Page 30 of 400 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #291
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #292
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri





    ( மேம்போக்காகப் பார்த்தால், இது இனிமையான இசை கொண்ட அழகான ஒரு நாட்டுப்புறப் பாடல் என்று மட்டும் தோன்றும். மிகச்சாதாரணமான வார்த்தைகளைக் கொண்டது. ஆனால் எவ்வளவு கருத்தாளம் கொண்ட தங்கச்சுரங்கம் என்பது ஊன்று கவனித்தால் மட்டுமே தெரியும்.

    வார்த்தைகளில் கவிஞர் எப்படி விளையாடி இருக்கிறார் என்று புரியும். புரிந்தால் நம் கண்கள் வியப்பால் விரியும். கொஞ்சம் நீ.....ள....மான பதிவுதான். படிக்கப் பொறுமை மிகமிக அவசியம்.) கன்னையனைப் பற்றி என்ன சொல்வது ? இடது கை எதற்கும் உதவாமல் உடம்பில் ஒட்டிக்கொண்டும், ஒரு கால் சரியாக மடக்க முடியாமல் நீட்டி நீட்டி நடக்க வேண்டிய நிலையிலும் இருக்கும் ஒரு துர்பாக்கியசாலி என்று சொல்லலாம். முகமும் அப்படி ஒன்றும் லட்சணம் என்று கூற முடியாது. .... அவனுக்கு என்ன வேலை..?

    ஆடுமாடு மேய்ப்பவர்களுடன் சுற்றுவதும், எருமை மேல் ஏறிச் சவாரி செய்வதும்,அவ்வப்போது வண்டியில் மாடுகளைப் பூட்டிக் கொண்டு சந்தைக்கு ஓட்டுவதும் தான். இந்த நிலையை அவனுக்குக் கொடுத்த இறைவன் அவன் மனதை மென்மையாகவும் நல்லதாகவும் அறிவுடனும் படைத்து விட்டார். இந்த நிலையில் உள்ள கன்னையனுக்காகவும், துணை என்று ஒருத்தியை அனுப்பி வைக்கிறது காலம். பொன்னி என்பவள்தான் அந்தப் பொன்னான மங்கை. பாவம், அவளும் ஆதறவற்ற ஒரு அபலை. ஒரு நாள், எங்கோ காட்டில் அலைந்து கொண்டிருக்கும் கன்னையனுக்காகச் சாப்பாட்டுக் கூடையைத் தலையில் சுமந்தபடி அவனிருக்கும் இடத்துக்கு வருகிறாள் பொன்னி.

    அப்போது இருவரும் பாடிக் கொள்ளும் இனிமையான ஒரு காவியப் பாடல்தான் இது. அவள் எளிமையான உடைதான் அணிந்திருக்கிறாள். அடக்கமான, குடும்பப் பாங்கான ஒரு கிராமத்துப் பெண். என்ன, இன்று வழக்கத்துக்கு மாறாகத் தலையில் ஒரு தாழம்பூவைச் சூடி இருப்பாள். அதைப் பார்த்து உற்சாகம் அடைந்து கன்னையன் பாடுவான், அதற்கு அவ்வப்போது பொன்னி பதில் கருத்தைத் தருவாள் பாடலாக. "தாழையாம் பூ முடிச்சு...." என்று எடுத்த எடுப்பிலேயே, ஏகப்பட்ட அர்த்தங்கள் உள்ள வார்த்தைகள் பிரவாகம் எடுக்கும் கன்னையனிடம் இருந்து. உலகில் நூற்றுக்கணக்கான பூ வகைகள் இருக்கும் போது ஏன் இங்கு தாழம்பூ வந்தது? பொன்னி தாழம்பூ சூடியிருக்கிறாள், அதனால் அதைப்பற்றிக் கன்னையன் பாடுகிறான் என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வரிகளின் உட்கருத்து அதுவல்ல.

    இங்கு 'ஆம்' என்றால் 'அழகிய' என்று பொருள். அழகிய தாழம்பூ. ஆனால் அழகிய பூக்கள் என்று சொல்லப்படும் வரிசையில் தாழம்பூவை யாரும் சொல்லிக் கேட்டதில்லை. அதைவிட அழகான மலர்கள் நிறைய உண்டு. தாழம் பூ அறியப் படுவது அதனுடைய இனிய சுகந்தமான மணத்துக்காக. அதுவும் தாழம்பூ எங்கே இருக்கும், மலரும் ? புதர்களில், மறைவாக ஒளிந்திருக்கும், மலர்ந்து மணம் வீசும். பெரும்பாலும் அது கண்களுக்குத் தென்படாமல்தான் இருக்கும். தேடிப் போய்த்தான் அதைப் பறிக்க வேண்டும். அப்படி இருக்கக் கன்னையன் ஏன் அந்த வார்த்தைகளைப் பிரயோகித்தான் ? தாழம்பூ தன்னை வெளிக்காட்டாமல் மறைவாக இருந்தாலும் தன் இனிமையான நறுமணத்தால் தான் இருக்கும் பகுதியையே அற்புதமாக மாற்றி விடும். அதே போலத்தான் பொன்னியும். குடும்பத்தில் அவள் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தாலும் அவளுடைய இனிமையான, அற்புதமான, நற்பண்புகளால் ஆன குணத்தால் அந்தக் குடும்பத்துக்கே ஒரு பொலிவையும் புகழையும் ஏற்படுத்தி இருப்பாள்.இதுதான் கன்னையன் கூற்று..

    'தடம் பாத்து நடை நடந்து....' இங்கு தடம் என்றால் 'பாதை', 'நிலம்' 'வழி' என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளலாம். பாதையைப் பார்த்து நடந்து வருகிறாள் என்றா இதற்கு அர்த்தம் ? அல்ல. எல்லோருமே பாதையை, நிலத்தைப் பார்த்துத் தானே நடப்பார்கள்? ஆகாயத்தைப் பார்த்தா நடப்பார்கள் ? பின் எதற்காக 'தடம்' என்ற வார்த்தைப் பிரயோகம் இங்கு? 'நிலம் பார்த்து' அல்லது 'வழி பார்த்து' என்று சொல்லியிருக்கலாமே ? இந்தத் 'தடம்' என்பதற்கு மட்டும் இங்கு சொல்லப்படும் உட்பொருள் மிக மிக நுட்பமானது. பெண்மையின் உயர்வான குணங்களில் ஒன்று தலை குனிந்து, நிலம் நோக்கி நடப்பது. ஆனால் அதைவிட, செல்லும் வழி எப்படிப்பட்டது, நல்ல வழிதானா, அதில் செல்வது தனக்கும் தன் குடும்பத்துக்கும் நல்லதா இல்லை தீமையானதா, தன் குடும்பத்தின் மேன்மைக்கு இழிவு எதுவும் வராதிருக்குமா என்றெல்லாம் ஆய்ந்துணர்ந்து நடக்கும் உயர்ந்த குணம் கொண்ட உத்தமி என்று பொருள்.....சாதாரண நடைக்கு மட்டும் அல்ல , வாழ்வில் அவள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இது பொருந்தும். அடுத்த வரி இன்னும் அற்புதமானது. 'வாழைஇலை போல வந்த பொன்னம்மா.... பொன்னம்மா.....' இங்கும் 'வாழை' என்னும் வார்த்தை மிக நுட்பமான தேர்வு. தாவரங்களில் வாழை மட்டும்தான் தன் அனைத்துப் பாகங்களையும் உபயோகமானதாகக் கொண்டிருக்கும்.

    பச்சையாக இருந்தாலும் சரி, காய்ந்து சருகாக ஆனாலும் சரி. அதே போல ஒரு வாழையை நட்டு விட்டால் போதும், அப்புறம் அதன் பக்கத்தில் கன்றுகள் தோன்றி வளர்ந்து கொண்டே இருக்கும்.அதற்கு முடிவே இருக்காது. (எங்கள் வீடு கட்டி, 2000 ஆம் ஆண்டு குடி வந்த போது ஒரு வாழை நட்டோம்.அதன் கன்றுகள் ஒன்று மாற்றி ஒன்று இன்று வரை பலன் தந்து கொண்டு உள்ளன). எனவேதான் எல்லா சுபகாரியங்களுக்கும் முகப்பில் வாழை மரத்தைக் கட்டுகிறோம். சரி, 'வாழை இலை போல...' என்று ஏன் ? வாழை இலை மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. பிணிகளை நீக்கக் கூடியது.(அதை முழுக்க எழுத இங்கு இடம் போதாது).மென்மையானது. அதைப் போல 'என் குடும்பத்தை வாழையடி வாழையாகத் தழைத்து வளரச்செய்யவும் , இங்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றைப் போக்கி நிறை செய்யவும், மென்மையாக எல்லாவற்றையும் கையாளவும் கூடியவளே...பொன் போன்றவளே......நீ என் மனைவியல்ல, என் தாய் போன்றவள்... தாயைப் போல என் மேல் அன்புடையவள்' என்கிறான் கன்னையன். அடுத்ததாகக் கன்னையன் அவளிடம் கேட்கும் கேள்வி கொஞ்சம் முட்டாள் தனமாகத்தான் தெரியும்.

    அப்படி என்ன கேட்கிறான் ? 'என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா...?' பொன்னியோ ஆதறவற்ற ஒரு அபலை. அவளிடம் போய் 'என்னைத் திருமணம் செய்யும்போது சீதனமாக எனக்கு என்ன கொண்டு வந்தாய்?' என்று கேட்கலாமா? அதிலும் 'என் வீட்டுக்கு' என்றோ அல்லது 'எனக்கு' என்றோ கேட்டிருந்தாலும் பரவாயில்லை , 'வாசலுக்கு' என்று ஏன் கேட்க வேண்டும்? அங்குதான் இருக்கிறது வார்த்தையின் சூட்சுமம். வாசல் என்பது வெளி. பொதுவெளி. ஊரறிய, உலகறிய நீ சொண்டு வந்த சீதனம் என்ன என்பதுதான் அதன் பொருள். இப்போது கேள்விக்குப் பதில் சொல்வாள் பொன்னி. 'கன்னையா, உன் அழகான பல் வரிசையில் நீ சிரிக்கும் போது, தென்னம்பாளை பிளந்தது போல வெள்ளை வெளேர் என்று அழகாக இருக்கின்றது. உன் குணமும் மிக உயர்வானது, வாழ்க்கையில் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து கண்ணியமாக நடந்து கொள்ளும் உயர்வான மனிதன் நீ. என் கண்ணுக்கு நீ மிகுந்த ஆணலழகனாகத்தான் தெரிகிறாய். என்னைப் போன்ற ஒரு ஏழைப் பெண்ணுக்கு இதை விட வாழ்க்கையில் வேறென்ன சிறப்பு வேண்டும்.' என்பாள். தொடர்ந்து, 'நானே ஆதரவற்ற ஒரு அபலை. நான் உனக்கு எதைச் சீதனமாகக் கொண்டு வர முடியும்? உனக்குத் தர என்னிடம் ஆடுகள் மாடுகள், ஆபரணங்கள் முதலிய செல்வங்கள் எதுவும் இல்லை.(ஆடு மாடுகளைச் சீதனமாகத் தரும் பழக்கம் சில பகுதிகளில் உண்டு). ஆனால் அவற்றை விட உயர்ந்த மதிப்புள்ள என் மானத்தையே சொத்தாகவும், உனக்கு சமுதாயத்தில் உயர்ந்த மரியாதையை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்ளும் மாசற்ற நடத்தையையே பொன் நகையாகவும் , நாணம் என்னும் உயரிய குணத்தையுமே என் சீதனமாகக் கொண்டு வந்துள்ளேன். இதனால் நம் குடும்பத்தின் பெருமையும் குலப் பெருமையும் ஊரின் பெருமையும் உயர்ந்து வளருமே அன்றி ஒரு போதும் குன்றாது.'

    ( நாட்டுமக்கள் என்ற ஒரு பதத்துக்குள் இவ்வளவும் அடக்கம்). பொன்னியின் பதிலால் நெஞ்சம் நெகிழ்ந்து போன கன்னையன், 'என் அன்பே....நான் விளையாட்டாகக் கேட்டதை நீ இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டாயா ? நீ உன் தாய் வீட்டில் இருந்து எவ்வளவு நிறம்ப நிறம்ப சீதனம் கொண்டு வந்திருந்தாலும், உன் உடன் பிறந்தோர் உனக்காக அளவற்ற செல்வங்களை அள்ளிக் கொடுத்து அனுப்பி இருந்தாலும், குடும்ப மானம் , மரியாதை, நற்பெயர் போன்றவற்றை உன்னால் காக்க முடியாமல் போய்விட்டால் , நீ கொண்டு வரும் அளவற்ற சீதனங்களால் என்ன பயன் ? எனவே எனக்கு உன் சீதனப் பொருட்கள் எதுவுமே வேண்டாம். உன் உண்மையான அன்பு மட்டுமே என் உயிருள்ளவரை எனக்குப் போதும்'. இப்படிச் சொன்னாலும், 'மிகமென்மையான மனம் கொண்ட பொன்னியை இப்படி நான் கேட்டது நியாயமா? அவள் மனம் எப்படி வருந்தி இருக்கும் ? இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முதலில் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?' என்று மனம் வருந்திய கன்னையன், தான் எப்படிப் பட்டவன் என்று உண்மை நிலை உணர்ந்து சுய பச்சாதாபத்தில் அடுத்த வரிகளைப் பாடுவான். 'உடலில் இருக்க வேண்டிய அவயங்கள் இயல்பாக இருக்காமல், ஒரு கை விளங்காமலும், ஒரு கால் சரியாக நடக்க முடியாமலும் , குறைபாடுகள் கொண்டவனும் அழகு என்ற அம்சம் சிறிதும் இல்லாதவனும், வெறுமனே ஆண் என்று வெளியில் சொல்லிக் கொண்டு திரியும் என்னைக் கண்டால் எந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும்? அதிலும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள யார் முன் வருவார்கள் உன்னைத்தவிர? இப்படிப்பட்ட குரூபியை அன்புடன் மணந்து கொண்ட உன் உத்தம குணத்தைப் பாராட்டாமல் உன் மனதைப் புண்படுத்தியது என் தவறு' என்று கூறுவான் கன்னையன்.

    (இந்தக் காட்சியில் காமிராவை லோ ஏங்கிளில் வைத்துக் கன்னையனின் மேல் பல்வரிசை முழுவதும், ஒரு குதிரை லாடம் போல் , தெரியும்படிப் படமாக்கி இருப்பார் பீம்சிங். ஏன் அப்படி? அந்த நேரத்தில் பொன்னி ஒரு சிறு பீலத்தின் மேல் உயரமான இடத்தில் நடந்து வருவாள், கன்னையன் தாழ்வான இடத்தில் இருப்பான். பொன்னியின் பார்வையில் படும் காட்சி அது...அதிலும் 'அங்கம் குறைந்தவனை.........ஓ......' என்று நீளமாகச் செய்யும் ஆலாபனை ...... கன்னையனின் சுய பச்சாதாபத்தை அப்படியே காட்சிப்படுத்தும்.) கன்னையன் இந்த வரிகளைப் பாடும் போது ஒரு நொடிப் பொழுது பொன்னியின் முகம் வருத்தத்தில் சுருங்கும், பின் இயல்பு நிலைக்கு வருபவள் கன்னையனுக்குப் பதில் சொல்லுவாள். 'இந்த உலகில் வளரும் எந்த ஒரு தாவரமும் குறிப்பிட்ட இந்த மண்ணில்தான் வளருவேன் என்று சொல்வதில்லை. எந்த இடத்தில் நட்டாலும் செழித்து வளர்ந்து பலன் தரும்.இந்த மரத்தில் படர்ந்தால்தான் மலர் தருவேன், வேறு மரத்தில் படர்ந்தால் பூ தரமாட்டேன் என்று எந்த ஒருமலர்கொடியும் சொன்னதில்லை.

    எந்த வேறுபாடும் காட்டாமல் மலர்ந்து மணம் பறப்பும் தம் குணத்தில் இருந்து என்றும் அவை மாறுபடுவதில்லை. அதே மாதிரிதான் பெண்மையும் பெண்களின் குணநலமும். தனக்கு அமைந்த கணவன் எப்படிப்பட்டவனாக இருப்பினும் அவன் மேல் தான் கொண்ட அன்பையும் மனதில் தன் மேல் அவன் கொண்டுள்ள பிரியத்தையும் , அவன் வாழ்வில் தன்னால் அடையப் போகும் உயர்வுகளையும் பெருமைகளையுமே ஒரு பெண் தன் மனதில் வைத்துச் சீர் தூக்கிப் பார்ப்பாளே இல்லாமல், அவனது புறத்தோற்றத்தையோ அல்லது அவன் அழகையோ மட்டும் கண் மகிழும் செயலை அவள் ஒரு போதும் செய்ய மாட்டாள்' என்று முடிப்பாள் பொன்னி. A.பீம்சிங் இயக்கத்தில் , திலகமும் சரோஜாதேவியும் நடித்து 1959 இல் வெளியான 'பாகப் பிரிவினை' படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல் இது.

    சரோஜாதேவி திலகத்துடன் ஜோடி சேர்ந்த முதல் படம். பொள்ளாச்சி அருகே இயற்கை எழில் கொஞ்சும் 'சேத்துமடை' என்ற இடத்தில் பாடல் காட்சி படமாக்கப் பட்டது. மிக அருகில் தொட்டு விடும் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் ,பாடலின் பின்புலத்தில் தெளிவாகத் தெரியும். இக்காட்சியில் திலகம் எருமை மேல் அமர்ந்து அதை ஓட்டிக் கொண்டு வருவார். இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியையும் ஒரு இடத்தில் ஓட்டி வருவார்.அவை ஸ்டுடியோ சாட் கள் அல்ல. டூப் போடாமல் திலகமே ஒரிஜினலாக நடித்திருப்பார்.

    நண்பர்களே! என் பார்வையில் நான் பார்த்த வகையில் இப்பாடலைப் பற்றிய என் கருத்துக்களைக் கூறி இருக்கிறேன். ஏற்கெனவே உங்கள் மனதில் இப்பாடலைப் பற்றிய ஒரு அபிப்பிராயம் பதிந்திருக்கும் இதைப் படித்து விட்டு, இப்பாடலை மீண்டும் நீங்கள் பார்க்கும் போது, உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களில், முந்தைய கருத்தில் இருந்து ஏதேனும் மாறுபாடு இருப்பின் எனக்குத் தெரிவியுங்கள். என் கருத்தில குறைகள் இருப்பின், கூறினால், திருத்திக் கொள்கிறேன்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #293
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    S V Ramani

    · 4 hrs





    அவர் ஒரு சரித்திரம் - 010.
    சிவாஜி பக்தர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    சிவாஜி ரசிகர்களுக்கு இன்றைய மாபெரும் விருந்து. "புதிய பறவை" தலைவரின் வெற்றிக் காவியத்திலிருந்து சில காட்சிகள்.
    படம் கப்பலில் துவங்குகின்றது. கப்பலில் நடக்கும் விருந்தின்போது சிவாஜி சரோஜாதேவியை ஒரு பாட்டுப் பாட சொல்ல, அவர் தயங்கும்போது, கைதட்டி அவரை பாடுமாறு ஊக்குவிக்கிறார்.
    முதலில் இரு முறை கை தட்டல், பின் ஒரு முறை, இவ்வாறு சிவாஜி இருமுறை செய்தவுடன், நடனக்குழுவினரும் தொடர்ந்து கைகளைத் தட்டி நடனமாடுகின்றனர். கூடவே பியானோ, மரக்கோஸ், பாங்கோஸ் சேர்ந்த இசையுடன் பின்னர் ட்ரம்ஸும் ஒலிக்க, ட்ரம்ஸின் வாசிப்பு முடிந்தவுடன், ஒரு சிறு அமைதி - சிவாஜி "ப்ளீஸ்" என்று சொல்ல, சரோஜாதேவி பாட ஆரம்பிக்கிறார்.
    அந்த "ப்ளீஸ்" என்று சொல்லும் அழகுக்கே யாராயிருந்தாலும் மயங்கி பாடிதான் ஆக வேண்டும். கைதட்டும் அழகு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
    பல்லவிக்குப் பின் காதல் பாட்டுப் பாட என்று அனுபல்லவி துவங்குகிறது. அனுபல்லவிக்கு முன் இடையிசைஆக, பியானோவின் ஒரு நீண்ட இசையுடன், வயலின் சிறு இசை முடிந்ததும், கிடாரின் ஒரு தீர்மானமான மீட்டல். கூடவே, கை சொடுக்கும் ஒலி. சிவாஜி இந்த இடத்தில் இடது கையால் கை சொடுக்குவது அவருக்கே உரித்தான ஸ்டைல். பியானோ வாசிக்கும் ஸ்டைல், "ஒரு பய கிட்ட நெருங்க முடியாது"
    முதல் சரணத்திற்கு முன் இடையிசையாக, ட்ரம்பெட் ஒலிக்க அதைத் தொடர்ந்து, பியானோவுடன் வயலின் இசை. சிவாஜி உண்மையிலே ட்ரம்பெட் வாசிப்பது போலவே இருக்கும், ட்ரம்பெட் வாசித்ததும் அதை வைத்து விட்டு அவர் பியானோவுக்கு சென்று அதை வாசிப்பது, அவரது நடிப்பின் நேர்த்தியைக் காண்பிக்கிறது. மிக இயல்பான நடிப்பு. நடிகர் திலகமய்யா நீர்
    இரண்டாவது சரணத்திற்கு முன் சாக்ஸபோன், புல்லாங்குழல், வயலின் ஆகியவற்றின் மயக்கும் இசை. இதிலும் சிவாஜியின் சாக்ஸ் வாசிப்பு தத்ரூபமாக இருக்கும். இந்தப் பாடலுக்கு அழகுப் பதுமையாக சரோஜாதேவியை நடிக்க வைத்திருப்பது ஒரு நல்ல தேர்வு.
    மீண்டும் பல்லவி முடிந்தவுடன், ட்ரம்சின் தீர்மானத்துடன், அனைவரும் கைத்தட்ட பாடல் முடிவுகிறது. ஒரு இனிமையான மாலை நேரத்து விருந்தினை கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் பாடல். மனதுக்கு நிறைவான இசையுடன் கூடிய பாடல். காலங்கள் கடந்தும் மனதில் அழியாத கோலமாய் இருக்கும் ஒரு பாடல் என்றால் அது மிகையாகாது.
    மனதில் நிற்பவர் யார் என்ற போட்டி வைத்தால் அன்றும் இன்றும் என்றும் நினைவில் நிற்பவர் நடிகர் திலகமே. ஒவ்வொரு FRAME லும் நம்மை ஆக்கிரமிக்கிறார்.
    விருந்து முடிந்து அவர்களை தன இல்லத்தில் தங்க அழைக்கிறார். சரோஜாதேவி நடிகர் திலகம் இருவரிடையே காதல் மலர்கிறது. ஒருமுறை இருவரும் வெளியே சென்று திரும்போது ரெயில்வே கெட் மூடப்பட, ரயில் வரும் சத்தம் கேட்டதும் சிவாஜியின் முகம் வியர்த்துக் கொட்ட, கை கால்கள் நடுங்குகின்றன. சரோஜா தேவி காரணம் கேட்டதும் சிவாஜி தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார். அவரது flash back "பார்த்த ஞாபகம் பாடலுடன் துவங்குகிறது.
    காட்சியின் துவக்கத்தில் சிவாஜி கிளப்பினுள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து சிகரெட் பற்ற வைக்கிறார். அதில்தான் என்ன ஒரு லாவகம்!
    HERE I HAVE TO SAY THAT I HATE SMOKING LIKE ANYTHING! I CAN VOW THAT I HAVE NOT EVEN TOUCHED A CIGARETTE IN MY LIFE SO FAR. I HAVE CANVASSED AGAINST SMOKING FEW YEARS BEFORE. BUT I CAN'T SIMPLY RESIST APPRECIATING THE STYLE OF SIVAJI'S SMOKING (ONLY THE STYLE). THAT IS HIS CLASS OF ACTING THAT HE WOULD ATTRACT EVEN HIS ENEMIES, AND WHY NOT HIS FANS LIKE US!
    ஒவ்வொரு முறை அவர் புகை விடும்போதும் பிரத்தியேக ஸ்டைல். நடுவில் ஒற்றை விரலால் உதட்டைத் துடைத்துக் கொள்ளும் லாவகம். நான் அடித்துச் சொல்வேன் ஆண் ரசிகர்கள் மட்டுமன்றி பல பெண் ரசிகைகளையும் இந்த ஸ்டைல் கவர்ந்திருக்கும் என்று.
    பாடல் முழுதும் சிவாஜி பிரமிப்பில் ஆழ்ந்திருப்பார். பாடல் நிறைவுறும்போது . சிவாஜியைப் போலவே நாமும் பிரமிப்பிலிருந்து மீள வெகு நேரமாகும் . பாடல் முடிந்ததும் சிவாஜி சிறிது தலையைக் குனிந்து கைதட்டி பாராட்டும் அழகைப் பாருங்கள், நடனமாடிய சௌகாரை அறிமுகப் படுத்தும்போது அவரை அமர சொல்லும் POLITENESS, ஒரு GRACIOUSNESS (இரண்டும் ஒன்றுதான், ஆனால் அதை சிவாஜி செய்யும்போது பலவித அர்த்தங்கள் உண்டாகும்) வெள்ளைக்காரன் கெட்டான் போமய்யா! (முடியல, உங்களுக்கு இங்க ஃபோட்டோ போட்டிருக்கேன் பாத்துக்குங்க)
    தனக்கும் சௌகாருக்கும் இடையே காதல் தோன்றி விரைவில் அவரை திருமணம் செய்து கொண்டதைக் கூறுகிறார். முதலிரவன்று அவருக்காகத் தான் காத்திருந்தபோது சௌகார் மதுவருந்தி சுயநினைவின்றி வந்ததைக் காணும்போது அவரது முகத்தில்தான் எத்தனை எத்தனை பாவங்கள்; அதிர்ச்சி, திகைப்பு, ஏமாற்றம், அழுகை; இயலாமை; அதற்கு மேல் அவர் மீது கொண்ட காதலால் பரிதானபம், அனைத்தையும் சட் சட் என்று மாற்றி மாற்றி காட்டும் திறமை. அடடா. பிறகு அடிக்கடி தங்களிடையே சண்டை வந்து ஒருநாள் அவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ரயிலின் முன் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அதைக் கண்ணால் கண்டதனால் தனக்கு இப்படி ரயிலைப் பார்க்கும்போதெல்லாம் நேரிடுகிறது என்று கூறுவார். அப்போது அவர் முகம் உணர்ச்சிகள் ஏதும் அற்று இருக்கும், சொல்லி முடித்தவுடன் தான் நிரபராதி என்று சரோஜாதேவியிடம் அவர் கூறும்போது ஒரு சிறுவன் தன் தாயிடம் இறைஞ்சும் பாவனை. என்ன ஒரு கற்பனை!
    இருவரிடையே காதல் மேலும் வளர்கிறது. இன்னொரு பாடல் காட்சி.
    மாலை மயங்கும் நேரம், இளம் காதலர்கள் சந்திக்கும் நேரம். ஸ்டைலான சிவாஜி, அழகான சரோஜாதேவி, கேட்கவா வேண்டும்
    இதயத் துடிப்பை அதிகரிக்கும் கிடார் இசையுடன் பல்லவி துவங்குகிறது.கிடார் இசை துவங்கும்போதே இது ஒரு இளமை ததும்பும் பாடல் என்று தெரிந்து விடுகிறது.
    முழுக்கை மஸ்லின் சட்டையை அரைக்கையாக ம் அடித்துவிட்டு, பனியன் போடாமல் அழகான வெள்ளை பேண்ட், உயர்தர பெல்ட் இடுப்பில், வெள்ளை ஷூக்கள் சகிதமாக சிவாஜி தனக்கே உரிய ஸ்டைலுடன் நடந்து வந்து நின்று,
    "ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்" என்று பாடும்போது அப்படியே இளசுகள் அனைவரும் சொர்க்கத்தில் மிதக்கின்றன. இங்கு விசில் ஒலி காதை பிளக்கும். மெல்லிசை மன்னர் ஒரு ஜீனியஸ். இது மாதிரி விசில் பறக்கும் என்று தெரிந்து சிறிது ஃபில்லர்களை நிரப்பி விடுவார்.
    "முல்லை மலர்ப் பாதம் நோகும் " என்று இடது கையை மட்டும் முன் நீட்டி ஒரு போஸ் தருவார் அதற்கே டிக்கெட் காசு முழுதும் போதாது, மீதி எல்லாம் போனஸ்தான்.
    இங்கேயும் ஹையோ மெல்ல நட என்னுமிடத்தில் தலைவரின் இடதுகை ஸ்டைலைப் பாருங்கள். ஒரு பாடலை நடை, முகபாவனையிலேயே சிறப்புற செய்ய முடியும் என்றால் அது தலைவரால்தான் முடியும்.
    ஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
    (ஹையோ என்ற சொல்லை சிவாஜிக்கு உரித்தான பாணியில் பாடியிருப்பார் TMS)
    பாடல் முடிவடையும்போது நமது மனமும் கூடவே காதல் வானில் சிறகடித்துப் பறக்கிறது
    சிவாஜியின் ஸ்டைலான உடையும் நடையும்தான் இந்தப் பாடல் முழுதும் ஆக்கிரமித்திருக்கிறது EXPOSIVE HANDSOME என்பது இதுதானோ?
    "என்னவென்று சொல்வதம்மா, தலைவரின் பேரழகை" ஹ்ம்ம், இணைப்பில் தரப்பட்டுள்ள ஸ்டில்களை பார்த்து ரசித்து பெருமூச்சு வீட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
    இன்பவானில் இருவரும் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கும்போது, கருமேகங்கள் சூழ்ந்தாற்போல் எம் ஆர் ராதாவின் அருகை. உடன் இறந்த அவரது மனைவி சித்ரா. எம் ஆர் ராதா சித்ரா இறக்கவில்லையென்றும் அவளை சிவாஜி மறுபடி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கெஞ்சுகிறார். சிவாஜி அதை மறுத்து வந்திருக்கும் சித்ரா ஒரு போலி என்றும் எம் ஆர் ராதா எதோ ஒரு சதித் திட்டத்துடன் அங்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார். சரோஜாதேவியிடமும் அவரது தந்தையிடமும் தனக்கு தான் நிரபராதி என்று நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் தரும்படியும் அதுவரை அவர்களை அங்கேயே தங்கியிருக்கும்படியும் வேண்டுகிறார். அவர் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தோல்விடைகின்றன.
    இப்போது உச்சக்கட்டக் காட்சி.
    சித்ராவின் அண்ணன் ராஜு வந்தவுடன் அவரிடம் சிவாஜி அவாது தங்கையைப் போலவே ஒருத்தி வந்து தனது அமைதியை குலைக்கிறா என்று புலம்ப, ராஜூ எப்படி இருக்க முடியும், என் தங்கைதான் இறந்து விட்டாளே என்று கூறி , எங்கே அந்த இன்னொரு பெண்ணைக் கூப்பிடு என்று சொன்னவுடன், ஒவ்வொரு அறையாக தேடுவார். சௌகார் ஜானகி வெளியே வந்து அவரைத் தொட்டவுடன் அருவருப்பில் அவர் பின் நோக்கி ஓடி ராஜுவின் பின் நின்று கொண்டு இவள்தான் அந்த பேய் என்பார். ராஜு அவளை தங்கச்சி என்று அழைத்த்தவுடன் அவர் முகத்தில் தோன்றும் திகைப்பு, பின் பல வாதங்களுக்கு பின் சித்ராவின் முதுகில் ஒரு தழும்பு இருக்கும், உண்மையான சித்ராவாக இருந்தால் இவள் முதுகிலும் இருக்கும் என்று அவரது மேல் சட்டையை கிழித்து முதுகைப் பார்க்க அங்கே ஒரு தழும்பு இருக்கக் கண்டு அவர் அதிர்ச்சியுடன் பின் நோக்கி சென்று அமைதியாக தரையில் அமர்ந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது, இன்ஸ்பெக்டர் வந்து உண்மையான சித்ராவின் கைரேகை கிடைத்து விட்டது என்று கூறியவுடன் நம்பிக்கை வரப் பெற்றவராக இன்ஸ்பெக்டரிடம் அனைவரிடமும் உண்மையைக் கூறுமாறு சொல்கிறார். அப்போது இரண்டு கைரேகைகளும் ஒன்றாக இருக்கின்றன என்று இன்ஸ்பெக்டர் கூறியவுடன், ஒரு விரக்தி கலந்த சிரிப்புடன்,
    "வெளையாடறியா, வெளையாடறியா".
    இப்போது குரலை உயர்த்தி கோபத்துடன்
    "எப்படி இருக்க முடியும் , என்று கத்திக் கொண்டே சரோஜா தேவியிடம் செல்ல, அவர் இனியும் நான் உங்களை நம்பத தயாராயில்லை என்று கூறியவுடன் "நம்பிக்கை இல்லையா", என்று கூறிக்கொண்டே, தன்னை சுற்றி ஒரு வலை பின்னப் படுவதை அறியாமல், அது உண்மையான சித்ரா இல்லை என்று சரோஜா தேவியை நம்ப வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மெதுவாக நடந்து சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டு
    "லதா, சித்ராவை நான்தான் கொலை செய்தேன், இந்தக் கைதான் அவளை அடிச்சது, இந்த கண்தான் அவளோட பிரதேதத்தைப் பார்த்தது"
    என்று கூறும் போது அவரது கண்களை மட்டும் காட்டுவார்கள், ஒரு திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் அப்போது, தொடர்ந்து
    " அதிர்ச்சியா இருக்கா? ஆச்சரியமா இருக்கா. திகைப்பை கொடுக்குதா, இல்லை திடுக்கிட வைக்குதா? லதா , ரயில்வே கேட்ல நான் உன் கிட்ட சொன்ன கடந்த கால கதையை நான் அரைகொறையாதான் முடிச்சேன்"
    என்று கூறி ரயில்வே கேட் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூறுகிறார்.
    "வீட்ட விட்டுப் போன சித்ராவை நான் வழி மறிச்சி தடுத்து நிறுத்தி கூப்பிட, அவ மறுத்து என்னை கேவலமா பேச (இந்த இடத்தில் கண்ணீருடன் விசும்பிக்கொண்டே) ஆத்திரம் தாங்காம அடிக்க அதுக்கப்பறம் அவ கீழே விழுந்தான்னு நான் சொன்னேன் இல்லயா, அதன் பின் நான் திரும்பிவிட்டேன், அப்போதுதான் அவளது இதய பலவீனம் என் நினைவுக்கு வந்தது, உடனே நான் திரும்பி வந்து பார்த்தபோது சித்ரா இறந்து கிடந்தாள் , கொலைப் பழிக்கு அஞ்சி நான்தான் அவளை ரயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே வைத்து வந்து விட்டேன், ரயிலின் சக்கரங்கள் சித்ராவின் பிரேதத்தை சிதைத்த அந்த கோரக் காட்சியை என் கண்களால் பார்த்தேன்" என்று கூறிக் கதறிக்கொண்டே அழுவார், நடிப்பின் உச்சம்.
    சித்ராவின் சடலத்தை ரயில்பாதையில் கிடத்துமுன் அவர் படும் வேதனையைப் பாருங்கள். அன்பு மனைவியை கொன்று விட்டோமே என்று கழிவிரக்கத்தில் கண் கலக்குவார். சித்ரா மேஈது ரயில் ஏறும்போது அவர் முகபாவணையைப் பாருங்கள். என்ன ஒரு அதிர்ச்சி கலந்த வேதனை.
    பின்னர் தனது வாக்குமூலத்தைத் தொடருமுன் கைக்குட்டையை எடுத்து மூக்கை சிந்தித் துடைத்துக் கொள்வார், எந்த ஒரு நடிகனுக்கு தோன்றாதது மட்டுமல்ல, எந்த ஒரு நடிகருக்கு செய்யத் துணியாத செயல். அவர்தான் நம் நடிகர் திலகம்.
    "ஒண்ணு மட்டும் உறுதி, திட்டம் போட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ, அவளை கொலை செய்யனும்ங்கற நோக்கத்தோடயோ நான் கொல்லல" , ஒரு அழுகை - "ஆத்திரம் தாங்க முடியாம அடிச்சேன், அதுவும் ஒரே அடி, அந்த அடினால அவ நிச்சயமா செத்துருக்கவே முடியாது, கீழே விழுந்த அதிர்ச்சியால அவ இருதயம் மேலும் பலவீனப் பட்டு, அதனலாதன் அவ செத்துருக்க முடியும் இதுதான் நடந்தது, நான் சொன்னது அத்தனையும் உண்மை, என் தாயின் மேல ஆணையா அத்தனையும் உண்மை, ராஜு, டேய் ராஜு , இப்ப சொல்றா, அவ உன் தங்கச்சியா, என்று கேட்க ராஜு இல்லை என்று கூறுகிறார். பிறகு ஒவ்வொரிடமும் அது சித்ராவா என்று கேட்க அனைவரும் இல்லை என்று கூற சரோஜா தேவியிடம் சென்று அவரை அணைத்து கொண்டு, "லதா, என் கண்ணே, இப்ப புரிஞ்சுதா, இப்பவாவது என் மேல உனக்கு நம்பிக்கை வந்துச்சா? "குமார், என் நிக்கறே, இந்த துரோகிகளை அரெஸ்ட் பண்ணு, கமான் அர்ரெஸ்ட் பண்ணு"
    என்றவுடன் சரோஜா தேவி,
    "இன்ஸ்பெக்டர், கோபாலின் வாக்கு மூலத்தை பதிவு செஞ்சுட்டீங்க இல்லை, அவரை அரெஸ்ட் பண்ணுங்க' என்று சொன்னவுடன் திகைப்புடன் அவரது முகத்தை தன இரு கைகளாலும் ஏந்தி "லதா, நீயா இப்படி சொல்றே?" என்று கேட்டவுடன், சரோஜாவி தேவி தாங்கள் அனைவருமே துப்பறியும் இலாகாவை சேர்ந்தவர்கள், சிவாஜியின் மைத்துனர் கொடுத்த புகாரின் பேரில் அவரைப் பின் தொடர்ந்து வந்ததாகவும்\ , அவரது வாக்குமூலத்தை தவிர வேறு ஆதாரம் எதுவும் கிடையாது என்பதால் இவ்வாறு நாடகமாடியதாகவும் கூறியவுடன் " லதா, என்னை ஏமாற்ற உனக்கு வேறு வேடமே கிடைக்கவில்லையா, காதல்ங்கிற அந்த புனித வேடத்தை வைத்தா என்னை வீழ்த்திட்டே"? என்று கேட்டவுடன், சரோஜாதேவி அவர் காலில் விழுந்து தான் முதலில் அவரை உளவறியத்தான் வந்ததாகவும் பின் அவரது அன்பில் கட்டுண்டு அவரை காதலித்தாகவும் கூறி, எப்போது வந்தாலும் அவருக்காக காத்திருப்பதாக சொல்லுவார். அப்போது சிவாஜி மிக அமைதியாக "பெண்மையே வாழ்க, உண்மையே, உள்ளமே, உனக்கு நன்றி, போய் வருகிறேன்" என்று கூறி மெதுவாக நடந்து சென்று பியானோவில் "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்ற ஒரு வரியை வாசித்து முடிப்பதுடன் படம் நிறைவுறும். இயல்பான நடிப்பு வேண்டும் என்போர் இந்த காட்சியை பார்க்கவும். உச்சக் கட்டக் காட்சியில் ஒரு ஆர்ப்பாட்டமோ, கத்தலோ, கதறலோ இல்லாமல் நடித்திருப்பார் சிவாஜி. வேறு யாராவது இருந்திருந்தால் கத்திக் கதறி ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள்.
    முழுக் காட்சியையும் காண அதன் இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.














    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #294
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sundar Rajan added 3 new photos. · 5 mins

    அன்பு இதயங்களே,
    மதுரை மீனாட்சிபாரடைஸ் திரையரங்கில்
    5வது வாரமாக தொடரும்
    ராஜபார்ட் ரங்கதுரைக்கு,
    தொடர்ந்து ஆதரவளித்து வரும் ...
    நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள,
    பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.
    விபரம்
    மற்றும்
    புகைப்படங்கள் நாளை........
    இது டிரைலர் தான்....
    மெயின் நாளை.......


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #295
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #296
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #297
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சாய்சிவாஜி தேவன்


    என் தலைவன் சிவாஜி குறிப்பிட்ட இனத்திற்க்கு உரியவரும் இல்லை... மற்ற இனத்திற்க்கு விரோதியும் இல்லை... என் தலைவன் சிவாஜி முக்குலத்து சமுதாயத்தில் பிறந்து இருந்துதா...
    லும் ஒருபோதும் முக்குலத்து ஜாதி பெயரைச்சொல்லி அரசியலும் செய்யவில்லை இந்த முக்குலத்து ஜாதியை வைத்து ஆதாயமும் தேடவில்லை... என் தலைவன் சிவாஜி இந்த தேவர் சமூகத்திற்க்கு செய்த சேவைப்பற்றி என் தெய்வம் தேவர், மூக்கையாத்தேவரிடம் போய் கேளும் என் தலைவன் கொடைபற்றி சொல்வார்கள் கோரியப்பாளையம் தேவர் சிலைக்கு முதல் நபராக நிதி தந்தவன் சிவாஜி, ஆப்பனூரில் தன் சொந்த செலவில் தேவருக்கு சிலை நிறுவியவர் சிவாஜி. சென்னை பசும்பொன்தேவர் மண்டபத்திற்க்கு பெரும் உதவி செய்தவர் சிவாஜி... ஒரு இனத்திற்க்காக மட்டும்மல்ல இந்த இந்தியதேசத்திற்க்கு விளம்பரம்மின்றி வாரி கொடுத்த வள்ளல் என்தலைவன் சிவாஜி...சிவாஜி.... சிவாஜி By சிவாஜி பித்தன் சிவாஜி கே.எம்.ஜே.ஆர்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #298
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Shankar Muthuswamy
    ஒரு முறை தவில் வித்வான் வலயப்பட்டி சிவாஜியிடம் சொன்னார் ....
    நீங்கள் திரை உலகிற்கே ஒரு ரோல் மாடல் என்று.
    அதற்கு சிவாஜி கூறினார்
    எம் ஆர் ராதா, டி எஸ் பாலையாவுக்கு அடுத்தபடியாக என்று.
    என்ன ஒரு தன்னடக்கம் நம் நடிகர் திலகதிற்கு.....

    .................................................. ...............................

    நடிகர் திலகம் தன்னடக்கமானவர்
    சில நடிகர்கர்களை கவனித்தீர்களானால்
    திமிராக பதிலளித்திருப்பது தெரியும்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Likes Harrietlgy liked this post
  11. #299
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஆரவாரத்தோடு6வது
    வாரம்.நமதுநடிகர்
    திலகத்தின்ராஜபார்ட்
    ரங்கதுரை.மதுரை
    மீனாட்சிபாரடைஸில்....
    வெற்றிகொண்டாட்டம்.






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #300
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram






    அழகோ அழகு!




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •