Page 262 of 401 FirstFirst ... 162212252260261262263264272312362 ... LastLast
Results 2,611 to 2,620 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2611
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2612
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2613
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஜூனியர் விகடன் -09/07/2017


  5. #2614
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -30/06/2017

  6. #2615
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -06/7/2017

  7. #2616
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் -12/07/2017

  8. #2617
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    முத்தையன் அம்மு கூறியதை மாற்றுத் திரியில் போட்டு விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் திரியிலும் சென்று முத்தையன் அம்மு அவர்களின் தவறுகளை கண்டிச்சு இருக்கிறார். அதை அழித்துவிட்டு இனி அப்படி பேசாதீர்கள். என்று அவருக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் முத்தையன் சொன்னதை நாங்கள் அழிக்கவில்லை. அதே சமயத்தில் தப்பாக இருந்தால் திருத்திக் கொள்ள தயங்க மாட்டோம்.
    இப்போது நாங்கள் பந்துலு பிரிவும் நட்பும் பதிவில் பொய்யை சுட்டிக் காண்பித்த பிறகு ரகசிய போலீஸ் படம் 100 நாள் ஓடவில்லை என்று அந்த எழுத்தாளர் எழுதியது தவறு என்று சொல்கிறார்கள்.
    அதுமட்டும் இல்லை. விஜய் டிவி மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் பந்துலு மகள் விஜயலட்சுமி எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த பந்துலுவின் குடும்பம் ஏன் மஞ்சக் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்தது என்று அந்த பதிவில் உள்ளது. நேத்திக்கு சொல்லியிருக்கிறேன். தேடி வந்த மாப்பிள்ளை படத்துக்கு அப்புறம் பந்துலு கடவுள் மாமா உள்பட சில படங்கள் எடுத்தார். அதில்தான் நஷ்டம். மக்கள் திலகம் படத்தால் நஷ்டம் கிடையாது. ஆனால், எப்படி திரிச்சு கூறுிறகிறார்கள்.
    அதோடு, அதே விஜய்டிவி நிகழ்ச்சியில் கடன் சுமையில் தங்கள் குடும்பம் கஸ்டப்பட்டதை சொல்லி அப்போது எம்.ஜி.ஆர்.தான் எங்களுக்கு உதவினார். எங்கள் குடும்பக் கடனை அடைத்தார் என்று விஜயலட்சுமி சொன்னதை மறைத்துவிட்டார்கள். இதுவும் பொய்தனே? அதை பதிவு போட்டவர் அந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. அதை பார்க்காவிட்டால் அந்த நிகழ்ச்சியை பற்றி சொல்லி, கடன்சுமையால் மஞ்சக் கடுதாசி கொடுக்கும் நிலை இருந்தது என்று விஜயலட்சுமி சொன்னது மட்டும் எ்ப்படி தெரிஞ்சது?
    இந்த மாதிரி நிறைய பொய்கள் அதில் உள்ளன. இதை எடுத்து அந்த திரியில் போட்டவர் சிவா என்பவர். சிவா நீங்கள் என்ன செய்வீரகள். பாவம். முகநூலில் இருந்ததை காப்பி பேஸ்ட் எடுத்து போட்டிருக்ீகீறீர்கள். ஆனால், அதை எழுதியவர் முரளி சீனிவாஸ் என்று உள்ளது. அவர் உங்கள் முகநூல் நண்பாராக இருந்தால் இப்படி எல்லாம் பொய் செய்தியை பரப்பாதீர்கள் என்று சொல்லுங்கள்.

    எங்கள் திரியில் முத்தையன் அம்மு பொய்யான செய்தியை சுட்டிகாட்டி பதிவு போட்டார். அதையும் நாங்கள் நீக்கவில்லை. தப்பாக இருந்தாலும் திருத்திப்போம். ஆனால், உங்க திரியில் உங்கள் நடிகருக்கு புகழ் சேர்க்கும் செய்தியாக இருந்தாலும் அல்லது மக்கள் திலகத்துக்கு கெட்ட பேர் வரும் செய்தியாக இருந்தாலும் யாரும் கண்டு கொள்வது இல்லை. நீங்கள் யாரும் சுட்டிக் காட்டுவது இல்லை. அப்பிடியே விடப்படும்.
    அவர்கள் திரியில் வந்த பொய்யான பதிவுகளை இங்கே போடுகிறன். அது உண்மையா என்று அவர்களே சொல்லட்டும்.
    1.மனோகரா படம் வெளியான போது சென்னையில் ஒரே வாரத்தில் 84,லட்சத்தி 276 ரூபாய் வசூல் என்று அவர்கள் திரியில் வந்தது. பத்திரிகையில் வந்த செய்தியை போட்டார்கள். மனோகரா படம் அது வந்த காலத்தில் சென்னையில் மட்டுமே ஒரே வாரத்திலே 84 லட்சம் வசூலிச்சதாம். அதுவும் டிக்கெட் அணா, பைசா காலத்தில். அதுவும் ஒரே வாரத்தில். இன்றை கணக்கு படி பார்த்தால் 40 ஆயிரம் கோடி வசூல் வரும். உங்களு்க்கே சிரி்ப்பு வரலையா?

    2. பிராப்தம் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீட்டுக்கு சென்றார் என்று நாஞ்சில் இன்பா என்ற புருடா பேர்வழி அபத்தமாக எழுதி பத்திரிகையில்வந்த செய்தியை எடுத்து அவர்கள் திரியில் போட்டார்கள். இதுதான் அந்த பதிவு


    பிராப்தம் படம் வந்த காலத்தில் மக்கள் திலகம் யாரும் எட்ட முடியாத உச்சத்தில் திரையுலக சக்கரவர்த்தியாக இருந்தார். அவர் போய் பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்ரி வீட்டுக்கு சென்று வாய்ப்பு கேட்டாராம். எந்த கேனையனாவது இதை நம்புவானா?

    அதிலும் நாஞ்சில் இன்பா என்பவன் டுபாக்கூர் மட்டும் இல்ல. விவரம் இல்லாத ஆள் என்பதும் தெரிகிறது. அந்த கட்டுரையில் அவர்கள் நடிகருடன் விளையாட்டுப் பிள்ளை படத்தில் பத்மினி இடம் பெற்ற ச்டில்லை போட்டு உடன் இருப்பவர் வாணி ஸ்ரீ என்று போட்டுள்ளான். இதிலிருந்தே அந்த ஆள் ஞானம் தெரியும்.





    அவர்கள் திரியில் இந்த பதிவை போட்டவர் அதே சிவா என்பவர்தான்.

    உண்மை உண்மை என்று பேசுகிறீர்களே? உங்கள் திரியில் வந்த இந்த 2 செய்தியும் (மனோகர வசூல், பிராப்தம் மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்பது) உண்மையா? நெஞ்சத் தொட்டு சொல்லுங்கள். பிராப்தம் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு சாவித்ரி வீட்டுக்கு மக்கள் திலகம் சென்றரா? அதுவும் பிராப்தம் படத்தில் நடிக்கவாம்.

    பரவால்ல. நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். தர்மசங்கடம். நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், இனிமேல்பட்டாவது பார்த்து பதிவிடுங்கள்.

    ரகசிய போலீஸ் 115 படம் 100 நாள் ஓடியது என்று ஒப்புக் கொன்டதற்கு நன்றி.

    மாற்றுத் திரியின் பொய்யான பதிவுகள் பற்றி நேத்திக்கு நான் கேட்டிருந்த கேள்விக்கு பதில் இ்ல்லை. பரவால்ல. பதில் சொல்ல வேண்டாம், புரி்ந்து கொள்கிறோம் என்று கடைசியில் நான் சொன்னதால் பதில் இல்லை போல இருக்கு. அவர்கள் நிலைமை புரியுது.

    ஆனால், மறுபடியும் முத்தய்யன் பதிவ போட்டு அதை அழிக்கவில்லையாம், பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்கிறார்கள். முத்தயன் அப்படி எழுதவே இல்லை என்று நான் சொன்னல் பொய் என்று சொல்லலாம். அவர்கள் எடுத்துப் போட்டிருக்கிறார்கேளே. நம்ம திரிியல் இருந்து போட்டிருப்பார்கள் போல இருக்கு என்று நினைச்சேன். அவர்கள் சொல்றதைப் பார்த்தால் நம்ம திரியில் அழித்து விட்டார்கள் என்று தெரிகிறது. அப்புறம் எப்படி அவருக்கு கிடைச்சது என்று தெரியவில்லை. வேறு ஏதாச்சும் வழி உள்ளதா என்பதை அனுபவமான திரி மூத்தவர்கள் சொல்லவேண்டும்.

    முத்தயன் பதிவுக்கும் நேத்திக்கு பதில் சொல்லிவிட்டேன். இதே மாதிரி உங்கள் திரியிலும் முத்தையன் வந்து ரவிகரன் சூரியா என்பவரை தப்பான பதிவுக்காக கண்டிச்சுள்ளார்.

    சரி, முத்தயன் பதிவு இருக்கட்டும். பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீட்டு்க்கு மக்கள் திலகம் சென்றார் என்ற பொய்க்கும் மனோகரா படம் சென்னையில் ஒர வாரத்தில் 84 லட்சத்து 276 ரூபாய் வசூல் என்ற உங்கள் திரியில் வந்த பொய்க்கும் முத்தயன் பதிவு பதில் இல்லையே.

    அதோடு, வசூலில் தோல்வியடைந்த கர்ணன் படத்தை எவ்வளவு மு்ட்டுக் கொடுத்து எழுதுவீர்கள். என்னதான் பொய் எழுதினாலும் சரித்திரத்தில் வேட்டைக்காரனுடன் வெளியான கர்ணன் படம் வசூல் ரீதியாக தோல்வி என்ற உண்மை பதிந்துவிட்டது.

    கர்ணன் டிஜிட்டலில் வந்த சமயத்திலே குமுதம் பத்திரிகையில் அவர்கள் அபிமான நடிகரின் மகன் பிரபுவே, முதல் வெளியீடில் கர்ணன் படம் சரியாகப் போகவில்லை என்று ஒப்புக் கொண்டார். அதோட, அவர்கள் அபிமான நடிகரின் ரசிகர்களும் கர்ணன் தோல்வி படம் ரேஞ்சுக்கு அமைந்தது என்பதை வெளிப்படையாக ஒப்பு்க் கொண்டு இருக்கின்டார்கள். ஆனால், இன்னும் அங்கே முட்டுக் கொடுத்து பொய் எழுதுகிறார்கள்.

    பாபு படத்துடன் வந்த மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் பாபு அளவு்க்கு சரியாகப் போகவில்லை. வசூலிலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி இல்லை என்பதை நாங்கள் எப்பவும் நேர்மையாக ஒப்புக் கொள்கின்றோம். நீரும் நெருப்பும் படம் பாபுவை மிஞ்சிவிட்டது என்று நாங்கள் சொன்னதே இல்லை.

    ஆனால், கர்ணன் படம் வேட்டைக்காரன் அளவு போகவில்லை (இத்தனைக்கும் உங்கள் ரசிகர்களே ஒப்புக்கொண்ட உண்மை) என்று ஒப்புக் கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லையே?

  9. #2618
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீடு தேடி மக்கள் திலகம் சென்றார் என்று அள்ளிவிடப்படுகிறது. ஆனால், அதே பிராப்தம் படம் வெளியான 1971ம் ஆண்டில் வெளியான பேசும்படம் கேள்வி பதில். மக்கள் திலகம் எப்படி திரை உலக சக்கரவர்ததியாக இருந்தார் என்பதை விளக்கும்.

    கேள்வி : இன்று தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார்?
    பதில் :எம்.ஜி.ஆர். !


  10. #2619
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    #புரட்சிச்தலைவர் என்று அழைக்கிறீர்களே!
    அப்படி என்ன புரட்சியை செய்துவிட்டார்' என்று கேட்பவருக்கு... இதோ சின்னதாக ஒரு சான்று...

    எம்ஜியார் முதல்வராக வருவதற்கு முன்னால் பலர் முதல்வராக இருந்துள்ளனர். அவர்கள் சிந்தையில் தோன்றாத சிந்தனை மக்கள் திலகத்திற்கு தோன்றி அதை நடை முறைபடுத்தினாரே...என்ன... அது.

    தமிழகத்தில் அது வரையில் நடைமுறையில் இருந்த வழக்கம்.. ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்து வரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர்.

    இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

    எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோதுதான், தெரு பெயர்களில் ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.

    - பிரபாகரன் அழகர்சாமி, திராவிடர் இயக்கப் பற்றாளர்.

    (உதவியவை: விடுதலை, உண்மை இதழ்களில் வெளிவந்த, கி.வீரமணி, கலி.பூங்குன்றன் கட்டுரைகள்.)

    நன்றி எம்ஜிஆர் தளம் துரை வேலுமணி முகநூல்.

  11. #2620
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    என் பெயர் மஸ்தான். ஆனால், மாற்றுத் திரியில் உள்ள ஒருவர் வேறு ஒருத்தரின் பெயரால் என்னை சொல்லியிருக்கிறார். ராமமூர்த்திய யார் என்றே எனக்கு தெரியாது. யாரோ அவருக்கு தப்பான தகவல் சொல்லியிருக்கார்கள்.
    சரி. எங்களுக்காவது பெருந்தன்மை இருக்கிறது. உங்களுக்கு பெருந்தன்மை இல்லையே.

    ஆயிரத்தில் ஒருவன் சென்னை தவிர கோயமுத்தூரிலும் 100 நாள் ஓடியது. அதிலும் சென்னையில் எம்ஜியார் பிக்சுர்ஸ் வெளியீடு என்பதால் வேட்டைக்காரனும் ஆயிரத்தில் ஒருவனும் 100 நாள் ஓடிய மாதிரி சொல்கிறார்கள்.

    புதிய பறவை சென்னை பாரகனில் மட்டும் ஓடிய படத்தை தலையீல்தூக்கி ஆடுவார்கள். அதுவும் சொந்தப் படம், சொந்த பிலிம்ஸ் ரீலீஸ்.

    சொந்த பிலிம்ஸ்ில் வெளியான படத்தை எல்லாம் அவர்கள் இப்பிடித்தான் ஓட்டியிருக்கிறார்கள் போல இருக்கிறது.

    அதிலும் சென்னையில் சொந்த தியேட்டரான சாந்தியிலும் அவர்கள் லீசுக்கு எடுத்திருந்த கிரெளன் புவனேச்வரி யிலும் 100 நாள் படங்களை இப்படித்தான் ஓட்டியிருக்கிறார்கள் எ்ன்று அவர்கள் பதிவில் இருந்து தெரிகிறது. இந்த தியேட்டர்களில் மட்டும் 100 நாள் ஓ்ட்டப்பட்ட படங்களை கழித்தால் எவ்வளவு படம் 100 நாள் தேறும்.

    தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் முதல்முதலில் 100 நாள் ஓடிய படம் சிவந்த மண் என்று சொல்லி பொய் பெருமையை பதவிடுவீர்கள். ஆனால், அதுக்கு முன் அதே தியட்டரில் அடிமைப்பெண் 100 நாள் ஓடியது. இதுதான் இவர்கள் சிவந்தமண் பெருமையின் லட்ச்சணம்.

    கோயமுத்தூர் கர்னாட்டிக்கில்169 நாள் ஓடிய இரும்புத்திரையை 6 நாள் சேர்த்துப் போட்டு வெள்ளிவிழா ஆக்கிப்புட்டார்கள்.

    இந்த மாதிரி பொய் பெருமைகள் எங்களுக்குதேவையில்லை. எங்கள் பெருந்தன்மையே போதும். அது உங்களுக்கு கிடையாது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •