Page 64 of 400 FirstFirst ... 1454626364656674114164 ... LastLast
Results 631 to 640 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

 1. #631
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  12,344
  Post Thanks / Like
  Nagarajan Velliangiri

  வாசுதேவன் சார்,
  உங்கள் பதிவைப் படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
  எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'பொம்மி குத்துனா என்ன திம்மி குத்துனா என்ன, நமக்கு வேண்டியது அரிசிதான்' னு. அது மாதிரி, திலகத்தின் புகழை நம்மில் யார் ரசித்துப் பாராட்டி எழுதினாலும் சந்தோசம்தான். நம் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான், அது யார் மூலமாக நடந்தாலும் ஐயன் சந்தோசம்தானே அடைவார்?
  நீங்க அநியாயத்துக்கு எதேதோ என்னைப் பத்தி புகழ்ந்து எழுதியிருக்கீங்க. அப்படி எல்லாம் ஒரு சிறப்பும் என் கிட்ட இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். நான் எதையும் யோசித்து எழுதுவது இல்லை. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி விடுவேன். எந்த விதமான குறிப்புக்களோ ஆதாரங்களோ என்னிடம் இல்லை.எழுதும்போதும் எந்த விதமான தயாரிப்புக்களும் செய்வது இல்லை. அதே மாதிரித் திலகம் பற்றிய விசய ஞானமும் பெரிதாக ஒன்றும் கிடையாது. எனவேதான் என் பதிவுகள் எல்லாம் மேலோட்டமாக, நுனிப்புல் மேய்ந்த மாதிரி தான் இருக்கும். முரளி சீனிவாஸ், நீங்கள் மற்றும் ஜாஹிர் அவர்கள் எல்லாம் எழுதுவது போல கனமான கருத்துக்கள் எல்லாம் என் பதிவுகளில் இருக்காது. ஒரு சாதாரணமான, அதே சமயம் , வெறித்தனமான ஒரு சிவாஜி ரசிகனின் பார்வைதான் என் பார்வை. எதாச்சும் எழுதனும்னு தோணினா அப்படியே அதை எழுதி விடுவேன். அதுதான் என் பலவீனம், அதே சமயம் பலமும் கூட அதேதான்.
  அடுத்தவர் மனதை அறியும் சக்தி என்றெல்லாம் உயர்த்தி இருக்கிறீர்கள், சும்மா தமாசுக்குத் தானே சொன்னீர்கள்? அதே மாதிரித்தான் தமிழறிந்ததாகத் தாங்கள் சொன்னதும். நான் தமிழைப் பள்ளியில் படித்ததோடு சரி. கல்லூரியிலும் ஒரே ஒரு பேப்பர், அதுவும் முதல் வருடம் மட்டும் நான் டீடெய்ல் மாதிரி இருந்தது. அவ்வளவுதான் தமிழுடன் என் உறவு. ஆனால் தமிழார்வம் உண்டு என்பது உண்மை. காரணம் பள்ளியில் போதித்த தமிழாசிரியர்கள் ஒரு புரமும், என் ஐயன் நடிகர் திலகம் பேசிய தமிழ் மறுபுரமும்.

  அப்புறம் ஒரு சிறிய எக்ஸ்ட்ரா தகவல். எனக்கு இனப் பற்று ரொம்ப ரொம்ப அதிகம். என் ஐயனின் பிள்ளைகள் எல்லாம் என் இனம். அதுதான் என் உயிரினம். அவர்கள் எந்த நாடு எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி, என் ஐயனின் அன்பை மொழியாகப் பேசுபவர்களாக இருந்தால் போதும். அவர்களுடன் நான் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஐக்கியமாகி விடுவேன், எந்த வயதினராக இருப்பினும் சரி. அந்த ஒரு விசயத்தில் எந்த விதமான காம்ப்ரமைசும் நான் செய்தது கிடையாது. இனியும் செய்ய மாட்டேன்.
  அப்புறம் நம் அன்புத்திலகத்தின் ரசிகர்களிடம் நாம் சொல்லும் கருத்துக்கள் பற்றி. நீங்கள் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறேன். நம் ஆட்கள் எல்லாம் எல்லா விசயங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு அமைதியான கடலைப் போலச் சாந்தமாகத்தான் இருப்பார்கள்.இந்தக் கொல்லன் தெருவில் அவ்வளவு எளிதில் நம் ஊசியை விற்று விட முடியாது. ஒரு சிறு தவறான செய்தியைக் கவனக் குறைவாகச் சொல்லி விட்டால் போதும், அப்படியே சுனாமியாகப் பொங்கி எழுந்து விடுவார்கள்.இப்போது கூடப் பாருங்கள், கொஞ்ச நேரம் முன்பு 'எங்க மாமா' படத்தின் ஒரிஜினல் 'ஹிந்தி'யில் நடித்தது ஷம்மி கபூரும், ஆஷா ஃபாரேக் என்றும் வேறொரு பதிவில் சொன்னேன். உடனே ஆஷா இல்லை, அது ராயஸ்ரீ, பழம் பெரும் இயக்குநர் ,தயாரிப்பாளர் சாந்தாராம் அவர்களின் மகள் என்று தவறைச் சுட்டிக் காட்டி விட்டார் நண்பர் பூபால் சிங். இதிலிருந்து என்ன தெரிகிறது ? திலகம் நடித்த படங்கள் பற்றி மட்டும் அல்ல, அவற்றின் நதிமூலம் , ரிஷிமூலம் எல்லாம் கூட நம்மவர்களின் நெஞ்சத்தில் பதிந்து போனவை என்று.இது கூடப்பரவாயில்லை சார், அந்த நடிகையின் மூலத்தைக் கூட விரல் நுனியில் வைத்திருக்கும் அந்த அற்புதத்தை எந்த வார்த்தை சொல்லிப் பாராட்டுவது. நான் அம்பேல். உண்மையிலேயே இவ்வளவு அருமையான, விசய ஞானம் நிறைந்த அதே சமயம் வெறித்தனமான , நம் திலகத்தின் ரசிகர்கள் போல உலகில் வேறெந்த நடிகருக்கும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன் என்பது மிகவும் சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கிறது எனக்கு.
  நீங்கள் சொன்ன இன்னொரு விசயம் நிச்சயம் எல்லோருமே கவனித்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்த அவசரமான வாழ்க்கை முறையில், பல வேலைகளுக்கு இடையில், திலகத்தைப் பற்றிப் புதிது புதிதாக, அதே சமயம் ஆழ்ந்த செய்திகளும் கருத்துக்களும் கொண்டதாகவும் , தவறில்லாமலும் ஒரு பதிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு பதிவர் நிறைய நேரம் செலவழித்து அதை உருவாக்க வேண்டி உள்ளது. அப்படிப் பட்ட பதிவுகளுக்குக் கிடைக்கும் பாராட்டுக்களும், சிறந்த பின்னோட்டங்களும் தான் அவரை மேலும் ஊக்குவிக்கும் உற்சாக டானிக் என்பது கலப்படமற்ற அக் மார்க் உண்மை. நிச்சயம் எனது பாராட்டுக்கள் உங்களுக்கு உண்டு இதைச் சொன்னதற்கு. எனவேதான் நான் யாரையும் பாராட்டுவதில் எந்த விதமான கஞ்சத்தனத்தையும் காட்டுவதில்லை. மனமாறப் பாராட்டி விடுவேன், யாராக இருப்பினும்.அப்படிப் பாராட்டும் போது, பாராட்டப் படுபவர் மகிழ்கிறாரோ இல்லையோ, எனக்கு நிஜமாகவே மனசு சந்தோசமாக இருக்கும்.
  ( பதிவர்களைப் பாராட்ட வேண்டியதன் அவசியத்தைச் சமீபத்தில்தான் ஒரு தனிப்பதிவாக நான் பகிர்ந்திருந்தேன்)
  பதிவுகளின் நீளத்தைச் சுருக்காமல், எடிட் செய்யாமல் அப்படியே பகிருமாறு சொன்னீர்கள்.முயற்சி செய்கிறேன் சார். (உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தைச் சொல் கிறேன், யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.பெரிய அளவில் எழுதும் அளவுக்கு என்னிடம் சரக்கு ஒன்றும் ஸ்டாக்கில் இல்லை.எதோ சின்னச் சின்ன விசயங்கள் கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு கொஞ்சம் சொந்தக் கற்பனைச் சரக்கைக் கலந்து, கலப்படம் செய்து, பதிவுகள் என்ற பெயரில் எதையோ எழுதி ஒப்பேத்திக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். பெரிய பதிவுகளுக்கு நான் எங்கே போவேன்? மயில் ஆடுகிறது என்று வான்கோழியும் ஆட ஆசைப்படலாமா ? அதுதான் என்னுடைய உண்மை நிலைமை, திறமை எல்லாம்.எனவே என் பதிவுகளின் மேல் பெரிதாக எதிர்பார்ப்புகளை வைக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ஏமாற்றங்களைத் தவிர்க்கும்).
  என்னுடைய ஆசையெல்லாம் இப்படி ஒரு சிலபேர் மட்டுமே எழுதிக் கொண்டிருக்காமல் , நிறையப் பேர் எழுத முன் வரவேண்டும் என்பதுதான். பல்லாயிரக் கணக்கில் நம் குழுவில் இருக்கிறார்கள். அதில் நல்ல விசய ஞானமும், அறிவுக் கூர்மையும், எழுத்தாற்றலும், மொழி நடையும் உள்ளவர்கள் குறைந்தது ஆயிரம் பேருக்கு மேல் நிச்சயம் இருப்பார்கள்.அவர்கள் எல்லாம் ஏன் எதையுமே எழுதாமல் தவிர்க்கிறார்கள் ,தயங்குகிறார்கள் என்றுதான் எனக்குப் புரிபடவில்லை. என்னைப் போன்ற குறை குடமெல்லாம் கூத்தாடும் போது, நிறைகுடங்கள் எல்லாம் தளும்பாமல் அமைதி காப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இன்னும் நிறையப் பேர் எழுத ஆரம்பித்து, இந்தக் குழு முழுவதும் திலகத்தின் புகழாறு பாய வேண்டும் என்ற என் விருப்பத்தை மீண்டும் சொல்லி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
  வாசு தேவன் சார், உங்களின் அருமையான 'பந்தம்' எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியம்.
  மீண்டும் நன்றி, வணக்கம்.
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #632
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  12,344
  Post Thanks / Like
  Sundar Rajan
  ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றுபவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்....
  மதுரையில் நடைபெற்ற சரித்திரம் வாய்ந்த மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தின் 50வத...ு நாள் விழாவில்,
  திருச்சியில் இருந்து கலந்து கொண்ட அருமை இதயங்கள் பன்னீர், ராஜேந்திரன், வெங்கட், மகேஷ், முரளி, ராமச்சந்திரன் ஆகியோர் திருச்சியில் தலைவர் படம் வந்து வெகுநாளாகி விட்டது, என மிகவும் வருத்தப்பட்டார்கள்.
  இதோ உங்கள் மனவருத்தத்தை போக்க வந்து விட்டார் நமது மக்கள்தலைவர் அவர்கள்.
  ஆம்,
  மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு
  ஜூலை 22 சனி முதல் நடிகர்திலகம் அவர்கள் இருவேடங்களில் நடித்த மாபெரும் சாதனை காவியம் வெள்ளை ரோஜா திரைப்படம் கெயிட்டி திரையரங்கில் வெளிவருகிறது.
  சென்ற முறை இதே கெயிட்டி திரையரங்கில் வெளியான வெள்ளை ரோஜா திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்தது என்பது திருச்சியில் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களும் அறிந்ததே.
  இந்த முறையும் உங்கள் ஒத்துழைப்புடன் மாபெரும் வசூல் சாதனை செய்யும் என்பது உறுதி.
  தகவல்- அண்ணாதுரை, திருச்சி.
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 4. #633
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  12,344
  Post Thanks / Like
  Sundar Rajan

  மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
  ஜூலை 21 முதல்
  நடிகர்திலகம் அவர்கள்
  முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்த வைரநெஞ்சம் (ஹீரோ 2017) திரைப்படம் மதுரை சென்ட்ரல் திர...ையரங்கில் தினசரி 4 காட்சிகளாக வெளிவருகிறது.
  ராஜபார்ட் ரங்கதுரையும் தனது 9வது வாரத்தை தொடர்கிறார்.
  மதுரையில் இரண்டு சிவாஜி படங்கள் ஒரே வாரத்தில்,
  கலையுலக சக்கரவர்த்தியே
  நீங்களே உங்களுக்கு என்றும் நிகரானவர்
  என்பதை ஒரு முறை அல்ல
  ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்
  கொண்டிருக்கிறீர்கள்.
  சிவாஜி ரசிகன் என்று சொல்லுவோம்....
  நெஞ்சை நிமிர்த்தி செல்லுவோம்...
  வைரநெஞ்சம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற செய்திடுவோம்.
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 5. #634
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  12,344
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 6. #635
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  12,344
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 7. #636
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  12,344
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 8. #637
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  12,344
  Post Thanks / Like
  சாதனைச்சக்ககரவர்த்தியின் 97 வது திரைக்காவியம்
  கை கொடுத்த தெய்வம் வெளிவந்து
  சாதனை நிகழ்த்திய நாள் இன்று

  கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)


  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 9. #638
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)- A great Film by Iyakkunar thilagam K.S.G ,who started his Career as dialogue writer with Padikkatha methai.  Murali's Great write-up on our next Epic Film.  கை கொடுத்த தெய்வம்

  தயாரிப்பு: பொன்னி புரொடக்ஷன்ஸ்

  திரைக்கதை வசனம்: கே.எஸ். ஜி.

  இயக்கம் : கே.எஸ்.ஜி.

  வெளியான நாள்: 18 07.1964

  அமிர்தசரஸ் நகரம். ரயிலிருந்து இறங்கும் இளைஞன் ரவி வேலை தேடி அலைந்து ஒரு பார்க்கில் மயங்கி விழுகிறான். அவனை தன் அறைக்கு கொண்டு வந்து உணவு கொடுத்து காப்பாற்றுகிறான் ரகு. தற்கொலை எண்ணத்தோடு வந்த ரவி, ரகு காட்டும் அன்பிற்கு கட்டுப்படுகிறான். தனக்கு கிடைத்த மானேஜர் வேலையை ரகு, ரவிக்கு விட்டுக் கொடுக்கிறான். தன்னைப் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும ரவி, ரகுவின் பெற்றோர்கள் ஊரில் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு பணம் அனுப்புகிறான். இது அவர்களுக்கிடையே உள்ள அன்பை வலுவாக்கிறது. இருவரும் ஒரே அலுவலுகத்தில் பணி புரிகிறார்கள். ரவி மானேஜர், ரகு பியூன்.

  மற்றொரு கதைக் களம் சென்னை. பெரிய செல்வந்தர் மகாதேவன். அவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் கோகிலா. இளைய மகள் சகுந்தலா. மூத்த மகள் கோகிலா வெறும் அப்பாவி. வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவள். இரக்க குணம் அதிகம். வரதன் என்ற அயோக்கியனுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்கிறாள்.

  அவள் பண உதவி செய்யாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக மிரட்டியே அவளை தினமும் சந்தித்து பணம் வாங்குகிறான். இதை பார்க்கும் ஊர் மக்கள் அவளை தவறாக பேசுகிறார்கள். தன் பங்கிற்கு அந்த வரதனும் தனக்கும் கோகிலாவிற்கும் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்புகிறான். அவளின் கல்யாண ஏற்பாடுகளை தடுக்கும் விதமாக பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டை கடுதாசி எழுதுவதிலிருந்து அவர்களை சந்தித்து அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் ஒரு பிக் பாக்கெட் கும்பலுக்கு தலைவனாக இருக்கிறான்.

  ஊரார் பேசும் அவதூறு, அதன் காரணமாக நடக்காமல் போகும் கல்யாணம் இவையெல்லாம் அவளது தந்தையை மனமொடியச் செய்கிறது. இந்த அவமானம் தாங்காமல் கோகிலாவின் அண்ணன் ஊரை விட்டே ஓடிப போய் விடுகிறான். அந்த குடும்பத்திற்கு நெருக்கமான வக்கீல் மட்டுமே அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் .

  அங்கே அமிர்தசரசில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் டைப்பிஸ்டும் ரவியும் ஒருவரை ஒருவர் விரும்பிகின்றனர் என்பதை அறியும் ரகு அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கிறான். திருமணத்திற்கு பின்னும் ரகுவும் ரவியும் ஒரே வீட்டிலேயே சேர்ந்து வாழ்வது பற்றி அலுவலகத்தில் சிலர் தவறாக பேச அவர்களுடன் ரகு சண்டைக்கு போகிறான். ஒரு கட்டத்தில் இது அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் ரகுவை ரவி தடுக்கிறான். ஊரார் பேச்சுக்கெல்லாம் பயந்து நமது வாழ்க்கையை நாம் நாசப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறான். அவன் அன்புக்கு கட்டுப்பட்டு ரகு அந்த வீட்டிலேயே தங்குகிறான்.

  சென்னையில் மகாதேவனின் குடும்ப வக்கீல் ஒரு ஏழைக் குடும்பத்திற்காக வாதாடி அவர்களது சொத்தை மீட்டுக் கொடுக்கின்றார். எந்த வரனும் ஒத்து வராத நிலையில் மனம் உடைந்து நிற்கும் மகாதேவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அவரைப் பார்க்க வரும் வக்கீலுக்கு தான் கேஸ் ஜெயித்துக் கொடுத்த பெற்றோர்கள் தங்களின் ஒரே மகனுக்கு கல்யாணத்திற்கு பெண் இருந்தால் சொல்லும்படி சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்களை தொடர்பு கொள்கிறார்.

  அமிர்தசரசில் ரகுவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்க வரும்படி கடிதம் வருகிறது. ரவி அலுவலக வேலை காரணமாக வர முடியாத சூழ்நிலையைச் சொல்ல, பெண் பார்த்து விட்டு பெண்ணின் புகைப்படத்தை அனுப்புவதாக சொல்லி விட்டு ரகு கிளம்பிச் செல்கிறான்.

  சென்னையில் ரகு பயணம் செய்யும் கார் ரிப்பேராகி விட அந்த வழியாக வரும் கோகிலா தன் காரில் ரகுவிற்கு லிப்ட் கொடுக்கிறாள். முன் பின் தெரியாத அவனிடம் தன் மொத்த கதையையும் அவள் கூற, ரகு அவளை நன்கு புரிந்துக் கொள்கிறான். மறுநாள் பெண் பார்க்க செல்லும் ரகுவைப் பார்த்து கோகிலாவும் கோகிலாவைப் பார்த்து ரகுவும் சந்தோஷ அதிர்ச்சி அடைகிறார்கள். கலயாணத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் ரகு கோகிலாவின் போஃட்டோவை வாங்கி ரவிக்கு அனுப்புகிறான். மகாதேவன் குடுமபத்திற்கு மிகப் பெரிய சந்தோஷம்.

  புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ரவி. இந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல என்று பதில் எழுதி விடுகிறான். அதை பார்த்து துடித்துப போகும் ரகு, கோகிலா வீட்டிற்கு கடிதத்தோடு வருகிறான். அங்கே சகுந்தலாவை பார்த்து விஷயத்தைச் சொல்ல அவள் அதிர்ந்து போகிறாள். கடிதத்தை படித்து பார்க்கும் அவளுக்கு அது தன் அண்ணன் எழுதிய கடிதம் எனப் புரிகிறது. இப்போது இந்த விஷயத்தை சொன்னால் தன் தந்தையால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்றும் நேரம் வரும் போது தானே சொல்வதாகவும் சொல்லி கடிதத்தை வாங்கி கொண்டு ரகுவை அனுப்பி விடுகிறாள். தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்.

  மீண்டும் அமிர்தசரஸ் செல்லும் ரகு கையில் அந்தக் கடிதம் கிடைக்கிறது. அதை படித்து பார்த்து உண்மையை தெரிந்துக் கொள்ளும் ரகு, ரவியிடம் கேட்க, கோகிலா தன் தங்கைதான் என ஒப்புக் கொள்கிறான் ரவி. என்னை பற்றி அவதூறு பேச்சு வந்த போது எனக்கு அவ்வளவு அறிவுரை சொன்னாயே, இப்போது உன் தங்கையைப் பற்றியே இப்படி பேசுகிறாயே என்று ரகு கேட்க அதற்கு ரவி, என் தங்கை நல்லவளா கெட்டவளா என்று எனக்கு தெரியாது. ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ அவப் பெயர் சுமக்க நேர்ந்த அவள் உனக்கு வேண்டாம், என் நண்பனுக்கு வேண்டாம் என்பதால் தான் அப்படி சொன்னேன் என்கிறான். அவனின் நட்பை எண்ணி பெருமைப்படும் ரகு தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து சென்னைக்கு செல்கிறான்.

  அங்கே கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி சொல்வது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறிக் கொண்டிருக்க அவள் ஒளித்து வைத்த ரவியின் கடிதம் அவளது தந்தையின் கையில் சிக்கி விடுகிறது. தன் மகனே இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டான் என்பது தெரிந்ததும் இடிந்து போகும் மகாதேவன் அந்த கோபத்தை எல்லாம் கோகிலாவிடம் கொட்ட அந்த நேரம் ரகு அங்கே வந்து கோகிலாவை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறான். அனைவரும் மகிழ்கிறார்கள்.

  ஆனால் முடிவு?


  இந்தப் படத்தை பொறுத்த வரை நடிப்புக்கென்றே எடுத்த படம் எனச் சொல்லலாம். இரு திலகங்களின் அபார நடிப்பு வெளிப்பட்ட படம் இது.

  நடிகர் திலகத்தை பொறுத்த வரை மிக மிக இயல்பாக அதே சமயம் அவரின் ஒவ்வொரு உணர்வும் ஆழமாக பார்வையாளன் மனதில் பதியும் வண்ணம் நடித்திருப்பார். முதல் காட்சியில் மயங்கி கிடக்கும் எஸ்.எஸ்.ஆரை தூக்கிக் கொண்டு வைத்து அவரை உபசரிக்கும் இடத்திலிருந்து இறுதிக்காட்சியில் சாவித்திரியின் சோக முடிவை சொல்லி கலங்குவது வரை - டாப்.

  அறிமுக காட்சியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டே எஸ்.எஸ்.ஆரை விசாரிக்கும் காட்சியே களை கட்டி விடும். வாசலில் போஸ்ட் குரல் கேட்கிறது.[அனேகமாக அதிகமாக போஸ்ட் என்ற குரல் கேட்டது இந்த படத்தில் தான் இருக்கும்]. லெட்டரை பிரிக்கிறார். படிக்கிறார். முகம் மாறுகிறது. கண்ணை மூடி திறக்கிறார். கண்ணில் நீர் கட்டி நிற்கிறது. [அவருக்கு தான் அது "கண்" வந்த கலையாயிற்றே]. என்னவென்று கேட்கும் நண்பனிடம், அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் ஆயிரம் ரூபாய் பணம் வேணும்னு அம்மா லெட்டர் போட்டுருகாங்க. நம்மாலே பணம் அனுப்ப முடியாது,ரெண்டு சொட்டு கண்ணீர் தான் விட முடியும். அந்த கடமையை செஞ்சாச்சு. நீ போய் ஷேவ் பண்ணு என்று சொல்லும் போது அந்த பாத்திரத்தின் உணர்வோடு நாமும் இணைந்து போவோம். நண்பன் தன் நிலை புரிந்து ஊருக்கு பணம் அனுப்பி வைத்தான் என்று தெரிந்ததும் அதிக வசனங்கள் இல்லாமல் அந்த நன்றியை கண்களில் சொல்வதும் அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.

  தமிழ்நாட்டு சாப்பாடுக்கு அவர் ஏங்கும் ஏக்கம், அலுவலகத்தில் ஒரு பெண் சாப்பிடும் சாதத்தையும் குழம்பையும் அவ்வளவு ஏக்கத்துடன் பார்ப்பது, எப்போதும் சப்பாத்தி சாப்பிட்டு வெறுத்து போயிருக்கும் நேரத்தில் நண்பனுக்கு திருமணம் ஆக, அவன் மனைவியாவது நன்றாக சமைத்து போடுவாள் என ஆசையோடு காத்திருக்கும் போது அவளும் சப்பாத்தி செய்துக் கொண்டு வைக்க அவர் முகம் மாறும் பாவம் இருக்கிறதே, பிரமாதம். பிறகு தானே சமையல் அந்த பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பதும் [அரிசியிலே கல்லை களையணும். அரிசியை களைஞ்சிரக் கூடாது] இருந்தாலும் என்னவோ குறைகிறதே என்று யோசித்து கணவன் புடவை கட்டி விட, இவர் தலை வாரி பூ சூட்டுவதும் ரசிக்க தகுந்த காட்சிகள். தன் தங்கையாய் பாவிக்கும் நண்பனின் மனைவியையும் தன்னையும் தியேட்டரிலும் அலுவலகத்திலும் அவதூறு பேசும் ஆட்களை அடித்து துவைப்பது ஆவேசம் என்றால் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் தன்னை உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை. அதனாலே தான் வெளியே போறே என்று சொல்லும் நண்பனை சட்டையை பிடித்து உலுக்கும் உக்கிரம் அதே நேரத்தில் அவன் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து உடைந்து அழுவது எல்லாமே டாப்.

  இப்படி கலகலப்பாக இருக்கும் அவர் சென்னைக்கு சென்றவுடன் சாவித்திரியைப் பார்த்தவுடன் அவர் பேச்சைக் கேட்டவுடன் அவர் பாத்திரத்திற்கு ஒரு சீரியஸ்னெஸ் வருவதோடு அந்த பெண்ணின் மேல் உருவாகும் இரக்கத்தையும் முகபாவத்திலேயே வெளிப்படுத்தியிருப்பார். பெண் பார்க்க போகும் இடத்தில் எதிர்பாராமல் சாவித்திரி தான் பெண் என்று தெரிந்தவுடன் அவருக்குள் ஏற்படும் பலவேறு உணர்வுகளை அழகாக செய்திருப்பார். நண்பனுக்கு காண்பிக்க போஃட்டோ வேண்டும் என்று வெட்கத்துடன் கேட்பதாகட்டும், பதில் வரவில்லையே என்று தவிப்பதாகட்டும், கடிதம் வந்தவுடன் அந்த முகத்தில் வரும் சந்தோஷம் ["நான் சொன்னேன்லே கரெக்டா பதில் போட்டுட்டான் பாரு"], கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பிக்க அந்த குரலில் ஏற்படும் தடுமாற்றம், அந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல எனபதை படித்து விட்டு இடிந்து போவது, தன் நிலையை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் புஷ்பலதாவிடம் வார்த்தை வராமல் தவிப்பது, தன் வீட்டிற்கு வந்து பெண்ணை குறை சொல்லும் ராதாவை கன்னத்தில் ஒரு அறை கொடுத்து ஊர்காரர்களை சத்தம் போடுவது, இறுதியில் சாவித்திரியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கை கூடாமல் போய் விட, அவளின் உயர்வுகள் பற்றி குமுறி பேசுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில படங்களில் ஆரம்பம் முதல் முடிவு வரை நடிகர் திலகத்தின் சிறப்பான நடிப்பை பற்றி சொல்ல வேண்டி வரும். அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

  நடிகையர் திலகம் சாவித்திரி படத்தின் நாயகி. மொத்தம் ஒரு எட்டு அல்லது பத்து காட்சிகளில் தான் வருவார். ஆனால் அனாயசமாக செய்திருப்பார். இரு திலகங்களும் இணைந்து நடித்த படங்களில் பாசமலருக்கு பின் மிக சிறந்த படம் கை கொடுத்த தெய்வம். அந்த உடல் வளர்ந்த ஆனால் குழந்தை மனம் படைத்த கோகிலா பாத்திரத்தை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்கை தன் நடவடிக்கைகளைப் பற்றி ஏதாவது சொல்ல, அவர் அதற்கு கொடுக்கும் பதில், அப்பாவின் மேல் வைத்திருக்கும் பாசம், ராதாவிடம் முதலில் காட்டும் இரக்கம், பிறகு பயம் மற்றும் கோபம்,சிவாஜியை முதலில் பார்க்கும் போதே தன் கதை முழுக்க சொல்லும் அப்பாவித்தனம், முதல் நாள் பார்த்த சிவாஜியே மறு நாள் பெண் பார்க்க வர, ஓடி வந்து சேரை இழுத்துப் போட்டு பக்கத்தில் உட்கார்ந்து "ஆமா, நேத்து அப்புறம் உங்க பிஃரண்டை பார்த்திங்களா" என்று காஷுவலாக விசாரிப்பது, இறுதியில் தந்தையே தன்னை கடுமையாக திட்டி விட மனம் உடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டதை சொல்வது - நடிகையர் திலகம் பின்னியிருப்பார் நடிப்பில்.

  இந்த படத்தின் மிக பெரிய ஆச்சரியம் எஸ்.எஸ்.ஆர். வழக்கமான தன் பாணியை விட்டு விட்டு வெகு இயல்பாக செய்திருப்பார். சிவாஜியும் அவரும் இணைந்து வரும் எல்லாக் காட்சிகளுமே நன்றாக மிளிரும். பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் அவரது அனுபவம் பளிச்சிடும். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லும் சிவாஜியிடம் உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, கோபப்பட்டு தன் கழுத்தை நெரிக்கும் சிவாஜியிடம் நீ வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொன்னா, நான் அப்படிதாண்டா சொல்லுவேன் என்று அசராமல் சொல்லும் இடம் எல்லாம் பிரமாதம். ஆனால் இவ்வளவு நன்றாக செய்து விட்டு அதற்கு ஒரு திருஷ்டி பரிகாரம் போல ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலின் போது நண்பனுக்கு கடிதம் எழுதுறேன் பேர்வழி என்று அவர் காட்டும் அபிநயம் இருக்கிறதே! -----

  கே.ஆர்.விஜயா மராத்தி பெண்ணாக வந்து தமிழ் பெண்ணாக மாறும் ரோல். நடிப்பை கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை. கெடுப்பதற்கும் ஒன்றுமில்லை. புஷ்பலதா சாவித்திரியின் தங்கை சகுந்தலாவாக ஒரு perptual சோகத்தோடு காட்சியளிக்க வேண்டிய பாத்திரம். குறை சொல்ல முடியாது.

  ரங்காராவ் - கோகிலாவின் அப்பா. அவர் எப்போது சோடை போனார் இதில் போவதற்கு? சமூத்தினால் வீண் அவதூறு பரப்பப்படும் ஒரு பெண்ணின் தந்தையை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எம்.ஆர்.ராதா - வில்லன் வரதன். அவருக்கு பெரிய அளவில் பேசும்படியான பாத்திரம் இல்லை. குறிப்பிடத் தகுந்த இன்னொருவர் வக்கீலாக வரும் சகஸ்ரநாமம். கர்நாடக சங்கீதத்தை ஹம்மிங் செய்தபடியே அவர் ஒவ்வொரு விஷயத்தையும் டீல் செய்வதே அழகு.

  கே.எஸ்.ஜியின் படங்களிலே, மிகச் சிறந்த படம் இதுவென்றால் மிகையாகாது. சென்னையிலும் அமிர்தசரசிலும் நடக்கும் கதைகளை அழகாக எந்த நெருடலும் இல்லாமல் இணைப்பதை செவ்வனே செய்திருப்பார். சாதாரணமாக பக்கம் பக்கமாக வசனம் எழுதும் கே.எஸ்.ஜி. இதில் முற்றிலும் மாறுபட்டு இயல்பான வசனங்களை எழுதியிருப்பார். சிவாஜி முதலில் எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிலேயே தங்குமாறு சொல்லும் போது வரும் வசனங்கள் அதற்கு சாட்சி. "சில பேருக்கு கூட்டம் பாரமா இருக்கலாம்.ஆனால் எனக்கு தனிமை பாரமாக இருக்கு" என்று சிவாஜி சொல்ல "உங்கள் அன்புக்கு கட்டுபடறேன். ஆனால் வார்த்தைக்கு கட்டுப்பட முடியவில்லை" என்று சொல்லும் எஸ்.எஸ்.ஆர். இது போல் சில பல நல்ல வசனங்கள் படம் முழுதும் தூவி விடப்பட்டிருக்கும். இப்படி பட்ட ஸ்டார் காஸ்ட் அமைந்து விட்ட பிறகு இயக்குனர் வேலை வெகு சுலபம். நடிகர் திலகத்தை வைத்து கே.எஸ்.ஜி. இயக்கிய முதன் முதல் படமே மறக்க முடியாத படமாக அமைந்தது தனிச் சிறப்பு. குறிப்பிடத் தகுந்த மற்றொரு விஷயம் நகைச்சுவை படத்திற்கு வெகு முக்கியம் என்று கருதப்பட்ட காலத்தில் காமடி டிராக் இல்லாமலே காமடி நடிகர்கள் இல்லாமலே படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லலாம் என்பதை உணர்த்தியிருப்பார்கள்.

  கர்ணன் காமிரா. ஆனால் கண்ணை உறுத்தும் angle-கள் இல்லாத சீரான ஒளிப்பதிவு. இசையைப் பொறுத்தவரை நான்கே பாடல்கள். ஆனால் நான்கும் வெகு பிரபலமான பாடல்கள்

  1. குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா- சாவித்திரி தோழி பெண்களோடு கடற்கரையில் பாடும் பாடல்.

  2. சிந்து நதியின் மிசை நிலவினிலே- மகாகவியின் மறக்க முடியாத பாடல். சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்ற வரிகளுக்கேற்ப இரண்டு சரணங்களுக்கிடையே தெலுகு வரிகள் மனதை வருடும் மெட்டில் அமைக்கப்பட்ட விதத்திற்காகவே மெல்லிசை மன்னர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆலப்புழையின் காயலில் [Back Waters] ஓடும் படகு பாட்டிற்கு மேலும் அழகை கொடுக்கும். அது மட்டுமா? மீசையும் தலைப்பாகை கட்டும் உள்ள முகம் மட்டுமே பெரும்பாலும் தெரியும் க்ளோஸ் அப் காட்சிகள் உள்ள இந்த பாடல் பாரதியை இன்றைக்கும் தமிழ் நாட்டிற்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒன்றல்லவா.

  மேலும் கங்கை நதி தீரத்திலும் காவிரி நதி ஓரத்திலும் வாழும் விவசாயிகளை அவர்களின் பாரம்பரிய உடையோடு காண்பித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று வீர முழக்கமிட்ட சிங்க மராட்டிய திலகரை அந்த ஒரு கணத்தில் நடிகர் திலகம் நமக்கு அறிமுகப்படுத்தினாரே அது என்றும் மனதில் நிற்கும் காட்சியல்லவா. யானை தந்தம் தரும் நம்பூதிரி மட்டும் என்ன குறைந்தவரா என்ன?. எப்படிப் பார்த்தாலும் மறக்க முடியாத பாடல் மற்றும் காட்சி.

  3. ஆஹா மங்கள மேளம் - நடிகர் திலகம் பெண் பார்க்க போகிறார் என்று தெரிந்ததும் விஜயா பாடும் பாடல். எஸ்.எஸ்.ஆர் சேலை கட்டி வருவார்(!)

  4. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - மற்றொரு காவியப் பாடல். பாடல் வரிகளில் கண்ணதாசனும், இசையில் மன்னர்களும், பாடுவதில் டி.எம்.எஸ்ஸும் நடிப்பதில் சிவாஜியும் பின்னியிருப்பார்கள். சாந்தியில் வரும் யார் அந்த நிலவு பாடலில் முகத்தை காட்டாமல் முதுகை காட்டி கைதட்டல் வாங்குவார் நடிகர் திலகம் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த படம் வருவதற்கு முன்பே வெளியான இந்த படத்தின் இந்தப் பாடலில் இரண்டாவது சரணம் தொடங்கும் போது பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் என்ற வரிகளுக்கு முதுகை மட்டும் காட்டியபடி தன் வலது கை விரல்களை மட்டும் உயர்த்தி கைதட்டல் வாங்கிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

  இப்படி எல்லாம் அமைந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது சந்தோஷமான செய்தி. சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் மதுரை கோவை முதலிய ஊர்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம்.

  அந்த ஆண்டைப் [1964] பொறுத்த வரை தான் எப்படிப்பட்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தார்? தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படங்கள்.

  1. கர்ணன் - அதுவரை புராணத்தில் வில்லனாக இருந்த கர்ணன் நாயகனாக மாறினான். இன்று வரை அப்படியே நிலைக்கிறான்.

  2. பச்சை விளக்கு - ரயில் என்ஜின் டிரைவர். குடும்பத்திற்காக தன்னை அழித்துக் கொள்ளும் சாரதி.

  3. ஆண்டவன் கட்டளை - விவேகானந்தர் வழி நடந்தவர் சபலங்களினாலும் சலனங்களினாலும் திசை மாறி வாழ்வை கிட்டத்தட்ட தொலைத்து பின் மீண்டு எடுத்த கிருஷ்ணன்.

  4. கை கொடுத்த தெய்வம் - நட்புக்காக எதையும் செய்யும் இதயம் படைத்த ரகு.

  5. புதிய பறவை - வாழ்க்கையில் எல்லா விதமான வசதிகள் இருந்தும் ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டதால் நிம்மதியை இழந்து தவித்த கோபால்.

  6. முரடன் முத்து - கண் மூடித்தனமான பாசமும் முரட்டு சுபாவமும் கொண்ட முத்து.

  7.நவராத்திரி - ஒன்ற இரண்டா எடுத்து சொல்ல! நவரசமும் ஒன்று சேர்ந்து வந்த கொடையல்லவா இது!

  இப்படிப்பட்ட ஒரு வருடத்தில் வந்த இந்த படத்தைப் பற்றி பேச எழுத வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.  [/B]
  [/COLOR][/SIZE][/QUOTE]
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 10. Likes sivaa liked this post
 11. #639
  Senior Member Senior Hubber SPCHOWTHRYRAM's Avatar
  Join Date
  Sep 2013
  Location
  Trichy
  Posts
  647
  Post Thanks / Like
  திருச்சியில் நடிகர்திலகத்தின் 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்காக இதுவரை 11 வகையான போஸ்டர்கள் தயாராகி விட்டன. அரசியல் பலம் பண பலம் இன்றி இறந்து 16 ஆண்டுகள் ஆன பின்பும் தலைவரின் ரசிகர்கள் ஆர்வம் பிரமிக்க தக்க அளவில் உள்ளது
  உலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.
  1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970
  2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967

 12. #640
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  புதிய பதிவு

  நடிகர் திலகத்தின் 'one of the best' பாடல் பதிவு. ('நான் பட்ட கடன்')

  அல்லது

  கவிஞர் வாலி அவர்களின் நினைவு சிறப்புப் பதிவு
  வாலி அவர்கள் நடிகர் திலகத்திற்காக எழுதியுள்ள பல பாடல்கள் கண்ணதாசனின் பாடல்களுக்கு இணையாக அற்புதமாகவே இருக்கும். 'மாதவிப் பொன் மயிலாள்' ஒன்று போதுமே! ('இரு மலர்களி'ல் அனைத்துப் பாடல்களுமே வாலிதான்) நடிகர் திலகத்தின் படங்களுக்கு பாடல் வரிகளால் அர்ச்சனை செய்யும் 'இரு மலர்களாக' கண்ணதாசன் அவர்களும், வாலி அவர்களும் அவருடைய நடிப்பிற்கு பாடலாசிரியர்கள் என்ற முறையில் தீனி போட்டனர். அந்தப் பாடல்களின் வரிகளை அப்படியே உள்வாங்கி நம் திலகம் ஒப்புயர்வற்ற தன் நடிப்பால் அவ்வரிகளி மெருகேற்றி நம் அனைவருக்கும் அமிர்த விருந்து அளித்துக் கொண்டே இருக்கிறார்.

  வாலி பாடல்களில் பழைய பாடல்கள் நிறைய உண்டு. அவற்றை இங்கே சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடிகர் திலகத்திற்கு பின்னாளில் அவர் எழுதி பட்டி தொட்டியெங்கும் பட்டை கிளப்பிய ஒரு 'விஸ்வரூப'ப் பாடலை இன்று வாலியின் நினைவு தினத்திற்காகவும், தினம் தினம், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி நம் நெஞ்சை விட்டு நினைவகலாதிருக்கும் நடிகர் திலகத்திற்காகவும் இங்கே காண்போம்.

  06.11.1980 அன்று வெளியான 'விஸ்வரூபம்' படத்தில் நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ்.பாடிய 'திலக'ப் பாடல். இந்த பாடல் வரிகள் எழுதியதற்காக வாலிக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

  இந்த வரிகளுக்கு தன் மெல்லிசையால் உயிர் கொடுத்து இன்றுவரை நம் காதுகளில் ரீங்காரமிடச் செய்த மெல்லிசை மன்னருக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

  பாடலுக்கேற்றவாறு உருக வைக்கும் நடிப்பைத் தந்து நம் கண்களில் கண்ணீர் நிறையச் செய்த நம் 'கண்மணி' க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

  இவ்வளவு அழகிய பாடலை மைசூர் அரண்மனையிலும், அதன் பின்னணியிலும், ஒற்றைக்கல் நந்தி கோவிலிலும் ஒளிப் படமாக்கிய ஒளிப்பதிவாளர் விஸ்வநாதராய் அவர்களுக்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

  இப்பாடல் காட்சியை உயிரோட்டமாய் எடுத்து உன்னதமாக நம் உள்ளங்களில் உலாவச் செய்த 'தெய்வ மகனி'ன் இயக்குனர் ஏ சி டி க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

  நடிகர் திலகம் திரையில் நடித்தால் தானும் அது போலவே பாடல் ரிக்கார்டிங் அறையில் ஓரளவிற்கு நடித்துப் பாடினால்தான் அந்த சிங்கப் பசிக்கு தன் குரலால் தீனி போட முடியும் என்று உணர்ந்து பாடும் 'பாடகர் திலக'த்திற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

  ஆமாம்!

  'நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
  அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
  செல்வம் ஆயிரம் இருந்து'

  கிராமத்தில் அமைதியாய் விவசாயம் பார்த்து, ஏர் பிடித்து, உழவு செய்த அப்பாவி நாயகன் தன் அன்பு மனைவியுடன் காலக் கொடுமையால் தங்கையை இழந்து, பட்டணம் வந்து கெட்டு, கடத்தல் கூட்டத்தில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டு, அல்லல்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் கள்ளக் கடத்தல் தொழிலின் 'டான்' ஆகிறான். அப்போதும் அவனுக்கு நிம்மதி இல்லை ஆசை மகனே அவனை 'டான்' என்று வெறுத்து ஒதுக்குகிறான்.

  ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். ஆனால் அவன் மனையாள் மட்டும் அவனுடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவனே தெய்வமென வாழ்கிறாள். மலை போனற மணாளன் வெறும் மணல் மேடாய் குன்றிப் போகாமல் இருக்க இறைவன் தந்த வரம் அவன் மனைவி சாவித்திரி.

  அவள் தன் கணவனிடம் இதுவரை எதுவுமே கேட்டதில்லை. உலகையே கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவான். ஆனால் அவள் ஆசைப்பட்டாளில்லை. அவளுடைய உலகமே அவன் ஒருவன்தான்.  அவன் வாழ்க்கையில் பட்ட துன்பங்களின் காரணமாக கடவுள் நம்பிக்கை வெறுத்து கோவில் செல்லாமல், கோபுரம் பார்க்காமல் கோபமாய் இருப்பவன் இறுதியில் மனைவியின் பொறுமை அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவனை அவளுடனேயே கோவிலுக்கு கூட்டிச் செல்கிறது. அவனுக்கு நன்றாகத் தெரியும் மனைவியைத் தவிர தன்னை உண்மையாக நேசிப்பவர்கள் யாருமில்லையென்று. அவன் தொழில் எப்போதும் அவனை 'காலி' பண்ணைக் காத்திருக்கிறது. அதையும் அவன் உணர்ந்தே இருக்கிறான்.

  மனைவி கோவிலில் என்றும் கேட்காத திருநாளாய் அவனிடம் பூ வாங்கித் தரச் சொல்லி கேட்கிறாள். ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு. பூ விற்கும் பெண்மணியிடம் சென்று தன் 'பூவை'க்காக பூ வாங்குகிறான். நூறு ரூபாயும் அதற்காக நீட்டுகிறான். பூக்காரி 'சில்லறை இல்லை' என்று சொன்னவுடன் கொஞ்சம் சிதறுபவன் 'இதுவரை எதுவும் கேட்காத மனைவி இன்று என்னிடம் பூ கேட்டிருக்கிறாள் அவளுக்கு வாங்கிக் கொடுத்தே தீர வேண்டும்' என்று பூக்காரியிடம் சொல்ல, அந்த பெரிய மனது பூக்காரி 'நீங்க பணமே கொடுக்க வேண்டாம்....இந்தாங்க பூ...மனைவிக்கு வச்சு விடுங்க' என்று சொல்லி பெருந்தன்மையுடன் பணம் வாங்காமல் நகர, சற்றும் அதை எதிர்பாராதவன் 'இந்தக் கடனை நான் எப்படி தீர்க்கிறது?' என்று தனக்குள் புலம்பிக் கொள்கிறான்.

  பூக்காரியால் அவனுக்கு அப்போது உண்டான 'கடன்' என்ற வார்த்தை தன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அவன் என்ன ஆரம்பிக்கிறான். தன் வாழ்வில் இதுவரை தீர்க்க இயலாத கடன்களை பற்றி நினைக்க ஆரம்பிக்கிறான். அவன் பட்ட கஷ்டங்களைவிட அவன் பட்ட கடன்கள்தான் அவன் மனதில் நிழலாய் இப்போது ஓடுகிறது. ஆனால் அது காசு வாங்கிய கடன் அல்ல...'பெத்த கடன், வளர்த்த கடன், குரு கடன், மனைவி கடன்' என்று அது மனைவியின் மேல் படரும் அன்பான, வாஞ்சையான பார்வையுடன் அருமையான பாடலாக அவனிடமிருந்து வெளிப்பட ஆரம்பிக்கிறது.

  நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து

  நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
  அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
  செல்வம் ஆயிரம் இருந்து

  பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
  என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
  பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
  என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
  கல்வி கற்ற கடன் குருவினிடம் சேர்ந்து கிடக்கு
  இதில் மற்ற கடன் அனைத்துமென்ன அமைதியிருக்கு

  நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
  அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
  செல்வம் ஆயிரம் இருந்து

  என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
  என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
  என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
  என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
  ஹோ,,,,,,ஓ
  என் தேவைகள் இவள் தந்தாள் தந்த கடன் தீர்ப்பேனோ
  பல சேவைகள் இவள் செய்தாள் செய்த கடன் தீர்ப்பேனோ

  நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
  அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
  செல்வம் ஆயிரம் இருந்து

  என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
  ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
  என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
  ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
  ஹோ,,,,,,ஓ
  எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை
  அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை

  நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
  அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
  செல்வம் ஆயிரம் இருந்து  வாலியை நினைவுகூறும் போது நடிகர் திலகத்தை மறந்து விட இயலுமா? முடியுமா? வாலி வணங்கிய 'ராமனை'க் கூட மறக்கலாம்...நம் கணேசரை மறக்க முடியுமா?

  இந்தப் பாடலில் ஆண்டவன் அடக்கி வாசிக்கும் அற்புதங்கள் நிகழுமே! பாடலின் ஒவ்வொரு 'கடனை'யும் அவர் பாடி கலங்கும் போது கல்பட்டது போல நம் நெஞ்சங்களும் கலங்குமே! அவரோடு சேர்ந்த ஒரு கடன் பட்ட கணவனாய் நாமும் மாறி விடுவோமே! மனைவியின் இத்தனை கால பொறுமையும், சகிப்புத் தன்மையும் அவர் முகம் காட்டும் அந்த 4 நிமிட பாவங்கள் பார்ப்போரிடம் அப்படியே பதியுமே! மனைவியை வெறுப்பவன் கூட ஒரு முறை இந்தப் பாடலில் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் திருந்திப் போவானே!

  வாக்கிங் ஸ்டிக் வைத்து வகைவகையான பாடல்களை வாகாக நடித்துத் தந்த நடிக தெய்வம் இதிலும் அதை நடிக்க வைக்கிறதே 'செல்வம் ஆயிரம் இருந்தும் என்ன பயன்?...கிடக்கிறதே ஆயிரம் கடன்' என்று கலங்கும் உள்ளத்துடன், கனத்த இதயத்துடன் காட்டும் முகபாவங்கள் அளவெடுத்து தைத்த நடிப்புச் சட்டையாக நம் நாடி நரம்பெல்லாம் சென்று நிறைகிறதே!

  'செல்வம் ஆயிரம் இருந்து; எனும் போது முகத்தில் காட்டும் சிரிப்போடு கலந்த சலிப்பு.. வேதனை...இடையிசையில் சுஜாதாவுடன் கடந்த கால நினைவுகளை வேதனையுடன் அசை போட்டவாறு வரும் அலட்டாத நடை,.. அப்படியே சைடில் நடந்து வரும் மனைவியை ஒரு வினாடி பார்க்கும் அந்த கருணைப் பார்வை...(அடிப்பாவி மகளே! இத்தனை நாள் என்ன சுகத்தை நான் உனக்கு கொடுத்தேன்? என்னிடம் என்ன இன்பம் கண்டாய்?..எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்காக இப்படி ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போய்க் கிடக்குறியே') 'ஹோ' என்ற விரக்தியில் தலை தூக்கும் தவிப்பு... அவருக்கே உரித்தான 'நான் பட்ட கடன்' எனும் போது செய்யும் தலையாட்டல்...பொங்கும் அழுகையை கட்டுப்படுத்தி அவள் பக்கம் கை நீட்டி 'ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள்... அந்தக் கடன் தீர்ப்பேனோ' என்று அவள் மீது பொய்க் கோபம் காட்டி பொருமும் சோகம்... 'எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை... அதை அடைத்திட என்னும் போது பல பிறவிகள் தேவை' என்று 'அவள்மீது பட்ட கடனை அடைக்கவே முடியாது' என்ற அன்புப் பெருக்கில் விக்கி அழும் கடன்காரக் கணவனின் பச்சாதாப பரிதாப நிலை என்று பாடல் முழுதும் படுபாந்தமாக கடன் தீர்க்க முடியாத கணவனாக மனைவி மேல் மாறாத அன்பு செலுத்தும் கணவனாய், கண்ணியவானாய் கலக்கி எடுக்கிறார் நடிகர் திலகம். கிராமங்களில் மோட்டார் பம்ப் இறக்கையில் வாய்க்காலில் தெள்ளது தெளிவாக ஒரே சீராக ஓடும் தண்ணீர் போல சிறப்பான நடிப்பை வழங்கி தாய்க்குலங்களில் நெஞ்சில் மட்டுமல்ல...நம் அனைவர் நெஞ்சங்களிலும் நிறைகிறார் திலகம். அந்த மூன்று நிமிட நேரத்தையும் நம் வாழ்க்கையின் தருணங்களாக ஆக்கி, நம்மை அவருடன் இணைத்து, அவர் சோகங்களை நமக்கு 'கடன்' கொடுத்து, நம் வாழ்க்கையின் கடன்களையும் நினைத்துப் பார்த்து விடச் செய்கிறார். இது அவரால் அன்றி வேறு எவரால் முடியும்?  சுஜாதா நடிகர் திலகத்தின் மனைவி சாவித்திரியாக பாந்தம்தான். இருந்தாலும் திலகத்தின் முன் சம்திங் மிஸ்ஸிங் ஆனா மாதிரி தெரியும். பேலன்ஸிங் பண்ண கொஞ்சம் கஷ்டப்படுவார். ஆனால் அது சுஜாதாவின் குற்றம் அல்ல. திலகத்தின் மீதுதான் குற்றம். ஏனென்றால் பாடலின் முழு ஆக்கிரமிப்பும் அவரே. அவருக்கப்புறம்தான் வரிகள், இசை, பாடகர்கள், நடிகர்கள் என்று விமர்சிக்கவே முடியும். இந்தப் படாலில் மட்டுமல்ல...எந்தப் பாடலிலும்.

  (இன்னொன்று..இந்த மாதிரி மனைவி மேல் அன்பு கொண்டு கொட்டும் பாடல்கள் திலகத்திற்கு பல உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு ஜோடி. ஒவ்வொரு ஜோடிக்கும் வேறு வேறு மாதிரி பக்குவ நடிப்பு)

  பத்மினியுடன் வயதான காதலைக் காட்டினால் அங்கு நிலைமையே வேறு. பத்மினி கண்ணில் நீர் வழிந்தால் நிஜமாகவே இவர் நெஞ்சில் உதிரம் கொட்டி விடும். நெருக்கத்தோடு ஆழம் அதிகமாகும். செல்லக் கோபமும் கண்டிப்பும் பதமினியிடம் நைசாக காட்டப்படும். நெருக்கத்தைவிட உரிமை அதிகமாக இருக்கும்.'பாலக்காட்டு அப்பாவி ராஜா' இளமையில் பாடும் போது பார்க்கலாம். அதே முதுமையில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் போது வேரென இருந்து வீழ்ந்து விடாமல் தாங்கிப் பிடிக்கும் பத்மினி மனைவியின் மடி ஆறுதல் தரும் இடமாய் இருக்கும்.

  இதில் '50 லும் ஆசை வரும்' என்று ரிஷிமூலம் பார்க்காது 'புன்னகை அரசி'யுடன் திலகம் குதூகலம் கொண்டு பாடும் போது சிறுவயதுக் காதலன் தோற்பான். 'ஓ..மை டியர் டாக்டர்' என்று குறும்பு கொப்பளிக்க அதே புன்னகை அரசியுடன் 'ஜெனரல்' பாடும் போது கணவன் மனைவியின் அந்தரங்கம் அன்னியோன்யம் அருமையாக வெளிப்படும். காமக் குறும்பு கொப்பளிக்கும்.. விஜயா என்றால் நெருக்கமும், நேசமும் வேற மாதிரி. ('புருஷன் பொண்டாட்டின்னா சிவாஜி, கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கணும்' என்று பலர் சொல்லக் கேட்டு ரசித்திருக்கிறேன்)

  சுஜாதாவுடன் இம்மாதிரிப் பாடல் என்றால் விஜயாவுடன் இருப்பது போல் அவ்வளவாக நெருக்கம் பிளஸ் ஓட்டுதல் இருக்காது. ஆனால் மாறாக ஒரு இரக்கம் இருக்கும்...ஒரு கருணை இருக்கும். கண்ணியம் இருக்கும். 'நினைவாலே சிலை செய்து' காதலி சுஜாதாவுக்காக 'அந்தமானில்' வைத்தாரே! ஆனால் ரொம்பப் பெருந்தன்மை காட்டுவார் இப்பாடல் போலவே.

  நடுத்தர வயது பாடல் என்றால் ஸ்ரீவித்யாவுடன் வேறு மாதிரி இருக்கும். கை கோர்த்து விரல்கள் பிடித்து, ஒரு சிறு முத்தம் பதித்து, அழகான நடை நடந்து வருவதோடு 'இமய'த்தின் காதல் முடிந்து போகும். ('கங்கை, யமுனை இங்குதான் சங்கமம்.')

  இப்படி தன்னுடன் நடிக்கும் நாயகிகளுக்குத் தகுந்தவாறும் மாற்றி மாற்றி 'நடிப்பரசன்' நடிப்பில் நங்கூரம் பாய்ச்சுவார். இது சும்மா உதாரணத்திற்கு கொஞ்சமே...நிறைய எதிர்பார்த்தீர்களானால் பதிவின் நீளம் அதிகமாகிவிடும்.)

  'மெல்லிசை மன்னரி'ன் இசையைப் பற்றிக் குறிப்பிடத்தான் வேண்டும். பாடலின் வரிகள் முடியும் போது பின்னணியில் விடாமல் ஒலிக்கும் கிடாரின் ஒலி இனிமையோ இனிமை. பாடகர் திலகம் நடிகர் திலகத்தின் குரலை தன்னுடையதாக்கி வழக்கம் போல வளமை காட்டுவார்.

  மனைவியின் மீது கணவன் பட்ட கடன்களை மாண்புடன், பண்புடன், பாங்குடன் எடுத்துச் சொல்லும் அருமைப் பாடல். சக்கை போடு போட்ட ஹிட் பாடல். பழைய ஹிட் பாடல்களுக்கு கொஞ்சமும் குறையாத சவால் விடும் சாகசப் பாடல். சாகா வரம் பெற்ற பாடல். சரித்திர நாயக்கரின் பாடல். பொதுவான ரசிகர் அல்லாது குறிப்பாக 80 களின் நடிகர் திலகத்தின் இளம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை கோலோச்சும் மிகப் பிரபலமான பாடல்.

  Last edited by vasudevan31355; 18th July 2017 at 10:46 PM.
  நடிகர் திலகமே தெய்வம்

 13. Likes sivaa liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •