Page 184 of 401 FirstFirst ... 84134174182183184185186194234284 ... LastLast
Results 1,831 to 1,840 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1831
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சுதாங்கன் என்பவன் ஒரு முட்டாள். வேறு ஒரு நடிகருக்கு தன்னை ரசிகன் என்று சொல்லிக் கொள்பவன். அந்த நடிகரின் படங்களைப் பற்றி எழுதி வருகிறான். தான் ரசிகராக இருக்கும் நடிகர் பற்றியே தப்புத் தப்பான தகவல்கள் சொல்கிறான். எப்படியோ தொலையட்டும். ஆனால், அவனுக்குப் பிடித்த நடிகர் பற்றியே தப்பாக எழுதுபவன் மக்கள் திலகத்தைப் பற்றி எந்த லட்சணத்தில் எழுதுவான்?

    புரட்சித் தலைவரின் படங்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை வருவதால் கூட்டம் குவிந்து வசூல் வருமாம். எப்ப மக்கள் திலகம் படம் வந்தாலும் வசூல் வரும். மறுவெளியீட்டிலும் மக்கள் திலகம் படங்கள் வசூலை குவிக்கும். இன்றைக்கும் மறு வெளியீட்டில் மக்கள்திலகம் படங்களே அதிகம் வெளியாகின்றன. கோயமுத்தூரில் நீதிக்குப் பின் பாசம், மதுரையில் நாளை நமதே, சென்னையில் 3 படங்கள் ஓடுகின்றன.

    அதனால்தான் பேசும்படம் பத்திரிகை 1971-ம் வருசத்திலே மக்கள் திலகத்தை வசூல் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டது.



    சரி, அதாவது போகட்டும். வேறு ஒரு படத்தில் நடிக்க ஜெயலலிதாவை காஷ்மீருக்கு போகக் கூடாது என்று மக்கள் திலகம் கண்டிஷன் போட்டார் என்று சொல்வார்கள் என்று சுதாங்கன் சொல்கிறான். நன்றாக படித்துப் பாருங்கள். அப்படி கண்டிஷன் போட்டதை இவனும் பக்கத்தில் இருந்து பார்க்கவி்ல்லை. கண்டிஷன் போட்டார் …. என்று சொல்வார்களாம். இவன் சொல்லவில்லையாம். சொல்வார்களாம். யார் சொன்னார்கள்? எப்ப சொன்னார்கள்? ஒரு நல்லவன் இமேஜைக் கெடுக்க என்றே ஒரு கூட்டம் அலைகிறது.

    ஒரு வேளை இதெல்லாம் திரைமறைவில் நடந்து வெளி உலகத்துக்கு தெரியாமல் போனவை என்று சொன்னால் எவ்வளவு விஷயங்களை திரைமறைவில் நடந்தவைகளை சொல்லலாம்? எந்த நடிகனுக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு? அதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தது? அந்த சிக்கல்களை தீர்த்து வைத்தது யார்? என்றெல்லாம் யார் வேண்டுமனாலும் எழுதலாம். இதெல்லாம் யாருக்கு என்ன பயன் தரப்போகிறது?

    இவனெல்லாம் ஒரு எழுத்தாளனாம். ஒரு காலத்தில் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என்று 1996 ஆண்டு வாக்கில் கூறியவன், பின்னர் ஜெயலலிதா இருக்கற போதே ஜெயா டிவியில் ஒட்டிக் கொண்டு இப்போதும் ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்துகிறான். இப்ப திமுக ஊழலை பற்றி இந்த வெட்கம் கெட்டவன் பேசுகிறான்.

    சுதாங்கன் மாதிரி ஆளுங்கள் மனதில் உள்ள வக்கிரங்களை எழுதி ஆசையை தீர்த்துக் கொள்கிறவர்கள். தன் அபிமான நடிகர் பற்றியே ஒழுங்காக தப்பு இல்லாமல் தகவல் தெரிவிக்க துப்பில்லை. புரட்சித் தலைவர் பற்றி எழுத வந்துவிட்டான்.

    உரிமைக்குரல் படம் 7-11-1974ல் வெளியானது. அது வெளியான 23 நாளில் 30-11-1974 ல் சிரித்து வாழ வேண்டும் வெளியானது. இதுதான் 6 மாசத்துக்கு ஒருமுறையா? உரிமைக்குரல் மதுரை சினிப்பிரியாவில் வெள்ளிவிழா ஓடியது. சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையில் (மட்டும்) 100 நாள் ஒடியது. இன்னும் சிறிது நாள் கழித்து வந்திருந்தால் உரிமைக்குரல் அலையில் இருந்து தப்பி சிரித்து வாழ வேண்டும் மதுரை மட்டும் இல்லாமல் பல இடங்களில் 100 நாள் ஓடியிருக்கும்.

    இன்னொரு விசயம். மதுரையில் முதன்முதலில் சினிப்பிரியா, மினிப்பிரியா தியேட்டர் கட்டி இரண்டு தியேட்டரிலும் வெளியான முதல் படம் உரிமைக்குரல்தான். மினிப்பிரியாவில் ஒரு மாதத்துக்கு மேல் ஓடியது. சினிப்பிரியாவில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழா கண்டது. சினிப்பிரியா, மினி்ப்பிரியா முதலில் கட்டி முடிந்து இரண்டு தியேட்டரிலும் வெளியான முதல் படம் வெற்றிப்படம் உரிமைக்குரல்தான்.

    21-11-1974-ல் மதுரை தினமலரில் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் அண்ணன் தங்கம் அவர்கள் கொடுத்த விளம்பரம் இங்கே…



    உரிமைக்குரல் படம் 1974-ம் வருசமே வந்துவிட்டது..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1832
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    வியாபாரம் வெளியூர் பயணங்களால் கொஞ்ச நாட்களாக திரி்க்கு வரமுடியவில்லை. இன்று பார்த்தால் மக்கள் திலகத்தின் பக்தர் முத்தையன் அம்மு அவர்கள் புரட்சித் தலைவரின் பாதங்களில் சேர்ந்துவிட்ட செய்தி அறிந்து பெருத்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

    முந்தைய திரிகளில் மக்கள் திலகத்தின் மகிழ்ச்சி, சோகம், வீரம், காதல், கருணை என்று பல்வேறு ரசங்களின் அரிய முக பாவனைகளை எல்லாம் தனது திறமையால் ஸ்டில்லாக போட்டு நம்மை முத்தையன் அம்மு மகிழ்ச்சிப்படுத்தினார். அவருடைய திறமையால் மக்கள் திலகத்தின் அசத்தலான ஸ்டில்களை காண வாய்ப்பு கிடைத்தது. முத்தையன் அம்முவின் மறைவு நமக்கு பெரிய இழப்பு.

    அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல நம் இதயதெய்வம் புரட்சித் தலைவரை வேண்டிக் கொள்கின்றேன்.

    முத்தையன் போட்ட ஸ்டில்லே அவருக்கு அஞ்சலி ஆகிறது.


  4. #1833
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    மேடையில் திருவாளர்கள் :கே.பி.ராமகிருஷ்ணன், சங்கர சுப்பு , சம்பத் ,எஸ்.பி.முத்துராமன் ,நடிகை சரோஜாதேவி , திரு. வை.கோ.,திரு.ஜி.பெரியசாமி
    நண்பர் லோகநாதன் அவர்களுக்கு, இன்றுதான் திரியை விட்ட இடத்தில் இருந்து படித்தேன். மதிமுக கட்சியின் சார்பில் வைகோ அவர்கள் நடத்திய புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை நன்றாக கவர் செய்துள்ளீர்கள். படங்களும் அருமை.

    எல்லாருடைய பேச்சுக்களையும் முழுமையாக பதிவு செய்துள்ளீர்கள். அதுவும் வைகோவின் பேச்சு அபாரம். புரட்சித் தலைவருக்கு அவர் புகழ்மாலை சூட்டியிருப்பது சிறப்பாக உள்ளது. அதை விட முக்கியம் எந்தெந்த இடங்களில் கைதட்டல் கிடைத்தது என்பதைக் கூட விடாமல் ப்ராக்கெட்டுக்குள் (கைதட்டல்) என்று நீங்கள் குறிப்பிட்டது அருமை.

    எனக்கு திரியில் அந்தப் பேச்சை படித்து முடிக்கவே 10 நிமிடம் ஆனது. அதை டைப் செய்ய எத்தனை நேரம் ஆகியிருக்கும்? எப்படி அவ்வளவு பெரிய பேச்சை வேகமான பேச்சை குறிப்பு எடுத்தீர்கள்? செல்போன் ரிக்கார்டிங்கில் பதிவு செய்திருந்தாலும் அதை மறுபடி கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு டைப் செய்து....... அப்பாடி.... அசுரத்தனமான வேலை.

    உங்கள் உழைப்பையும் புரட்சித் தலைவருக்கு நமது திரி மூலம் செய்து வரும் தொண்டையும் பாராட்ட வார்த்தைகள் போதாது. நாங்கள் எல்லாம் சில சமயங்களில் வராமல் இருந்தால் கூட நீங்கள் விடாமல் திரியில் தலைவர் புகழை பதிவு செய்கிறீர்கள்.

    உங்கள் ராட்சச உழைப்புக்கும் புரட்சித் தலைவர் பக்திக்கும் நன்றி என்ற வார்த்தை எல்லாம் சும்மா. இருந்தாலும் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கோடிக்கணக்கில் நன்றிகள்.


  5. #1834
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    மஸ்தான் பாய் அவர்களுக்கு,
    உங்கள் பதில்கள், பதிவுகள் அருமை.

    ஐயா சுதாங்கன் அவர்களின் தவறுகளை, அவர் பற்றிய விவரங்களை தோலுரித்துக் காட்டியதற்கு நன்றி. புரட்சித் தலைவர் அவர்கள் ஜெயலலிதாவை வேறு ஒரு படத்தில் நடிக்க காஷ்மீர் போகக் கூடாது என்று நிபந்தனை போட்டதாக செய்திகள் வந்ததாம். இவருக்கு யார் அந்த செய்தியை சொன்னார்களாம்? எல்லாரைப் பற்றியும் நிறைய செய்திகள் வரும். அதை எல்லாம் ஐயா சுதாங்கன் அவர்கள் நம்பலாமா? அப்படி இவருக்கு வந்த செய்திகள் எல்லாத்தையும் இவர் சொல்வாரா?
    இல்லை ஒருவேளை பத்திரிகையில் செய்திகள் வந்தது என்றால் அது என்ன பத்திரிகை? பெயரை சொல்லியிருக்கலாமே? வெளியில் சொல்ல முடியாத பத்திரிகை என்றால் மஞ்சள் பத்திரிகையாக இருக்கும். இந்து நேசன் என்று ஒரு பத்திரிகை வந்தது. இப்ப வருகிறதா என்று தெரியவில்லை. அதில் எல்லா நடிகரைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வதந்திகள் வரும். அதை எல்லாம் வெளியிட முடியுமா? கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு? என்று சொல்வார்கள். அதுதான் நினைவு வருகிறது.

    என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சினிப்பிரியா, மினிப்பிரியா 2 தியேட்டர்களில் முதன் முதலாக உரிமைக்குரல் படம் வெளியானபோது தங்கம் ஐயா அவர்கள் கொடுத்த விளம்பரத்தை பதிவு செய்ததற்கும் நன்றி.

    தம்பி முகமது தமீம் எப்படி இருக்கிறான்? விசாரித்ததாக சொல்லுங்கள். நீங்கள் கலக்குங்கள் பாய்.


  6. #1835
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1836
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையிலும் கூட,, தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.

    சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.

    உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது...

    உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

    அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந் தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை.

    #பொறுப்பில் #இருப்பவர்கள் #எப்படி #செயல்படவேண்டும் #என்பதில் #இப்போதைய #அரசியல்வாதிகளுக்கு #முன்னுதாரணமாகத் #திகழ்ந்தவர் #பொன்மனச்செம்மல் #எம்ஜிஆர்!!!




    நன்றி முகநூல்

  8. #1837
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1838
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1839
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் புரட்சித் தலைவர் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம். பார்த்தாலே அழுகை வருகிறது.



  11. #1840
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •