Page 190 of 401 FirstFirst ... 90140180188189190191192200240290 ... LastLast
Results 1,891 to 1,900 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1891
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகத்தின் ஒவ்வொரு ரசிகனும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய நாள் இன்று. 1973-ம் ஆண்டில் திமுக அரசின் அராஜகத்தை எதிர்த்து தன்னையும் மக்களையும் மட்டுமே நம்பி, தனி ஒரு மனிதனாக கடும் சோதனைகளுக்கு இடையே உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தலைவர் வெளியிட்ட நாள் மே 11 இன்று.


    ஒரு அரசாங்கத்தை எதி்ர்த்து தனித்துப் போராடி தானே தயாரித்து, இயக்கி, நடித்து சதிகளை முறியடித்து, போஸ்டர் கூட ஒட்டாமல் படத்தை வெளியிட்டு அதுவரைக்கும் வந்த படங்களை எல்லாம் வசூலில் சாய்த்த வெற்றிப் படத்தை தந்தவர் உலக வரலாற்றிலேயே புரட்சித் தலைவர் மட்டுமே.

    இன்று பாகுபலி படம் 1000 கோடி வசூல் செய்ததாக சொல்கிறார்கள். அந்தப் படம் உலகம் முழுவதும் 9000 தியேட்டர்களில் ஓடுகிறது. இதில் தனியார் டி.வி.க்களுக்கு விற்ற சாட்டிலைட் உரிமை சேர்த்துதான். 10 நாளில் 1000 கோடி ரூபாய் என்றால் அதை 9000-ல் (தியேட்டர்கள்) வகுத்தால் ஒரு வாரத்துக்கு ஒரு தியேட்டருக்கு ஏறக்குறைய 11 லட்சம்தான் வசூல் வருகிறது.

    ஆனால் புரட்சித் தலைவர் காலத்தில் உலகம் முழுவதும் 9,000 தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை. இப்போது டிக்கெட் விலை 120 ரூபாய். அப்போது ஏசி தியேட்டரில் அதிகபட்சமே 6 ரூபாய்க்குள்தான். நகரங்களில் சாதாரண தியேட்டரில் 45 பைசா, 85 பைசா, 1.10 பைசா, 1.75 பைசா, 2,20 பைசா இப்படித்தான் இருக்கும். கிராமங்களில் இன்னும் குறைவு. ஆனால், அந்தத் தொகையிலேயே முதல் வாரத்திலேயே ஒவ்வொரு தியேட்டரிலும் சராசரியாக பார்த்தாலும் ஏசி., சாதாரண தியேட்டர் எல்லாம் சேர்த்து ப்ளாட் ரேட்டாக போட்டால் உலகம் சுற்றும் வாலிபன் படம் சராசரியாக 50 ஆயிரம் ரூபாய் தாண்டும்.

    ஏன் சராசரியாக 50 ஆயிரம் தாண்டும் என்று சொல்கிறேன் என்றால், 1969-லேயே நம்நாடு திரைப்படம் என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் மீனாட்சி திரையரங்கில் முதல் வாரத்தில் 46,522 ரூபாய் 30 பைசா வசூல் ஆனது. (விளம்பரம் இணைப்பு) தமிழகம் முழுவதும் பல லட்சம் வசூல் ஆனது.



    அதன்படி பார்த்தாலே 1973-ல் உலகம் சுற்றும் வாலிபன் முதல் வாரத்தில் சராசரியாக நிச்சயம் 50 ஆயிரத்தை சுலபமாக தாண்டியிருக்கும். (மீனாட்சி திரையரங்கில் இருந்த டிக்கெட்டையும் சென்னை தேவி பாரடைசில் இருந்த டிக்கெட்டையும் சேர்த்து சராசரி) 1973-ல் ஒரு வாரத்தில் வசூலான 50 ஆயிரம் இன்றைய பாகுபலியின் 10 நாள் வசூலான 11 லட்சத்தை விட பல மடங்கு அதிகம்.


    மேலும் 2008-ல் மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் 130 இணைந்த வாரங்களாக (2 வருடத்துக்கும் மேல்) ஓடி சாதனை செய்த படம் உலகம் சுற்றும் வாலிபன். (விளம்பரம் இணைக்கப்பட்டுள்ளது)



    அதோடு, சென்னையில் 1990-91-ம் ஆண்டில் இணைந்த ஏறக்குறைய 25 வாரங்கள் வரை (சரியாக சொன்னால் 23 வாரங்கள் 5 நாட்கள்) ஓடி ரூ.20 லட்சம் அளவுக்கு வசூல் சாதனை செய்த படம் உலகம் சுற்றும் வாலிபன். (விவரம் இணைக்கப்பட்டுள்ளது)



    இதெல்லாம் யாரும் நினைக்க முடியாத சாதனை. பாகுபலி படம் எல்லாம் இன்னும் 25 வருடம் கழிச்சு மறுவெளியீடு வருமா என்பதே சந்தேகம்தான். ஆனால், உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் டிஜிட்டலில் வர உள்ளது. வாலிபன் மவுசு இன்றும் குறையவில்லை. என்றும் குறையாது.


    உலகம் சுற்றும் வாலிபனை நினைத்து காலரை தூக்கிவிட்டுக் கொள்வோம்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1892
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே,

    தின இதழ் தினசரியில் "மாட்டுக்கார வேலன் " டிஜிட்டல் தயாரிப்பு பற்றிய செய்தியில் வெளியான தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    அதே தவறை மக்கள் குரல்,மற்றும் மாலை சுடர் தினசரிகளின் செய்தி பதிப்புகளிலும் காணலாம் .இந்த தவறுகளை எடிட் செய்ய முடியவில்லை.
    காரணம் நடுவில் செய்திகள் பிரசுரம் ஆகியிருந்தன.

    ஆனால் தினத்தந்தி நாளிதழில் வெளியான சில தவறுகளை எடிட் செய்துதான்
    பதிவு செய்தேன் என்பது தங்களின் கவனத்திற்கு .

    இந்த மாதிரி தவறுகளை சுட்டி காட்ட தயங்க வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள். மற்றவர்களுக்கு நாம் முன் மாதிரியாக இருப்போம் என்பது
    எனது கருத்து .
    தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம் என்று சொல்லிய உங்களின் பெருந்தன்மைக்கும் நேர்மைக்கும் நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே. நேர்மையும் உண்மையும் புரட்சித் தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்தது. அவர் வழியிலேயே என்றும் நடப்போம். நன்றி.

  4. #1893
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



  5. #1894
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஜூன் மாதம் நடந்தது. அதற்கு முன் மே மாதம் 5-ம் தேதி புரட்சித் தலைவரின் வெற்றிப் படமான ‘இன்றுபோல் என்றும் வாழ்க’ ரிலீஸ் ஆனது.

    சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் 101 நாட்களும் மகாராணியில் 85 நாட்களும் உமா தியேட்டரில் 78 நாட்களும் ஓடியது. மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது.

    இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா நடந்தபோது புரட்சித் தலைவர் முதல்வராகிவிட்டார். அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் 100வது நாள் விழா நடந்தது. நூறாவது நாள் விழா கேடயம் புரட்சித் தலைவரின் நினைவு இல்லத்தில் இப்போதும் படத்தின் வெற்றிக்கு சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

    இந்தப் படத்தில் தலைவர் அப்பாவி கிராமத்தானாக நடிப்பார். இங்கே பதிவிட்டுள்ள படத்தில் நாகரீக மங்கையாக நடிக்கும் ராதா சலூஜாவுடன் அவர் பேசும் காட்சியைப் பாருங்கள்.




    புருவத்தை உயர்த்தி வாயை லேசாகத் திறந்து ஆச்சரியமாக பார்க்கிறார். ஒரு கிராமத்தான், பட்டிணத்தைச் சேர்ந்த அதுவும் நாகரிக மங்கையிடம் அப்படித்தான் ஆச்சரியத்தோடு பேசுவான். அதை புரட்சித் தலைவர் இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.


    அடுத்ததாக மக்கள் திலகத்தை விஜயகுமார் துப்பாக்கியால் குறிபார்க்கும் ஸ்டில்லை கவனியுங்கள்.வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக மக்கள் திலகம் விஜயகுமரிடம் நியாயம் கேட்கப் போகும்போது இந்தக் காட்சி.



    துப்பாக்கியால் எதிரி குறிபார்த்தபோதும் காரியம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, அமைதியாக அதே நேரத்தில் எது வந்தாலும் வரட்டும் என்பதுபோல முகத்தில் ஒரு தெளிவு.

    தான் இறந்தாலும் பரவாயில்லை என்பதை உறுதியாகக் காட்டும் வகையில் கைகளை கட்டியபடி நிற்கும் தோரணை. இயல்பான நடிப்புடன் உடல் மொழியை உணர்வுகளுக்கு ஏற்றபடி வெளிப்படுத்துவதில் மக்கள் திலகத்தை அடித்துக் கொள்ள முடியாது.

    இந்தியாவின் இயற்கை நடிகர் என்று புரட்சித் தலைவரை ஆஸ்திரேலிய டைரக்டர் ஜான் மெக்கலம் பாராட்டிய வார்த்தைகள் சத்தியத் தாயின் மைந்தனின் திறமைக்கு கிடைத்த சத்தியமான பாராட்டு.


    நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல்

  6. #1895
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like




  7. #1896
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் பக்தர் சுந்தர்ராஜன் தனது நண்பர் பாலசுப்பிரமணியனுடன் பேசுவது போல, பொன்மனம் பேரவை தொடக்க விழா பற்றி உரையாடல் பாணியில் அழைப்பு.
    நன்றி : சுந்தர்ராஜன் முகநூல்.
    ---- 000 ----


    பால சுப்ரமணியன் :- என்ன அண்ணா ரொம்பநாளா காணம்? வேலையா? கவலையா இருக்கீங்கபோல??

    நான் ::- ஆமாம் பாலு! புது வீடு வாங்கும் முயற்சி! முடியல்ல. பழைய ப்ளாட்டும் இன்னும் விற்பனையாகல! குழப்பம்! பணம் வேறு புரட்ட முடியல!! அத விடுங்க! ஒரு சந்தோஷ விஷயம்கேள்விப்பட்டிங்கலா?

    பால சுப்ரமணியன்::- ஒங்க விசயத்த கேட்டா சந்தோஷ விசயம் அது இதுன்னு புதுசா சொல்றீங்க?

    நான்::--பாலு ஒங்களுக்கா தெரியாது? தகவல் களஞ்சியமே நீங்கதான்?

    பாலு::- இருந்தாலும் ஒங்க வாயாலயே சொல்லுங்க!!

    நான்::-- சந்தோஷத்தில பெரிய சந்தோஷமே அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்கறதுதானே! அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்தாச்சு! தம்பி பொன்மனம் சிவகுமாரின் தீவிர முயற்சியாலும் அனைத்து தலைவர் ரசிகர்களின் ஆதரவோடும் " பொன்மனம் பொதுநல பேரவை தொடக்கவிழாவும்/ பொன்மனம் பண்பலையின் அறிமுக விழாவும் அமர்க்களமாக ஜூன் மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமையன்று திருவல்லிக்கேணி ஜெயின் கல்யாண மண்டபத்தில் நடக்க இருக்கிறது!

    இதில் நிர்வாகி/ செயலர்/ தலைவர்/ பொருளாளர் என்ற பதவிகள் இல்லை!! நன்கொடை இல்லை! மாதாந்திர உறுப்பினர் கட்டணம் இல்லை!! எல்லா புரட்சித்தலைவர் ரசிகர்களும் அங்கத்தினரே!! உண்மையான தலைவர் பக்தியும் திறமையும் அங்கீகரிக்கப்படும்! கலந்து கொள்ளும் அனைவருக்கும் அறுசுவை உணவுண்டு!!

    அதுமட்டுமா? மெல்லிசை மன்னரின் ஆசியுடன் தலைவருடைய கொள்கை புரட்சி/ எழுச்சி/ உணர்ச்சி பாடல்களை தேன் குரலோன் cns.சிங்கர் பாடுகிறார்!! உண்மையாக வறுமைக்கோட்டுக்கு கீழே துன்பப் படுபவர்களை கண்டு கொண்டு புரட்சித்தலைவர் ரசிகர்களை கொண்டு துயர் துடைக்கப்படும்!! மாலை 5 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெறும்!!

    இந்த விழாவை வெற்றிவிழாவாக்க ஒத்திகை விழா? பொதுக்கூட்டம் இடம் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்!! என்ன பாலு சரியா??

    பாலு:- அண்ணா ஒங்க பாணியே தனி அண்ணா!!

    நான்::- ஏதோ புதுமையாக அழைக்கலாமேன்னுதான்,....தம்பி சிவகுமார் முறைக்கிறார்!!! நான் வருகிறேன். நண்பர்களே! அருமை நண்பர்களே கொஞ்சம் சிந்திக்க வாருங்கள்
    ( இதுதான் பதில் தலைவர் பாடலை பாடியவாறு நான் மறைகிறேன்)


  8. #1897
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா...
    பிறர் தேவை அறிந்து கொண்டு
    வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா...


  9. #1898
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் பக்தரான நடிகரும் இயக்குநருமான ராமராஜனின் மாமா நாச்சியப்பன் ஒரு சாதாரண ரசிகர். இந்த சம்பவம் நடக்கும்போது ராமராஜன் திரையுலகத்துக்கே வரவில்லை. திரையுலகம் வருவதற்கு முன்னால் மதுரை அருகே மேலூரில் தியேட்டரில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் பணியில் இருந்தார்.

    எனவே, பிரபல நடிகரின் மாமா என்ற அடையாளமும் நாச்சியப்பனுக்கு கிடையாது. இருந்தாலும் ஒரு சாதாரண ரசிகனின் திருப்திக்காக புரட்சித் தலைவர் தனது முதலமைச்சர் லெட்டர் பேடில் ரசிகனின், தொண்டனின் (நாச்சியப்பனின்) குழந்தைக்கு பெயர் வைத்ததை எழுதிக் கொடுத்திருக்கிறார்.





    கடிதத்தில் உள்ள வாசகங்கள் விவரம்:

    அன்பு திரு. நாச்சியப்பனுக்கும் திருமதி நாச்சியப்பன் அழகம்மைக்கும் பிறந்த ஆண் மகவுக்கு என்னைப் பெற்ற அன்னையின் ஆசியுடன் ‘‘மணவழகன்’’ என்று பெயர் சூட்டுகிறேன்.
    பல்லாண்டு வாழ்ந்து நலமெலாம் பெற்று நாட்டோரும் வீட்டோரும் போற்ற சீரும் சிறப்புமாக வாழ ‘‘மணவழகனை’’ வாழ்த்துகிறேன்.
    அன்பன்
    எம்.ஜி.ராமச்சந்திரன் (கையொப்பம்)
    8/4/78



    சாதாரண ரசிகனை, தொண்டனை மதித்து அவர்கள் மனம் கோணாமல் மகிழ்ச்சிப்படுத்திய ஒரே நடிகர், ஒரே தலைவர் புரட்சித் தலைவர் மட்டுமே.



  10. #1899
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,

    உலகம் சுற்றும் வாலிபனின் உலகம் போற்றும் சாதனைகளை சில புள்ளி விபரங்களுடன் பதிவிட்டமைக்கு இதயபூர்வ பாராட்டுக்கள்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும் ,மறு வெளியீடுகளில் அதை ஈடு கட்டிவிடும் என்பதை பல விமர்சகர்கள் பத்திரிகைகளின் வாயிலாக உலகிற்கு உணர்த்திருக்கிறார்கள் .

    சமீபத்தில் திரு.வை கோ அவர்களின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
    நிகழ்ச்சியில் பேசிய வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் இதை உறுதிப்படுத்துவதுபோல யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற பழமொழியை நினைவுபடுத்தி குறிப்பிட்டுள்ளார் என்பதை ஒரு உதாரணமாக கொள்ளலாம் .

    40 ,50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புரட்சி தலைவரின் படங்கள் இன்றும் மறு வெளியீடுகளிலும் , டிஜிட்டல் வெளியீடுகளிலும் நல்ல வரவேற்பை பெறுகின்றன .
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் " சத்யம் சினிமா அரங்கில்
    161 நாட்களும், பேபி ஆல்பட்டில் 190 நாட்களும் திரையிடப்பட்டு சாதனை
    புரிந்தன . சமீபத்தில் சென்னை மகாலட்சுமியில் 2 வாரங்கள் ஓடி, சுமார்,ரூ.2,15000/-வசூல் ஈட்டியது .

    மேலும் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்சின் "அடிமைப்பெண்", உலகம் சுற்றும் வாலிபன் ,
    மற்றும் நினைத்ததை முடிப்பவன் , மாட்டுக்கார வேலன் ஆகிய படங்கள்
    டிஜிட்டல் வடிவில் விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.

    பாகுபலி போன்ற படங்கள் முதல் வெளியீட்டில் சாதனை புரிந்தாலும் ,50 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடுகளில் சாதனை புரியுமா என்பது கேள்விக்குறியே .இவையெல்லாம் முதல் வெளியீட்டோடு சரி.

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "இன்று போல் என்றும் வாழ்க "படத்தின் விமர்சனங்களும் வரவேற்க தக்கவை.

  11. #1900
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று (13/05/2017) இரவு 7.30 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "சங்கே முழங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகியது


    நேற்று இரவு 7 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் மக்கள் திலகம் /புரட்சிநடிகர்
    எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "மாட்டுக்கார வேலன்" திரைப்படம்
    ஒளிபரப்பாகியது


    இன்று (14/05/2017) காலை 1 1 மணிக்கு சன்லைப் சானலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .


    தற்போது இரவு 7 மணிமுதல் சன்லைப் சானலில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ரிக்ஷாக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •