vaannila vijayakumaran

மிக்க நன்றி விஜய் சேதுபதி அவர்களே...

கேள்வி:

நடிகர்திலகம் சிவாஜி கணேசன், அவரது படங்கள், அவருடைய நடிப்பு...?...
-எஸ்.ஜெரினா, ஆலந்தூர்.

விஜய் சேதுபதி பதில்:

"நடிகர்திலகம் சிவாஜி சார் மாபெரும் கலைக் களஞ்சியம்! நடிப்பை அவர் அளவுக்கு கொண்டாட முடியுமா தெரியலை.
அவர் அதை மகிழ்ந்து கொண்டாடுவார்.
உடம்பில் உயிர் போல நடிப்பு அவரிடம் இருந்தது. ஸ்க்ரீன்ல வந்துட்டா, 'இதுல என்னைவிட பெட்டரா யாரும் பண்ணிட முடியாது'னு புரூப் பண்ணிட்டு போவார், உடன் நடிப்பது யாராக இருந்தாலும்.
எனக்கு அவருடைய பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆண்டவன் கட்டளை,தெய்வமகன் என்று பல படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவர் வாழ்ந்திருப்பார்.
ஒவ்வொரு படத்திலும் தன்னை தன் நடிப்பை புதுசு புதுசா அறிமுகப்படுத்துவார். அவருடைய சாயல் இல்லாமல் எந்த நடிகரும் நடித்துவிட முடியாது.
அவருடைய 'ராஜபார்ட் ரங்கதுரை' பிரமாதமான படம். அப்படியொரு செமயான ஸ்கிரிப்ட் அது.
படத்துல அவர் நடிகராயிருப்பார். அவர் (வாழ்க்கையிலே) சந்தோஷமாயிருக்கும்போது நாடகத்திலும் சந்தோஷமான காட்சிகள் வரும். அவர் சோகமாயிருக்கும்போது சோகமான காட்சிகள் நாடகத்தில் வரும். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்ஒரு மூட்ல ரிப்பீட் ஆகும். அன்னைக்கு அந்த ஸ்கிரிப்டை ஹேண்டல் பண்ணுண விதம் அவ்ளோ பிரமாதம்.
நடிகனின் வாழ்க்கையும் சினிமாவும் ஒண்ணுதான் என்பதுபோல சந்தோஷமும் சோகமும் ரிப்பீட்டா வருது. ஒரு நாடகக் கலைஞனின் வாழ்க்கை கண்முன் நடப்பது மாதிரி உணர வைக்கும்.
ஒரு கட்டத்துல ரங்கதுரை எல்லாத்தையும் இழந்து நாடகத்தை இழுத்து மூடிவிடுவார்கள். மக்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து நாடகம் தொடங்கச் சொல்கிறார்கள். நாடகம் தொடங்கும்.
"டூபீ - நாட் டூபீ- வாழ்வதா - வீழ்வதா?"
அந்த கட்டத்துல அவர் இருப்பார். வாழ்வின் ஒவ்வொரு சிச்சுவேஷனையும் அந்த நாடகம் பிரதிபலிக்கும். முடிவும் அப்படியிருக்கும். செமயா பண்ணியிருப்பார்.
'தில்லானா மோகனாம்பாள்' அதுவும் அப்படியொரு செமயான படம்தான். அந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படத்துல நிறைய வில்லன்கள் வருவார்கள். ஆனால் டைரக்டர் வில்லனாக காட்டியது சிவாஜிசாரின் ஈகோவை. அந்த ஈகோ ஒரு சீன்ல உடையும்.
அந்த ஆஸ்பிடல் நர்ஸ் அவர்மீது கொண்டிருக்கும் மதிப்பைச் சொல்லி அவரது ஈகோவை இடித்துத் தள்ளுவார். அப்போது அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார்.
புதிய பறவை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்னு சொல்லிட்டே போகலாம். அவர் ஒரு டிக்ஷனரி. நீங்க என்ன பண்ணாலும் ரெஃப்ரன்ஸ் இருக்கும்."
நன்றி: குமுதம் 29:06:2016 இதழிலிருந்து




courtesy nadigarthilagam sivsji visirigal