Page 4 of 401 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #31
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று மதிப்புக்குரிய பெரியவர் உயர்திரு. எம்.ஜி.சி அவர்களின் பிறந்தநாள்.

    இன்றைய கழக உறுப்பினர்கள் பலருக்கு தெரியாத உண்மை. புரட்சித்தலைவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை சென்று பொது இங்கு .......... அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் உயர்திரு. எம்.ஜி.சி அவர்களே.

    சமீபத்தில் மறைந்த கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வரை அழைத்து - தேர்தலை கருதி, புரட்சித்தலைவரின் சகோதரர் மற்றும் கழகத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில், " நீங்கள் பிரச்சாரத்துக்கு செல்லுங்கள்" என்று சொன்னார். இதை எதிர்த்து யாரு பேச முடியும்? யாரும் பேசவில்லை.

    பெரியவர் உயர்திரு. எம்.ஜி.சி அவர்கள் குடும்ப நபர்கள் அனைவருக்கு எங்களது வாழ்த்துக்களையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
    தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
    தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
    அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
    ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்




    சைலேஸ் பாசு அவர்கள் முகநூல்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like



    எங்கள் "பெருமாள்" [புரட்சித்தலைவர்] சார்பில் வருகின்ற பதினேழாம் தேதி [17/1/2017] பல முதியோர் இல்லம், அனாதை இல்லம், தொழிலாளர் முகம் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் "ஒலிக்கிறது உரிமைக்குரல்" மாத இதழ் மற்றும் உலகமெங்கும் வாழும் "பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம்" சார்பில் "நாள் முழுவதும்" அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு அன்பு வேண்டுகோள், சிறிது அளவு பணம் இருந்தால் குறைந்தது ஒரு நபருக்காவது அன்று உணவு வழங்க வேண்டும் என்பதுதான். பணம் இருப்பவர்கள் அன்னதானம் மற்றும் சுவரொட்டி, மாலை, மைக் செட் என்று கொண்டாடுவார்கள் போற்றுவார்கள். பணம் இல்லாதவர்கள் அவர்களது நிலைமைக்கு ஏற்ப அன்னதானம் செய்யவும்.

    அன்று நாள் முழுவதும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் பலர் நேரமின்மை காரணமாக புரட்சித்தலைவர் நினைவிடத்தில் மரியாதையை செலுத்த இயலாது. என்றாலும் புரட்சித்தலைவர் பெயரால் அவர்கள் ஈடுபடும் "அன்னதான" நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதே புரட்சித்தலைவருக்கு செய்யும் சேவை.

    எல்லா புகழும் புரட்சித்தலைவருக்கே!

    -

    -சைலேஸ் பாசு அவர்கள் முகநூல்.

  4. #33
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #34
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 13th January 2017 at 02:08 PM.

  6. #35
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #36
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 21 துவக்கிய எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

    இனிய நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு லோகநாதன் , திருசுகராம் , திரு சுந்தரபாண்டியன் , திரு மகாலிங்கம் ஆகியோர்களின் பதிவுகள் மிகவும் அருமை

    .மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்து பத்திரிகை மற்றும் தினமணி பத்திரிகை சிறப்பு புத்தகங்கள் வெளியிட உள்ளார்கள் .
    இனிய நண்பர் திரு பம்மல் சாமிநாதன் அவர்கள் மக்கள் திலகத்தின் பிரமாண்ட 2017 காலண்டர் வெளியிட்டு உள்ளார் .

    இன்னும் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு தகவல்கள் தொடரும் ....

  8. #37
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் '' தாய்க்கு தலைமகன்'' இன்று பொன்விழா நிறைவு பெற்று 51வது ஆண்டு துவக்கம் .

  9. #38
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் திருநாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ......14.1. 1978

    மாட்டுக்கார வேலன் .................... 14.1.1970

    அன்பே வா ........... 14.1.1966

    எங்க வீட்டு பிள்ளை ........14.1.1965

    வேட்டைக்காரன் ------------14.1.1964

    ராணிசம்யுக்தா 14,1, 1962

  10. #39
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனவரி 17: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு

    ‘பெற்றால்தான் பிள்ளையா’.

    தான் நடித்த படங்களில் தனக்குப் பிடித்த படம் இது என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார். கிழிந்த சட்டையுடன் தாறுமாறான கோலத்தில் கதாநாயகனான எம்.ஜி.ஆரைக் கதையின் மைய நீரோட்டத்துக்குள் இழுத்துச் சென்ற காட்சிகள் ரசிகர்களைத் திகைக்கவைத்தன. ‘நம் தலைவர் ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாக மாறி, இப்படியும் கூட நடிப்பாரா!’ என வியந்து ரசித்தார்கள். அந்தப் படம், தன் வழக்கமான அம்சங்களிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர்.குணச்சித்திரப் பாத்திரம் ஏற்று நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’. இந்த உணர்ச்சிப் போராட்டச் சித்திரம் வெளியான ஆண்டு 1966. இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு.

    கதையும் கதாபாத்திரங்களும்

    ஜீவாவைக் கிராமத்தில் சந்தித்து ஆசைவார்த்தைகள் கூறி ஒரு குழந்தைக்குத் தாயாகவும் ஆக்கிவிட்ட சேகர் (எஸ்.ஏ.அசோகன்), அவளைக் கைவிட்டுவிட்டு நகரத்துக்கு வந்துவிடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியாக ஜீவா (சௌகார் ஜானகி) நகரத்துக்கு வந்ததும் நடக்கும் சம்பவங்கள் ஜீவாவைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. கையிலிருந்த குழந்தையாவது வாழட்டும் என்று கோயில் பிராகாரத்தில் வைத்துவிட்டுச் செல்கிறார். அதிர்ஷ்டவசமாகக் குழந்தை ஆனந்தனின் (எம்.ஜி.ஆர்) கைகளுக்கு வரவும் கதை வேறு திசைக்கு நகர்கிறது. குழந்தையோடு ஆனந்தன் கொள்ளும் பாசமும் தற்கொலை முயற்சியிலிருந்து தடுக்கப்பட்ட ஜீவா குழந்தையைத் தேடிச் செல்வதில் உண்டாகும் பரிதவிப்பும் மோதிக்கொள்கின்றன.

    சௌகார் ஜானகிக்கு இதுபோன்ற பாத்திரங்கள் தனி ஜொலிப்பைக் கொடுக்கக்கூடியவை. மற்ற பாத்திரங்களுக்கும் பழகிவந்த பாதைகள்தான். ஆனால், எம்.ஜி.ஆர். தன் இயல்புகளை விட்டொழித்துத் தனித்த பாத்திரமாகிறார். தான் ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரம் தன் இயல்பில் மாறிவிடாமல் கதையின் மையத்தோடு பொருந்திக்கொள்கிறார். அனாதையாகத் திரியும் ஆனந்தன் அதற்கேற்ற உடைகளோடும் பித்தேறிய மனத்தோடும் ரசிக மனங்களுக்குள் புகுந்துகொள்வதில் சிரமமில்லை.

    ஜீவாவைக் கைவிட்டு சுகபோகமாக வாழ முயற்சி செய்கிற சேகர், எதிர்பாராத விபத்தில் கால்களை இழந்ததும் ஜீவாவே தனக்கேற்ற துணைவி என்று மனம் மாறுகிறான். ஜீவாவுக்கோ தன் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கம். நகர வாழ்வின் கொடுங்கரங்கள் அவளுக்கு மாற்று வழியைக் காட்டவில்லை. சேகரின் சொத்துகளை அபகரிக்கும் முயற்சியாகக் கலா மேற்கொள்ளும் அபத்த நாடகம் சேகரின் கண்ணைத் திறந்தபிறகு வரும் காட்சிகள் அந்தப் படத்தை இன்னும் உயர்த்திவிடுகின்றன.

    தானே தாயாதல்

    பிற படங்களில் எம்.ஜி.ஆர். ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தாயின் அரவணைப்புக்குள் சிக்கிக் கிடப்பதாகும். பல விதமான நெருக்கடிகள் நேர்ந்தாலும் தாயின் நல்லொழுக்கத்துக்கும் அன்புக்கும் மாறான செயல்களை அக்கதாபாத்திரம் செய்வதில்லை. இப்படம் எம்.ஜி.ஆருக்கான முதல் சவாலைத் தாய் கதாபாத்திரம் இல்லாத ஒரு கதைக்களத்தில் நிலை நிறுத்தியது. அவரே தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் மாறுகிறார். வாழ்க்கையைப் பற்றிய அக்கறையில்லாமல் கால் போன போக்கிலெல்லாம் அலைந்து திரிகிற ஆனந்தனுக்குச் சிறுவன் கண்ணனின் இருப்பு வேறு உலகை நிர்ப்பந்திக்கிறது.

    விடலைத்தனங்கள், சம்பாத்தியமின்மை, அலட்சியம் என்றிருந்த நிலை மாறுகிறது. கிழிந்த சட்டையோடு தெருவெங்கும் சுற்றித் திரியும் ஆனந்தன், தன் உழைப்புக்குப் பின்னரே நல்ல சட்டையை அணிந்துகொள்ளும் வாய்ப்பை எய்துகிறான். ஆனந்தனுக்கு இருக்க இடமளிக்கிற கபாலியும் மோகினியும் அந்தக் குழந்தையின் வளர்ப்புக்குத் துணைபுரிகிறார்கள். தாயும் தந்தையுமற்ற கண்ணனை முன்வைத்து ஆனந்தனும் மோகினியும் தாயும் தந்தையுமாக மாறும் வாய்ப்பு உருவாகிறது.

    ஆனால், குழந்தைக்காகப் பரிதவிக்கும் ஜீவாவும் சேகரும் எடுக்கும் தீர்மானம் ஆனந்தனைப் பெரும் சுழலுக்குள் தள்ளுகிறது. கண்ணன் இல்லையென்றால் ஆனந்தனுக்கு அடுத்த வாழ்க்கை இல்லை. ஆனந்தனின் நிழலில் கண்ணன் வளர்கிறான் என்ற தோற்றம் மாறி, கண்ணனின் நிழலில் ஆனந்தனுக்கு வாழ்க்கை கிடைத்திருப்பதை உணர்கிறோம். கற்பனையான ‘அம்மா’ ஊருக்குப் போயிருக்கிறார் எனக் கண்ணனை நம்பவைத்து அந்தக் கற்பனையில் தன்னைத் தந்தையாக்கிக் கொள்கிற ஆனந்தனின் வாழ்வு என்னாகும்? குழந்தைக்கான போராட்டம் அவனுடைய சொந்த வாழ்க்கைப் போராட்டமாக மாறுகிறது.

    ஆனந்தனிடமிருந்து கண்ணனைப் பிரித்தெடுக்கும் சூழல் இருவரையும் பாசப் போராட்டத்துக்குள் தள்ளுகிறது. ஒரு குழந்தை தன் தாயின் இருப்பை எதன் மூலம் உணர்கிறது, ஒரு ஆதரவற்றவனின் தந்தைமை நிலையை எவ்விதம் நிராகரிப்பது என்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஒவ்வொருவரையும் பரிசீலனை செய்ய வைக்கின்றன.. குழந்தை, கதையின் மையமாக அனைத்துக் கதாபாத்திரங்களையும் தன் ஈர்ப்புக் குள் இழுக்கிறது; அதனை மீறி எவரும் வெளியே சென்றுவிட வாய்ப்பில்லை என்பதும் மிகமிக அழகு.

    நல்லவேளையாக, எம்.ஜி.ஆருக்குப் பாத்திரத்தோடு ஒன்றும் ஆவேசம்! நீதிமன்றத்தில் வாதாடுவது நல்ல உதாரணம். கண்ணன், அம்மாவிடமிருந்து ஓடோடி வந்து ஆனந்தனின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னோடு அழைத்தாலும், சட்டத்தின் முன் ஏதும் செய்ய இயலாத துரதிர்ஷ்டசாலியாக உறைந்துபோய் நிற்கிறான். குழந்தையை இவ்வுலக நியதிக்குள்ளிருந்து அவனால் இனிமேல் பெற முடியாது.

    யாருக்கும் இழப்பில்லை

    இறுதியில் எவரும் மறுக்க முடியாத முடிவைப் படம் எட்டுகிறது. இதில் குழந்தையை இழப்பவருக்கும் இழப்பு இல்லை. இயற்கையின் நியதிகளை இவ்வாறு மாற்றியமைப்பது ஒருவகையில் மனிதத்துவத்தின் வெற்றி. உலகமயம் ஆர்ப்பரித்து நிற்கும் இக்காலத்தில் இப்படம் அதற்கு எதிரான மனநிலையை உருவாக்கிச் செல்கிறது. அதற்கேற்ற அற்புதமான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதியிருக்கிறார்.

    உணர்ச்சிக்கும் உரிமைக்குமான போராட்டக் களத்துக்குள் நுழைகிற கதாபாத்திரங்கள் ஏராளமானவை. எம்.ஜி.ஆரின் படங்களில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை கைக்கு அடக்கமாகவே இருக்கும். இப்படம் ஏராளமான கதாபாத்திரங்களை உள்ளிழுத்திருக்கிறது. சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா. அசோகன், நம்பியார், தங்கவேலு, டி.எஸ். பாலையா, ஷகீலா என்று பெரிய நட்சத்திரக் கூட்டம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான காட்சிகள். ஒவ்வொரு பாடலும் மெல்லிசை மன்னரின் குழந்தைமைக்கான தாலாட்டும் தன்மை கொண்டது.

    பி.என். சுந்தரம், கிருஷ்ணன் பஞ்சு போன்ற தேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புக்கும் அன்பைப் புகட்டுவதைப்போல வந்த கதையமைப்புக்கும் எம்.ஜி.ஆர். தன் ஆகிருதியைக் களைந்து நட்சத்திரத் தோரணையற்ற நடிப்பால் வண்ணம் தீட்டியிருக்கிறார். அதன் பொருட்டாக இப்படம் அரை நூற்றாண்டுக் காலம் தாண்டியும் நம் நெஞ்சில் இன்னும் நிற்கிறது.

    courtesy - the hindu

  11. #40
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    அன்று இன்னும் பல சம்பவங்களைப் பற்றிப் பேசினீர்கள்.

    முக்கியமாக, ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் சுடப்பட்டார்’ என்ற நிலைகுலைய வைத்த செய்தி வெளியாகி, தமிழ்நாடே அதிர்ந்து நின்ற 1967 ஜனவரி 12-ம் தேதி பற்றி பேசினீர்கள்.

    அன்று வியாழக்கிழமை, இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் மேட்ச் மறுநாள் சென்னையில் துவங்க இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமைதான் எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படம் வெளியாகவிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம்! இன்று வாசகர்கள் படிக்கப் போகும் தேதியும் ‘தாய்க்குத் தலைமகன்’ படம் வெளியான அதே ஜனவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமைதான். நேற்று எம்.ஜி.ஆர். சுடப்பட்ட தினம். 50 ஆண்டுகள் கடந்து விட்டன! சரி.... விஷயத்துக்கு வருகிறேன்.

    கிரிக்கெட் மேட்ச் போவதற்கு இரண்டு டிக்கெட் உங்கள் வசம் இருக்க... அண்ணன் ஜெயகுமார் மேட்சுக்கு வர மறுக்க... அன்னையை உடன் வரும்படி கேட்டீர்கள். ‘‘பட ரிலீஸ் தொடர்பாக கவனிக்க வேண்டிய சில பணிகள் உள்ளது. ‘தேவர் பிலிம்ஸ்’ போக வேண்டும். நீ வேண்டுமானால் ராஜம்மாவை (நடிகை எம்.என்.ராஜம்) துணைக்கு அழைத்துப் போ’’ என்று உங்கள் அம்மா சொல்லி இருந்தார்.

    நடிகை எம்.என்.ராஜம் அவர்களுக்கு கிரிக்கெட் ஆர்வம் உண்டு என்பதை விட, சந்தியா இல்லாத நேரங்களில் தங்களுக்கு துணையாக அவர் இருப்பார் என்பதை நீங்களே அடிக்கடி சொன்னதுண்டு.

    ‘ராஜத்திற்கு போன் செய்து கேட்கலாம்’ என்று நீங்களும், தாய் சந்தியாவும் பேசிக் கொண்டிருந்தபோது, தொலைபேசி மணியடித்தது. எடுத்து பேசினீர்கள். ‘தாய்க்குத் தலைமகன்’ படத்தைத் தயாரித்த ‘தேவர் பிலிம்ஸ்’ நிறுவனத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. ‘‘ராமாவரம் தோட்டத்து வீட்டில் சின்னவர் (எம்.ஜி.ஆர்.) சுடப்பட்டார்’’ என்கிற செய்தி காய்ச்சிய இரும்புக் குழம்பாய் உங்கள் செவிகளில் பாய, வீறிட்டு அலறினீர்கள்.

    பதைபதைத்துப் போன தாய் சந்தியா விவரத்தை கேட்க, நீங்கள் சின்னவர் சுடப்பட்ட செய்தியை சொன்னீர்கள். ‘‘இருக்காதும்மா, தேர்தல் நேரம். பரங்கிமலை தொகுதியில் அவர் போட்டியிடுவதால். வேறு ஏதாவது தேர்தல் தகராறு இப்படி தவறாகப் பரவி இருக்கும். சுடும் அளவுக்கு அவருக்கு யார் எதிரி இருக்கிறார்கள்? இது வெறும் வதந்தியாக இருக்கும்...’’ என்று சந்தியா உங்களை ஆசுவாசப்படுத்தினார்.

    ராமாவரம் தோட்டத்திற்கு உடனே போன் செய்தீர்கள். அழுதுகொண்டே யாரோ உதவியாளர் தங்களிடம் கூறினார். ‘‘சின்னவரை எம்.ஆர்.ராதா சுட்டுட்டாரு. அவரும் தன்னை சுட்டுக்கிட்டாரு. ரெண்டு பேரையும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டு போயிருக்காங்க...’’ என்று தகவல் தரப்பட... தாயை அழைத்துக்கொண்டு அப்போது நீங்கள் வசித்து வந்த தி.நகர் சிவஞானம் தெருவில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நோக்கி சென்றீர்கள்.

    ஆனால், ஆயிரம் விளக்கு பகுதியிலேயே உங்கள் கார் தடுத்து நிறுத்தப்பட்டது...!

    courtesy the hindu

Page 4 of 401 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •