Page 136 of 401 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1351
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1352
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    டைரி எழுதும் பழக்கம் இருந்த ( ஆம்... கடந்த ஓராண்டாக எழுதுவதில்லை... ) நான் போன வருடம் இதே நாளில் நடந்த ஒரு சம்பவத்தை நேற்று இரவு டைரியை புரட்டும் போது பார்த்து நெகிழ்ந்தேன்... இனி அது உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும்...

    இன்று அஸ்வத்துக்கு கதை சொன்னேன்... சிங்கம் புலி மான் என விலங்குகளுடன் மட்டுமல்ல... மனிதர்களுடன்...
    அப்போது அவன்...

    "அப்பா நான் ஒரு கதை சொல்லவா....?"

    "ம்ம்...சொல்லு..."

    "ஒரு ஊருல ஒரு மாடு இருந்துச்சு... அது ஒரு நாள் ஊருக்கு போச்சு... அங்க அதுக்கு பயங்கரமா பசிச்சுச்சு...அப்போ...ஒரு வீடு இருந்துச்சு... அங்க போய் கதவ தட்டுச்சு... கதவு தொறந்தா... அங்க யாரு தெரியுமா...?"

    கொஞ்சம் தூக்க அசதியில் இருந்த நான்... "என்ன இவன் கதை சொல்லும் போதே கேள்வி வேற கேக்குறான்...? " என சுதாரித்து...

    "கதை உன்னோடது... உனக்கு தானே தெரியும்... அங்க யாருன்னு...?"
    - இது நான்...

    அசால்டாக சொன்னான்... "வேற யாருமில்லப்பா... நம்ம தலைவர் எம்.சி.ஆரு...??? "

    படுத்து இருந்த நான் ஆச்சரிய துள்ளலில் எழுந்தேன்...

    சில குழந்தைகள் நம்மை நைஸ் பண்ணும்... ஏதாவது வேண்டும் என்றால்... ஆனால்... இவன் அப்படி செய்து நான் பார்த்தது இல்லை... அவன் தேவை என்னவோ அதை நானே பார்த்து பார்த்து செய்தே வந்தேன்... இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது... எல்லா குழந்தையும் போல இவனும் மாறி விட்டானா...? இப்படி ஒரு குழப்ப முகத்தில் நான் அவனை பார்க்க...

    "என்னப்பா... படுக்கலையா...? "

    "படுக்கிறேன்... ஆமா... இந்த கதையில எப்படி எம்.ஜி.ஆர். வந்தாரு...?"

    அவன் சொன்ன பதில்... அவன் தூங்கிய பின்... டைரியில் எழுத வைத்து விட்டது... ஈர விழிகளுடன்...

    "என்னப்பா... தலைவரு எம்.சி.ஆருதானே... பசிக்கிதுன்னா சோறு போடுவாரு..."




    நாலரை வயதில் இவனது கற்பனை உலகில் எப்படி ஊடுருவினார்... அந்த மக்கள் திலகம்... அதனால் தான் அவரை அற்புத மஹா சக்தி... என நான் ஆராதிக்கிறேன்...

    ஆம்... நான் விலங்குகளுடன்... மனிதர்களை மட்டுமல்ல... மனிதத்தையும் சேர்த்தே கதை சொல்லி வந்துள்ளேன் போல...???!!!

    நேற்றிரவு படித்து விட்டு சற்று நெகிழ்ச்சியின் உச்சத்தில் உறங்கி போனேன்...

    - மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

  4. #1353
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

    .
    புரட்சி தலைவர் எம்ஜிஆர் சகாப்தம் தொடர்கிறது .
    தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தொடர்ந்து நடை பெற்று கொண்டு வருகிறது .
    இரண்டு நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சரோஜாதேவி, லதா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்றவர்கள் கலந்து கொண்டு மக்கள் திலகத்துக்கு புகழ் மாலை சூட்டியுள்ளனர்.

    இது சம்பந்தமான வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப் நண்பர் மலேசியாவைச் சேர்ந்த அப்துல் ரகீம் எனக்கு அனுப்பி உள்ளார். வீடியோ பதிவிடுவதற்கான வசதிகள் முடக்கப்பட்டுள்ளதால், திரியில் அதை பதிவிட முடியவில்லை. ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தது சிறப்பு அம்சம். சென்னையில் மகளிர் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது.

    பெங்களூரிலும் சென்ற மாதம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. எம்.ஜி.ஆர். மன்றங்கள் சார்பாகவும் வேறு அமைப்புகள் சார்பாகவும் விழாக்கள் நடந்தன. இன்னும் நடைபெற இருக்கின்றன.

    திரைப்படத் துறையிலும் மக்கள் திலகத்தின் ஆதிக்கம் இன்றும் உள்ளது.

    பெங்களூரில் சமீபத்தில் ஒளி விளக்கு ரிலீஸாகி நல்ல கூட்டத்துடன் ஒருவாரம் ஓடியது. . அடிமைப் பெண் டிஜிட்டல் திரைப்படம் பெங்களூரிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

    சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது வாரம் ஓடுகிறது. திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு விநியோகஸ்தர் பங்காக இதுவரை 50 ஆயிரம் லாபம் கிடைத்துள்ளது என்று தகவல் வந்துள்ளது.
    கோவை நகரில் மக்கள் திலகத்தின் புதுமைப்பித்தன் கடந்த வாரம் வெற்றிகரமாக ஓடியுள்ளது .

    கலங்கரை விளக்கம் படம் சென்னை கிருஷ்ணவேணி அரங்கில் ஓடுகிறது.

    மார்ச் - 31-ம் தேதி அடிமைப் பெண் திரைப்படம் தமிழகம் முழுவதும் டிஜிட்டலில் ரிலீஸாகிறது.

    ஏப்ரலில் டிஜிட்டலில் நினைத்ததை முடிப்பவன் ரிலீஸ் விளம்பரம் வந்துள்ளது.

    எங்க வீட்டுப் பிள்ளையும் டிஜிட்டல் வெளியீடாக வருகிறது என்று 2 வாரங்கள் முன் விளம்பரம் வந்தது.

    நாடோடி மன்னன் முழுவதும் வண்ணமாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.

    சமீபத்தில்செ ன்னை அருகே திருநின்றவூரில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது . பெங்களூர், ஆந்திரா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் மக்கள் திலகத்துக்கு பக்தர்கள் எழுப்பிய சிலைகள் உள்ளன.

    தமிழகம் எங்கும் தலைவர்களின் சிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், பெருநகரங்கள், சிறிய ஊர்கள், கிராமங்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் சிலைகள் இருப்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குத்தான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
    அதிமுக உடைந்துவிட்டது. எம்.ஜி.ஆர். சகாப்தம் முடிந்துவிட்டது’ என்று அந்தக் காலத்தில் இருந்தே மக்கள் திலகம் மீது இனம் தெரியாத வெறுப்பு கொண்டிருப்பவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
    ஏமாற்றமே அவர்களின் மூலதனம். விரக்தியே அவர்களுக்கு லாபம்.
    எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ என்று ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மக்கள் திலகம் கூறுவார். எம்.ஜி.ஆர். சகாப்தம் முடிந்துவிட்டது என்று கூறுபவர்களுக்கும் தோல்வியையே பரிசாக மக்கள் திலகம் வழங்குவார்.
    மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழுக்கு என்றுமே முடிவே இல்லை .
    மக்கள் திலகத்தின் 125வது ஆண்டு விழாவை 2042ல் அகிலமெங்கும் கொண்டாடுவார்கள் . இது உறுதி .

  5. #1354
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Makkalthilagam, Only one Any Time Emperor many Movies - Kaaviyams coming soon Digital Format likely so Happy...

  6. #1355
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கி வார இதழ் -19/03/2017


  7. #1356
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை முரசு -14/03/2017


  8. #1357
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1358
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1359
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1360
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •