Page 219 of 401 FirstFirst ... 119169209217218219220221229269319 ... LastLast
Results 2,181 to 2,190 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2181
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் "இதயக்கனி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2182
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை (11/06/2017) காலை 11 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த
    "தேடி வந்த மாப்பிள்ளை " சன்லைப் சானலில் ஒளிபரப்பாகிறது .

  4. #2183
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே,
    தங்களின் ஆழமான, அழுத்தமான கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இந்த வார
    நக்கீரன் இதழில் இதை எதிரொலிக்கும் வகையில் அகம்-புறம் பகுதியில் செய்தி
    பிரசுரம் ஆகியுள்ளது .அதை பதிவிடுகிறேன் . அதை படித்தும், பார்த்தும் விமர்சனம்
    செய்பவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பது நமது தவறு .

    சில வசனங்கள் தங்களின் நினைவிற்கு
    ------------------------------------------------------------------

    பிறரை தாழ்த்தி , நம்மை உயர்த்தி கொள்ளும் நிலையில் நாமில்லை .-மன்னாதி மன்னன் .

    என் எதிரி கூட எனக்கு சமமா இல்லேனா அலட்சிய படுத்துறவன் நான் - சந்திரோதயம் .


    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    நக்கீரன் வார இதழ் -10/06/2017


    நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே,
    நக்கீரன் பத்திரிகை கோபால் திமுககாரர். அதனாலே கொஞ்சம் வஞ்சகப்புகழ்ச்சியாக புரட்சித் தலைவரைப் பற்றி தனக்கு யார் ஆதரவு கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு மட்டுமே தேவையானதை செய்தார் என்று சொன்னாலும் நல்லதையே சொல்லிருக்கிறார்.

    புரட்சித் தலைவருக்கு ஏழை எளிய மக்கள்தான் ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு ஏழைகளுக்கு தேவையானதை செய்யும் ஆட்சிதான் நல்லாட்சி. புரட்சித் தலைவர் ஏழைகளின் நலனில் கவனம் செலுத்தி ஆட்சி செய்தார். அரிசி, பால், ரேஷன் பொருள்,. பஸ் டிக்கெட், கரண்ட் பில் இவை ஏறாமல் பார்த்துக் கொண்டார். இதில் எல்லாம் அவர் கைவைத்தது இல்லை. அத்தியாவசிய பொருள் ஏறாமல் இருந்தாலே விலைவாசி உயர்வு ஏழைகளை பாதிக்காது. இதைத்தான் புரட்சித் தலைவர் செய்தார்.

    இந்தியாவுக்கே வழிகாட்டியாக ரேஷன் அரிசி விலையை கிலோக்கு 1.75 காசாக குறைத்தார். அதுக்கு பிறகுதான் கருணாநிதி 1 ரூபாய்க்கும் பிறகு ஜெயலலிதா இலவச அரிசியும் போட்டனர்.

    பணக்காரனுக்கு என்ன நல்லது செய்ய வேண்டும்? எல்லாம் அவனே பாத்துப்பான். இருந்தாலும் அவனுக்கும் சேர்த்து பல நல்லவற்றை செய்தார். சென்னைக்கு இன்னும் கொஞ்சமாகவாவது இன்றும் தண்ணீர் கிடைகிறது என்றால் என்டிராமராவுடன் பேசி புரட்சித் தலைவர் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்த கிருஷ்ணா நதி நீர் தெலுங்கு கங்கை திட்டம்தான் காரணம். இந்த தண்ணீர் தனக்கு ஓட்டு போடாத மக்களுக்கும் பணக்காரனுக்கும் சேர்த்துதான் கொண்டு வந்தார். பணக்காரனும்தான் இந்த தண்ணீரை குடிக்கிறான்.

    ஆசியாவிலேயே முதல் முறையாக கருர் புகளூரில் கரும்பு சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கிற ஆலை கொண்டு வந்தார். தென்மாவட்டம் பயன்படுகிறது மாதிரி வெம்பக்கோட்டை நீர்த்தேக்கத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். இப்ப உள்ள 108 ஆம்புலன்சுக்கு முன்னோடியாக முதன்முதலில் அந்த திட்டத்தை புரட்சித் தலைவர்தான் கொண்டு வந்தார். இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

    அரசியலி்ல் வெற்றி பெற நல்ல எண்ணமும் தொண்டு உள்ளமும் சாதுர்யமும் வேண்டும். எதிரிகளின் போக்கை கவனித்து வெற்றி பெற்றார் என்று நக்கீரன் பத்திரிகையில் பதிவில் உள்ளது. தவறு இல்லை. போட்டி என்று வந்துவிட்டால் எதிரியின் பலத்தை அறிய வேண்டும். அப்பதான் வெற்றி பெற முடியும்.

    இது எல்லாம் சேர்த்து மனிதாபிமானம் இருந்ததால்தான் அரசியலில் புரட்சித் தலைவர் வெற்றி பெற்றார். ராஜாஜி, அண்ணா, காமராஜ் போன்றவர்கள் அரசியலில் வெற்றி பெற்றார்கள். அரசியலில் வெற்றி பெற சூது வாது தெரிந்திருக்க வேண்டும் என்றால் காமராஜ் போன்ற நல்லவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அவர்கள் எப்பிடி வெற்றி பெற்றார்கள். அரசியலில் வெற்றி பெறமுடியாதவர்களுக்கு சீ சீ இந்த பழம் புளிக்கும் கதைதான். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

  5. #2184
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி அதிகமாக போட்டால் சினிமா அழிந்துவிடும் என்று இப்ப கமலஹாசான், விஜியகாந்த் எல்லாம் இப்ப கூறுகிறார்கள். மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், முதல்வராக இருந்தபோது சினிமா தியேட்டர்களுக்கு அன்றாடம் வரி கட்டாமல் மொத்தமாக இவ்வளவு என்று நிர்ணயித்து வாரத்துக்கு வரி அடிப்படையில் காம்பவுண்டிங் டாக்ஸ் முறையை புரட்சித் தலைவர் கொண்டு வந்தார். இதனால் சிினிமாவை வாழ வைத்தார். அப்ப எல்லா நடிகர்களும் தயாரிப்பாளர்களும் சினிமா காரர்களும் புரட்சித் தலைவரை காம்பவுண்டிங் டேக்ஸ் கொண்டு வந்ததற்கு பாராட்டினார்கள்.

    முதல்வராக ஆவதற்கு முன்னாடியே தனது திரைப்படங்கள் மூலம் அதிக லாபங்களை எல்லாருக்கும் கொடுத்து திரைப்படத் துறையை புரட்சித் தலைவர் வாழவைத்தார். 1974-75.76 காலகட்டத்தில் மற்ற நடிகர்களுக்கு எல்லாம் தேக்க நிலை. அதிகமாக தமிழ் படங்களும் ஓடவில்லை. அப்போதும் புரட்சித் தலைவர் படங்கள்தான் அதிக லாபம் கொடுத்து தமிழ் சினிமாவை வாழ வைத்தது.

    புரட்சித் தலைவர் முதல்வராவதற்கு முன்பே சிினிமாவை வாழ வைத்தார். 1976ம் வருசம் நடந்த ஒரு விழாவில் புரட்சித் தலைவர் முன்பாக பிரபலமான எழுத்தாளர் சாண்டில்யன் இதை சொல்லியிரக்கிறார். தமிழ் சினிமாவை வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர். என்று சாண்டியல்யன் பேசி இருக்கிறார். அது நவமணி பத்திரிகையில் வந்தது. முதல்வரான பிறகு மட்டும் இல்லாமல் முதல்வராக ஆகுவதற்கு முன்பே தமிழ் சினிமாவை வாழ வைத்தவர் புரட்சித் தலைவர் என்பதற்கு சினிமாவை சேராத ஒரு பிரபல எழுத்தாளர் பாராட்டி இருக்கிறார். இதை விட என்ன ஆதாரம் வேண்டும்.


  6. #2185
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2186
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஜூன் -1977

    மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்னர் தன்னுடைய இரண்டு படங்களின் படப்பிடிப்பை ஜூன் 1977ல் இரவு பகல் தொடர்ந்து நடித்து முடித்தார் .
    1.மீனவநண்பன்
    2. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

    1977- 2017
    40 ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் எம்ஜிஆரின் பழைய படங்கள் தமிழகம் முழுவதும் பல வெளியீடுகளில் பல திரை அரங்குகளில் வெளிவந்து சாதனைகள் புரிந்துள்ளது .

  8. #2187
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு இந்த வாரம் கோவை ஷண்முகா அரங்கில் எம்ஜிஆர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது
    எம்ஜிஆர் - 100 என்ற தலைப்பில் இந்து நாளிதழ் ஏற்கனவே சிறப்பு மலரை வெளியிட்டு விறபனையில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது .
    தினமணி நாளிதழ் விரைவில் பிரமாண்ட எம்ஜிஆர் நூற்றாண்டு மலரை வெளியிட உள்ளது .
    இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களும் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு மலரை மிக சிறப்பாக தயாரித்து கொண்டு வருகிறார் .

  9. #2188
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர். அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது. கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.
    courtesy - net

  10. #2189
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.
    courtesy - net

  11. #2190
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகை கண்ணாம்பா எம்.கே - தியாகராஜா பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் (தாய்க்குபின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே) சிவாஜி அவர்களுக்கும் (உத்தமபுரத்திரன், மனோகரா) அம்மாவாக நடித்தவர்.

    இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலி பாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜாதேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார். படத்தின் இயக்குநராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப் படம் என்பதால் தானே இந்தப்படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால 'தாலி பாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம்தான் இயக்கினார்.

    கண்ணாம்பா எம்.கே.தியாகராஜாபாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தை அடிப்படையாகக் கொண்டு தாலி பாக்கியத்தை உருவாக்கினார்கள். ஒரு வயதானவர் (எஸ்.வி.சுப்பையா) தனக்கு இரண்டாந்தாரமாக ஒரு பெண்ணைப் (எம்.என்.ராஜம்) பார்த்து திருமணம் செய்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கிறார். அதற்காக தனது பக்கத்து வீட்டிலிருக்கும் இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஒருவரை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கே மணப்பெண் உடன் வந்த இளைஞன்தான் மாப்பிள்ளை என்றுநினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். திருமண நாளும் வருகிறது. தாலிகட்டும் போதுதான் தெரியவருகிறது மாப்பிள்ளை இளைஞனில்லை, கிழவர் தான் என்று. அவளால் மறுக்க முடியவில்லை. ஊருக்காக கிழவனையும், உள்ளத்தில் இளைஞனையும் கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். அதற்காக அவர்களது குடும்பத்தில் சூழ்ச்சிகளைச் செய்கிறாள். அதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகின்றன. இளைஞனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இருந்து வந்த காதலிலும் பிரச்சனைகள் தலை தூக்குகின்றன.

    'தாலி பாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கியபகுதிகளில் நடந்ததுக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர். - எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன. ஒருநாள் இதேபோன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுதுதான் தெரியவந்தது தயாரிப்பாளர் தரப்பில் மொத்த படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் திருடு போயிருப்பது. தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள்.

    திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்குப் போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது? இடிந்து போய்உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள். கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி.நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாகஅமர்ந்துவிட்டார்கள்.

    எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார்.தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார். படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ் நாட்டிலுள்ளள சத்தியா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது. அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலி பாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி சொன்னார். "படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள். என்றென்றும் நன்றியோடு இருப்போம்," என்றார்.

    கண்ணாம்பா தனது இறுதிக் காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர்.விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். "உங்களது இறுதிக் காலம் வரை நீங்கள் இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும். வேறு வீட்டிற்கு போகக் கூடாது," என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரைஅந்த வீட்டில்தான் இருந்தார். அவர் இறந்த பிறகுதான் எம்.ஜி.ஆர்.அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார். கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை சரியாக கணித்துத்தான் பாடல் எழுதினார். 'உள்ளமதில் உள்ளவரை அள்ளிதரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்....'


    courtesy - net

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •