Page 135 of 400 FirstFirst ... 3585125133134135136137145185235 ... LastLast
Results 1,341 to 1,350 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1341
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Sivaji Palanikumar









    https://www.facebook.com/md.kamal.31...8200798698751/














    நடிகர் திலகத்தின் நூறு நாட்கள் படம் பட்டியல்
    இன்று மூன்று நாட்கள் ஓடினால் சூப்பர்
    ஏழு நாட்கள் ஓடினால் பிளாக் பாஸ்டர் மூவி . விளம்பரங்களாலேயே வண்டியேட்டும் இன்றைய நிலை
    சத்தமில்லாமல் 100 நாட்கள் கடந்த நடிகர் திலகத்தின் சாதனை.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1342
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Murali Srinivas




    சங்கம் - தங்கம் - சிங்கம்
    இன்றைக்கு சரியாக 65 ஆண்டுகளுக்கு முன் (17.10.1952) அன்று உதயமான இரண்டு வரலாற்று அடையாளங்களில் ஒன்றைப் பற்றிய ஒரு பதிவு
    இரண்டு வருடங்களுக்கு முன்பு சரியாக சொல்ல வேண்டுமென்றால் 17.09.2015 அன்று காலை ரயிலில் மதுரைக்கு சென்று இறங்குகிறேன். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி. ரயில் நிலையத்திலும் வெளியில் வந்தவுடனும் முதலில் தென்பட்டது ஒரு பெரிய விளம்பரம். இன்று முதல் கோலாகல ஆரம்பம். சென்னை சில்க்ஸ்-தங்கம் தியேட்டர் வளாகத்தில் என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.
    அன்று மாலை மற்றொரு அலுவல் காரணமாக தங்கம் தியேட்டர் அமைந்திருக்கூடிய மேல பெருமாள் மேஸ்திரி வீதி வழியாக செல்ல நேர்ந்தது. அரங்க முகப்பே முற்றிலும் மாற்றபப்ட்டு வெள்ளமென மக்கள் கூட்டம். முந்தைய காலங்களில் கூட்டம் மிக அதிகமாக இருந்தால் பின் பக்க கேட் என அழைக்கப்பட்ட வாசல் வழியாக அதாவது தியேட்டருக்கு பக்கவாட்டில் அமைந்திருக்கும் காக்கா தோப்பு தெரு என்று அழைக்கப்படும் வீதியில் மக்கள் வெளியே வருவார்கள். இப்போதும் மக்கள் புது துணிகளை வாங்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக அந்த வாசல் வழியாக வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.
    வெகு நாட்களுக்கு பின் மதுரை வந்த சந்தோஷம் நிறைந்திருந்த மனதில் சட்டென்று ஏதோ குறைவது போல் தோன்றியது. உற்சாக பலூனில் சின்ன துளையிட்டது போல். முந்தைய தலைமுறையை சேர்ந்தவர் அதிலும் சினிமாவை நிரம்ப நேசித்த மனிதர்கள் அனைவருக்குமே திரையரங்குகள் என்பது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிப் போயிருக்கும்.
    இதற்கு முன்பும் பல திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அப்போதும் மனதில் சோகம் வந்தது. ஆனால் தங்கம் தியேட்டர் மூடப்பட்டு விட்டது எனும்போது மட்டும் ஏன் கூடுதல் சோகம் வர வேண்டும்? இத்தனைக்கும் அந்த அரங்கம் ஏதோ முதல் நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த தியேட்டரும் அல்ல. 1994-லியே தங்கம் தியேட்டர் தன இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. ஆக 21 வருடங்களாக மூடிக் கிடக்கும் தியேட்டர் எப்போது வேண்டுமானாலும் இடிக்கபப்ட்டு வணிக வளாகமாக மாற கூடும் என்பதும் தெரியும். அபப்டி இருந்தும் ஏன் இந்த சோகம்?
    அதற்கு காரணம் தங்கம் தியேட்டருக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி பந்தம் என்றே சொல்ல வேண்டும். 1952 அக்டோபர் மாதம் 17-ந் தேதி தமிழ் சினிமாவில் துள்ளி எழுந்தான் ஒரு சிங்கத் தமிழன். அவனோடு சேர்ந்து துள்ளி எழுந்தது மதுரை தங்கம் தியேட்டர். பலருக்கு தெரிந்திருக்கலாம். என்றாலும் தெரியாத ஒரு சிலருக்காக சொல்கிறேன். மதுரை தங்கம் தியேட்டர் ஆரம்பமானதும் அதே 1952 அக்டோபர் 17 அன்றுதான். பராசக்திதான் முதல் படமாக வெளியானது.
    தனிப்பட்ட முறையில் தங்கம் திரையரங்கைப் பற்றி எனக்கு ஏராளமான நினைவுகள்.
    முதல் நினைவு மெல்லிய தீற்றலாய் - அன்னை இல்லம். படம். அன்றைக்கு மிக சிறிய வயதில் பால்கனியில் அமர்ந்து பார்த்ததில் ஏதும் நினைவில்லை. நடையா இது நடையா பாடல் காட்சியின் ஒரு சில ஷாட்ஸ் மட்டும் ஏனோ நினைவிருக்கிறது..
    மிகப் பெரிய போர்டிகோ அமைந்திருக்கூடிய தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று வாசல் முதல் உள்ளே அரங்கத்தின் பால்கனிக்கு இட்டு செல்லும் சின்ன படிக்கட்டுகள் வரை பெற்றோரின் கை பிடித்து சென்று கர்ணன் படம் பார்க்க போனதும் போர் காட்சிகளும் நடிகர் திலகம் கதையை தலைக்கு மேலே தூக்கி பீமனை தாக்க முயற்சிக்கும் காட்சியும் இன்றும் நினைவில்.
    பணமா பாசமா ஒரு மதியக் காட்சி பார்க்க போனபோது அன்றுதான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிறார்கள் என்பது தெரிய வந்தது. ஒரு படத்தின் வெற்றி விழாவில் அதில் நடித்த நட்சத்திரங்கள் மேடையில் தோன்றுவதை முதன் முதலாக நேரில் பார்த்த அனுபவம் தங்கம் தியேட்டர் எனக்கு கொடுத்த ஒரு pleasant surprise.
    பணமா பாசமாவை பார்த்து விட்டு அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வீட்டில் அனைவரும் அதே யூனிட்டின் அடுத்த படமான உயிரா மானமா படத்தை முதல் நாள் அடித்து பிடித்து பார்க்க போய் ஏமாற்றம் அடைந்ததும் அதே தங்கத்தில்தான்
    நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆசையை முதலில் நிறைவேற்றிக் கொடுத்ததும் எங்க மாமா படத்தின் மூலமாக அதே தங்கம் தியேட்டர்தான்.
    எங்க மாமா முதல் நாள் இரவுக் காட்சி என்றால் அதை விட விரைவாக நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் மாலைக் காட்சியிலே பார்க்கும் ஆசை "எதிரொலி"க்க வைத்ததும் அதே தங்கம் தியேட்டர்தான்.
    முதன் முறையாக படம் பார்க்க வீட்டோடு செல்லாமல் நண்பனோடு Andaz படம் பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான். ஜிந்தகி ஏக ஸஃபர் பாட்டு முடிந்ததும் [ராஜேஷ் கண்ணா portion முடிந்தவுடன்] ஏராளமான பேர் [குறிப்பாக இளம் பெண்கள்] எழுந்து போவதைப் பார்த்ததும் அதுதான் முதல் முறை. .
    தேரே மேரே ஸப்னே என்ற தேவ் ஆனந்த் படம் பார்க்கும்போது அதில் இறுதியில் வரும் ஒரு பிரசவக் காட்சியைப் [அந்த கால் கட்டத்திற்கு துணிச்சலாக காட்டியிருப்பார்கள்] பார்த்து விட்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த சக வயது சிறுவன் ஒருவன் மயக்கம் போடுவதை பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான்.
    மறக்க முடியாத 1972-ல் லாரி டிரைவர் ராஜாவை "நீதி"யில் பயங்கர அலப்பரையோடு பார்த்ததும் தங்கத்தில்தான்
    நீதிக்கு பிறகு ஒரு ஒன்றரை வருட காலம் முழுக்க முழுக்க இந்திப படங்களை மட்டுமே தங்கம் திரையிட ஏராளமான இந்தி நடிகர்களையும் இந்திப் படங்களையும் பரிச்சயப்படுத்தியதும் தங்கம் தியேட்டர்தான். சீதா அவுர் கீதா, விக்டோரியா நம்பர் 203, யாதோன் கி பாராத், மனோரஞ்சன், பே-இமான் என்று எத்தனை எத்தனை படங்கள்!
    நடிகர் திலகத்தை மதுரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது தங்கம் தியேட்டர் எனும்போது அந்த முதல் அனுபவம் அதாவது பராசக்தியை தங்கத்தில் தரிசிக்கும் அனுபவம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற என்னைப் போன்றோரின் ஏக்கத்தையும் போக்கியது தங்கம் தியேட்டர்.
    ஆம். 1977-ம் ஆண்டு தீபாவளியின்போது தங்கம் தியேட்டர் தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. அந்த நேரத்தில் தங்கத்தில் வெளியான முக்கியமான படங்களிலிருந்து காட்சிகள் திரையிடப்பட்டன. அப்படி அந்த 1977 தீபாவளிக்கு வெளியான "சக்கரவர்த்தி" திரைப்படம் பார்க்க போனபோது பராசக்தியின் முக்கியமான காட்சிகளை அதே தங்கத்தில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. 1952-ல் அலப்பரை எப்படி இருந்தது என்பது தெரியாது. ஆனால் 1977-ல் பராசக்திக்கு நடந்த அலப்பரை மறக்க முடியாது. .
    நடிகர் திலகத்தின் படங்களான இளைய தலைமுறை, என்னை போல் ஒருவன் போன்றவற்றை மீண்டும் முதல் நாள் காண வாய்ப்பு கிடைத்ததும் தங்கம் தியேட்டர் மூலமாகத்தான்
    எம்ஜிஆர் படங்களான பறக்கும் பாவை, தேடி வந்த மாப்பிள்ளை, நான் ஏன் பிறந்தேன், ஜெய்சங்கரின் வீட்டுக்கு வீடு, அத்தையா மாமியா, துணிவே துணை, அன்று சிந்திய ரத்தம், ஒரே வானம் ஒரே பூமி, பக்திப் படங்களான ஆதி பராசக்தி, சுப்ரபாதம், முத்துராமனின் ஒரு குடும்பத்தின் கதை, உறவு சொல்ல ஒருவன், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், காற்றினிலே வரும் கீதம், ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை, பாக்யராஜின் தூறல் நின்னுப் போச்சு, பிரபுவின் அதிசய பிறவிகள், முத்து எங்கள் சொத்து என்று பார்த்த படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
    அதுவும் 1982 தீபாவளியன்று [நவம்பர் 14, 1982] காலையில் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை சினிப்ரியாவில் ஓபனிங் ஷோ பார்த்துவிட்டு மாலை ஸ்ரீதேவியில் ஊரும் உறவும் பார்க்க திட்டமிட்டு ஏதோ காரணத்தினால் அது நடக்காமல் போக மாலைக் காட்சி தங்கம் தியேட்டருக்கு சென்று அதிசய பிறவிகள் பார்த்தது, படம் முடிந்து வெளியே வந்தால் பேய்த்தனமான மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து பெய்த மழை, வேறு வழியில்லாமல் இரவு 10-30 மணிக்கு தொப்பலாக நனைந்து ரோடுகளில் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்ற தண்ணீரில் கிட்டத்தட்ட நீந்தி சென்று ரயில்வே ஸ்டேஷன் வாசலில் அண்ணா நகர் போக பஸ்ஸிற்காக காத்து நின்று தீபாவளிக்கு வாங்கிய புது சட்டையும் பாண்ட்டும் வகை தொகையில்லாமல் அழுக்காகி மற்றொரு முறை அணிவதற்கு கூட லாயக்கில்லாத அளவிற்கு போன அனுபவத்தை கொடுத்ததும் தங்கம் தியேட்டர்தான்.
    எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். ஆகையால் நமது சிங்கத்தின் சாதனைகளை மட்டும் சொல்லி முடிக்கிறேன்
    1952-லியே ஒரு லட்சத்து அறுபத்தி எட்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக மொத்த வசூல் செய்து சாதனை படைத்தது நடிகர் திலகத்தின் பராசக்தி அதிலும் 112 நாட்களில் 1,12,000/- ருபாய் வரி நீக்கிய நிகர வசூல். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் ருபாய் நிகர வசூல். V C கணேசன் முதல் படத்திலிருந்தே வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்பதற்கு தங்கமே சான்று. . .
    தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படங்கள் 7. அவற்றில் அதிகபட்சமாக நடிகர் திலகத்தின் 3 படங்கள் 100 நாட்களை கடந்தது. அவை
    பராசக்தி [112 நாட்கள்]
    படிக்காத மேதை [116 நாட்கள்]
    கர்ணன். [108 நாட்கள்]
    நான்காவது படமாக 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய வணங்காமுடி 78 நாட்களில் மாற்றபப்ட்டது வழக்கம் போல் வில்லனாக வந்தது நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம். மட்டுமல்ல பெண்ணின் பெருமை 77 நாட்களும், எதிர்பாராதது 71 நாட்களும் ஓடியதும் தங்கத்தில்தான். கட்டபொம்மன், பாகப்பிரிவினை என்ற இரு இமயங்களுக்கிடையே சிக்கியும் கூட மரகதம் 67 நாட்கள் ஓடியது அதுவும் தங்கத்தில் ஓடியது என்று சொன்னால் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர் விளங்கும். அதே போல் நல்ல வசூலோடு ஓடிக்கொண்டிருந்த அன்னை இல்லம் 60 நாட்களை நிறைவு செய்தபோது 14.01.1964 அன்று வெளியான கர்ணன் படத்துக்காக மாற்றப்பட்டது. அன்னை இல்லம் 60 நாட்கள் தொடர்ந்து வெளிவந்த கர்ணன் 108 நாட்கள், ஆக தொடர்ந்து 168 நாட்கள் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் ஒரே நடிகரின் படங்கள் நமது நடிகர் திலகத்தின் படங்கள் ஓடியது எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத சாதனை.
    தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே தொடர்ந்து 15 காட்சிகள் அரங்கம் நிறைந்த ஒரே படம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம். 1963 நவம்பர் 15 வெள்ளிக்கிழமை தீபாவளியன்று வெளியான அன்னை இல்லம் 15,16, 17 [வெள்ளி, சனி, ஞாயிறு] மூன்று தினங்களிலும் 5 காட்சிகள் வீதம் நடை பெற்று அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது.
    மதுரை மாநகரிலே முதன் முறையாக முதல் வாரத்தில் அரை லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம் அன்னை இல்லம்.
    மதுரை தங்கத்தில் அன்னை இல்லம் முதல் வார வசூல் Rs 51,096/-
    அந்த முதல் வார சாதனை வசூலை முறியடித்தது எங்க மாமா
    மதுரை தங்கத்தில் எங்க மாமா முதல் வார வசூல் Rs 57,902. 25 p [1970]
    எங்க மாமாவிற்கு பிறகு வசூல் சாதனை புரிந்த படம் நீதி.
    மதுரை தங்கத்தில் 4 வாரத்தில் (28 நாட்களில்) நீதி பெற்ற வசூல் சாதனை Rs 1,70,514.03 [1972]
    நீதியை முறியடித்தது இளையதலைமுறை. முதல் இரண்டு வாரத்தில் வசூல் சாதனை புரிந்தது இளைய தலைமுறை.
    மதுரை தங்கத்தில் 14 நாட்களில் இளைய தலைமுறை பெற்ற வசூல் Rs 1,39,221.40 p [1977]
    இளைய தலைமுறையின் முதல் வார சாதனை வசூலை முறியடித்தது என்னை போல் ஒருவன்
    மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் முதல் வார வசூல் Rs 80 ,140 .69 p [1978]
    தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை [படம் வெளியான 9-வது நாள்] கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக எக்ஸ்ட்ரா காட்சி அதாவது 5 காட்சிகள் திரையிடப்பட்ட வரலாற்றை உருவாக்கியதும் நடிகர் திலகத்தின் என்னை போல் ஒருவன்தான்.
    மதுரை மாநகரிலேயே பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்னை போல் ஒருவன்
    மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் 10 நாள் வசூல் Rs 1,00,000/- சொச்சம்.
    இப்படி நடிகர் திலகத்திற்கும் தங்கம் தியேட்டருக்கும் இருக்கக்கூடிய பிணைப்பை அசைக்க முடியாத சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
    மேற்சொன்ன அனைத்து சாதனைகளுக்கும் விளம்பரம் இணைத்திருக்கிறேன். விநியோகஸ்தர் கொடுத்த விளம்பரங்கள். எனக்கு இந்த விளம்பரங்கள் தந்துதவிய நண்பர்கள் செந்தில்வேல் மற்றும் NT Fans வாட்ஸப் குழுவிற்கு நன்றி.
    சங்கத் தமிழ் மதுரையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமாக உருக் கொண்ட தங்கமே! சிங்கத் தமிழன் ரசிகர்களாகிய நாங்கள் உன்னை என்றும் மறவோம்!
    அன்புடன்
    ஒரு விதத்தில் தீபாவளி நாயகனுக்கும் தீபாவளி தியேட்டருக்கும் இருக்கும் உறவை தீபாவளி நேரத்தில் எழுதுவதுகூட பொருத்தம்தான். மதுரையின் மைந்தர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1343
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    திரைச்சூரியன் வள்ளல் சிவாஜி கணேசனின்
    153 வது வெற்றிச்சித்திரம்


    பாபு வெளியான நாள் இன்று

    பாபு 18 ஒக்டோபர் 1971







    கலர்படங்களுக்கு மத்தியில்
    வெளிவந்து சாதனை ஏற்படத்திய
    கறுப்பு வெள்ளை சித்திரம் பாபு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1344
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like




    அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1345
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Vasu Devan‎

    தலைவர் இல்லாத 'தீபாவளி' நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தீபாவளியைக் கொண்டாடியது போன்று எவரும் அவ்வளவு சந்தோஷமாக தீபாவளி கொண்டாடியிருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் தெய்வத்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது இரவெல்லாம் கண்விழித்து, தியேட்டரில் கொடி கட்டி, ஸ்டார்கள் வைத்து, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகள் போட்டு, இரவில் திரையரங்கிற்கு பக்கத்தில் உள்ள கடையில் நான்கைந்து டீ சாப்பிட்டுவிட்டு, கடமைக்கு வீடு சென்று தீபாவளி குளியல் குளித்துவிட்டு, படையலுக்குக் கூட காத்திராமல் தியேட்டரில் த...லைவர் ரசிகர்கள் பண்ணும் அலம்பலுக்குக்காக ஓடோடி வந்து கோஷம் போட்டு, பட்டாசுகள் வெடித்து, தலைவர் கட்-அவுட் பாதங்களை தொட்டு கும்பிட்டு, எட்டு மணிக்கெல்லாம் படத்தை கடலைகள் ஆர்ர்பாரிக்கும் சப்த ஆரவாரத்துடன் கண்டு களித்தது நினைவில் பசுமையாக தங்கி ஞாபகம் வருகிறது.
    தலைவர் போனார். தீபாவளி போச்சு. இப்போது பிள்ளைகள், மனைவிக்காக தீபாவளி. சும்மா பெயருக்கு. கடமைக்கு.
    ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனும் இந்த நன்னாளில் இப்போது நினைப்பது என்ன தெரியுமா?
    தலைவரின் தீபாவளிப் படங்களையும், அன்றைய தியேட்டர் திருவிழாக் கோலங்களையும், ரசிகர்களின் ஆரவாரங்களையும்தான்.
    தீபாவளி அன்று கூட பட்டினி கிடந்தது தலைவர் படம் பார்த்து வயிறும், மனசும் நிறைந்து வந்தவன் நடிக திலகத்தின் ரசிகன் மட்டுமே.
    வேறு எவருக்கும் இந்த பாக்கியம் எப்போதும் கிடைத்தது இல்லை.
    என் தெய்வம் இல்லாத, என் தெய்வத்தின் படங்கள் இல்லாத தீபாவளிகள் என் வரையில் புஸ்வாணங்களே.
    இந்த நன்னாளில் தலைவரின் நினைவுகள் வாட்டி வதைக்கின்றன.
    '''மூன்று தெய்வங்களின் தாயெனும் செல்வங்களை விடிகாலையில் எழுந்து கண்களில் கண்ணீர் பொங்க பார்த்து தலைவரின் ஆசீர்வாதம் வாங்கியாகி விட்டது.
    பிள்ளைகள், மனைவி, சுற்றம், தாய், தந்தை, சகோதரன் என்று ஆயிரம் விழுதுகள் அருகில் இருந்தாலும் என் 'ஆலமரம்' எங்கே?
    அந்த ஆரவார தீபாவளிகள் எங்கே?
    நாள் முழுதும் நேரம் பத்தாமல் தியேட்டரிலேயே தவம் கிடந்த அந்த தீபாவளி எங்கே?
    ஒவ்வொரு ஷோவிற்கும் கொட்டும் மழையிலும் கியூவில் நின்று தலைவனை தரிசித்த மக்கள் கூட்டம் நிறைந்த தீபாவளி எங்கே?
    சந்தோஷமான தீபாவளி பண்டிகை. ஆனால் ஒவ்வொரு தலைவரின் ரசிகனும் தீபாவளி அன்று அசை போட்டுக் கொண்டிருக்கும் சிந்தனையே வேறு. அது தெய்வத்தின் ரசிகர்களைத் தவிர யாராலும் உணர முடியாதது. உணர்ந்து கொள்ள முடியாதது.
    அனைவருக்கும் 'தெய்வம்' சிவாஜி தீபாவளி வாழ்த்துக்கள்.






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1346
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1347
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1348
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1349
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Sundar Rajan









    Sundar Rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது,
    இன்று பத்திரிக்கை உலகிலும், மீடியா உலகிலும் இளைஞர்கள் அதிகளவில் இருப்பதால் ...இந்த செய்தி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் சிவாஜி அவர்களைப் பற்றிய செய்திதானே என்று அமைதியாக இருந்து விடுகின்றனர்.
    அவர்களுக்காக
    அகில இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவராக இருந்தவர் ஜயா சண்முகம் அவர்கள், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அவரை தன்னுடயை தளபதியாக வைத்துக் கொண்டவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள். எனக்கு தெரிந்தவரையில் எந்த ஒரு நடிகரும் தான் சார்ந்த இனத்தவரையோ அல்லது தனது உறவினர்களையோ தான் அகிலஇந்திய மன்றத்தின் தலைவராக வைத்திருப்பார்கள்.
    நமது அன்பு இதயங்களுக்கும் சரி, மற்ற மன்றத்தை சார்ந்தவர்களுக்கும் தளபதி சண்முகம் என்றால் தான் தெரியும். அவருடைய இறுதி காலம் வரை அவரை மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றவில்லை. மேலும் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து ஒரு காலகட்டத்தில் அவருக்கென்று ஒரு அறையையே ஒதுக்கி அவரை பாதுகாத்து வந்தவர் சிவாஜி அவர்கள்.
    ஓட்டுக்காக இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சிறு உதவியை செய்துவிட்டு நான் தான் அவர்களின் காவலன் என்று கூக்குரலிடும் அரசியல்வாதிகளே, நடிகர்களே யாராவது, மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் போல் ஒரு தாழ்த்தப்பட்டவரை தலைவராக நியமிக்கத் தயாரா
    அதேபோல், மன்றத்தின் பொதுச்செயலாளராக இருந்த மாவீரன் ராஜசேகரன் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்,
    தாழ்த்தப்பட்டவரை தலைவராகவும், முக்குலத்தோரை பொதுசெயலாளராகவும் நியமித்து அன்றே சாதி, மதம் பாகுபாடு அல்லாமல் அனைவரும் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று உணர்த்தியவர் சிங்கத்தமிழன் சிவாஜி அவர்கள்.
    இப்போது புரிகிறதா, தமிழகத்தின் உண்மையான சமூகநீதி காவலன் சிவாஜி அவர்கள் தான் என்று.
    சிவாஜி என்று சொல்லடா.....
    தலையை மட்டுமல்ல
    நெஞ்சையும் நிமிர்த்தி செல்லடா...
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1350
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Jahir Hussain

    Ayakudi, India




    "தீபாவளியும் சிவாஜி சினிமாக்களும்"... சிவாஜி ரசிகர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டங்களே புத்தாடை, பட்டாசு, மத்தாப்புகள், பலகாரம், எண்ணெய் குளியல் இவற்றைத்தாண்டி ஒன்று இருக்கிறது என்றால் அன்று ரிலீஸ் அகும் சிவாஜி சினிமாக்கள்தான்... 1952 - 92... வரை பராசக்தி முதல் தேவர் மகன் வரை.. இந்த 40 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 50 சிவாஜி சினிமாக்கள் வந்திருக்கக் கூடும்.. வெற்றியின் சதவீதம் அதிகம்..நம் தலைவருக்கு ஐஸ்வர்யமான பண்டிகை தீபாவளியும் கூட...
    நம் நண்பர்கள் ஒவ்வொருவரருக்கும் அவரவர் வயதுக்குத் தக்கவாறு தீபாவளி ரிலீஸ் சிவாஜி சினிமாக்கள் அனுபவம் இருந்து இருக்க கூடும்.. அந்த நாளில் டிக்கெட் கிடைக்காமல் மூட் அவுட் ஆன அனுபவங்கள் சில நண்பர்களுக்கு இருக்கலாம்.. இன்னும் பலதரப்பட்ட காரணங்களுக்காக தீபாவளி தினத்தில் அன்றைய தலைவர் படத்தை பார்க்க முடியாது போயிருக்கலாம்.. எதிர்பாராத விதமாக ஓரு சில ஆண்டுகளில் சிவாஜி சினிமா ரிலீஸ் ஆகாமல் நம்மை "கருப்பு தீபாவளி" கொண்டாட வைத்திருக்கலாம்.. இப்படி நூற்றுக் கணக்கான அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்வது கூட தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நான் நினைக்கிறேன்.. 1976 தீபாவளி... நான் பார்த்த முதல் தீபாவளி சிவாஜி சினிமா... "சித்ரா பௌர்ணமி"... தீபாவளி அன்றே மாலைக்காட்சி பார்த்து விட்டேன்... எங்கள் ஊரில் சந்தானகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸ்.. கட்டுக்கடங்காத கூட்டம்.. திண்டுக்கல் மெய்ன் ரோட்டில் தியேட்டர் அமைந்துள்ளது... தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகைகள் சமயத்தில்தான் அதுபோன்ற பெருங்கூட்டம் வரும்.. அதுபோல ஒரு பெருங்கூட்டம்தான் அன்று...
    அன்று 5 காட்சிகள்.. முதல் காட்சி 9 மணி.. அப்போதே பார்த்து விட துடித்தேன்.. நண்பர்கள் யாருமின்றி ஒற்றை ஆளாய் சென்று விட்டேன்.. எனக்கு 10 வயது கூட ஆகவில்லை.. டிக்கெட்டுக்காக அலைமோதுகிறேன்.. முடியவில்லை.. ஒரு நல்லவர் வந்தார் "தம்பீ" போய் பெரியவர்களை அழைத்து வா.. இந்த கூட்டத்தில் சிக்கினால் நீ "பஞ்சாமிர்தம்" ஆகி விடுவாய் போ போ என்று அறிவுறுத்தினார்... (குறிப்பு:- அந்த நல்லவர் குறிப்பிட்ட வார்த்தைதையை ஹைடு பண்ணிட்டு பஞ்சாமிர்தம் என்ற வார்த்தையை சபை நாகரீகம் கருதி பயன் படுத்தி உள்ளன்)
    திரும்பவும் ஆயக்குடி போனால் வீட்டில் விட மாட்டார்கள்... ஆயக்குடிக்கும் பழனிக்கும் 3 கி மீ தூரம்.. என்ன செய்வது... நோன்புக்காசாக கிடைத்த ரூபாய் 20 கைவசம் உள்ளது.. (எங்கள் அப்பாவின் அருமை நண்பர் மருதநாயகம் அவர்கள் வீட்டில்தால் விபரம் தெரிந்த நாள் முதல் தீபாவளி கொண்டாட்டம் அதுபற்றிய பதிவு ஒன்றும் பதிவிடப் போகிறேன்) வேறு படங்கள் பார்க்க மனமில்லை.. ஊரைச்சுற்றி ஓய்ந்து போனேன்.. 1 மணிக்காட்சி 4 மணிக் காட்சி இரண்டிற்கும் டிக்கட் வாங்க முடியாமல் 7 மணிக்காட்சிக்கு கிடைத்தது டிக்கெட்.. குதூகலம் ஆனந்தம் பெருமிதம் மூன்றும் கலந்தவனாக படம் பார்த்து ரசித்து முடித்தேன்.. இரவு 10 மணிக்கு காட்சி முடிந்தது... வீட்டில் வலைவீசி தேடுகிறார்கள்.. பஸ்ஸிலும் கூட்டம்.. எப்படியோ வீடு வந்து சேர மணி 11... நல்ல வேளை கடும் கோபத்தில் இருக்கும் அப்பாவை சமாதானப்படுத்தி தூங்க வைத்து இருந்தார்கள்.. பூனை போல வீட்டுக்குள் புகுந்தேன்.. அம்மாவும் பாட்டியும் சாப்பாடு போட்டார்கள்.. சாப்பாடு முடிந்த பிறகு கேள்விகள் அறிவுரைகள் எல்லாம்.. அதில் முக்கியமான அறிவுரை .. டேய் உன்னை "பிள்ளை படிக்கிறவன்" கொண்டு போயிட்டால் என்னடா செய்யறது? ஆகையால் கவனமாக இருக்க வேண்டும்.. யாரும் மிட்டாய் கொடுத்தால் வாங்கித் தின்னாதே.. பிடிச்சு கொண்டு போய் கையை காலை ஊனமாக்கி கண்காணாத ஊர்ல பிச்சை எடுக்க விட்றுவானுங்க என்ற பயமுறுத்தல் வேறு.. எப்படியோ அடி வாங்காமல் தப்பித்தேன்... இது என் 1976 தீபாவளி சிவாஜி சினிமா அனுபவம்.. அடுத்தது "அண்ணன் ஒரு கோயில்" பட அனுபவம்.. அப்படியே தொடரும்....


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •