Results 1 to 10 of 3994

Thread: Old PP2

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like


    From Facebook; thanks to Roza Vasanth...

    "ஒரு நல்ல கலைஞர் நேர்மையாளராகவும், ஓர்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் தர்க்கம் எனக்கு பிடிபட்டதே இல்லை. நல்ல கலை நற்பண்புகளை கொடுக்கும் என்கிற பழமையான மொண்ணை சிந்தனையே இப்படி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஒரு அரசியல் எழுத்தாளரிடம் இப்படி ஒரு ஓர்மையை எதிர்பார்ப்பதிலாவது கொஞ்சம் நியாயம் இருக்கலாம்; புனைவு எழுத்தாளரிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை என்றாலும, அதையாவது புரிந்து கொள்ள முடியும். ஒரு இசையமைப்பாளனிடம் எதற்கு நல்ல பண்புகளையும், நேர்மையையும், தலைக்கனமற்ற பணிவையும் எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவேயில்லை. எந்தவகையில் ஒரு இசையமைப்பளனின் கள்ளமும் கபடமும், இந்த சமூகத்தை, குறைந்த பட்சம் அவன் படைக்கும் இசையை பாதிக்கப் போகிறது? ஒரு கலைஞன் கள்ளத்தனமாகவே தொடர்ந்து பேசிவரலாம்; ஏறி வந்த ஏணியை கேவலப்படுத்தலாம்; அதன் மீது அவதூறு சொல்லலாம், ஏசலாம்., கேவலப்படுத்தலாம், பொய் பேசலாம். ஆனால் அதையெல்லாம் மீறி அவனது கலைப்படைப்பின் முக்கியத்துவம் காலத்தில் நிற்கும். அந்த வகையில் என்றும் ஒரு மகத்தான பாடலாசிரியராக கங்கை அமரனை கருதுகிறேன். அவரது இசையமைப்பிலும் சில பாடல்களும் தனித்துவமானது. உதாரணமாக ‘உனதே இளம் மாலை பொழுது..” படம் வெளிவராவிட்டாலும் தமிழ்திரையிசையின் முக்கியமான பாடல். (சுட்டி பின்னூட்டத்தில்). கருத்துதிர்ப்புகளின் consistencyயில் எல்லோரும் இளையராஜா அளவிற்கு துல்லியமான நேர்மை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை".

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •