Page 219 of 400 FirstFirst ... 119169209217218219220221229269319 ... LastLast
Results 2,181 to 2,190 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2181
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    courtesy amaran amaran f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2182
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2183
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் எங்க ஊரு சம்பந்தி.நாகைக்கு சம்பந்தியாக, உயர்திரு.நாராயணசாமிக்கு தன் மகள் சாந்தியை மணமுடித்துத் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார்.
    காவல் துறை அதிகா...ரி ஒருவர் வீட்டில் தான் நடிகர் திலகம் தங்கினார்.
    அந்த வீட்டில் இருந்து, ஒரு மாமன்னன் வீதி உலா வருவது போல் மேளதாலத்துடன், சிவாஜி, காடம்பாடி மாளிகைக்கு அழைத்து கொண்டு வரப்பட்டார்.
    மாலை சூட்டி எதிர்கொண்டு வரவேற்று, நாராயணசாமியும் அவருடைய சித்தப்பாக்களும் அழைத்து செல்கிறார்கள் சிவாஜி யை! திருமண வரவேற்பா! நடிகர் திலகத்துக்கு வரவேற்பா? இரண்டும் தான்!
    நாகையே மக்கள் வெள்ளத்தில் சிக்கி, திக்கு முக்காடியது, திணறியது! அலங்கரித்து, புதுமணப் பெண்ணாக வந்த சாந்தி,மாப்பிள்ளை கோலத்தில் இருந்த நாராயணசாமி, இருவரும் நடிகர் திலகம் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.
    ஆனந்த கண்ணீர் மல்க, அருமை மகள் சாந்தியை யும் நாராயணசாமியும் ஆரத் தழுவிக் கொள்கின்றார் சிவாஜி. பாசம் சங்கமித்த பரவச நிலை!
    தந்தையின் உணர்வுகளை நான் அன்று அவர் வடிவில் தரிசித்தேன்....மறக்க கூடிய காட்சியா அது???அவை யாவும் என் நெஞ்சில் பசுமை யாக பதிந்துள்ளது.
    பின்னர் வாஹினி ஸ்டியோவில், அரங்கு ஒன்றில், நவமணி நாளிதழின் துணை ஆசிரியராக, பத்திரிகையாளராக நுழைகின்றேன்.
    இவர் தான் நாகை தருமன் என்று, மதிஒளி சண்முகம் என்னை திலகத்திடம் அறிமுகம் செய்து வைத்தார்.
    அமர்ந்த சிவாஜி எழுந்து நின்கிறார், கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்.
    கை குலுக்குகிறார்,நீண்ட காலம் பழகிய நேசத்தோடு தோள் மீது கை போட்டு, அருகில் இருந்த நாற்காலி யில் அமர வைத்து,
    அதன்பின் அவர் உட்காருகின்றார்,என்றும் பணியுமாம் பெருமை, பணிவோடு இருப்பதும்,இனிய வார்த்தைகளை சொல்வதும் தான் பெருமைக்குரிய வர்களுக்கு பேரழகு!
    இவைகளை நடிகர் திலகத்திடம் கண்டேன்,
    கலையாக நிலையாக மக்கள் நெஞ்சில் நிறைந்து விட்ட இவர்,
    கலைத்தாய் சிகரத்தில் ஒளி வீசும் மணிமகுடம்!
    -பத்திரிக்கையாளர் நாகை தருமன்
    (பிலிம் நியூஸ் ஆனந்தனின் செவாலியே விருது விழா மலர்,22.4.1995)

    courtesy nadigarthilgam sivaji visirigal
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2184
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    காலத்தை வென்ற சிவாஜி படங்கள்.
    15-4-2018, ஞாயிறு "டைம்ஸ் ஆப் இந்தியா"
    இதழில், திருச்சி, பாரதி பாஸ்கர், துணத்தலைவர், மாவட்ட சிவாஜி மன்றம், பேட்டியுடன். படித்து மகிழ்வோம் !






    courtesy Sundaram viswanathan f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2185
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் , "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" என்ற இந்த பாடலுக்கு , இந்த படத்தின் இயக்குனர் A பீம்சிங் அவர்கள் என்ன நினைத்தாரோ என்னவோ, ஒரு காட்சியில், ஒரே முகம் வெவ்வேறு கோணத்தில், பாடலுக்கேற்ற மாதிரி வெவ்வேறு உணர்ச்சியில் ,அதுவும் ஒரே இடத்தில் வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தார் அவரது கற்பனையில் , அப்போது கிராபிக்ஸ் இல்லாத காலம் அது ...எல்லாமே manual சேர்க்கைதான் பிலிம் சுருள்களை வைத்து ......ஆனாலும் பிரேம் சரியாக இருந்தால் போதும்... ,உடனடியாக செய்துவிடலாம் என்று தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவனம் சொன்னவுடனே , 10 நிமிடம் direction ,10 நிமிடம் framing ...முடிந்து விட்டது ...........எப்படி சாத்தியம் ஆயிற்று இது ? நான் எதோ ஒருநாள் வீணாகிவிடும் என்று கவலைப்பட்டேன்டா பீமு என்றாராம் மெய்யப்ப செட்டியார் குடும்ப சகிதம் saravanan ... ..பீம்சிங் சொன்ன ஒரே பதில் கணேசன் இருக்கும்போது நான் ஒரு நடிகரை பற்றிய கவலையை விட்டு விட்டு framing மட்டும்தான் பார்ப்பேன் , காரணம் , சிவாஜி கணேசன் மீது உள்ள நம்பிக்கையோ இல்லை என்னவென்று தெரியவில்லை , அவரது ஒவ்வொரு நாடிதுடிப்பும் கேமரா முன்னால் யாரையும் ஏமாற்றாது இயன்றவரை வாரிக்கொடுக்கும் அவரது நடிப்பு என்ற ஒரே காரணத்தால்தான் என்றார் பீம்சிங்.... .. நினைத்ததை விட மிக அருமையாக செய்துவிட்டார் .முதலில் சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்றார் பீம்சிங் .......................மெய்மறந்த பதிவுகள்.....See more


    courtesy Edwin prabaharan f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2186
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இலங்கையின் அன்றைய வானொலி நிலைய வர்ணனையாளர் அப்துல் ஹமீது கூறுகிறார்,,,,,
    'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்று தான் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன்.
    கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், கடலை எதிர்நோக்கி இருந்த உப்பரிகை போன்ற பகுதியிலே நிலா வெளிச்சத்திலே அவர் அமர்ந்திருந்தார்.
    அவரை நெருங்கி...'வணக்கம் அண்ணா...'என்று நான் சொன்னதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு 'வணக்கம் கேப்டன் சாம்பசிவம்' என்று அவருக்கே உரிய பாணியில் என்னை வரவேற்றார்.
    கேப்டன் சாம்பசிவம் என்பது இலங்கை வானொலியில் ஒரு வருட தொடராக நான் தயாரித்து வழங்கிய ஒரு வீடு கோயிலாகிறது என்ற நாடகத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் .
    அந்தப் பாத்திரத்தின் பெயர், நடிகர் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதை அறியும்போது சொல்லொணா மகிழ்ச்சியும், அதே சமயம் ஒரு வித நடுக்கமும் என்னுள் பரவியது.
    அவர் சொன்னார்...
    என் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நானும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுது போக்காக இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டேன்.
    தற்செயலாக உங்கள் ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தையும் கேட்டேன்.
    அந்த நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தவறாமல் கேட்கத் தொடங்கினேன்.
    அதிலும் நீங்கள் ஏற்று நடித்த கேப்டன் சாம்பசிவம் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.
    அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.
    ஒரு குடும்பம் ஒற்றுமையாக ஒரு கூட்டுப் பறவைகளாகத் திகழ வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை.
    நடிப்புலகில் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அவர், தன் குடும்பத்துத் தலைமுறைகள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார்.
    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.
    நடிகர் திலகம் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.
    அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது எனது மகனுக்கு ஒரு வயது தான்.அவனைத் தன் மடியிலே வாங்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன ? என்று கேட்டார்..
    சிராஜ் என்று சொன்னேன். அவர் உடனே சிராஜூதீன் தவுலா என்ற வரலாற்று வீரனின் பெயரைக் குறிப்பிட்டு அவனை உச்சிமோந்தார்.
    பின்பு, 21 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது அதே பெயரைச் சொல்லி என் மகனை வரவேற்றார்.
    நடிப்புலகில் பலருக்கு நடிப்புக் கல்லூரியாக இருக்கும் கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு :
    உலகப் புகழ்பெற்ற நடிக மேதைகளில், ஓவர் ஆக்டிங், அண்டர் ஆக்டிங் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடிப்பு... என தனித்தனிப் பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு.
    ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே சிவாஜி ஒருவர் தான்.
    நடிகர் திலகம் அவர்களுக்கு பாரதத்தின் பெருமை மிக்க தாதா சாகிப் பால்கே விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பிரெஞ்சு அரசின் செவாலியே விருது அனைத்தும் வழங்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தை முந்திக் கொண்டு இலங்கையில்தான் முதல் மரியாதை விழா எடுத்தோம்.
    அந்த விழா அமைப்புக்குழுவி
    லே நானும் இடம் பெற்றிருந்தது எனது பெரும் பாக்கியம்.
    இனப் பிரச்சனையால் சிதறுண்டு போயிருக்கும் அந்த நாட்டிலே, கலைக்கு இன மத மொழி பேதம் கிடையாது என்பதை நிரூபிக்கின்ற வகையில், காமினி பொன்சேகா முதற்கொண்டு சிங்களப் படவுலகின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.
    சிவாஜி மன்னன் அணிந்த மணியைப்போல் முழுக்க முழுக்க தங்கத்திலே செய்து விழா மேடையில் அவருக்குச் சூட்டினோம்.
    அந்த கௌரவத்தை பார்த்ததும் நடிகர் திலகம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். சபையோருக்கும் மெய்சிலிர்த்தது.
    அதன் பிறகு -சிங்கப்பூரில் சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மாபெரும் அரங்கிலே அந்த மகத்தான கலைஞனுக்குப் புகழாரம் சூட்டும் பெருவிழா நடைபெற்றபோது அதைத் தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
    அதே மேடையில் தனக்கே உரிய கம்பீரத்துடனும் சாந்தம் தவழும் புன்னகையுடனும் வந்து நின்ற நடிகர்திலகம்...கோடிக்கணக்கான ரசிக நெஞ்சங்கள் வழங்கிய நல்லாசியும், இறைவன் அருளும்தான் என்னைக் காப்பாற்றின.. என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
    அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஒவ்வொரு பிரமுகரையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவிக்கும்போது
    ...இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து என்னை கௌரவிக்க மேடைக்கு வந்திருக்கும் இலங்கை நண்பன் அப்துல் ஹமீதின் அன்பை என்னவென்று சொல்வேன்... என்று சொன்னார்.
    நான் உருகிப் போனேன்.
    நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணி நேர தமிழ் சாட்டிலைட் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டன.
    சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் ஆரம்பித்து, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வழங்க வேண்டியதாயிற்று.
    ஒரு கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு நேர்முக வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தேன்.
    ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா போன்றவர்கள் மட்டுமன்றி விஜய் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே அப்பா.. அப்பா என்று அழைத்துக் கதறிய காட்சி என்னை மேலும் நிலை குலைய வைத்தது,,,,,






    courtesy Krishmoorthy. G-. f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2187
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2188
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2189
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தெற்கு போக் ரோடு வழியாக காரில் சென்று கொண்டிருந்த மேற்கு வங்க முதல்வரிடம் காரில் அருகில் அமர்ந்திருந்தவர் இதுதான் நடிகர் சிவாஜிகணேசனின் வீடு என்று சொல்ல, உடனே வண்டியை நிறுத்துமாறு உத்திரவிடுகிறார். முன்னாலும் பின்னாலும் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி இறங்கி ஓடி வருகிறார்கள். அவர்களிடம் நான் சிவாஜியை சந்திக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூற , நிகழ்ச்சி நிரலில் இல்லாத இடத்துக்கு எப்படி போக முடியும் என்று ச...ொல்ல அதெல்லாம் எனக்குத் தெரியாது இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் அவர் தான் பிறந்த நாட்டிற்க்கும், மாநிலத்திற்கும் உலக அளவில் புகழ் தேடித் தந்த அவரை காண இப்போது விட்டால் எனக்கு இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கூற, அன்னை இல்லம் நோக்கி அதிகாரிகள் பறந்தனர். அய்யனும் அன்று இல்லத்தில் இருந்தார்.விஷயத்தை சொன்னதும் அன்னை இல்லம் பரபரப்பானது. ஜோதிபாசுவை வரவேற்க அய்யன் இல்லத்தின் வாசலுக்கு விரைந்தார். வாசலிலே காரை நிறுத்தி, இறங்கி நடந்தே வந்தார் மேற்கு வங்க முதல்வர். அவரை அன்னை இல்லத்து உறவுகள் சகல மரியாதைகளோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.அய்யனோடு சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் அளவளாவிக் கொண்டிருந்தார் முதல்வர்.கட்சிக்கார்கள் அய்யன் கட்சி அலுவலகம் கட்ட செய்த பண உதவியை சொல்ல முதல்வரும் அய்யனும் நெகிழ்ந்து போனார்கள். விடை பெறும் நேரத்தில் முதல்வர் ஜோதிபாசு அய்யனை தன்னோடு அலுவலக திறப்பு விழாவிற்கு வரும்படி வேண்டினார். அய்யனும் அவரோடு சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது கூடுதல் தகவல். எல்லோருக்கும் நல்லவர் நம்மவர். அவர் போல் ஓர் உயர்ந்த மனிதனை காண்போமா பாரினிலே. வாழ்க அய்யன் புகழ்





    courtesy Lakshmanan Lakshmanan-. f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2190
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    உங்களுக்குத் தெரியுமா ...?
    1956 ல் சென்னை மாநகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 34.
    அதில் 22 திரைகளில் இரண்டுமாத காலத்திற்கு அய்யனின் திரைப்படங்களே ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா....
    உண்மைதான்.
    சென்னையின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரின் திருமுகமே அரங்குகளில் நிழலாக இருந்தது. மிச்சமிருந்த இடங்களில்தான் மற்றவர்களின் படங்கள் ஓடின....
    அந்த வரலாற்றுப் பட்டியல் உங்கள் பார்வைக்காக...
    1. 14:01:1956 நான் பெற்ற செல்வம்
    பாரகன் / உமா/ ராஜகுமாரி/ கிருஷ்ணா
    2. 14:01:1956 நல்லவீடு
    கெயிட்டி / காமதேனு / மகாலட்சுமி/
    மகாராணி
    3. 25:01:1956 நானேராஜா
    அசோக்/ சன் / கபாலி / முருகன் /
    பிரைட்டன் / நூர்ஜகான்
    4. 03:02:1956 தெனாலி ராமன்
    நியூகுளோப் / ஸ்டார் / ராக்ஸி / கிரவுன்
    5. 17:02:1956 பெண்ணின் பெருமை
    காசினோ/ பிராட்வே / மகாலட்சுமி
    6. 25:02:1956 ராஜா ராணி
    வெலிங்டன் / உமா / கிருஷ்ணா
    இவற்றில் எல்லா திரைப்படங்களும் அன்றைக்கு 5 வாரங்களுக்குக் குறையாமல்
    ஓடியது என்பதே வசூலுக்கான சாட்சி.
    இதில் அதிசயம் என்னவெனில், அய்யனின் இந்த ஆறு படங்களும் 1956 ஜனவரி 14 ல் இருந்து 1956 பிப்ரவரி 25க்குள்,
    வெறும் 41 நாட்களில் வெளியாகி உள்ளன என்பதுதான்.
    மேலும், 1956 ல் தமிழ் சினிமாவில் வெளியான மொத்த நேரடித் திரைப்படங்கள் 33. அதில் நடிகர்திலகம் நடித்தவை 9. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு.
    இதையெல்லாம் படித்தப்பின்பு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்குமே...!?
    அன்றைக்கு நடிகர்திலகத்தைத் திரையுலகிலிருந்து ஒழித்தேத் தீரவேண்டும் என்று எதிரிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள் என்ற ரகசியம்.
    இத்தகைய அளப்பரிய சாதனைகளை யெல்லாம் இன்றைய மீடியாக்களின் காதுகளில் யார் போய் சொல்வது?








    courtesy vaannila vijayakumaran f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •