Page 200 of 400 FirstFirst ... 100150190198199200201202210250300 ... LastLast
Results 1,991 to 2,000 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1991
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    K.S.Narsimhan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1992
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஞான ஒளி-(11/03/1972)

    நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.

    பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

    ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

    ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

    Typical Behaviours of an orphan-

    1)Poor Self Regulation
    2)Emotional Volatility.
    3)Act on Impulse.
    4)Immediate Urge for self-gratification.
    5)Mixed Maturity levels.
    6)Self parenting syndromes-Taking justice in their hands.
    7)Learned Helplessness
    8)Extreme Attention seeking.
    9)Indiscriminate friendliness.
    9)Absessive compulsive Tendencies.
    10)Idiosynchrasies.


    மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

    அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

    தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

    poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
    தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

    obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

    துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

    இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

    இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

    நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

    நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

    அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

    நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

    பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

    இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

    மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

    இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1993
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    vanilla .v

    1. மனோகரா
    2. உயர்ந்தமனிதன்
    3. பாகப்பிரிவினை
    4. தூக்கு தூக்கி
    5. குங்குமம்...
    6. வணங்காமுடி
    7. வளர்பிறை
    8. இருவர் உள்ளம்
    9. மக்களைப் பெற்ற மகராசி
    10. தங்கைக்காக
    11. சொர்க்கம்
    12. தேனும் பாலும்
    13. காவேரி
    14.பாபு
    15.ராஜா
    16. ஞானஒளி
    17. குலமகள் ராதை
    18. பாலும் பழமும்
    19. பாசமலர்
    20. உத்தம புத்திரன்
    இவையெல்லாம் என்ன தெரியுமா?
    11:03:1972 ஞானஒளி வெளியான நாளிலிருந்து 25:04:1972 வரை 45 நாட்களுக்குள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், 80% மேற்பட்ட 38 அரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டுப் படங்களின் பட்டியல்.
    சென்னை அதன் நகர்ப்புறம் மட்டுமல்லாது டூரிங் கொட்டகையிலும் அய்யனின் பழைய படங்கள் திரையிடப்பட்டு "எங்கெங்கு காணிணும் சிவாஜியடா..." அன்று வசூல் சுனாமினையே ஏற்படுத்தி இருக்கிறது, 1972 ஆமாண்டு...
    இவையெல்லாம், தேர்தலில் வென்றவர்கள் மட்டுமே சினிமாவிலும் ஜெயித்திருக்க முடியும் என்று கண்மூடித் தனமாக நம்பும் இன்றைய ஊடகங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...
    பகிர்வோம்... தெரியப்படுத்துவோம்...
    ஆதாரத்திற்கு பின்னிணைப்பாக உள்ள 'ஞானஒளி' படத்தின் விளம்பரம் காண்க!.






    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1994
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    sekar.p





    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1995
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Usha R

    மேலே பதிவு செய்யப்பட்டுள்ள தினமலர் கட்டுரை தெளிவாக நம் பார்வைக்கு.

    பாசமும், நேசமும் நிறைந்த குடும்பத் தலைவர் சிவாஜி!
    சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் அவர்கள்
    மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், மணிரத்தினம், கதிர், செய்யாறு ரவி, கரு.பழனியப்பா, திருமுருகன், கண்ணன், பத்ரி வெங்கட் போன்ற பல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை, தமிழில் அறிமுகப்படுத்தியவரும், "ஆனந்தம், இதயம்' போன்ற பல, மெகா, "டிவி ' தொடர்களையும் தயாரித்தவருமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி, சுவாரசியமான, பசுமையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
    பிரபு, ராம்குமார் போல, நானும் சிவாஜி கணேசனை ,"அப்பா' என்றே அழைப்பேன். அவ்வளவு நெருக்கமான பழக்கம். நடிப்பைத் தவிர, அவர் அறிந்த இரு விஷயங்கள், பாசமும், நேசமும் தான்!
    எங்கள் குடும்பத்திற்கும், சிவாஜி குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி, டி.ஏ.மதுரத்தின் இளைய சகோதரி தான், என் அம்மா, டி.ஏ.பட்டம்மாள். இளம் நாடக நடிகராக இருக்கும் போதிலிருந்தே, சிவாஜிக்கு என் அம்மாவிடம் மிகுந்த பாசம். "பட்டு' என்று, அம்மாவை பாசமாக, சகோதரர் என்ற உரிமையோடு அழைப்பார்.
    என் தந்தை, டி.கோவிந்தராஜும், வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து, வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, ஸ்ரீதரின் கதை, வசனத்தில், "அமர தீபம்' (சிவாஜி, பத்மினி) என்ற படத்தை தயாரித்தனர். அது, மிகப்பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து என் தந்தை தயாரித்த, "உத்தம புத்திரன்' சிவாஜி, இரு வேடங்களில் நடித்த முதல் படம். அப்படமும்,பெரிய வெற்றியைப் பெற்றது. நட்பு ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், சிவாஜிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் நெருக்கமான உறவு, மேலும் வலுப்பட்டது.
    அரை நிக்கர் அணியும் பருவத்திலிருந்தே, வாரத்திற்கு ஒரு முறையாவது சிவாஜி வீட்டுக்கு சென்று, அன்று முழுவதும் தங்கி இருப்பேன். சிவாஜிக்கு, தோட்டமும், பண்ணை வீடும் ராமாவரத்தில் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் ராம்குமார், பிரபு, கிரி, முரளி, மற்றும் நெருங்கிய உறவினர்களின் மகன்கள், நான் எல்லாரும் ஒன்றாக இருப்போம்.
    தோட்டத்தில் பெரிய பம்ப் செட்டு போட்டு, குற்றாலம் அருவி போல தண்ணீர் கொட்டும். அங்கு, ஆசை தீர எல்லாரும் குளிப்போம். சில சமயம், சிவாஜியும் எங்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியாக குளிப்பார். தோட்டத்தில், அவர் குதிரை சவாரி செய்வார். டார்கெட் வைத்து, துப்பாக்கி சுடுவார். குறிபார்த்து டார்கெட்டை சுடுவதில், அவர், "எக்ஸ்பர்ட்!'
    நான் சினிமாவிற்கு வர வேண்டாம் வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக, மேனேஜ்மென்ட் படிக்க வேண்டும் என்று, என் தந்தை, என்னை எம்.பி.ஏ., படிக்க, அமெரிக்கா அனுப்பி வைத்தார். ஆனால், எம்.பி.ஏ., படித்து முடித்து, இந்தியா திரும்பியதும், நான் சினிமாத் துறையிலேயே சேர்ந்தேன்.
    எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பணிபுரிந்தவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகள் செல்வி தான் என் மனைவி. என் தந்தை, வீனஸ் கோவிந்தராஜ் மற்றும் ஆர்.எம்.வீ., இருவரும் நல்ல நண்பர்கள். பெரியவர்கள் பார்த்து, எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
    "நீங்க கண்டிப்பாக வர வேண்டும்...' என்று, சிவாஜியிடம் நான் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர் பல ஆண்டுகள் கழித்து, என் மாமனார் வீட்டுக்கு வந்தார். என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து, நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினர்.
    "நான் மாப்பிள்ளை சைடு' என்று சிவாஜியும், "நான் பெண் வீட்டு சைடு' என்று எம்.ஜி.ஆரும் அறிவித்தது, மேலும், இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கியது. இருவரும் நிகழ்ச்சி முழுவதும் இருந்து, எங்களை கவுரவித்தனர்.
    சிவாஜி அமெரிக்கா சென்றிருந்த போது, கலைவாணரின் மகளும், என் சகோதரியுமான கஸ்தூரி கிருஷ்ணன் வீட்டில் தங்கினார். அங்கு, தனக்கு கிடைத்த சுதந்திரத்தை ரொம்பவும், "என்ஜாய்' செய்தார். சினிமா தியேட்டரில், மக்களோடு மக்களாக க்யூ வரிசையில் நின்று, டிக்கட் வாங்கி உள்ளே சென்றார். ஷாப்பிங் மாலில், "டிராலி'யில் பொருட்களை வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். இது பற்றி, சிவாஜி என்னிடம் சொல்லும் போது, "இதெல்லாம் மெட்ராசிலே செய்ய முடியுமா? அங்கு பலருக்கு நம்மை தெரியாதுங்கிறதும் ஒரு சுகம் தானேடா' என்றார்.
    எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில், "புதிய வானம்' என்ற படத்திற்காக, ஸ்கிரிப்டை ஓ.கே., செய்தோம். அதில், ஒரு பவர் புல்லான போலீஸ் அதிகாரி கேரக்டர், அதை சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். சிவாஜி ஒப்புக் கொள்வாரா? இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும், நானும் அன்னை இல்லம் சென்று, அவரிடம் கதையை சொன்னோம்.
    அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்துப் போனதால், ஓ.கே., சொன்னார். "நான் உங்களுக்குப் படம் பண்ணினால், எம்.ஜி.ஆர்., ஏதாவது நினைப்பாரா?' என்றார். "மாமா (ஆர்.எம்.வீ.,) எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருப்பார்...' என்றேன்.
    சிவாஜி, சத்யராஜ், ரூபினி, கவுதமி படத்தில் முக்கிய ஸ்டார்கள். சிவாஜி படப்பிடிப்பிற்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வருவார் என்பது, திரைப்படத் துறையில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அதை நேரில் பார்க்கும் போது, தனி த்ரில் தான்! படத்தில் நடிக்க சிவாஜி போட்ட ஒரே கண்டிஷன், "காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டும். இரண்டு மணிக்கு(மதியம்) என்னை விட்டுடணும். அவுட்டோரிலேன்னா, கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்லை...'
    வாஹினி ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டிருந்தோம். 7.00 மணிக்கு படப்பிடிப்பு என்பதால், அவசரமாக கிளம்பி, 7.00 மணிக்குள் அங்கு போய் சேர்ந்தேன். முழு காஸ்ட்யூம் அணிந்து, மேக்-அப் முடிந்து, 6.45 மணிக்கே அங்கு வந்து சேர்ந்து, படப்பிடிப்பு தளம் பூட்டி இருந்ததால், வெளியே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார் சிவாஜி.
    சிவாஜி நடிப்பதை, அருகே இருந்து பார்ப்பது, பெரிய பாக்கியம். அவரிடமிருந்து, ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம்.
    நடிகர் திலகம் காங்கிரசிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தார். தேர்தலின் போது, ஓட்டு சேகரிக்க தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தார். நிறைய அலைச்சலுக்குப் பின், தன் சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு வந்தார். அவரை சந்திக்க, அங்கு சென்றேன்.
    "ஐயா மாடியில் இருங்காங்க...' என்றனர். மாடியில் ஒரு உதவியாளர் அவருக்கு கை, கால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரை போகச் சொல்லி விட்டு, நான் இதமாக அவருக்கு பிடித்து விட்டேன். "உள் கிராமங்களிலே ஜாக்கெட் கூட அணியாமல், புடவை மட்டும் உடுத்தி, பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்கடா... எவ்வளவு ஏழ்மை, பார்த்தாலே கஷ்டமாக இருந்தது...' என்று சொல்லி, அவர்களுக்காக உண்மையாக வருந்தினார். அதை, என்னால் உணர முடிந்தது.
    சிவாஜி, அப்போலோ மருத்துவமனையில் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். உடனே, ராம்குமாரை தொடர்பு கொண்டேன். "தியாகு... நீ இப்போ வீட்டுக்கு வராதே. எக்கச்சக்கமான கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து போட்டிருக்காங்க. நீ நேரே அப்போலோ போயிடு. சிவாஜி உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வருகிற பொறுப்பை, நீ எடுத்துக்கோ. ஜாக்கிரதை...' என்றார் ராம்குமார்.
    ஆம்புலன்ஸ் வண்டி வந்ததும், சிவாஜியை அதில் ஏற்றி, தி.நகர் போக் ரோட்டில் உள்ள, அன்னை இல்லத்திற்கு எடுத்து சென்றோம்.
    திரை உலகில், அவர் செய்த சாதனைகள், பாசமிகு குடும்பத் தலைவரான அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவருடன் நெருங்கி பழகியது எல்லாம், என் மனத் திரையில் ஓடியது. அவருடன் இறுதியாக இருந்த சில நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாது.




    courtesy nadigarthilagam visirigal
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1996
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1997
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1998
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Sivaji Ganesan – Definition of Style 41



    தமிழ்த் தாய் தலைநிமிர்ந்து சில விஷயங்களில் கர்வத்தோடு புன்னகை புரிகிறாள் என்றால் அதில் நிச்சயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அங்கம் வகிப்பார். தமிழ் மொழி உள்ளவரை, நல்ல கலை ரசிகன் உள்ளவரை நடிகர் திலகத்தின் புகழ் நிலைத்து நீடித்திருக்கும்.

    இறைவனால் படைக்கப்பட்ட ஓர் அவதார புருஷன் நடிகர் திலகம். இறுதி மூச்சு வரை அவருடைய கலை அவரை விட்டுப் பிரியவில்லை. அதே போல் அவர் போனவுடன் அவருடனேயே அந்தக் கலையும் பறந்து விட்டது.

    இத்தொடரைப் பொறுத்தமட்டில் இதுவரை காட்சிகளுக்கே விளக்கங்கள் ஆய்வுரைகள் இடம் பெற்று வந்தன. ஆனால் ஒரு நிழற்படத்துக்கே ஒரு பெரிய வியாக்கியானத்தை எழுதும் அளவிற்கு அவருடைய முகபாவம் அமைந்துள்ளது என்றால் அது இறையருளால் அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதமான நடிப்பு என்னும் கலையன்றோ.

    ஆம். இன்று இத்தொடரில் இடம் பெறுவது ஓர் நிழற்படத்திற்கான விளக்கவுரை. கண்ணிலே கலைவண்ணம் கண்ட காவிய நாயகனின் முகமும் அதில் பாவனையும் அவருடைய காலப்பிரமாணத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் அற்புத நிழற்படம்.

    1992ம் ஆண்டில் அவருடைய இந்த உயிரோவியமான நிழற்படம் நம்மை இந்த அளவிற்கு பாதிக்கிறதென்றால் இதை என்னென்பது.

    இது வெறும் நிழற்படமல்ல. ஆயிரம் கதை கூறும் அஜந்தா ஓவியமாய் காலங்களைக் கடந்து நிற்கும் வல்லமை பெற்றது.

    ஒரு மருத்துவமனையின் ஊழியர்கள் இருவர் இறந்து கிடக்கின்றனர். இரண்டுமே வெவ்வேறு இடங்களில் கிடப்பதால் காவல் எல்லை குறுக்கிட காவல் அதிகாரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

    மரணமான இரு ஊழியர்களைப் பற்றி கீர்த்தி விசாரிக்க ஒரு ஊழியர் வலியமுன் வந்து அந்த மருத்துவமனையின் சில மர்மங்களை அவரிடம் கூறுகிறான். அந்த சாட்சியை நவீன் கடத்தி வந்து வலுக்கட்டாயமாக பொய் சொல்ல வைக்க முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் விஷயம் தெரிந்து கீர்த்தி அவரை விடுவித்து அழைத்துச் செல்கிறார்.

    கீர்த்தி மற்றும் நவீன் ஆகிய இரு காவல் அதிகாரிகளுக்கும் இதனால் பகை உணர்வு தலைதூக்குகிறது.

    ஒரு கட்டத்தில் காவல் துறையில் நேர்மையாக பணியாற்றுவதற்கு ஏற்படும் இடையூறுகளால் கீர்த்தி மனம் நோகிறார். தன் காவல் பணியை ராஜினாமா செய்கிறார். ஆனால் மருத்துவமனையில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் மோனா அவருக்கு உதவுவதாக கூறுகிறார். இதற்கிடையில் கீர்த்தியின் நண்பன் அவரை டைகர் சதுர்வேதி என்கிற பிரபல வழக்கறிஞரிடம் அறிமுகப்படுத்துகிறான். டைகர் சதுர்வேதி மிகப் பெரிய வக்கீல், மிகப் பெரும் அறிவாளி. திறமைசாலி. அவரிடம் ஒப்ப்டைத்தாலே நிச்சயம் உண்மை வெளிவரும் எனக்கூறுகிறான் கீர்த்தியின் நண்பன்.

    டைகர் சதுர்வேதி கீர்த்தியை வரவேற்று ஆறுதல் கூறுகிறார். மருத்துவமனை ஊழியர்கள் மரணம் பற்றிய விவரங்களை கேட்டறிந்து மேற்கொண்டு அதைத் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி அவனை பம்பாய்க்கு அனுப்புகிறார்.

    மருத்துவமனையில் மோனா சந்திக்கும் சில நிகழ்வுகள் அவளிடம் பாதிப்பை ஏற்படுத்த, ஆர்ச் பிஷப்பிற்கு தகவல் தெரிவிக்கிறாள். ஆர்ச் பிஷப்பும் டாக்டர் ராஜசேகர் அவர்களை நியமித்து மருத்துவமனையில் நடைபெறும் மர்ம விஷயங்களை கண்காணித்து அனுப்ப ஆணையிடுகிறார். அதன் பேரில் மருத்துவ மனைக்கு வரும் டாக்டர் ராஜசேகர் மோனாவிடம் கலந்துரையாடுகிறார். டாக்டர் ராஜசேகர் கணக்காளரும் கூட என்பதால் கணக்கு வழக்குகளில் எங்கே அவர் தவறுகளைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற ஐயம் சிலருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக டாக்டர் ஜான்சனுக்கு இவருடைய வரவு கிலியை ஏற்படுத்துகிறது. தன் மேலிடமான ரத்தினசாமியிடம் தகவல் தெரிவிக்கிறார். இவர்கள் மிகவும் தந்திரமாக இதில் டாக்டர் மோனாவை நுழைத்து விடுகின்றனர். டாக்டர் ராஜசேகர் கொலை செய்யப்படுகிறார்.

    மருத்துவமனை ஊழியர்களைக் கொன்றது யார்.
    டாக்டர் ராஜசேகர் கொல்லப்பட்டாரா
    அப்படியானால் அவரைக் கொன்றது யார்.
    மருத்துவமனையில் என்ன மர்ரம் இருந்தது.
    இவற்றிற்கெல்லாம் படம் பார்த்து விடை தெரிந்து கொள்ளலாம்.

    ஒரு கட்டத்தில் திடீரென சதுர்வேதியின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. லேசான அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது. டாக்டர் மோனா அவரை கவனித்துக் கொள்கிறார். சிகிச்சையின் ஒரு பகுதியாக ஊசி செலுத்த முற்படும் போது சதுர்வேதி வேண்டாம் என முரண்டு பிடிக்கிறார்.

    இரும்பு மனம் கொண்ட சதுர்வேதியின் நெஞ்சத்தை அசைத்துப் பார்க்கிறார் டாக்டர் மோனா. ஊசி செலுத்தும் போது, நான் உங்கள் மகளாக இருந்தால் ஊசி போட மறுப்பீர்களா என மோனா கேட்க சதுர்வேதியால் ஒன்றும் பேசமுடியவில்லை. காரணம் சதுர்வேதியும் அவர் மனைவி லக்ஷ்மியும் சிறுவயதிலேயே தங்கள் குழந்தையை பறிகொடுத்து விட்டிருந்த படியால் இது அவரை அசைத்து விடுகிறது. மோனாவின் வார்த்தை அவருக்குள் அவருடைய மகளின் நினைவை தூண்டி விடுகிறது. பாசத்தால் உருகும் சதுர்வேதி, டாக்டர் மோனாவின் முகத்தைப் பார்க்கிறார். அதில் அவருக்கு தன் மகளை இழந்த துக்கம் மேலிடுகிறது. அதில் அவளுடைய வளர்ந்த மகளாய் மோனா காட்சி தருகிறாள். மகளின் நினைவால் துயருறுவதா அல்லது மோனாவின் ஆறுதலால் மகிழ்வுறுவதா என தடுமாறுகிறார் சதுர்வேதி. காயத்ரி மந்திரம் சொல்லியே என்னை கவுத்துட்டியேம்மா என அன்போடு அவளிடம் உருகுகிறார் சதுர்வேதி. காயத்ரி அவருடைய மகளின் பெயராகும். அவருடைய முகம் நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்குகிறது. மோனாவைத் தன் மகளாகவே பாவித்து விடுகிறார். லக்ஷ்மியும் அவரைப் போலவே மோனாவிடம் தங்கள் மனதைப் பறிகொடுத்து அவளைத் தங்களுடைய மகளாக பாவிக்கிறார்.

    டைகர் சதுர்வேதியாக நடிகர் திலகம், காவல் அதிகாரி கீர்த்தியாக இளைய திலகம் பிரபு, சதுர்வேதியின் மனைவி லக்ஷ்மியாக ஸ்ரீவித்யா, டாக்டர் மோனாவாக ராமாயணம் புகழ், முன்னாள் நாடுமன்ற உறுப்பினர் தீபிகா, டாக்டர் ராஜசேகராக சரத்பாபு, காவல் அதிகாரி நவீனாக கேப்டன் ராஜ், ஜான்சனாக நாசர், கீர்த்தியின் நண்பனாக ஜனகராஜ் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

    இநத் காட்சியில் நடிகர் திலகத்தின் முகத்தில் ஒரே சமயத்தில் சந்தோஷமும் சோகமும் பிரதிபலிப்பதை எடுத்துக்காட்டுவதே இணைக்க்ப்பட்டுள்ள நிழற்படம். எப்பேர்ப்பட்ட கலைஞன். ஒரு முகத்தில் தான் எத்தனை முகபாவம்..

    இப்போது முதல் பாராவை மீண்டும் படியுங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1999
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்,
    மீண்டும் கலக்கல்., அருமையான Analysis. அந்தோணி பாத்திரத்தை மிக நன்றாக அலசியிருக்கிறீர்கள். அந்தோணி அருணாக Transform ஆகும் போது Psychological Transformation கூடவே ஏற்படுவதை உருவகப்படுத்தி எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்கு ஒரு Theory உருவாக்கி அதில் தன்னுடைய தனித்துவத்தையும் கொண்டு வந்து ஒரு கல்லில் பல மாங்காய் அடித்திருக்கிறார். No Actor in the Entire Univeerse Ever can conceive such an exemplary performance except the one and only NADIGAR THILAGAM and Gnana Oli is the Prime evidence.. Hats off to you
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2000
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •