Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திமுக கட்சியில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருமுறை திருப்பதி சென்று பெருமாளை வழிபட்டு வந்தார்.* *திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் தி.மு.க. வினர்.*
    *அவருடைய எல்லா போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.*
    அவரை திட்டமிட்டு *(திமுகாவை விட்டு வெளியேற்ற வேண்டும்)* என்று தாக்கிய காட்சிகள்
    அது பற்றி சிவாஜி கணேசன் கூறியது உங்களுக்காக...
    *(புஸ்தகம் : எனது சுயசரிதை – சிவாஜி கணேசன் / பக்கம் 130 -136)*
    *"நான் திராவிடக் கழகத்திலோ, திராவிடமுன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை.*
    *பெரியாருடைய கொள்கைகளையும் அண்ணாவுடைய கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன்.*
    *அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக் கொண்டேனே தவிர, கட்சியில் நான் உறுப்பினராக இருந்ததில்லை.*
    *எனது குடும்பம் தேசபக்தி உள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள்.*
    *அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர்.*
    *மேலும் குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிகுந்தவர்கள்.*
    இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை.
    *சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டது.*
    *அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.*
    *’புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூல் செய்து தாருங்கள்’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள் (1956).*
    *அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு சேலத்தில் படப்பிடிப்புக்காக நான் சென்றுவிட்டேன். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.*
    அப்போது அண்ணா அவர்கள் *யார் அதிகமாகப் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அவரது கையால் தங்கசங்கிலி வழங்குவதாக ஒரு பாராட்டு விழா வைத்தார்.*
    நான் சேலத்திலிருந்து எனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு *‘இன்று விழா நடக்கிறது யாராவது அழைப்பு கொடுத்தார்களா?’* என்று கேட்டேன். *‘இல்லையென்று’ கூறினார்கள் என் தாயார்.*
    *உடனே அந்த நேரமே சேலத்தில் இருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன்.*
    *விழாவிற்காக என்னைக் கூப்பிட வருவார்கள் என்று வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கூப்பிட வரவில்லை.*
    *மாலை ஆறு மணி அளவில் பாராட்டுக் கூட்டம் நடக்கிறது.*
    *அப்பொழுதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்தக் கூட்டத்தில் மேடையேற்றி அண்ணா கைகளால் தங்கசங்கிலி வழங்கி கௌரவிக்கிறார்கள்.*
    *மற்ற எல்லாரையும் விட அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான்.*
    *என்னை Sideline செய்து எம்.ஜி.ஆர்ரை உயர்த்தினார்கள்*
    *ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களை அந்தக் கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.*
    *இந்த நிகழ்ச்சியால் பல நாட்கள் நான் வருத்தமாக இருந்தேன். ஒரு நான் என்னுடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார்.*
    *அவர் என்னிடம் வந்து, ’சிவாஜி பாய், ஏன் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள் திருப்பதி போய் வரலாம்’ என்றார்.*
    *நான் ‘சாமி கும்பிடும் மனோநிலையில் இல்லை. எனக்கு எதற்கு திருப்பதி’ என்றேன். நான் கோவிலுக்குள் அதிகம் போனதில்லை.*
    *ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.*
    *அப்போது பயங்கர மழை. சாலை முழுவதும் வெள்ளம் இருந்தாலும் எப்படியோ திருப்பதி சென்றடைந்தோம்.*
    *நான் திருப்பதியிலிருந்து மாலையில் சென்னை வந்தேன்.*
    *‘நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்’ என்று தினத்தந்தியில் தலைப்புச்செய்தி வந்தது.*
    வரும்போழுது ரோடு முழுவதும் பார்த்தால் என்னைப் பற்றி *‘திருப்பதி கணேசா கோவிந்தா’... திருப்பதி கணேசா கோவிந்தா..* என்று சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.. *என்னை மிக கடுமையாக திட்டி, விமர்சனம் செய்து எழுதியிருந்தார்கள்…*
    *நான் அந்த வாசகங்களை யெல்லாம் படித்துக் கொண்டே வந்தேன்.*
    அப்பொழுது பீம்சிங் கூறினார். *‘கவலைப்படாதே கணேசா, அப்படித்தான் எழுதுவார்கள், நீ புகழுடன் இருப்பது திமுகாவில் சிலருக்கு பிடிக்கவில்லை நீ உயர்ந்த நடிகன், எதைப்பற்றியும் கவலைப்படாதே’* என்றார்.
    *யார் ‘திருப்பதி கணேசா கோவிந்தா’ என்று எழுத வைத்தார்களோ அவர்களுடைய மனைவி மற்றும் வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்போது திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக் கிறார்களே. எல்லாமே போலியாக இருக்கிறது.*
    *என்றைக்கு என்னைக் கேலி செய்தார்களோ அன்றே திருப்பதி ஆண்டவன் கண்விழித்துப் பார்த்து அருள்புரிந்துவிட்டார்.*
    *நான் நடித்த படங்களெல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ’மக்களைப் பெற்ற மகராசி, வணங்காமுடி, தங்கமலை ரகசியம், அம்பிகாபதி, உத்தமபுத்திரன்’ போன்ற படங்கள் அப்போதுதான் வெளிவந்தன."*
    *இவ்வாறு சிவாஜி கனேசன் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்..*
    பின்குறிப்பு
    சிவாஜி கனேசன் சாதாரண நடிகராக வாழ்ந்த ஆரம்ப காலத்தில்,
    *தி.மு.க. வினர் திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் . அவருடைய போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.*
    *ஆனால் கடவுள் எதிர்ப்பிலும் அவர்களுக்கு உறுதி இல்லை.*
    *பத்து வருடங்களுக்குப் பிறகு ‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் முருகனாக நடித்தார்.*
    *திராவிட முன்னேற்றக் கழகத்தாரிடமிருந்து முக்கல் இல்லை; முனகல் இல்லை; முணுமுணுப்புகூட இல்லை; ஏனென்றால் எம்.ஜி.ஆர். அப்போது வளர்ந்துவிட்டார்.*
    *வலியோரை வாழ்த்துவதும் எளியோரை தாழ்த்துவதும் இந்த திமுக கட்சியினரின் வழக்கமல்லவா?*
    *(க.சுப்பு அவர்கள் எழுதிய திராவிட மாயை என்ற நூலில் இருந்து ..)*


    நன்றி vasudevan முகநூல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •