Page 43 of 400 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #421
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vasu Devan

    ஸ்டைல் என்றல் நம் 'சக்கரவர்த்தி' ஒருவரே
    ஸ்டைலில் எவருமே நடிகர் திலகத்திற்கு ஈடு, இணை கிடையாது. இயல்பான ஸ்டைலுக்கும், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று தன்னைத்தானே அலட்டிக் கொள்ளும் ஸ்டைலுக்கும் தயவு செய்து யாரும் முடிச்சு போடாதீர்கள்.
    ஸ்டைல் என்பது நடிகர் திலகத்திற்கு தானாக வருவது. அவராக வரவழைத்துக் கொள்வது கிடையாது. ஸ்டைல் அவருடன் வாழ்ந்தது. அவருக்குள் இருந்து தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. அவரது ஸ்டைலை செய்து பார்க்க அவர் மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு. மற்ற எவர் ...ஸ்டைலும் வெறும் வெற்று புஸ்வாணமே! ஸ்டைல் என்பது அலட்டலால் வருவது அல்ல. இயற்கையாக அது வரவேண்டும். அது அமைந்த ஒரே ஸ்டைல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் மட்டுமே. 'அதில் நான் சக்கரவர்த்தியடா' என்று தூள் கிளப்பி சொல்ல, பெருமைப்பட்டுக் கொள்ள அவருக்கு மட்டுமே உரிமை உண்டு.
    ஒன்றுமே வேண்டாம். எந்த ஸ்டைலும் வேண்டாம் அவருக்கு கோட் அணிவித்து சும்மா ஒரு பக்கம் அவரை நிற்க வைப்போம். மற்றவர்களுக்கு கோட் சூட் போட்டு விட்டு எதிரில் வரிசையாக நிற்க வைப்போம்.
    கூன் போட்டு, முதுகு வளைந்து, முருங்கைக்காய் கால்களுக்கும், புடலங்காய் உடம்புகளுக்கும் கோட் சூட் மாட்டியது போல எதிரில் நிற்பவர்களுக்கு மாட்டியிருப்பதை பார்த்து வருடம் முழுக்க நாம் எதிர் வரிசையில் நிற்பவர்களை பார்த்து தமாஷாக சிரித்துக் கொண்டிருக்கலாம் இதில் அவர் ஸ்டைலை மற்றவர் எங்கே நெருங்கிப் பார்ப்பது?
    அவர் அவர்தான். அவரைத் தவிர எவருக்கும் இயற்கையான ஸ்டைல் சுட்டுக் போட்டாலும் வராது. புகையைக் கூட ஸ்டைலாக வளைக்க அவரால் மட்டுமே முடியும்.
    ஜான் கென்னடி அழைப்பின் பேரில் நடிகர் திலகம் அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக அங்கே சென்றிருந்த போது உலகப் பெருநடிகர் மார்லன் பிராண்டோ நடிகர் திலகத்திடம் ஒரு செய்தி சொன்னாராம்.
    'மிஸ்டர் சிவாஜி கணேசன்! உங்களை மிகச் சிறந்த நடிகர் என்கிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உங்களை போல் என்னால் நிச்சயம் நடித்து விட முடியும். அது ஒன்றும் எனக்கு கஷ்டமில்லை...ஆனால் 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' படத்திலே மனைவி ஜக்கம்மாவிடம் கட்டபொம்மனாக நீங்கள் போருக்குப் புறப்படுமுன் வீர உரையாற்றி வாளை அதன் உறைக்குள் 'சர்ர்ரெக்' கென்று அதை பார்க்காமேலேயே செருகுவீர்களே! அதை செய்ய என்னால் முடியாது" என்று ஆச்சர்யத்துடன் சொன்னாராம்.
    அந்த ஒரு வாள் செருகும் ஸ்டைலுக்கு ஈடாகுமா?
    அவ்வளவு ஏன்? ஒரு லோ-கிளாஸ் ரவுடி கேரக்டர் 'பலே பாண்டியா' மருது வாயில் பீடியை சுழலவிடுவதை எடுத்துக் கொள்வோம். கைலியை சற்றே கால்களுக்கு மேல் உயர்த்தி பின் தொடைகளுக்கு மத்தியில் செருகி பீடியை வாயில் விளையாடவிட்டு ராதாவை முனகியபடியே திட்டிச் செல்வதை எவராவது நினைத்தாவது பார்க்க முடியுமா?


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #422
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sundar Rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    வரும் 02.07.2017 ஞாயிறன்று, காட்பாடி, காங்கேயநல்லுாரில் தமிழன் மற்றும் தமிழின் புகழ் உலகெங்கும் பரவச் செய்த நடிகர்திலகம் சிவாஜி அ...வர்களின் திருவுருவச்சிலை திறக்கப்படுகிறது.
    தமிழகத்தில் மதுரைக்கு அடுத்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திறக்கப்படும் நமது
    மக்கள்தலைவரின் சிலை திறப்பு விழாவிற்கு கடல் அலையென திரளுவோம்.
    இந்த சிலை திறப்பு விழாவிற்கு கூடும் கூட்டத்தை பார்த்து, திருச்சி சிலையை அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #423
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas



    ஜூன் 25, 1960 படிக்காத மேதை வெளியான நாள். இரண்டு வருடங்களுக்கு முன் அதாவது 2015 ஜூனில் நமது NT FAnS சென்னையில் மாதந்தோறும் திரையிட்டு வரும் நிகழ்வில் அந்த மாதம் படிக்காத மேதையை திரையிட்டோம். திரு பீம்சிங்கின் புதல்வரும் இயக்குனர் படத்தொகுப்பாளர் B. லெனின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அந்த விழாவைப் பற்றி ரங்கன் 55 என்ற தலைப்பில் நான் எழுதியிருந்தேன். அதை இங்கே மீள் பதிவு செய்கிறேன். இது பார்ட் 1. படத்தின் சில காட்சிகளை பற்றிய பதிவு பார்ட் 2 ஆகவும் மீள் பதிவு செய்கிறேன்.
    படிக்காத மேதை - 55 பார்ட் 1
    ரங்கனின் பிறந்த நாளை, அவனுக்கு 55 வயது நிறைவு பெறுவதை முன்னிட்டு ஞாயிறு மாலை கொண்டாடினோம். எத்தனை வருடம் ஆனாலும் ஒரு காலகட்டத்தில் சிவாஜி என்கிற பெயரே மறந்து போனாலும் ரங்கன் மட்டும் மனங்களை விட்டு மறையவே மாட்டான் என்று குமுதம் 55 வருடங்களுக்கு முன்பு சொன்னது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை என்பது விழாவிலும் படம் திரையிட்டப்பட்டபோதும் தெளிவாகியது.
    சென்ற வருடம் பச்சை விளக்கு திரைப்படத்தின் பொன்விழா நடைபெற்றபோது வருகை தந்திருந்த படத் தொகுப்பாளார் இயக்குனர் B.லெனின் நமது அழைப்பை ஏற்று இந்த விழாவிலும் கலந்துக் கொண்டார். விழாவின் தொடக்கத்தில் படத்தைப் பற்றிய சிறப்பு செய்திகளை நாம் பகிர்ந்துக் கொண்டபிறகு லெனின் பேசினார்.
    படிக்காத மேதை படத்தை பற்றி மட்டும் குறிப்பிடாமல் நடிகர் திலகத்துடனான பரிச்சயத்தை பழகியதை பகிர்ந்துக் கொண்டார் லெனின். சென்ற வருடம் குறிப்பிட்ட அதே செய்தியை மீண்டும் சொல்லி பேச்சை துவக்கினார். அதாவது நடிகர் திலகத்தின் திரைப்படைப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற செய்திதான் அது. அவரின் படங்களில் பல விஷயங்கள் பொதிந்துக் கிடக்கின்றன என்றார். உதாரணமாக நாம் சாதாரணமாக நினைக்கக் கூடிய பலே பாண்டியாவில் வரும் மருது கேரக்டர் உடுத்தியிருக்கும் லுங்கியை சற்றே மேலே தூக்கி கட்டும் அந்த ஸ்டைல் இருக்கிறதே அதை ஒரு எடிட்டர் என்ற முறையில் ஷாட் பை ஷாட்டாக தொகுத்தால் அதில் படிப்பதற்கு இருக்கிறது பல செய்திகள் என்றார்.
    நடிகர் திலகத்தின் மிகப் பெரிய சிறப்பு அவரது குரல் modulation. ஏதென்ஸ் நகரத்து எழில்மிக்க வாலிபர்களே என்று ஆரம்பிக்கும்போது அவரது modulation-ஐ கவனிக்க வேண்டும். வீரம் விலை போகாது எனும் வரியில் வீரம் என்ற வார்த்தை எப்படி அழுத்தம் கொடுக்கப்பட்டு ஏறுமுகமாக உச்சரிக்கப்படுகிறது என்பதை கவனித்தால் எப்படி வசனம் பேச வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே புரியும். எங்கே கூட்டி எங்கே குறைத்து எங்கே அழுத்தி எங்கே மெதுவாக தொட்டு தமிழ் பேசப்பட வேண்டும் என்பதற்கு இன்றைக்கும் பாடமாக இருக்கக் கூடியவர் அவர். கருணாநிதியின் வசனங்களுக்கு சிறப்பூட்டியது நடிகர் திலகத்தின் குரல் வளம். வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவது பெரிதல்ல. யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சிவாஜி மாதிரி பேச முடியுமா என்று கேட்டால் முடியாது என்றே சொல்ல வேண்டும். சிவாஜி மாதிரி என்று சொல்லும்போதே அங்கே originality போய் செயற்கைதனம் வந்து விடும் என்றார்.
    சரித்திரப் படங்கள் மட்டுமல்லாமல் சமூகப் படங்களிலும் இதை நாம் காணலாம் என்ற லெனின் எங்கே போய்விட்டாய் சாந்தி எங்கு போய்விட்டாய் சாந்தி என்று பாலும்பழமும் படத்தில் பேசுவதை அந்த modulation-ஐ உதாரணமாக எடுத்துச் சொன்னார். படங்களில் சிவாஜிக்கு வைக்கப்பட்டது போல் மிக அதிக அளவு tight close up வைக்கப்பட்ட நடிகனே உலகத்தில் இருக்க முடியாது என்ற லெனின் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே என்ற வரிக்கு 75 mm லென்ஸ் பயன்படுத்தி எடுக்கபப்ட்ட tight close up நினைவிருக்கிறதா என்று கேட்டு அதில் கழுத்தை மட்டும் அசைத்து அந்த கன்னமும் புருவமும் ஏறி இறங்குவதை செய்வதற்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதன் தொடர்ச்சியாக மற்றொரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார் லெனின்.
    பார் மகளே பார் படத்தின் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த சமயம். அவள் பறந்து போனாளே பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. முத்துராமன் பாடும் portions outdoor -லும் நடிகர் திலகம் பாடும் காட்சிகள் indoor -லும் படமாக்கப்பட்டு பின்பு match செய்யப்பட்டது. Indoor ஷூட்டிங்கில் இந்த வீட்டிற்கு விளக்கில்லை என்ற வரிகள் படமாக்கப்படும்போது செட்டிற்கு வந்த மற்றொரு இயக்குனர் செட்டையும் கேமரா ஆங்கிளையும் பார்த்துவிட்டு " ஏன் பீம் பாய், trolley பயன்படுத்தி long shot -ல் எடுத்தால் செட்டும் கவராகும். காட்சியும் அழகுற அமையுமே" என்று கேட்க அதற்கு பீம்சிங் "சிவாஜி பாயை வைத்துக் கொண்டு எதற்கு long shot?" என்று பதில் கேள்வி கேட்டாராம். இதை பெருமையாக சொன்ன லெனின் அவர் ஒரு cameraman -ன் delight என்றார். அவரிடம் காட்சியை மட்டும் விளக்கி விட்டால் போதும் எங்கே நிற்க வேண்டும் எப்படி திரும்ப வேண்டும் என்பதையெல்லாம் அவரே அழகாக செய்து விடுவார். left-ல் 25 டிகிரி என்றால் மிக சரியாக 25 டிகிரி திரும்புவார். Right -ல் 40 டிகிரி என்றால் 40 டிகிரி மிக சரியாக் இருக்கும். வேறு எந்த அடிகராக இருந்தாலும் அந்த perfection -ஐ பார்க்க முடியாது. மற்றவர்களுக்கு நிற்கிற இடத்தை விட்டு நகர கூடாது என்பதற்காக தரையில் சாக்பீசால் வட்டம் வரைவார்கள். வலது பக்கம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே ஒரு assistant கையில் ஒரு பொருளை பிடித்துக் கொண்டு இதையே பாருங்கள் என்று நிற்க வைக்க வேண்டிய கட்டாயம். இது போன்ற பிரச்சனைகள் எதுவும் சிவாஜி படங்களில் வராது என்றார் லெனின்.
    நடிகர் திலகம் போல டப்பிங் பேசுவதிலும் நேர்த்தி காட்டக்கூடியவர் யாருமில்லை என்று சொன்ன லெனின் அது போல் வயதில் எவ்வளவு சிறியவர் ஆனாலும் அவர்கள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்துக் கேட்கும் பெருந்தன்மை கொண்டவர் நடிகர் திலகம் என்றார். மேற்சொன்ன இரண்டையும் பாதுகாப்பு படத்தின் டப்பிங் நேரத்தில் பார்த்ததாக சொன்னார். தன் தந்தையார் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் பாதுகாப்பு படத்தின் டப்பிங் வேலைகளை தான் மேற்பார்வையிட போனதை குறிப்பிட்ட அவர் சிவாஜி அதிகாலையிலே வந்து டப்பிங் தொடங்கி விடுவார். அப்படி அவர் தொடங்கும்போது திரையில் முதல் காட்சி ஓட சிவாஜி டப்பிங் பேச துவங்கினார். முதல் ஷாட் முடிந்தது. அதில் சற்று குறை இருப்பது போல் தோன்றியதால் நான் one more என்று கேட்க என்னடா என்று அவருக்கே உரித்தான பாணியில் கேட்க நான் இன்னும் கொஞ்சம் பாவம் வேண்டும் என்று கேட்க போடா என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்த ரீல்களுக்கு டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார். நானும் சரி என்று விட்டு விட்டேன்.
    எல்லாம் முடிந்த பிறகு என்னை கூப்பிட்டு அந்த முதல் ரீலிலே என்னமோ சொன்னியே அதை மறுபடியும் போட சொல்லு என்றார். இல்லே வேண்டாம். அதே இருக்கட்டும் என்று நான் சொல்ல போட சொல்லுடா என்று சொல்லி அந்த ரீல் மீண்டும் திரையிடப்பட்டவுடன் நீ எப்படி எதிர்பார்க்கிறே என்று கேட்டு நான் சொல்ல அதேற்கேற்றாற்போல் மீண்டும் பேசி கொடுத்துவிட்டு இப்போது திருப்தியா என்றார். என் வயதுக்கு என அனுபவத்திற்கு அவர் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் செய்தார். தன நடிப்பை பற்றிய விமர்சனம் எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அதை விமர்சிப்பவர்கள் கூற்றில் நியாயம் இருந்தால் தன்னை திருத்திக் கொள்ள தயங்க மாட்டார் நடிகர் திலகம் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார்.
    மேலும் முதலில் அவர் ஏன் மறுத்தார் என்பதற்கும் பிற்பாடுதான் காரணத்தை தெரிந்துக் கொண்டேன் என்று சொன்ன லெனின் அது என்னவென்பதையும் சொன்னார். டப்பிங் பேசும்போது காலையில் பேசும் வசனம் முதல் ஷாட்டில் ஓகே ஆக வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் இது தெரியாமல் நான் one more கேட்க அப்போது அதை மறுத்து விட்டு அடுத்த ரீலுக்கு போயிருக்கிறார். அதே நேரத்தில் தாம் பேசியதில் ஏதோ குறை இருக்கிறது. அதனால்தான் அவன் அப்படி சொல்லியிருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டு பிற்பாடு அந்த தவறை சரி செய்திருக்கிறார். சொன்னவன் சிறுவன் ஆயிற்றே அவன் என்ன சொல்வது என்றெல்லாம் நினைக்காமல் என் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து இறங்கி வந்தாரே அதுதான் அவரின் தொழில் பக்தி அர்பணிப்பு! என்று நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் லெனின்.
    இன்றைக்கு இருக்கக் கூடிய இளைய தலைமுறையில் ஒரு சில பேர்கள் அவரின் நடிப்பை பற்றி சில மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்க கூடும். அப்படி இல்லை. அவரின் நடிப்பு என்பது over the top கிடையாது என்பதை ஒரு ரசிகனாக இல்லாமல் ஒரு எடிட்டராக உலகின் எந்த மனிதனோடும் என்னால் வாதிக்க முடியும். I can challenge anybody in this world! என்று சொன்னார் லெனின்.
    இறுதியாக மீண்டும் ஒரு முறை சிவாஜியை அவர்தம் படைப்புகளை ஆவணப்படுத்துங்கள். இந்த விஷயமாக நானும் என்னால் முடிந்த சில விஷயங்களை செய்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்ட லெனின் அப்படி உருவாக்கப்படும் ஆவணங்கள் 365 நாட்களிலும் 24 * 7 அனைவருக்கும் available ஆக இருக்க வேண்டும் என்ற தன ஆசையை வெளிப்படுத்தி பேச்சை நிறைவு செய்தார்.
    திரு லெனின் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக ஒரு நினைவு பரிசு [படிக்காத மேதை 55 என்ற Memento] நமது அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினரான திரு கவிதாலயா கிருஷ்ணன் வழங்கினார்.
    அதன் பிறகு படிக்காத மேதை படம் திரையிடபப்ட்டது. அதைப பற்றிய ஒரு சிறிய குறிப்பு அடுத்த பதிவில்!
    (தொடரும்​)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. Likes Harrietlgy liked this post
  7. #424
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    படிக்காத மேதை - 55 - பார்ட் 2
    இந்தப் படத்தைப் பற்றி இனியும் என்ன சொல்வது? நான் ஒரே முறை படத்தின் சிறப்புகளை எழுதினேன். அப்படி இருக்க இனியும் எழுத விஷயம் இருக்கிறதா என்று கேட்டால் நிறைய இருக்கிறது என்பதே பதிலாக வருகிறது. அதிலும் குறிப்பாக ஞாயிறு மாலை ரசிக நெஞ்சங்களோடு பார்த்த பிறகு.
    எனக்கு எப்போதும் நமது ரசிகர்களைப் பற்றி ஒரு பெருமிதம் உண்டு. நடிகர் திலகம் எத்தனை நுணுக்கங்களை தன் நடிப்பில் கொண்டு வந்தாலும் அதை மிக சரியாக இனங்கண்டு தங்கள் ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்துவார்கள். அதில் உயர்நிலை ரசிகன், கடைநிலை ரசிகன் என்ற பாகுபாடே கிடையாது.
    அதில் மற்றொரு வியப்புக்குரிய விஷயம் சோகத்தை கூட எந்தளவிற்கு இவர்கள் ரசிக்கிறார்கள் என நினைக்கும்போது இன்னும் அந்த பெருமிதம் கூடும். இப்படிபட்ட ரசிப்புத்தன்மையை அந்த கடைகோடி ரசிகனுக்கும் சென்று சேர்த்திருக்கிறார் என நினைக்கும்போது நடிகர் திலகம் மனதுக்கு இன்னும் பிரியப்பட்டவராகிறார்.
    படிக்காத மேதை படமெல்லாம் எப்படி என்றால் திருஷ்டி பூசணிக்காய் முகத்தை மறைக்க எடுத்து வரும் நடிகர் திலகம் அறிமுகமாகும் முதல் காட்சியில் ஆரம்பித்து இறுதியில் ஒரே ஒரு ஊரில் பாடல் ஒலிக்க [படத்தின் நடுவில் இடம் பெறுவதிலிருந்து காட்சியமைப்பு மாறுபட்டு] a film from Bala movies Krishnaswamy என்று படம் முடிவைடையும்வரை ஒவ்வொரு காட்சியும் ரசித்து சுவைத்து அனுபவிக்கப்படும் படம். அன்றும் அப்படிதான் நடந்தது. முழு காட்சிகளையும் எழுத முடியாது என்பதனால் முக்கியமான காட்சிகள் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக இரண்டு மூன்று காட்சிகள்.
    ரங்காராவ் நடிகர் திலகத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் காட்சி. மாமா தன்னிடம் சீரியசாக பேசுகிறார் என்பதே புரியாமல் பதில் சொல்லுவது, அவரிடம் தன நிலைமையை எடுத்துச் சொல்வது, அதனால் மிகுந்த கோவத்துடன் ரங்காராவ் அவரிடம் கேள்விகள் கேட்க அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்வது, [உன் உடம்பிலே நல்ல ரத்தம் ஓடலே? ஓடுது], இறுதியாக வேலைக்கு போய் உன் மனைவியை வச்சு காப்பாத்த முடியாது என்று கேட்க முடியாது என்று அதே தொனியில் பதில் சொல்லிவிட்டு முடியாது மாமா என்று என்று பாவமாக அப்பாவியாக பதில் சொல்லும்போது அரங்கமே ஆர்ப்பரித்தது. தான் படிக்காதவன் வெளியில் போனால் வேலை கிடைக்குமா பணத்திற்கு எங்கே போவது? மனைவியை எப்படி காப்பாற்றுவது? இதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமல் மாமா பேசுகிறாரே என்ற அந்த தவிப்பை கவலையை அந்த ரங்கன் பாத்திரத்தின் மனநிலை வழியாக நடிகர் திலகம் வெளிப்படுத்தும் அழகு அற்புதம் என்றால் அதை புரிந்து அதற்கான அங்கீகாரத்தை தன கைதட்டல் மூலம் வெளிப்படுத்திய அந்த ரசிகர்களுக்கும் ஆஹா!
    அதன் தொடர்ச்சியாக கண்ணாம்பாவிடம் போய் புலம்பும் காட்சியும் ஓஹோ ரகம். "ஓஹோ உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா? வெளியே போனா எனக்கு என்ன வேலை கிடைக்கும்? உன் பையன்களை மாதிரி என்னை BA, MA படிக்க வச்சியா? முட்டா பயலாத்தானே வளர்த்தே! இப்போ தீடீர்னு வெளியே போன்னு சொன்னா எப்படி?" என்று தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுவாரே அதுவும் பிரமாதமாக வரவேற்கப்பட்டது. . .
    சாமான்களையெல்லாம் கட்டிக் கொண்டு புறப்படும்போது தான் பயன்படுத்திய தபலாக்களை எடுத்துக் கொண்டு போக முற்பட அதை தடுத்து அசோகன், நடிகர் திலகம் கையிலிருந்து பிடுங்க முற்பட அப்போது அங்கே வரும் கண்ணாம்பாவிடம் புகார் கூறும் நடிகர் திலகத்திடம் தபலாவை திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு " இந்த தபலாவுக்கு போய் சண்டை போடறியே விலை மதிப்பில்லாத உன் அன்பையும் பாசத்தையும் இந்த வீட்டை விட்டு எடுத்துட்டு போறியே அதுக்கு நாங்க யார்கிட்டடா கேட்கிறது?" என்ற வசனத்திற்கும் செம அப்ளாஸ்.
    வீட்டை விட்டு வெளியே குதிரை வண்டியில் வரும் நடிகர் திலகத்தையும் சௌகாரையும் நிறுத்தும் ரங்காராவை பார்த்தவுடன் வந்டிளிருந்து இறங்கி முதுகு காட்டி நிற்கும் நடிகர் திலகம், சௌகாரிடம் பேசிவிட்டு தன்னுடன் பேச வரும் ரங்காராவை திரும்பி பார்க்காமல் முதுகு காட்டியே நின்று விட்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அப்படியே உடைந்து போய் காலை பிடித்துக் கொண்டு அழுவாரே, அதுவும் அள்ளியது அப்ளாஸ்.
    எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது ரங்காராவ் மறைந்த பிறகு அது தெரியாமல் நடிகர் திலகம் வீட்டிற்கு வரும் காட்சி. ஞாயிறன்று படம் பார்த்த பிறகு மறுநாள் மாலை நண்பர் சாரதியோடு பேசினேன். அவரை முதல் நாள் பார்க்கவில்லை என்பதால் படத்திற்கு வந்திருந்தீர்களா? என்று கேட்டேன். வந்தேன். லேட்டாக வந்தேன். மேலே குறிப்பிட்ட காட்சியை பார்க்க வேண்டும் என்று காத்திருந்து அது முடிந்தவுடன் கிளம்பி போனேன். வேலையிருந்தது. இருந்தாலும் இதை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக வந்தேன்.என்று சொன்னவர் அந்த காட்சியை எடுத்துச் சொல்லி அதை மீண்டும் என் மனக்கண் முன் ஓட விட்டார். அவர் அதை பற்றி பேசும்போது சட்டென்று வேறு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.
    அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர் அதிகாரி ஒருவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். அவர் சொன்னது என்னவென்றால் மனிதனின் மனநிலை தனக்கு பிடிக்காத தான் விரும்பாத ஒன்றை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. அந்த உண்மையை எதிர்கிறது. பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இது மனோததுவத்தின் அடிப்படையில் கண்டறிந்த உண்மை என்றார். ஆங்கிலத்தில் இதை Deny, Resist, Accept mode என்று கூறுவார்கள் என்று சொன்னார். இதை உங்களுக்கோ மற்றவர்களுக்கோ நடந்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். அந்த நேரத்தில் எதுவும் தோன்றவில்லை. படிக்காத மேதை படம் ஞாயிறன்று பார்த்த பிறகு, மறுநாள் நண்பர் சாரதியோடு பேசியபோது அலுவலக அதிகாரி சொன்னதை 55 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் காட்சி வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருந்தது.
    வீட்டிற்கு வருகிறார். ரங்காராவின் படம் மாலையிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நேரம் அவர் முகபாவம் காண்பிக்கப்படுகிறது. இல்லை இது உண்மையில்லை என்ற denial முகபாவம் காண்பிக்கிறார். முகம் மாறுகிறது உண்மைதானா என்று ஒரு சிந்தை தெரிகிறது. அப்படி கிடையாது என்ற resistance நிலை. வலது பக்கம் திரும்புகிறார். அங்கே பொட்டிழந்து அமர்ந்திருக்கும் கண்ணாம்பாவை பார்க்கிறார். இப்போது உண்மை பொட்டில் அறைகிறது. Acceptance mode-ற்கு வருகிறார். அந்த உண்மையை தாங்க முடியாமல் அப்படியே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கதறுவார். அரங்கமே அதிர்ந்து போனது. இங்கே என்ன அற்புதம் என்றால் இந்த மறுப்பு, எதிர்ப்பு, ஒப்புதல் என்ற மூன்று நிலையையும் நிமிட நேரத்தில் முகத்தில் கொண்டு வருவார். அதை பார்வையாளனுக்கும் கடத்துவார்.
    நடிகர் திலகம் பங்கு பெறும் பாடல் காட்சிகளும் அன்று மிகுந்த வரவேற்பை பெற்றது. சீவி முடித்து சிங்காரித்து பாடல் காட்சி. திருமணம் நிச்சயமாகியிருக்கும் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 70-களின் மத்தி வரை கேரக்டர்ஐ மீறி நடிகர் திலகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். படிக்காத மேதையிலும் அப்படியே. படிக்காத முரட்டுதனமான ரங்கன் எப்படி நடந்துக் கொள்வானோ அப்படிதான் எல்லா காட்சிகளிலும் வருவார், ரங்கன் போன்ற குணாதிசயம் கொண்ட ஒருவன் கிண்டல் செய்து பாடினால் எப்படி இருக்குமோ அப்படியே செய்வார்.
    ஒரே ஒரு ஊரிலே பாடல் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாடல் ஆரம்பிக்கும்போது அவர் பாடும் மூடிலேயே இருக்க மாட்டார். குழந்தைகளை விளையாடுவதற்கு கூட்டிக் கொண்டு போவார். சௌகார் பாட ஆரம்பிக்கும்போது குழந்தை டெய்ஸி ராணியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். சௌகார் இரண்டு வரி பாடியதும் உடனே அவருக்கும் பாட தோன்ற இடது கையை மேலே உயர்த்தி சௌகாரை நிறுத்த சொல்லிவிட்டு ஒரேயொரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை.என்று பாட ஆரம்பிப்பார். செயற்கையான பாடல் காட்சியில் கூட எப்படி லாஜிக்கான gestures செய்திருக்கிறார் என்று யோசிக்கும்போதுதான் அவரின் மேதமை புரிகிறது.
    பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் என பாடும்போது முகத்தில் ஒரு பாவம். அதே போல் சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை என்ற வரியில் சோபாவில் உட்கார்ந்திருப்பார் அவர் முகத்தில் ஒரு சாந்தம் தென்படும். அதே சரணத்தில் இறுதி வரி பாடும்போது [நாய்கள் மேலடா] முகம் மாறி கோவம் கொப்புளிக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு ஆணை உடைந்து பாய்வது போல் பாய்ந்தது.
    இறுதியாக எங்கிருந்தோ வந்தான் பாடல். கிருஷ்ண பரமாத்மாவாக நடிகர் திலகம். 5,6 ஷாட்கள்தான். அதற்குள்ளாகவே கண்ணனின் குறும்புத்தனம், குழந்தைகளோடு விளையாட்டு, வேணுகானமிசைத்தல், ஆலோசனை கூறுதல், பகவத்கீதையை உபதேசித்தல், இறுதியில் விஸ்வரூபம் காட்சி அருளால் என்று அதகளம் பண்ணியிருப்பார்
    அந்த பாடலின் பல்லவியில் வரும் வரிகள்தான் நடிகர் திலகத்திற்கு என்னமாய் பொருந்துகிறது!
    இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்! .
    உண்மைதானே! அந்த ஒப்புயர்வற்ற கலைஞனை கலைத்தாயின் தவப்புதல்வனை பெற நாம் தவம்தான் செய்திருக்க வேண்டும்!
    அன்புடன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. Likes Harrietlgy liked this post
  9. #425
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    பட்டம் பதவிகளையெல்லாம் இப்படித்தான் ஒதுக்கித் தள்ளினார்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Likes Harrietlgy liked this post
  11. #426
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நண்பகல் 1:30 க்கு 'வானவில்' டிவி சேனலில் " கலாட்டா கல்யாணம் "


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #427
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #428
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri






    நடிகர் திலகத்தின் அன்பு இதயங்களே ! நண்பர்களே ! நம் திலகம் நடித்த ஏராளமான படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. அவற்றை எல்லாம் எடுக்கவோ எண்ணவோ முயல்வது சிரமம். அதே மாதிரி, அவர் நடித்த ஒரு சில படங்கள், குறிப்பாக பழைய படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாமலும் போயிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.
    நான் சொல்ல வரும் கருத்து, திலகத்தின் படங்களின் வணிக ரீதியிலான வெற்றி தோல்வியைப் பற்றியது அல்ல. தன்னுடைய எந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது , எது ஓடவில்லை, எது சுமாராக ஓடியது, எது வசூலை அள்ளிக் குவித்தது என்பது போன்ற விவரங்கள் எல்லாம் அந்த மாமனிதரே அறிந்திருப்பாரா என்று சொல்ல முடியாது. காசு பணம் பற்றிய சமாச்சாரங்களை அறிந்து வைத்திருந்தால்தான் அவர் இருந்திருக்கும் இடமே வேறாக அல்லவா இருந்திருக்கும்!. நடிப்பைத் தவிர அவர் வேறெதைக் கண்டார், கேட்டார் ? உறங்கும் வேளையைத் தவிர, மற்றெல்லா வேளையும் நடிப்பையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த அந்த உத்தமன் காமிரா முன் நின்று நடிப்பதற்குத்தான் கணக்குப் போட்டிருப்பாரே அல்லாமல் , காசுக்கணக்கு அல்ல. காமிராவுக்கு முன்னால் அப்படி என்ன கணக்கு ? காட்சி எத்தகையது, லாங் சாட் டா, குளோசப்பா, மிடில் சாட்டா, ரன்னிங் சாட்டா, காமிரா ஏங்கிள் வைட் ஏங்கிளா, டாப் ஏங்கிளா, சைட் ஏங்கிளா, ஃபோகஸா, ஜூம் சாட்டா, லைட்டிங் எப்படி, எவ்வளவு, லைட் கவரேஜ் எவ்வளவு தூரம், காட்சிக்குப் பயன்படுத்தும் காமிரா லென்ஸின் பவர் என்ன, அதன் கவரேஜ் எவ்வளவு தூரம், ஃபிரேமுக்குள் தான் எவ்வளவு தூரம் எடுத்துக் கொள்ள முடியும், எவ்வளவு தூரம் இடது அல்லது வலது பக்கங்களில் திரும்ப முடியும்.......இது போன்ற கணக்குகள்தான் அவர் போட்டது.
    அவர் தான் நடித்த அத்தனை படங்களுக்குமே மிகவும் மெனக்கெட்டு, அதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டுதான் வருவார். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அது தன்னுடைய முதல் படம் என்ற எண்ணத்தில்தான் முழுச் சிரத்தையும் கொண்டு நடிப்பார். இதற்கு உதாரணங்களாக நிறையச் செல்லலாம். ஆனால் இப்பதிவின் நோக்கம் அதுவல்ல, வேறு. இருந்தாலும் வடிவேலு சொல்வதைப் போல ஒரு ஃப்ளோவில் இந்தப் பாயிண்ட் வந்து விட்டதால் , இரண்டே இரண்டை மட்டும் சொல்கிறேன்.
    1) இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான், புதிதாக நான் ஒன்றும் சொல்லவில்லை. 'யார் அந்த நிலவு? ' பாடலுக்கு அவர் எடுத்துக் கொண்ட அக்கறை. "விச்சு ( MSV) அருமையாக ட்யூன் போட்டிருக்கான், TMS அற்புதமாக அதற்கு உயிர் கொடுத்துப் பாடியிருக்கிறார். இதில் நான் நடிப்பதற்கு என்னைத் தயார் செய்து கொள்ள எனக்கு இரண்டு நாளாவது வேண்டாமா ?" என்று சொல்லி, வீட்டிலேயே அதைத் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்து அந்த நடிப்பை மனதில் உருவாக்கிப் பின் காமிரா முன் செயல்படுத்தினார். ஒரு பாடலைக் காமிரா முன் எப்படி நடிப்பது என்று இரண்டு நாள் யோசித்தது யார் நண்பர்களே ? நடிப்பு என்றால் என்ன என்று உலகத்துக்கே சொல்லிக் கொடுத்த நடிப்புச் சக்கரவர்த்தி அவர்கள் !!!!!!!!!! அதனால்தானே இந்தப் பாடலைப் பார்த்து விட்டு உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் டைரக்டர் டேவிட் லீன் அவர்கள், திலகத்தின் வீட்டிற்கு வந்திருந்த போது, "இப்படி நடிக்க உலகத்திலேயே உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை... " என்று பாராட்டி விட்டுப் போனார்.
    2) பாசமலர் படத்தின் இறுதிப் பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டும். 'கண்ணின் மணி போல மணியின் நிழல் போல..' சரணம் தான் காட்சியில் படமாக்கப் பட வேண்டும். படத்திலேயே மிக மிக உணர்வு பூர்வமான, வரிகள். முழுப்படத்தின் சாரத்தையும் பிழிந்து நான்கே வரிகளில் சொல்லக் கூடிய சரணம். பார்ப்பவர் மனதையெல்லாம் அப்படியே சோகக்கடலிலும் அழுகைக் கடலிலும் மூழ்க வைக்கும் வரிகள். இதற்கு அவருடைய பங்களிப்பு என்ன, தன்னைத் தயார் செய்து கொண்டது எப்படி ?
    காட்சி படமாக்கபடுவதற்கு முந்தைய இரண்டு இரவுகள் முழுக்க அவர் தூங்கவில்லையாம். எப்படி நடிக்கப் போகிறோம் என்ற கவலையால் அல்ல அவர் தூங்காமல் இருந்தது. தூங்கக்கூடாது என்பதற்காகவே அவர் தூங்கவில்லையாம். இரண்டு முழு இரவுகள் தூங்காத ஒருவனின் முகம் எப்படி இருக்கும் ? மிகவும் சோர்வாக, நிதானமின்றி, கண்கள் தெளிவற்று, முகம் களையிழந்து இருக்கும்.
    படமாக்கப் போகும் காட்சி அமைப்பின்படி, வாழ்வில் சகலத்தையும் தங்கை மேல் கொண்ட அன்பினால் இழந்து விட்டு, இனி இழப்பதற்குத் தன் உயிரைத் தவிர வேறு எதையும் மீதம் வைத்திருக்காமல், களை இழந்து, ஒளி இழந்து பஞ்சைப் பரதேசி மாதிரி இருக்கும் ஒருவனின் முகம் இப்படித்தான் இருக்கும் என்று அவராகவே தன் மனதில் உள் வாங்கி, அதைப் போலவே தன் முகம் மேக்கப்பால் அல்லாமல், இயல்பாகவே அப்படி இருக்க வேண்டும் என்று,அதற்கேற்றவாறு தன்னைத் தயார் செய்யத்தான் அந்த இரண்டு நாள் இரவுத் தூக்கத்தைத் துறந்தது. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.அவர் நடிப்புக்காக இவ்வளவு மெனக்கெடவில்லை. முகத்தில் அந்தத் தோற்றத்தைக் கொண்டு வருவதற்கு மட்டுமே எடுத்ததுதான் இவ்வளவு சிரத்தையும்.
    நண்பர்களே! இனி இப்பதிவின் உண்மையான நோக்கத்துக்கு வருகிறேன். நம் குழுவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளைஞர் இளைஞிகள் முதல், நிறையப் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்களும், வாழ்க்கை அனுபவத்தை நிறையப் படித்துப் பழுத்த பழங்களும் பல ஆயிரக்கணக்கில் உள்ளோம்.குழுவுக்குள் வராமலேயே கோடிக்கணக்கானோர் உண்டு.
    இவர்களில் திலகத்தின் அனைத்துப் படங்களையுமே பார்த்திருக்கும் பாக்கியசாலிகள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று தெரியாது. இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுதான் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அந்தக் கொடுப்பினை இல்லாத துர்பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்தான்.
    திலகத்தின் படங்கள், கலர்ப்படக் காலத்தை விட , கருப்பு வெள்ளையில் வந்த காவியங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. வணிகரீதியில் வெற்றி பெற்ற ஒரு சில படங்களை மட்டும், அல்லது மிகவும் புகழ் பெற்ற படங்களை மட்டும், மற்றவர்கள் சொல்லக் கேட்டோ அல்லது பத்திரிக்கைகளில் படித்தோ அறிந்து அவற்றை நம் இளைஞர்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால், நிறையப் படங்கள் நம்மில் பெரும்பாலோர் பிறப்பதற்கு முன்போ அல்லது நாம் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருக்கும் போது வெளியானவை. எனவே தற்போதைய மேனா மினிக்கிப் படங்கள் வந்து மக்களைப் பொய்யான மாய வலைகளில் மயக்கி வைத்திருக்கும் ஒரு காலகட்டத்தில், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, பாவை விளக்கு, எதிர்பாராதது, பாகப் பிரிவினை, முரடன் முத்து, தூக்குத் தூக்கி போன்ற அற்புதமான காவியங்களை எல்லாம் நம் இளைஞர்கள் அறிந்திருக்கவோ பார்த்திருக்கவோ சந்தர்ப்பங்கள் குறைவு. உண்மையான படம் என்றால் எப்படி இருக்கும், நடிப்பு என்றால் என்ன என்றெல்லாம் நம் இளைஞர்கள் அனைவரும் அறிந்திருப்பது அரிதுதான். ரஹிம், கன்னையன், ரங்கன், காளிமுத்து, தணிகாசலம், ராஜசேகரன் எல்லாம் எப்படி இந்தச் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர்ந்தார்கள் என்பதெல்லாம் இவர்கள் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மட்டும் அல்ல, அதுதான் இனி வருங்காலங்களிலும் வரப்போகும் நடிகர் திலக அன்பு உள்ளங்களுக்கு நாம் செய்யப் போகும் வழிகாட்டல்.
    நம் குழுவில், திலகத்துடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்றோர் நிறையப் பேர் இருக்கிறீர்கள். அவர் சம்பந்தப்பட்ட ஏராளமான செய்திகளைக் கரைத்துக் குடித்தவர்கள் ஏகப்பட்ட பேர் உண்டு. மேலும் அவரது பெரும்பாலான படங்களைப் பார்த்த பாக்கியவான்களும் அனேகம் இருப்பார்கள்.. அவரைப் பற்றிய விசயங்களைத் தேனில் ஊற வைத்த பலாச்சுளை போலச் சுவையாகப் பதிவு செய்யும் ஜாம்பவான்களும் நிறையப் பேர் இருக்கிறீர்கள்.
    குழுவில் இருக்கும் துரோணாச்சாரியர்கள், கிருபாச்சாச்சாரியர்கள், பீஷ்ம பிதாமகர்கள் போன்று வில்வித்தையும், சொல்வித்தையும் தங்கள் அம்புறாத்தூணி முழுக்க நிறைந்த பிரம்மரிஷிகளுக்கு என் வேண்டுகோள் இதுதான். தயவு செய்து, திலகத்தின் பழைய படங்களைப்பற்றி, குறிப்பாக, 1975 களுக்கு முன்பு வெளியான காவியமான படங்களைப் பற்றி நிறையச் செய்திகளையும் பதிவுகளையும் அடிக்கடி நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.அதன் மூலம் அப்படங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து, நம் இளைஞர்கள் மனங்களில் அப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அட இப்படி ஒரு படம் வந்ததா என்று ஆச்சரியத்தில் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்க ஆரம்பித்து விட்டால் அப்புறம் அது சுனாமி மாதிரிப் பெருக்கெடுக்க ஆரம்பித்து விடும். அதன்பின் அந்தச் சிறப்புகளையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு இவர்களே கொண்டு செல்வார்கள். நாங்கள் ஏகலைவர்களாக இருந்து தெரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் தயார். நீங்கள் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்காத துரோணாச்சாரியர்கள் தானே? குருவணக்கம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #429
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sundar Rajan


    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
    தொடர்ந்து டிஜிட்டல் மாற்றுப் படங்களில் சாதனை படைத்து வரும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் வெற்றி மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல...்.
    ஆம்...
    நடிகர்திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது மதுரையில்...
    பழைய படங்கள் இரண்டு நாள் அல்லது இரண்டு காட்சிகள் ஓடுமா என்றிருக்கும் நிலையில்
    நமது தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவோடு 7வது வாரத்தைத் தொடுகிறது.
    50வது நாளை நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறது.
    மதுரையில் மாபெரும் 50வது நாள் வெற்றிவிழா.....
    அன்பு இதயங்களே, கலந்து கொள்ள இப்போதே
    தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
    விபரம் விரைவில்......
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. #430
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று நடிகர் திலகத்தின் 32வது திரைக்காவியம்

    அமர தீபம் வெளியான நாள்

    அமரதீபம் 29 ம் திகதி யூன் மாதம் 1956 ம் ஆண்டு








    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •