Page 154 of 400 FirstFirst ... 54104144152153154155156164204254 ... LastLast
Results 1,531 to 1,540 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1531
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sukumar Shan

    சிவாஜி ஏன் உசத்தி? நாட்டிய பேரொளி பத்மினியின் பதில் !

    சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
    இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
    ‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
    1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.

    காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
    சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
    அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
    ‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
    பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
    சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
    இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
    ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
    சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
    நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
    சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும் .

    சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
    கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
    ‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
    சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
    சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
    ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
    ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
    அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ - பத்மினி.
    *
    கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
    முதல் பட விநியோகம், அமரதீபம்…
    முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
    இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
    தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
    ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
    சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
    என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
    ‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
    ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன் .

    ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
    1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
    ‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
    ‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
    நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
    18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
    எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
    வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
    பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
    என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
    கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ - பத்மினி.
    *
    தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. நவீனன் அவர்களுக்கு நன்றி .





    (முகநூல் பதிவு)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1532
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sukumar Shan.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-,

    ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்! நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார். பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.
    சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும். எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,
    ‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.
    தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள். ‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன். சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்
    விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி. அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது. மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்! அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.
    பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.. 'நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எப்போதும் தனது காட்சி முடிந்த உடன் அந்த இடத்தைவிட்டு போய் விடமாட்டார். அருகிலேயே நின்று, மற்ற நடிகர்களின் நடிப்பை பார்த்து அவர்களின் நடிப்பில், ஏதாவது குறைகள் இருந்தால் அதுபற்றி எடுத்து கூறுவார்' என்றும் சரோஜா தேவி கூறி இருக்கிறார். 'மனோகரா'வுக்குப் பிறகு கருணாநிதி, சிவாஜிகணேசன், டைரக்டர் எல்.வி.பிரசாத் ஆகிய மூவரும் இப்படத்தில் ஒன்று சேர்ந்தனர்.
    கதாநாயகி சரோஜாதேவி.கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களை, முதல் தடவையாக சரோஜாதேவி பேசி நடித்தார். 'எனக்கு என்ன அழகில்லையா, படிப்பில்லையா, பணம் இல்லையா? என்னை ஏன் திருமணம் செய்ய சம்மதிக்க மறுக்கிறாய்?' என்று சிவாஜி கேட்கும் கேள்விக்கு 'படிப்பில் நீமேதையாக இருக்கலாம். பணத்தில் நீ குபேரனாக இருக்கலாம், அழகில் நீ மன்மதனாக இருக்கலாம் ஆனால் என்னை மணக்கும் கண்ணியம் உன்னிடம் இல்லை!' என்று சரோஜாதேவி பதில் வசனம் பேசவேண்டும். ஆனால் ஒரே தடவையில் இந்த வசனத்தைப் பேச முடியவில்லை.உடனே, அவர் தயக்கத்தை போக்க சிவாஜி ஒரு யுக்தி செய்தார். சுற்றிலும் கூடியிருந்தவர்களை விலகிப்போகச் சொன்னார். 'தைரியமாகப் பேசு' என்றுஎன்னை உற்சாகப்படுத்தினார்.
    அதன்பின், ஒரே 'டேக்'கில் அந்தக் காட்சி 'ஓகே' ஆயிற்று. புதிய பறவை படம் பற்றி சொல்லவே வேண்டாம் . அவரின் சொந்த படம் .இன்று இந்தப் படத்தைப் புதிதாகப் பார்க்கும் இளைய தலைமுறை ரசிகர்களைக் கூட நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய படம். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’, ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி’ சிட்டுகுருவி முத்தம் கொடுத்து , ஆஹா மெல்ல நட , உன்னை ஒன்று கேட்பேன் உள்ளிட்ட பாடல்களாலும் கதை சொன்ன படம் ‘புதிய பறவை’.
    .
    என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்! சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள். ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது. காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும். அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.
    சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது. சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.
    ‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். ‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.
    ‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..! அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.
    சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார். சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’ ‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன். இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!





    (முகநூல் பதிவு)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1533
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vaannila vijayakumaran

    கம்பீரம்





    (முகநூல் பதிவு)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1534
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Nanjil Inba Mgs










    Nanjil Inba Mgs added 2 new photos. · Yesterday at 12:26

    அன்பான தோழர்களே
    வணக்கத்தை உங்களுக்காக
    18-11-20!7 சனிக்கிழமை மாலை
    6 மணியளவில் எஸ்.ஆர்.எம்.கலையரங்கத்தில் வைத்து நக்கீர் தமிழ் சங்கத்தின் சார்பில் அய்யன் சிவாஜிக்...கு தமிழ் இலக்கிய
    அறிஞர்கள் நடந்தும் இலக்கிய பரி வட்டம்
    பந்தள பதிப்பகம் சார்பில் நான் எழுதிய கலை மகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற நூல்களை குறித்து திறனாய்வு நடைபெறுகிறது...
    இளைய சமுதாயத்தினரோடு தமிழ் ஆளுமைகள் கைகோர்க்கும் இலக்கிய விழா சிவாஜி நேசிப்பு குழுமத்திற்கு புதுமையான நிகழ்வு...
    சிவாஜி ரசிகனே..
    இதனை அழைப்பாக நினைத்து கூடுகை செய்ய வா...
    அய்யன் சிவாஜிக்கு முதன்முதலாக கட்டப்படும் இலக்கிய பூந்தூவலுக்கு உன் கரமும் இருக்கட்டும்...
    காமராஜ் காலத்தில் ஜெயகாந்தன் நடத்திய இலக்கிய வீச்சு இன்று அய்யனுக்காக....
    வேற்றுமை மறந்து கூடுவோம் சிவாஜிக்காக
    இன்பா....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1535
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    kanchjpuram thyagarajan

    மலேசியாவில் சிவாஜி நிகழ்ச்சி நடைபெறப் போகிறது. ?? யாரெல்லாம் வருகிறீர்கள்? ?



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1536
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vaannila Vijayakumaran

    உங்களுக்குத் தெரியுமா?

    1960 களின் மத்தியில் சென்னை நகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை 49
    1964-ல் தமிழில் வெளியான நேரடிப் படங்கள் 35 மட்டுமே. அதில், நடிகர்திலகம் நடித்து வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 7. அதாவது, ஐந்தில் ஒரு பங்கு நடிகர்திலகம் நடித்தவை என்பது குறிப்பிடத்தக்ககது.
    கர்ணன், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, முரடன் முத்து, நவராத்திரி ஆகிய 7 படங்களில் 5 படங்கள் 100 நாட்களைக் கடந்தவை....
    ஆண்டவன் கட்டளை வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பினும், அடுத்தடுத்து வெளியான படங்களின் விதியால் 100 நாட்களை எட்டமுடியாமல் போய்விட்டது.
    நவராத்திரியுடன் இணைந்து தீபாவளிக்கு வெளியான முரடன் முத்து கிராமப் புறங்களில் வசூலில் வாகை சூடிய படமாகும்.
    சரி...விசயத்திற்கு வருவோம்.
    மேற்கண்ட 7 படங்களும், சென்னையிலிருந்த 49 அரங்குகளில், 15 வெவ்வேறான அரங்குகளில் திரையிடப்பட்டன.அதாவது, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு. அந்த 15 அரங்குகளில் திரையிடப்பட்ட 7 படங்களில், ஐந்து படங்கள் 11 அரங்குகளிலும் தினசரி 3 காட்சிகளில் 100 நாட்களைக் கடந்தன.
    இந்த சாதனை இன்றுவரை ஒரே ஆண்டில் வெளியான எந்தநடிகரின் படங்களும் ரெகுலர் காட்சிகளில், 11 அரங்குகளில் ஓடி முறியடிக்கவில்லை என்பது வரலாற்று உண்மை.
    மற்ற நான்கு அரங்குகளும் தன் பங்குக்கு எட்டு முதல் 12 வாரங்கள் ஐயனின் படங்களை ஓடவிட்டு அவரின் புகழுக்கு புகழ் சேர்த்தன.
    சென்னையைப் போலவே பிற ஊர்களிலும், அந்தந்த பகுதிக்கேற்ப இவ்வேழு படங்களும் வெற்றி நாட்களை எட்டின.
    சென்னை நகர வெற்றிப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ....
    1. சாந்தி கர்ணன் 100 நாட்கள்
    2. பிரபாத் கர்ணன் 100 நாட்கள்
    கைகொடுத்த தெய்வம் 100 நாள்
    3. சயானி கர்ணன் 100 நாட்கள்
    4. வெலிங்டன் பச்சை விளக்கு 105 நாட்கள்
    5. மகாராணி பச்சை விளக்கு 105 நாட்கள்
    நவராத்திரி 108 நாட்கள்
    6. ராக்ஸி பச்சை விளக்கு 105 நாட்கள்
    7. மிட்லண்ட் நவராத்திரி 101 நாட்கள்
    கைகொடுத்த தெய்வம் 105 நாள்
    8. சரஸ்வதி கைகொடுத்த தெய்வம் 100நாள்
    9. ராம் கைகொடுத்த தெய்வம் 100 நாட்கள்
    நவராத்திரி 108 நாட்கள்
    10. பாரகன் புதிய பறவை 133 நாட்கள்
    11. உமா நவராத்திரி 108 நாட்கள்
    ஆக, அன்றைக்கு தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரம் யாரென்றும், வசூல்மன்னன் யாரென்றும் நீங்களே விளங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, அன்றைய திரையுலகமும், அரங்குகளும், கலைஞர்களும் ஐயன் ஒருவரையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது என்பது கண்கூடு.
    ஆனால், அந்த ஒப்பற்றக் கலைஞனின் காலத்திலும், அதன் பின்பும் இந்தத் திரையுலகம் அவருக்கு நன்றியுடன் நடந்து கொண்டதா என்பது கேள்விக்குறி ..?
    வரலாறு இன்னும் புரட்டப்படும்.






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1537
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram









    அன்றைய இந்திய ஜனாதிபதி திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் அருகில் அமர்ந்து இருக்கும் நடிகர் திலகம்,
    நடனமாடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா,
    வரலாற்று நிகழ்வுகளை மறந்து விடுபவர்களுக்காக!

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1538
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan





    சிவாஜியின் "பட்டிகாடா பட்டணமா"
    sivajisivajisivajisivajisivajisivajisivajisivaji
    வில்லியம் ஷேக்ஸ்பியரின் "டாமிங் ஆஃப் ஸ்ரீவ்"
    (The Taming of the Shrew) நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக வைத்து பாலமுருகன் தமிழில் எழுத பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த "பட்டிக்காடா பட்டணமா" 1972 மே,6ஆம் நாள் கருப்பு-வெள்ளை படமாக வந்து கலக்கிய படம்.
    "கேட்டுக்கோடி உருமிமேளம்" பாட்டிற்கு இந்தளவு பாவனையுடன சிவாஜி ஆடிய ஆட்டம் எந்த நடிகர்களாளும் ஆடமுடியாது.
    அவருடைய ஆட்டம் மிரட்சியான சந்தோஷத்தை கொடுத்து நம்மையும் ஆடவைக்கும். அந்த வருடத்தில் அதிக வசூலுடன் 189 நாட்கள் ஓடி சாதனை செய்தது. வெள்ளிவிழா கொண்டாடிய் கடைசி கருப்பு- வெள்ளை படம். "அடி என்னடி ராக்கம்மா" பட்டி தொட்டி எங்கும் பரவியது.
    1973ல் தேசிய விருது பெற்ற சிறந்த படம்.
    1973ல் சிறந்த தமிழ் படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.
    இந்த படத்தை காமராஜருக்கு தனியாக திரையிட்டு காட்டப்பட்டது. "நம்முடைய நாட்டின் பாராம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உண்ணத கருத்தையும் மக்கள் எப்படி வாழவேண்டுமென உயரீய கருத்தையும் தெரிவிக்கின்ற சிறந்தப்படமென்று காமராஜர் பாராட்டினார்."
    நடிகர்திலகத்தின் நாட்டுப்புறத்தை சார்ந்த
    கதையமைப்பில் முதல் வியாபார ரீதியில் பெரும்பாலும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியை தந்தது.
    இந்த படத்தை பற்றி திரு தனஜெயன் அவர்கள் எழுதியது, இந்த படத்தின் அடிப்படை கரு நமது நாட்டின் பாராம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதும் பரவலான மக்களுக்கு கொண்டு சேர்பதாகும். இந்த படம் சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பெனும் ஆதாரத்தால்தான் இந்த படமே நின்றது. அவர் இரண்டுவிதமான வித்தியாசமான பாத்திரங்களையும் மக்களுக்கு திருப்திதரும்படி சித்தரித்து காட்டினார்.
    1972 ஜூன்,28 ஆனந்த விகடன் விமர்சனத்தில்
    "இந்த படத்தின் சிவாஜியின் ஆற்றல் மிகுந்த நடிப்புத்தான் முன்னிலை வகிக்கிறது. மிக அழகான வெளிப்புற படபிடிப்பு இல்லையென்றால், எப்போதையும்போல 'புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற கதைபோல் ஆகியிருக்கும்.
    மனோரமா, அவருடைய பாத்திரம் படத்தின் ஆரம்பத்தில் அருமையாக மதுரை வசனத்தை சரளமாக மிக அழகாக பேசுவது ரசிகர்களை கவரும்படியாக இருந்ததென 'தி ஹிந்து' பாராட்டியது.
    பெலுடூரி பாவா (Palletoori Bava) ( நாட்டுப்புற மருமகன்) 1973ல் தெலுங்கு மொழியில் மறுதயாரிப்பில் அக்கினேனி நாகேஷ்வரராவ், லட்சுமி நடித்தப்படம்.
    புட்டன்ஜா (Putnanja) (Kannada: ಪುಟ್ನಂಜ) கன்னட மொழியில் வீ.ரவிசந்திரன் மீனா நடித்து மறுதயாரிப்பில் வண்ணப்படமாக வெளிவந்தது.
    பனாரசி பாபு (Banarasi Babu) 1997ல் கோவிந்தா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஹிந்தி நகைச்சுவை படமாக வெளிவந்தது.
    இத்தனை மொழிகளில் வந்தாலும் யாரும் சிவாஜி அவர்களுக்கு இணையாக வைத்து பார்க்க முடியவில்லை.ஆரம்ப காட்சியிலேயே அம்பிகையே ஈஸ்வரியே என்ற பாடலுடன் நெருப்புச்சட்டியை கையில் ஏந்தி மூக்கையைனாக வரும் சிவாஜி ரசிகர்களின் கரவோசையையும் கற்பூர தீப ஆராதனையும் அள்ளிச்செல்லுவார். ஜெயலலிதா வந்த பிறகு சூடுபிடிக்கு ஆட்டம் சிலம்பாட்ட சண்டையில் தூள் கிளப்புவார், கவிஞர் கண்ணதாசனின் பாடல்களின் கருத்துக்களை சொல்லவும் வேண்டுமோ... "கேட்டுக்கோடி உருமி மேளம் ஆட்டம்" இன்றும் மறக்கமுடியாது "நல்வாழ்த்து நான் சொல்வேன்" எனும் பாடலுக்கு பட்டணத்து இளைஞனாக வந்து கலக்குவார். மொத்தத்தில் பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்கவைத்த ஓர் ஜனரஞ்சக படம். இன்றைக்கும் இதுபோன்ற படங்கள் எத்தனையோ வந்தாலும் சிவாஜி அய்யாவின் நடிப்பை யாரும் தொடமுடியாது போனது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும்.
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:


    .................................................. ....................................

    (முகநூல் பதிவு)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1539
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan

    · 13 November at 14:10 ·


    கை ரிக்ஷாவும் சைக்கிள் ரிக்ஷாவும்
    OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
    ரிக்*ஷாக்காரன்
    வெளியீடு மே 30, 1971
    1972-ஆம் ஆண்டிற்கான எம். ஜி. இராமச்சந்திரன்
    அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான 'பாரத்' இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது. (சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்)
    பாபு
    வெளியீடு அக்டோபர் 18, 1971
    மறு தயாரிப்பு என்ற காரணத்தினால் மிக சிறந்த நடிப்பு இருந்தும் விருதுபெற தகுதி இல்லாமல் போனவர். நடிக்கின்ற காலம் வரை சிறந்த நடிகருக்கான அங்கிகாரம் அளிக்காமல், இந்தியா தவறவிட்ட தலைசிறந்த நடிகர்?
    Gopal Sankar
    Face book November 13,2017
    ரிக்ஷாகாரன் திரைப்படத்திற்கு விருது கொடுத்த சமயம் துக்ளக் இதழில் ஒரு கேலிச்சித்திரம் வெளியானது சூரியனிலிருந்து அருவி விழும்
    ஒருவர் கூறுவார் இது என்ன அதிசயம் ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்கு விருது
    கிடைத்துள்ளது அதைவிடவா இது அதிசயம்.
    விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்!
    (அரசியல் பின்னனி என்ன?)
    Published Date: 3 NOVEMBER 2015 6:12PM
    கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மத்திய அரசை குற்றஞ்சாட்டி எழுத்தாளர்கள் பலர், தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்ற விருதுகளை திருப்பித் தந்து பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
    பொதுவாக கோபம் என்பது உணர்ச்சியை உடனே காட்டிவிடத் துடிக்கும் ஒரு உணர்வு. தேசத்தின் மீதான கோபம் எழும் போதெல்லாம், காந்தி மேற்கொள்கிற விஷயம் உண்ணாவிரதம். அடிப்படையில் அது அஹிம்சை வடிவம் என்றாலும், அதுதான் காந்தியின் உச்சக்கட்ட கோபம். இதை பின்பற்றித்தான் எழுத்தாளர்களும் தங்களுக்கு பெருமையளித்த விருதுகளை திருப்பித்தருவதும்.
    ஆனால் இவ்வாறு விருதுகளை திருப்பி அளிப்பதற்கு எதிரான விமர்சனங்களும் எழுகின்றன.
    இந்த நிலையில், சற்றேறக்குறைய 42 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவர், உள்ளுர் அரசியலில் உருவான ஒரு உஷ்ணமான சூழ்நிலையில், 'சிறந்த நடிகர்' என தனக்கு அளிக்கப்பட்ட பாரத் விருதை திருப்பியளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த நடிகர் எம்.ஜி.ஆர்.
    அதுசரி பாரத் பட்டத்தை திருப்பியளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை உஷ்ணத்திற்குள்ளாக்கிய விஷயம் என்ன...
    இதோ... எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.
    திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.3.73.
    மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
    கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.
    எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
    “பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”
    இந்த அறிவிப்பு 8.2.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
    “எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
    இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.
    இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
    தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.
    இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
    இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.
    ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
    இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.
    எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
    தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு
    தங்கள் அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்
    -எஸ்.கிருபாகரன்
    1972 அக்டோபர். எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானது.

    .................................................. ...............

    (முகநூல் பதிவு)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1540
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Jahir Hussain

    · 3 mins · Puduchattiram, India






    நண்பர்களுக்கு போட்டி வைத்து பல நாட்கள் ஆகி விட்டது..

    . ஒரு சிறிய காம்ப்படிஷன்..

    . இந்தக்காலத்திலே படங்கள் வருவதும் தெரியலே... போவதும் தெரியல...

    ஆனால் அப்போதெல்லாம பட ரிலீஸ்... ரீ ரிலீஸ்... அடுத்தடுத்த புதிய பிரிண்ட் போட்டு பொலிவுடன் புதுப் படங்கள் போல ரிலீஸ்..

    தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுப் படங்கள் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது வசந்த மாளிகை, தங்கப்பதக்கம், சிவந்த மண், திரிசூலம் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள்...

    கிராமங்களில் பண்டிகைக் காலங்களில் தியேட்டர்களில் பழைய படங்க...ளை போட்டு குறைந்த முதலீட்டில் நாலைந்து நாட்கள் ஹவுஸ்ஃபுல் ஆக படங்கள் ஓடி பணம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது..

    . தியேட்டர் முதலாளிகள், விநியோகஸ்தர்கள் என்று டாப் டூ பாட்டம் வரைக்கும் "வைரமுட்டைகள் இடுகிற பொற்கோழிகளாக" இருந்தன அந்தக்கால சினிமாக்கள்... மிக முக்கியமாக சிவாஜி சினிமாக்கள்..

    . அதுமட்டுமல்ல... பாடல்கள் பெரிய ஹிட் அடித்து கேசட்டுகளாகவும் ரெக்கார்டு பிளேயர்களாகவும் சி.டி வடிவங்களாகவும் பணத்தை வாரி குவித்தது வரலாறு... "வாராய தோழி வாராயோ" பாடலும் "நிகழும் பார்த்திபனாண்டு ஆவணித்திங்கள் 20ம் நாள்" என்று தொடங்கி தங்கள் நல்வரவை அன்புடன் நாடும் ரகுராமன்... என்ற வசன நடை பாடலாகட்டும் இசைத்தட்டுகளாய் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை... இப்படி ஒருபுறம் இருந்தாலும் "ஓடினாள் ஓடினாள்"... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்... "பொறுத்தது போதும் பொங்கி எழு"... "என் காதல் தேவதைக்கு நான் கட்டிய இந்த ஆலயத்தைப் பார்"... என்ற வனசங்களை கதையுடன் காட்சி விளக்கங்களுடன் அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட்டு வருமானம் வெளுத்து வாங்கிய காலமெல்லாம் உண்டு... இதையனைத்தையும் கடந்து சென்னை, கோவை இன்னும் தமிழகத்து வானொலி நிலையங்கள்... குறிப்பாக இலங்கை வானொலி நிலையம்... ஒலிச் சித்திரங்களாக பலநூறு படங்களை ஒலிபரப்பி வெற்றி கொண்டாடியது... அதில் பெரும் படங்கள் நம் ஐயனின் படங்கள்... இதெல்லாம் எமது நண்பர்களுக்கு அத்துபடி... போட்டி என்னவென்றால் ஒலிச்சித்திரத்தில் நீங்கள் மிகவும் ரசித்துக் கேட்ட சிவாஜி சினிமாக்கள் பற்றி கமெண்ட் அடியுங்கள்... இது போன்ற ஒலிச் சித்திரங்கள் கான்செப்ட் ஆக வைத்துதான் பிற்காலங்களில் வானொலி நிலையங்கள் தன் சொந்த நாடக ஒலி சித்திரங்ளைாக தயாரித்து ஒலி பரப்பினார்கள்... எத்தனையோ சிவாஜி சினிமாக்கள் ஒலி சித்திரங்களாக மின்னியது ... "பட்டிக்காடா பட்டணமா" படத்தின் ஒலி சித்திரத்தை குறிப்பிட்டு விவாத மேடையை ஓப்பன் செய்கிறேன்... மற்றதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்...



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •