப்பு.தன்னைமறந்த NTR “ தம்பீ ! கவலைப்படாதே . என்னால் தாங்கமுடியவில்லை ! நான் உன்னை விட்டு காட்டிற்கு செல்லவில்லை! இதோ இருக்கின்றேன் “ என்று கூறிக்கொண்டு படப்பிடிப்பில் புகுந்தார். ஐய்யனை கட்டிப்பிடித்தார். ஆறுதல் கூறினார். காட்சியில் இல்லாதது NTR செய்ததை தடுக்கவோ யாருக்கும் திரானி இல்லை. சற்றுநேரம் கழித்தேஅனைவருக்கும் சுய நினைவு! மீண்டும் NTR ஐ வெளியேற்ற்றிவிட்டு,அதே காட்சி படபிடிப்பானது.
    NTR போன்ற நடிகர், நடிப்போ, சூட்டிங்கோ புதிதல்ல; ஆனால் சிவாஜி அவர்களால் நடிப்பால் கட்டப்பட்டு, தன்னிலை மறந்தார். இதுவன்றோ நடிப்பு!

    courtesy
    Lakshmi Narasimhan R நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2046
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1952 ம் வருடம் அக்டோபர் 17ந் தேதிதீபாவளி திருநாளில் வெளியானது பராசக்தி படம்
    வெளியானது . அதுவரை யாரிடமும் இல்லாத காந்த சக்தி சிவாஜியின் கண்களுக்கு இருந்ததை கண்டு மொத்தமாக அவர்பால் ஈர்க்கப்பட்டனர் .அவர் வசனம் பேசிய முறை உடல் மொழி பிரமிக்க வைத்தது .உச்ச கட்ட காட்சியில் வசனத்தை ஒரு ஜல்லிக்கட்டு காளை யை போல சிவாஜி திமிறிக்கொண்டு பேசியதை பார்த்த போது ,ஒவ்வொரு ரசிகனும் தன்னுடுய உடம்பில் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தனர் .பராசக்தி பார்த்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் ப...ோட்டு அமர்ந்தார் .படம் வெளியான அன்று ரசிகர்கள் எப்படி படத்தை ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க சிவாஜி பெருமாள் முதலியார் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் பாரகன் தியேட்டருக்கு சென்றார்கள் .அவர்கள் உற்கார்ந்த வரிசைக்கு முன் உற்கார்ந்து இருந்த ஒரு சிறுவன் படத்தையும் சிவாஜியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான் .தனக்கு பின்னால் பட்டு வேஷ்டி சட்டையில் வந்து அமர்ந்து இருப்பது சிவாஜிதான் என்று தெரிந்து கொண்டான் .நீதி மன்ற காட்சி முடிந்ததும் அந்த சிறுவன் ஓடி வந்து பலம் கொண்ட மட்டும் சிவாஜியின் கையை பிடித்து குலுக்கினான் .அந்த சிறுவன்தான் நல்லி குப்புசாமி செட்டியார் .சிவாஜி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாட துவங்கினார்கள் .பராசக்தி திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களில் எல்லாம் திருவிலாகோலம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக குவியதொடங்கினார்கள் .பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட கிராமபோன் நிறுவனம் பராசக்தி படத்தின் வசனத்தை பதிவு செய்து வெளியிட்டது .விற்பனையிலும் அந்த ரேக்காட்கள் சாதனை புரிந்தது .பல ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடியது பராசக்தி படம்











    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2047
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    உத்தமபுத்திரன் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பதி பக்தி படத்தில் நடித்தார் .ராஜா ராணி அம்மையப்பன் படம் தோல்வி கண்டதால் ராசி இல்லாத இயக்குனர் என்ற பெயர் பீம்சிங்குக்கு வந்தது .அந்த விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு சொந்தமாக படம் எடுக்கும்படி கலைவாணர் யோசனை சொன்னதன் பேரில் சோலைமலை வேலுமணி எம் எஸ் விஸ்வநாதன்ராமமூர்த்தி சேர்ந்து புத்த பிக்சர்ஸ் தொடங்கி பராசக்தி முதல் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்பதால் சிவாஜி நடிக்கவேண்டும் என்று கேட்டவுடன் நீக தைரியமாக ஆரம்பியுங்கள் நான் உங்களு...க்கு பக்க பலமாக இருக்கிறேன் என்று உறுதி கூறினார் .புத்தா நிறுவனம் தரமானவெற்றி படங்களை தயாரித்தது என்றால் அதற்க்கு ஆரம்ப காலத்தில்அதற்கு உரம் இட்ட சிவாஜிதான் காரணம் என்று பீம்சிங் கூறியிருக்கிறார் . சிவாஜி உருவாக்கிய தயாரிப்பாளர் எண்ணிக்கை மிக நீளமானது ,பந்துலு ஸ்ர்ரதர் பீம்சிங் பாலாஜி சந்தானம் குகநாதன் மோகன் ஆர்ட்ஸ் மோகன் ,ராம அரங்கண்ணல் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது .மிக சாமான்யர் பலரை தயாரிப்பாளர் ஆக்கிய பெருமை சிவாஜிக்கு உண்டு .குடும்ப சிக்கல்கள் நிறைந்த கதையை 1958ம் ஆண்டு மார்ச் மாதம்14 ந்தேதி பதி பக்தி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து ராசியான இயக்குனர் ஆனார் .அந்த வருடம் துவக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் ஓடாத நிலையில் இந்த படமாவது ஒடி தமிழ் திரையுலகை காப்பாற்றியது என்று வாகினி அதிபர் நாகி ரெட்டி கூறினாராம் .













    courtesy vijaya f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2048
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2049
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ponraj

    அய்யனின் அன்பு இதயங்களே 24-3-18 சனி முதல் தூத்துக்குடி சத்யா திரையரங்கில் அய்யன் சிவாஜியின் எங்கள் தங்க ராஜா திரைப்படம் ரசிகர்கள் சார்பில் வைக்கும் பிளக்ஸ் அனைவ...ரும் வருக வருக இவன் தூத்துக்குடி மாநகர சிவாஜிமன்றம் சார்பில் அய்யனின் கன்மணிகள் திரு வடிவேல் அவர்கள் திரு ஏ டி எஸ் அருள் திரு பாரத் கொரயரா திரு ஜான்சன் திரு அடால்ப் திருஜெபமணி திரு ராஜேந்திரன் திரு அமல்தாஸ் திருபொன்ராஜ் திரு சிவந்தமண்பாரத்பரதர் திரு முருகபெருமாள் திரு ஆனந்தராஜ்




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2050
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஜெயா தொலைக்காட்சியினை நான் காண்பது அரிதெனினும் சமீபகாலமாக நடிகர் திலகத்தின் அரிய பழைய படங்களை தொடர்ந்து ஒளிபரப்புவதால் அவ்வப்போது என்ன ஓடிக்கொண்டுள்ளது என்று பார்ப்பதுண்டு...இரண்டு தினத்துக்கு முன்பு நடிகர் திலகத்துக்கு அழியாத புகழ் தந்த "ஆலயமணி" திரைப் படத்தினை காணும் நல்லதோர் வாய்ப்பு கிட்டியது.
    அவருக்காகவே உருவாக்கப்பட்டது போன்ற ஒரு அற்புதமான கதையமைப்பு கொண்ட திரைப்படம் இது. அவரது பசி உணர்ந்து அறுசுவை விருந்து படைத்தது போல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    யார் எப்படி பெயர் பெற்றாலும் தன்னை பொறுத்தவரை எந்த ஒரு வரையறைக்குள்ளும் - எந்த வட்டத்துக்குள்ளும் - எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காது தான் நடிக்கும் கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும்,வில்லனோ...கொடூரமாணவனோ...எதுவாயினும் கதைக்கே முக்கியத்துவம்...எனும் கொள்கை உடையவர் நமது செவாலியே... அதற்கு அவர் ஏற்று நடித்துள்ள பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களும் படங்களுமே சாட்சி.
    கதை என்று பார்த்தால் மிக எளிமையான கதையே...தியாகு, சேகர் இருவரும் நெருங்கிய இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்புடையோர் தங்களை அறியாது மீனா என்ற பெயருடைய ஒரு பெண்ணின் மீதே இருவரும் காதல் கொள்கின்றனர்...இருவருக்குமே அது தெரியாது. சேகர் நினைத்துக்கொண்டிருப்பது தனது காதலியின் பெயர் வானம்பாடி...
    நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தியாகு அந்த பெண் குறித்து விவரம் கூறி தனது காதலை தெரிவிக்க முயலும்போது, நண்பன் மீதுள்ள அக்கரையில் தானே நேரில் சென்று மணமுடித்து வைக்க ஏற்பாடுகளை செய்ய ஒப்புக்கொண்டு பெண்ணினை நேரில் காணும்போதுதான் உண்மையை உணர்ந்த சேகர்,
    தான் காதல் கொண்ட பெண்ணும் தனது நண்பன் காதல் கொண்ட பெண்ணும் ஒருவரே என்ற உண்மை அறிந்து, தியாகுவுக்கு அப்பெண்ணின் மீதுள்ள காதல் ஈடுபாட்டினை உணர்ந்து, தனது காதலை தியாகம் செய்து விட்டு நண்பனின் காதலை வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அப்பெண்ணிடம் உண்மையை கூறி அவரையே மணந்து கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். தனது காதலை தியாகம் செய்து விடுகிறார்..
    தியாகுவிற்கும் மீனாவுக்கும் திருமணம் செய்ய முடிவாகிறது… நண்பர்கள் இருவருக்குமான நட்பு தொடர்கிறது. மீனாவை காப்பாற்ற வேண்டிய ஒரு முயற்சியில் ஒரு விபத்தினால் காலில் அடிபட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் தியாகுவுக்கு, சில பல சந்தேகங்கள் மனதில் எழுகிறது...
    சில சந்தர்ப்ப சூழல்களும் சில சம்பவங்களும் தியாகுவுக்கு சேகரின் மீதும் மீனாவின் மீதும் தவறான ஒரு சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. நல்ல குணங்கள் தன்னகத்தே இருந்தாலும், மனதின் மறுபுறம் இயல்பாகவே கொஞ்சம் சுயநலமும், குரூர உணர்வும், தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் எனும் தீவிர உணர்வுகள் மிகக்கொண்ட... பொறாமை மற்றும் கோப உணர்வும் மிகக்கொண்ட தியாகு சேகரின் மீது கோபம் கொண்டு அவரை தற்கொலை பாறையில் வைத்து தள்ளிவிட்டு கொன்று விடவேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
    கொழுந்து விட்டெரியும் கோபத்துடன் தனது முடிவினையும் செயல்படுத்துகிறார். ஆனால் மயிரிழையில் உயிர்பிழைத்து தொங்கிக்கொண்டிருக்கும் சேகர் காரணத்தினை அறிந்து பதட்டத்துடன், தான் சாவதை குறித்து கவலை இல்லை...ஆனால் துரோகி என்ற பட்டத்துடன் சாக விரும்பவில்லை என்று நடந்த உண்மைகளை கூறுகிறார்.
    உண்மையை உணர்ந்த தியாகு, அனலில் வீழ் புழுவாக துடிக்கும் தியாகு தனது அவசர புத்தியினையும் தவறையும் உணர்ந்து தனது தவறுக்கு பரிகாரமாக தனக்கு முன்னரே மீனாவை காதலித்த சேகரே மீனாவை மணக்க வேண்டும் தான் சாகவேண்டும் என்று முடிவை கூறிவிட்டு மின்னல் வேகத்தில் தனது சக்கர நாற்காலியுடன் போய் தற்கொலைப்பாறையிலிருந்து கடலில் குதித்துவிடுகிறார்.
    இதற்கிடையில் கடலில் வீழ்ந்த தியாகு, அவரது விசுவாசத்துக்குரிய ஒரு மீனவரால் / ஊழியரால் காப்பாற்றப்படுகிறார். அவர் ஊழியரின் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். தான் பிழைத்திருப்பதனை யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறிவிடுகிறார். இதற்கிடையில் சேகருக்கு திருமணம் என்று செய்தி வருகிறது. அந்த திருமணத்தினை காண வேண்டும் என்ற ஆவலுடன் தனது வறுமை கோலத்துடன்...நிறைந்த தலைமுடி, தாடியுடன் தனது இல்லத்துக்கே செல்கிறார்..
    .யாரோ ஒரு பஞ்சை பராரி போல அங்கே வழங்கப்படும் உணவினை வாங்கி உண்டு விட்டு...திருமணத்தை பார்க்க செல்லும்போதுதான் சேகருக்கும் அவரை ஒருதலையாக காதலித்து வந்த பிரேமாவுக்கும் தான் திருமணம் என்பதனை உணர்ந்து, விதவைக்கோலத்துடன் காணப்படும் மீனாவை கண்டு அதிர்ந்து... ஒரு பக்கமாக அதிர்ச்சியுடன் ஒதுங்கும்போது...மீனா அடுத்த அறையில் தியாகுவின் படத்தினை பார்த்து என் கடமை முடிந்தது...நான் சாவூருக்கு சொல்லுகிறேன்...உங்களை அங்கு வந்து சந்திக்கிறேன்...நீங்கள் தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தினில் நானும் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு செல்லுவதை காதில் வாங்கி அவளை காப்பாற்ற வேண்டுமே என்று துடிக்கும் இடத்தினில் பொருளாசை கொண்ட பிரேமாவின் தகப்பனாரால் தடியால் தாக்கப்பட்டு மயங்கி விழ அவர் இவரை ஒரு சாக்குப்பைக்குள் வைத்து கட்டி ஒரு அறையினுள் மறைத்து வைக்கிறார்.
    தியாகு உயிர் பிழைத்தாரா...?
    மீனா தற்கொலை முயற்சி என்ன ஆனது ? என்பதே மீதி கதை…
    மிக அழகாக பின்னப்பட்ட கதைக்கு, தியாகு எனும் கதாபாத்திரத்துக்கு மிக அற்புதமாக தங்கத்தில் பதித்த வைரமாக அமைந்துள்ளது நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பு… சேகராக நடித்துள்ள திருவாளர் S.S. ராஜேந்திரன்...மீனாவாக வாழ்ந்துள்ள சரோஜா தேவி, பிரேமாவாக வரும் விஜயகுமாரி, அவரது தகப்பனாராக வரும் சிவாஜியின் மரியாதைக்கும் அன்புக்குமுரிய M.R.ராதா அவர்கள்...
    மீனாவின் தகப்பனாராக வரும் திரு.நாகையா...படத்தினை தயாரித்து தனது இயல்பான பயங்கர கொடூர வில்லன் எனும் புகழ்பெற்ற குணாதிசயத்தினை முற்றிலுமாக மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு...மிக எளிமையாக விசுவாசம் மிகக்கொண்ட கனிவான அன்பான ஊழியராக வருகிறார் P.S.வீரப்பா அவர்கள்...
    ஆஹா என்ன பொருத்தமானதொரு பாத்திர தேர்வு...
    சற்றேறக்குறைய 56 வருடங்களுக்கு முன்பு வெளியான படமாயினும் இப்போது காணும்போதும் மனம் முற்றிலுமாக படத்தோடு இணைந்துகொள்கிறது... இந்த திரைப்படத்துக்கான மூலக்கதை எழுதியவர் திரு.ஜி. பாலசுப்பிரமணியன் அவர்கள். படத்துக்கான திரைக்கதை மற்றும் கதை வசனம் திருவாளர் ஜாவர் சீதாராமன் அவர்களால் எழுதப்பெற்றுள்ளது...மிக அழகான கவித்துவமான வரிகள்...கணேசனின் குரலால் உச்சரிக்கப்பட்டு உயிர்பெற்று பெருமை பெற்றது. நடிகர் திலகத்துக்கும் S.S. ராஜேந்திரனுக்குமான நட்பு வெகு இயல்பாக மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
    M.R. ராதா அவர்களை ராதா அண்ணன் என்றுதான் நடிகர் திலகம் மரியாதையுடன் அழைப்பார்...அருமையான கதாபாத்திரம்.M.R..ராதா அவர்களும் அவர் பங்குக்கு புகுந்து விளையாடுகிறார்.
    வெறும் அழகுப்பதுமையாக வந்து செல்லாமல்...குறும்பு காட்டும் பெண்ணாக, பொறுப்புள்ள ஒரு குடும்ப பெண்ணாக, மிக அழகான தோற்றத்துடன் நல்லதொரு நடிப்பினை வெளிப்படுத்தும் வாய்ப்பு சரோஜா தேவி அவர்களுக்கும்...
    கதையின் நாயகி நியாயப்படி சேகரைத்தான் காதலிக்கிறாள் அதன் பிறகு தான் தியாகு மீது அன்பு செலுத்துகிறாள்... ஒரு புகழ் பெற்ற கதாநாயகனாக.. உள்ள ஒருவர் இப்படிப்பட்ட கதையில் நடிக்க யோசித்து இந்த கதையை இப்படி மாற்றலாம் என்றெல்லாம் தன் இமேஜுக்கு ஏற்ப மாற்ற முயலுவார்கள்... .ஆனால் நடிப்பு செல்வருக்கு தனது நடிப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதியும் இருக்கிறது...சவாலான கதாபாத்திரங்களை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் இருக்கிறது அதனால்தான் தைரியமாக கதையை ஏற்றுக்கொண்டு பாத்திரமாக கரைந்து போகிறார்.
    தனக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளாது...இப்படித்தான் நடிப்பேன்...கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளரையோ இயக்குநரையோ வற்புறுத்தாத - கதையின் நாயகன் எத்தகைய குணம் படைத்தவனாக இருந்தாலும் கவலைப்படாது அப்பாத்திரமாகவே மாறி கதாபாத்திரம் நன்றாக வருகிறதா என்று மட்டும் கவனித்து நடித்த இமேஜ் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத உண்மையான பிறவி நடிகன் அல்லவா...
    கலைக்குரிசில் நடித்த படங்களில் மிகவும் உன்னதமாக நடித்து பெயர் பெற்ற ஒரு படம். மிகப்பெரும் பணக்காரராக அணியும் ஆடை, நடக்கும் நடை, பேசும் தோரணை, பார்க்கும் பார்வை, மிடுக்கு,கம்பீரம், கண்ணியம், அடுத்தவரிடம் காட்டும் அன்பு...ஒரு பிறவி பணக்காரனாக அப்படியே...பிரதிபலிக்கிறார்... மீனவனால் காப்பாற்றப்பட்டு எளிமையாக காட்சியளிக்கும்போது அவரின் தோற்றம் மட்டுமல்ல நடக்கும் நடை, தோரணை, பார்க்கும் அமைதியான பார்வை..என முற்றிலும் மாறி இருப்பார்...
    படத்தின் வெற்றிக்கு பாடல்களும் இசையும் பாடகர்களின் பங்களிப்பும் மிக முக்கிய காரணியாக துணையாக நின்றுள்ளது....இசை மாமன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தி இருவரின் பங்களிப்பில் காவிய கவிஞர், கவியரசர். கண்ணதாசன் அவர்களின் வைர வரிகள் - சரியான கதையும் சிச்சுவேஷனும் கிடைத்தால் புகுந்து விளையாடும் அவரது பேனா...இங்கோ...சந்தோஷத்தினில் ஆனந்த தாண்டவம் ஆகியிருக்கிறது. என்ன அழகான பாடல்கள்...காலத்தினால் அழியாத பாடல்களாயிற்றே....
    பாடல்கள் கொம்புத்தேனாய் இனிக்கிறது...எக்காலத்திலும் சுவை மாறாத அமுதமாய் விளங்குகிறது...எதை விடுப்பது எதை கூறுவது...
    கண்ணான கண்ணனுக்கென்ன அவசரமா...எனும் வெண்கலக்குரலோனின் சீர்காழியாரின் - குரலோடு வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று இணைந்து பாடும் சுசீலாம்மாவின் குரலை கூறுவதா...?
    மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
    தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
    என்று பாடி மானாட்டம் துள்ளி ஓடும் மங்கையின் மனோ நிலையை பாடலில் வடித்தெடுத்தாய் கூறுவதா...
    மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
    தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
    (மானாட்டம்)
    செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் (2)
    சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்
    (மானாட்டம்)
    பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் (2)
    ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்
    (மானாட்டம்)
    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே எனும் பாடல் மூலம் உலகினில் உள்ள உறங்காத உள்ளங்களை அனைத்தையுமே உறங்க வைக்கும் வல்லமை கொண்ட ஜானகியம்மாவின் குரலை கூறுவதா....
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
    தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
    தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    காலையில் நான் ஓர் கனவு கண்டேன் – அதை
    கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
    எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்
    கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே
    கண்களிலே கண்களிலே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    மனமென்னும் மாளிகை திறந்திருக்க
    மையிட்ட கண்கள் சிவந்திருக்க
    இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி
    தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
    தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
    தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
    தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
    ஆஹஹா…
    எந்த ஒரு மனிதனும் முழுமையான நல்லவனாக இருக்க மாட்டான்...ஒவ்வொருவரின் மனதினில் மிருக குணம் உண்டு ...மறைந்து இருக்கும் அது வெளிப்படும் விதம்...அதனை கட்டுப்படுத்தும் குணம் மனிதருக்குள் வேறுபடும்...இங்கே தனது மிருக குணம் - கொடூர குணம் குரூர குணம் உணர்ந்து மனம் திருந்தி...வாழ்வின் நல்லது கெட்டது புரிந்து மனதுக்குள்ளே தெய்வீக உணர்வுகள் குடிபுந்த ஒருவனின் மனோபாவம் எப்படி வரிகளில் வடிக்கப்பட்டுள்ளது பாருங்கள்... பாடலை கேட்கும்போதே மனம் கரைந்து போய் மனம் லேசாகிறது...
    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
    (சட்டி …)
    பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
    (சட்டி …)
    ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
    ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
    (சட்டி …)
    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
    இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
    (சட்டி …)
    மேலே கண்ட பாடலின் வரிகளை கூர்ந்து கவனியுங்கள்... எறும்பின் தோலை உரித்து பார்ப்பதற்காக அங்கே ஒரு யானை வருகிறது என்று கூற வருகிறாரா...அல்லது எறும்பின் தோலை உரிக்கும்போது அதற்குள்ளில் இருந்து ஒரு யானை வந்தது என்று கூற வருகிறாரா...என்றெல்லாம் சிந்தனை விரியுமே.... நுட்பமாக கவனித்து பார்க்கும்போதுதான்... அடுத்த வரியில் நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா எனும் வரியை காணும்போது உண்மை புரியும்...
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா….
    எப்படிப்பட்ட வரிகள் கேட்கும்போதே மனம் சிலிர்க்கிறது....அந்த மகானுபாவனின் மனோநிலையை எப்படி உணர்த்துகிறார்....
    அது மாத்திரமல்ல இப்போது வருவது போல என்னய்யா சிச்சுவேஷன்...என்று கேட்டுக்கொண்டு இந்திரனே...தந்திரனே...மந்திரனே...சந்திரனே என்று வார்த்தைகளை போட்டு நிரப்பும் பாணியில் அல்ல அப்போதைய பாடல்கள்...
    கதையிலே முழுமையாக ஊறிப்போய்....அப்படியே கதையோடு தொடர்புபடுத்தி...கதையினை முழுமையாக உள்வாங்கி எழுதிய முழுமையான வரிகள் இவை...
    அடுத்து இந்தப்பாடலை கவனியுங்கள்....
    தன் மனம் கவர்ந்தவளின் அழகிய உருவத்தினை சித்திரமாக தீட்டும் ஒரு காதலனின் மனோபாவத்துடன் அழகினை ரசித்து உணர்ந்து காதலன் பாடுகிறான்...உள்ளத்திலிருந்து வார்த்தைகள் இசையில் நனைந்து முத்துக்களாக கொட்டுகிறது.... இந்தப்பாடலில் ஏழிசை வேந்தன் T.M. சௌந்தரராஜன் அவர்களுடன் L.R. ஈஸ்வரியம்மா இணைந்து பாடுகிறார்.
    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா
    (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
    கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
    கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
    உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
    இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா
    (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
    கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
    அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
    சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
    (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
    தன்னையே எண்ணி தனக்கு சேவை செய்வதையே பாக்கியமாக கருதி உயிர் வாழும் காதலி தனக்கு ஊன்றுகோலாக தாங்கி பிடிக்கும் தாயாக விளங்கும் குணவதியினை எண்ணி சுயநலம் மிகுந்த மனிதர்கள் வாழும் இந்த பூமியிலே தன்னை மட்டுமே எண்ணி வாழும் ஜீவனை எண்ணி வியந்து... மனதினில் பூரித்துப்போய் உளமார பாடுகிறார்....
    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே
    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே
    ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
    ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
    தாய்மை எனக்கே தந்தவள் நீயே
    தங்க கோபுரம் போல வந்தாயே
    புதிய உலகம் புதிய பாசம்
    புதிய தீபம் கொண்டு வந்தாயே
    (பொன்னை விரும்பும் பூமியிலே…)
    பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
    பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
    அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
    அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
    இந்த மனமும் இந்த குணமும்
    என்றும் வேண்டும் என்னுயிரே
    (பொன்னை விரும்பும் பூமியிலே…)
    ஆலமரத்தின் விழுதினைப் போலே
    அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
    வாழைக் கன்று அன்னையின் நிழலில்
    வாழ்வது போலே வாழவைத்தாயே
    உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
    உள்ளம் ஒன்றே என்னுயிரே
    (பொன்னை விரும்பும் பூமியிலே…)
    நடிகர்திலகத்துக்கென்று பாடவேண்டுமென்றே இவரை கடவுள் பூமிக்கு அனுப்பினாரோ என்ற அளவுக்கு மிகப்பொருத்தமாக கணேசனுக்காக அவ்வளவு துல்லியமாக பாடி இருக்கிறார் பாடகர் திலகம் T.M. சௌந்தரராஜன் அவர்கள்.
    திருமணமாகாத வாலிபன் - போற்றத்தக்க பெருந்தன்மை கொண்டவன்... தயாள மனம் படைத்தவன்... தனிமையில் வாழும் ஒரு மிகப்பெரும் கோடீஸ்வரன் அவனிடம் பலவித நல்ல நல்ல குணங்களும் உண்டு...சில விஷயங்களில் ஒரு இருள் நிறைந்த, மற்றோருக்கு எதையும் விட்டுக்கொடுக்காத மனோபாவம் என்று பலவகை உணர்ச்சிகள் கொண்ட மனிதனின் கதாபாத்திரத்தினை நடிப்பில் வெளிப்படுத்துவது ஒரு சவாலான விஷயம்...
    கதையினை முழுமையாக உள்வாங்கி....கதாபாத்திரத்தினை பூரணமாக உணர்ந்து...கரைந்து...அந்தந்த சந்தர்ப்பங்களில் தரவேண்டிய நடிப்பினை மிக பொருத்தமாக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிப்புலகின் நாயகன் .
    குறிப்பாக சட்டி சுட்டதடா...பாடலில் அவரின் நடிப்பு நம்மை கலங்கடிக்கிறது... பணக்காரராக துள்ளி திரிந்தவர் மணலில் காலை இழுத்து...தேய்த்து...தேய்த்து தடுமாறி நடந்து கொண்டே பாடும் அந்தக்காட்சிகள் பார்வையாளர்களை பூரணமாக ஈர்த்துவிடும்...
    S.S.ராஜேந்திரனின் தாயாரை காணும் காட்சியில் உள்ள நடிப்பும் உள்ளம் தொடும்...
    அம்மா...என்னை மகனேன்னு ஒரு தடவை கூப்பிடுங்கம்மா....என்று பாசத்தோடு ஏக்கத்தோடு அழைக்கும் பாவம்... அவருக்கு கால்களுக்கு ஒத்தடம் தரும் பரிவு...
    ஆஹா... நடிகர் திலகம் அவர்களுக்கு நடிப்பதற்கு பூரணமான வாய்ப்புகளை அள்ளி வழங்கக்கூடிய ஒரு கதையமைப்பு... ஒவ்வொரு காட்சியிலும் அவரின் முகபாவம், ஸ்டைல் , மேனரிசம், குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பாங்கு...பணக்காரராக இருக்கும் அந்த கம்பீரம்...வசனங்களை உச்சரிக்கும் அழகு....
    சரோஜா தேவியை நடிகர் திலகம் முதன்முதலாக சந்திக்கும் காட்சியினில் இவர் யாரென்று அறியாது அவர் அலட்சியமாக உரையாடுவதும்...பிறகு உண்மை உணர்ந்து அவரை திரும்ப வழியனுப்ப வரும்போது பதட்டத்துடன் பேசிக்கொண்டே வர...எஸ்....எஸ்..என்று கலைக்குரிசில் குறும்புடன் கூறிக்கொண்டே வரும் இடமும் ரசிக்கத்தக்கது.
    கடைசியில் எளிமையானவனின் குடிசையில் இருக்கும்போது உள்ள எளிமை...
    எனக்கு எல்லாம் ஒன்றுதான் என்று உலகை பார்க்கும் ஒரு முற்றிலும் உணர்ந்த ஒரு பார்வை.. இவை அனைத்தையும் விவரித்து எழுத இன்னும் பத்து பக்கம் வேணும்...
    சான்ஸே கிடையாது சுவாமி...நீங்க மீண்டும் வந்துடுங்கோ....என்று மனம் நடிகர் திலகத்திடம் மனமார வேண்டுகிறது.... வசமாக கிடைத்த பந்துகளை அனைத்தையுமே சிக்ஸர்களாக அடித்து விளையாடுவது போல கிடைத்த வாய்ப்பினை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் கலைக்குரிசில்.
    படத்தினில் நடித்துள்ள அத்துணை பேருமே தங்களின் கதாபாத்திரத்தினை மிகச்செவ்வனே செய்துள்ளனர். நகைச்சுவைக்கு வாய்ப்பு தரப்படவில்லை...கதையமைப்பு அப்படி...
    கதாநாயகனையும் நாயகியையும் ஒரு ஆலயமணி ஓசையுடன் இணைக்கும் ஒரு சுபமான முடிவு... இயக்குனர் கே.சங்கர் அவர்களின் திறமையான இயக்கத்தில் அமைந்த அற்புதமான திரைப்படம் - வாய்ப்பிருந்தால் இந்தப்படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட வேண்டும்...

















    courtesy singaravelan f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •