Page 52 of 400 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #511
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

    கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

    எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

    சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

    ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

    இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

    பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #513
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய் மாயை

    கூடவே இருந்த அடியாட்களின் பொய்கள் சரித்திரமாகாது.அவரால் பயனடைந்தவர்கள் சொல்லும் பொய் பசப்புகள் உண்மையாகி விடாது.

    நாங்கள் சொல்வது, இன்றும் சாட்சியிருக்கும் படங்கள் வாயிலாக அவரின் அபார நடிப்பு திறன் ,அவரின்பட உலக சாதனைகள் அதுவும் உலக அளவு கோலில் வைத்து கூறுகிறோம்.

    .இத்தனைக்கும் எங்களில் பலர் அவரை பார்த்ததோ பலனடைந்ததோ இல்லை.

    கட்சியின் பிம்பம் எதையும் காக்க அவர் மாயையை காக்கும் பொய்களை பரப்பும் அவசியம் இல்லை.

    உண்மையான சாதனையை பொய் அரசியல் தகர்த்து விட முடியாது. கர்ணனின் சாதனைக்கு முன்னே மத்திய கிழக்கு நாட்டின் பணத்தை கொண்டு பதிவு செய்து ஓட்ட பட்ட பொய்கள் நிற்காது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #514
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #515
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From today's Junior vikatan.



    பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுடைய திரைக்கதை, ‘அந்திமந்தாரை’. அந்தப் படத்தில் சிவாஜி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் பாரதியின் ஆசை. அதனால், ஒருநாள் காலை சிவாஜி சாரைச் சந்தித்துக் கதை சொன்னேன். தியாகி பென்ஷன் வாங்க விரும்பாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் எதிர்கொள்ளும் அவமானங்கள்தான் கதையின் மையம்.

    திருமணம் செய்துகொள்ளாததால், அண்ணன் மகன் வீட்டில் இருப்பார் அந்தத் தியாகி. வருமானத்துக்கு வழி இல்லாத அவர், அந்தக் குடும்பத்துக்கு ஒரு சுமையாகத் தெரிவார். இந்த நேரத்தில் சென்னைக்கு ஜனாதிபதி வருவார். ‘சுதந்திரப் போராட்டத்தின்போது ஜனாதிபதியும் நானும் ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள்’ என ஏற்கெனவே சொல்லியிருப்பார் அந்தத் தியாகி. மருமகள், ‘‘ஜனாதிபதியைச் சந்தித்து உங்கள் தியாகி பென்ஷனுக்கு வழி பண்ணுங்கள்’’ எனச் சொல்வாள்.

    ஜனாதிபதியைச் சந்திக்க அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வாசலில் காத்திருப்பார். அப்போது வரும் கலெக்டர், ‘யாரோ பெரியவர் நிற்கிறாரே’ என விசாரிப்பார். ‘‘நானும் ஜனாதிபதியும் நண்பர்கள்’’ என்ற தகவலைச் சொல்வார் தியாகி. கலெக்டர் உள்ளே சென்று, ‘‘கோபாலகிருஷ்ணன் என ஒருவர் உங்களைத் தெரியும் என வந்திருக்கிறார்’’ என்பார், ஜனாதிபதியிடம்.

    ‘‘கோபாலா வந்திருக்கிறான்?’’ என ஜனாதிபதியே எழுந்து ஓடிவந்து வரவேற்பார். இருவரும் வெகுநேரம் பேசுவார்கள். பேச்சின் இடையில் தன் தியாகி பென்ஷன் பற்றிக் கேட்கலாம் எனக் காத்திருப்பார் கோபாலகிருஷ்ணன். ஆனால், ஜனாதிபதியோ, ‘‘நீ எங்கே இருக்கிறாய் எனத் தேடினேன். தியாகி பென்ஷன் பட்டியலையும் வாங்கிப் பார்த்தேன். அதில் உன் பெயர் இல்லை. தியாகத்துக்கெல்லாம் பென்ஷன் வாங்குகிற ஆள் நீ இல்லை என எனக்குத் தெரியும்’’ என்பார் பெருமையாக. அதன்பிறகும் தன் பென்ஷன் பற்றிப் பேச முடியுமா? எதுவும் கேட்காமல் திரும்பிவிடுவார். மருமகள் மேலும் திட்டித் தீர்ப்பாள்.

    படத்தின் முடிவில் கோபாலகிருஷ்ணன் சாலை ஓரத்தில் அநாதைப் பிணமாகக் கிடப்பார். ‘அமைச்சர் வருகிற நேரத்தில் இந்தத் தொல்லை வேற’ என அவரை லாரியில் ஏற்றி குப்பைமேட்டில் கொண்டு போய் போடுவார்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது அவரால் காதலிக்கப்பட்டவர், அவரை அந்தக் குப்பை மேட்டில் தேடித் தேடி அலைந்து, அவரும் அங்கேயே இறந்துபோவார். இந்தக் கதையை சிவாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சில சமயங்களில் கண்கலங்கினார்.

    கதையை முழுதுமாகக் கேட்டு முடித்துவிட்டு, ‘‘வேண்டாம்பா... என்னாலேயே தாங்க முடியலை. நான் நடிச்சா உங்க கதையை இன்னும் சோகக் காவியமாக்கிடுவேன். ஜனங்க தாங்க மாட்டாங்க’’ என சிவாஜி நடிக்க மறுத்துவிட்டார்.

  7. #516
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part II

    கட்டுரையில் எழுத்தாளர் 100 நாட்கள் ஓடாத படங்களில்
    பந்துலு எம் ஜீ ஆரை வைத்து எடுத்தபடங்களின் பட்டியலை
    எழுதியதில் ஏற்பட்ட தவறு
    ர பொலிஸ் 100 நாட்கள் ஓடியதை மறைக்கும் எண்ணமும் இல்லை

    உள்ளதை ஒப்புக்கொள்ள தயங்கவும் இல்லை தயக்கமும் இல்லை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #517
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பக்கத்துஊர்காரன் ஏதாவது சாதனை செய்தால்
    பாராட்டும் ஒருவன் அதே சாதனையை பக்கத்து வீட்டுக்காரன்
    செய்யும் பொழுது பொறாமை கொள்கிறான்.....
    65 ஆண்டுகளுக்குமுன் நடந்தது னன்ன?..... தொடரும்.......
    Last edited by sivaa; 5th July 2017 at 08:53 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #518
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லாம் உனக்காக- 1961

    நடிகர்திலகம் நடிப்பின் பாணி stanislavsky /Meisner விதத்தில் அமைந்த 58 முதல் 61 வரை வந்த படங்களில் ultimate method acting with ultimate underplay என்ற பாணியின் உச்சம் எல்லாம் உனக்காக.இந்த படத்தின் தலைப்பே அவரை சார்ந்தது இல்லை. எப்போதுமே ஒரு அழகான வங்காள கதை ,வசனம் எழுத கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,தேர்ந்த இயக்குனர் சுப்பாராவ்,தோதான பரிசோதனைக்கு சரவண பவ யூனிட்டி பட நிறுவனம் ,போதாதா நடிகர்திலகத்துக்கு?

    1952 முதல் 1964 வரை பல புதுவிதமான சிக்கலான கதையமைப்புகள்,வித விதமான பாத்திர படைப்புகள்,விதவிதமான நடிப்பு பாணிகள் என்று பல பரிசோதனைகள் என்று செய்தும் வியாபார ரீதியாக நெருங்க முடியாத உயரத்திலும், உலக அளவில் அவரை கொண்டாடி கொண்டும் இருந்த போது ,அவரது போட்டியாளர்கள் ஹிந்தியில் இருந்தது போல ஆரோக்கியமான போட்டி சூழ்நிலையை உருவாக்கவில்லை. அரசியலை படங்களில் வலிய திணித்தல் ,தனி மனித பொய் பிம்பத்தை உருவாக்குதல், நாலாந்தர படங்கள் ,சூழ்ச்சி மூலம் போட்டியாளருக்கு சங்கடம் விளைவித்தல் போன்ற மோசமான சூழ்நிலையில்தான், தன்னுடைய மேதைமை,கடின உழைப்பு,அபார திறமை, போதிய கவனம், இவற்றினால் நடிகர்திலகம் தன்னுடைய நல்ல வித்தியாச பட பேராசைகளை தணித்து, படித்த பாமர மக்களை தன்னிடமே குவித்து எல்லா வருடங்களிலும் தன்னுடைய படங்களே வசூலிலும் முந்தியிருக்க செய்தார். சுருங்க சொன்னால் தமிழின் 65 முதல் 70 சதவிகித வியாபாரம் நடிகர்திலகம் படங்கள் மூலமே நிகழ்ந்தன.
    பராசக்தி வசனம் போல அழுக்குகளை ஜீரணித்து தடாகத்தை அழகாக வைத்து கொண்டார்.

    எல்லாம் உனக்காக எல்லாவற்றிலும் வித்தியாச படம்.செல்வந்தர் வெங்கடாச்சலத்தின் ஒரே செல்வ மகள் சரளாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கும் போது சந்தர்ப்ப வசத்தால் விபத்தில் கால்களின் செயல்திறனை இழக்கிறாள்.ஒரு மருத்துவர் சோதனைக்கு பிறகு ஒரு வினோதமான சூழலில் இந்த மாதிரி ஒரு நோயாளி ,கல்யாணம் செய்து ,குழந்தை பிறப்பின் போது கால்கள் மீண்ட அதிசயம் நடந்ததை சொல்ல, வேங்கடாசலம் அதையும் பரீட்சிக்க விரும்புகிறார் ,ஆனால் ஒரு நல்லவனை கொண்டு.

    பணத்தாசை பிடித்த ஏகாம்பரம் என்பவனின் மகன் ஆனந்தன் தனது மாமன் தயவில் படித்து வக்கீலானதால் ,மாமன் மகள் பாமாவை(சிறிதே அரைகுறை) மணக்கும் சூழ்நிலையில் இருப்பவன். பொதுநலவாதி,கொள்கை பிடிப்புள்ளவன். ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அறிய நேரும் வெங்கடாச்சலம் ,அவன் தகப்பன் ஏகாம்பரத்தை ஒரு ஒப்பந்தம் மூலமும் ,ஆனந்தனை(ஒப்பந்தம் அறியாமல்) அவன் தியாக சிந்தனையை தூண்டியும் கல்யாணத்தை நடத்தி கொள்கிறார். இரு வருடங்களில் கால் குணமாக இல்லையெனில் மண விலக்குடன் பாதி சொத்து என்பதே அந்த ஒப்பந்தம்.சரளாவும் ஆனந்தனும் மனமொத்த வாழ்வு நடத்தி ஒரு பிள்ளையும் பெற்று ,,நகரசபை சேர்மன் பதவி மூலம் மக்களுக்கு நல்லதும் செய்கிறான். ஆனந்தன் செயல்கள் மூலம் வருமானத்தையும்,நண்பர்கள் செல்வாக்கையும், முறையற்ற வழியில் சேர்த்த செல்வங்களையும் இழந்தும் வெங்கடாச்சலம்,மகளுக்காக பொறுமையாக இருக்கிறார்.

    ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ,சரளாவின் ரெண்டுங்கெட்ட பேச்சுக்கள்,ஆனந்தனுக்குள்ள பொது ஈடுபாடுகள், வெங்கிடாசலத்துடன் நேரடி மோதல்கள் , குறுக்கே வெங்கடாச்சலத்தின் காரியதரிசி போடும் விஷ தூபம் ,இவை சரளாவிற்கு தன கணவன் -தந்தை இருவரிடமும் நம்பிக்கையிழக்க செய்ய, மகளுக்காக விஷம் குடித்து ,உண்மையை விளக்கி மடியும் வெங்கடாச்சலம் ,ஒரு சண்டையில் கணவனின் ஆபத்தான சூழ்நிலையில் நடக்க ஆரம்பித்த ஆனந்தத்துடன் கண் மூடுகிறார்.

    படம் முழுக்க யாரையும் நாயகனாக ,நாயகியாக முன்னிறுத்தி ,பிம்பங்கள் எழுப்ப படாது. நாயகன் இயல்பிலேயே ,தொழிலாளர் மற்றும் ஏழைகள் நலம் விரும்பும் தலைமை குணம் கொண்டவன்.ஓரளவு தியாக சிந்தனை,மிகுந்த பொதுநல நோக்கு,பரந்த சிந்தனை உடையவன்.

    இந்த படத்தில் நடிகர்திலகம் நடித்த விதம் , இவ்வித நடிப்பை மட்டுமே எல்லா படத்திலும் தந்து புகழ் பெற்ற திலீப் குமார், உத்தம்குமார் பார்த்தால் நாணி தலை கவிழும் அளவு, stanislavsky method acting பாடம் கற்கலாம். இந்த பாணி நடிப்பில் கூட மற்றவர் சிவாஜி கால் நகம் கூட தொட முடியாது.

    இந்த படத்தின் நாயகன் பாத்திரம் அப்படியே நம்மிடையே வாழும். அசாதாரண செயலை செய்யும் போதும் தன்னை முன்னிலை படுத்தது செய்யும் செயலை காட்சியை முன்னிலை படுத்தும். உதாரணம் வெள்ளத்தினால் மக்கள் அவதியுறும் போது நாயகன் பங்கு.(புத்தன் ஏசு காட்சி போல நகைப்புரியதாக இல்லாமல்) படு அழகாக பாந்தமாக காட்சியை கதையை ஒட்டி இருக்கும்.

    இந்த நேரத்தில் ஒன்றை அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் இயல்புகள் ,குணத்தில்,நடத்தையில்,எதிர்வினை புரிவதில் பலதர பட்டது.சிலர் அமைதி (எல்லாம் உனக்காக),சிலர் உரத்த வெளிப்பாடு (கெளரவம்),சிலர் சூழ்நிலைக்கேற்ப மாறுபட்டு(புதியப்பறவை),என்ற வகையில் வேறு படுத்தி நடிப்பதே உண்மை நடிப்பு.சில நேரம் வாழ்வில் பல வருட துயரம், பல வருட இன்பம்,பல வருட தொடர் விளைவு படத்தில் சில நிமிடங்களில், சில வினாடிகளில் சொல்ல பட நடிப்பின் பாணி ,அந்த நிமிடத்தில் உயர் உஷ்ண நிலையை தொட வேண்டும்.

    இயல்புக்கு மாறான நகைப்புக்குரிய நடிப்பு என்பது, கதையை பற்றி கவலை படாமல்,தனக்கு வசதியான காட்சிகளை அமைத்து, பாடலில் செயற்கை கருத்துக்களை புகுத்தி, இசையமைப்பாளர் ஒரே ராகத்தில் எல்லாவற்றுக்கும் இசை தொடுக்க,பாடகர் நெளிவு சுழிவற்ற முறையில் பாட, ஒரே மாதிரி கை காலை ,ஆட்டி ஒரு நடிகர் தன்னை முன்னிலை படுத்தி ,அழகியலை சிதைப்பதே உண்மைக்கு மாறான,இயல்புக்கு மாறான நடிப்பு.

    இயல்பான நடிப்பு என்பது,அந்த பாத்திரத்தின் உண்மை இயல்பு.நடிகனின் இயல்பல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்.

    இந்த படத்தில் என்னை மிக மிக கவர்ந்த காட்சிகள்.

    ஏதோ நாயகியின் தந்தை சரியான விசையை தட்டி ,நாயகனின் நல்லியல்பை பயன் படுத்தி கல்யாணத்தை முடித்தாலும், நாயகியுடன் தனித்து இருக்கும் போது ,நாயகன் குழம்பி தன் முடிவை தானே கேள்விக்குள்ளாக்கி ,தன்னுடைய நிலையை நினைக்கும் காட்சி. ஒரு பழைய பிகினிக் காட்சி ப்ராஜெக்ட் செய்ய பட்டு,நாயகியின் பழைய ஆனந்த ,ஆரோக்கிய நிலையை கண்டு, அவளை முன்னிட்டு தன்னை தேற்றி,புது வாழ்வுக்கு தயார் செய்யும் காட்சி. ஆயிரம் வர்ணனையை விட காட்சியில் காணும் சுகம்.

    ஒவ்வொருவரிடமும், அவர் இயல்பு தெரிந்து உரிய மதிப்பை அளித்து, தன்னுடைய இயல்பையும் உறுதி செய்யும் நடிப்பு. உதாரணம், தந்தை எழுந்த உடன் மகளை காண விரும்பும் விழைவுக்கு கல்யாணத்திற்கு பிறகான நாயகனின் வினை.
    பேராசை கொண்ட தந்தையை தன் அலுவலகத்தில் அணுகும் விதம். குழந்தையின் கால்களை சோதிக்கும் அன்னையிடம் கடியும் நேர்த்தி.எதிலும் நாயகனின் வரம்புக்கு வெளியிட படும் கோடு தாண்டா இயல்பு நடிப்பு.

    இந்த மாதிரி படங்களை ரசிக்காத தமிழர்கள் ,பலவற்றை இழந்தார்கள்.
    Last edited by Gopal.s; 6th July 2017 at 09:31 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes Harrietlgy liked this post
  11. #519
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    today, 01:29 pm #2137 muthaiyan ammu



    senior member veteran hubber
    join dateoct 2014locationsalemposts3,175post thanks / like thanks (given)47thanks (received)66likes (given)449likes (received)188






    எங்கவீட்டு பிள்ளை படம் பதிவுகளை நிறைய செய்ய ஆசை முடியவில்லை..மூன்று மொழிகளில் வந்த இந்த படத்தின் ச்டில்ல்ஸ் என்னிடம் எல்லாம் உள்ளது பதிவுசெய்ய மனம் இல்லை..செய்திதாள்களில் வரும் தலைவரை பற்றிய செய்திகள் உண்மை இல்லை..உங்களது பதிவுகள் எல்லாம் செய்திதாள்களில் உள்ளதை பதிவு இடப்பட்டுள்ளது..உண்மை செய்திகள் இதில் இல்லை..சும்மா ஆதாரம் இல்லாமல் பதிவுகளை செய்ய எனக்கு விருப்பம் இல்லை..என்னை அறிமுகம் செய்த வேலூர் ரம்மமூர்த்திக்கும் இந்த பதிவை நீக்கலாமா என்று தயாராக இருக்கும் என் நண்பர் எஸ்.வீ.சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..good bye..


    எல்லாம் பொய் பொய் என்று
    நாங்கள் சொல்லவில்லை
    அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #520
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    எல்லாம் பொய் பொய் என்று
    நாங்கள் சொல்லவில்லை
    அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டது
    [/indent]
    தவறான பக்கம் நின்ற சரியான பண்பாளர்கள் முத்தையன் அம்மு, யுகேஷ் பாபு,சைலேஷ் பாபு,பேராசிரியர் செல்வகுமார் போன்றோர்.

    வேறு வழியில்லாமல், பொழுது போக தவறை புரிபவர் எஸ்.வீ.

    இவர்களை மற்றோருடன் சேர்த்து எடை போட என் மனம் மறுக்கிறது. முத்தையன் அம்மு மறைவு என் மனதை நெகிழ்த்திய ஒன்று.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •