Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    singaravelu .B


    கடந்த விடுமுறையில் ' தூக்கு தூக்கி ' எனும் நடிகர் திலகத்தின் உன்னதமான படைப்பினை காணும் பெருநல்வாய்ப்பு கிட்டியது. ஆஹா மிகவும் விறுவிறுப்பான அற்புதமான ஒரு திரைப்படம். படம் வெளிவந்த ஆண்டு 1954. கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு படம். ஆனால் இப்போதும் ரசித்து பார்க்க முடிந்தது. நடிகர் திலகத்தின் ஆரம்பகால திரைப்படம்தான்... 18 ஆவது படம் என்று நினைக்கிறேன். எனினும் அப்படி கூறவே இயலாது. முதல் படமான ' பராசக்தி ' திரைப்படத்தினிலே இவரின் நடிப்பினை பார்த்தால் யாராலும் முதல் படம் என்று கூற இயலாதே.
    நாயகன் நடிப்பினையும், சக நடிகர்களின் போட்டி போட்டுக்கொண்டு திறன்களை காண்பித்து நடித்திருந்த நடிப்பினையும், படத்தினையும், வசனங்களையும், பாடல்களையும், கேட்கும்போது...ஆஹா..எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் எல்லாம் நமது தமிழ் திரைப்பட உலகினில் தனது திறமைகளை கொட்டி கொடுத்துள்ளார்களே, இன்றைக்கு பார்க்கும்போது கூட மெய்சிலிர்க்கிறதே என்றுதான் தோன்றியது.






    கொண்டு வந்தால் தந்தை;
    கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்;
    சீர் கொண்டு வந்தால் சகோதரி;
    கொலையும் செய்வாள் பத்தினி;
    உயிர் காப்பான் தோழன்;
    இந்த மேற்கண்ட ஐந்து வரிகளை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு... அருமையான கதையமைப்புடன்...ரசிக்கத்தக்க ஒரு கதையினை உருவாக்கிய இயக்குனரை கூறுவதா...அழகான தெளிந்த நீரோடை போன்று அமைந்த வசனங்களை கூறுவதா...?
    மேற்கண்ட ஐந்து வரிகளை, இந்த வைர வரிகளை ஒரு அறிஞர் கூட்டம் கூறும்போது,
    என்னய்யா...இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே என்று எள்ளி நகையாடும் நாயகன் , வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள், .அப்படியே இந்த மேற்கண்ட வரிகள் உண்மைதான் என்பதனை நிரூபிக்கும் வண்ணம் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் ஒரு கதை அமைப்பு.
    லலிதா, பத்மினி, ராகினி இவர்களின் நடிப்பினை கூறுவதா..T.S. பாலையா அவர்களின் பாத்திர படைப்பையும் அவரது நடிப்பினையும் கூறுவதா...நடிகர் திலகம் புகுந்து விளையாடும் வண்ணம் நடிப்புக்கான வாய்ப்புக்களை அள்ளித்தர துவங்கிய கால கட்டத்தில் வந்த படம் போலும். கலைக்குரிசில் வருகின்ற பந்தை எல்லாம் சிக்சருக்கு விரட்டுவது போல வெளுத்துக்கட்டி விடுகிறார்.
    இந்த படத்துக்கு வருவோம்..
    சிவாஜியின் நாடகப் பிரதிபலிப்பு இவர் நடனத்தில் தெரியும்..அருமையாக ஆடியிருப்பார். நாடகத்தினில் நடித்து நடித்து பழகிய திறமைகளை அரங்கேற்ற அற்புதமான ஒரு கதைக்களம் அமைத்து தந்த இயக்குனரையும் இங்கே பாராட்ட வேண்டும்.
    நடிகர் திலகத்தின் பிரியத்துக்குரிய மரியாதைக்குரிய கலைஞர்.. T.S. பாலையாவின் நடிப்பும், இப்படத்தினிலே... மிக அழகாக பொருந்தி இருக்கும்..
    T.S. பாலையா அவர்களின் கதாபாத்திரம் எதிர்மறை ஆயினும் சௌகார்பேட்டை சேட்டுகள் போலவே.. பேசும் தமிழ் வெகு பொருத்தம்.
    நடிகர் திலகத்தின் திறமைகளை அறிந்து...இவரிடம் உள்ள நடிப்பு திறனை வெளிப்படுத்த எப்படி எல்லாம் காட்சிகளை வைத்து எப்படி எல்லாம் அற்புதமாக வேலை வாங்கலாம் என்பதனை நன்கறிந்தவர்தான் இயக்குனர்...ஆகா எவ்வளவு அருமையான கதாபாத்திரம்...கலைக்குரிசிலுக்கு...இந்த வேடத்துக்கும் இந்த பாத்திரத்தினை செய்வதற்கும்...எந்த கொம்பனாலும் இயலாது என்பதே உண்மை...
    சேட்ஜியின் வேலைக்காரராக வேடமிட்டு வரும் பாத்திரமாகட்டும்...ராஜகுமாரன் ஆக வரும் காட்சி...தங்கையின் வீட்டில் வரவேற்பு குறைவதையும்...அவமானப்படுத்தப்படும் காட்சி, கோவிலில் பைத்தியம் போல சொன்னதையே திரும்ப சொல்லும் அந்த நடிப்பு, ஆகா ..பசியோடு வந்தவனுக்கு பழையது கொடுத்தாலே போதும் என்று இருப்பவர்களுக்கு வடை பாயாசத்துடன் விருந்து வைத்து போல...ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாகவே அமைந்த ஒரு படம்தான் இது...
    வேடப்பொருத்தம்...என்றால்...ஒவ்வொரு வேடமும்...எவ்வளவு அழகாக பொருந்துகிறது...இந்த மஹாநுபாவனுக்கு என்று நடிகர் திலகத்தினை பார்த்து நாம் வியக்க நேரிடுகிறது...அந்தந்த வேடத்துக்கேற்ப பொருத்தமான நடிப்புத்திறன்....
    பாடல்கள்...ஆகா..வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...என்ன அற்புதமான வரிகள்...எப்படிப்பட்ட இசையமைப்பு...ரசிகர்களை அமரவைத்து தலையிலே..குடம் குடமாக தேனை அள்ளி ஊற்றியது போன்ற இனிமை... ஜி.ராமநாதன் என்ற இசைமேதையின் இசை..இப்படத்துக்கு மிகப்பொருத்தமான ஒன்று...படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் பலம்...
    இசைமேதை.. ஜி.ராமநாதன் இசையில், கேட்டவர்கள் அனைவரையும் யாரய்யா..இது...சிவாஜி கணேசனே பாடியது போல உள்ளதே..என்று ஆச்சரியப்பட வைத்த பாடல்கள்.
    பாடல்கள் எழுதிய கவிஞர்கள்... தஞ்சை N. ராமையா தாஸ், A. மருத காசி.. உடுமலை நாராயண கவி... ஆகியோர்...
    உடுமலை நாராயண கவியின் பாடல்கள் இந்தப் படத்துக்கு மிகப்பெரும் பலம் சேர்த்தது என்பது மிகப்பெரும் உண்மை.
    TMS ஐயா..அவர்கள்... பாடிய பாடல் அனைத்துமே அற்புதம்... சிவாஜிக்கு குரல் கொடுத்த முதல் திரைப்படம் இதுவே... ஆஹா..ஏழிசை வேந்தனை அறிமுகப்படுத்திய படம் என்பதே ஒரு பெருமைதான்.
    இந்த இடத்தினிலே பொருத்தமாக நான் படித்து ரசித்த..சில கருத்துகளையும் இணைக்கிறேன்...
    தன் முதல் படமான `பராசக்தி’ யில் பாடிய சி.எஸ். ஜெயராமன் படியதை சிவாஜி இன்னும் மறக்கவில்லை. அவரே தான் தனக்கு தொடர்ந்து பாட வேண்டும் என்று ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடமும் சிவாஜி சொல்லிக்கொண்டிருந்த சமயம் அது!
    `தூக்குத் தூக்கி’ படத்தில் நாட்டுப்புறப் பாணி பாடல்கள் தான் அதிகம். `தெம்மாங்கு பாடுவதில் செளந்தரராஜனுக்கு ஈடு கிடையாது’ என்றார் இசையமைப்பாளர் ராமநாதன்.
    எல்லாம் சரி இப்போது செளந்தரராஜன் குரலை சிவாஜி ஒத்துக்கொள்ள வேண்டுமே ?
    சரி! சிவாஜி தொடரில் ஏன் இத்தனை விஷயம் டி.எம்.எஸ்ஸீக்கு இன்று ஒரு கேள்வி எழலாம்!
    இதற்கு பிறகுதான் சிவாஜியின் இன்னொரு பரிமாணத்தை நாம் பார்க்கப்போகிறோம்! அதற்காகவே இந்த பீடிகையோடு கூடிய டி.எம்.எஸ். அறிமுகம் தேவை!
    இந்தக் கேள்வியும் கூடவே செளந்தரராஜனின் தன்மான உணர்ச்சியும் குத்திக்கொண்டே இருந்தது.
    தயாரிப்பாளரிடம் சொன்னார், ` எட்டுப் பாட்டுல சிறப்பா இருக்கிற மூணு பாட்டை கொடுங்க !
    அத மட்டும் முதல்ல பாடறேன். பதிவான பாடலை சிவாஜி கேட்கட்டும்!
    அவர் ஒத்துக்கிட்டா மத்தப் பாடல்களையும் பாடறேன். இல்லேன்னா நீங்கள் எனக்கு பணமே கொடுக்க வேண்டாம்!
    படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ராதாகிருஷ்ணனின் ஒலிப்பதிவுக்கூடத்தில் முதல் பாடல் பதிவானது.
    `சுந்தரி செளந்தரி நிரந்தரியே’
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறி தாவும்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறி தாவும்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறி தாவும்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறி தாவும்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    உருண்டையான உலகின் மீது
    உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
    உருண்டையான உலகின் மீது
    உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
    உருண்டையான உலகின் மீது
    உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
    உருண்டையான உலகின் மீது
    உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
    உருவ அமைப்பை காணும் போது
    ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத குரங்கு
    உருவ அமைப்பை காணும் போது
    ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத குரங்கு
    ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத
    ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத
    பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
    பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
    பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
    பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
    தலையில் பேனும் ஈரும் தேடி தேடி பிடிப்பதனாலும்
    தலையில் பேனும் ஈரும் தேடி தேடி பிடிப்பதனாலும்
    நடிப்பினாலும் நடத்தையாலும்
    நரர்களும் வானரமும் ஓர் குலம்
    நடிப்பினாலும் நடத்தையாலும்
    நரர்களும் வானரமும் ஓர் குலம்
    உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
    உள்ளபடி பேதம் உண்டு
    உண்மையில் வித்யாசம் இல்லை
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
    உள்ளபடி பேதம் உண்டு
    உண்மையில் வித்யாசம் இல்லை
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    பதநிஸரி
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    பதநிஸரி
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    ஸநிஸ கரிஸ நிரிஸ நிதப
    நி ஸநி தபம பதநி ஸரி குரங்கு
    ஸநிஸ கரிஸ நிரிஸ நிதப
    நி ஸநி தபம பதநி ஸரி குரங்கு
    மம பப தபம பப தத
    நிதப ததநிநி ஸநித மதநி மனித குரங்கு
    மம பப தபம பப தத
    நிதப ததநிநி ஸநித மதநி மனித குரங்கு
    பமதப நிதபம கரிகம பத நிஸரிகரிஸ நிரிஸ நிதப
    கரிஸ நிதப மப
    பமதப நிதபம கரிகம பத நிஸரிகரிஸ நிரிஸ நிதப
    கரிஸ நிதப மப
    நிதபம பஸநிஸ கரிஸ நிரிஸ நிதபம தபம
    கமபதநி தமப
    நிதபம பஸநிஸ கரிஸ நிரிஸ நிதபம தபம
    கமபதநி தமப
    பபப பபத ததத ததநி நிநிநி நிநிஸத நிரிக ஸதப
    பபப பபத ததத ததநி நிநிநி நிநிஸத நிரிக ஸதப
    ரிகரிஸ நிதப
    ரிகரிஸ நிதப
    ஸரிஸ நிதபம
    ஸரிஸ நிதபம நிஸநி தபமக நிஸநி தபமக
    தபமகமப
    தபமகமப
    நிதப மபத
    நிதப மபத ஸநித பதநி ஸநித பதநி
    நிஸ
    நிஸ
    தநி
    தநி பத பத
    மப
    மப
    மாமா குரங்கு மாமா குரங்கு
    பாபா குரங்கு பாபா குரங்கு
    தாதா குரங்கு தாதா குரங்கு
    நீஸா குரங்கு நீஸா குரங்கு
    நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு
    குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
    குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறி தாவும்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறி தாவும்
    குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்...
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சூலியெனும் உமயே
    சூலியெனும் உமயே குமரியே
    குமரியே சூலியெனும் உமயே குமரியே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
    அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
    அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
    அமரியெனும் மாயே...
    மாயே...
    அமரியெனும் மாயே
    பகவதி நீயே அருள் புரிவாயே
    பைரவி தாயே உன் பாதம் சரணமே
    உன் பாதம் சரணமே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சேர்ந்த கலை ஞானம்... தானம் நிதானம்
    நிதானம்
    மாந்தரின் மானம்
    மானம்
    காத்திட வேணும்
    வேணும்
    கண் காணும் தெய்வமே
    கண் காணும் தெய்வமே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சூலியெனும் உமயே குமரியே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    குமரியே சுந்தரி சௌந்தரி நிரந்தரியே....
    அடுத்த பாடல் `
    பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ‘
    கண்டால் கொல்லும் விஷமாம்
    கட்டழகு மங்கையரை...
    நாம் கொண்டாடி திரியாமல்
    குருடாவதெக்காலம்...
    பெண்களை நம்பாதே
    கண்களே பெண்களை நம்பாதே
    பெண்களை நம்பாதே
    கண்களே பெண்களை நம்பாதே
    வீண் பெருமை காட்டி சிறுமையாக்கும்
    பெண்களை நம்பாதே
    கண்களே பெண்களை நம்பாதே
    மண் கலம் போல மற்றவர் தொட்டால்
    மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
    மண் கலம் போல மற்றவர் தொட்டால்
    மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
    கெட்டு வெங்கலம் போல எவர் தொட்டாலும்
    விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
    பெண்களை நம்பாதே...
    ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்
    அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்
    ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்
    அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்
    இதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
    மேமினுக்கும் பெண்டுகளை பார்திடானாம்
    கண்டவரோடு கண்ணால் பேசி காமுறும் மாது
    இந்த பூமியின் மீது
    கண்டவரோடு கண்ணால் பேசி காமுறும் மாது
    இந்த பூமியின் மீது
    கொண்ட கணவன் தனை கழுத்தறுப்பாள்
    காரிகை ரூபத்தில் காணும் பிசாசு
    பெண்களை நம்பாதே
    கண்களே பெண்களை நம்பாதே
    வீண் பெருமை காட்டி சிறுமையாக்கும்
    பெண்களை நம்பாதே
    கண்களே பெண்களை நம்பாதே
    கண்களே பெண்களை நம்பாதே
    பெண்களை நம்பாதே...
    அப்புறம் ` ஏறாத மலை தனிலே ‘
    முதல் பாடலை பி.லீலாவும், ஏ,பி. கோமளாவும், டி.எம்.எஸ்ஸுடன் பாடினார்கள்.பாடலை மருதகாசி எழுதியிருந்தார்.
    பெண்களை நம்பாதே பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்தார்.
    மூன்றாவது முற்றிலுமான தெம்மாங்கு! திஸ்ர நடை, மூன்று கட்டை சுருதி!
    ஏறாத மலை தன்னிலே ஜோரான கவுதாரி ரெண்டு’ தஞ்சை ராமய்யதாஸ் பாடல்!
    ஏறாத மலைதனிலே... ஏ... ஏ...
    ஜோரான கௌதாரி ரெண்டு...
    தாராளமா இங்கே வந்து...
    ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
    ஏறாத மலைதனிலே வெகு
    ஜோரான கௌதாரி ரெண்டு
    ஏறாத மலைதனிலே வெகு
    ஜோரான கௌதாரி ரெண்டு
    தாராளமா இங்கே வந்து
    ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
    தாராளமா இங்கே வந்து
    ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
    ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
    கல்லான உங்கள் மனம்
    கலங்கி நின்னு ஏங்கையிலே
    கண் கண்ட காளியம்மா
    கருணை செய்வது எக்காலம்...
    போடு தாம் திமி திமி தந்த கோனாரே
    தீம் திமி திமி திந்த கோனாரே
    தாம் திமி திமி தந்த கோனாரே
    தீம் திமி திமி திந்த கோனாரே
    ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
    ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
    செக்கச் செவேல் என செம்மரி ஆடுகள்
    சிங்காரமாக நடை நடந்து
    செக்கச் செவேல் என செம்மரி ஆடுகள்
    சிங்காரமாக நடை நடந்து
    வக்கணையாகவே பேசிக் கொண்டு
    பலி வாங்கும் பூஜாரியை நம்புதடா
    வக்கணையாகவே பேசிக் கொண்டு
    பலி வாங்கும் பூஜாரியை நம்புதடா
    போடு தாம் திமி திமி தந்த கோனாரே
    தீம் திமி திமி திந்த கோனாரே
    ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
    சோலை வனங்கள் தழைத்திருக்க... ஆ... ஆ...
    சோலை வனங்கள் தழைத்திருக்க
    அதை சொந்தமாய் திங்கும் சுகமிருக்க
    சோலை வனங்கள் தழைத்திருக்க
    சொந்தமாய் திங்கும் சுகமிருக்க
    பாலைவனத்தையே நம்பி வந்து... ஆ... ஆ...
    பாலைவனத்தையே நம்பி வந்து
    பழி வாங்கும் பூஜாரியை தேடுதடா
    பாலைவனத்தையே நம்பி வந்து
    பழி வாங்கும் பூஜாரியை தேடுதடா
    போடு தாம் திமி திமி தந்த கோனாரே
    தீம் திமி திமி திந்த கோனாரே
    ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
    தாம் திமி திமி தந்த கோனாரே
    தீம் திமி திமி திந்த கோனாரே
    தாம் திமி திமி தந்த கோனாரே
    தீம் திமி திமி திந்த கோனாரே
    `பாகவதர் மாதிரி சாரீரம். கள்ளத் தொண்ட கலக்காமல், வார்த்தைகள் திரண்டு நிக்குது. உணர்ச்சி வேகத்தில் எப்படி பாடுகிறார் ‘ வியந்து பாராட்டினார் தஞ்சை ராமய்யதாஸ்!
    பாடல் பதிவானவும் சிவாஜி வீட்டுக்கு போன் பறந்தது. !
    இரவு பகலாக படப்பிடிப்பில் இருந்த சிவாஜி தனக்காக பதிவான பாடலைக் கேட்க பறக்கிறார்!
    காரை விட்டு இறங்கிய சிவாஜியை அப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறார் செளந்தரராஜன்.
    தான் பாடிய பாடலுக்கு இவர் எப்படியெல்லாம்
    நடிப்பார் ! செளந்தரராஜன் மனதில் கற்பனை !
    மரியாதையுடன் ராமநாத அய்யரின் பக்கத்தில் நிற்கிறார் செளந்தரராஜன்.
    `சுந்தரி செளந்தர் நிரந்தரியே ‘ நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்கிறர் சிவாஜி!
    `கண்டால் சொல்லும் விஷமாம்’ என்று அடுத்த பாடல் ஒலிக்கிறது அடுத்து `ஏறாத மலை மீது பாடல் ஒலிக்கிறது. சாய்ந்து உட்கார்ந்திர்ந்த சிவாஜி நிமிர்ந்து உட்காருகிறார்.
    பாட்டுக்கள் முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்திருந்த சிவாஜி ஒரு புன்னகையுடன் எழந்து நிற்கவும் சரியாக இருந்தது.
    சிவாஜி : ` இந்தப் பாட்டுக்களை யார் பாடியது ?’
    ராமநாதன்: `இதோ இந்த மதுரைப் பையன். செளந்தரராஜன்னு பேரு ..’’ அறிமுகப்படுத்துகிறார்!
    `வாங்கய்யா ‘ என்று செளந்தரராஜனை அருகில் அழைத்தார் சிவாஜி
    `நல்லா பாடியிருக்கீங்க.. எல்லாப் பாட்டுக்களையும் நீங்களே பாடுங்க’ அன்பாக செளந்தரராஜனை முதுகில் தட்டிகொடுக்கிறார் சிவாஜி.
    ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞனுக்கு கொடுத்த முதல் பாராட்டு!
    `தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டியெங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.
    1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா என்கிற கேள்வி ஒரு புறம். இல்லை படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம்! அதுவே மக்களை கொட்டகைக்கு வரவழைத்துவிட்டது என்று சொல்பவர்கள் இன்னோரு புறம்.
    ஒரு காலக்கட்டத்தினில் ஏராளமான பாடல்கள் தமிழ் திரைப்படங்களில்...இருந்ததாம்..இந்தப்படத்திலும ் கூட 10 - 12 பாடல்கள் இருந்தபோதும் கொஞ்சமும் சலிக்கவில்லை... நடிகர் திலகத்தின் நடிப்புத்திறனுடன் காணும்போது...தேனுடன் கலந்த பால்தான்...அமிர்தம்தான்..
    நவரசங்களையும் கலந்து ஜனரஞ்சகமான படத்தை தன்னால் தரமுடியும் என்பதை இந்த படத்தில் சிவாஜி நீருபித்தார்.
    அரசகுமாரனான சிவாஜி இந்த படத்தில் பல மாறு வேடங்களைப் போட்டு பிரமாதமாக நடித்தார்.
    குறிப்பாக ` குரங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் படத்திற்கு அவர் லலிதா, பத்மினியுடன் சிவாஜி நடனமாடும்போது, கொட்டகையே அதிருமாம், விசில் பறக்கும் !
    இந்த படத்தில் ` அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு’ என்று ஒரு பாட்டை சிவாஜி , யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் பாடுவார்.
    அபாய அறிவிப்பு அய்யா
    அபாய அறிவிப்பு வாத்தியார் அய்யா
    அபாய அறிவிப்பு
    நான் மெய்யாக சொல்லுவதை
    பொய்யாக எண்ணாதே அபாய அறிவிப்பு
    நான் மெய்யாக சொல்லுவதை
    பொய்யாக எண்ணாதே
    அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
    ஆழம் தெரியாம கால விட்டான்
    நம்ம அரசாங்கதையே எதுத்துக்கிட்டான்
    ஆழம் தெரியாம கால விட்டான்
    நம்ம அரசாங்கதையே எதுத்துக்கிட்டான்
    காலம் தெரியாம கில்லாடி பைய
    ஒரு கல்லால ரெண்டு காய் அடிசுப்புட்டான்
    காலம் தெரியாம கில்லாடி பைய
    ஒரு கல்லால ரெண்டு காய் அடிசுப்புட்டான்
    அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
    ஜாடயாகவே மாதவி மல்லிகா
    சட்டாம்பிள்ளை வலையில் விழுந்தாச்சு
    ஜாடயாகவே மாதவி மல்லிகா
    சட்டாம்பிள்ளை வலையில் விழுந்தாச்சு
    தூக்கு மேடையில் ஏறி ஊஞ்சல் ஆடவே
    சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
    சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
    மேடையில் ஏறி ஊஞ்சல் ஆடவே
    சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
    சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
    அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
    கண்ணாலே பாடம் சொல்லிக் கொடுத்து
    கணக்கு பண்ணிட்டான் டொய் டொய் டொய்
    கண்ணாலே பாடம் சொல்லிக் கொடுத்து
    கணக்கு பண்ணிட்டான் டொய் டொய் டொய்
    காளி கோயிலுக்கு ரெண்டயும் வரச் சொல்லி
    கம்பி நீட்டவே டொய் டொய் டொய்
    காளி கோயிலுக்கு ரெண்டயும் வரச் சொல்லி
    கம்பி நீட்டவே டொய் டொய் டொய்
    கம்பன் மகனான அம்பிகாபதி
    கதையை போலவே டொய் டொய் டொய்
    கம்பன் மகனான அம்பிகாபதி
    கதையை போலவே டொய் டொய் டொய்
    காதலாலே பலி ஆகவே போறான்
    கவல படாதே டொய் டொய் டொய்
    கண்ணீர் விடாதே டொய் டொய் டொய்
    கவல படாதே டொய் டொய் டொய்
    கண்ணீர் விடாதே டொய் டொய் டொய்
    கவல படாதே கண்ணீர் விடாதே
    கவல படாதே கண்ணீர் விடாதே
    அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
    இந்த யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை யார் ?
    இவருடைய நாடக சபாவில் தான் சிவாஜி முதன் முதலாக சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.
    இந்தப் படத்திற்குப் பிறகு தான் சிவாஜிக்கு பின்னனி இனி டி.எம்.எஸ்தான் என்பது உறுதியானது!
    குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு முக்கிய ஒரு விஷயம் ஏழிசை வேந்தன்...குரல் ..இசை நடிகர் T.M. சௌந்தரராஜன் அவர்கள் தமிழ் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்க காரணமான முதல் படம். பாடல்களை குறித்து கூறினால் இதுவும் ஒரு தேனிசை மழைதான்...அழகான அற்புதமான பாடல்கள்.
    குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம்...T.M. சவுந்தர ராஜன் அவர்களின் அதிரடியான திரையுலக நுழைவு...1946 முதலே சின்னஞ்சிறு வாய்ப்புகளில் பாடி வந்தாலும்...நடிகர் திலகத்தின் குரலை மனதுக்குள் உள்வாங்கி...அவர் பாடினால் எப்படி இருக்குமோ அந்த பாணியில் பாடி...இந்தப்படத்தினில் மிகப்பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார்.
    அது ஒரு சாதாரண நிகழ்வல்ல...தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரும் புரட்சியினை மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய ஒரு உன்னத பாடகர் அல்லவா அவர்... வாய்ப்பு கேட்டு பாடிய பாடலே...மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி..உள்ளே நுழைய வழி உண்டாக்கி கொடுத்தது... அவரே கூட தனக்கு இப்படி ஒரு பெரிய வரவேற்பும் வழியும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாரோ எண்ணி இருப்பாரோ என்று தெரியவில்லை...கிட்டத்தட்ட அதற்குப்பிறகு...ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாடி...புகழ் பெறுவோம் என்று...
    படத்தினை பார்த்து முடித்ததும் உறக்கம் வர மறுத்தது...இந்தப்படம் குறித்த சிந்தனைகளே மனதை நிறைத்து இருந்தது...ஆஹா எப்படிப்பட்ட அற்புதமான திறமையாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரு சோலைவனமாக இந்த தமிழ் சினிமா உலகம் அமைந்து இருந்தது என்றெல்லாம்...சிந்தனைகள்... பைத்தியமாக நடித்துக்கொண்டு...எதிரே உள்ளவர்களின் நடன அசைவுகளை தானும் அப்படியே...ஆடிக்கொண்டே பாடுவது... அடுத்து..T.S.பாலையாவுடன் உதவியாளராக உள்ள வேடம்... பிறகு...அபாய அறிவிப்பு பாடலின்போது உள்ள வேடம்...இளவரசனாக, இறுதிக்காட்சியில் மன்னரின் முன்னே தனது பக்கம் உள்ள நியாயம் கேட்டு பேசும் வசனங்கள்... என்று நடிகர் திலகம் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பினை தனது நாடக உலகில் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து...சும்மா புகுந்து விளையாடுகிறார்.
    நடிப்புக்கு இலக்கணம் வகுத்துக்கொடுத்த
    இந்த மா... மனிதரின் திறமைகள் இனி எங்கு...போய் தேடுவது...நடித்துக்கொடுத்த அத்துணை பாத்திரங்களும் பொக்கிஷங்களாயிற்றே...என்றெல்லாம் சிந்தனைகள் சுழன்றடித்தது.. படத்தினில் நடித்துள்ள அத்துணை நட்சத்திரங்களும் தங்களின் பங்களிப்பினை மிக நேர்த்தியாக செய்துள்ளனர்.... இந்த திரைப்படம் குறித்த உங்களின் கருத்துகளையும் பகிர்ந்திட வேண்டுகிறேன்... நீங்கள் கருத்துக்கூற ஏராளமான விஷயங்கள் இருக்கிறது இந்தப்படத்தினில் ரசிக கண்மணிகள் தங்களின் மேலான கருத்துகளை கூறி அனைவரையும் மகிழ செய்வீர்கள் என நம்புகிறேன்.....நன்றி.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •