Page 201 of 401 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2001
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    முல்லைச்சரம் மாத இதழ் - மே 2017


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2002
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    சினி சாரல் -மே 2017






    குறிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்கள் தொகுப்பில் பல தவறுகள் உள்ளன .1940ல் வெளியான "சகுந்தலையில் " எம்.ஜி.ஆர். அவர்கள் நடிக்கவில்லை .

    கீழ்கண்ட வெற்றிப்படங்கள் தொகுப்பில் விடுபட்டுள்ளன :
    ---------------------------------------------------------------------------------------------------
    1.தட்சயக்ஞம் .
    2.மீரா
    3.மோகினி.
    4.மருத நாட்டு இளவரசி
    5.என் தங்கை
    6..குலேபகாவலி
    7.சக்கரவர்த்தி திருமகள்
    8.புதுமைப்பித்தன்
    9.பாக்தாத் திருடன்
    10..தர்மம் தலை காக்கும் (இலங்கையில் 100 நாட்கள் )
    11.பரிசு (சேலத்தில் 100 நாட்கள் )
    12.ரகசிய போலீஸ் 115
    13.சிரித்து வாழ வேண்டும்
    14.நாளை நமதே (இலங்கையில் 150 நாட்கள் )
    15.பல்லாண்டு வாழ்க

    1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், பல அரங்குகளில் இணைந்த 100 நாட்களாக ஓடியது என்பது தவறான செய்தி .

    200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் : எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் ஆகியன .

    20 வாரங்களுக்கு மேல் ஓடிய படங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன

    25 வாரங்கள் ஓடிய படங்கள் வரிசையில் தட்சயக்ஞம் , மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்கள் விடுபட்டுள்ளன .

    12 வாரங்களுக்கு மேலாக ஓடிய படங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன
    அவை 100 நாட்கள் நிறைவு பெறாவிட்டாலும் , நல்ல வசூலை பெற்று, மறுவெளியீட்டிலும் சாதனைகள் புரிந்துள்ளன .

    மறுவெளியீட்டில் , டிஜிட்டல் தயாரிப்பான "ஆயிரத்தில் ஒருவன் " அதிகபட்சம்
    சென்னையில் 190 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .



    மேற்கண்ட செய்திகளை தொகுத்து பதிவிட உதவிய நண்பர் திரு.சாதிக் பாட்சா ,
    அரகண்டநல்லூர் (திருக்கோவிலூர் ),விழுப்புரம் மாவட்டம் என்பவரிடம்
    கைபேசி மூலம் தொடர்பு கொண்டு தவறுகளை சுட்டி காட்டி பேசினேன் .
    அவரும் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர். தவறுகளுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் ,
    அச்சிடும்போது பிழைகள் நேர்ந்து, ஆசிரியர் தவறுதலாக பிரசுரம் செய்துள்ளதாகவும் அது குறித்து மனம் வருந்துவதாகவும் தெரிவித்தார் .
    நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

    தங்கள் பதிவுக்கும் அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டிய தகவல்களுக்கும் மிகுந்த நன்றி. மக்கள் திலகத்தின் வெற்றிப்பட பட்டியலை தொகுத்த சாதிக்பாச்சா அவர்களும் ஒரு புரட்சித் தலைவர் பக்தர் என்பதை உங்கள் பதிவின் மூலம் அறியமுடிந்தது. உடனே மின்னல் வேகத்தில் அவரிடம் பேசிவிட்டீர்களே. பாராட்டுக்கள்.

    சாதிக்பாச்சாவும் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார். தவறுக்கு பொறுப்பேற்கிறேன் என்று உங்களிடம் கூறிய அவரது பெருந்தன்மையை பாராட்ட வேண்டும்.

    நீங்கள் கூறியது போல சுப்புலச்சுமி என்ற நடிகை முக்கிய பாத்திரத்தில் நடித்த சகுந்தலை படத்தில் மக்கள் திலகம் நடிக்கவில்லை. ஆனால், அந்த நடிகை நடித்த மீரா படத்தில் மக்கள் திலகம் நடித்துள்ளார். ஜெய்மல் என்ற பாத்திரம். சாதிக்பாச்சா அவர்கள் மீராவைத்தான் தவறாக சகுந்தலை என்று குறிப்பிட்டாரோ என்னவோ? அதுவும் வெற்றிப் படம்தான். முதல் படம் சதிலீலாவதி வெற்றிப்படம்தான். ஆனால், இந்த படங்களின் வெற்றிக்கெல்லாம் நாம் பங்கு கேட்பதில்லை. காரணம் அதில் எல்லாம் மக்கள் திலகத்துக்கு சிறிய வேடங்கள்தான்.

    மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தில் இருந்துதான் நாம் வெற்றிக்கணக்கை தொடங்குவோம். எங்க வீட்டுப் பிள்ளை சென்னையில் 211 நாளும் திருச்சியில் அதிகபட்சமாக 236 நாள் ஓடியது. உரிமைக்குரல் படம் எங்கள் மதுரையில் சினிப்பிரியாவில் 200 நாளை கடந்தது. உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி பற்றி சொல்லவே வேண்டாம்.

    நாடோடி மன்னன் திரைப்படம் சேலம் நியூசினிமாவில் 161 நாட்களும் அங்கிருந்து சித்தேஸ்வரா தியேட்டரில் ஷிப்ட் செய்யப்பட்டு 200 நாள் ஓடியது.


    அதே நேரம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படம் பல அரங்குகளில் இணைந்த 100 நாள் ஓடியது என்பது தவறான செய்தி என்று கூறியுள்ளீர்கள். உங்கள் நேர்மைக்கு பாராட்டும் நன்றியும். நாம் எப்போதுமே 100 நாள் ஓடாத படங்களை 100 நாள் ஓடவில்லை என்று ஒப்புக் கொள்வோம்.

    ம.மீ.சு.பா.படம் சென்னையில் 8 வாரங்கள் (56 நாள் தேவிபாரடைஸ்) ஓடியது. எங்கள் மதுரையில் 60 நாள் கடந்தது. திருச்சியில் அதிகபட்சமாக 78 நாள் ஓடியது. தியாகராஜ பாகவதர் மன்றத்தில் 50 நாளும் அங்கிருந்து ராஜா டாக்கீஸில் 28 நாளும் ஓடியது. இவ்வளவுக்கும் புரட்சித் தலைவர் அப்போது முதல்வராகிவிட்டார். கடைசி படம். ஒரு கவுரவரத்துக்காக அந்தப் படத்தை சென்னையில் மட்டுமாவது 100 நாள் ஓட்டுங்கள் என்று அவர் நினைச்சிருந்தால் சொல்லியிருக்க முடியும். அதெல்லாம் அவர் செய்யமாட்டார். நமக்கும் பழக்கமில்லை.

    அதிலும் 1963 மற்றும் 1966லும் (தலா 9 படங்கள்) அடுத்தடுத்து வந்த மக்கள் திலகத்தின் படங்களால் பல படங்கள் பாதிப்பு. 1966-ல் 92 நாள் ஓடிய சந்திரோதயம் போன்ற லட்டு லட்டான படங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. 93வது நாளில் தாலி பாக்கியம் (27-8-1966) வெளியானது. அடுத்த 20 வது நாளில் தனிப்பிறவி(16-9-1966). அடுத்த 57 நாளில் பறக்கும் பாவை(11-11-1966). அடுத்த 29வது நாளில் பெற்றால்தான் பிள்ளையா? (9-12-1966). பெற்றால்தான் பிள்ளையா வெற்றி வீச்சையும் தாக்குப் பிடித்து பறக்கும் பாவை பல இடங்களில் 50 நாளும் சென்னையில் பாரகன், மேகலா, ஸ்ரீ கிருஷ்ணாவில் தலா 63 நாள் ஓடியது. இடைவெளி அதிகரித்திருந்தால் பறக்கும் பாவை உட்பட அந்த ஆண்டின் மேலும் சில மக்கள் திலகத்தின் படங்கள் 100 நாள் ஓடியிருக்கும்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் 100 நாள் வெற்றிப் படம் ஒன்று விட்டுப் போய்விட்டது நண்பரே. வல்லபனை மறக்க முடியுமா? மகாதேவி படம் 100 நாள் ஓடிய (கோவையில்) வெற்றிப்படம்.

    சாவித்திரியுடன் மக்கள் திலகம் நடித்த 3 படங்களும் (மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன்) 100 நாள் படங்களே.

    உங்களின் பதிவுக்கும் சாதிக்பாச்சாவுடன் போனில் பேசிய மின்னல் வேக செயல்பாட்டுக்கும் உண்மையை வெளிப்படுத்தும் அக்கறைக்கும் தகவல்களுக்கும் மறுபடியும் நன்றி திரு.லோகநாதன் அவர்களே.

  4. #2003
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    குமுதம் லைப் வார இதழ் -31/05/2017




    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post



    ஆகா, பிரமாதம். நன்றி திரு. லோகநாதன்.

    மக்கள் திலகத்தின் ரசிகை ஷாலின் மரியா லாரன்சுக்கு ஒரு உம்மா… (33 வயதான இந்த இளம்பெண் சதிலீலாவதி பார்த்திருக்கிறாராமா? பரவாயில்லை. அந்தப் பெண் பெயரில் வேறு யாராவது எழுதியிருந்தாலும் அவர்களுக்கு இந்த உம்மா. ஒரு காலத்தில் மக்கள் திலகத்தை கிண்டல் செய்த குமுதம் இன்று அவரது நடிப்பை பாராட்டுவதும் மக்கள் திலகத்துக்கு வெற்றிதான்)

    இதைத்தான் நாம்பளும் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மக்கள் திலகத்தின் புகழையும் பெருமையையும் கண்டு பொறாமை கொண்டவர்கள் கட்டிவிட்ட கதைதான் அவருக்கு நடிப்பு வராது என்பது. மக்கள் திலகத்தின் மனிதாபிமானத்தை பாராட்டுபவர்கள் கூட அவரது நடிப்பை பற்றி பாராட்ட மாட்டார்கள். அந்த அளவுக்கு பொய் பிரசாரம் பதிந்திருக்கிறது.

    மக்கள் திலகத்தின் நடிப்பு திறனுக்கு எவ்வளவோ சொல்லலாம். உதாரணத்துக்கு நினைத்ததை முடிப்பவன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் சொல்கிறேன்.

    கிளைமாக்ஸ் கோர்ட் சீனும் மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பும் (சுந்தரம், ரஞ்சித்) எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத நெய் மணக்கும் சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி விருந்து.

    சுந்தரம் என்ற நல்லவர் போலவே அவரைப் போல தோற்றம் கொண்ட கொள்ளையன் ரஞ்சித், நான்தான் சுந்தரம் என்று நடிப்பார். கோர்ட்டில் சுந்தரம் தன்னை நிரூபிப்பதற்காக கிளாரிநெட்டில் பூமழை தூவி.. பாடலை வாசிப்பார். அடுத்து ரஞ்சித்திடம் கொடுப்பார்(வாசிக்கத் தெரியாது என்ற நினைப்பில்). ரஞ்சித் அதை வாங்கி வாயை வைத்து ஊதும் பகுதியை கர்சீபால் துடைப்பார். என்ன ஒரு நேர்த்தி. பிறகு அதை தலைகீழாக பிடித்து ஒரு கண்ணை மூடி கிளாரிநெட்டின் கீழ் பகுதியில் மற்றொரு கண்ணை வைத்து உள்நோக்கி பார்ப்பார்.

    அதற்குள் சுந்தரத்துக்கு ரஞ்சித் மாட்டிக் கொள்ளப்போகிறார் என்ற மகிழ்ச்சி. ‘என்ன பிரதர் சுண்டெலி இருக்கான்னு பாக்குறீங்களா? பாத்து வாசிங்க, உதட்டை கிழிச்சிடப் போகுது’ என்பதை ரொம்ப கேசுவலாக சிரித்தபடி சொல்வார்.


    ரஞ்சித் கபடமாக சிரித்துக் கொண்டே வாசித்துவிடுவார். (முதலில் ரஞ்சித்திடம் கிளாரிநெட் கொடுத்திருந்தால் மாட்டிக் கொண்டிருப்பார். சுந்தரம்தான் பாட்டை வாசித்துக் காட்டிவிட்டாரே. ஏற்கெனவே ரஞ்சித்துக்கு மலை ஏறுதல் உட்பட எல்லாம் தெரியும் என்று லதா ஒரு காட்சியில் சொல்வார்) எதிர்பாராத இந்த ட்விஸ்ட்டால் சுந்தரம் படும் அவதியையும் ரஞ்சித்தின் குறும்பு சிரிப்பையும் பார்க்க வேண்டுமே. பார்த்த கண்கள் கொடுத்து வைத்தவை.

    இதோ… சுந்தரத்தின் மகிழ்ச்சியும் கிளாரிநெட் வாசிக்கத் தெரிந்து பாட்டையும் தெரிந்து கொண்ட கபட ரஞ்சித்தும்…




    இந்தியில் ராஜேஷ் கன்னா நடித்த சச்சா ஜூட்டாவில் கடைசியில் கோர்ட்டில் போலி ராஜேஷ் கன்னாவை பார்த்து நாய் குறைச்சதும் அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விடுவார். படம் முடியும்.


    அதன் தழுவலான நினைத்ததை முடிப்பவன் படத்தில் மக்கள் திலகத்தின் தாய்ப்பாசத்தையும் நடிப்பு திறமையையும் காட்டும் வகையில் காட்சி மாற்றப்பட்டிருக்கும். நாய் குரைத்தால் ஏற்றுக் கொள்வீர்கள் மனிதன் சொல்றதை நம்ப மாட்டீங்களா? என்று புரட்சித் தலைவர் கேட்பார். உடனே போலீஸார் உண்மையை வரவழைக்க ஒரு தந்திரம் செய்வார்கள்.


    சுந்தரத்தின் (இவர்தான் உண்மையானவர்) தங்கை இறந்துவிட்டதாக சொல்வார்கள். உடனே சுந்தரம் (மக்கள் திலகம்) அதிர்ச்சியுடன் அலறுவார். பக்கத்திலேயே நிற்கும் ரஞ்சித் (சுந்தரம் பெயரில் டூப்ளிகேட்) அலறமாட்டார். இறந்தது அவரது உண்மையான தங்கை இல்லையே. ஆனால், முகத்தில் அதிர்ச்சி தெரியும். என்ன செய்வது? எப்படி ரியாக்ட் செய்வது? …. கிரிமினலாக யோசிப்பார். சில விநாடிகள்தான். பிறகு சுதாரித்துக் கொண்டு ரஞ்சித்தும் ‘ஐயோ… தங்கச்சி’ என்று கத்துவார். அதில் ஒரு போலித்தனம் தெரியும். இரண்டு பேரையும் அவர்களது உணர்ச்சிகளையும் ஒரே ஃப்ரேமில் காட்டுவார்கள். அவ்வளவு தத்ரூபமாக இயற்கையாக நடித்திருப்பார்(கள்).


    இதோ.. தங்கை இறந்த செய்தி கேட்டு சுந்தரத்தின் அலறலும், என்ன செய்வது என்ற ரஞ்சித்தின் அதிர்ச்சி கலந்த கிரிமினல் யோசனையும் … ஒரே ஃப்ரேமில்.. காட்சியாய்..





    கடைசியில் சுந்தரத்தின் தங்கை என்று சொல்லப்பட்ட, ஸ்ட்ரெச்சரில் உள்ள உடலில் போர்த்தியிருக்கும் துணியை விலக்கி முகத்தைப் பார்த்தால் அது சுந்தரத்தின் தங்கை இல்லை. ரஞ்சித்தின் தாய் (காந்திமதி) இப்போது ரஞ்சித் கதறுவார். சுந்தரம் நல்லவராச்சே. ரஞ்சித்தின் நிலையைப் பார்த்து பரிதாபத்துடன் உச் கொட்டுவார்.

    எந்த தாய்க்காக பாடுபட்டாரோ அந்த தாயே போன பின் இனி என்ன? என்ற எண்ணத்தில் மனம் திருந்தி, தான் கெட்டவன் என்ற உண்மையை கோர்ட்டில் ரஞ்சித் ஒப்புக் கொள்வார். அப்போதுதான் அவரிடம் உண்மையை வரவழைக்கவே இந்த நாடகம் என்பதும் ரஞ்சித்தின் தாயார் சாகவில்லை என்றும் அறிவிக்கப்படும். இறந்ததுபோல படுத்திருந்த ரஞ்சித்தின் தாயும் எழுந்து கொள்வார்.

    தாய் உயிரோடு வந்த மகிழ்ச்சியில் தனது கெட்ட குணங்கள் எல்லாம் கண்ணீரில் கரைய, தாயை கட்டிக் கொண்டு இன்ப அதிர்ச்சியில் சிரிப்பு கலந்த அழுகையை ஆனந்தக் கண்ணீரை வெளிப்படுத்துகிறார் மக்களின் திலகம் ரஞ்சித்.


    இவருக்குப் போய் நடிப்பு வராது என்பவர்களை என்ன சொல்ல? இந்தப் படத்தில் மக்கள் திலகங்களின் நடிப்புக்காகவும் முக்கியமாக ரஞ்சித்தின் அட்டகாசமான ஸ்டைலுக்காகவுமே மக்கள் திலகத்துக்கு மறுபடியும் பாரத் விருது கொடுத்திருக்க வேண்டும்.

    என்ன நண்பரே, சரிதானே?

    பின்குறிப்பு : நினைத்ததை முடிப்பவன் படம் என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் (மீனாட்சி தியேட்டர்) 100 நாள் ஓடியது.
    Last edited by SUNDARA PANDIYAN; 25th May 2017 at 01:53 AM.

  5. #2004
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2005
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை (26/05/2017) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் பிரமிப்பாக நடித்து கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .




    புகைப்படங்கள் உதவி : திரு. ஆர். இளங்கோவன் ,பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்.

  7. #2006
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2007
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2008
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை (26/05/2017) முதல் மதுரை மீனாட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
    "தொழிலாளி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .



    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

  10. #2009
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களின் கவனத்திற்கு

    இன்று மாலை , சினி சாரல் ஆசிரியருடன் கைபேசி மூலம் பேசினேன்
    தவறுகளை எடுத்து கூறினேன் .ஈ மெயில் மூலம் கடிதம் அனுப்ப சொன்னார் .
    அதன் நகல் தங்களின் பார்வைக்கு .

    சினி சாரல் மாத இதழ் ஆசிரியரின் கவனத்திற்கு ,

    தங்களின் மே மாத இதழில்,,மக்கள் திலகம் எம்.ஜி..ஆரின் வெற்றிப்படங்கள் தொகுப்பு பட்டியலில் தவறான செய்திகள் பிரசுரம் ஆகியுள்ளன .

    1940ல் வெளியான சகுந்தலையில் எம்.ஜி.ஆர். நடிக்கவே இல்லை .

    வெற்றி படங்கள் பட்டியலில் விடுபட்டு போன திரைப்படங்கள்.
    --------------------------------------------------------------------------------------------------------------
    1.தட்சயக்ஞம் .
    2.மீரா
    3.மோகினி
    4.என் தங்கை
    5.மருத நாட்டு இளவரசி
    6.குலேபகாவலி
    7.சக்கரவர்த்தி திருமகள்
    8.புதுமை பித்தன்
    9.பாக்தாத் திருடன்
    10.தர்மம் தலை காக்கும் (இலங்கையில் 100 நாட்கள் )
    11.பரிசு (சேலத்தில் 100 நாட்கள் )
    12.ரகசிய போலீஸ் 115
    13.சிரித்து வாழ வேண்டும்
    14.நாளை நமதே (இலங்கையில் 150 நாட்கள் )
    15.பல்லாண்டு வாழ்க .
    16.உழைக்கும் கரங்கள்


    1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் சென்னையில் 55 நாட்கள் ,
    மதுரையில் 10 வாரங்கள் மேல்., திருச்சியில் இணைந்த 78 நாட்கள் ஓடியது .
    தங்களின் பதிவின்படி, எங்கும் 100 நாட்கள் ஓடவில்லை

    25 வாரங்கள் ஓடிய பட்டியலில் ,தட்சயக்ஞம் , என் தங்கை (இலங்கையில் ஓடியது ) மதுரை வீரன் , நாடோடிமன்னன் ஆகியவை விடுபட்டுள்ளன .

    200 நாட்கள் பட்டியல் : எங்க வீட்டு பிள்ளை - சென்னை காசினோ-211 நாட்கள் .
    திருச்சி ஜூபிடர் -236 நாட்கள். 1965ல் 7 அரங்குகளில் வெள்ளிவிழா கண்டது .
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பு தொழிலை விட்ட பின்பு, 1980வரையில் தகர்க்க முடியாத சாதனை .

    உலகம் சுற்றும் வாலிபன் - சென்னை தேவி பாரடைஸ் -182, அகஸ்தியா -175,
    மதுரை மீனாட்சி -217, திருச்சி -பேலஸ் -203, கொழும்பு கேப்பிட்டல் -201

    உரிமைக்குரல் -மதுரை சினிப்பிரியா-200, மினிப்பிரியா -29 நாட்கள் .
    நெல்லை -லட்சுமி -182 நாட்கள்.

    மறுவெளியீட்டில் , டிஜிட்டல் தயாரிப்பான "ஆயிரத்தில் ஒருவன் " சென்னை சத்யம் சினிமா அரங்கில் 161 நாட்கள் , பேபி ஆல்பட் -190 நாட்கள் ஓடியது .

    20 வாரங்களுக்கு மேல் ஓடிய படங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன .

    82,83,84,85,86,88,91,92,98 நாட்கள் ஓடிய படங்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன அவை வெற்றிப்படங்களே அந்த காலத்தில்,புதிய படங்களுக்காகவும் போனஸ் பிரச்னைகளுக்காகவும் ,ஷிப்டிங் தியேட்டர் களில் வசூலை அள்ளுவதற்கும் நிறுத்தப்பட்டதால் அவை 100 நாட்களை நிறைவு செய்யவில்லை . மேலும் மறு வெளியீடுகளில் அந்த படங்கள் மீண்டும் மீண்டும் திரைக்கு வந்து வசூல் சாதனை செய்துகொண்டுதான் உள்ளன .


    கைபேசியில் தங்களுடன் உரையாடும்போது பெருந்தன்மையுடன் தவறுகளை
    ஒத்துக் கொண்டதற்கும் , இனி பிழைகள் நேராத வண்ணம் பார்த்துக் கொள்வதாக
    உறுதி அளித்தமைக்கும் நன்றி .

    ஆர். லோகநாதன்

  11. #2010
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே,


    எனது பதிவுகளுக்கு அவ்வப்போது பாராட்டுக்கள் தெரிவித்து ஊக்கப்படுத்தவதற்கு
    மிகவும் நன்றி.

    தங்களின் கைபேசி எண்ணை தெரிவித்தால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .

    அடேயப்பா ! மக்கள் திலகத்தின் நடிப்பாற்றலை இதற்கு மேல் விளக்கமாக தெரிவிக்க யாராலும் முடியாது .. என் மனப்பூர்வ பாராட்டுக்கள் .

    முதல் நாள் முதல் காட்சி ,சென்னை தேவிபாரடைஸில் கண்ட காட்சி பசுமையானது .தேவிபாரடைஸில் 101 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
    மூன்றாவது நாள் மாலை தினசரியில் (பேப்பர் ஞாபகமில்லை ) 100 நாட்களுக்கு
    எந்தவித இலவச அனுமதியும் கிடையாது மதுரை மீனாட்சியில் என்று விளம்பரம் வந்தது

    சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாதது சற்று ஏமாற்றமே .
    ஆனால் அதன்பின் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டது .இப்போது
    டிஜிட்டல் தயாரிப்பில் வெளியாக உள்ளது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •