Page 155 of 400 FirstFirst ... 55105145153154155156157165205255 ... LastLast
Results 1,541 to 1,550 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1541
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1542
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    273 வது வெற்றிச்சித்திரம்

    தாம்பத்யம் வெளியான நாள் இன்று

    தாம்பத்யம் 20 நவம்பர் 1987







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1543
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1544
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1545
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vasu Devan

    ·

    கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.

    25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

    'பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது.

    இப்படம் ஓர் அற்புதக் காவியம்.

    இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும், 'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், 'மெல்லிசை மாமன்னரி'ன் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர் திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.


    சரி! கதைக்கு வருவோம்.

    அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால் வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.

    முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.
    தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.

    தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.

    ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.

    தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துகிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள்.

    ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

    ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
    தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.


    சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும், கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர, துடிதுடித்து, மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.
    இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்பப் பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.


    தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.
    இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள்.

    கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப்படுத்துகிறார்.

    எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.

    குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.

    மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.


    தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.


    இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.

    வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.
    பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.

    இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.

    இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.
    மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.
    தாதாவாக உலா வரும்போது.....

    வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
    உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!

    வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
    வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!

    கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!

    கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!

    அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோலகல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.

    அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.

    'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.

    இனி இரண்டாம் பாகம்.

    நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.

    படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.

    சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?'.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.

    உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.

    தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.
    "ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது... என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...

    என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).

    நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!

    தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார்.

    அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.

    டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.

    ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்

    "திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
    என்பார்.

    அதற்கு N.T.
    "நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..
    ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..

    ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..


    தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",

    என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.

    அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.
    தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...

    N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...வாதிக்கு நஷ்டம்...பிரதிவாதிக்குக் கஷ்டம்...வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...
    என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படும்.

    தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

    N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
    என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.


    "இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
    புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

    "நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...
    காந்தி நாலணா..

    நேருஜி நாலணா..
    .
    காமராஜி நாலணா..ன்னான்...

    அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...
    என்று கலாய்க்கும் போது,

    கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).

    அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,


    "அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,
    "நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை.

    "இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,
    "ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...
    மற்றொரு சூப்பரான காட்சி...

    நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,
    "ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"
    என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,

    "ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?"

    என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.
    மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.

    பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,
    கபாலி 'உயர்ந்த மனிதன்'
    கபாலி 'கை கொடுத்த தெய்வம்'
    கபாலி 'தெய்வப் பிறவி'
    என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).

    சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,
    'உயர்ந்த மனிதன்' சிவாஜி
    'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி
    'தெய்வப் பிறவி' சிவாஜி
    என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.
    (நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1546
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1547
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1548
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vasudevan .s



    ( from face book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1549
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vasudevan .s




    ( from face book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1550
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    (nadigarthilagam fan)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •