Page 392 of 400 FirstFirst ... 292342382390391392393394 ... LastLast
Results 3,911 to 3,920 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #3911
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    திமுக கட்சியில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருமுறை திருப்பதி சென்று பெருமாளை வழிபட்டு வந்தார்.* *திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் தி.மு.க. வினர்.*
    *அவருடைய எல்லா போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.*
    அவரை திட்டமிட்டு *(திமுகாவை விட்டு வெளியேற்ற வேண்டும்)* என்று தாக்கிய காட்சிகள்
    அது பற்றி சிவாஜி கணேசன் கூறியது உங்களுக்காக...
    *(புஸ்தகம் : எனது சுயசரிதை – சிவாஜி கணேசன் / பக்கம் 130 -136)*
    *"நான் திராவிடக் கழகத்திலோ, திராவிடமுன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை.*
    *பெரியாருடைய கொள்கைகளையும் அண்ணாவுடைய கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன்.*
    *அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக் கொண்டேனே தவிர, கட்சியில் நான் உறுப்பினராக இருந்ததில்லை.*
    *எனது குடும்பம் தேசபக்தி உள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள்.*
    *அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர்.*
    *மேலும் குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிகுந்தவர்கள்.*
    இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை.
    *சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டது.*
    *அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.*
    *’புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூல் செய்து தாருங்கள்’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள் (1956).*
    *அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு சேலத்தில் படப்பிடிப்புக்காக நான் சென்றுவிட்டேன். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.*
    அப்போது அண்ணா அவர்கள் *யார் அதிகமாகப் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அவரது கையால் தங்கசங்கிலி வழங்குவதாக ஒரு பாராட்டு விழா வைத்தார்.*
    நான் சேலத்திலிருந்து எனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு *‘இன்று விழா நடக்கிறது யாராவது அழைப்பு கொடுத்தார்களா?’* என்று கேட்டேன். *‘இல்லையென்று’ கூறினார்கள் என் தாயார்.*
    *உடனே அந்த நேரமே சேலத்தில் இருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன்.*
    *விழாவிற்காக என்னைக் கூப்பிட வருவார்கள் என்று வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கூப்பிட வரவில்லை.*
    *மாலை ஆறு மணி அளவில் பாராட்டுக் கூட்டம் நடக்கிறது.*
    *அப்பொழுதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்தக் கூட்டத்தில் மேடையேற்றி அண்ணா கைகளால் தங்கசங்கிலி வழங்கி கௌரவிக்கிறார்கள்.*
    *மற்ற எல்லாரையும் விட அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான்.*
    *என்னை Sideline செய்து எம்.ஜி.ஆர்ரை உயர்த்தினார்கள்*
    *ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களை அந்தக் கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.*
    *இந்த நிகழ்ச்சியால் பல நாட்கள் நான் வருத்தமாக இருந்தேன். ஒரு நான் என்னுடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார்.*
    *அவர் என்னிடம் வந்து, ’சிவாஜி பாய், ஏன் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள் திருப்பதி போய் வரலாம்’ என்றார்.*
    *நான் ‘சாமி கும்பிடும் மனோநிலையில் இல்லை. எனக்கு எதற்கு திருப்பதி’ என்றேன். நான் கோவிலுக்குள் அதிகம் போனதில்லை.*
    *ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.*
    *அப்போது பயங்கர மழை. சாலை முழுவதும் வெள்ளம் இருந்தாலும் எப்படியோ திருப்பதி சென்றடைந்தோம்.*
    *நான் திருப்பதியிலிருந்து மாலையில் சென்னை வந்தேன்.*
    *‘நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்’ என்று தினத்தந்தியில் தலைப்புச்செய்தி வந்தது.*
    வரும்போழுது ரோடு முழுவதும் பார்த்தால் என்னைப் பற்றி *‘திருப்பதி கணேசா கோவிந்தா’... திருப்பதி கணேசா கோவிந்தா..* என்று சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.. *என்னை மிக கடுமையாக திட்டி, விமர்சனம் செய்து எழுதியிருந்தார்கள்…*
    *நான் அந்த வாசகங்களை யெல்லாம் படித்துக் கொண்டே வந்தேன்.*
    அப்பொழுது பீம்சிங் கூறினார். *‘கவலைப்படாதே கணேசா, அப்படித்தான் எழுதுவார்கள், நீ புகழுடன் இருப்பது திமுகாவில் சிலருக்கு பிடிக்கவில்லை நீ உயர்ந்த நடிகன், எதைப்பற்றியும் கவலைப்படாதே’* என்றார்.
    *யார் ‘திருப்பதி கணேசா கோவிந்தா’ என்று எழுத வைத்தார்களோ அவர்களுடைய மனைவி மற்றும் வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்போது திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக் கிறார்களே. எல்லாமே போலியாக இருக்கிறது.*
    *என்றைக்கு என்னைக் கேலி செய்தார்களோ அன்றே திருப்பதி ஆண்டவன் கண்விழித்துப் பார்த்து அருள்புரிந்துவிட்டார்.*
    *நான் நடித்த படங்களெல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ’மக்களைப் பெற்ற மகராசி, வணங்காமுடி, தங்கமலை ரகசியம், அம்பிகாபதி, உத்தமபுத்திரன்’ போன்ற படங்கள் அப்போதுதான் வெளிவந்தன."*
    *இவ்வாறு சிவாஜி கனேசன் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்..*
    பின்குறிப்பு
    சிவாஜி கனேசன் சாதாரண நடிகராக வாழ்ந்த ஆரம்ப காலத்தில்,
    *தி.மு.க. வினர் திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் . அவருடைய போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.*
    *ஆனால் கடவுள் எதிர்ப்பிலும் அவர்களுக்கு உறுதி இல்லை.*
    *பத்து வருடங்களுக்குப் பிறகு ‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் முருகனாக நடித்தார்.*
    *திராவிட முன்னேற்றக் கழகத்தாரிடமிருந்து முக்கல் இல்லை; முனகல் இல்லை; முணுமுணுப்புகூட இல்லை; ஏனென்றால் எம்.ஜி.ஆர். அப்போது வளர்ந்துவிட்டார்.*
    *வலியோரை வாழ்த்துவதும் எளியோரை தாழ்த்துவதும் இந்த திமுக கட்சியினரின் வழக்கமல்லவா?*
    *(க.சுப்பு அவர்கள் எழுதிய திராவிட மாயை என்ற நூலில் இருந்து ..)*


    நன்றி vasudevan முகநூல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3912
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3913
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    thanks v c thiruppathy
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3914
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அக்டோபர் முதல் நாளன்று அய்யனின் உதய நாளில் அன்னை இல்லம் செல்லும் போது
    உண்டாகும் அர்த்தமுள்ள மனநிறைவு, இன்று செப்டம்பர் 9-
    "பாலும் பழமும்" திரைக்காவியத்தின் உதய நாளில் அதனை மீண்டும் பார்க்கும் போது உண்டாயிற்று.

    சிறு வயதில் சிவகங்கை ஸ்ரீராம்
    திரையரங்கில், அதன் பின் கால
    இடைவெளிகளில் இரண்டு, மூன்று முறை அதே அரங்கில், அதன் பின் நாட்டரசன்கோட்டை
    ரவி டூரிங் திரையரங்கில் பல முறைகள், பின் வீட்டில் டி.வி.டி யில் நினைத்தபோதெல்லாம் என்று "பாலும் பழமும்" வாழ்வு நெடுக வந்து கொண்டுதான் இருக்கிறது.

    நேற்று வரை பாலும் பழமும் என்றால், என்றும் என் இதயத்திற்குப் பிரியமான " நான்
    பேச நினைப்பதெல்லாம்" பாடலின் ஊடே அழகழகான பாவனைகளில் "ம்" கொட்டும் இனிமை நினைவுக்கு வரும்.

    மருத்துவமனை சென்று
    வீட்டிற்குத் திரும்ப வந்து பார்க்கையில் அன்பு மனைவியைக் காணாமல், அவள்
    எழுதி வைத்துப் போன கடிதத்தை
    படித்த பின் " எங்க போயிட்ட சாந்தி" என்று தாள லயத்தோடு
    துடிக்கிற காட்சி நினைவுக்கு வரும்.

    படம் முழுவதும் பிடித்தாலும் மற்றவற்றை சொல்லத் தெரியாமல் இவை இரண்டுமே நினைவில் வரும்.

    இன்று பாலும் பழமும் பார்த்த போது ஏகப்பட்ட அற்புதங்கள் பார்க்கக் கிடைத்தன.

    பாலையா, ஸ்வாமி தீர்த்தம் தரும்
    போது நாகரீகமாக, அழகாக பின்
    திரும்பி உறிஞ்சுவது...

    நிறைவான புன்னகை, குறைவான பேச்சென்று.. ஏற்றிருப்பது மருத்துவர் வேடம்
    என்றுணர்த்துவது...

    ஆராய்ச்சியின் நிறைவில் மிக
    நேர்த்தியாக மருத்துவர் போலவே
    கை கழுவுவது...

    ஆராய்ச்சியின் போது உடன் பணிபுரியும் நர்ஸூக்குக் கொடுக்கும் குறிப்புகளில் துல்லியமான மருத்துவத் தொனி...

    அந்த நர்ஸ் கிட்டத்தட்ட ஒரு டாக்டர் என்பதறிந்து, அதற்கான ஆதாரங்களைப் படித்துப் பார்க்கும் போது, முதல் பக்கத்திலிருந்து வரி விடாமல் படிக்காமல், ஒரு அனுபவம் மிகுந்த மருத்துவர் என்பதைக் காட்ட அங்கங்கே படித்துப் பார்ப்பது...

    அவளது மருத்துவ அறிவை வியக்கும் ஒவ்வொரு கட்டத்திலும்
    அவளைப் பாராட்டுவதிலிருக்கும்
    உண்மைத் தன்மை...

    அவள் தன்னுடனிருந்தால் தன் இலட்சியம் ஜெயிக்கும் என்கிற
    உறுதியில், அவளிடம் தன் மனம்
    தெரிவிக்கும் பண்பான பேச்சு...

    தன்னை வளர்த்து ஆளாக்கிய பெரியவரிடத்தில் பேச நேரும் போதெல்லாம் காட்டும் பணிவும், நன்றியுணர்வும்...

    உலகில் யாருக்கும் கிட்டாத மனைவி தனக்குக் கிடைத்து விட்டதான மகா பெருமை பாவனை " நான் பேச நினைப்பதெல்லாம்" பாடல் முழுவதிலும் பரவிக் கிடப்பது...

    அதன் பின் செய்யும் ஒரு ஆராய்ச்சியின் போது கருப்புச் சட்டை அணிந்து கொண்டு அழகாய் மனைவியின் தோளில் கையிட்டு இறுக்கும் ஸ்நேகிதம்...

    மனைவிக்கு உடல் நலம் குன்றிய பின் மற்றெல்லாமும் வெறுத்துப்
    போகும் மனித இயல்பு காட்டும்
    நடிப்பு...

    அன்பானவள் அருகிருக்கும் போது காட்டும் உருக்கத்தைக் காட்டிலும், அவளைப் பிரிந்த பின்
    காட்டுவதில்தான் அதிகமென்று
    உணர்த்தும் அந்த "சாந்தி.. சாந்தி..
    சாந்தி.."

    மறுக்க முடியாத கட்டாயத்தில் மற்றுமொரு பெண் மனைவியாக
    வரும் போது, அதை ஏற்றுக் கொள்ள முடியாத, மறுக்கவும்
    முடியாத மனத் தவிப்பு...

    ஆராய்ச்சிக்கு உதவுகிறேன் பேர்வழியென்று, அபத்தமாய் தப்புத் தப்பாய உபகரணங்கள் எடுத்துத் தரும் போது எரிச்சலில்
    கொட்டும் "ச்"...

    புது மனைவியின் பிடிவாதத் தீவிரத்தின் போதெல்லாம் இடைமறித்து உதாரணம் காட்டும்
    முதல் மனைவியின் அன்பின் உச்சம்...

    பார்வை போன பின் நடக்கும் நடையிலிருக்கும் இயல்பான தடுமாற்றம்...

    தம்பியிடம் உரையாடுகையில்
    மகிழ்வும், தெளிவும், நெகிழ்வும்...

    - இப்படி சரவணா பிலிம்சாரின்
    "ஓம் சரவண பவாய" விலிருந்து,
    மீண்டும் அன்பு மனைவியோடு
    ஆராய்ச்சி துவங்கும் போது போடப்படும் " வணக்கம்" வரையிலும் ஏகப்பட்ட அற்புதங்கள் காணக் கிடைத்தன.

    நன்றிகளுக்குரிய அய்யா திரு.ராகவேந்திரா அவர்கள் இன்று இணையங்களில் இட்ட,
    பாலும் பழமும் காவியத்தை படம் வெளியான நாளன்று, இயக்குநர் அமரர் பீம்சிங் அவர்கள் நமதபிமான சாந்தியில்
    பார்த்தது குறித்த பதிவில், படம் பார்த்த பின் அவர் நிறைவானார்
    என்றிருந்தது.( நானும் ஆவணத் திலகம் பம்மலாருக்கு நன்றி சொல்கிறேன்.)

    அய்யனின் அதிஅற்புத நண்பராகவும், தலைசிறந்த இயக்குநராகவும் திகழ்ந்த வணங்குதலுக்குரிய அய்யா அமரர் பீம்சிங் அவர்கள், 57 வருடங்களுக்கு முன் இதே தினத்தில் பெற்ற நிறைவுக்குக்
    காரணமாக ... மேலே நான் எழுதியிருக்கிற ஒன்று கூடவா இருக்காது..?

  6. #3915
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3916
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like



    3ji Review

    U.A.A. – United Amateur Artists – as it is known for the past 60+ years. But for me it is “Unlversal Academy for Arts”. With a rich knowledge and vast experience, Y.G.M. once again proves Testimony as to why U.A.A. remains the pioneer in its area of Arts, in his latest presentation, 3Ji.

    And what more Y.G.P. would have asked for as a Tribute to his Century landmark?

    The script by Sriram is cleverly designed to present a political satire perfectly blended with humor, but this humor, not just for laugh, but cry, or weep, or bring you in tears.
    A security guard of India Apartments, Damodaran, “Damo” as he is called by the colony people (the reason for naming of Damodaran @ Damo is revealed at the end of the play, don’t miss), in a course of debate, challenges that he will return as the owner of one of the flats and that too within a time limit, i.e. one year. And he finds politics is the easiest way for earning money to meet his challenge. By hook or cook, he achieves and returns to the India Apartment as one of the flat owners. The other owners are awestruck by this. But insist that he follows the rules and regulations. However, the apartment which Damo purchased has some unique and fishy myth behind, as to the prevalent of ghost.

    The Apartment needed to choose its new President and the schedule is fixed for conducting elections. In a heated argument, Damo declares that he would contest the election. Damo along with his aide suddenly face some extraordinary experience at their apartment. They see Mahatma Gandhi landing in front of them and to their surprise Gandhi extends support to Damo. On the other side, Nethaji lands on the Apartment and extends support to the opposite party.

    What happens thereafter forms the rest of the story. It is better to witness the play instead of knowing in advance of the outcomings.

    And this web of script woven around the current political scenario as well as the mindset of people, does leave no stone unturned and the dialogues witness thunderous applause often, which is ample proof of the impact they make on the audience.

    The performance by all artistes led by Y.Gee.M. deserve full accolades, As usual Subbuni in a brief appearance, leaves his mark to remain in the hearts of the audience as usual. However, there is a big difference on the impact of scenes, when Y.Gee.M. is on and off the Stage. Noteworthy is the characterization of Mahatma Gandhi and Nethaji. While Sudesi Iyer took Gandhi to great heights, here Nethaji steals the show.

    All departments have co-ordinated well to give a flawless entertainment under the Stewardship of Y.Gee.M. The Setting with the apt lighting arrangement, give the desired look the plot asked for.

    3 ji another feather in the cap of U.A.A. and Chitralaya Gopu is now a proud father who sees his son overtaking him in the hall of fame.

    Y.G.P. now would feel more than happy, for the legacy of U.A.A. can look forward to its Century, after that of its Founder.

    Kudos to Y.Gee.M
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #3917
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3918
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இனிய செவ்வாய் வணக்கம் நண்பர்களே...

    சுவரொட்டி எண் : 5

    நடிகர்திலகத்தின் வெற்றிப்பட வரிசையில் இன்று நூறுநாள் படவரிசை இடம் பெற்றுள்ளது....
    இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் பெரும்பாலானவை சென்னைக்கு வெளியேதான் நூறுநாட்களைக் கடந்திருக்கின்றன.
    பத்தாண்டுகளுக்கு முன் நடிகர்திலகம் பற்றிய புத்தக வெளியீட்டு ஒன்றிற்காக, அவரைப்பற்றிய செய்திகளை சேகரிக்கும்போதுதான் இத்தகவல்கள் கிடைத்தன.
    பெரும்பாலான ரசிகர்கள் சிவந்தமண் படத்திற்குப் பின்பான பட ஓட்டங்களைத்தான் துல்லியமாக வைத்திருக்கின்றனர்.
    வேலூரில், காஞ்சியில், தாம்பரத்தில் ஓடிய வெற்றிப்படங்களைக்கூட அறிந்திடாத ரசிகர்களே சென்னையில் அதிகம்பேர் இருந்தனர்.
    அதிலும், ஆரம்பகால பட ஓட்டங்களை அறிவதென்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. இன்றும் அதே நிலைதான்..
    மேட்டூர் உதயகுமார், வேலூர் அன்பழகன், சென்னை இளம்பிறை பாரூக், சிவாஜிஸ்ரீதர், பம்மலார் , கோவை சேது, கோவை வெள்ளியங்கிரி, மற்றும் மதுரை, திருச்சி நண்பர்கள் சொன்ன... தந்த... தகவல்களின் அடிப்படையில்தான் இப்பட்டியல் தயார் செய்யப்பட்டது.
    ஒருவேளை இப்பட்டியலில் தவறுகளோ மாற்றங்களோ இருப்பின் ரசிக நண்பர்கள் தவறாமல் கமெண்ட்ஸ் பகுதியில் குறிப்பிடவும். ஆதாரங்கள் இருந்தாலும் பதிவிடுங்கள்.
    எதிர்பார்ப்புகளுடன்....
    வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3919
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #3920
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    Aathavan ravi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •