Page 297 of 401 FirstFirst ... 197247287295296297298299307347397 ... LastLast
Results 2,961 to 2,970 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2961
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    ஒரு சமயம் சட்டக்கல்லூரி மாணவர் விடுதியின் மாணவர் மன்றம் சார்பாக கலை நிகழ்ச்சி விழா ஒன்று மாலை ஆறு மணி அளவில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுடிருந்தது.
    அந்நிகழ்சியின் முக்கிய விருந்தினர் #எம்ஜியார் அவர்கள்.
    நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கி, சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சட்டம் பயின்று வரும் வழக்கறிஞர் ஏ.கிருஷ்னன் உள்ளிட்ட மாணவர்கள்.
    விழா நாள் மதியம் இரண்டு மணி..
    கார் ஒன்று தேர் போன்று இவர்கள் விடுதியில் நிற்க...சடுதியில் இறங்குவது எம்.ஜி.ஆர்.
    விடுதிக்கு வெளியே நின்ற மாணவர் குழுவோ திகைக்கிறது...
    மாலை விழாவுக்கு இப்போதே வந்து விட்டாரே எம்.ஜி.ஆர். ஒரு வேளை அவரிடம் விழா நேரம் தவறாக கூறிவிட்டார்களோ?
    இப்படி ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் தொழாத குறையாகவும்...
    அழாத குறையாகவும்.....
    விழா நாயகனை வரவேற்கிறார்கள். ர் காலில் விழாத குறையாக..
    காரணம் மதிய நேரம் ஆதலால் விடுதியின் வார்டனும் இல்லை. ஒரு வழியாக அவரை ஒரு அறையில் தங்க வைக்க.
    மக்கள் திலகமோ மாணவர்களிடம் சகஜமாக உரையாடத் தொடங்கி விடுகிறார்.
    ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் அவர் தம் ஊர், பேர், படிப்பு என விசாரிக்கத் தொடங்குகிறார். சிறிது நேரம் கழிந்த நிலையில் எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
    ''நீங்கள் எல்லாம் சாப்பிட்டாச்சா?"
    இல்லை என்பதை அவர்கள் தலைகள் தயக்கமாக சொல்ல...எம்.ஜி.ஆர். உடஉடனே அருகில் இருந்த ஹோட்டலில் தனக்கும் அங்கிருந்த மாணவர் அனைவருக்கும் உணவு தன் செலவில் தருவிக்கிறார்.
    இப்படியாக மாலை வரை அந்த மாணவர்களுடன் அரட்டை அடித்து பொழுதைக் கழித்த வாத்தியார் அன்று மாலை விழாவுக்கு அங்கேயே தயாராகி புறப்படுகிறார்.
    விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் அதிரடியாக அந்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
    "அடுத்த வருடத்திலிருந்து திருவள்ளுவரைப் பற்றிய தமிழிலான பேச்சுப் போட்டி நடத்தப் பட வேண்டும் என்றும், அதற்கான சுழற் கோப்பை பரிசும் முதல் மற்றும் இரண்டாவது பரிசுக்கு ஆகும் தொகை முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்."
    "மாணவர்கள் சட்டம் படியுங்கள். ஆனால் படித்து முடித்த பிறகு ஃபீஸ் வாங்க கட்சிக்காரர்களை வட்டம் போடாதீர்கள்.
    நியாயம் உள்ள வழக்கை ஏற்று நடத்த திட்டம் கொள்ளுங்கள். வசதி குறைவானவர்களை மட்டம் என்று நினைக்காதீர்கள்"
    இப்படி வரிசையாகப் பேசி தன் வசீகரத்தை வீசி மொத்தத்தில் அவர்களை படிப்பில் தரமாக வாசி என்று தன் உரையை முடிக்கிறார்.
    எம்ஜிஆர் கூடவே வந்த அவரது உதவியாளர்திருப்பதி சாமிக்கோ மாலையில் நடக்கும் கூட்டத்துக்கு மதியமே ஏன் வந்தார் எம்.ஜி.ஆர் என்ற நியாயமான ஐயம் எழ அதைக் கேட்டும் விடுகிறார்.
    சதா என்னைச் சுற்றி என்னிடம் நன்மை அடைய நினைக்கும் கூட்டத்திலிருந்து சாதா நிலையில் இருக்கும் இந்த மாணவர்களுடன் பொழுதைக் கழிக்க விரும்பினேன்.
    நான் இந்த பருவத்தைக் காணாமலேயே கழித்து விட்டேன். அதை இன்று இவர்களுடன் கழித்ததன் மூலம் என் ஆசையை தீர்த்துக் கொண்டேன். அவருடைய விளக்கத்தால்
    திருப்பதி சாமி ஆகிறார் திருப்தி சாமியாக....
    ஏன்? நாமும் தானே?

    நன்றி ; வெங்கட்ராமன் தியாகு முகநூல்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2962
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.

    எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார். அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

    இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    பணத்தை வழங்கி இசைப்பட வாழலாம். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி இசைபட வாழலாம். நல்ல எண்ணங்களை வழங்கியும் இசைபட வாழலாம்.

    நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

    தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம்.கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.

    அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.! "
    ( டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய சென்னை
    அவ்வை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்ஜியார்
    ரூ.30 ஆயிரம் நன்கொடை வழங்கிய விழாவில்
    அறிஞர் அண்ணா . விழா தலைவர் , அப்போதைய
    நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் , 30 - 1 - 1961)



  4. #2963
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சன் லைப் டிவியில் இப்போது காட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது புரட்சித் தலைவர் நடித்த எத்தனை வாட்டி பார்த்தாலும் திகட்டாத நம்நாடு படம்.

    இப்பத்தான் இந்த காட்சி போனது.

    நாகயா செத்துப்போனதும் ரங்காராவ் வீட்டுக்கு மக்கள் திலகம் வருவார். கந்தயா வாத்தியார் இறந்துபோய்விட்டார் என்று சொல்வார். ரங்காராவ் கோஸ்டியினர் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எப்பேர்பட்ட உத்தமர் என்று கவலையுடன் ரங்கராவ் கூறிக் கொண்டே படி இறங்குவார். வசனமும் எல்லார் நடிப்பும் அருமை.

    வாக்குவாதம் முற்றி உங்களால்தான் கந்தயா வாத்தியார் இறந்தார் என்று புரட்சித் தலைவர் குற்றம் சுமத்துவார்.

    அப்பாவியாட்டம் முகத்தை வைத்தபடி அசோகன் அவர் விதி முடிஞ்சி போச்சி என்று சொல்வதைக் கேட்டு சிரிப்பு வரும்.

    ரங்காராவ் கோஸ்டியை பார்த்து புரட்சித் தலைவர் உங்களை மாதரி அயோக்கியர்கள் என்று குற்றம் சுமத்துவார்.

    ரங்காராவ் உடனே, எங்களை போல தேசபக்தர்களுக்கு எதிர்ப்பு வரது சகஜம்தான். நல்லவங்களை உலகம் எப்பதான் புரிஞ்சுக்கப் போவுதோ. ஏசுக்கு சிலுவை காந்திக்கு குண்டு எ்ங்குளுக்கு நீ என்பார்.
    நான் நினைச்சா இங்கேய உன்ன தவிடுபொடி யாக்க முடியும் என்று ரங்காராவ் சொல்வார். அப்படி அவர் சொல்லும்போதே பார்த்து விடலாம் என்பது மாதிரி சட்டையின் கையில் முன்டா பகுதியை புரட்சித் தலைவர் மடித்துவிட்டபடியே சவால் பார்வை பார்ப்பார்.

    சட்டை கைய மடிச்சு விட்டபடி அந்த பார்வையிலேயே தலைவர் சும்மா கொன்றிருப்பார்.

    பஞ்சு பிச்சுபோட்டா மாதிரி தொப்பி வச்சிக்கிட்டு ஏழைங்களை கட்டிப்புடிச்சுகிட்டு எல்லாரையும் பார்த்து கும்பிடுபோட்டு ரோஸ் கலரில் யாரப் பார்த்தாலும் சிரிச்சுகிட்டே தலையாட்டுற எம்ஜிஆர்னு நினைச்சியா?

    மோதற ஆள அட்ரஸ் இல்லாம பண்ற எம்ஜிஆர்டா

    என்று எனக்கு கத்தணும்போல இருந்தது.

    ஏழைகளின் ‘துரை ஐயா’ வாழ்க.




  5. #2964
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப்,மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோரின் சமீபத்திய பதிவுகளான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பெருமைகள் அருமை..

    டைனி பிக்ச்சர்ஸ் செர்வர் சரிவர வேலை செய்யாததால் புகைப்படங்கள் பதிவு
    செய்ய இயலவில்லை. விரைவில் இந்த பிரச்னை சரியாகும் என்று நம்புவோமாக

  6. #2965
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப்,மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோரின் சமீபத்திய பதிவுகளான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பெருமைகள் அருமை..

    டைனி பிக்ச்சர்ஸ் செர்வர் சரிவர வேலை செய்யாததால் புகைப்படங்கள் பதிவு
    செய்ய இயலவில்லை. விரைவில் இந்த பிரச்னை சரியாகும் என்று நம்புவோமாக
    பாராட்டுக்கு நன்றி.

  7. #2966
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    .-தினமலர் 26/7/2017

  8. #2967
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    -தினமலர் -27/7/17

  9. #2968
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமணி-27/7/17

  10. #2969
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து -27/7/17

  11. #2970
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •