Page 214 of 401 FirstFirst ... 114164204212213214215216224264314 ... LastLast
Results 2,131 to 2,140 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2131
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    லோகநாதன் அவர்களுக்கு,
    தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும் படங்களில் பாடல்கள் ஒரே மாதிரி இருக்கிறது என்று நான் சொல்லிருப்பது நீங்கள் சொன்ன மாதிரி என் தனிப்பட்ட சொந்த கருத்து. இதை யார் மேலேயும் நான் திணிக்கவில்லை.
    உங்கள் கருத்து என்ன என்பதையும் தெளிவாக புரிஞ்சுக்கிட்டேன். என் தனிப்பட்ட கருத்தால் யாருக்கும் நட்டமில்லை. புரட்சித் தலைவர் பெருமைக்கும் எந்த பங்கமில்லை. கே.வி.மகாதேவன் இசைக்கும் புரட்சித் தலைவர் புகழுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. புரட்சித் தலைவர் பெருமைக்கு குறை வரவது மாதிரி நாம் யாருமே பேசமாட்டோம். நான் சொன்னதை நட்புணர்வோடு புரிஞ்சு கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    நன்றி.

    புரட்சித் தலைவர் புகழ் வாழ்க

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2132
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    இங்கே யாரம் மூளைச் சலவை செய்யப்பட்ட கூட்டம் இல்லை. சொந்தமாக சிந்திக்கிறதால்தான் இது மாதிரி ஆரோக்கியமான கருத்தை பதிவு செய்து கொள்கிறோம் என்பதை எங்களை விமர்சி்க்கின்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  4. #2133
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நான் ஏன் பிறந்தேன்
    9.6.1972

    45 ஆண்டுகள் நிறைவு தினம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பிலும் , இனிய பாடல்களுடன் வெளிவந்த மறக்க முடியாத படம் .

    9.6.1980

    தமிழக மக்கள் திலகம் எம்ஜிஆர் இரண்டாவது முறை பதவி ஏற்ற தினம் .
    மக்கள் திலகத்தின் அரசியல் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கற்பனை கோட்டையில் மிதந்தவர்களை நிரந்தரமாக கற்பனையில் மிதக்கவிட்ட தினம் .

  5. #2134
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீர்க்க தரிசனம்

    நம்நாடு - 1969
    மக்கள் திலகத்தின் நம்நாடு திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் அருமையான திரைப்படம் . கடந்த கால அரசியலாகட்டும் இன்றைய கால கட்ட அரசியலாகட்டும் நாளைய அரசியலுக்கும் பொருத்தமான வசனங்கள் இடம் பெற்ற புரட்சி காவியம் .

  6. #2135
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 2017 நடை பெறும் இந்த இனிய ஆண்டில் அவருடைய ரசிகர்களுக்கு கிடைத்த ஈடு இணையில்லாத பெருமைகள் கணக்கிடமுடியாது . உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் எம்ஜிஆரின் சாதனைகள் தினமும் கொண்டாடப்படுகிறது .

    பாரத ரத்னா எம்ஜிஆர்
    பாரத் எம்ஜிஆர்
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
    மக்கள் திலகம் எம்ஜிஆர்
    திரை உலக வசூல் சக்கரவர்த்தி

    பட்டங்கள் பல இருந்தாலும் பொன்மனச்செம்மலின் மனித நேயமும் மக்கள் சக்தியும் என்றுமே மறக்க முடியாது . இன்றைய தலை முறையினரும் மக்கள் திலகத்தின் மாண்புகளை அறிந்து பெருமை கொள்கின்றனர் .

    அரசியல் - திரை உலகம் - மனித நேயம் மூன்றிலும் எம்ஜிஆர் சகலகலாவல்லவராக வாழ்ந்து காட்டினார் .
    திரை உலகில் முடி சூடிய மன்னராக , அரசியலில் தோல்வியே காணாத தலைவராக . நாடு , மொழி , இனம் கடந்து எல்லோராலும் நேசிக்கப்படும் உன்னத தலைவராக நம் எம்ஜிஆர் நிலைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம் .
    வெற்றி வாசலை தொட முடியாதவர்கள் விரக்தியின் வடிவில் வார்த்தை ஜாலங்களால் தங்களை அலங்கரித்து கொள்வது வாடிக்கைதானே .

  7. #2136
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    திரையிலும் அரசியலிலும் என்றும் முதல் இடத்தில இருக்கும் நம் இறைவனின் நூற்றாண்டில் எம்ஜிஆர் வாரம் கொண்டாடும் கோவை மக்களுக்கும், இந்த ஏற்பாட்டினை செய்த நண்பர் திரு. உலகநாதன் அவர்களுக்கும் இந்த தகவலை இத்திரியில் பதிவு செய்த அன்பு சகோதரர் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #2137
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை (09/06/2017) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " திரைப்படம் சன்லைப் சானலில் ஒளிபரப்பாகிறது .

  9. #2138
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா என்ற பிம்பத்தை சரியான முறையில் கையாண்டு ரசிகர்களை மகிழ்வித்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே சாத்தியமானது . எத்தனையோ நடிகர்கள் தங்களுடைய திறமைகளை மட்டுமே ரசிகர்களுக்கு நடிப்பில் காட்டினார்கள் .சில சமயங்களில் அவர்களின் நடிப்பும் ரசிகர்களுக்கு சலிப்பையும் அலுப்பையும் தந்து விட்டது .காரணம் நவரசம் என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக இயல்பிற்கு மாறாக நடிப்பு அமைந்து விட்டதால் படங்கள் எதிர் பார்த்த வெற்றிகளை பெற இயலவில்லை .இன்று பார்த்தாலும் ரசிக்க முடியவில்லை .

    எம்ஜிஆர் படங்கள் இன்று பார்த்தாலும் கதை இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்கள் , தத்துவம் மற்றும் கொள்கை பாடல்கள் , எளிய வசனங்கள் , புதுமையான காட்சிகள் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் , எம்ஜிஆரின் ஆளுமைகள் நிறைந்த எழிலான தோற்றம் , கட்டுக்கோப்பான உடற்கட்டு , அருமையான பாடல்கள் , சிறப்பான உடை அலங்காரம் , சிந்திக்கவைக்கும் காட்சிகள் என்று அடிமட்ட ரசிகன் முதல் மேல்தட்டு ரசிகன் வரை எம்ஜிஆரை ரசிக்க வைத்தது யதார்த்தமான உண்மை .

  10. #2139
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    வருகிறேன்!!--வேண்டாம்??
    ---------------------------------------------
    மதுரையில் வசித்தவர்---பாதுஷா!!
    தன் எட்டு வயதில் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படத்தைப் பார்க்கிறார்!!
    அந்த வயதில்--அவருக்கு அது ஒரு சினிமா?? அதில் எம்.ஜி.ஆர்.என்பவர் ஹீரோவாக நடித்திருக்கிறார்? அவ்வளவு தான் தெரியும்!!---இரண்டொரு வருடங்களில்--
    வீரனாகத் தோன்றிய எம்.ஜி.ஆர் மன்னனாகிறார்??
    ஆம்!! அடுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்.படம் நாடோடி மன்னன்!!
    இந்தப் படம் இவர் நெஞ்சக் குளத்தில் எம்.ஜி.ஆர் என்ற அதிர்வால் ஏற்படுத்துகிறது அவர் மேல் விருப்பம் என்னும் சலனம்!!
    அந்த சலனம் எம்.ஜி.ஆர் மீது இன்னமும் அதிகமாகி அவர் உள்ளம் வெள்ளமாகி --அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்-- தத்தளிக்கவே ஆரம்பித்து விடுகிறது??---எம்.ஜி.ஆர்----
    நாடோடி மன்னன் வெற்றி விழாவில் தங்க வாளைப் பெறப்போகும் கூட்டத்திற்கு --இவர் செல்கிறார்!!
    கூட்டமோ இன்றைய விலைவாசியைப் போல் ஏறிக் கொண்டே போக---இவர் இதயத் துடிப்போ--எம்.ஜி.ஆரைக் காணும் பதட்டத்தில் எகிறிக் கொண்டே போக---ஒரு கனரக வாகனத்தில்---
    எஸ்.எஸ்.ஆர்--மதுரை முத்து உட்பட--சிலரோடு சூரிய காந்தியாக வருகிறார் இந்தக் காரிய காந்தி!!
    தன்னை கவனிப்பாரோ-மாட்டாரோ என்ற எண்ணத்தில் இவர் எம்.ஜி.ஆரைப் பார்த்து கை அசைக்க---பதிலுக்கு சிரிப்போடு கை அசைத்து செல்கிறார்!!
    தன் இடத்தை விட்டு அந்த வண்டி நகர்ந்ததும் இவருக்கு உலகமே சூன்யமானது போலவும்--தான் நின்றிருந்த இடமே வெற்றிடமாய் போனதாகவும் பேதலிக்கிறார்??
    பாதுஷா என்னும் இந்த இனிப்பு எம்.ஜி.ஆர்.என்னும் இனிப்பை எண்ணி ஏங்குகிறது???
    உருளும் காலத்தில் திரளும் அறிவோடும்--அனுபவத்தோடும் பாதுஷா என்னும் இந்த இனியவர் அரசு வங்கியில் பணிக்கு சேர்ந்து அதிகாரியாகவும் ஆகிறார்!! ஆனால் அடி மனத்தில் மட்டும் எம்.ஜி.ஆர்!!
    இவர் பணிபுரிந்த வங்கிக்காக ஒரு புதிய கட்டடம் கட்டப் படுகிறது. அதை யாரை வைத்துத் திறக்கலாம்?-என்று வங்கி மேலாளர் கேட்ட கேள்விக்கு--இவர் வாயிலிருந்து வந்த பதில்--
    தாராளர்--எம்.ஜி.ஆர் என்னும் பேராளர்---இதற்குப் பொறுத்தமான சீராளர்!!!
    அது--1975 !!
    அரசியலிலும்--திரைப் படங்களிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து--எம்.ஜி.ஆர்.உழைத்துக் கொண்டிருந்த நேரம்!!
    ஆனாலும் ஒப்புக் கொள்கிறார்!!
    அவசர நிலை அமலில் இருந்த காலம்!!
    மத்திய அரசின் நெருக்கடி நிலையால் அந்தப் புதிய கட்டடம்--உருப்படியாக கட்டி முடிக்கப்படாத நிலை??
    எவ்வளவு நெருக்கடியில்--தங்கள் அழைப்புக்கு இசைந்தார் எம்.ஜி.ஆர்!! இப்படி ஆகிவிட்டதே ??என்ற வேதனையோடு எம்.ஜி.ஆரிடம் நிலையை விளக்க---அவரோ--எந்தவித உணர்ச்சியும் காட்டாது இப்படி சொன்னாராம் பதில்??
    காலம் நம் கையில் இல்லை!! நாம் தான் அதன் பிடியில் இருக்கிறோம்!! நாளையே உங்கள் கட்டடம் கட்டப்படலாம்!! என்னை விடத் தகுதியானவர் அதைத் திறந்து வைக்கலாம்?? அதற்கு ஏன் இந்த பதட்டம்??
    காலம் எப்படி காயை நகர்த்தியது தெரியுமோ??
    1977இல் எம்.ஜி.ஆர்.முதல்வராகிறார்!!
    கட்டடமும் அப்போது தான் முழு வடிவம் பெறுகிறது!!
    முதல்வர் எம்.ஜி.ஆராக--இவரே அந்தக் கட்டடத்தை திறந்து வைக்கிறார்???
    ஆக---
    காலமே--எம்.ஜி.ஆருக்கு தலை வணங்கியதென்றால்---
    நாமமெல்லாம் எம்மாத்திரம்???---என்று---
    எண்ணத் தோன்றுகிறதல்லவா????


    நன்றி வெங்கட்ராமான் தியாகு முகநூல் பக்கம்


    செள. செல்வகுமார் அய்யா பின்னுட்டம்


    LikeShow more reactions
    Share
    68 68
    15 shares
    Comments
    View 24 more comments

    Selva Cpcl Kumar அருமை ! அற்புதம் ! ஆனந்தம் அடையச் செய்யும் செய்தி. பதிவுக்கு நன்றி !
    LikeShow more reactions

    1
    • Yesterday at 8:52am


    நம் திரி மாடரேட்டர் திருப்பூர் ரவிச்சந்திரன் பின்னுட்டாம்
    Tirupur Ravichandran நல்ல பதிவு

  11. #2140
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    சினிமா என்ற பிம்பத்தை சரியான முறையில் கையாண்டு ரசிகர்களை மகிழ்வித்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே சாத்தியமானது . எத்தனையோ நடிகர்கள் தங்களுடைய திறமைகளை மட்டுமே ரசிகர்களுக்கு நடிப்பில் காட்டினார்கள் .சில சமயங்களில் அவர்களின் நடிப்பும் ரசிகர்களுக்கு சலிப்பையும் அலுப்பையும் தந்து விட்டது .காரணம் நவரசம் என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக இயல்பிற்கு மாறாக நடிப்பு அமைந்து விட்டதால் படங்கள் எதிர் பார்த்த வெற்றிகளை பெற இயலவில்லை .இன்று பார்த்தாலும் ரசிக்க முடியவில்லை .

    எம்ஜிஆர் படங்கள் இன்று பார்த்தாலும் கதை இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்கள் , தத்துவம் மற்றும் கொள்கை பாடல்கள் , எளிய வசனங்கள் , புதுமையான காட்சிகள் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் , எம்ஜிஆரின் ஆளுமைகள் நிறைந்த எழிலான தோற்றம் , கட்டுக்கோப்பான உடற்கட்டு , அருமையான பாடல்கள் , சிறப்பான உடை அலங்காரம் , சிந்திக்கவைக்கும் காட்சிகள் என்று அடிமட்ட ரசிகன் முதல் மேல்தட்டு ரசிகன் வரை எம்ஜிஆரை ரசிக்க வைத்தது யதார்த்தமான உண்மை .
    மக்கள் திலகம் ,எம்.ஜி.ஆர். திரையுலகில் ராஜராஜன், மன்னாதி மன்னன், ஆனந்த ஜோதி . , கலையுலகின் கலங்கரைவிளக்கம் , மனிதநேயம் கொண்ட தனிப்பிறவி,
    காஞ்சி தலைவன் அண்ணாவின் இதயக்கனி , திரை மற்றும் அரசியல் உலகின்
    மங்கா ஒளிவிளக்கு , பெருவாரியான மக்களின் செல்வாக்கு, வாக்கு வங்கியை அன்றும், இன்றும், என்றும் தக்க வைக்கும் திறமை , திரையுலகில் முதல் வெளியீட்டிலும் , மறுவெளியீட்டிலும் ஈடு இணையில்லா வசூல் சக்கரவர்த்தி
    ஏறத்தாழ 30 ஆண்டுகள் தான் துவக்கிய கட்சியின் ஆளுமை , பத்தாண்டுகள் மேல்
    மக்களின் முதல்வர் போன்ற பல்வேறு சிறப்புகள் அகில உலகத்தில் எவருக்கும்
    கிடைக்கவில்லை, கிடைக்க போவதுமில்லை

    எத்தனையோ நடிகர்கள், நடித்தார்கள்,கட்சி ஆரம்பித்தார்கள் , திரை மற்றும் அரசியலில் மக்கள் திலகம் /மக்கள் தலைவர் போல் யாராலும் ஜொலிக்க முடியவில்லை என்பது வரலாற்றில் பதிவாகிவிட்டது என்பதற்கு பதில் உரைத்தால் போல் உள்ள தங்களின் பதிவை நான் ஆமோதிக்கிறேன் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •